ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
heezulia
 

Admins Online

செப்டம்பர் மாத எண் ஜோதிடம் !

View previous topic View next topic Go down

செப்டம்பர் மாத எண் ஜோதிடம் !

Post by krishnaamma on Fri Sep 06, 2013 7:57 pm

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். லோன் கிடைக்கும்.

எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். கமிஷன், ஷேர் வகைகளால் லாபமடைவீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வீண் செலவு, அலைச்சல், திடீர் பயணங்கள் வந்துப் போகும். ஆனால் உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள்.

சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்தக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரகள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள்.

வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்‌தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். விட்டதை பிடிக்கும் மாதமிது.


அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 3, 5, 10, 30
அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

2, 11, 20, 29

Post by krishnaamma on Fri Sep 06, 2013 7:58 pm

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகப் பேசுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.

பணவரவு அதிகரிக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். என்றாலும் வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். கை, கால் வலி வந்துப் போகும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் பாராட்டப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! அமைதியாக இருந்து சாதிப்பீர்கள்.

வியாபாரத்தில் லாபத்தை பெருக்க புது விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைபார்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விவாதம், போட்டிகளில் வெற்றி பெறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 7, 6, 20, 25
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 4
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, பிங்க்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

3, 12, 21, 30

Post by krishnaamma on Fri Sep 06, 2013 7:59 pm

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் தடைப்பட்ட விஷயங்கள் உடனே முடியும். பிரபலங்கள் பாராட்டுவார்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். புது வேலைக் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகளுக்கு தீவிரமாக வரன் தேடுவீர்கள். மகனுக்கு இருந்த கூடா நட்பு விலகும்.

பணப்புழக்கம் அதிகமாகும். சகோதர வகையில் பயனடைவீர்கள். சொத்து பிரச்னை தீரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால் வேலைச்சுமை, மனக்குழப்பம், உறவினர்கள், நண்பர்களுடன் வாக்குவாதம் வந்துப் போகும் மாதத்தின் மையப்பகுதியிலிருந்து சுபச் செலவுகள் அதிகரிக்கும். திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

வீடு மாறுவது, கூடுதல் அறைக் கட்டுவது நல்ல விதத்தில் முடியும். அவ்வப்போது இனந்தெரியாத கவலைகள், வீண் பயம், விரையம் வந்து செல்லும். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே! காதல் கைகூடும். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.

உத்‌தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும். கலைத்துறையினர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். அதிரடி செயல்பாடுகளால் முன்னேறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 3, 1, 12, 10, 21
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், கிரே
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

4, 13, 22, 31

Post by krishnaamma on Fri Sep 06, 2013 8:00 pm

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாததத்தில் புதிய எண்ணங்கள் உதயமாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு.

உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தடைப்பட்ட கல்யாணம் முடியும். வாகனம் வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வேலைக் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. கௌரவப் பதவிகள், பொறுப்புகள் கூடி வரும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். தந்தையின் உடல் நலம் சீராகும்.

இரத்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். அவ்வப்போது ஒருவித படபடப்பு, பேச்சில் தடுமாற்றம், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

உத்‌தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வி. ஐ. பிகளால் பாராட்டப்படும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 1, 6, 24, 22
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, இளம்சிவப்பு
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

5, 14, 23

Post by krishnaamma on Fri Sep 06, 2013 8:00 pm

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது, என்பதை புரிந்து செயல்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள்.

மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வீடு வாங்குவது, விற்பது, மாறுவது நல்ல விதத்தில் முடியும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உறவினர்கள் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தூரத்து சொந்தங்களை சந்திப்பீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும்.

சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். மாதத்தின் பிற்பகுதியில் மனைவியுடன் மோதல்கள், மறைமுக எதிர்ப்புகள் வந்து விலகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளே! தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.

கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்‌தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். எதிர்மறை எண்ணம் விலகும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8, 24, 26
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஊதா, மஞ்சள்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வெள்ளி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

6, 15, 24

Post by krishnaamma on Fri Sep 06, 2013 8:01 pm

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதிய முயற்சிகள் நிறைவேறும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மார்க்கெட்டில் இழந்ததை பிடிப்பீர்கள். தேர்வில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். அரசால் அனுகூலம் உண்டு. பணவரவு அதிகரிக்கும். வீடு மாறுவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சகோதரங்களால் நன்மை உண்டு. வீடு, மனை சேரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும், ஏமாற்றங்களும் வந்துப் போகும்.

அரசியல்வாதிகளே! பொது விழாக்களுக்கு தலைமைத் தாங்குவீர்கள்.கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் விட்டதை பிடிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்‌தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வரும். கலைத்துறையினர்களே! வதந்திகள் வரக்கூடும். செல்வாக்கு, கௌரவம் ஒருபடி உயரும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 6, 13, 14, 15
அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஆலிவ்பச்சை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

7, 16, 25

Post by krishnaamma on Fri Sep 06, 2013 8:02 pm

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். உங்களின் முதிர்ச்சியான பேச்சில் அறிவு வெளிப்படும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களை தாமதமாக புரிந்துக் கொள்வார்கள். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள்.

உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பணவரவு எதிர்பார்த்த வகையில் உண்டு. மகளுக்கு திருமணம் கூடி வரும். உறவினர்கள், நண்பர்களிடம் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து செலவுகள் துரத்தும்.

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களை அனுசரித்துப் போங்கள். உத்‌தியோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்கு புரியவில்லையே என வருந்துவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். வீரியத்தை குறைத்துக் கொண்டு காரியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதமிது.


அதி‌ர்ஷ்ட தேதிகள் : 7, 2, 11, 15, 25
அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், க்ரீம் வெள்ளை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

8, 17, 26

Post by krishnaamma on Fri Sep 06, 2013 8:02 pm

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். வி. ஐ. பிகளால் ஆதாயம் உண்டு. அரசுக் காரியங்கள் சுலபமாக முடியும். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

பிள்ளைகளின் அடிமனதிலிருக்கு பயத்தை போக்குவீர்கள். புது வேலை அமையும். சிலர் வேறு ஊர் மாறுவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணம், சீமந்தத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள்.

தள்ளிப் போன வழக்கில் திருப்பம் உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சகோதர வகையில் இருந்த பனிப்போர் நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்‌தியோகத்தில் உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புது அதிகாரியால் சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகள் வெளிப்படும். புதிய பாதையில் பயணிக்கம் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 8, 14, 15, 17, 24
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 4
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஊதா
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

9, 18, 27

Post by krishnaamma on Fri Sep 06, 2013 8:03 pm

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நோய் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

தாயாரின் உடல் நலம் சீராகும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது சொத்து சேரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய புது வழி பிறக்கும். மாதத்தின் மையப்பகுதியில் பிள்ளைகளுடன் மோதல்கள் வரும்.

அவர்களின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். பணப்பற்றாக்குறை, வாகனச் செலவுகள், எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களிடமிருந்தும் விடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளே! புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்‌தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். கலைத்துறையினர்களே! நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். அடிப்படை வசதிகள் உயரும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 3, 10, 18, 21
அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, மஞ்சள்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், செவ்வாய்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: செப்டம்பர் மாத எண் ஜோதிடம் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum