ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்

View previous topic View next topic Go down

OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்

Post by ராஜு சரவணன் on Sat Jun 22, 2013 6:07 pm

ஒரு இயக்குனர் தன்னிடம் உள்ள குறைந்தளவான மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான தயாரிப்பிற்கு நிகரான படத்தினைக் கொடுப்பாராயின் அந்த இயக்குனரின் சாதனைக்கும், அவரது கிரியேட்டி விட்டி மனப் பாங்கிற்கும் ஈடு இணை இல்லை என்று கூறலாம். இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சிப் பாதையில் வட கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமானவை.வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. யுத்தப் பிரதேசத்தில் பாரியளவு மூல வளங்கள், தொழில் நுட்ப உதவிகள் இல்லாத சந்தர்ப்பத்திலும் புலிகளின் திரைப் படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட படங்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிகரான அந்தஸ்தினைப் பெற்று நிற்கின்றன.22.10.2007 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்தின் அனுராதபுரம் வானூர்தி தளம் மீது  விடுதலைப் புலிகளின் வான் படை மற்றும் தரைக் கரும்புலிகளால் நிகழ்த்தப்பட்ட அதிரடித் தாக்குதலினைப் பற்றிய உண்மைச் சம்பவத்தைப் பேசி நிற்பதே இந்த எல்லாளன் திரைப்படமாகும். 2008ம் ஆண்டின் இறுதிக் காலங்களில் ஈழ யுத்தத்தின் இறுதிக் கட்டத்திற்கு முன்பதாக இலங்கை இராணுவம் தனது முற்றுகையினை வன்னிப் பகுதிக்குள் அதிகமாக்கிய வேளையில் குறுகிய மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான திரைப்படங்களுக்கு நிகரான முறையில் படமாக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கிறது இந்த எல்லாளன்.

சுருங்கக் கூறின் ஹாலிவூட்டின் யூனிவேர்சல் ஸ்டூடியோவின் தொழில் நுட்பத் திறனுக்கு நிகரான முறையில் ரியாலிட்டியாக இந்த திரைப்படத்தின் காட்சியமைப்புக்கள் அமைந்திருக்கிறது.

இலகுவில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்த முடியாது எனும் இறுமாப்போடு இலங்கை இராணுவத்தினரால் தமிழர் பிரதேசங்களில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த "கிபிர்" விமானங்களை விமானத் தளத்தில் தரித்து நிற்கும் வேளையில் தாக்குதல் நடாத்தி தகர்த்தெறிந்து இலங்கை அரசாங்கத்திற்கு அச்சமூட்டும் வகையில்;
புலிகளின் 21 பேர் கொண்ட கரும்புலி அணியினராலும், புலிகளின் இரு விமானங்களின் உதவியோடும் அனுராதபுரம் முகாம் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே. பிரபாகரன் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக 22.10.2007 அன்று நிகழ்த்தப்படுகின்றது.

இந்தத் தாக்குதலுக்கு முன்பதாக புலிகளின் வேவுப் பிரிவினர் எப்படி அனுராதபுரம் முகாமினுள் ஊடுருவித் தாக்குதலுக்கான புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்தார்கள், புலிகளின் அணியினர் எவ்வாறு இத் தாக்குதல்களுக்குத் தம்மைத் தயார்படுத்தினார்கள், சாதாரண மனிதர்கள் போல வாழ்ந்த தமிழர்களின் மனதில் எவ்வாறு கரும்புலியாக உருவாக வேண்டும் எனும் ஆவல் எழுகின்றது? எனப் பல தரப்பட்ட விடயங்களை வெறுமனே ஆக்சன் படமாக அல்லாது நவரசங்கள் கலந்த ஒரு ஆக்சன் + மசாலா கமர்சியல் ஹிட்டாக சொல்லி நிற்பது தான் இந்த எல்லாளனின் திரைப்படத்தின் உள்ளடக்கமாகும்.தமிழர்கள் வாழும் பகுதிகளில் அடிக்கடி இடம் பெறும் விமானக் குண்டு வீச்சுக்கள் மூலம் கொல்லப்படும் அப்பாவிப் பொது மக்களின் அவல நிலை தான் இந்த தாக்குதலுக்கான மூல காரணி என்பதனை நக்கலும் நையாண்டியும் கலந்த எள்ளல் தொனியில் அழகிய காட்சியமைப்பினூடாக காட்டி நிற்கிறார் இயக்குனர் தமிழன் அவர்கள். இதற்கு எடுத்துக் காட்டாக செஞ்சோலைத் தாக்குதல் இடம் பெற்ற மறு நாள் கரும்புலித் தாக்குதலோடு தொடர்புடைய கரும்புலி வீரனொருவர் தான் கரும்புலி என்று வெளிப்படுத்தாது பொது மக்களோடு சென்று பத்திரிகை வாசிக்கும் சந்தர்ப்பத்தில் புலிகளின் குரல் வானொலியின் நாளிதழ் நாளிப் பத்திரிகைச் செய்தியினைச் செவிமடுத்த பெரியவர்கள் பின் வருமாறு எள்ளி நகைப்பார்கள்.

"சமாதானம் சமாதானம் என்று உலகம் முழுக்கத் திரிஞ்சாங்கள். உந்தக் கிபிரை வீழ்த்த ஒரு வழியும் அறியாமல் நிற்கிறாங்கள்". இவ்வாறு பேசுவது கரும்புலியின் மனதில் உள்ள உணர்ச்சியிற்குத் தூண்டு கோலாக அமைந்து கொள்கிறது. இதே போல ஒவ்வோர் இடங்களிலும் மக்கள் கிபிர் தாக்குதல்களால் பாதிக்கப்படும் போது, "கிபிரைச் சுட்டு வீழ்த்த புலிகளால் முடியாதா? எனக் கேள்வி கேட்டு புலிகள் மனதினைச் சோதிக்கும் நிஜமான சம்பவங்கள் தான் இந்தத் தாக்குதலுக்குத் தூண்டு கோலாக விளங்கியிருக்கிறது. ஒரு புறத்தில் தாக்குதலுக்கான தயார்படுத்தல்கள், பயிற்சிகள் என விறு விறுப்பாகச் செயற்படும் புலிகளின் கரும்புலி அணியினரின் மனிதாபிமானம் நிறைந்த செயற்பாடுகளைக் காட்சிப்படுத்திய இயக்குனர் இந்தக் கறுப்பு மனிதர்களுக்குள் நெருப்பு மாத்திரம் அல்ல! அவர் தம் உளத்தினுள் ஈரமும் நிறைந்திருக்கிறது என்பதனையும் அழகுறப் படமாக்கியிருக்கிறார்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக தாக்குதல் நடாத்தி தான் இன்னும் சில நாட்களுக்குள் வீரச்சாவடைந்து விடுவேன் என்பதற்கு அப்பால், தாம் வாழும் காலம் வரை இந்த உலகில் உயிர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் என்பதனை "நாயிற்கு கட்டிலை கொடுத்து விட்டு, தாம் வெறும் நிலத்தில் தூங்கும் போராளியின் செயற்பாட்டின் ஊடாகவும், எலிக் குஞ்சுகளைத் தனது மிலிட்டரித் தொப்பியினுள் துயில் கொள்ள வைத்து விட்டு பயிற்சி வழங்கும் மாஸ்டரிடம் தண்டனை பெறும் போராளியின் செயற்பாட்டின் ஊடாகவும் அழகுறப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்கள்.  ஒளிப்பதிவினைப் பொறுத்தவரை மிகத் தரமான அதே வேளை துல்லியமான காட்சியமைப்புக்களை சந்தோஷ் அவர்கள் தன் கமெராக் கை வண்ணம் மூலம் காண்பித்திருக்கிறார்.இசை பற்றி நான் அதிகம் சொல்லுவதை விட நீங்கள் திரையில் பார்க்கும் போது உணர்ந்து கொள்வீர்கள். பின்னணி இசையில் நிரு அவர்களும், பாடல் இசையில் தேவேந்திரனும் பின்னி எடுத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்ப இசையமைப்பும், கலவை (Sound Mixing) ஒலிகளும் பயன்படுத்தப்பட்டு இப் படத்திற்கு உயிரோட்டமாக இசையும் தன் பங்களிப்பினைச் செய்திருக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் கணீரெனும் கம்பீரக் குரலில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில் "தாயக மண்ணே... தாயக மண்ணே....." எனும் பாடல் உங்கள் அனைவரின் உணர்வுகளையும் ஒரு முறை உசுப்பி விடும் என்பதில் ஐயமில்லை.

நீண்ட காலமாக ஈழத்து காதலை படங்களில் கண்டு களிக்க முடியலையே எனும் குறை உள்ளோருக்கு எல்லாளன் படத்தில் வரும் மச்சான் மச்சாள் சேஸிங் காட்சிகள் விருந்தளிக்கும். ஈழத்து மண் வாசனை கலந்த நகைச்சுவைக் காட்சிகளில் கலக்கியிருக்கிறார்கள் போராளிகள். உண்மைச் சம்பவத்தை எம் மனக் கண் முன்னே கொண்டு வரும் போது இருக்க வேண்டிய உயிர்ப்பூட்டல், யதார்த்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு, இயல்புத் தமிழ் உச்சரிப்பு ஆகிய அம்சங்கள் இத் திரைப்படத்திற்கு மெரு கூட்டியிருக்கிறது.

தமிழ் திரைக் கண் திரைப்பட பிரிவின் வெளியீட்டில், 2009ம் ஆண்டு வன்னிப் பகுதியிலிருந்து உலக நாடுகளில் வெளியீடு செய்வதற்காக அனுப்பி வைக்கபட்டிருந்த இந்தத் திரைப்படம் தான் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் இறுதியாக வன்னிப் பகுதியில் தயாரிக்கப்பட்ட முழு நீளத் திரைப்படமாகும். எல்லாளன் நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட அனைத்து வகையான ஆயுதங்களும் இப் படத்தில் பயன்படுத்தப்பட்டு முற்று முழுதாக ஒரு ரியாலிட்டித் திரைப்படமாக இந்தத் திரைப்படத்தினை வெளியிட்டிருக்கிறார்கள் தமிழ் திரைக் கண் வெளியீட்டுப் பிரிவினர்.

இந்தத் திரைப்படத்தினைப் படமாக்கும் போது நான்கு பேர் வீரச்சாவைத் தழுவியிருக்கிறார்கள்.
ஒரு மணித்தியாலம் 42 நிமிடங்கள் கால அளவை கொண்ட இத் திரைப் படத்தினை Youtube இல் பார்த்து மகிழ இங்கே கிளிக் பண்ணுங்கள்:லிங் இதோ. http://www.youtube.com/watch?v=XBHyQGfEWCg&feature=player_embedded

விடுதலைப் புலிகளின் போரியல் திட்டமிடல்கள், புலிகளின் தாக்குதல் மதி நுட்பங்கள் பற்றி அறியாதோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது!

எல்லாளன்: தமிழர்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டிய அதிரடிக் காவியம்!

தற் கொடைப் போராளிகள்: தம்மைத் தம் இனத்திற்கா கொடையாக கொடுப்போர்.
பிற் சேர்க்கை: விடுதலைப் புலிகளால் 2009ம் ஆண்டு மாசி மாதம் ஆனந்தபுரம் பகுதியில் இலங்கை அரசிற்குச் சொந்தமான இரண்டு கிபிர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் மூலம் வீழ்த்தப்பட்டன.

நன்றி தமிழ்நாட்டு பிளாக்ஸ்பாட்


Last edited by ராஜு சரவணன் on Sun Jun 23, 2013 11:11 am; edited 2 times in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்

Post by ராஜு சரவணன் on Sat Jun 22, 2013 6:23 pm

இது  ஈழத்தமிழர் எடுத்த படத்தினை பற்றியது.படம் 2010 ல் வெளியான என நினைக்கிறேன் . இந்த படத்தை நேற்று தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

உண்மையில் சொல்லப்போனால் இங்கு எடுக்கும் நாடக சாயல் படங்களுக்கு இந்த படம் எவ்வளவோ மேல் . அதுமட்டுமல்ல விடுதலைபுலிகளுடன் நாம் இருந்தது போன்ற ஒரு உணர்வு கிடைக்கிறது . அவர்கள் தம் தாய் நாட்டிற்காக எதைஎதை எல்லாம் இழந்து எவ்வாறு போராடினார்கள் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் படம்பார்த்த பிரம்மிப்பில் தான் இந்த பதிவு. படம் எப்போது வந்தால் என்ன? முடிந்தால் பார்க்காதவர்கள் ஒருமுறை பாருங்கள்.

இது படம் இல்லை தமிழனின் வீர வரலாறு


டொரன்ட் லிங் http://kickass.to/operation-ellalan-eelam-movie-t4216264.html

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்

Post by Muthumohamed on Sat Jun 22, 2013 6:37 pm

தமிழனின் வீர வரலாறு

பதிவு சூப்பருங்க ராஜு அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்

Post by ராஜா on Sat Jun 22, 2013 6:44 pm

தரவிறக்கிகொண்டிருக்கிறேன் , பகிர்வுக்கு நன்றி ராஜு புன்னகை

பெயர் ஓடும்போதே கண்ணீர் பெருகுகிறது சோகம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்

Post by ராஜு சரவணன் on Sun Jun 23, 2013 10:26 am

இந்த படம் உலகில் எங்கும் திரையிடபடவில்லை என்று நினைக்கிறேன்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்

Post by Guest on Sun Jun 23, 2013 12:08 pm

நேரடி தரவிறக்க சுட்டிகள்

Code:

http://www.filefactory.com/file/41mqttkpkz0z/n/www_TamilRockers_net_-_Operation_Ellalan_2008_DVDRip_Tamil_EELAM_Movie_1CDRip_700MB_avi

http://www.directmirror.com/files/1G5X0MP4

http://uptobox.com/p05cfc0d6o3v


http://www.multiupload.nl/8YCRULE83C

http://BillionUploads.com/k1h5tp8afrqv

http://extabit.com/file/29g2kl3y5477h/

http://turbobit.net/b8c2l3315im7.html


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! - திரைபடம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum