ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 M.Jagadeesan

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி

View previous topic View next topic Go down

இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி

Post by soplangi on Wed Jul 31, 2013 12:57 pmசென்னை :

‘‘நான் இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள். உயிரோடுதான் இருக்கிறேன்’’ என்று நடிகை கனகா கூறினார்.

வதந்தி

ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், கனகா. அதிசயப்பிறவி, கோவில் காளை, கும்பக்கரை தங்கையா, சாமுண்டி உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர், மறைந்த நடிகை தேவிகாவின் மகள் ஆவார்.தேவிகா மரணம் அடைந்த பின், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சொந்த வீட்டில் கனகா தனிமையில் வசித்து வந்தார். படங்களில் நடிக்காமல், சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

கேரள ஆஸ்பத்திரியில்...

இந்த நிலையில், கனகா கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் புற்று நோய்க்காக சிகிச்சை பெறுவதாக கேரளாவில் இருந்து தகவல் வெளியானது. நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்து விட்டதாக வதந்திகள் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபற்றி விசாரிப்பதற்காக கனகாவின் செல்போனுடன் தொடர்பு கொண்டபோது, நீண்ட ‘ரிங்’ போய் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை.அதைத் தொடர்ந்து கனகாவின் தந்தை தேவதாசுடன் தொடர்பு கொண்டபோது, ‘‘கனகா பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்திதான். அவர் சென்னையில் உள்ள வீட்டில்தான் இருக்கிறார். அவரை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றபோது, என்னை அனுமதிக்கவில்லை’’ என்றார்.

பூட்டிய வீடு

உடனே நிருபர்கள், புகைப்படக்காரர்கள், டி.வி. கேமராமேன்கள் அனைவரும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கனகா வீட்டுக்கு விரைந்தார்கள். அப்போது வீட்டின் ‘கேட்’ இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் உள்பக்க கதவும் பூட்டப்பட்டு இருந்தது.கதவில் முருகன், ஆஞ்சநேயர், சாயிபாபா படங்களுடன் முகம் பார்க்கும் கண்ணாடிகள் மற்றும் மந்திரித்த கயிறுகள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன.ஹாலில் பச்சைக்கிளிகள் மற்றும் சிட்டுக்குருவிகளுடன் கூடிய பெரிய கூண்டு இருந்தது. அதைத்தாண்டி இரட்டை கதவுகளில் ஒரே ஒரு கதவு மட்டும் லேசாக திறந்து இருந்தது. வீட்டுக்குள் ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.உள்ளே 2 பெண்கள் இங்கும் அங்குமாக போய்க் கொண்டிருந்தார்கள். ‘‘மேடம், நாங்கள் பத்திரிகையில் இருந்து வந்திருக்கிறோம். வெளியே வாங்க’’ என்று பலமுறை சத்தம் போட்டு அழைத்தும், பதில் இல்லை.அதற்குள் கனகா பற்றிய தகவல் பரவி, அவர் வீட்டு முன்பு கூட்டம் கூடியது. போலீஸ் வந்தது.

பரபரப்பு பேட்டி

சுமார் 30 நிமிடங்களுக்குப்பின், கனகா சிரித்தபடி வீட்டுக்குள் இருந்து வந்தார். உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை திறந்தார். அவர் வெள்ளை நிறத்தில் கறுப்பு டிசைனுடன் கூடிய புடவை கட்டியிருந்தார். கண்ணாடி அணிந்திருந்தார்.‘‘கனகா, உங்களை பற்றிய பரபரப்பான செய்திகளுக்கு பதில் சொல்கிறீர்களா?’’ என்று நிருபர்கள் கேட்டபின், கனகா பேச ஆரம்பித்தார். அவர் கூறியதாவது:–‘‘நான் இத்தனை நாட்களாக நடிக்காமல் இருந்த பிறகும் என்னைப் பற்றிய ஒரு தகவல் பரவியதும், என் வீடு தேடி வந்ததற்காக சந்தோஷம். நன்றி. ஒவ்வொரு மனிதருக்கும் இறப்பும், பிறப்பும் பொதுவானது. அம்மா வயிற்றுக்குள் இருந்து வந்தவர்கள் அனைவரும் ஒருநாள் மண்ணுக்குள் போய்த்தான் ஆகவேண்டும்.

உயிரோடுதான் இருக்கிறேன்

எனக்கு ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் ஆகியவை இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கவில்லை. இனிமேல்தான் சோதித்துப் பார்க்க வேண்டும். நான் கேரளாவில் உள்ள ஆலப்புழைக்கு சென்றது உண்மை. அங்கிருக்கும் என் நண்பரை பார்ப்பதற்காக சென்றேன். அதற்குள் கனகாவுக்கு புற்றுநோய் என்று வதந்தி பரவிவிட்டது.நான் உயிரோடுதான் இருக்கிறேன். நல்ல ஆரோக்கியமாகவே இருக்கிறேன். என்னைப் பற்றிய வதந்திகளை பரப்பியவர், என் தந்தை என்று சொல்லிக்கொண்டு திரியும் தேவதாஸ்தான். என்னை சந்தித்துப் பேசி, மறுபடியும் என் சொத்துக்களை அபகரிக்கப்பார்க்கிறார். என் அம்மாவுக்கு ஒருநாளும் அவர் நல்ல கணவராக நடந்து கொண்டதில்லை. எனக்கு நல்ல தந்தையாக இருந்ததில்லை. அவரால்தான் ஆண்களைப் பார்த்தால் எனக்கு பிடிக்கவில்லை.

பூனை–நாய்கள்

எனது தனிமையை தவிர்ப்பதற்காக வீட்டில் 35 பூனைகளை வளர்க்கிறேன். நாய், கோழிகளுடன்தான் வசிக்கிறேன். மனிதர்களை விட, இவைகள் எவ்வளவோ மேல். என் வீட்டு வாசலில் வந்து நின்ற தேவதாசை துரத்தி விட்டேன். அவருடைய முகத்தைப் பார்க்க விரும்பவில்லை.’’இவ்வாறு கனகா கூறினார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கனகா அளித்த பதில்களும் வருமாறு:–

திருமணம்

கேள்வி:– உங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறப்படுகிறதே... அதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்:– நான் உயிரோடு இருக்கிறேனா, இல்லையா? என்பதை பற்றி மட்டுமே பேச வேண்டும். மற்றவை பற்றி பேசக்கூடாது என்று என் வக்கீல் கூறியிருக்கிறார். திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தை பெற்றுக்கொள்ளாமல் யாரும் வாழவில்லையா?

கேள்வி:– இவ்வளவு பெரிய வீட்டில் தனிமையில் வசிப்பதற்கு பயமாக இல்லையா?

பதில்:– எதற்கு பயப்பட வேண்டும்? திருடனுக்கா, பேய்–பிசாசுகளுக்கா? எத்தனையோ பேர் நகரை விட்டு ஒதுக்குப்புறமான ஈஞ்சம்பாக்கத்திலும், ஈ.சி.ஆர். ரோட்டிலும் வசிக்கிறார்கள். நான் பணக்காரி. சென்னையின் இதய பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் சொந்த வீட்டில் வசிக்கிறேன். மனிதர்களைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?

மறுபடியும் நடிப்பு

கேள்வி:– மீண்டும் நடிப்பீர்களா?

பதில்:– நல்ல கதையும், வேடமும் வந்தால் மறுபடியும் நடிக்க தயாராக இருக்கிறேன்.’’இவ்வாறு கனகா கூறினார்.

கனகாவின் தந்தை தேவதாஸ் கூறியதாவது:–

‘‘கனகாவுக்கு புற்று நோய் என்று கேள்விப்பட்டதும், அவளை பார்க்க சென்றேன். ஆனால், கனகா என்னை பெற்ற தந்தை என்றும் பாராமல் வேலைக்காரியை விட்டு துரத்தி விட்டாள்.என்னை துரத்தினாலும், அவள் என் மகள்தான். அவள் மீதான பாசம் எனக்கு குறையாது. கனகாவின் தனிமைதான் அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.’’மேற்கண்டவாறு தேவதாஸ் கூறினார்.

-- தினத்தந்தி
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி

Post by ராஜு சரவணன் on Wed Jul 31, 2013 1:15 pm

தமாத்துண்டு நடிகை இறந்துவிட்டதாக கூறியவுடன், வேல வெட்டியில்லாமல் அவளின் வாசலில் போய் நாய்போல் நிற்க்கும் தமிழனே.... உண்மையில் நீ சாப்பிடுவது உணவா அல்லது வேறு ஏதாவதா.

நடிகர் என்றால் பால் அபிஷேகம் செய்வதும், மொட்டைபோட்டுக்கொள்வதும், தேர் இலுப்பதும், அலகு குத்தி காவடி எடுப்பதும் ஏதோ கடவுள் போல் அவனை வணங்குவதும் இந்த நாட்டில் மட்டும் தான், உலகில் இதுபோன்று எங்கும் பார்க்கமுடியாது.

அவன் காசுக்குக்காக நடிக்கிறான் அவ்வளவு தான் உனக்கு ஒரு வேலை சோறு இல்லை என்றால் அவன் கொடுப்பானா?, இல்ல உன் பிள்ளை குட்டிகளுக்கு உடம்பு சரி இல்லையென்றால் மருத்துவ செலவு செய்வானா? . அவன் வேலையை அவன் சரியா செய்கிறான், நீ உன் வேலையை சரியா செஞ்சு குடும்பத்தை காப்பாத்து. படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார் , அதுவே உண்மையான வாழ்க்கை என ஏமாறாதே.

நீ கெட்டால் உன் உறவுக்கு தான் வலிக்கும் அவனுக்கு இல்லை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி

Post by ஜாஹீதாபானு on Wed Jul 31, 2013 1:41 pm

நல்லா கெளப்புறங்கய்யா பீதியைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30019
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி

Post by அருண் on Wed Jul 31, 2013 1:56 pm

அப்ப கூடிய சீக்கிரம் சின்னத்திரையில் வலம் வருவிங்க..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி

Post by ansaralis on Wed Jul 31, 2013 6:07 pm

@ராஜு சரவணன் wrote:தமாத்துண்டு நடிகை இறந்துவிட்டதாக கூறியவுடன், வேல வெட்டியில்லாமல் அவளின் வாசலில் போய் நாய்போல் நிற்க்கும் தமிழனே....  உண்மையில் நீ சாப்பிடுவது உணவா அல்லது வேறு ஏதாவதா.

நடிகர் என்றால் பால் அபிஷேகம் செய்வதும், மொட்டைபோட்டுக்கொள்வதும், தேர் இலுப்பதும், அலகு குத்தி காவடி எடுப்பதும் ஏதோ கடவுள் போல் அவனை வணங்குவதும் இந்த நாட்டில் மட்டும் தான், உலகில் இதுபோன்று எங்கும் பார்க்கமுடியாது.

அவன் காசுக்குக்காக நடிக்கிறான் அவ்வளவு தான் உனக்கு ஒரு வேலை சோறு இல்லை என்றால் அவன் கொடுப்பானா?, இல்ல உன் பிள்ளை குட்டிகளுக்கு உடம்பு சரி இல்லையென்றால் மருத்துவ செலவு செய்வானா? . அவன் வேலையை அவன் சரியா செய்கிறான், நீ உன் வேலையை சரியா செஞ்சு குடும்பத்தை காப்பாத்து. படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார் , அதுவே உண்மையான வாழ்க்கை என ஏமாறாதே.
நீ கெட்டால் உன் உறவுக்கு தான் வலிக்கும் அவனுக்கு இல்லை
அவஅவனுங்க பக்கத்த நெறப்பரதுக்கு அலையா அலையறாங்க.
avatar
ansaralis
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 65
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum