புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
34 Posts - 52%
heezulia
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
17 Posts - 2%
prajai
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
9 Posts - 1%
jairam
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இலவசம் லஞ்சமா? Poll_c10இலவசம் லஞ்சமா? Poll_m10இலவசம் லஞ்சமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசம் லஞ்சமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 03, 2013 2:05 pm

நெடுநாட்களாக முணுமுணுப்பாக இருந்த விஷயம் இன்று விவாதமாக வளர்ந்து நிற்கிறது.

சுப்பிரமணிய பாலாஜி என்கிற வழக்கறிஞர், தமிழக அரசு வழங்கும் இலவசத் திட்டங்களுக்கு எதிராக சமீபத்தில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இலவசத் திட்டங்களை தற்போதிருக்கும் சட்டப்படி லஞ்சமாகக் கருத முடியாது என்றுகூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சட்டத்தில் இடமேயில்லை என்று குறைப்பட்டுக் கொண்ட உச்ச நீதிமன்றம் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இஷ்டத்துக்கும் இலவச வாக்குறுதிகளைக் கொடுப்பதைக் கட்டுப்படுத்த நெறிமுறைகளை வகுக்குமாறு தேர்தல் கமிஷனை அறிவுறுத்தியது.

தேர்தல் கமிஷன் இலவச வாக்குறுதிகள் தொடர்பான கொள்கையை வரையறுக்க தேசிய மற்றும் பிராந்தியக் கட்சிகள் கலந்துகொண்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தை சமீபத்தில் ஏற்பாடு செய்தது. இக்கூட்டத்தில் சுமார் முப்பது கட்சிகள் கலந்துகொண்டன. பெரும்பாலான கட்சிகள் இலவசங்களைக் கட்டுப்படுத்துவதை எதிர்க்கின்றன.

அரசியல் கட்சிகள் ஏன் இலவசங்கள் தொடர வேண்டும் என்கின்றன?

‘ஏழைகள் இருக்கும் வரை இலவசமும் இருக்கும்’ என்பது திமுக தலைவர் கருணாநிதியின் பிரபலமான வாசகம். தேர்தல் கமிஷனிடம் அந்தக் கருத்தை திமுக பிரதிபலித்திருக்கிறது. நமது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரையில், வசதி படைத்தவர்களுக்கும் வசதி இல்லாதவர்களுக்கும் இடையில் சமமான போட்டி நிலையைக் கொண்டுவருவதற்காக வாக்குறுதி அளிக்க அரசியல் கட்சிகளுக்கு அர்த்தமுள்ள உரிமை உள்ளது. அந்தக் கட்சி ஆட்சிக்கு வரும்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன் சட்டமன்ற முறைகள் நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இந்த வாக்குறுதிகள் அளிக்கப்படும்" என்று திமுக கருத்து தெரிவித்திருக்கிறது.

காமராஜர் காலத்தில் பள்ளிக்கல்வி இலவசமாக்கப்பட்டது. திமுக ஆட்சியில் அது உயர்கல்விக்கும் விரிவாக்கப்பட்டது. இதனால்தான் வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் உருவாகி இன்று ஏராளமான பொறியியலாளர்களும், மருத்துவர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். இலவச மின்சாரத் திட்டத்தால்தான் அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட விவசாயிகள் தற்கொலை தமிழகத்தில் ஏற்படவில்லை" என்று அக்கட்சியின் இளைஞர் அணி துணைச்செயலாளர் ஹசன் முகம்மது ஜின்னா கூறுகிறார்.

‘ஏழைகள் முன்னேற்றத்துக்கான திட்டங்களை இலவசம் என்று கூறுவதே பொருத்தமானதல்ல. விலையில்லாத் திட்டங்கள்’ என்றுதான் அழைக்க வேண்டும்’ என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே பலமுறை வலியுறுத்தியிருக்கிறார்.

‘ஜனநாயக நாட்டில் கொள்கைகள், நோக்கங்கள் வகுக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆட்சிக்கு வரும்போது செயல்படுத்த வேண்டிய திட்டங்களைக் குறித்த கருத்தாக்கத்தை உருவாக்க சுதந்திரம் உண்டு. ஜனநாயகத்தில் எதையுமே தீர்மானிக்கும் உரிமை மக்களுக்குதான் உண்டு. தேர்தல் கமிஷன் போன்ற அமைப்புகள் இதில் தலையிடக்கூடாது’ என்று காட்டமாக தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார்.

தேர்தல் கமிஷனுக்கு எதிர்ப்பு

நமது முதல்வர் ஜெயலலிதாவின் குரலைத்தான் இந்தியாவின் தேசியக் கட்சிகளும், மற்ற பிராந்தியக் கட்சிகளும் கூட எதிரொலிக்கின்றன. காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி, ஜனதாதளம் (ஐ) உள்ளிட்ட கட்சிகளும் இதே கருத்தை முன்வைக்கின்றன.

தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டியதுதான் தேர்தல் கமிஷனின் வேலை. அரசியல் கட்சிகளின் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளுக்குள் தலையிடுவது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக ஆகாது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே கருத்தை ஆதரிக்கிறது. அரசியல் கட்சிகளின் சித்தாந்தம், லட்சியம், கொள்கை, திட்டங்கள் ஆகியவற்றில் ஓர் அதிகார அமைப்போ, நிறுவனமோ தலையிடுவது சரியல்ல" என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.பத்மநாபன் சொல்கிறார்.

இருப்பினும் பாஜக போன்ற கட்சிகளுக்கு இலவசங்கள் மீது குறையும் இருக்கின்றன.

டிவி, கிரைண்டர், லேப்டாப் போன்ற பொருட்களை இலவசமாகத் தருவது பிரயோஜனமில்லை. ஆனால் நிஜமான மக்கள் நலத்திட்டங்கள் ஏழைகளுக்குப் பயன் அளிக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை" என்று பாஜக தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் சொல்கிறார்.

இலவசங்கள் குறித்து அரசியல் கட்சிகள் இடையே எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன.

தேர்தலில் வெல்லுவதற்காக இலவச வாக்குறுதிகளைத் தந்து ஆட்சியைப் பெறும் கட்சி, பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடுகிறது" என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் எஸ்.சி.மிஸ்ரா கூறுகிறார். இலவச வாக்குறுதிகள் தேர்தல் களத்தில் குழப்பத்தை விளைவித்து, வாக்காளர்களை திசைதிருப்புகிறது என்றும் அக்கட்சி சொல்கிறது. நாகாலாந்து மக்கள் முன்னணி, மிசோ தேசிய முன்னணி போன்ற சிறிய பிராந்தியக் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியாக இலவசத் திட்டங்களை அறிவிப்பதை தேர்தல் கமிஷன் தடை செய்யவேண்டுமென்று கோருகின்றன. குறிப்பாக பாமகவின் எதிர்ப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இலவசத் திட்டங்களுக்கு செலவழிக்கும் பணத்துக்காகத்தான் வருடா வருடம் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக சாராய விற்பனையை கூடுதலாக தமிழக அரசு பெருக்கிவருகிறது" என்று பாமக குற்றம் சாட்டியிருக்கிறது.

இது குறித்து அக்கட்சியின் புதுச்சேரி பொதுச்செயலர் ஆர்.கே.ஆர்.அனந்தராமன் ‘புதிய தலைமுறை’யிடம் பேசினார்.

தமிழக அரசின் பட்ஜெட் 1,25,000 கோடி. இதில் 43,500 கோடி ரூபாய் இலவசத் திட்டங்களுக்காக மட்டுமே செலவழிக்கப்படுகிறது. ஒரு பட்ஜெட்டில் தோராயமாக நாற்பது சதவிகிதத்துக்கும் மேலான தொகை இலவசத்துக்கு மட்டுமே செலவழிக்கப்படுமேயானால், அம்மாநிலத்தின் வளர்ச்சி எப்படியிருக்கும்? இங்கு ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கத்தான் இலவசத் திட்டங்கள் பயன்படுகின்றன என்கிற சந்தேகம் வருகிறது.

ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் அதில் 100 ரூபாயை டாஸ்மாக்கில் மது குடிக்க செலவழிக்கிறான். வருடத்துக்கு 36,000 ரூபாய் என்று ஐந்து ஆண்டுகளில் 1,80,000 ரூபாயை குடித்தே அழிக்கிறான். டிவி, ஃபேன், மிக்ஸி என்றெல்லாம் அனாவசியமாக அவனுக்கு வழங்கப்படும் ஆடம்பர இலவசங்களின் மதிப்பு இந்த ஐந்து ஆண்டுகளில் 20,000 ரூபாய்தான் இருக்கும். எனவேதான் சொல்கிறோம்... இலவசத்தை லஞ்சமாகக் கொடுத்து வாக்குகளைப் பெற்று, அவனிடமிருந்து பெரும்பணத்தை அரசுகள் சுரண்டுகின்றன. மது விற்பனையின் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு 23,000 கோடி வருவாய் வருகிறதென்றால் எப்படிப்பட்ட மோசமான சூழலில் தமிழகம் இருக்கிறது?

கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முழுக்க இலவசமாகவோ அல்லது மானியமாகவோ திட்டங்கள் தீட்டப்படுவதை பாமக வரவேற்கிறது. சமூகத்தையும், மனிதவளத்தையும் மேம்படுத்தக்கூடிய விஷயங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். அரசுத் திட்டங்களால் ஒருவன் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்று, இவர்கள் இலவசமாகத் தருகிறோம் என்று சொல்லக்கூடிய பொருட்களை சொந்தக் காசில் வாங்கும் கம்பீரத்தைத்தான் நாங்கள் விரும்புகிறோம். இதுதான் ஒவ்வொரு குடிமகனின் சுயமரியாதையையும் மதிக்கும் செயல்" என்கிறார்.

தகவல் தொழில்நுட்ப யுக இளைஞர்கள் பலரும் கூட இலவசத் திட்டங்களை (சில விதிவிலக்குகளின் அடிப்படையில்) எதிர்க்கும் எண்ணத்திலேயே இருக்கிறார்கள்.

திறமையின் அடிப்படையில் இலவசம் வழங்கலாம். நன்கு படிக்கும் மாணவனை மேல்நாட்டுக்குக் கூட அரசு செலவில் அனுப்பி படிக்க வைக்கலாம். எது அத்தியாவசியமோ அதற்குக் கொடுக்கலாம். ஆனால் அடிப்படை வசதிகள் என்கிற பெயரில் கவர்ச்சிகரமான திட்டங்களை ஆட்சிக்கு வருவதற்காகவே அறிவிப்பது சரியல்ல. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசாங்கம், அதற்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். எல்லாவற்றையும் அரசே இலவசமாகக் கொடுத்தால் சோம்பேறிகள்தான் உருவாகுவார்கள். நம் அரசியல் கட்சிகள் தரும் சமீபகால வாக்குறுதிகள் பலவும் மக்களை முட்டாள்களாக்கும் வேலையைத்தான் செவ்வன செய்கின்றன" என்று குறைபட்டுக்கொள்கிறார், மென்பொருள் பணியாளரான ‘எவரெஸ்ட்’ கார்த்தீபன்.

ஆனால் நம் சமூகத்தில் இலவசங்களுக்கு ஓர் தேவை இருக்கிறது என அறிவுஜீவிகளில் சிலர் கருதுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்பட்ட காலகட்டத்திலும் சரி, தற்போதுள்ள உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளின் போதும்சரி, எல்லா மக்களுக்கும் சமத்துவமான பொருளாதார வாய்ப்பு ஏற்பட சாத்தியமே இல்லை. இதை lack of trickle down என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அவ்வாறு பலன் அடைய முடியாதவர்களின் சமூக, பொருளாதார அந்தஸ்து உயரும் வரை அதற்கான திட்டங்களை மேற்கொண்டே ஆகவேண்டும். இதை மிகச்சரியாக உணர்ந்த மாநிலம் தமிழகம். 1970-80களிலேயே பின்தங்கிய மக்களுக்கான சமூகத் திட்டங்களை வகுத்து அதைச் சிறப்பாகச் செயல்படுத்தி இருக்கிறார்கள். இதனால்தான் வறுமையை 60 முதல் 70 சதவிகிதம் வரை சீராக தமிழகத்தில் ஒழிக்க முடிந்திருக்கிறது. இலவசத் திட்டங்கள் பெருமளவில் நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். ஏழைகளின் தேவை என்னவென்பதை சரியாகப் புரிந்துகொண்டு திட்டங்களை செயல்படுத்துவதுதான் முக்கியம்.

பொது விநியோக முறையில் எதையும் பணமாகக் கொடுத்தால் ஆண்கள் குடும்பத் தலைவர்களாக இருக்கும் நம் சமூகத்தில் முழு பலனும் மொத்தக் குடும்பத்திற்கும் கிடைக்காது என்பதாலேயே உணவுப் பொருட்களாக, அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருட்களாக தரப்படுகிறது. குடும்ப நிர்வாகப் பொறுப்பு முழுவதும் பெண்கள் கையில் வரும் வரை இந்த முறை தொடர வேண்டும். அப்போதுதான் முழு பயனையும் பெண்கள், குழந்தைகள் பெற முடியும்" என்கிறார், புதுதில்லி இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். உமா.

அவரது கூற்றும் உண்மைதான். தமிழகம் இலவசங்களின் கோட்டை. பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு, நோட்டு, புத்தகம், சைக்கிள், பேருந்துக் கட்டணம். விவசாயிகளுக்கும், நெசவாளிகளுக்கும் மின்சாரம். பட்டா. வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு, அடுப்பு, கலர் டிவி, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர். பொங்கலுக்கு வேட்டி, சேலை, மளிகைப் பொருட்கள். தாலிக்குத் தங்கம். பிரசவத்துக்கு நிதியுதவி என்று கல்வி, மருத்துவம் என்று எல்லா அடிப்படைத் துறைகளிலும் இங்கே ஆட்சிக்கு வரும் கட்சிகள் மாறி மாறி இலவசத் திட்டங்களைப் பெருக்கிக்கொண்டே போகின்றன. இதன் பலனாகத்தான் ஒட்டுமொத்த மனித வளர்ச்சிக் குறியீட்டில் (human development index) இந்திய அளவில் 6-ஆவது இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது. தமிழகத்துக்கு முன்னால் இருக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா தவிர்த்து ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கேரளா என்று சிறிய மாநிலங்களே இருக்கின்றன. தொழில்துறையில் முன்னேறிய மாநிலங்களான குஜராத், மேற்கு வங்காளம் போன்றவை கூட மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழகத்தைவிட பின்தங்கித்தான் இருக்கின்றன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்.

டிவி, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் போன்ற ஆடம்பரப் பொருட்களை ஏழை மக்களும் பயன்படுத்தும் வண்ணம் வழங்குவது சமூக சமத்துவ நீதியே அன்றி வேறல்ல என்பது தமிழக திராவிடக் கட்சிகளின் வாதம்

ஆழமாக யோசித்துப் பார்த்தால் இது அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் இருக்கிறது.

நம்மளவில் நாம் இது குறித்த விவாதத்தையும், சுயபரிசீலனையையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

முதலில் எது இலவசம் என்கிற வரையறையை நாம் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். சமூக நலத் திட்டங்கள், உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், நிலமற்றோருக்கு நிலம் போன்றவற்றை எப்படி வெறும் தேர்தல் வாக்குறுதிக்காக தரப்படும் இலவசத் திட்டங்களாகப் பார்க்க முடியும்? உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை மக்களுக்குக் கொடுக்க வேண்டியது அரசுகளின் கடமை. அதைக் கேட்டு வாங்க வேண்டியது மக்களின் உரிமை. எது உரிமை, எது இலவசம் என்று பாகுபடுத்திப் பார்க்க வேண்டிய கடமை மக்களுக்கு உண்டு.

இலவசம் என்றாலே அதை எதிர்ப்பதுதான் நம் மக்களின் பொதுவான மனோபாவமாக இருக்கிறது (மக்கள் கருத்தை பெட்டிச் செய்தியாகக் காண்க). ஆனால் வெள்ள நிவாரண நிதி ஆகட்டும், கலர் டிவி ஆகட்டும், ஃபேன், மிக்ஸி ஆகட்டும். ஏழை, பணக்காரர், பாதிக்கப்பட்டோர், பாதிக்கப்படாதோர் பாகுபாடு இன்றி அனைவருமே முட்டி மோதி வரிசையில் நின்று வாங்குவதுதான் களத்தில் நாம் காணும் முதல் காட்சியாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரண நிதிக்கு ஆயிரக்கணக்கானோர் மொத்தமாகக் கூடி நெரிசல் ஏற்பட்டு நாற்பதுக்கும் மேலானோர் உயிரிழந்த சோகத்தை நினைவு கூரலாம்.

என்னுடைய தேவைக்கு மேல் கொடுக்கப்படும் எதுவும் எனக்குத் தேவையில்லை என்று சுயகவுரவத்தோடு ஒரு குடிமகன் மறுக்க ஆரம்பிக்கிறானோ, அன்றுதான் ஆடித் தள்ளுபடி மாதிரி கவர்ச்சியாகக் கொடுக்கப்படும் அரசியல் வாக்குறுதிகளை கட்சிகள் நிறுத்திக்கொள்ளும். மீன் வேண்டாம். தூண்டில் கொடு. நானே மீன் பிடித்துக் கொள்கிறேன் என்று எப்போதுதான் நாம் கேட்கப் போகிறோம்?

மக்கள் கருத்து

சாமுவேல், சமூக ஆர்வலர்
"இந்தியா வளர்ந்து வரும் இவ்வேளையில், இலவசத் திட்டங்கள் தேவையில்லாத ஒன்று. தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஓர் அரசியல் கட்சி இலவசப் பட்டியலை வெளியிடுகிறது. அதன் எதிர்க்கட்சியும் ஓர் இலவசப் பட்டியலை வெளியிடுகிறது. எந்தப் பட்டியலில் விலையுயர்ந்த, அதிக எண்ணிக்கையில் இலவச அறிவிப்புகள் உள்ளன என்று ஒப்பிட்டுப் பார்த்து, முடிவெடுக்கும் சூழ்நிலைக்கு மக்கள் தூண்டிவிடப்படுகிறார்கள். நேரடியாக லஞ்சம் கொடுப்பதற்குப் பதிலாக, சுற்றி வளைத்துக் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். எப்படிப் பார்த்தாலும், இது லஞ்ச தந்திரம்தான். இலவசங்கள் சட்டப்படி லஞ்சம் ஆகாது என்று அரசியல் கட்சிகள் வாதிட்டாலும், இலவச அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் நெறிப்படுத்த வேண்டும். இலவசத் திட்டங்களை ஒழித்தால், டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம் தேவையில்லை என்கிற நிலைமை உருவாக வாய்ப்பிருக்கிறது".

கணேசன், இந்திய சமூக சேவை கழகத் தலைவர்
தேர்தலில் வெற்றி பெற, இலவசத் திட்டங்களை விடவும் வேறு சிறந்த உத்தி கிடையாது என்கிற முடிவுக்கு கட்சிகள் வந்துவிட்டன. ஓட்டு போடுவதற்கு முன்பு பொருள் கொடுத்தால் லஞ்சமாம். ஓட்டு போட்ட பிறகு கொடுத்தால், அது மட்டும் வாக்குறுதியா? நம் அரசியல் கட்சிகள், இலவசத் திட்டங்களை போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பதில் மும்முரமாக இருக்கின்றனவே தவிர, ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரியவில்லை. இலவசங்கள் வழங்கக் காட்டப்படும் முனைப்பை, மக்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் காட்டப்பட வேண்டும்."

பிரசாந்த், தனியார் கம்பெனியில் பணிபுரிபவர்
ஏழை மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் இலவசங்கள் கொடுக்கப்படுகின்றன. உண்மையில் அந்த இலவசங்கள் கடைநிலையில் உள்ள ஏழை மக்களுக்கு சென்றடைவதில்லை. அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு இலவசங்களை வழங்கலாம், ஆனால் இருப்பவர்களுக்கு இலவசங்களை
வழங்குவதால் பணம்தான் வீணாகிறது. அப்படி வீணாகும் பணத்தை மருத்துவக் கட்டமைப்புகளுக்கோ அல்லது கல்விக்கோ பயன்படுத்தலாம்."

கௌரி சங்கர், தஞ்சாவூர்
அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பதை மக்கள் தட்டிக்கேட்காமல் இருப்பதற்கு அவர்களையும் ஊழல்வாதிகளாக மாற்றவே இலவசத் திட்டம் என்கிற பெயரில் மக்களுக்கு லஞ்சம் வழங்கப்படுகிறது. மக்களுக்கு எல்லாமே இலவசமாகக் கிடைத்து விடுவதால் மக்களுக்கு உழைக்கும் எண்ணமே போய், அவர்கள் முதுகெலும்பில்லாதவர்களாக மாறிவிட்டனர். இலவசத் திட்டங்களுக்குப் பயன்படுத்தும் நிதியைத் தேர்தல் அறிக்கைகளில் இலவசத் திட்டங்களை அறிவிப்பதை தேர்தல் ஆணையமே தடை செய்தால்தான் இந்த நாடு உருப்படும்!"

மனோஜ் வெங்கடேஷ், கல்லூரி மாணவர்
அரசாங்கம் தேர்தலின்போது கொடுக்கும் இலவசங்களுக்கான வாக்குறுதி, மக்களுக்கு ஒரு வகையான லஞ்சம்தான். இலவசங்களைக் கொடுத்து ஓட்டு வாங்கும் நிலை நம்முடைய தேசத்தில்தான் நடக்கிறது. நல்ல ஆட்சி நடந்தால் மக்கள் அந்த ஆட்சியை ஆதரிப்பார்கள். மக்களை ஏமாற்ற அரசியல் கட்சி எடுத்துக்கொண்ட மோசமான ஒரு விஷயம் இலவசம்."

கண்ணன், தஞ்சாவூர்
மக்களுக்கு வாக்களிப்பதற்குப் பணமாகக் கொடுக்காமல்,தேர்தல் அறிக்கையிலேயே இலவசங்களை அறிவிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அரசியல்வாதிகளிடமிருந்து மக்களுக்கு அதுவும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த மாதிரியான இலவசத் திட்டங்கள் மட்டுமே சென்றடைகின்றன. டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்கள் வாங்க வசதியில்லாத லட்சக்கணக்கான குடும்பங்கள் தமிழகத்தில் உள்ளன. இவை அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படாமல் இருந்திருந்தால் இன்றுவரை அவர்களால் அதனை அனுபவித்திருக்க முடியாது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப், புத்தகங்கள், பேக், காலணிகள் உள்ளிட்டவை அவர்களின் வாழக்கை தரத்தை உயர்த்தியிருக்கிறது. இன்னும்கூட தங்க வீடு இல்லாத மக்களும், நிலம் இல்லாத விவசாயக் கூலிகளும் உள்ளனர். இதுபோன்ற அடிப்படை வசதிகளை அரசு இலவசமாக செய்துதருவது அவசியம். அதே நேரத்தில் இந்த இலவசங்கள் ஏழைகளுக்கு மட்டுமில்லாமல் பணக்காரர்களுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் சென்று சேர்கிறது.இதனை அரசுகள் முறைப்படுத்தவேண்டும்.

(யுவகிருஷ்ணா - நன்றி- புதிய தலைமுறை)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 03, 2013 2:10 pm

இலவசம் லஞ்சமா? 103459460 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 2:10 pm

இலவசம், லஞ்சம் ,அன்பளிப்பு இவைகளுக்கு நிறங்களும் பண்புகளும் வெவ்வேறு இவை அனைத்தும் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியவை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 2:39 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இலவசம், லஞ்சம் ,அன்பளிப்பு இவைகளுக்கு நிறங்களும் பண்புகளும்  வெவ்வேறு இவை அனைத்தும் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியவை
 
உண்மை தான் சிறந்த கருத்தும் கூட




இலவசம் லஞ்சமா? Mஇலவசம் லஞ்சமா? Uஇலவசம் லஞ்சமா? Tஇலவசம் லஞ்சமா? Hஇலவசம் லஞ்சமா? Uஇலவசம் லஞ்சமா? Mஇலவசம் லஞ்சமா? Oஇலவசம் லஞ்சமா? Hஇலவசம் லஞ்சமா? Aஇலவசம் லஞ்சமா? Mஇலவசம் லஞ்சமா? Eஇலவசம் லஞ்சமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக