ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 T.N.Balasubramanian

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 T.N.Balasubramanian

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 krishnanramadurai

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இயக்குனர் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம்!!

View previous topic View next topic Go down

இயக்குனர் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம்!!

Post by அருண் on Wed Aug 21, 2013 8:19 pm

டைரக்டர் சேரனின் 2-வது மகள் தாமினி, சூளைமேட்டைச் சேர்ந்த நடன கலைஞர் சந்துரு காதல் விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. தாமினி 2 வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி சந்துரு குடும்பத்தினருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார். அதில் காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சிப்பதாக தந்தை சேரன் மீது புகார் கூறினார்.

இதை மறுத்த டைரக்டர் சேரன் சந்துருவின் நடவடிக்கை சரியில்லை. எனவேதான் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கண்ணீர் மல்க பேட்டி அளித்த சேரன் ``தனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். காதலுக்கு நான் எதிரி இல்லை'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து சேரனின் மகள் தாமினிக்கு பெண் போலீசார் கவுன்சிலிங் அளித்தனர். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் காதலை பற்றி சிந்திக்கலாம் என்று அறிவுரை கூறினர். ஆனால் தாமினி காதலன் சந்துருவுடன்தான் செல்வேன் என்று பிடிவாதமாக கூறினார். இதனால் அவரை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இதற்கிடையே சந்துருவின் தாய் ஈஸ்வரி ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தாமினி, தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியை பி.கே.கே.பிள்ளை வீட்டில் தங்கி இருக்க உத்தரவிட்டனர். இதன்படி கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அவர் தனது குடும்பத்தினரை பிரிந்து தலைமை ஆசிரியை வீட்டில் தங்கினார். இன்று இந்த வழக்கு ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.தனபாலன், செல்வம் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையொட்டி காலை 11 மணிக்கு தாமினியை தலைமை ஆசிரியை கோர்ட்டுக்கு அழைத்து வந்து இருந்தார். டைரக்டர் சேரனும் கோர்ட்டுக்கு வந்தார். அவருடன் டைரக்டர்கள் அமீர், கரு.பழனியப்பன் உள்பட 100-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வந்திருந்தனர். அவர்களை உள்ளே அனுப்புவதில் சலசலப்பும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

சந்துரு தரப்பில் தாய் ஈஸ்வரி, 2 சகோதரிகள் வந்திருந்தனர். நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தாமினி நீதிபதிகளைப் பார்த்து தெரிவித்தார். இதற்கு சந்துருவின் வக்கீல் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்தார். தாமினி மன அழுத்தத்தில் இருக்கிறார். முன்பு காதலனுடன் செல்ல சம்மதித்தவர் இப்போது மாற்றிச் சொல்கிறார். இதற்கு பெற்றோர் நிர்ப்பந்தமே காரணம். 2 வார காலத்தில் அவரது மனதை மாற்றி விட்டார்கள் என்றார்.

உடனே நீதிபதிகள் குறுக்கிட்டு, ``தாமினி மேஜர் பெண். அவர் பெற்றோருடன் செல்ல சம்மதித்து இருக்கிறார். அவர் சொல்வதைத்தான் எங்களால் ஏற்க முடியும்'' என்றனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், தாமினிக்கு இன்னும் திருமணம் நடை பெறவில்லை. அதற்கு முன் அவர் மீது உரிமை கொண்டாட முடியாது. திருமணம் முடிந்து இருந்தால் கணவருடன் செல்வது பற்றி முடிவு எடுக்கலாம். திருமணம் ஆகாத பெண் பெற்றோருடன் செல்ல முடிவு எடுக்கும் போது அதைத்தான் கோர்ட்டு ஏற்க முடியும் என்றனர்.

வக்கீல் சங்கரசுப்பு வாதாடுகையில், தாமினி மனக்குழப்பத்தில் இருக்கிறார். அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்பலாம். 2 வாரமாக அவரை சட்ட விரோதமாக காவலில் வைத்து இருந்தனர். சினிமா பிரமுகர்கள் போய்பார்த்து அவர் மனதை மாற்றி விட்டார்கள் என்றார். உடனே நீதிபதிகள், எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட பின்புதான் தலைமை ஆசிரியையுடன் அனுப்ப உத்தரவிட்டோம். இப்போது எங்கள் மீதே குற்றம் சுமத்துகிறீர்களா? என்று வக்கீலைப் பார்த்து கேட்டனர். அதற்கு வக்கீல், 2 வாரத்தில் ஏராளமான சினிமாகாரர்கள் பார்த்து மனமாற்றம் செய்து விட்டார்கள் என்று சொல்லவந்தேன். இந்த விவகாரத்தில் திரும்பவும் மனு தாக்கல் செய்கிறோம் என்றார்.

இதையடுத்து பிற்பகல் 1 மணிக்கு மனுதாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். வக்கீல் சங்கரசுப்பு மனு தாக்கல் செய்த பின்பு நீதிபதிகள் அதில் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

முன்னதாக, சேரன் தனது பேஸ்புக் பக்கத்தில், இன்று என் பொக்கிஷம் திரும்பி வரும் நாள். அவள் இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று. இன்று நான் காணப்போகும் வெற்றி எனக்கானது மட்டும் அல்ல. இவ்வுலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்குமானது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்திருப்பது சேரனுக்கு மேலும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

maalaimalar
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இயக்குனர் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம்!!

Post by அசுரன் on Wed Aug 21, 2013 9:00 pm

இனி ஊருக்கு உபதேசம் செய்ய சேரன் வரமாட்டார்னு நம்புவோம் புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: இயக்குனர் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம்!!

Post by Muthumohamed on Wed Aug 21, 2013 9:09 pm

madurai99 wrote:இனி ஊருக்கு உபதேசம் செய்ய சேரன் வரமாட்டார்னு நம்புவோம் புன்னகை
  பெயர் மாற்றம் கண்டு இருக்கிறதே அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இயக்குனர் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம்!!

Post by ரா.ரா3275 on Thu Aug 22, 2013 1:44 pm

தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்திருப்பது சந்தோஷம்....
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: இயக்குனர் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம்!!

Post by பூவன் on Thu Aug 22, 2013 2:41 pm

இது அந்த பெண்ணின் சந்தோஷமான முடிவாக இருந்தால் சந்தோஷம் ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இயக்குனர் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum