ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்பார்க்கும் Project Leader

View previous topic View next topic Go down

பெண்பார்க்கும் Project Leader

Post by சதீஷ்குமார் on Sun Oct 25, 2009 4:23 pm

நாடறிந்த ஒரு IT கம்பெனியில் Project Leader ஆகிய எனக்கு நாலு கழுதை வயதாகிவிட்டதால் திருமண ஏற்பாடு நடந்தது. நாளை பெண்பார்க்கும் படலம். நல்ல குடும்பம், அழகான, அறிவான வரன்...என்னை தான் சொல்கிறேன்!!!!. யாருக்கு தான் என்னை பிடிக்காது.

பெண்ணின் தகப்பனார் வங்கியில் மேலாளராக இருக்கிறார்.
பார்க்கவிருக்கும் பெண்ணின் போட்டோ கூட தரவில்லை. கேட்டதற்கு, "நாங்க Orthodox family" என பதில் வந்தது. "Orthodox Family" இருக்கவங்கள போட்டோ எடுத்தா பிரிண்ட் விழாதான்னு நீங்க அத இத கேட்டு என்னோட கல்யாணத்த நிறுத்திடாதீங்க ப்ளீஸ்.


இது தான் முதல் முறை. எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. அம்மா அப்பா எல்லோர் முன்னிலையிலும் ஒரு பெண்ணை பார்க்க வேண்டும். அப்பொழுது மொத்த குடும்பமும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கும்.

நாளை என்ன நடக்கும்...
ஏன்டா பொண்ணைத்தான பாக்குற? ஏதோ Zoo காண்டாமிருகத்த பாக்குற மாதிரி திகிலோட பாக்குறியே...கொஞ்சம் Romance பாருடா என தாய்மாமா சொல்வாரோ?

பல சிந்தனைகள், பயங்கள், நெருடல்கள். இதற்கு ஒருவழி இருக்கிறது. என்னுடைய நெருங்கிய நண்பன் பட்டாபி உடன் இருந்தால் கொஞ்சம் தெம்பாக இருக்கும்.

பட்டாபி என்னுடைய பால்ய சிநேகிதன். மிக நல்லவன், வெகுளி. எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். நாளை இவனும் இருந்தால், ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான். எல்லோர் கவனமும் இவன் மீதே இருக்கும். நான் நிம்மதியாக பெண்ணை பார்க்கலாம் பேசலாம்.

பட்டாபி விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன்.

நானே சொல்லனும்னு நெனச்சேன். கண்டிப்பா வரசொல்லு என்றார்.

மறுநாள் காலை...9:05 மணி. இராகுகாலம் முடிந்து புறப்பட்டோம். வழியெல்லாம் பெண்ணைப்பட்றியே சிந்தனை. அழகாக இருப்பாளா, எந்த சினிமா நடிகை மாதிரி இருப்பாள்? கண்கள் எப்படி இருக்கும்? புதிய அனுபவமாக இருந்தாலும் நன்றாகவே இருந்தது!!. பெண் வீட்டை அடைந்துவிட்டோம்.

வாசலில் வெளிநாட்டு நாய் ஒன்று கட்டிபோடப்பட்டு இருந்தது. அது எங்களை பார்த்தும் பார்க்காதது மாதிரி முகத்தை திருப்பிக்கொண்டது. காலிங் பெல்லை அழுத்தினார் அப்பா.

உள்ளே இருந்து ஒரு ஐந்து ஆறு தலைகள் திபுதிபுவென வெளியே வந்தார்கள். வாங்க வாங்க பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா? வாங்க உள்ள வாங்க என்றார்கள்.

உள்ளே நுழைந்தோம். ஹாலில் ஒரு போட்டோவை Frame செய்து மாட்டி வைத்து இருந்தார்கள். அதில் ஒரு பெண்ணும், வெளியில் கட்டி போட்டு இருக்கும் நாயும் இருந்தார்கள். அப்பா சொன்ன அடையாளம் எல்லாம் வச்சி பார்த்தா, இவ தான் நான் பாக்க போற பொண்ணா இருக்கணும். அடடா என்ன அழகு.. நான் என் மனதை பறிகொடுத்தேன். உடனே என் மனதில் டூயட். "ஏதோ சொல்ல நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்". பாடி முடிக்கவில்லை...அதற்குள் பட்டாபி வாயெடுத்தான்.

அந்த போட்டோ இருக்க ரெண்டு நாயும் அழகா இருக்குல்ல? என்றான்.

டேய் அதுல ஒன்னு எனக்கு பார்த்து இருக்க பொண்ணுடா.

சாரி சாரி ஹேர் ஸ்டைல் ஒரே மாதிரி இருந்ததா நான் Confuse ஆயிட்டேன்.

என்னடா பதில் இது. டேய் வேற யார்கிட்டயாவது இப்படி சொல்லிடாத.

இந்த நேரத்தில், ஒரு ஆன்ட்டி என்னருகில் வந்தார். hai, How is Your job? என்றார்.

நல்லா இருக்கு. ஆமா நீங்க யாரு? என்றேன்.

நான் பொண்ணோட சித்தி, US இருக்கேன். நடராஜ் நாளைக்கி வருவார்.

நடராஜ் உங்க பையனா?

No No, He is my Husband .

கூட காமராஜ் ம் வருவார்.

உங்களுக்கு மொத்தம் எத்தன Husband என கேட்டான் பட்டாபி!!!!.

you rubbish,
காமராஜ் என்னோட Son.

சாரி ஆன்ட்டி, பேர் rhyming இருந்ததால கேட்டேன்.

ஆன்ட்டி என்னிடம், Is there any Onsite opportunity?

நமக்கு எங்க அதெல்லாம்... நான் Offshore இருக்க figure தான் இன்னும் site அடிச்சிகிட்டு இருக்கேன் என நினைத்துக்கொண்டு....No Onsite, Only Offshore Site Opportunity என இல்லாத புது வார்த்தையை சொன்னேன்.

avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by சதீஷ்குமார் on Sun Oct 25, 2009 4:25 pm


Oh That is also very good na!!?!!?!!?
என்றார்.

நடராஜ் Con-Call ல் பேசியதை வைத்து இந்த ஆன்ட்டி english ல் படம் போடுவது அப்பட்டமாக தெரிந்தது.

நல்ல நேரம் முடியிறதுக்குள்ள பொண்ண கூப்பிடுங்க என்றார் என் அப்பா.

பெண் தயாராகிவிட்டாள். இதோ கூப்புடுறேன் என்ற பெண்ணின் தகப்பனார் பெண்ணை அழைத்தார். பெண் ரூம் ல் இருந்து வெளியில் வர வெட்கப்பட்டுக்கொண்டு இருப்பது அப்பாவின் முகபாவனைகளில் தெரிந்தது.

வாம்மா ரொம்ப சாது, ஒன்னும் பண்ணாது என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர் யாரை சொல்கிறார்.

அட வாம்மா, கடிக்காதுனு சொல்றேன் ?.

என்னை தான் சொல்லி இருக்கிறார். நாய் வளர்ப்பவர் என்று தெளிவாக காட்டினார் அந்த மனுஷன்.

ஒரு வழியாக பெண் வெளியில் வந்தாள். போட்டோவில் பார்த்ததைவிட அநியாயத்திற்கு ஒல்லியாக இருந்தாள். அடப்பாவிங்களா போட்டோவ Zoom-In பண்ணி பிரிண்ட் போட்டீங்களா?

பொண்ணு இருக்குற எடமே தெரியாதுன்னு சொல்வாங்களே அது இது தானா என்றான் பட்டாபி பெண்ணின் தகப்பனாரைப்பார்த்து.

டேய் நீ வேற வேல் பாய்ச்சாதடா என்றேன். ஒல்லியாக இருந்தாலும் லட்சணமாக இருந்தாள். எனக்கு பிடித்துதானிருந்தது.


பெண்ணை உள்ளே அழைத்து சென்றுவிட்டார்கள். பெண்ணின் தகப்பனார் பேச ஆரம்பித்தார்.

இந்த சம்பந்தம் எங்களுக்கு ரொம்ப திருப்தி ஆனா இதுல ஒரு விஷயத்த நான் சொல்லணும். பொண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம். அத கொஞ்சம் பார்த்துக்கோங்க என்றார்.

உடனே பட்டாபி, ஆயில்ய நட்சத்திரத்துல என்ன சார் பிரச்னை?

அதுக்கு இல்லை, பெண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரம்னா, மாப்பிள்ளைக்கு அம்மா இருக்க கூடாது என்றார்.

அய்யய்யோ என தோன்றியது எனக்கு. ஆனால் பட்டாபி அசராமல் சொன்னான்.

அதுக்கென்ன Sir, இன்னைக்கி சாயங்காலமே மாப்பிள்ளையோட அம்மா கதைய முடிச்சிவிட்டுடறோம். நாளைக்கே உங்களுக்கு சேதி அனுப்பிடறோம். அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிடலாம். என்னம்மா நான் சொல்றது என என்னுடைய அம்மாவையே கேட்டான்.

எங்க அம்மா சாமி வந்த மாதிரி உட்கார்ந்து இருந்தார்.

Sir,
அதுல எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மனசு ஒத்து போச்சினா கல்யாணத்த முடிச்சிடலாம் என்றார் என்னுடைய அப்பா.
ரொம்ப சந்தோஷம், அப்போ பையனோட கடைசீ ஆறு மாச Salary Slip அப்புறம் ஆறு மாச Bank Statement குடுத்துவிடுங்க என்றார் பெண்ணின் பாட்டி!.

உடனே பட்டாபி, பாட்டி நாங்க பொண்ணு பாக்க வந்தோம். Housing Loan வாங்க வந்தோம்னு நெனச்சிட்டீங்க போல என்றான்.

பெண்ணினுடைய அப்பா இடைமறித்தார். இல்லை இல்லை, அவுங்க சரியா தான் கேக்குறாங்க அவுங்க கேட்ட documents அப்புறம் உங்க கம்பெனியோட அஞ்சி வருஷ Balance Sheet, பேங்க் statement, auditor யாரு, உங்க கம்பெனி முதலாளி யாரு, இப்போ எங்க இருக்கார். எல்லா detail ம் குடுத்து அனுப்புங்க என்றார்.

அதற்கு பட்டாபி, நாட்டு நடப்பு முழுக்க தெரிஞ்சி வச்சி இருக்கீங்க. குடுக்குறது பத்தி இல்லை சார், இவனோட கம்பெனி முதலாளி பத்தி எல்லா detail ம் விசாரிச்சிட்டு, இவனைவிட அவரு better இருக்காருன்னு
நீங்க அவருக்கு பொண்ண குடுத்துட கூடாதேனு பாக்குறோம் என்றான்.

பொண்ண குடுக்குறதுன்னா சும்மாவா என்றார் பெண்ணின் தகப்பனார்.
அட நீங்க வேற சார், எங்க அப்பா கூட என்னோட தங்கச்சிய கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு முன்னாடி, லூஸ் மாதிரி நீங்க கேட்ட கேள்வி எல்லாம் கேட்டு தான் கட்டி குடுத்தாரு. ஆனா பாருங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது...மாப்பிள்ளைக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆன சேதி. அதனால எது தேவையோ அத கேளுங்க சார். டேய் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாடா என்றான் என்னைப்பார்த்து.
டேய் நீ கொஞ்சம் சும்மா இருக்கியா என்றேன்.
அப்போ நாங்க புறப்படறோம் என்றார் என்னுடைய அப்பா.
ரொம்ப சந்தோஷம். ஒரு வாரத்துல சொல்லி அனுப்பறோம். இது பெண்ணின் தகப்பனார்.

avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by சதீஷ்குமார் on Sun Oct 25, 2009 4:27 pm

ஏதாவது குழந்தை இருந்தா குடுங்க சார், பேர் வச்சிட்டு கிளம்பறேன் என்றான் பட்டாபி.

குழந்தை எதுவும் இல்லை. அடுத்த வாரம் தான் எங்க நாய், குட்டி போட போகுது. போட்ட உடனே சொல்லி அனுப்பறோம் என்றார் அந்த US ஆன்ட்டி.

அப்படியா, என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணி பார்த்தீங்களா? . ---------இது பட்டாபி.

இல்லை. ----------இது ஆன்ட்டி.

pregnant
ஆன ஆறு மாசத்துல!? என்ன குட்டின்னு ஸ்கேன் பண்ணா தெரிஞ்சிடும் என்றான்.
எனக்கு ஐயோ என கத்த வேண்டும் போல இருந்தது. டேய் பட்டாபி கிளம்புடா என்றேன்.
வீடு திரும்பும்போது அம்மா, அப்பாவை பார்த்து கேட்டார், ஏங்க, வழக்கமா பையன் வீட்லதான தகவல் சொல்லி அனுப்பரோம்னு சொல்வாங்க. இங்க என்ன பொண்ணோட அப்பா சொல்றாரு?

எனக்கும் அது தான் யோசனையா இருக்கு. பார்க்கலாம் விதின்னு ஒன்னு இருக்குல்ல என்றார் அப்பா.

ஒரு வாரம் ஆகியும் தகவல் வரவில்லை. நாங்களே தொலைபேசியில் அழைத்து விசாரித்ததில் அவர்களுக்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லையாம்.
அவர்கள் சொன்ன காரணம் : "பையனுக்கு சேர்க்கை சரி இல்லை!".

அடப்பாவி பட்டாபி, இப்படி என்னோட வாழ்க்கைல விளக்கு ஏத்திட்டியேடா!..
விரக்தியோடு அடுத்த வரனுக்காக காத்திருக்கிறேன்!!

பி.கு. :
உங்களுக்கு தெரிஞ்ச நல்ல குடும்பத்துல ஏதாவது பொண்ணு இருந்தா எனக்கு சொல்லுங்க. கண்டிப்பா பட்டாபிய கூட்டிகிட்டு வரமாட்டேன். இது சத்தியம் !!
avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by ராஜா on Sun Oct 25, 2009 4:33 pm

மகிழ்ச்சி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by kirupairajah on Sun Oct 25, 2009 4:36 pm



இதில் யாரவது பிடிச்சிருக்கிறதா சதீஸ்?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by சதீஷ்குமார் on Sun Oct 25, 2009 4:41 pm

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
யார் அந்த Project Leader
avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by ராஜா on Sun Oct 25, 2009 4:41 pm

அநியாயம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by ராஜா on Sun Oct 25, 2009 4:42 pm

@சதீஷ்குமார் wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
யார் அந்த Project Leader

வேற யாரு , எல்லாம் நம்ம ---------- தான்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by kirupairajah on Sun Oct 25, 2009 4:43 pm

@சதீஷ்குமார் wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
யார் அந்த Project Leader

என்ன விளையாடுறீங்களா சதீஸ்? நீங்கள் தான்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by nandhtiha on Sun Oct 25, 2009 4:44 pm

வணக்கம்
திரு கிருபை
தயவு செய்து அந்தப் படங்களை எடுத்து விடுங்கள், சிலர் மனம் புண்படும்,
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by nandhtiha on Sun Oct 25, 2009 4:46 pm

வணக்கம்
//வாசலில் வெளிநாட்டு நாய் ஒன்று கட்டிபோடப்பட்டு இருந்தது. அது எங்களை பார்த்தும் பார்க்காதது மாதிரி முகத்தை திருப்பிக்கொண்டது.//
அப்போதே திரும்பி இருக்கலாம், மனிதர்களை விட நாய் தன் கருத்தை உடனே சொல்லி விட்டது என்றே நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by சதீஷ்குமார் on Sun Oct 25, 2009 4:49 pm

by nandhtiha Today at 2:16 pm

வணக்கம்
//வாசலில் வெளிநாட்டு நாய் ஒன்று கட்டிபோடப்பட்டு இருந்தது. அது எங்களை பார்த்தும் பார்க்காதது மாதிரி முகத்தை திருப்பிக்கொண்டது.//
அப்போதே திரும்பி இருக்கலாம், மனிதர்களை விட நாய் தன் கருத்தை உடனே சொல்லி விட்டது என்றே நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா


கோவலன் மதுரைக்கு வந்த பொழுது
கொடியசைவது
மதுரைக்கு வராதே என்று மறுப்பது போலவா
avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by சதீஷ்குமார் on Sun Oct 25, 2009 6:49 pm

by kirupairajah Today at 2:13 pm
சதீஷ்குமார் wrote:எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
யார் அந்த Project Leader
என்ன விளையாடுறீங்களா சதீஸ்? நீங்கள் தான்

அய்யய்யோ அது நானில்ல
ஏன்னா நான் பட்டாபியை கூட கூட்டிகிட்டு போறதில்ல
avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by மீனு on Sun Oct 25, 2009 6:52 pm

@nandhtiha wrote:வணக்கம்
திரு கிருபை
தயவு செய்து அந்தப் படங்களை எடுத்து விடுங்கள், சிலர் மனம் புண்படும்,
அன்புடன்
நந்திதா

ஆம் ..என் கருத்தும் துதான் கிருபை
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பெண்பார்க்கும் Project Leader

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum