ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருப்புகழ் - 228

View previous topic View next topic Go down

திருப்புகழ் - 228

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Aug 28, 2013 11:28 pmபாதி மதிநதி போது மணிசடை
    நாத ரருளிய ...... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
    பாதம் வருடிய ...... மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்
    மாய னரிதிரு ...... மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
    காலில் வழிபட ...... அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருல
    காளும் வகையுறு ...... சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
    சூழ வரவரு ...... மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
    வாமி மலைதனி ...... லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
    வேலை விடவல ...... பெருமாளே.


பாதி மதிநதி போது மணிசடை
    நாத ரருளிய ...... குமரேசா


பாதி மதி - பிறைச்சந்திரன் அணிந்தவர் என்பதாக மட்டுமே பொருள் கொள்வது மேலோட்டமானது !

மதி என்பது ஞானத்தை குறிப்பது ! மனிதர்களுக்கு அறிவு தெளிவு ஞானம் உண்டாகிற தன்மைக்கும் அவன் மீது சந்திரனின் கதிர்வீச்சுக்கும் சம்மந்தம் உள்ளது என்பது ஜோதிட சாஸ்திரத்தால் கண்டறியப்பட்ட உண்மை  சந்திரன் ஞான அளவின் அடையாளம் !

முதல் மனிதன் படைக்கப்பட்ட உடன் அவனை சேவித்து பணிவிடை செய்யும் படியாக கடவுள் முந்தய படைப்புகளான தேவர்களுக்கும் உத்தரவிட்டார் என்பதை பிற வேதங்களின் மூலமாக அறிகிறோம் ! அவ்வாறே அவர்களில் பலர் சேவித்தனர் ! ஆனாலும் பொறாமை கொண்ட சில தேவர்கள் கடவுளின் உத்தரவை ஏற்கவில்லை

மனிதன் மண்ணிலிருந்து படைப்பட்டான் ஆனால் தாங்களோ நெருப்பிலிருந்து படைப்பட்டோம் அதானால் மனிதனை விட பெரியவர்கள் ; அவனை நாங்கள் ஆளுவோம் என்றனர் கடவுளை எதிர்க்கவும் துனிந்தனர் !

கடவுளின் முழு ஆழுமைக்குள் தேவர்களாக அடங்கி இருந்தவர்களில் சிலர் கடவுளை எதிர்த்து அசுரர்களாக மாறியதே மனிதன் விசயமாகத்தான் !

அசுரர்களாக மாறியவர்களுக்கு அழிவு வரும் என கடவுள் எச்சரித்தபோது `` அதுவரை இந்த மனிதன் எங்களோடு அழிவதற்கு மட்டுமே லாயக்கானவன் ; இவனைப்படைத்ததற்கு கடவுள் வெட்கப்படவேண்டிய அளவு தீய குணங்களின் இருப்பிடமாக மனிதர்களின் சந்ததியை காண்பீர்கள் என சவால் விட்டனர்

கடவுளும் தாராளமாக ஒவ்வொரு யுகத்திலும் யுக முடிவு வரை உங்களால் முடிந்த அளவு துர் உபதேசம் செய்து கெடுத்துக்கொள்ளுங்கள்

மனிதர்களின் செயல்களுக்கு விளைவை ஊழ்வினையை நான் அனுப்பும்போது அந்த துன்பத்தை கடற மனிதன் கடவுளை தேடுகிறவனாக மாறி தன்னை உணர்ந்து தெளிந்து தனது பாவ இயல்புகளிலிருந்து விடுபட்டு நல்லறிவும் ஞானமும் அடையும்போது அவன் உங்களின் ஆதிக்கத்திலிருந்தும் மாய்மாலங்கலிலிருந்தும் விடுபட்டு முற்றிலும் என்னை சரணாகதி அடைகிறவனாக மாறுவான்

அல்லது இச்சைக்கும் அதனை தூண்டுகிற உங்களுக்கும் இடம் கொடுத்து பாவத்தின் மேல் பாவம் செய்கிற அரக்கணாகவும் மாறினால் யுக முடிவில் உங்களுடன் சேர்த்து நரகத்துக்கேதுவாவான் !

அடுத்த யுகத்தில் நல்ல ஆத்மாக்கள் ஆரம்பத்தில் பிறந்து மேன்மை அடைந்த பிறகு நரகத்திலிருந்து பிறவியெடுத்து வளர்ச்சியோ அல்லது தாழ்ச்சியோ அடைவான்

இத்தனை சந்தர்ப்பங்களான எனது கருணையை தவறவிட்டவர்கள் சத்திய யுக ஆரம்பத்தில் கல்கி அவதாரத்தால் நியாயத்தீர்ப்படைந்து உங்களோடு முற்றிலும் அழிவு அடைவார்கள்  என்றார் !

நாங்கள் அழிவதைப்பற்றி கவலையில்லை ; சத்திய யுகத்திற்குள் ஒரு மனிதனும் பிறவேசிக்கவில்லை என்பதை கண்டு நீங்கள் மனிதனைப்படைத்தது தவறு என்பதை உணர்த்தாமல் விடமாட்டோம் என்றனர் அசுரர்கள் !

இந்த போட்டிதான் இந்த முழு உலகத்தின் செயல்பாடுகளின் பிண்ணணி !

எங்கும் எதிலும் ஏன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதனுக்கு வெளியிலும் இந்த இரண்டு சக்திகளும் மோதிக்கொண்டேதான் உள்ளன !

அதுதான் பாதி மதி பாதி மாயை ! பாதி அருள் பாதி மருள் !

முழு மதியோடு கடவுளைப்போலவே படைக்கப்பட்ட முதல் மனிதனான சிவன் அசுரர்களின் விச உபதேசத்தை கேட்கும் நிலைக்கு ஆளானார் ! அதுதான் அவரது கழுத்திலிருந்து பாம்பு உபதேசிப்பதாக சித்தரிக்கப்படுகிறது ! முழுமதியும் பாதி மதியானது !

கடவுளை நீ சரணாகதி அடைவது உணக்கு அவசியமில்லை : நீயே கடவுளாக ஆகலாம் என்பதுதான் அந்த துர் உபதேசம் !

நீயே கடவுள் என்ற அசுர உபதேசம் மனித சமுதாயத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து கொண்டுதான் இருந்தது ! கலியுக முடிவு நெருங்கும் இக்காலத்திலோ அது நாத்தீகம் என்பதைக்கூட விட்டு ஆத்தீக போர்வை அணிந்து மாயாவாதமாக உணக்குள்ளாக மட்டுமே கடவுளைத்தேடினால் போதுமானது ; நான் எனக்குள்ளாக கடவுளை தேடுகிறேன் என்று சொந்னால்போதும் ரெண்டு தவம் தியானம் என்று ஏதாவது ஒரு ஞான வியாபாரியிடம் கற்றுக்கொண்டால்போதும் ஞானியாகிவிட்டதாகவே பட்டமளித்து விடுகிறது

கொஞ்சம் கஸ்ட்டம் வந்தால் ஜீவ சமாதிகளை தேடி ஓடு என கையை காட்டுகிறது !

பக்தி சார்ந்தவர்களை கண்டால் அஞ்ஞானிகள் என முகம் சுழிக்க வைக்கிறது !

இது இப்படியானால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காட்டுமிராண்டிகளாக எதற்கெடுத்தாலும் வெட்டு குத்து என இருந்த மக்களை நல்வழிப்படுத்த அந்த நாடுகளில் இறைதூதர்களின் மூலம் வந்த உபதேசங்களை அதன் சாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வெறும் சடங்காக சட்டங்களாக மாற்றி மதமாக மாற்றிக்கொண்டனர் !

இயேசுவை கும்பிட்டால்போதும் எப்படி வேண்டுமானாலும் இச்சைகளை நிறைவேற்றிக்கொண்டு பாவம்ண்ணிப்பு கேட்டால்போதும் ஐரோப்பியரைப்போல உடை அணிந்து ஐரோப்பிய பெயரை வைத்துக்கொண்டால் போதும் சொர்க்கம் நிச்சயம் !

ஐந்து வேளை தொழுதால்போதும் அரபியரைப்போல தாடிமீசை வைத்துக்கொண்டு பெயரை அரபிப்பெயராக மாற்றிக்கொண்டால்போதும் சொர்க்கம் நிச்சயம் ! மற்றவரையெல்லாம் குத்து வெட்டு கொள்ளையடி கொலை செய் சொர்க்கம் நிச்சயம் என்பதாக மதத்தை கடவுளாக்கிகொண்டனர் 1

மதத்தின் பெயரால் இனங்களின் அடையாளத்தையும் பூர்விகத்தையும் பண்பாட்டையும் அழித்து வாண்கோளிகள் பலவற்றை உருவாக்கிவிட்டனர்

கண்ணால் காணாத ஒரு நாட்டை தாய் நாடாகவும் நேரில் சென்றால் அடிமைகளாக கொடுமைப்படுத்தும் நபர்களை சகோதர சகோதரிகளாகவும் கானல் நீர் குடித்துக்கொண்டு தனக்கு வாழ்வாதாரம் கொடுக்கும் நாட்டை அந்நிய நாடாக பாவித்து சொந்த சகோதரர்களை எதிரிகளாக கருதிக்கொள்ளும் உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்யும் பாவத்திற்கு பலரை ஆழாக்கிகொண்டுள்ளனர் - இவையெல்லாம் கலி முற்றியதின் அடையாளம் !

மனித குலத்தின் அஞ்ஞான இருளுக்கு அதன் முதல் தகப்பன் என்ற முறையில் சிவனும் பொறுப்பானவர் !

ஆனாலும் அவர் தனிப்பட்ட முறையில் ஒருமுறை அசுரர்களின் உபதேசத்திற்கு இடம் கொடுத்து பாதிமதி உள்ளவரானாலும் அவர் வைகுண்டத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட போது இலங்கை சிவனொளி பாதமலை வந்து சேர்ந்து தனது தவறை உணர்ந்தவராக நீண்ட தவம் செய்து கடவுளோடு ஒப்புறவானார் ! அதனால் மீண்டும் தேவர்கள் பணிவிடை செய்யும் தகுதி பெற்றார் ! மனித குலம் செழிக்க தண்ணீர் அவசியமென்பதால் தவமிருந்து இலங்கையில் ஓடும் மஹாவெலி கங்கை என்ற நதியை பூமிக்கு கொண்டுவந்தார் அது நதியை அவர் சூடிக்கொண்டதாக அடையாளப்படுத்தப்படுகிறது   !

லெமூரியா அல்லது குமரிக்கண்டத்தில் மனித குலத்தை விருத்தியாக்கினார் ! ஆனால் அதிலிருந்த மேரு மலையில் சதா கடவுளை தியானிக்கிறவராக இருந்தார் ! அதானால் அவர் வைகுண்ட வாசியாக மரணமில்லா பெரு வாழ்வு பெற்று ருத்திரன் என்ற தேவனாக மாற்றமடைந்தார் !

அவர் தமது பக்தியால் சரணாகதியால் சகஜ யோகத்தால் பாதி மதியை முழுமதியாக மாற்றிக்கொண்டார் !

ஞான வளர்ச்சியிலிருந்த போது மனித குலம் அவரைப்போல உய்வடைய மரணமில்லா பெருவாழ்வு பெற கடவுளை அடைய வழி என்ன என்பதைப்பற்றி பார்வதிக்கு உபதேசித்தார் ! அதுவே `குரு கீதை ` எனப்படுவது !

மனித குலம் உய்வடைந்து கடவுளை அடைய வழி நாராயணன் யுகங்கள் தோறும் பூமிக்கு அவதாரமாக மாறி வருவார் ! அவ்வாறு தேவர் என்ற தன்மையிலிருந்து மனிதன் என்ற தன்மைக்கு மாறி வருவதை அவர் ` முருகன் ` ஸ்கந்தன் - இரட்சிக்கிறவன்  என்று உபதேசித்தார் ! அந்த முருகனை சற்குருவாக ஏற்று அவரின் உபதேசத்தை கடைபிடித்தால் மட்டுமே மனித குலம் கடவுளை அடைய முடியும் ! மற்ற உபதேசங்களெல்லாம் மாய்மாலக்கலப்புள்ளதாகவே இருக்கும் முழுமையை அளிக்காது என்பதே !

இன்றைக்கு ஒரு குரு பேசுகிறார் என்பதை அருளுரை - அருளுகிறார் என்கிறார்களே அதுபோலத்தான் `` முருகனைப்பற்றி `` சிவன் அருளியதால் சிவன் அருளிய குமரேசா என்கிறது திருப்புகழ் !

இன்று உள்ள எந்த ஒரு தகவலிலும் உண்மையும் பொய்யும் கலக்காத விசயமே இருக்காது ! எதுவும் முழு உண்மையுமில்லை முழு பொய்யுமில்லை என்பதாக அனுகினால் மட்டுமே ஞான விருத்தி அடையமுடியும் !

பாதி மதி . நதி . கொன்றை மலரணிந்த நாதராகிய சிவனால் உலகிற்கு உய்யும் வழியாக சுட்டப்பட்டவர் முருகன் !

குமாரன் என்றால் கடவுளின் பிரதினிதி என்பது எல்லா மதங்களிலும் உள்ள ஒன்று !

அந்த கடவுளின் பிரதினிதி மனித உடலில் வரும்போது வார்த்தையின் படி அவர் சிவனின் மகன் ! நாமனைவருமே சிவனின் பிள்ளைகள்தாம் !

சிவனுக்கும் பார்வதிக்கும் நேரடியாக பிறந்த பிள்ளை என அதை உலகம் தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டது !

ஏனெனில் உலகில் இதுவரை மூன்று முருக அவதாரம் மட்டுமே வந்துள்ளது ! அது ஸ்ரீராமர் . ஸ்ரீகிரிஸ்ணர் & இயேசு மட்டுமே ! மூவரும் ஒருவரே ! ஸ்ரீமத் நாராயணன் வாணுலக தன்மையை குறிக்கி மனித சரீரத்தில் வந்தது அம் மூவராக மட்டுமே ! நான் ஏற்கனவே சொல்லியபடி கடவுள் ஒன்றை செய்தால் அல்லது சொன்னால் அதில் பத்து பொய்களை சேர்த்துவிடுவதன் மூலம் கடவுள் சொல்லியதை மக்கள் எளிதாக உணராமல் தடுக்க முடியும் என்ற காரியாவாதத்தை அசுரர்கள் நன்கு அறிவார்கள் !

இம்மூவரைத்தவிற மற்ற மனிதஅவதாரங்கள் என்று சொல்லப்படுவோர்  உபதேசம் எதையும் கொண்டுவரவில்லை 1 அல்லது குழப்பத்தை கொண்டுவந்திருப்பார்கள் !

ஜாதிக்கொரு மேலும் ராஜாவுக்கொரு பிள்ளையை அவர்கள் காட்டிலே விறகு பொருக்கும்போது கண்டெடுத்து வளர்த்து அவ்ர்கள் நல்லது செய்ததாக கதை கட்டி இவரும் அவதாரம் ; கும்பிட்டாலே போதும் அது கிடைக்கும் இது கிடைக்கும் என உலக தேவைக்கு கும்பிட்டால்போதும் என ஓராயிரம் அவதாரங்களை உற்பத்தி செய்து உண்மையான அவதாரத்தை அந்த கடலில் கரைத்து விடார்கள் அசுரர்கள் !

மனிதர்கள் செய்கிற இச்சைகள் தவறுகள் அனைத்தையும் அவர்களும் செய்ததாக புணைகளை சுருட்டி அவதாரங்களை கொச்சைப்படுத்திவிட்டனர் !

காது மொருவிழி காக முறஅருள்
    மாய னரிதிரு ...... மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
    காலில் வழிபட ...... அருள்வாயே


காகம் ஒரு முறை நல்ல பதார்த்தத்தில் அமர்ந்து அதையும் உண்ணும் ; அடுத்த முறையோ அழுகலில் போய் அமர்ந்து அதையும் உண்ணும் ! அதுமட்டுமல்ல தனது எண்ணத்தை இன்னும் பத்து பேருக்கு பறப்பி அவர்களையும் அதை செய்ய வைத்து விடும்  ! இந்த இயல்பு மனிதனின் இயல்புக்கு அடையாளம் ! ஒரெ மனிதன் கொஞ்ச நேரம் கடவுளுக்கும் தேவர்களுக்கும் இடம் கொடுத்து நல்லவனாக சிந்திப்பான் ! அதே நபர் வேறொரு விசயத்தில் அசுரர்களுக்கும் அவர்கள் தூண்டி விடுகிற இச்சைகளுக்கும் இடம் கொடுத்து தீமையை செய்வான் ! இப்பேர்ப்பட்ட நல்லவர் இவரா இந்த தப்பை செய்தார் என்று பல முரை நாம் பேசிக்கொள்வதில்லையா ? அது மனித இயல்பு - காகத்திற்கு அடையாளம் !

அந்தக்காகாசுரன் மனிதனே ! அவன் ஒருமுறை சீதாபிராட்டியின் மாரில் அமர்ந்தி இச்சையோடு கொத்திப்பார்க்க முயற்சித்தான் ! அப்போது யுகபுருஷன் ஸ்ரீராமர் புல்லையே அம்பாக எய்ய அது ஒரு கண்ணை துண்டித்து விட்டது !

மீண்டும் அந்த பாதிமதி கதைதான் இங்கு மனிதர்கள் பாதிக்கண்ணுள்ளவர்களாக சித்தரிக்கப்படுகிறது ! எல்லா மனிதர்களும் சில விசயங்களில் ஞானமுள்ளவர்களாகவும் சில விசயங்களில் அஞ்ஞானிகளாக ஒற்றை கண்ணூள்ளவர்களாகவே இருக்கிறோம் !

இயேசு ஒரு வார்த்தை சொன்னார் : நீ இரண்டு கண்ணுள்ளவனாய் நரகத்திற்கு செல்லுவதைக்காட்டிலும் ஒற்றைக்கண்ணுள்ளவனாய் பரலோகத்தில் பிறவேசிப்பது மெய்யாகவே நல்லது ! ஆகவே தீமைக்குள் உன்னை இழுக்கிர கண்ணை தரித்துப்போடு என்றார் !

ஆனால் அந்தக்காகம் ஒற்றைக்கண்ணுள்ளதாக ஸ்ரீராமரின் பாதத்தை சரணடைந்தது ! அப்போது ஞானத்தை அதிகமாக்கி அத்ற்கு இன்னொரு கண்ணையும் அவதார புருஷன் அருளினாராம் !

திருப்புகழ் மனிதர்களுக்கு இந்த வழியை காட்டுகிறது ! எத்தனை தவறு செய்தாலும் அவதாரங்களின் மருவிய அடையாளமான முருகனை சரணடைந்து கொள்ளுங்கள் ! மருகோன் என்றால் மருவியவன் - மருமகன் அல்ல !

நாராயனன் அல்லது மாயோன் மூத்தவன் அவன் பூமியில் அவதாரமாக மனிதனாக மருவி வருவான் அவனே சேயோன் முருகன் - இளையவன் என்ற தீர்க்கதரிசனத்தை மூத்த குடிகளான தமிழர்கள் உணர்ந்து மாயோன் சேயோன் வழிபாடாக ராமர் வருமுன்னமே கடைபிடித்து வந்தனர் ! இந்த வழிபாட்டை அருளியவர் சாட்சாத் சிவனே ! சிவனை வழிபடும் முன்னர் தமிழர்களிடம் மாயோன் சேயோன் வழிபாடு மட்டுமே இருந்ததை தொல்காப்பியம் சுட்டுகிறது ! தொல்காப்பியத்தில் சிவ வழிபாடு சுட்டப்படவில்லை !

ஆகவே மனிதர்களான நாம் நித்திய ஜீவன் உள்ளவர்களாக மாற  ராமர் கிரிஸ்ணர் இயேசுவின் உபதேசங்களுக்கு சரணடைய வேண்டும் !

ஆதி யயனொடு தேவர் சுரருல
    காளும் வகையுறு ...... சிறைமீளா


ஆதி அயன் - அதாவது ஆதி பிரம்மா - இந்திரன் தேவர்களுக்கு தலைவனாக நியமிக்கப்பட்டவன் அசுரர்களால் சிறைபிடிக்கப்பட்டு தேவர்களும் அடிமைப்படுத்தப்பட்டனர் !

அது வேறெதுவுமில்லை ! நான் ஏற்கனவே சொல்லியதுதான் ! தேவர்களுக்கு தலைவனாக தேவர்களும் பணிவிடை செய்யும் படியாகத்தான் முதல் மனிதன் வைகுண்டத்தில் படைக்கப்பட்டான் ! அவர் அசுரர்களின் துர் உபதேசத்திற்கு இடம் கொடுத்து பாதிமதி உள்ளவராக சிவனாக பூமிக்கு வந்தார் ! அதுதான் அவர் சிறையானார் என்பது ! ஆனாலும் அவர் கடவுளை சரணடைந்தவராக ஞானவிருத்தி ஆனதால் ருத்திரனாக தரம் உயர்த்தப்பட்டார் !

அதுவரை எஞ்சிய தேவர்களும் அசுரர்களால் பல வகையில் வாதிக்கப்பட்டனர்  அதை விண்ணுலகப்போரின் மூலமாக முருகன் அசுரர்களை வென்று மீண்டும் தேவர்களின் ஆதிக்கத்தை உண்டாக்கினார் !

பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ! சிவனும் பிரணவ மந்திரத்தை மறந்துவிட்டார் அதன் பொருளை சிவனுக்கு முருகன் உபதேசித்தார் என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள் !

``ஓம் `` என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அசுரர்கள் மறக்கச்செய்து தேவர்களை கடவுளிடமிருந்து பிரித்து அடைமைப்படுத்திக்கொண்டனர் என்பதுதான் அந்த ரகசியம் !

இன்றளவும் ஓமின் ரகசியத்தை ரகசியம் என்று மட்டும் கூறி மனுகுலம் அறியாதபடி அசுர மாய்மாலம் கோலோச்சிக்கொண்டுதான் உள்ளது ! ஆனால் அது எளிமையானது !

  ஓம் --   ``ஓரிறைவனையே துதிக்கிறோம் `` எனபதுதான் அந்த ரகசியம் !

வைகுண்டத்தையும் சகலத்தையும் நாராயணனுக்குள் யார் உருவாக்கினாறோ அவர் மட்டும் நாராயணனுக்குள் இல்லை ! அவர் நாராயணனையும் விட்டு வெளியே நிற்கிறார் ! அவரின் வார்த்தைதான் நாராயணனாக - சகலத்திலும் ஊடுறுவி நிற்கிற விஸ்னுவாக உள்ளது !

சகல படைப்புகளும் நாராயணனுக்குள் இருந்தாலும் படைத்தவர் மட்டும் அரூபமாக நாராயணனுக்கு வெளியே இருக்கிறார் ! அந்த ஓரிறைவனையே துதிக்க வேண்டும் என்பதுதான் `` ஓம்`` என்ற பிரணவ மந்திரம் !


அந்த ஓரிறைவனை துதிக்கவேண்டிய அவசியமில்லை நீங்களே கடவுளை போன்றவர்களே என்பதாக அசுர உபதேசத்தை கேட்டு கடவுளை மறந்தார்கள் என்பதுதான் ஓமை மறந்தார்கள் என்பதாக உருவகப்படுத்தப்படுகிறது !

அதை விண்ணுலகிலும் மண்ணுலகில் சிவனுக்கும் சற்குருவாக முருகன் உபதேசித்து அவர்களை மீட்கும் போது அதற்கு பல வகையான மாய்மாலங்களை கொண்டுவந்து அசுரர்கள் போரிட்டார்கள் ! அதை முருகன் ஞானம் என்ற வேலால் பொடிபொடியாக்கினார் ! அசுரர்களை அடக்கி மீண்டும் தேவர்களை அசுரர்களிம் மேல் ஆதிக்கம் உள்ளவராக மாற்றினார் ! சிவனையும் ருத்திரனாக விண்ணுலகிற்கு உயர்த்தினார் !

சூர னுடலற வாரி சுவறிட
    வேலை விடவல ...... பெருமாளே.


அசுரர்களின் மாய்மாலங்களை உடைக்கும் வல்லமையுள்ள வேலை விண்ணுலகில் அவர் பெருமாளாகவே எய்தார் ! விண்ணுலகைப்பொருத்து பெருமாளும் முருகனும் ஒன்றே ! அவர் பூமிக்கு அவதாரமாக வரும்போதுமட்டுமே இளையவர் முருகன் !ஆடு மயிலினி லேறி யமரர்கள்
    சூழ வரவரு ...... மிளையோனே


சற்குருவான நாராயணனை சார்ந்து கொண்ட தேவர்களுக்கு அசுரர்களின் மாய்மாலத்தால் எந்த இடரலுமில்லை அவர்கள் எப்போதும் நித்திய பேரிண்பத்தில் திளைப்பதால் ஆடுமயிலினில் அமர்ந்துள்ள முருகனை அமரர்கள் சூழ்ந்து மகிழ்வை அனுபவிக்கிறார்கள் என திருப்புகழ் வர்ணிக்கிறது !

பாகு கனிமொழி மாது குறமகள்
    பாதம் வருடிய ...... மணவாளா


அந்த பேரிண்பத்தில் திளைக்கும் சரணாகதி அடைந்த தேவர்களும் அத்தகைய மனித பக்தர்களுமே முருகனின் மணவாட்டியான வள்ளிமார்கள் ! சரணகதியை கற்றுக்கொள்வது ஒரு மேண்மை ! ஆனால் சரணாகதியை கற்றுக்கொண்டதால் மட்டுமே அவர்கள் முழுமையடைந்து விட்டார்கள் என எடுத்துக்கொள்ள முடியாது ! ஆனாலும் அவர்கள் குறமக்களாய் பல தவறுகள் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களின் மணவாளனாக முருகன் இருந்து அவர்களின் பாதங்களை வருடி அன்பு காட்டி அவர்களை மயக்கி உயர்வுக்கு வழிகாட்டுவார் ! சர்க்கரைப்பாகுபோல கனிவான மொழிகளை பேசக்கூடியவர்களாக அவர்களை மாற்றி பூமியில் மற்றோரும் உய்வடையும் படி அவர்களை உபகுருக்களாக பயன்படுத்துவார் !

சூத மிகவளர் சோலை மருவுசு
    வாமி மலைதனி ...... லுறைவோனே


அதனால் தான் வறட்சியில் வெயிலின் கொடுமையை இனிப்பாக மாற்றும் மாமரங்கள் நிறைந்த சுவாமிமலையில் உறைபவராகவும் சிவனுக்கும் மனுக்குலத்திற்கும் உபதேசிக்கிறவராகவும் முருகனை திருப்புகழ் சித்தரிக்கிறது !!

ஓரிறைவனையே துதிக்கிறோம் (ஓம்)
நாராயணன் நாமத்தினாலே     (நமோ நாராயணா)
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
 
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: திருப்புகழ் - 228

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Aug 28, 2013 11:39 pm

திருப்போரூர் அல்லது சமராபுரி


ஆதி நாட்களில் தேவ அசுர யுத்தம் விண்ணுலகில் நடைபெற்றது இந்த நிலப்பரப்புக்கு மேல்தான் என்பது சிதம்பர சுவாமிகளால் கண்டறியப்பட்டுள்ளது ! மாமல்லை என்ற பெயரும் இது தொடர்பாகவே உண்டாகியிருக்க வேண்டும் மேலும் பொய்கையாழ்வார் அவதரித்து வைணவத்தை புத்தெளிச்சி அடையச்செய்ததும் இந்தப்பகுதியே !

திருப்போரூருக்கு நண்பர் ரமேஷ் சேது அவர்கள் என்னை அழைத்து சென்றிருந்தார்கள் ! அது எனக்கு நல்ல ஒரு தெளிவையும் சக்தியையும் அளித்தது !

ஆன்மீக சாதகர்கள் அசுர மாய்மாலங்களால் முன்னேற்றம் தடைபடுவதும் திசை திருப்பபடுவதும் வழுக்கி விழுவதும் இயல்பு ! இந்தப்போராட்டத்தில் திருப்போரூர் சென்று அமர்ந்து தியானித்து வந்தீர்களானால் உத்வேகமும் பலமும் கிடைப்பது நிச்சயம் !!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum