புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Rutu
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Pradepa
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
18 Posts - 2%
prajai
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
8 Posts - 1%
Rutu
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_m10மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 7:52 am

1946-ல் வெளியான 'கிருஷ்ண விஜயம்' படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பாடிய 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' பாடல்தான் டி.எம்.எஸ் முதன்முதலாக பின்னணி பாடிய பாடல்.

டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 'இமயத்துடன்' என்னும் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுத் தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அந்த இடங்களில், அதே பழைய ஒலிப்பதிவு அறையைக் கண்டுபிடித்து, அங்கே நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்து, பழைய நினைவுகளில் ஊறித் திளைத்த பாக்கியம் அநேகமாக வேறு எந்தப் பாடகருக்குமே கிடைத்திராத ஒன்று!

டி.எம்.எஸ். வறுமையில் வாடிய ஆரம்பக் காலத்தில், கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த எம்.கே.டி. பாகவதருக்கு உதவியாளராகச் சேரும் வாய்ப்பு ஒன்று வந்தது. அவரைப் போல் தானே ஒரு நாள் பேரும் புகழும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில், உறுதியோடு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் டி.எம்.எஸ்.

மதுரை வரதராஜ பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். நல்ல குரலெடுத்து பஜனைப் பாடல்கள் பாடுவதிலும் அவர் வல்லவர். அந்தத் திறமை இயல்பிலேயே டி.எம்.எஸ்ஸிடமும் இருந்தது.

டி.எம்.எஸ்ஸும் மதுரை வரதராஜ பெருமாளுக்குச் சேவை செய்துள்ளார். மேல் வருமானத்துக்காக, அந்தக் கோயில் மண்டபத்திலேயே, 'தெற்குப் பெருமாள் மேஸ்திரி தெரு இந்திப் பிரசார சபா' என்னும் பெயரில் ஒரு இந்திப் பள்ளியையும் தொடங்கி, மாணவர்களுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 7:52 am

இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததில்லை டி.எம்.எஸ். மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது.

டி.எம்.எஸ்ஸுக்குச் சரளமாக இந்தி பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும். அவரது அபிமான இந்திப் பாடகர் முகம்மது ரஃபியிடம் அவர் பாடிய பாடல்களை, அவரைப் போலவே அச்சு அசலாகப் பாடிக் காண்பித்து அசத்தியிருக்கிறார்.

டி.எம்.எஸ்ஸுக்கு முதன்முதலில் பாடும் வாய்ப்பை அளித்தவர், அந்நாளில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த சுந்தர்லால் நட்கர்னி. அவரிடம் எப்படியும் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்றுவிடும் உத்தேசத்தில், அவரது வீட்டில் பணியாளராகவே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். (அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)

டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்..., உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா, மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப் பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியது டி.எம்.எஸ்தான்!

மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 7:52 am

டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடலாகத் திகழ்கிறது. இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ். கர்னாடக இசை மேதை செம்மங்குடியே இதைச் சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார்.

சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சர்வராகப் பணி செய்து வந்தவர் குழந்தைவேலன். நெற்றியில் திருநீறு, குங்குமம், சுத்தமான உடை, நடவடிக்கைகளில் பணிவு என இருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க, அவர் தங்கியிருந்த அறைக்கே சென்றார் டி.எம்.எஸ். ஒரு நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதி வைத்திருந்த பக்திப் பாடல்களைக் காட்டினார் அவர். அதில் ஒரு பாட்டு டி.எம்.எஸ்ஸுக்கு மிகவும் பிடித்துப்போக, அதற்குத் தானே இசையமைத்துப் பாடினார். பாட்டு ஹிட்! அந்தப் பாடல்தான்... 'உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை...'

'அடிமைப் பெண்' படத்தின்போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். படத்துக்கான பாடலைப் பாடிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட, மகள் திருமணத்தைவிட சினிமா பெரிதல்ல என்று கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்து, அவருக்குப் புகழை அள்ளிக் கொடுத்தது. அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா...'.

மகள் திருமணம் முடிந்து வந்த பின்பு, டி.எம்.எஸ்ஸை அழைத்து, மீண்டும் தனக்குப் பின்னணி பாடுமாறு கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்ஸும் கோபத்தையும் வருத்தத்தையும் மறந்து, தொடர்ந்து எம்.ஜி.ஆருக்குப் பாடத் தொடங்கினார்.

'அடிமைப் பெண்' படம் வரையில், ஒரு பாடலுக்கு டி.எம்.எஸ். வாங்கிய தொகை வெறும் 500 ரூபாய்தான். (அதன்பின்பு, குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டுப் பெற்றார்.) என்னதான் டி.எம்.எஸ். ஒரே டேக்கில் சரியாகப் பாடினாலும், மற்ற பாடகர்கள் உச்சரிப்பில் செய்கிற தவறு, இசைக் குழுவினரில் யாரோ ஒருவர் செய்கிற தவறு போன்ற பல காரணங்களால், அந்தக் காலத்தில் ஒரே பாட்டை மீண்டும் மீண்டும் பத்துப் பன்னிரண்டு தடவைக்கு மேல் பாடவேண்டியிருக்கும். அத்தனைக்கும் சேர்த்துத்தான் அந்தத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 7:53 am

'சிந்தனை செய் மனமே' பாடலின் இரண்டாவது பகுதியாகத் தொடரும் 'வடிவேலும் மயிலும் துணை' என்கிற பாடலில் மூச்சு விடாமல் தொடர்ந்து பாடிச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டுமல்ல; எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் என ஒவ்வொரு நடிகருக்கேற்பவும் குரல் மாற்றிப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அவரது பாடல்களை உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கும் நேயர்களுக்கு இது புரியும்.

'உயர்ந்த மனிதன்' பாடல்களை அதன் தயாரிப்பாளர் ஏவி.எம்-முக்குப் போட்டுக் காண்பித்தார்கள். 'வெள்ளிக்கிண்ணம்தான்...', 'என் கேள்விக்கென்ன பதில்...' இரண்டையும் கேட்டுவிட்டு ஏவி.எம். கேட்ட முதல் கேள்வி, "என் கேள்விக்கென்ன பாடல், இளம் நடிகர் சிவகுமாருக்கானது என்று டி.எம்.எஸ்ஸிடம் சொன்னீர்களா?" என்பதுதான். அவர் நினைத்ததுபோல் டி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை. சொல்லியிருந்தால், சிவகுமாருக்கேற்ப தன் குரலைக் குழைத்து மென்மையாக்கிக்கொண்டு பாடியிருப்பார் டி.எம்.எஸ். என்பதில் ஏவி.எம்முக்கு அத்தனை நம்பிக்கை. பின்னர், இந்தத் தகவல் டி.எம்.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிவகுமாருக்கேற்ப மீண்டும் அதே பாடலை குழைவும் நெகிழ்வுமாகப் பாடித் தந்தார் டி.எம்.எஸ்.

எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். முதன்முதல் பாடிய பாடல், 'மலைக்கள்ளன்' படத்தில் இடம்பெறும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. சிவாஜிகணேசனுக்கு டி.எம்.எஸ். முதன்முதல் பாடிய பாடல், ஏறாத மலைதனிலே படம்: தூக்குத்தூக்கி

அதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி' படத்தில் 'அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். (எம்.ஜி.ஆருக்கு அல்ல!) ஆனால், அந்த சினிமா டைட்டிலில் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை. அதேபோல், 'பல்லாண்டு வாழ்க' படத்திலும் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிற பாரதிதாசன் பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் பட டைட்டிலிலும் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை.

இலங்கைக்கும் டி.எம்.எஸ்ஸுக்கும் அப்படி ஒரு பொருத்தம் உண்டு. வானொலி உலகில் முதன்முதலில் டி.எம்.எஸ்ஸின் இசைத்தட்டை ஒலிக்கவிட்ட பெருமை இலங்கை வானொலியையே சேரும். ஆம். டி.எம்.எஸ். பாடிய 'அன்னம் இட்ட வீட்டிலே...' பாடலை முதன்முதலாக ஒலிபரப்பி, காற்றலைகளில் அவரது காந்தர்வக் குரலைப் பரப்பியது இலங்கை வானொலிதான்! டி.எம்.எஸ்ஸுக்கு முதல் பாராட்டுக் கடிதம் வந்தது இலங்கை, மட்டக்கிளப்பிலிருந்து! டி.எம்.எஸ்ஸுக்குக் கடிதம் எழுதிய முதல் ரசிகர் ஓர் இலங்கைத் தமிழர்.

பத்திரிகையாளர் ரவிபிரகாஷ்

மறைந்த டிஎம்எஸ் பற்றிய சுவையான தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jun 21, 2013 12:11 pm

அரிய தகவல்கள் தல. மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக