ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ayyasamy ram

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 ayyasamy ram

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:

View previous topic View next topic Go down

best திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:

Post by மதுமிதா on Tue Aug 13, 2013 10:45 pm

ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும்
முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள்தான்.

மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும்
சித்திரைத் திருவிழாவும் இவ்விழாவும்
ஒரே சமயத்தில் நடக்கின்றன.

திருமலை நாயக்கர்
காலத்திற்கு முன்பு இந்தா இரண்டு உற்சவங்களும்
வெவ்வேறு மாதங்களில் நடந்தன.

அப்போது அழகரின் சைத்ரோற்சவம்
சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோயில் உற்சவம்
மாசி மாதத்திலும் நடந்தன.

இதனால் தான்
மாசி மாதத்தில் நடக்கும் இத்திருவிழாவில்
மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம் செல்லும்
வீதிகளுக்கும் மாசி வீதிகள் என்று பெயர்
ஏற்பட்டது.

திருமலை காலத்திற்கு முன்பு ஸ்ரீ அழகர்
சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர், தேனூர்
முதலிய ஊர்கள் வழியாக வந்து வைகை ஆற்றில்
இறங்கி வண்டியூரில் தங்கியிருந்து, மீண்டும்
அழகர் மலையையைடைவது வழக்கம்.

திருமலை நாயக்கர், இந்த இரண்டு விழாக்களையும்
ஒன்றாகச் சேர்ந்தால் அது மிகவும் சிறப்பாக
இருக்கும் என்று கருதி அப்படியே செய்தார்.

அவருடைய ஏற்பாட்டின் படியே இப்பொழுதும்
நடந்து வருகிறது .

இப்பொழுது கள்ளழகர் வைகையாற்றில்
இறங்கி வண்டியூர் சென்று, தன் மலைக்குத்திரும்
பி வருவதை பற்றி ஒரு கதை வழங்குகிறது.

இக்கதைக்கு சாஸ்திர, புராண ஆதாரம் ஒன்றும்
இல்லை ஆகையால் பொதுவாக சைவ, வைஷ்ணவ
மதங்களை ஐக்கியப்படுத்தும்
ஒரு முயற்சியாகவே இதைக் கொள்ள வேண்டும்

தன் தங்கை ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ
சுந்தரேசுவரருக்கும் கல்யாணம் நடக்கும்
போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீ அழகர்,
கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபத்தைப்
பார்க்க 24 கி.மீ தூரத்திலுள்ள தன்
இருப்பிடத்தை விட்டுச்சகல கோலாகலகங்களுடன்
மதுரையை நோக்கி வருகிறார்
என்பது இக்கதை

பல்லக்கில் கள்ளர்
திருக்கோலத்துடன் வழியில் பல மண்டபங்களில்
தங்கி, இந்தச்சேவையைப் பார்பதற்கும்
அழகரை எதிர் கொள்வதற்கும் மதுரை மக்கள்
திரண்டு வரும் காட்சிகள் ஸ்ரீ கள்ளழகர் எதிர்
சேவை என்று சொல்லப்படும்

இரவில்
அம்பலத்துக்காரர் மண்டபத்தில் பிரம்மாண்டமான
வாண வேடிக்கைகள் கூத்துக்கள்,
கொட்டு மேளங்கள் முதலியவை நடக்கும்.

மறுநாள் விடியற்காலை தல்லாகுளம் பெருமாள்
கோயிலிருந்து ( சித்ரா பௌர்ணமியன்று ) அழகர்
குதிரை வாகனத்தில்
புறப்பட்டு வைகையை நோக்கி செல்வார்.

புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுதூர
ிலிருந்து சூடிக்கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ
ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார்.

இது தவறாமல் நடந்து வரும் விஷேசம்.

ஸ்ரீ அழகர் ஆற்றுக்குச்செல்லும் பொழுது முதலில்
வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர்
மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும்
எழுந்து அருளும் காட்சியே கண்
கொள்ளா காட்சியாகும்.

ஆற்றில் எழுந்தருளியருளும் மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர்
கொண்டு அழைக்கிறார். இந்த வைபவம் அழகர்
ஆற்றில் இறங்குதல் என்று சொல்லப்படும்

இதனைக்காண இலட்சக்கணக்கான மக்கள்
திரண்டு வருவதும் கண் கொள்ளாக் காட்சியாகும்.

மதுரையில் இவ்விழாவே மிகப்பெரிய திருவிழா.
வெயில், மழை என்று பாராமல் ஜனங்கள் பகலும்
இரவும் ஒரு சிறிய இடத்தையும் விடாமல்
நிறைத்துக் கொண்டு ஆற்றிலும் அதன்
கரைகளிலும் மண்டபங்களிலும் கூடியிருப்பார்கள்.

பின்பு வைகையாற்றின் வழியாகவே நேராக
வண்டியூர் போகிறார்.
அங்கு அன்றிரவு தங்கி இளைப்பாறிச்
சைத்யோபசாரம் செய்து கொண்டு, மறுநாள்
காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனூர்
மண்டபத்தை அடைகிறார் . அங்கு தங்க கருட
வாகனத்தில் காட்சி நல்கி மண்டுக
மகரிஷிக்கு மோஷ மளிக்கிறார்.

பிறகு அன்றிரவு ராமராயர்
மண்டபத்திற்கு எழுந்தருளி தசாவதார
சேவை சாதிக்கிறார். மறுநாள் காலை அழகர்
மோகனாவதார சேவையருளி ஆனந்தராயர்
பல்லக்கில் ராஜாங்க சேவையுடன்
புறப்பட்டு மைசூர் மண்டபத்தில் கள்ளழகர்
திருக்கோலத்துடன் புஷ்பப்பல்லக்கு
சேவை நடக்கும்.

மறுநாள் காலையில் ஸ்ரீ அழகர்
அப்பன் திருப்பதிக்குச்
சென்று திருமலையை அடைவார். மறுநாள்
அவருக்கு அங்கு சாத்து முறை நடக்கும்
இந்த அழகர் திருவிழா மொத்தம் ஒன்பது நாட்கள்
நடக்கும் அழகர் மதுரைக்குப் புறப்படும்

முன்பே திருமலையில் அவருக்குத் திருவிழாக்கள்
தொடங்கி விடும் அந்தத் திருவிழாவின் 4 - ஆம் நாள்
மதுரைக்குப் புறப்படும் ஒன்பதாம் நாள் மீண்டும்
தம் மலைக்குத் திரும்பி விடுவார்.

அழகர்
வைகையாற்றில் தங்கியிருக்கும் படியான
மூன்று நாட்களில் இரவும் பகலும் அங்கு சேரும்
ஜனக்கூட்டம் கணக்கிட முடியாதது.

அங்கே அழகர்
அருளுகின்ற பலவிதமான சேவைகளைக்
கண்டு களிக்கவே மக்கள் கூட்டம் திரண்டிருக்கும்.
அப்போது இரவில் வாண வேடிக்கைகளும்,
விளையாட்டுக்களும், ஆரவாரங்களும்
அளவற்று நடக்கும்.

இவற்றியெல்லாம் காண, பல
மைல் தூரத்திலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள்
மாட்டு வண்டிகளில் வந்து மூன்று ,
நான்கு நாட்கள் குடும்பத்துடன்
தங்கியிருந்து போவார்கள்.

அழகருக்கு நடக்கும் மற்ற திருவிழாக்களில்
முக்கியமானவை வைகாசி வசந்த உற்சவ திருநாள்

( இது வசந்த மண்டபத்தில் 10 நாள் நடக்கும் )
ஆடி பிரமோற்சவம் ( 10 நாள் )
ஐப்பசி தலையருவி உற்சவம்
அல்லது தொட்டி உற்சவம் ( 3
நாள் )கார்த்திகை கைசிகம் மார்கழித் திருநாள்,
திரு அத்தியயன உற்சவம் இது பகற் பத்து,
இராப்பத்து என்று இரண்டு பிரிவுகளாக மொத்தம்
20 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில்
நாலாயிர திவ்விய பிரபந்தம் முழுவதும்
அத்யா பகர்களால் சேவிக்கப் படுகிறது பகற்பத்தில்
இங்கு பெரியாழ்வார் அழகரின் திருவடி சேர்வதாக
விழா நடை பெறுவது தனிச்சிறப்பு வாய்ந்தது மற்ற
திவ்விய தேசங்களில் திருமங்கையாழ்வார் திருவடிச்
சேருவதாக விழா நடைபெறும். இங்கு பெரியாழ்வார்
இறுதிக் காலத்தில் வாழ்ந்து அழகர்
திருவடி சேர்ந்ததால்
இவ்வாறு விழா அமைக்கப்பட்டிருக்கிறது.

மாசி தெப்பம், பங்குனி திருக் கல்யாணம் முதலியன
நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவிற்கு அடுத்தப்படி பெரிய
திருவிழா ஆடிப் பிரமோற்சவமே. இந்த ஒன்பதாம்
நாள் பௌர்ணமியன்று திருத்தேர் நடக்கும். இந்தப்
பிரமோற்சவதிற்குக் கிருஷ்ண தேவராயர்
இரண்டு கிராமங்களை மானியமாகக் கொடுத்தார்.

ஸ்ரீ ஆண்டாள் இங்கு கள்ளழகரைக் கல்யாணம்
செய்து கொண்டதாக ஐதீகம் உண்டு. ஆகையால்
இந்தவிழா இங்கு மிகச்சிறப்பாக நடைபெறும் .

இத்திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தில்நடைபெறும்.
திருமாலிருஞ் சோலை ஸ்ரீ கள்ளழகர் உற்சவங்கள்:
மாதம் பூஜை

சித்திரை மாதம் கொட்டகை உற்சவம்

கோடை சைத்திர உற்சவம் ( 9 நாள் உற்சவம் )
( 1 நாள் )
வைகாசி மாதம் வஸந்த உற்சவம் ( 10 நாட்கள் )
ஆனி மாதம் முப்பழ உற்சவம் ( 1 நாள் )
ஆடி மாதம் கருட சேவை ( ஆடி அமாவாசை )
திருவாடிப் பூரம் ( 1 நாள் )
பிரமோற்சவம் ( 10 நாட்கள் )
ஆவணி மாதம் திருப்பவித்திர உற்சவம் ( 5 நாட்கள் )
உறியடி உற்சவம்
புரட்டாசி மாதம் விநாயகர் சதூர்த்தி ( 1 நாள் )
கருட சேவை ( 1 நாள் )
நவராத்திரி உற்சவம் ( 9 நாட்கள் )
விஜய தசமி - அம்பு போடுதல் ( 1 நாள் )
ஐப்பசி மாதம் தீபாவளி உற்சவம் ( 1 நாள் )
தொட்டி உற்சவம் ( 3 நாட்கள் )
மார்கழி மாதம் திருவத்யயனம் பகல் பத்து உற்சவம் (10 நாட்கள் )
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உற்சவம் (10 நாட்கள் )
தை மாதம் கனு உற்சவம் ( 1 நாள் )
தைலப் பிரதிஷ்டை ( 3 நாட்கள்)
சப்ர முகூர்த்தம் ( 1 நாள் )
மாசி மாதம் கஜேந்திர மோஷம் ( 1 நாள் )
தெப்ப உற்சவம் ( 1 நாள் )
பங்குனி மாதம் திருக்கல்யாண உற்சவம் ( 5 நாட்கள் )

நன்றி முகநூல்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:

Post by malik on Wed Aug 14, 2013 2:25 pm

விளக்கமான வரலாற்று பதிவிற்கு நன்றி மது..!! சூப்பருங்க  சூப்பருங்க 
avatar
malik
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 392

View user profile

Back to top Go down

best Re: திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:

Post by மதுமிதா on Wed Aug 14, 2013 3:18 pm

@malik wrote:விளக்கமான வரலாற்று பதிவிற்கு நன்றி மது..!! சூப்பருங்க  சூப்பருங்க 
நன்றி அண்ணா
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:

Post by bala23 on Wed Aug 14, 2013 8:24 pm

மிக அருமை
avatar
bala23
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 196
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

best Re: திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 04, 2014 10:05 am

மதுமிதா நல்ல வரலாற்றைத் தந்துளார்கள் ! 

இவ் வரலாறுகள் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை !

இவற்றில் ஆழமான வரலாறுகள் பொதிந்துகிடக்கின்றன !
எனது புராண ஆய்வுகளில் பல ஆழங்களை விளக்கியுள்ளேன் !

   
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4442
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum