ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 Dr.S.Soundarapandian

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine November
 Meeran

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!

View previous topic View next topic Go down

தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!

Post by சாமி on Mon Sep 02, 2013 6:50 am

இந்திய அரசு 1954-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமியை அமைத்தது. தன்னாட்சி பெற்றது. ஒவ்வொரு மொழியில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தலைவர் உண்டு. சாகித்ய அகாதெமியின் முதல் தலைவராக அன்றைய பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு இருந்தார். பத்தாண்டுகள் - தனது இறுதிக் காலம் வரையில் - தலைவராக இருந்த அவர் சாகித்ய அகாதெமி விருது பெறவில்லை. அகாதெமி வழியாகத் தன் நூல்களை வெளியிட்டுக் கொள்ளவில்லை.

சாகித்ய அகாதெமியின் பல இலக்கிய நோக்கங்களில் ஒன்று, ஆங்கிலம் உள்பட இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்குவது; அவற்றைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுவது. ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் அசலான படைப்புகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது. நாடு முழுவதும் இலக்கியக் கருத்தரங்கு, கவிதை வாசிப்பு, கதை வாசிப்பு உள்பட இலக்கிய மாநாடுகள் நடத்துவது என்பதாகும்.

இலக்கியத்திற்காக இந்திய அரசு அளிக்கும் மிக உயர்ந்த விருது சாகித்ய அகாதெமி வழங்கும் விருதுதான். அது ஒரு எழுத்தாளருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. சாகித்ய அகாதெமி விருது பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அடிக்கடி குற்றம் குறை கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் அது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

சிறந்த நூற்களுக்கு மட்டுமே விருது வழங்கி வந்த சாகித்ய அகாதெமி, சமீப காலமாக மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம், இளம் படைப்பாளர் விருது என்று தன் இலக்கியப் பரப்பை விரிவாக்கி உள்ளது.

2013, ஆகஸ்டு 23-இல் சாகித்ய அகாதெமியின் செயற்குழு கூட்டம் முதல் முறையாக சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழ், சமஸ்கிருதம், இந்தி, மைதிலி, சந்தாவி, மலையாளம், கன்னடம் போன்ற இருபத்திரண்டு மொழியினர் கலந்து கொண்டார்கள். இளம் படைப்பாளருக்கான விருதை யுவபுரஸ்கார் என முடிவு செய்தார்கள். அதோடு தாய்மொழி படிப்புப் பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அது, சாகித்ய அகாதெமி என்பது விருது கொடுப்பது, புத்தகங்கள் பிரசுரம் செய்வது, கருத்தரங்குகள் நடத்துவது, வெளிநாடுகளுக்குச் சென்று வருவது போன்றவற்றை மட்டும் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் அல்ல. சமூகத்தின் தலையாய பிரச்னைகளைக் கூர்ந்து கவனித்து கருத்துகளைத் தைரியமாகச் சொல்லும் எழுத்தாளர்கள் கொண்டது என்பதையும் நிலைநாட்டியிருக்கிறது.

சாகித்ய அகாதெமி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கூடி தாய்மொழியில் படிப்பைக் கொடுங்கள் என்று மாநில அரசுகளைக் கோரியிருப்பது தற்செயலாக நடந்ததுதான். ஆனால், சரியான இடத்தில்தான் நிகழ்ந்து இருக்கிறது. மொழிகள் பற்றிய அம்சங்களில் தமிழ்நாடு எப்போதும் முன்னே இருப்பதாகும்.

தமிழ்மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும் இருந்து வருகிறது. அது தனித்து இயங்கும் தன்மை கொண்ட மொழி. திராவிட மொழி குடும்பத்தின் மூத்தமொழி. அது இன்னொரு மொழியில் இருந்து கிடைத்தது அல்ல; அதன் எழுத்தும், இன்னொரு எழுத்து வடிவத்தில் இருந்து பெற்றதில்லை.

தொன்மையான அசலான படைப்பிலக்கியங்களான சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரம், திருக்குறள், தேவாரம், திருவாசகம், அருட்பா, பாரதியார் கவிதைகள், புதுமைப்பித்தன் கதைகள் என்று இழையறாத தொடர் படைப்பிலக்கியங்கள் கொண்டது. பழைமையின் தொடர்ச்சியாக ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர் எழுதி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கிறது. ஆனால், இங்கு முப்பதாண்டு காலமாகத் தமிழ் பெருமளவில் தடைபட்டுவிட்டது. மழலையர் பள்ளியில் இருந்து கல்லூரிப் படிப்பு வரையில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு மாணவனோ - மாணவியோ தமிழ் மொழி ஒரு எழுத்தைக்கூட படிக்காமல் முனைவர் பட்டப் படிப்பையே முடித்துக்கொண்டு விடலாம். இந்தியாவில் வேறு பல மாநிலங்களில் இது சாத்தியம் இல்லை. ஏனெனில் அவை மூன்று மொழி மாநிலங்கள். அவர்களின் படிப்பில் தாய்மொழி சேர்ந்து விடுகிறது.

எதன் பொருட்டும் மொழிவாரி மாநிலங்களின் - எந்த மொழியைத் தாய்மொழியாக, பேச்சுமொழியாக, எழுத்து மொழியாகக் கொண்டவர்கள் அதிகம் வசிக்கிறார்களோ, அந்த மாநிலங்களின் - மாநில மொழியே படிப்பில் இருந்து துரத்தப்படுவதைத்தான் சாகித்ய அகாதெமி கண்டிக்கிறது.

முதல் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை தாய்மொழியில் படிப்பதற்கு வசதி செய்து கொடுங்கள்; படிக்கச் செய்யுங்கள் என்கிறது அகாதெமி. அதில் மொழி திணிப்பு கிடையாது.

அசலான படிப்பு என்பது பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அடிப்படையான படிப்புதான். அதற்கு மேலான படிப்பு என்பது பயிற்சி. படிப்பின் வழியாகப் பெறுவதுதான். படிப்பு என்பதே பயிற்சி ஆகி விட்டதால் - அதுவே படிப்பு - கல்வி என்றாகிவிட்டது.

உலகத்தின் மகத்தான விஞ்ஞானிகள், படைப்பு எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் எல்லாம் படித்து மேதையானவர்கள். அவர்களின் மேதைமையை அவர்கள் கண்டுபிடிப்புகள் - செயற்பாடுகள் - படைப்புகள் வழியாக நிலைநாட்டியிருக்கிறார்கள்.

உலகத்திலேயே மகத்தான ஞானி என்று போற்றப்படும் புத்தர் மகாதி என்ற மக்கள் மொழியில்தான் பேசினார்; அவர் ஒரு வரிகூட எழுதி வைக்கவில்லை.

சாக்ரட்டீஸ் கிரேக்க மொழியில்தான் பேசினார். மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே உச்சமென சொல்லப்படும் மொழிகளையும் எழுத்துகளையும் அச்சிடும் முறையைக் கண்டுபிடித்த ஜோனான் கூடன்பர்க்கிற்கு ஜெர்மன் தவிர வேறு மொழியே தெரியாது.

அறிவு எந்த மொழியிலும் இல்லை. ஆனால், அறிவை எந்த மொழியின் மூலமாகவும் பெறலாம். வெளிப்படுத்தலாம். ஆனால், அதில் தாய்மொழிக்குத்தான் முதல் இடம். ஏனெனில் தாய்மொழி இயல்பானது. அது ஒருவனுடைய வாழ்க்கை, கலாசாரம், பண்பாடு ஆகியவை சார்ந்தது. பரம்பரையான அம்சங்கள் - சொல்லத் தெரிந்ததும் சொல்ல முடியாததும் சொல்லக்கூடாததும் - தாய்மொழியோடு சேர்ந்து வருகிறது.

ஆகையால்தான் உலகம் முழுவதிலும் தாய்மொழியில் படிக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ஒரு மனிதனிடம் இருக்கும் மகத்தான அறிவை தாய்மொழி வழியாகவே துல்லியமாகச் சொல்ல முடிந்திருக்கிறது. அதுவும் சரித்திரமாக இருக்கிறது. உலகத்தின் மகோன்னதமான படைப்பிலக்கியங்களையெல்லாம் தாய்மொழியில்தான் படைத்து இருக்கிறார்கள். அறிவியல், தத்துவக் கட்டுரைகளை தாய்மொழியில்தான் எழுதியிருக்கிறார்கள்.

அவற்றை அந்தந்த மொழியில்தான் படிக்க வேண்டும். அதற்காக, பல மொழிகள் கற்க முடியாது. தாய்மொழியில் மொழிபெயர்த்து படிப்பதுதான் இயல்பானது. மொழி பெயர்ப்பில் விட்டுப்போனதை தாய்மொழிப் படிப்பு கொடுத்து விடுகிறது.

சாகித்ய அகாதெமி சரியான நேரத்தில் எல்லாத் தாய்மொழிகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து இருக்கிறது. அது வேறு யார் காதில் விழுகிறதோ இல்லையோ, தமிழ் மக்களின், தமிழ்நாடு அரசின் காதில் விழ வேண்டும். ஏனென்றால், தாய்மொழிக்காகத் தொடக்கம் முதல் குரல் கொடுப்பவர்கள் நாம்தானே!

கட்டுரையாளர்: எழுத்தாளர்.சா. கந்தசாமி - நன்றி தினமணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!

Post by malik on Mon Sep 02, 2013 4:54 pm

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கிறது. ஆனால், இங்கு முப்பதாண்டு காலமாகத் தமிழ் பெருமளவில் தடைபட்டுவிட்டது. மழலையர் பள்ளியில் இருந்து கல்லூரிப் படிப்பு வரையில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு மாணவனோ - மாணவியோ தமிழ் மொழி ஒரு எழுத்தைக்கூட படிக்காமல் முனைவர் பட்டப் படிப்பையே முடித்துக்கொண்டு விடலாம். இந்தியாவில் வேறு பல மாநிலங்களில் இது சாத்தியம் இல்லை. ஏனெனில் அவை மூன்று மொழி மாநிலங்கள். அவர்களின் படிப்பில் தாய்மொழி சேர்ந்து விடுகிறது.
எதன் பொருட்டும் மொழிவாரி மாநிலங்களின் - எந்த மொழியைத் தாய்மொழியாக, பேச்சுமொழியாக, எழுத்து மொழியாகக் கொண்டவர்கள் அதிகம் வசிக்கிறார்களோ, அந்த மாநிலங்களின் - மாநில மொழியே படிப்பில் இருந்து துரத்தப்படுவதைத்தான் சாகித்ய அகாதெமி கண்டிக்கிறது.
மிகவும் மோசமான விஷயம், நம் தாய்மொழியே நம் படிப்பில் இருந்து ஒதுக்கப்படுவதுதான். தன் தாய்மொழியை மதிக்காதவர்கள் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அதனால் எந்த பெருமையும் இல்லை..!!


சாகித்ய அகாதெமி சரியான நேரத்தில் எல்லாத் தாய்மொழிகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து இருக்கிறது. அது வேறு யார் காதில் விழுகிறதோ இல்லையோ, தமிழ் மக்களின், தமிழ்நாடு அரசின் காதில் விழ வேண்டும். 
 
மிகவும் அருமையான கட்டுரை.. நன்றி சாமி அவர்களே..!! 
avatar
malik
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 551
மதிப்பீடுகள் : 392

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum