புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
31 Posts - 53%
heezulia
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
1 Post - 2%
jairam
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
1 Post - 2%
சிவா
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
13 Posts - 4%
prajai
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
3 Posts - 1%
jairam
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_m10இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்!

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 6:04 pm

https://2img.net/r/ihimizer/img577/8094/forcingsomeone.png

நானும் நண்பனும் நாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு ஜிகர்தண்டா கடைக்கு சென்றோம். எங்கள் அருகில் இரண்டு இளைஞர்களும், நம்மூரில் வசிக்கும் ஒரு வடநாட்டு குடும்பமும் ஜிகர்தண்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வடநாட்டு குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்தபின் அவர்களுடன் வந்த ஒரு சிறுமி காசு கொடுப்பதற்காக கடைகாரரிடம் வந்தாள். பின்,

கடைக்காரர்: தஸ்!

வட நாட்டு சிறுமி: "எவ்வளவு ஆச்சுன்ணா?"

கடைக்காரர் : "தஸ் ருப்யா" என்றார்

வடநாட்டு சிறுமி : "பத்து ரூபாயா" என்று சொல்லி அவரிடம் காசைக் கொடுத்து விட்டு சென்றாள்.

இதை பார்த்துக் கொண்டு இருந்த நானும் என் நண்பனும் ஒருவரை ஒருவர் பாத்து சிரித்து கொண்டோம். அதை கண்டுகொண்ட கடைக்காரர் அதை சமாளிப்பதற்காக, "பாருங்கப்பா இதெல்லாம் தமிழ்ல பேசுது, நாம தான் நம்ம தமிழையே கட்டிகிட்டு இந்தி தெரியாம இருக்கோம்" என்றார். உடனே,

நண்பன் : "ஏண்ணா அந்த பாப்பாவே தமிழ் புடிச்சு தான தமிழ்ல பேசுது, இதுல என்ன இருக்கு" என்றான்

பக்கத்திலிருந்த இளைஞர் : "ஆமான்ணே நம்ம ஆளுங்கதான் தமிழ் தமிழுனு வேற எதையும் நம்மள கத்துக்கவிடாம சீரழிச்சிட்டாய்ங்க. எல்லாம் நம்ம அரசியல்வாதிகள சொல்லனும்."

கடைக்காரர்: "ஆமா தம்பி, துபாய்ல எல்லாம் அரபிக்கு அப்புறம் இந்தி தான் பேசுவாய்ங்க. அங்கெல்லாம் நம்ம பசங்க போனா கஷ்டப்படுறாங்கள்ல"

நான்: "என்னன்ணா இதெல்லாம் ஒரு காரணமா? அப்படி பாத்தா சிங்கப்பூர், மலேசியால எல்லாம் தமிழ் அதிகமா பேசுறாங்க அதுக்காக இந்தியால இருக்க எல்லாத்தையும் தமிழ் கத்துக்க சொல்லுவீங்களா??"

கடைக்காரர்: அப்படி இல்ல தம்பி. இந்தி கத்துக்குறதுனால இவைங்களுக்கு என்ன பிரச்சனை?? ஏன் கத்துக்கவுடாம போராட்டம் பண்ணானுங்க?

இளைஞர்: "கரெக்ட்டுனா.. தேவையில்லாம இந்தி கத்துக்கவுடாம பண்ணி கருமம் தமிழ்நாட்ட விட்டு வெளிய எங்கேயும் போகவே முடியல.."

நான் (கடைகாரரிடம்) : "அண்ணே ஒரு உதாரணத்துக்கு சொல்றேன், உங்க கடையில ஜிகர்தண்டா 'பேமஸ்'ங்குறதுக்காக ரோட்ல போற வர்றவன எல்லாம் புடிச்சு உள்ள இழுத்து போட்டு ஜிகர்தண்டா குடிங்கடான்னு சொன்னா எப்படி?? எனக்கு புடிக்குது நான் குடிக்கிறேன். உங்களுக்கு புடிச்சா, தேவைனா இந்தி, தெலுங்கு, ஒரியா, அரபுனு எத வேணும்னாலும் கத்துக்க வேண்டியதுதான, அத யாரு தடுக்கப் போறாங்க? எதையுமே இன்னொருத்தன் மேல திணிச்சா அது தப்புதாண்ணா. அத எதிர்த்துதான் போராடுனாங்களேயொழிய உங்களை படிக்க வேண்டாம்னு யாரும் தடுக்கல! இப்ப வந்த இந்திப்பொணு கூட அவங்க ஊர்லயே தமிழ் கத்துக்கிட்டா இங்க வந்துச்சு? இங்க வந்துதானே கத்துருக்கு. அதுமாதிரி நம்மளும் அங்க போனா கத்துக்கப்போறோம். இதுக்குப் போயி மத்தவங்களை குறை சொல்லிட்டு......."

கடைக்காரர் ஆமோதித்தவாறு தலையாட்டினார். அந்த இளைஞனோ பதில் எதும் சொல்லவில்லை. பின் காசைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டோம்.

ஜிகர்தண்டா கடைக்காரர் மட்டுமல்ல, என் எம்.பி.ஏ புரொபசர் ஒருத்தர் கூட " ஊருல உள்ளவாள எல்லாம் இவா இந்தி கத்துக்கக் கூடாதுனு போராடுவா, ஆனா அவா வீட்டு பிள்ளைகல மட்டும் இந்தி படிக்க அனுப்புவா" என்றார். ஆனா இவங்க மட்டுமல்ல இன்னைக்குவரைக்கும் பல பேர் அவங்க இந்தி கத்துக்க முடியாததற்கு காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டம்தான்னு நெனச்சுகுறாங்க. அவங்க எல்லாத்துக்கும் கண்டிப்பா ஞாபகபடுத்த வேண்டியது என்னன்னா, நடந்தது வெறும் இந்தி எதிர்ப்பு போராட்டம் இல்ல இந்தி 'திணிப்பு' எதிர்ப்பு போராட்டம். இந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும் உண்மை புரிஞ்சிரும்.

பொதுவாவே மக்களுக்கு அவங்க தப்ப, குறையை, கையாளாகாத்தனத்த யார் மீதாவது சுமத்தி தப்பிச்சுக்குறது இயல்பு. அதே நிலைதான் இங்கேயும். இந்தி மொழியை கத்துக்காதது எதோ பாவச்செயல் போல நினைக்குறவங்க, இந்தியில் பேசுறத கவுரவமாக நினைக்குறவங்க தாரளமாக கத்துக்குங்க. அவங்கல யாரும் தடுக்கல. ஆனால் இவங்க சோம்பேறித்தனம் பட்டு கத்துக்காம, "நீங்க போராட்டம் பண்ணதுனாலதாம்பா என்னால இந்தி கத்துக்க முடியல, இல்லைன்னா இந்தி படத்த தியேட்டர்ல பாத்துருப்பேன், இந்தி பொண்ண லவ் பண்ணிருப்பேன், நார்த் இந்தியாவுக்கு சப்பாத்தி சுட போயிருப்பேன்'னு சொல்லுவதெல்லாம் சுத்த கையாளாகாத்தனம்.

ஆக கொஞ்சமாவது சுயமரியாதையோட சிந்திக்கிறவனுக்கு இந்த உண்மை புரியும். ஸ்கூல்ல நம்ம எல்லாரும் இங்கிலிஷ் படிக்கிறோம். நம்மளை கொண்டு போயி அமெரிக்காகாரன் கிட்ட இங்கிலிஷ் போட்டில பேச விட்டா நம்ம நிலமை என்ன ஆகும்? அதே மாதிரிதான் ஒருவேளை இந்தியை எல்லாருக்கும் கட்டாயமாக்கிட்டா எல்லா அரசு தேர்வும் இந்திலதான் இருக்கும். அப்புறம் இந்தியை தாய்மொழியா வச்சிருக்கவன் எல்லாம் சுலபமா பாஸ் பண்ணிட்டு போயிருவான். இந்தியை வெறும் மொழியா படிச்ச நமக்கு வழிச்சுட்டு போயிரும்! இது தேவையா???

நன்றி கேடிபில்லா ப்ளாக்ஸ்பாட்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 13, 2013 6:49 pm

புரியரவங்களுக்கு புரிஞ்சா சரி.

அன்னிக்கு மட்டும் போராட்டம் நடக்கலேன்னா இன்னிக்கு நாமள்லாம்
வேலு நாயக்கரா மாறி இந்தியைத் திணித்த பசங்கள
தீர்த்து கட்டிட்டு தான் இருந்திருப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 13, 2013 7:55 pm

கட்டுரையின் கருத்துக்கள் உண்மையானவைதான், ஆனால் இந்தி என்றொரு பாடம் இருந்திருந்தால் ஓரளவு basic ஆவது நமக்குத் தெரிந்திருக்கும். அதைக் கூடத் தடுத்தது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்பதெல்லாம் சுத்தப் பொய்.

இந்தி திணிப்பும் ஜிகர்தண்டாவும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 9:48 am

சிவா wrote:கட்டுரையின் கருத்துக்கள் உண்மையானவைதான், ஆனால் இந்தி என்றொரு பாடம் இருந்திருந்தால் ஓரளவு basic ஆவது நமக்குத் தெரிந்திருக்கும். அதைக் கூடத் தடுத்தது என்னல்ஸ் நியாயமோ தெரியவில்லை. இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்பதெல்லாம் சுத்தப் பொய்.

தல கத்துகொள்ள வேண்டும் என்றால் வழியா இல்ல புன்னகை

இதோ தொலைதூர கல்வி முறையில் கூட படிக்கலாம்

அடிப்படை ஹிந்தி பயிற்சி வகுப்புகள் (60மணி நேரம் - வாரம் 3 வகுப்புகள் 6.00pm to 8.00pm )
மேலும் விவரங்கள் hindinideshalaya.nic.in

Also, see the following;
SBIOA Institute
#226, Mercantile Plaza, 2nd Floor, N.S.C. Bose Road
Parrys Chennai-600001
Telephone 044-25340226
Mobile 9444787739

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 14, 2013 10:40 am

ராஜு சரவணன் wrote:நான் (கடைகாரரிடம்) : "அண்ணே ஒரு உதாரணத்துக்கு சொல்றேன், உங்க கடையில ஜிகர்தண்டா 'பேமஸ்'ங்குறதுக்காக ரோட்ல போற வர்றவன எல்லாம் புடிச்சு உள்ள இழுத்து போட்டு ஜிகர்தண்டா குடிங்கடான்னு சொன்னா எப்படி?? எனக்கு புடிக்குது நான் குடிக்கிறேன். உங்களுக்கு புடிச்சா, தேவைனா இந்தி, தெலுங்கு, ஒரியா, அரபுனு எத வேணும்னாலும் கத்துக்க வேண்டியதுதான, அத யாரு தடுக்கப் போறாங்க? எதையுமே இன்னொருத்தன் மேல திணிச்சா அது தப்புதாண்ணா. அத எதிர்த்துதான் போராடுனாங்களேயொழிய உங்களை படிக்க வேண்டாம்னு யாரும் தடுக்கல! இப்ப வந்த இந்திப்பொணு கூட அவங்க ஊர்லயே தமிழ் கத்துக்கிட்டா இங்க வந்துச்சு? இங்க வந்துதானே கத்துருக்கு. அதுமாதிரி நம்மளும் அங்க போனா கத்துக்கப்போறோம். இதுக்குப் போயி மத்தவங்களை குறை சொல்லிட்டு......."

ஜிகர்தண்டா கடைக்காரர் மட்டுமல்ல, என் எம்.பி.ஏ புரொபசர் ஒருத்தர் கூட " ஊருல உள்ளவாள எல்லாம் இவா இந்தி கத்துக்கக் கூடாதுனு போராடுவா, ஆனா அவா வீட்டு பிள்ளைகல மட்டும் இந்தி படிக்க அனுப்புவா" என்றார். ஆனா இவங்க மட்டுமல்ல இன்னைக்குவரைக்கும் பல பேர் அவங்க இந்தி கத்துக்க முடியாததற்கு காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டம்தான்னு  நெனச்சுகுறாங்க. அவங்க எல்லாத்துக்கும் கண்டிப்பா ஞாபகபடுத்த வேண்டியது என்னன்னா, நடந்தது வெறும் இந்தி எதிர்ப்பு போராட்டம் இல்ல இந்தி 'திணிப்பு' எதிர்ப்பு போராட்டம். இந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும் உண்மை புரிஞ்சிரும்.

பொதுவாவே மக்களுக்கு அவங்க தப்ப, குறையை, கையாளாகாத்தனத்த யார் மீதாவது சுமத்தி தப்பிச்சுக்குறது இயல்பு. அதே நிலைதான் இங்கேயும். இந்தி மொழியை கத்துக்காதது எதோ பாவச்செயல் போல நினைக்குறவங்க, இந்தியில் பேசுறத கவுரவமாக நினைக்குறவங்க தாரளமாக கத்துக்குங்க. அவங்கல யாரும் தடுக்கல. ஆனால் இவங்க சோம்பேறித்தனம் பட்டு கத்துக்காம, "நீங்க போராட்டம் பண்ணதுனாலதாம்பா என்னால இந்தி கத்துக்க முடியல, இல்லைன்னா இந்தி படத்த தியேட்டர்ல பாத்துருப்பேன், இந்தி பொண்ண லவ் பண்ணிருப்பேன், நார்த் இந்தியாவுக்கு சப்பாத்தி சுட போயிருப்பேன்'னு சொல்லுவதெல்லாம் சுத்த கையாளாகாத்தனம்.

நல்ல பதிவு ராஜூ!மகிழ்ச்சி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 14, 2013 11:51 am

அருமையான பதிவு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 14, 2013 12:06 pm

சிவா wrote:கட்டுரையின் கருத்துக்கள் உண்மையானவைதான், ஆனால் இந்தி என்றொரு பாடம் இருந்திருந்தால் ஓரளவு basic ஆவது நமக்குத் தெரிந்திருக்கும். அதைக் கூடத் தடுத்தது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்பதெல்லாம் சுத்தப் பொய்.

எனக்கும் உங்கள் கட்டுரை இல் அவ்வளவாக உடன் பாடில்லை ராஜு , ஒரு மொழியால் மற்றதை அழிக்க முடியவே முடியாது , அது சா த்தியமும் இல்லை என்பது என் கருத்தும் கூடபுன்னகை நானெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டேன், நீங்கள் சொல்வது  போல ஹைதராபாத் சென்ற போது தெலுங்கு, வடக்கே சென்ற போது (ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி ) ஹிந்தி ( படிக்க எழுத பேச ) கற்றுக்கொண்டேன். ஆனால் கற்கும் வரை எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று அனுபவித்த வாளுக்குத்தான்  தெரியும்.
Out  of  India  போயாச்சுனாக்க , இந்தியா என்றால் ஹிந்தி என்று தான் நினைக்கிறார்கள் பேசுகிறார்கள். அதை நீங்க மாற்ற முடியாதே? நமக்கு ஹிந்தி தெரியலை என்றால் எவ்வளவு கேவலமாக பார்ப்பார்கள் தெரியுமா? கொடுமை அது, நல்ல காலம் அந்த கொடுமை எங்களுக்கு நடக்கலை , சௌதி போவதற்குள் நாங்க எல்லோருமே கற்றுக்கொண்டு விட்டோம்.
முன்றாவது மொழியாக கற்று கொடுத்திருக்கலாமே, திணிப்பு அது இது என்று அப்போ எவ்வளவு பேர் வாழ்க்கை சீரழிந்தது? மேலும் இப்பவும் இரண்டு தமிழர்கள்  பார்த்துக்கொண்டால் அவர்கள் பேசிக்கொள்வது ஆங்கிலத்தில் தான். இதுக்கு என்ன சொல்வேள், எப்படியும் நம்ம அம்மா இல்லை எனும்போது பக்கத்து மாமி ( ஹிந்தி)  தேவலாமா இல்ல எதுத்தாத்து ( ஆங்கிலம் ) மாமி தேவலாமா சொல்லுங்கோ.
மேலும் இரண்டு ஹிந்தி காரர்கள் சந்தித்துக்கொண்டால் அவர்கள் எவ்வளவு பெரிய லெவலில் இருந்தாலும் ஹிந்தி இல் தான் பேசுவார்கள்.எனவே நம் தமிழ் அழியும் என்று இருந்தால் அது நம்மால் தானே தவிர மற்ற வர்களால் அல்லது மற்ற மொழிகளால் இல்லை என்பது என் கருத்து புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 12:47 pm

சிவா wrote:கட்டுரையின் கருத்துக்கள் உண்மையானவைதான், ஆனால் இந்தி என்றொரு பாடம் இருந்திருந்தால் ஓரளவு basic ஆவது நமக்குத் தெரிந்திருக்கும். அதைக் கூடத் தடுத்தது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்பதெல்லாம் சுத்தப் பொய்.
அந்தப் போராட்டம் வரலேன்னு வெச்சுக்கலாம்.

இந்த 40 ஆண்டுகளில் அனைத்து அரசு அலுவல்கள் இந்தியில் மாறி இருக்கும். அட நம்ம டாஸ்மாக் கூட ஹிந்தி போர்டா தான் இருந்திருக்கும். தமிழ் இருக்கும்போதே ஆங்கிலப் பள்ளி மோகம் தலை விரித்து ஆடுது இதுல இந்தியும் இருந்திருந்தா!!!

இஷ்டப்பட்டவங்க படிக்கட்டும் அது தப்பில்லை - அந்த சமயத்தில் அந்த எதிர்ப்பில் பாடம் காணாமல் போனது. அனைத்து மெட்ரிக் CBSE பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம், ஃபிரெஞ்சு, இந்த வருடம் முதல் ஜெர்மனும் அறிமுகமாகிறது. படிக்கிறவங்க படிச்சிட்டு தான் இருக்காங்க.

சரியா படிக்காததால கேக்கேபிக்கேன்னு ஷாருக் ஹிந்தில சிரிக்கறது புரியல அவ்ளோதான் ஆனா அத இப்பல்லாம் சூப்பரா டப்பிங் இல்லேன்னா ரீமேக்ல பார்த்துடலாம்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 14, 2013 1:13 pm

யினியவன் wrote:
சிவா wrote:கட்டுரையின் கருத்துக்கள் உண்மையானவைதான், ஆனால் இந்தி என்றொரு பாடம் இருந்திருந்தால் ஓரளவு basic ஆவது நமக்குத் தெரிந்திருக்கும். அதைக் கூடத் தடுத்தது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்பதெல்லாம் சுத்தப் பொய்.

அந்தப் போராட்டம் வரலேன்னு வெச்சுக்கலாம்.

இந்த 40 ஆண்டுகளில் அனைத்து அரசு அலுவல்கள் இந்தியில் மாறி இருக்கும். அட நம்ம டாஸ்மாக் கூட ஹிந்தி போர்டா தான் இருந்திருக்கும். தமிழ் இருக்கும்போதே ஆங்கிலப் பள்ளி மோகம் தலை விரித்து ஆடுது இதுல இந்தியும் இருந்திருந்தா!!!

இஷ்டப்பட்டவங்க படிக்கட்டும் அது தப்பில்லை - அந்த சமயத்தில் அந்த எதிர்ப்பில் பாடம் காணாமல் போனது. அனைத்து மெட்ரிக் CBSE பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம், ஃபிரெஞ்சு, இந்த வருடம் முதல் ஜெர்மனும் அறிமுகமாகிறது. படிக்கிறவங்க படிச்சிட்டு தான் இருக்காங்க.

சரியா படிக்காததால கேக்கேபிக்கேன்னு ஷாருக் ஹிந்தில சிரிக்கறது புரியல அவ்ளோதான் ஆனா அத இப்பல்லாம் சூப்பரா டப்பிங் இல்லேன்னா ரீமேக்ல பார்த்துடலாம்.

ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 2:43 pm

அருமையான பகிர்வு நன்றி ராஜூ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக