ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான்

View previous topic View next topic Go down

பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான்

Post by krishnaamma on Mon Jul 29, 2013 8:46 pm‘‘நவகிரகங்களிலும் நாம் அதிகமாக பயப்படுவது சனி பகவானுக்கு மட்டும்தான். இவரைப் பிடிக்காது நமக்கு. அதே சமயம், இவர் நம்மைப் பிடித் துக்கொண்டு விடுவாரோ என்கிற பயமும் உண்டு. கோயில்களிலும் நவகிரக சந்நதியைவிட, தனியாக சனிபகவான் வீற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், இந்த சந்நதியில்தான் கூட்டம் அதிக மாக இருக்கிறது. அந்த அளவுக்கு, நமக்கு பயம்! அதனால்தான், திருநள்ளாறுக்குச் சென்றால்கூட, சனிபகவானுக்கே முக்கியத்துவம் தருகிறோம். ‘‘திருநள்ளாறில் இருக்கும் சுவாமி பெயர், தர்பாரண் யேஸ்வரர்’’ என்று சொல்ல, நமக்குத் தெரியவில்லை.

தர்பாரண்யேஸ்வரர் என்னும் சிவபெருமானை ஒதுக்கி விட்டு, சனிபகவானிடம்தான் மனம் பதிகி றது. உள்ளே போய், தர்பாரண்யேஸ்வரரைத் தரிசிப்போம் என்ற எண்ணமே இருக்காது. அந்த அளவுக்கு, சனிபகவானிடம் பயம்! ஆனால், நம்மை சோதனைக்குள்ளாக்கி, நம்மைத் துன்புறுத்தி மகிழ்வதில் பகவான் எனப் போற்றப்படும் சனிக்கு என்ன சுகம் இருக்க முடியும்? ஒரு மாணவனுக்கு பரீட்சை போலத்தான் அவர் நமக்களிக்கும் சோதனைகளும். அதுவரையிலான அனுபவ அறிவை வைத்து இதுபோன்ற சோதனைக் காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தை வழங்குபவர்தான் சனிபகவான்.

சனிபகவானைப் பற்றிய நம் எண்ணங்கள் இவ்வாறு பலவாறாக இருந்தாலும் ஆராய்ச்சியிலேயே வாழ்நாளைக் கழிக்கும் அயல்நாட்டுக்காரர்கள், வேறோர் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது, சனிபகவானைப் பற்றிய அபூர்வமான தகவல்கள் வெளிப்பட்டன. நாசா ஆராய்ச்சியில் இறங்கியது. ஆகாயத்தில் திருநள்ளாறு வழியாக வரும் தகவல்கள்தான் தாமதமாக வருகின்றன என்று தெரிந்தது. இந்தக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. உடனே, ‘‘ஏன் அப்படி?’’ என்று ஆராய்ந்தார்கள். விடை கிடைத்தது.

சனி கிரகத்திலிருந்து, மெல்லியதான ஓர் நீல நிற ஒளிக்கற்றை புறப்பட்டு வந்து, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் வந்து ஐக்கியமாவ தாகத் தெரிந்தது. அந்த ஒளிக்கற்றையின் அடர்த்தியும் அளவும் சனிப்பெயர்ச்சி நாளில் அதிகமாவதும் தெரிந்தது. சனி கிரகத்திற்கு உரிய தலமாக, திருநள்ளாரை இதற் காகத்தான் சொல்லி வைத்தார்களோ என்பதை உணர்ந்து அதிசயித்தார்கள். ஆகையால், முன்னோர்கள் எல்லாம் ஏதோ தம் வாய்க்கு வந்தபடி சொல்லிவிட்டார்கள் என்று எண்ணக்கூடாது. நமக்கு எளிமையாகப் புரிய வேண்டும் என்பதற்காகவே, பலவிதமான தகவல்களை கதைகளாகச் சொல்லி வைத்தார்கள்.

தொடரும்..................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான்

Post by krishnaamma on Mon Jul 29, 2013 8:47 pmவாருங்கள்! சனி பகவானிடம் செல்வோம்! அட! ஏன் பயப்படுகிறீர்கள்? பயப்படாமல் வாருங்கள்! அவர் நல்லதுதான் செய்வார், நம்புங்கள்! முதலில், இரண்டு அறிவாளிகளின் செயல்களைப் பார்க்கலாம். ராவணன், வேதங்களில் கரை கண்டவன், இசைபாடி இறைவனையே மயக்கியவன், அளவில்லாத ஆற்றலும் வீரமும் படைத்தவன், கற்புக்கரசியான, மகளிரில் தலைசிறந்தவளான மனைவி, இந்திரனையே வெற்றிகொண்ட மகன் - இவ்வளவும் இருந்தால், கூடவே ஒன்று இருக்குமே...! ஆணவம்! அது ராவணனிடம் நிறையவே இருந்தது. தேவர்களை எல்லாம் ஆட்டிப்படைத்தான் அவன்.

அனைவரையும் தன் ஆட்சிக்குக் கீழே கொண்டுவந்த அவன் நவகிரகங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த நவகிரகங்களை அடிமைப்படுத்தி, அவற்றைத் தன் சிம்மாசனத்திற்குப் படிக்கட்டுகளாக அமைத்துக் கொண்டான். நவகிரகங்களும் குப்புறப்படுத்தபடி படிக்கட்டுகளாக இருந்தன. அவற்றின் முதுகின்மேல் கால்வைத்து மிதித்து ஏறி, சிம்மாசனத்தில் அமர்வான், ராவணன். ஒருநாள், ராவணன் சிம்மாசனத்தில் ஏறுவதற்காகப் படிக்கட்டு அருகில் சென்றபோது அங்கு நாரதர் வந்தார். ‘‘என்ன ராவணா! எல்லோரும் உன் னை வீரன் என்கிறார்கள்.

நீயோ, நவகிரகங்களுக்குப் பயந்தவன்போல, அவர்களின் முதுகில் மிதிக்கிறாயே! அவர்களை எல்லாம் நிமிர்த்திப் படுக்க வைத்து, அவர்களின் நெஞ்சில் அல்லவா காலை வைத்து ஏறவேண்டும். உனக்கும் ஏதாவது பயமா?’’ எனக் கேட்டார். இப்படி யாராவது கேட்டால், ஆணவக்காரர்களுக்குதான் உடனே ‘ஜிவ்’வென்று ஏறுமே! ராவணனுக்கும் அப்படித்தான் ஏறியது. உடனே, நவகிரகங்களை நோக்கி, ‘‘நிமிர்ந்து படுங்களடா எல்லோரும்’’ என்றான். எல்லோரும் நிமிர்ந்து படுத்தார்கள். சனிபகவான் பார்வை ராவணன் மீது விழுந்தது. அதேநேரத்தில், அயோத்தியில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி அவதரித்தார். ராவணனுக்கு அழிவுகாலம் ஆரம்பமாயிற்று.

ராவணனின் வீரமும் அனுபவித்த சுகங்களும் அவனுக்கு ஆணவத்தைத் தந்தது. அந்த ஆணவம் அவனுடைய வாழ்க்கையையே முடித்தது. அடுத்தது, ஒரு சமயம் சனி பகவான் விநாயகப் பெருமானிடம் சென்றார். ‘‘ஆனைமுகக் கடவுளே! நான் உங்களைப் பிடிக்க வேண்டும். இப்போது பிடிக்கப் போகிறேன்’’ என்றார். அதற்கு விநாயகர், ‘‘இப்போது வேண்டாம். நாளை வந்து பிடித்துக்கொள்! நீயே அதை, வேண்டுமானால் என் முதுகில் எழுதிவிட்டுப் போ!’’ என்றார். சனிபகவானும் விநாயகரின் முதுகில், ‘‘நாளை வந்து பிடித்துக் கொள்!’’ என எழுதிவிட்டுச் சென்றார். மறுநாள் சனிபகவான் விநாயகரிடம் வர, விநாயகர் முதுகைத் திருப்பிக் காட்டினார். அங்கே, அவர் எழுதிய ‘‘நாளை வந்து பிடித்துக் கொள்!’’ என்பது அவர் பார்வையில் பட்டது.

தொடரும் ..............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான்

Post by krishnaamma on Mon Jul 29, 2013 8:48 pmஅப்புறம் என்ன, நாளை, நாளை என்று, சனிபகவானின் எண்ணம் பலிக்காமலே போனது. இங்கே வென்றது, அமைதியான விநாயகரின் அறிவாற்றல். ராவணனைப் போல் ஆணவம் பிடித்த அறிவல்ல. இதேபோல், சனிபகவானைப் பற்றி ஏராளமான கதைகள் இருக்கின்றன. இனி சனி பகவானைப் பற்றிய மற்ற தகவல்களைப் பார்க்கலாம். சூரியன், துவஷ்டாவின் மகளான சஞ்ஞிகை என்பவளை மணம் செய்து வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு வைவஸ்வத மனு, யமன், யமுனை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதன் பிறகு, சஞ்ஞிகை சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாததால், தன் தந்தை வீட்டிற்கு, சூரியனுக்குத் தெரியாமல் செல்ல எண்ணினாள்.

அதற்காகத் தன் நிழலையே, தன்னைப் போலவே ஒரு பெண்ணாகச் செய்து, அங்கேயே விட்டுவிட்டு, தந்தையிடம் சென்றுவிட்டாள். அவளுடைய நிழலில் தோன்றிய பெண் சாயாதேவி எனப்பட்டாள். அந்த சாயாதேவி, சஞ்ஞிகையின் விருப்பப்படியே தான் வேறொருத்தி என்பதைச் சொல்லாமலேயே சூரியனுடன் வாழ்ந்தாள். அவளுக்கு சாவர்ணீ என்ற மனு, சனிபகவான், பத்திரை என்ற பெண் ஆகியோர் பிறந்தனர். தனக்குக் குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி, சஞ்ஞிகையின் குழந்தைகளிடம் வெறுப்பைக் காட்டத் தொடங்கினாள். அதனால் கோபம் கொண்ட யமன், ஒருநாள் சாயாதேவியை உதைக்கப் போனான்.
‘‘என்னையா உதைக்க வருகிறாய்? உன் கால் முறியட்டும்’’ என சாபம் கொடுத்தாள் சாயாதேவி.

இத்தகவலை, யமன் தன் தந்தையான சூரியனிடம் போய்ச் சொன்னான். சந்தேகப்பட்ட சூரியன் விசாரித்து உண்மையை உணர்ந்தான். அதன் பிறகு சூரியன், சஞ்ஞிகையைத் தேடிச் சென்று, தவம் செய்து கொண்டிருந்த அவளை அடைந்தது தனிக் கதை. இதன் பிறகு, சனிபகவான் காசிக்குச் சென்று தன் பெயரால் ஒரு சிவலிங்கம் நிறுவி வழிபட்டுத் தவம் செய்தான். அதன் பயனாக, கிரகங்களில் ஒன்றா கப் பதவியும் பெற்றான். சனி பகவானுக்கு, ஒரு கால் சற்று சிறியதாக இருப்பதால், அவன் மெள்ளமாக நடப்பான். அதனால் அவனுக்கு ‘சனைச்சரன்’ (மந்தமாக நடப்பவன்) என்ற பெயரும் உண்டு. ஆகமங்கள் சனிபகவானின் வடிவம், உடை ஆகியவற்றைப் பற்றிக் கூறுகின்றன.

சனிபகவான் - கரு நிறத்தவன், கரிய ஆடை, குட்டையான வடிவம், இரு கால்களில் ஒன்று ஊனம், இரு கரங்கள், வலது கரத்தில் தண்டம், இடதுக ரத்தில் வரத முத்திரை, பத்ம பீடத்தில் வீற்றிருப்பவன் என ஓர் ஆகமம் கூறுகிறது. சனிபகவான், கரங்களில் தண்டமும் அட்ச மாலையும் உள்ளன. எட்டுக் குதிரைகள் பூட்டப்பட்ட இரும்பு ரதத்தில் பவனி வருபவன் என விஷ்ணு தர் மோத்திரம் என்ற நூல் கூறுகிறது. நவகிரகங்களுக்கு உண்டான வழிபாட்டு முறைகளை விவரிக்கும் நவகிரக ஆராதனம் என்ற நூலில் காணப்படும் சனிபகவானைப் பற்றிய தகவல்கள்: சனிபகவான் வில் போன்ற ஆசனத்தில் வீற்றிருப்பான். கழுகு வாகனம் உடையவன். மேற்கு நோக்கி அமர்ந்திருப்பான்.

நீலமேனி உடையவன், முடி தரித்திருப்பான், சூலம், வில், அபயம், வரதம் ஆகியவை கொண்ட நான்கு திருக்கரங்களை உடையவன். மெள்ள நடப்பான். கருஞ்சந்தனம், கருமலர், நீலமலர் மாலை ஆகியவற்றை அணிபவன், கருநிறக்குடை கொண்டு மேருவை வலம் வருபவன், சௌராஷ்டிர தேசத்தில் தோன்றியவன், மகர ராசிக்கும் கும்ப ராசிக்கும் அதிபதி. நவகிரக மண்டலத்தில் சூரியனுக்கு மேற்காக வில் வடிவம் கொண்ட மண்டலத்தில் இருப்பவன். சனிக்கு அதிதேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நிறம் - கருமை. தானியம் -எள். சனிபகவானுக்கு மலர் - கருங்குவளை, மந்தாரை; ஆடை - கருப்புநிறம், மணி - நீலம், உலோகம் - இரும்பு, மனைவி நீளாதேவி, மகன் - குளிகன், பண்பு -குரூரம், குணம் - தாமசம், சுவை - கசப்பு.

தொடரும்...................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான்

Post by krishnaamma on Mon Jul 29, 2013 8:49 pm

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் சனிபகவானைக் குறித்து கீர்த்தனை பாடி இருக்கிறார். அப்பாடலில் அவர் கூறியிருக்கும் தகவல்கள்: சனிபகவான் - கதிரவனின் புதல்வர், மிகுந்த தைரியம் உடையவர், பிறவிப் பெருங்கடலில் மூழ்கக் கூடிய பயத்தை உண்டாக்கிக் கொடிய பலன்களை அளிப்பவர். சிவபெருமானின் கடைக்கண் பார்வைக்கு ஆளான அடியவர்களுக்கு, ஆச்சரியப்படும்படியான நற்பயன்களை வழங்குபவர். மை போலக் கறுத்த திருமேனி கொண்டவர், நீல உடை, நீல மலர்மாலை அணிந்தவர், மாலினி மந்திரத்தால் துதிக்கப்பட்ட குருகுகனுக்குக் களிப்பளிப்பவர். மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதி. எள் கலந்த உணவு, நல்லெண்ணெய் விளக்கு ஆகியவற்றில் மிகுந்த விருப்பம் கொண்டவர்.

கருணையின் கடல் போன்றவர். பயமில்லாதவர், யமனுடைய தண்டத்தால் அடிக்கப்பட்டு முடமான கால் உடையவர். வழிபடுபவர்களுக்கு விரும்பிய பலன்களை அளிப்பதில் காமதேனுவைப் போன்றவர், கால சக்கரத்தைப் பிளப்பதில் கதிரவனுக்கு நிகரானவர், சாயா தேவியின் குமாரர், மெள்ளமாக நடப்பவர். இப்படிப்பட்ட சனிபகவானை எப்பொழுதும் பிரார்த்திக்கிறேன் என்கிறார் தீட்சிதர். தமிழ்நாட்டில், சனிபகவானுக்குக் காக்கையை வாகனமாகச் சொல்வது வழக்கமாக இருக்கிறது. ஆலயங்களில் உள்ள சனிபகவான் விக்கிரகங்களிலும் காகமே வாகனமாக அமைக்கப்பட்டிருக்கிறது. திருப்பனந்தாள், காசி மடத்தார் வெளியிட்டுள்ள ‘சனி பகவான் தோத்திரம்’ என்னும் நூல், பன்னிரண்டு பாடல்களால் சனிபகவானைத் துதிக்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ‘சனியனே! காகமேனும் தம்பிரானே!’ என்று நிறைவு பெறுகிறது.

வடமொழியில் உள்ள தியான சுலோகங்களோ, சனிபகவானுக்குக் கழுகையே வாகனமாகக் குறிப்பிடுகின்றன. சனிபகவானுக்கு மந்தன், பிணிமுகன், காரி, முடவன், முதுமகன், சமீபுஷ்பப் பிரியன், நிர்மாம்ச காத்ரன், சுஷ்கன், சுஷ்கோதரன், ஜடாதரன் எனப் பல பெயர்கள் உண்டு. சனிபகவானால் பீடிக்கப்பட்டுப் படாதபாடு பட்டவர்கள் என்று நளன், தசரதர் ஆகியோரைக் குறிப்பிடுவார்கள். இறைவனை வழிபட்டு, அத்துயரில் இருந்து அவர்கள் விடுபட்டதையும் கூறுவார்கள். ஒழுக்கசீலர்கள், உத்தமர்கள், மனதாலும் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்காதவர்கள் என்றெல்லாம் புகழப்படும் நளன், தசரதர் ஆகியோரே சனிபக வானால் பீடிக்கப்பட்டார்கள் என்றால், நாம் எம்மாத்திரம்? இறைவனை வழிபட்டு, சனிபகவானால் துயரம் நேரிடாதவாறு வேண்டுவோம்! இறைவன் அருள்வான்.

நன்றி _பி.என்.பரசுராமன் - தினகரன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பயமுறுத்திப் பண்படுத்தும் பகவான்

Post by Muthumohamed on Tue Jul 30, 2013 8:41 am

நல்ல பதிவு என்னுடைய நம்பிக்கையும் இது தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum