ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 கோபால்ஜி

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 kram

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 krishnaamma

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

அரேபியாவின் பங்களிப்பு
 ayyasamy ram

உலக தைராய்டு தினம்
 ayyasamy ram

இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
 ayyasamy ram

பி.வி. சிந்துவும் இறக்கையும்!
 ayyasamy ram

அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
 ayyasamy ram

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
 ayyasamy ram

தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
 ayyasamy ram

சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
 ayyasamy ram

ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
 ayyasamy ram

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கம்பன் - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்!

View previous topic View next topic Go down

கம்பன் - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்!

Post by சாமி on Sun Aug 04, 2013 8:39 am

திருஞானசம்பந்தர் 7-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். கம்பரோ, 9-ஆம் நூற்றாண்டு; பாரதியோ 20-ஆம் நூற்றாண்டு. ஆனால், இவர்களுக்குள் ஒரு தொடர்பு உண்டு. கம்பரும் பாரதியும் சம்பந்தரின் சொற்களில் ஈடுபட்டு அதன் நயத்தை எடுத்துக்கூறியுள்ளனர் என்பதே அது!

ஞானசம்பந்தர் தேவாரத்தில், வையை ஆறு, ஆலவாய்த் திருநகர், மந்திரத் திருநீறு, ஏடு எதிர்த்து வந்த புனல் வாதம் இவற்றை நம் கண்முன் கொணரும் இரண்டு பாடல்களின் தாக்கம் முறையே கம்பருக்கும் பாரதிக்கும் நிகழ்ந்ததை அவர்கள் பாடல்வழி அறியலாம். "மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தின் எட்டாவது பாடல் இது.

"இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவதுநீறு; தத்துவம் ஆவது நீறு;
அராவணங்கும் திருமேனி, ஆலவாயான் திருநீறே!''

இத் திருநீற்றுப் பதிகத்தில் ஆழ்ந்த கம்பநாடர், இப்பாடலில் காணப்பெறும் "இரா, பரா, தரா, அரா - என்னும் சொற்களை வைத்து ஒரு பாடலாக, ஆரண்ட காண்டத்தில் சந்திரோதயக் காட்சியாக மலரச் செய்துள்ளார்.

"பராவரும் கதிர்கள் எங்கும்
பரப்பி மீப்படர்ந்து வானில்
தராதலத்து எவரும் பேண
தண்மதி உதித்த தோற்றம்
அராவணைத் துயிலும் அண்ணல்
காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர்மேல் உய்த்த
திகிரியும் என்னல் ஆன''

தண்மதியின் உதயத் தோற்றம் கம்பநாடருக்கு பாம்பை அணையாகக்கொண்டு ஆதிசேஷன் மேல் துயிலும் ராமனை எண்ண வைக்கிறது. துயிலும்பொழுதும் ராமனாக வந்த திருமால் சக்ராயுதமும் தண்மதி ஒளி வட்டமும் ஒன்றாகத் தெரிய, அந்தத் தண்மதி வட்டத்தைக் காலம் பார்த்து இராவணன் உயிர்மேல் விடப்பட்ட திகிரி(சக்கரம்)யாக எண்ண வைக்கிறது. வானம் வெண் மேகங்களாக சூழ்ந்தபோது, வெள்ளெருக்கம் சடைமுடியனான சிவபெருமானை நினைக்கத் தூண்டுகிறது. நீறுபூசிய வானமாகத் தெரிந்த வானம் தன் நிறம் மாற, திருமாலின் தோற்றத்தை நினைவுபடுத்துகிறது. கம்பர், திருநீற்றுப் பதிகத்தின் எட்டாம் பாடலை எண்ணிப்பார்த்து, இந் நான்கு சொற்களைத் தன் பாடலில் அழகுறப் பதிவு செய்திருக்கிறார்.

"பொதுப்பதிகம்' என்றும், சேக்கிழாரால் "திருப்பாசுரம்' என்று எண்ணப்பெற்ற ஞானசம்பந்தரின் பதினோரு பாடல்கள் கொண்ட பதிகத்தின் முதல் பாடல் "வாழ்க அந்தணர்' என்று தொடங்குகிறது. அப்பாடல் வருமாறு:

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே''

இந்த வாழ்த்துப் பாடலின் மூலம் வையகத்தின் துயரம் தீர்க்கப்படுகிறது. இப்பாடலில் வயப்பட்ட பாரதியார், புதுவையில் தங்கியிருந்தபோது, மணக்குள விநாயகர்பால் ஈடுபட்டு எழுதிய "விநாயகர் நான்மணிமாலை'யின் 35-ஆவது பாடலில், "வாழ்க அந்தணர்' பாடலின் தாக்கத்தைப் பிரதிபலித்துள்ளார்.

"வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத பனிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமில்லாது
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க துயர்கள் தொலைந்திடுக!
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம்
கிருதயுகம் தான் மேவுகவே''

÷திருஞானசம்பந்தரின் இரண்டு பாடல்களில் காணப்பெற்ற நான்கு முதற் சொற்கள் கம்பராலும், பாரதியாலும் மீண்டும் எடுத்தாளப்பட்டு, அழகுறச் செதுக்கப்பெற்று, வனப்பும் நீர்மையும் கொண்ட அழியா வண்ண சொல்லோவியங்களாகத் திகழ்கின்றனவே..!
நன்றி-தினமணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum