ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 Pranav Jain

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

View previous topic View next topic Go down

ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by Alavandhan on Mon Aug 19, 2013 6:28 pm

ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதைவிட நுண்ணறிவியல் (Micro Science) என்பதுதான் என் முடிவு.

இந்த அறிவியலைப் பற்றி தெரியாமல், பஞ்சாங்கத்தில் உள்ள சில அடிப்படை தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டுள்ள அரைகுறை ஜோதிடர் என்றுகூட அழைக்கத் தகுதியற்ற சில பேர்வழிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.

ஜோதிடப் பயிற்சி மையம் என்ற பெயரில் சில நபர்கள் தவறான வழியுடன் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களைமட்டும் சொல்லித் தருகின்றனர்

நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல, கடந்த 14 ஆண்டுகளாக ஜோதிடத்தை பல்வேறு அனுபவ ஜோதிடர்களையும், பல்வேறு ஜோதிட நூல்களையும் துணைகொண்டு ஜோதிடத்தை ஓரளவுக்கு புரிந்து வைத்திருக்கிறேன்.

இனி விஷயத்திற்கு வருவோம்

அதென்ன தில்லாலங்கடி வேலை? (சற்று நீண்ட பதிவுதான்.. பொறுமையாகப் படிக்கவும்.)

நான் சில ஜோதிடர்களை(?) சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஜாதகர்களுக்கு பலன் சொல்லியதை நினைத்து பிரம்மித்து இருக்கிறேன். எப்படியென்றால்?

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்.... ஒரு குறிப்பிட்ட ஜோதிடர் மிக அற்புதமாக பலன் கூறுகிறார் என்று பரவலாக கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க சென்றேன். (அப்பொழுது எனக்கு ஜோதிடம் ஏட்டுச சுரைக்காய்)

அந்த ஜோதிடர்(?) ஜாதகரைப் பார்த்து "உன்னுடன் பிறந்தவர்கள் ஆண் சகோதிரம் 2; பெண் சகோதிரம் 3; என்று கூறியவுடன் அந்த ஜாதகர் ஆமா சாமி..கச்சதமா சொன்னீங்க.. என்று சொன்னவுடன் நான் பிரம்மித்துபோனேன்.இந்த பிரம்மிப்பு நீங்குவதற்க்குள் அடுத்த அதிர்ச்சி...

உன் அப்பனுடன் பிறந்தவர்கள் 5 ஆண்கள்: 4 பெண்கள்: அதில் ஒருபெண், ஒரு ஆண் இறந்து விட்டனர். என்று கூறியவுடன், அந்த ஜாதகர் பதில் சொல்லுவதர்க்குமுன்பே நான் அந்த ஜோதிடரின் காலில் விழுந்து கும்பிடலாம் என்று என்னினேன்(விழவில்லை). அந்த ஜாதகர் உண்மை என்று சொல்லி வாய் மூடவில்லை அடுத்த அதிர்ச்சி...

உன் அம்மாவுடன் பிறந்தவர்கள் 6 ஆண்கள், உங்க அம்மா ஒருத்தி மட்டுந்தான்.

எப்படி இது சாத்தியம் என்று மிகவும் அதிசயித்துப் போனேன். இதற்கும் மேல் அங்கிருந்தால் எனக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. உடனே வெளியில் வந்து அருகில் உள்ள டீ கடையில் "ஸ்ட்ராங் காபி" ஒன்று குடித்தபிறகே சமநிலைக்கு வந்தேன்.

மீண்டும் ஜோதிடரிடம் சென்றேன், இன்னும் என்ன சொல்கிறார் என்று கவனிப்பதற்காக..

அவர் சொன்னதை எல்லாம் கவனித்தேன். அப்பொழுதுதான் முன்பைவிட அதிக அளவு ஆச்சரியம் அடைந்தேன். கரணம் மேற்படி அதிர்ச்சிதகவல்களை தவிர ஜாதகருக்குத் தேவையான உருப்படியான தகவல்கள் ஏதும் வரவில்லை. (ஜாதகர், அப்பா, அம்மா ஆகியவர்களின் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சரியாகச் சொன்ன இவரால் மற்ற விஷயங்களை ஏன் சரியாக சொல்லவில்லை என்ற ஆச்சர்யம்)

அந்த ஜாதகர் சென்றவுடன் அந்த ஜோதிடரிடம் என்னை ஜோதிடப் பரிச்சயம் உள்ளவன் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு, அவரிடம் உடன் பிறந்தவர்கள் எண்ணிக்கையை மிகச்சரியாக சொன்னீர்கள், அது எப்படி, அதற்க்கு உரிய கிரக அமைப்புகள் என்ன என்று எனக்கு சொல்லித்தரமுடியுமா? என்று கேட்டேன்.

அவர், இதெல்லாம் எனக்கு என் குரு ரகசியமாக சொல்லிக்கொடுத்தது. என்றார்.

ஐயா, நீங்கள் எனக்கு ரகசியமாகவே சொல்லித்தாருங்கள், அதற்கு குருதட்சனையும் தந்துவிடுகிறேன் என்று கேட்டேன்.

அதுக்கு 1,000 (ஆயிரம் ரூபா ) ஆகும் என்றார். நானும் சம்மதித்தேன்.

அவர் எனக்கு சொல்லித்தந்த பாடங்கள் (இதற்குமேல்தான் சுவாரஸ்யமே இருக்கிறது)

முதல் பாடம் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் கிரக அமைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுதான் முதல் பாடம்.(என் பேரதிர்ச்சிக்கு காரணம் இப்போது புரிந்திருக்கும்)

ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் துருவகணிதம் (சில ரகசிய குறியீடுகள்) தான் அடிப்படை., துருவகணிதம் தெரியாமல் ஜோதிடம் பண்ணமுடியாது. என்று கூறினார்.

முன்பு பேரதிர்ச்சியாக இருந்த எனக்கு (துருவ)கணிதம் என்ற உடனே பேராவல் ஏற்பட்டது.

துருவகணிதம்

(இந்த துருவக்னிதம் குடும்ப ஜோதிடரால் எழுதப்படும் குறியீடு. கம்ப்யூட்டரில் போடப்பட்ட ஜாதகத்தில் ஒரு ஓரமாக (ராசிக்கட்டம் அருகில்) குறிக்கப்பட்டிருக்கும்.

1) ஜாதகருடைய உடன் பிறந்த சகோதிர எண்ணிக்கை காண
அ) ல323 - விளக்கம்
"ல" என்றால் லக்கினம் (ஜாதகர்):
"3" (முதலில் உள்ளது) சகோதிரம்(மூன்றாமிடம் சகோதிர ஸ்தானம்)
"2" ஆண் சகோதிரம் 2
"3" (கடைசியாக உள்ளது) பெண் சகோதிரம் 3

ஆ) ல,திருதி,துதி,திருதி/ல,சதுர் விளக்கம்
"ல" என்றால் லக்கினம் (ஜாதகர்)
"திருதி" (முதலில் உள்ளது) சகோதிரம் (3 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் திருதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் திருதி) திருதியை = 3 (மிடம்)-சகோதிர ஸ்தானம்
"துதி" ஆண் சகோதிரம் 2 (2 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் துதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் துதி)
"திருதி" (கடைசியாக உள்ளது) பெண் சகோதிரம் 3 (3 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் திருதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் திருதி)
"ல,சதுர்" "ல"என்றால் ஜாதகர், சதுர் என்றால் 4 வது பிறப்பு.(4 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் சதுர்த்தி என்று பெயர் இதனுடைய சுருக்கம் "சதுர்"

இன்னும் நிறைய இருக்கிறது.


அன்புடன்
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by ராஜ்.ரமேஷ் on Wed Aug 21, 2013 5:26 pm

இது ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலையில்லை. கேள்வி கேட்பவர்களின் லட்சணம். தனக்கு என்ன தேவை என்பதை வெளிப்படுத்தத் தெரியாததாலும் தேவையானதை கேட்டுப் பெற தெரியாததாலும் தான் இந்தப் பிரச்சனை வருகிறது. அதற்காக துருவ கணிதத்தை ஊக்கப்படுத்தவில்லை. அது தவறு தான்.
தேவையானதை மட்டும் தெளிவாகக் கேட்டுப் பெற்றால் ஜோதிடமும் வளரும் ஜோதிடரும் வளர முடியும்.
avatar
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by balakarthik on Wed Aug 21, 2013 5:33 pm

அது sari ஒரு குடும்பத்துல மூத்த பிள்ளை பிறக்கும் பொழுது அவருக்கு ஜாதகம் எழுதிருப்பாங்களே அதுல எப்படி குறிப்பிடுவாங்க அப்பத்தான் ரெண்டாவது புள்ளையே பிறந்திருக்காதே அப்போ சகோதரரே இல்லைனு போடுவாங்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by Alavandhan on Wed Aug 21, 2013 6:16 pm

@balakarthik wrote:அது sari ஒரு குடும்பத்துல மூத்த பிள்ளை பிறக்கும் பொழுது அவருக்கு ஜாதகம் எழுதிருப்பாங்களே அதுல எப்படி குறிப்பிடுவாங்க அப்பத்தான் ரெண்டாவது புள்ளையே பிறந்திருக்காதே அப்போ சகோதரரே இல்லைனு போடுவாங்களா
பதிவின் கடைசி வரியை படிக்கவில்லையா நண்பரே?

இதற்கான பதிலை அடுத்த பதிவில் தருகிறேன்.
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by Alavandhan on Wed Aug 21, 2013 6:33 pm

@ராஜ்.ரமேஷ் wrote:இது ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலையில்லை. கேள்வி கேட்பவர்களின் லட்சணம். தனக்கு என்ன தேவை என்பதை வெளிப்படுத்தத் தெரியாததாலும் தேவையானதை கேட்டுப் பெற தெரியாததாலும் தான் இந்தப் பிரச்சனை வருகிறது. அதற்காக துருவ கணிதத்தை ஊக்கப்படுத்தவில்லை. அது தவறு தான்.  
தேவையானதை மட்டும் தெளிவாகக் கேட்டுப் பெற்றால் ஜோதிடமும் வளரும் ஜோதிடரும் வளர முடியும்.
ஜோதிடர்கள் பெரும்பாலும், ஜாதகர்கள் கேள்வி கேட்க்கும் முன்பு ஜாதகத்தை ஆராய்ச்சி செய்வார்கள். அப்பொழுது பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த துருவகணிதத்தை பயன்படுத்தி ஜாதரிடம் "இவர் உள்ளது உள்ளபடியே சொல்கிறார்" என்ற இம்மேஜ்-ஐ உருவாக்கிவிடுகிறார்கள்

அதன் பிறகு ஜாதகத்தில் பிரேத தோஷம் உள்ளது, ஆபிச்சார தோஷம் உள்ளது இதுபோன்ற இன்னும் சில தோஷங்களை சொல்லி இவைகளை நீக்காவிட்டால் விபரீதம் ஏற்படும் என்று மிரட்டி பரிகாரம் என்ற பெயரில் ஒரு நல்ல தொகையை கறந்து விடுகின்றனர்

மக்களின் அறியாமையை பயன்படுத்தி, இவர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த துருவ கணிதத்தை பயன்படுத்தி, ஜோதிடத்தின் துணையுடன் மக்களை ஏமாற்றுவது. இதுதான் நண்பரே தில்லாலங்கடி வேலை
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by Alavandhan on Wed Aug 21, 2013 7:00 pm

நண்பர் பாலாகார்த்திக் அவர்களே

முதல் குழந்தை ஆணாக இருந்தால்

1310 என்றும் பெண்ணாக இருந்தால் 1301 என்றும் குறிப்பிடுவார்கள்.

ஒரு தம்பதியினருக்கு குழந்தைகளே இல்லை என்றால் 5 X என்றோ "குரு நீச்சம்" என்றோ எழுதிவிடுவார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் துருவம் எழுதப்பட்ட தேதியையும் மறக்காமல் குறிப்பிட்டுவிடுவார்கள். அப்பொழுது தான் துருவம் எழுதப்பட்ட தேதிக்கும் தற்போது ஜாதகர் வந்திருக்கும் அன்றைய தேதிக்கும் உள்ள கால இடைவெளியை அனுசரித்து ஒரு கேள்வியை கேட்பார்கள் "இதுவரை இந்த ஜாதகத்தை எங்குமே பார்க்கவில்லையா? என்ற ஒரு கேள்வியை கேட்டால் ஜாதகரிடம் இருந்து வரும் பதிலைப் பொறுத்து இவர்கள் சுதாரித்து மீண்டும் புதிய துருவத்தை (ஜாதகரிடமிருந்தே தெரிந்துகொண்டு) அன்றைய தேதியை குறிப்பிட்டு துருவ மாற்றம் என்ற குறிப்புடன் புதிய துருவத்தை எழுதிவிடுவார்கள்.

நான் பல இடங்களில் இம்மாதிரியான சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன்.

மேலும்...சில துருவங்கள்....

அப்பாவுடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை

1934 - 1 = லக்கினம், 9 பிதா ஸ்தானம், 3 ஆண் சகோதிரம் (அப்பாவுடன் சேர்த்து),
4 பெண் சகோதிரம்.

இதேபோல அம்மாவுடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை என்றால் 9 க்குப் பதிலாக 4 என்ற என்னை எழுதிக்கொள்வர்கள். 4 மிடம் தாயார் ஸ்தானம்.

சந் நீச் = சந்திரன் நீச்சம் = அம்மா இல்லை ( சந்திரன் தாயைக் குறிக்கும் கிரகம் )
இதையே 14X என்றும் குறிப்பிடுவார்கள்

சூரி நீச் = சூரியன் நீச்சம் = அப்பா இல்லை ( சூரியன் தகப்பனாரை குறிக்கும் கிரகம் )
இதையே 19X என்றும் குறிப்பிடுவார்கள்.

இன்னும் வரும்
avatar
Alavandhan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile http://alavandhan101.blogspot.in/

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by Dr.S.Soundarapandian on Mon May 05, 2014 11:21 pm

ஆளவந்தான் அவர்கள் நன்றாகச் சொல்லவந்தார் ! இது மிகவும் வரவேற்கத் தக்க பதிவு ! மக்களின் அறியாமையைப் போக்குவதைத் தவிரச் சிறந்த தொண்டு வேறு இருக்கமுடியாது ! வாழ்க ஆளவந்தான் !

 சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4442
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by T.N.Balasubramanian on Tue May 06, 2014 12:26 am

Aug 21,2013 பிறகு நீ --------------ண்ட -----இடைவெளி .
மனதை ஆள வருவார் என நினைத்தோம் ,
வருவாரா அவர் வருவாரா?

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21153
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by சிவா on Tue May 06, 2014 5:59 am

பயனுள்ள திரி இது, ஆளவந்தான் தொடராமல் விட்டது வருத்தமளிக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by கோ. செந்தில்குமார் on Wed May 07, 2014 7:56 am

சோதிடம் என்பது ஒரு கடல். அதனை கடந்தவர்கள் ஒரு சிலரே... அதில் மூழ்கியவர்கள் தான் அதிகம். வாக்கு பலிதம் என்று ஒன்று உண்டு. அது இருந்தால் தான் சொல்லும் சோதிடம் பலிக்கும். அதற்கு சில பிரத்யேக தெய்வ வழிபாடுகள் உள. அவற்றை முறையாக செய்யின் தெய்வங்கள் முக்காலமும் உரைக்கும் சக்தியை அருளும். அதை விடுத்து சோதிடம் சொல்கிறேன் என்று இறங்கி ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது. அது சோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையை போக்கி விடும்.
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by krishnaamma on Thu May 08, 2014 8:38 pm

@சிவா wrote:[link="/t102775-topic#1061708"]பயனுள்ள திரி இது, ஆளவந்தான் தொடராமல் விட்டது வருத்தமளிக்கிறது!

ஆமாம் சிவா சோகம்
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by Hariram on Fri Jul 10, 2015 6:41 pm

@Alavandhan wrote:
@ராஜ்.ரமேஷ் wrote:இது ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலையில்லை. கேள்வி கேட்பவர்களின் லட்சணம். தனக்கு என்ன தேவை என்பதை வெளிப்படுத்தத் தெரியாததாலும் தேவையானதை கேட்டுப் பெற தெரியாததாலும் தான் இந்தப் பிரச்சனை வருகிறது. அதற்காக துருவ கணிதத்தை ஊக்கப்படுத்தவில்லை. அது தவறு தான்.  
தேவையானதை மட்டும் தெளிவாகக் கேட்டுப் பெற்றால் ஜோதிடமும் வளரும் ஜோதிடரும் வளர முடியும்.
ஜோதிடர்கள் பெரும்பாலும், ஜாதகர்கள் கேள்வி கேட்க்கும் முன்பு ஜாதகத்தை ஆராய்ச்சி செய்வார்கள். அப்பொழுது பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த துருவகணிதத்தை பயன்படுத்தி ஜாதரிடம் "இவர் உள்ளது உள்ளபடியே சொல்கிறார்" என்ற இம்மேஜ்-ஐ உருவாக்கிவிடுகிறார்கள்

அதன் பிறகு ஜாதகத்தில் பிரேத தோஷம் உள்ளது, ஆபிச்சார தோஷம் உள்ளது இதுபோன்ற இன்னும் சில தோஷங்களை சொல்லி இவைகளை நீக்காவிட்டால் விபரீதம் ஏற்படும் என்று மிரட்டி பரிகாரம் என்ற பெயரில் ஒரு நல்ல தொகையை கறந்து விடுகின்றனர்

மக்களின் அறியாமையை பயன்படுத்தி, இவர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த துருவ கணிதத்தை பயன்படுத்தி, ஜோதிடத்தின் துணையுடன் மக்களை ஏமாற்றுவது. இதுதான் நண்பரே தில்லாலங்கடி வேலை
மேற்கோள் செய்த பதிவு: 1004741
avatar
Hariram
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum