Latest topics
» அவனை மன்னித்து விடலாம்
by srinihasan Yesterday at 11:37 pm

» அவசியமானதும் இலவசமானதும் Freeware
by kirikasan Yesterday at 11:05 pm

» பூகம்பத்தை முன்கூட்டியே தவளை அறியும் - விஞ்ஞானி தகவல்
by siva1984 Yesterday at 10:29 pm

» தென்னிந்தியாவின் ஆனைமுடி மலை முகட்டில் அரிய வகை புதிய தவளை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
by siva1984 Yesterday at 10:28 pm

» ஆங்கில இலக்கணம் -எளிய தமிழில்
by madhan80 Yesterday at 10:25 pm

» சொற்களின் வாசம்
by vinotha Yesterday at 10:24 pm

» திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?
by Kaa Na Kalyanasundaram Yesterday at 10:18 pm

» புதிருக்கு விடை கூறுங்கள் 4
by kirikasan Yesterday at 10:17 pm

» ஆமை ‌ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள்
by siva1984 Yesterday at 10:16 pm

» எழுத்தாளர் சாண்டில்யனின் - மன்னன் மகள்
by madhan80 Yesterday at 10:10 pm

» எப்போது பிரிவது
by Kaa Na Kalyanasundaram Yesterday at 9:56 pm

» தென்றலுக்கு கூட
by Kaa Na Kalyanasundaram Yesterday at 9:53 pm

» உதவிதாருங்கள் ? கீர்த்தனா
by kirikasan Yesterday at 9:42 pm

» எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்
by vinotha Yesterday at 9:38 pm

» என்னால் யாருக்கும் பிரச்சனை தேவையில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 9:37 pm

» மரபுப் பா பயிலரங்கம்
by தமிழநம்பி Yesterday at 9:28 pm

» அன்புள்ள குணா அண்ணா
by vinotha Yesterday at 9:23 pm

» முடியவில்லை..என்னால்.
by தேனி"சூர்யா"பாஸ்கரன் Yesterday at 9:00 pm

» நீ வேறு அல்ல!..நான் வேறு அல்ல!..
by தேனி"சூர்யா"பாஸ்கரன் Yesterday at 8:26 pm

» ஜாதகம்
by maniajith007 Yesterday at 8:25 pm

» ஆவியாய் இருந்து காத்த தாய்.
by tdrajeswaran Yesterday at 8:24 pm

» கவிதைகள்
by கவிக்காதலன் Yesterday at 8:19 pm

» நான் சென்று வருகிறேன் உறவுகளே.....!
by சாந்தன் Yesterday at 8:09 pm

» முகப்பரு வரக்காரணம் என்ன?
by மீனா Yesterday at 7:28 pm

» பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகள்
by மீனா Yesterday at 7:16 pm

» செக்ஸ் உறவால் எடை கூடுமா?
by S.J.Ravikumar Yesterday at 7:15 pm

» அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி?
by kirikasan Yesterday at 7:10 pm

» பேருந்தின் கேள்வி ?
by S.J.Ravikumar Yesterday at 7:04 pm

» நான்மறை ஞானி மணியின் நாலாயிரம் வாழ்த்துவோம் வாங்கப்பா....
by பிளேடு பக்கிரி Yesterday at 6:56 pm

» கண்ணீர்.
by kalaimoon70 Yesterday at 6:51 pm

World Ranking



தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!

Post by vijaybemech on Wed Feb 10, 2010 2:47 am

அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்!

நமது பூமியை நாளுக்கு நாள் வெப்பப்படுத்திக்கொண்டிருகிறோம்

இது பற்றிய விளக்கங்களை புதிய தலைமுறை என்ற இதழில்(மாலன்) நான் படித்ததை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகனில்109நாடுகளின் தலைவர்களும்,அதிகாரிகளும் புவி வேப்பமடைதலைப்பற்றி விவாதித்தார்கள்.

புவி வெப்பமடைதல் என்றால் என்ன ?
பூமியின் சராசரி வெப்பம் அதிகரிப்பதுதான் புவி வெப்பமடைதல்.

பலவிதமான வாயுக்கள் நம் பூமியை சூழ்ந்துள்ளன.அதைத்தான் வளிமண்டலம்(Atmosphere) என்கிறோம்.
இந்த வளிமண்டலத்தில் 5குவின்டில்லியன் கிலோ வாயுக்கள் உள்ளன.(ஒரு குவின்டில்லியன் என்பது ஒன்றுக்குபின் 19 பூஜ்யங்களை கொண்டது)


இந்த வாயுக்கள் பூமியிலிருந்து 11கி.மீ. உயரத்திலேயே இருக்கின்றன.(அதற்கு மேலே போகப்போக வாயுக்களின் அளவு குறைந்துகொண்டே போகிறது)அந்த வாயுக்களில் 78%நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன்.0.038%கார்பன்டைஆக்சைடு எனும் கரியமில வாயுவின் அளவு அதிகரிபதால்தான் பிரச்சனை.
சூரியனிலிருந்து நமக்கு வெளிச்சம் மட்டுமல்ல வெப்பமும் வருகிறது.சூரியன் பூமியைவிட 109மடங்கு பெரியது.ஆனால் அங்குஆக்சிஜன்குறைவு.நாம் சூரியனிடமிருந்து ரொம்ப தள்ளித்தான் இருக்கின்றோம்(15கோடி கி.மீ.)ஆனால் அங்கிருந்து புறப்படும் ஒளிநம்மை 8 நிமிடம் 19நொடிகளில் பூமியை அடைகிறது. அந்த ஒளி நமக்கு சக்தியையும் கொண்டு வருகிறது.மின்சாரத்தை அளக்கும் வாட்ஸ் என்ற அளவைக்கொண்டு அளந்தால்,ஒரு சதுரமீட்டருக்கு 1368வாட்ஸ்!நமது வீட்டில் எரியும் குண்டு பல்பே60வாட்ஸ்.இதுவே 1300வாட்சாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துபாருங்கள்.நாம் கருகிவிடுவோம்.ஆனால் இந்த சூரிய சக்தி மொத்தமும் நம் மீது பாய்ந்து நம்மை கருகிவிடாமல் வளிமண்டலம் நம்மை பாதுகாக்கிறது.அந்த சக்தியை வடிகட்டி 1000 வாட்சிற்கும் குறைவாகத்தான் அனுப்புகிறது.

சுவற்றில் பந்தை எறிந்தால் அது திரும்பி நம்மிடமே வருவது போல பூமி தன் மீது விழும் சூரிய சக்தியை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்ப முயல்கிறது.ஆனால் வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள் வெளியே செல்லும் அந்த சக்தியை விண்வெளிக்கு செல்லவிடாமல் தடுக்கின்றன.அந்த வாயுக்களை 'பசுமைநிறவாயுக்கள்' என்கிறோம்.கார்பன்டைஆக்சைடு,மீத்தேன்,ஓசோன்,நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்களின் கலவையாகும்.இந்த வாயுக்களின் அளவு குறைந்தால் பூமி உயிர்கள் வாழ தகுதியற்ற பனிப்பாலைவனமாகிவிடும்.இந்த வாயுக்களின் அளவு அதிகமாகும்போது பிரச்சினையாகிறது.பிரச்சினை வாயுக்கள் அல்ல அவைகளின் அளவு!

அவற்றின் அளவு ஏன் அதிகரிக்கிறது ?

நம்முடைய,அதாவது மனிதர்களுடைய செயல்பாடுகள்தான் காரணம்.நம் தொழிற்சாலைகள் ஏராளமாகக் கரியை எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலத்தில் நிரப்புகின்றன.பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பன்களை கச்சா எண்ணையாக எடுத்து பெட்ரோல் டீசலாக வடித்து,கார்கள்,லாரிகளில் எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலதிற்கு அனுப்புகிறோம்.சுருக்கமாக சொன்னால் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கரியைஎடுத்துக் காற்றில் ஏற்றி வளிமண்டலத்திற்கு அனுப்புகிறோம்.இன்னொருபுறம் பெரிய தவறு கட்டிடங்களுக்காகவும்,காகிதங்களுக்காகவும் மரங்களை வெட்டுகிறோம்.மரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடை எடுக்கொண்டு சூரிய ஒளியின் உதவியால் உணவு தயாரிக்கின்றன.மரங்களில் கிட்டத்தட்ட 47% கார்பன்.காகிதத்தை எரித்தால் கரி கிடைப்பதில்லை.மரத்தை எரித்தால் கரி கிடைப்பது அதனால்தான்.அதாவது ஒருபுறம் பூமிக்கு கீழே உள்ள கார்பன் எடுத்து எரித்து வளிமண்டலதிற்க்கு அனுப்பிகொண்டிருகிறோம்.

புவியின் வெப்பம் அதிகரித்தால்என்ன ஆகும்?

இந்தியாவிற்கு என்ன ஆகும் என்பதை சொல்கிறேன்.இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகும்.அதனால் கங்கை உள்பட பல நதிகளில் வெள்ளபெருக்கு ஏற்படும்.அந்த வெள்ள நீர்,கடலில் சேர்ந்து கடல் மட்டம் உயரும்.வங்காளகடலில் உள்ள சுந்தரவனக்காடுகள்,கேரளத்தில் உள்ள குட்டநாடு போன்ற பகுதிகள்,அந்தமான் அருகில் உள்ள சிறு தீவுகள் அழிந்து போகும்.பனிப்பாறைகள் உருகுவதால் அதன் அளவு சிறிதாகி பிறகு நதிகளில் நீர் வரத்து குன்றி,வரச்சி ஏற்படும்.மழை பெய்யாது.வேளாண்மை பாதிப்படையும்.


தமிழ்நாடு தப்பித்துக்கொள்ளுமா?நாம்தான் இமயத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறோமே?என்று அனைவரும் கருதலாம்.
தமிழ்நாட்டுக்கு இரண்டு விதமான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன.
1.தண்ணீர் பஞ்சம் 2.உணவுபற்றாகுறை
இந்தியாவிலேயே நீளமான கடற்கரை கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. 910கி.மீ.கடல் மட்டத்திலிருந்து 10மீட்டர்உயரத்திற்கும் குறைவான பகுதிகளை தாழ்நிலை கடலோரப் பகுதிகள் (Low Elevation Coastal Zones)எனக்கூறுவார்கள்.தமிழ்நாட்டின் பெரும்பாலான கடலோரபகுதிகள்,சென்னை உள்பட,கடல் மட்டத்திலிருந்து 2மீட்டரிலிருந்து 10மீட்டருக்குள்ளான உயரத்தில் அமைந்திருக்கின்றன.கடல் மட்டம் உயரும்போது இவை அழிவையோ,சேதத்தையோ சந்திக்கநேரிடும்.இந்த பகுதிகளில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 40,319ஏரிகளும் கண்மாயிகளும் இருக்கின்றன.இவைதான் நமக்கு குடிநீருக்கும் வேளாண்மைக்கும் ஆதாரம்.இவற்றில் சில ஏரிகள் பிரம்மாண்டமானவை.வீராணம் ஏரி 11கி.மீ.நீளமும், 4கி.மீ.அகலமும் கொண்டது.பழவேற்காடு ஏரி 60கி.மீ. நீளமும்,18கி.மீ.அகலமும் கொண்டது.இது போன்ற ஏரிகளில் உள்ள தண்ணீர்,புவியின் வெப்பம் இரண்டு டிகிரி கூடும்போது விரைவாக ஆவியாகும்.இதோடு பருவநிலை மாற்றத்தால் பருவ மழை பெய்யாமல் போனால் நிலைமை மோசமாகிவிடும்.ஏனெனில் தமிழ்நாட்டில் 54% நிலங்கள் மழையை நம்பித்தான் விவசாயம்செய்கின்றன.

நமது பூமி வெப்பமடைவதை தடுக்க நிறுத்த முடியாதா?
முற்றிலும் முடியாது.ஆனால் சமாளிக்கிற நிலையை ஏற்படுத்த முடியும்.

இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் செய்வதை செய்யட்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!

வ.விஜய் இயந்திரவியல்துறை விரிவுரையாளர்
தந்தை ரோவர் தொழில்நுட்பக் கல்லூரி ,பெரம்பலூர்-621212.
வாய்ப்புக்கு நன்றி!
வாழ்க வளமுடன்


Last edited by vijaybemech on Wed Feb 10, 2010 3:00 am; edited 1 time in total

vijaybemech
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 38
வசிப்பிடம்: perungalur
சேர்ந்தது: 07/02/2010

Back to top Go down

Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!

Post by அப்புகுட்டி on Wed Feb 10, 2010 2:50 am

நல்ல வேண்டு கோள்

1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 19952
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010

Back to top Go down

Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!

Post by kalaimoon70 on Wed Feb 10, 2010 2:51 am

நல்ல தகவல் தோழரே...வாழ்த்துக்கள்

kalaimoon70
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 8446
வசிப்பிடம்: ஈகரை , தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 27/01/2010

Back to top Go down

Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!

Post by vijaybemech on Wed Feb 10, 2010 2:57 am

நன்றி

vijaybemech
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 38
வசிப்பிடம்: perungalur
சேர்ந்தது: 07/02/2010

Back to top Go down

Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!

Post by தாமு on Wed Feb 10, 2010 6:13 am

ஒவ்வருத்த‌ருக்கும் இருக்கும் வருத்தம் தான் நண்பா.

நல்ல தகவல் வாழ்த்துக்கள்

_______________________________________________

தாமு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 7400
வசிப்பிடம்: பூமி..
சேர்ந்தது: 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!

Post by சாந்தன் on Wed Feb 10, 2010 8:30 am


இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் செய்வதை செய்யட்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!


இவை பின்பற்றுவதால் நம் தலைமுறைக்கு நல்லது என்று நினைபவர்கள் மிகவும் குறைவு.
இதை சட்டமாக கொண்டுவந்தால் தான் இங்கு நடைமுறை படுத்த முடியும்.
இங்கு இந்த குளிர் காலத்திலும் 24 மணி நேரமும் ஏசியில் இருப்பவர்களை என்ன செய்வது ???????????
CFL பல்புகளை பயன்படுத்த ஒரு சிக்கல் அதன் விலை சாதாரண பல்புகளை விட பல மடங்கு அதிகம்.............

_______________________________________________
உணரும் வரை உண்மை ஒரு பொய் தான்
புரிகின்ற வரை வாழ்க்கையும் ஒரு புதிர் தான்

சாந்தன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6711
வசிப்பிடம்: சந்திரனில் வீடு கட்டிக்கிட்டு இருக்கேங்க
சேர்ந்தது: 22/07/2009

Back to top Go down

Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!

Post by தண்டாயுதபாணி on Wed Feb 10, 2010 8:51 am

நல்ல தகவல் நன்றி

_______________________________________________

புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

தண்டாயுதபாணி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1283
வசிப்பிடம்: தென்கொரியா
சேர்ந்தது: 24/10/2009

Back to top Go down

Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!

Post by VIJAY on Wed Feb 10, 2010 9:41 am

நல்ல தகவல்.........

_______________________________________________

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9494
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009

Back to top Go down

Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!

Post by mohan-தாஸ் on Wed Feb 10, 2010 10:26 am

இதை சொல்லவே இல்லை

mohan-தாஸ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9288
வசிப்பிடம்: U.A.E
சேர்ந்தது: 07/02/2010

Back to top Go down

Re: தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!

Post by வை.பாலாஜி on Wed Feb 10, 2010 11:05 am

நல்ல தகவல் நன்றி ..

_______________________________________________
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

வை.பாலாஜி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2184
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum