ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 ayyasamy ram

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 ayyasamy ram

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 krishnanramadurai

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 ayyasamy ram

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 ayyasamy ram

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!

View previous topic View next topic Go down

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!

Post by சிவா on Sat Sep 07, 2013 4:08 pmவளரும் இளம் கதாநாயகன் வரிசையில் சேர்ந்து முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில், சத்யராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெளிவந்திருக்கும் படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”.

தலைப்பு புதுமையாக இருக்கின்றதே என்று திரையரங்கில் போய் உட்பார்ந்தால் அதே பழைய கதை. நகைச்சுவைக் காட்சிகளால் படத்தை நகர்த்தும் அதே பழைய திரைக்கதை பாணி. ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற நகைச்சுவைப் படங்களை எடுத்து பிரபல்யம் அடைந்த இயக்குநர் ராஜேஷ் கைவண்ணத்தில் மலர்கின்ற வசனங்கள், நகைச்சுவையாக எழுதப்பட்டிருந்தாலும், அவை படமாக்கப்பட்ட விதத்தால் கொஞ்சம் கூட காட்சிகள் நம்மைக் கவரவில்லை.

படத்தின் திரைக்கதை

படம் ஆரம்பித்த முதல் வழக்கம் போல் வேலையில்லாத வெட்டி ஆசாமியாக கதாநாயகன் சிவகார்த்திகேயன். அவருக்கு உடந்தையாக நகைச்சுவைக்காக பரோட்டா சூரி. இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள், அலப்பரைகள்கள்தான் படத்தின் முன்பாதி.

ஆனால், உப்பு சப்பில்லாத நகைச்சுவைத் தோரணங்களை மட்டுமே நம்பியிருக்கின்ற இயக்குநர் பொன்ராம், கதையை நம்பவில்லை. சிவகார்த்திகேயனும், சூரியும் வளவளவென்று பேசிக் கொண்டே இருக்கின்றார்கள்.

இடைவேளை வரை வெறும் நகைச்சுவைக் காட்சிகளை வைத்து நகரும் படம் இடைவேளையில் ஒரு திருப்பத்தைக் கொடுக்கின்றார்கள். ஆனால், இடைவேளைக்குப் பிறகும் கதை மீண்டும் பழைய பாணியில் அதே பாணி நகைச்சுவைக் காட்சிகளாலேயே நகர்வது போரடிக்கின்றது.

ஆரம்பக் காட்சிகளில் மட்டும் சத்யராஜ் தனது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டார் என்றும் அதை காவல் துறையினர் மாறுவேடங்களில் சென்று கிராமத்தில் துப்பறிந்து கண்டுபிடிக்கின்றனர் என்றெல்லாம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை விதைக்கின்றார்கள்.

அந்த மர்மத்தை வைத்தே படத்தை நகர்த்த முயற்சித்திருக்கின்றார்கள். ஆனால், போகப் போக அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படும்போது அது ஒரே புஸ்வாணமாகி படத்தையே கவிழ்த்து விடுகின்றது.

வழக்கம்போல் ஊர்ப் பெரியவரான சத்யராஜ் மகளை ஊரில் வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் காதலிக்கின்றார். வழக்கம்போல் அதற்கு எதிர்ப்பு கிளம்ப அதை எப்படி சமாளிக்கின்றார்கள் என்பதுதான் கதை.

முதலில் பள்ளி ஆசிரியையான பிந்து மாதவிக்கு காதல் கடிதம் கொடுக்க கதாநாயகி மாணவியான ஸ்ரீதிவ்யாவைப் பயன்படுத்திக் கொள்ளும் சிவகார்த்திகேயன் பின்னர் பிந்து மாதவி கல்யாணம் பண்ணிக் கொண்டு செல்ல, கதாநாயகி மேல் காதல் கொள்கின்றார்.

வலுவில்லாத திரைக்கதை, போரடிக்கும் காட்சிகள் என நகர்கின்ற படத்தில் நகைச்சுவையை வரவழைக்க முயன்றிருக்கின்றார்கள். ஆனால், எந்த காட்சியிலும் திரையரங்கில் குபீர் சிரிப்பைக் காண முடியவில்லை.

படம் முழுக்க சிவகார்த்திகேயனும், சூரியும் ஒரே பாணியில், நாடகத்தனமாக பேசிக் கொண்டே இருப்பது கொட்டாவியை வரவழைக்கின்றது.

இடைவேளைக்குப் பிறகு படத்தின் ஓட்டம் விறுவிறுப்பாக மாறும் என எதிர்பார்த்தால், மீண்டும் அதே பாணியில் சிவகார்த்திகேயனும், சூரியும் தங்களின் வளவள பேச்சை தொடர்கின்றார்கள்.

அவர்கள் ஏன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற பெயரில் ஊரில் சங்கம் நடத்துகின்றார்கள் என்பதற்கும் காரணம் கூறப்படவில்லை. படத்தின் தலைப்பாகவே வைக்கப்பட்டிருக்கும் இந்த சங்கத்திற்கும் திரைக்கதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.

அதைவிடக் கொடுமையாக, சூரி, சிவகார்த்திகேயனிடமிருந்து பிரிந்து சென்று, “எப்போதும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பெயரில் போட்டி சங்கம் நடத்துகின்றார். பின்னர் அதையும் மூடிவிட்டு கதாநாயகனிடம் வந்து மீண்டும் ஒட்டிக்கொள்கின்றார்.

ஆனால், இந்த சம்பவங்கள் எல்லாம் ஏன் படத்தில் சேர்த்திருக்கின்றார்கள் என்பதற்கும் தகுந்த காரணமில்லை.

கிராமத்தில் திருவிழாவில் ரெகார்ட் டான்ஸ் எனப்படும் குத்து நடனம் ஆடுவதற்கு நடனப் பெண் வருவதும் அவரைப் பார்த்து பல்போன ஊர்ப் பெரிசுகள் ஜொள் விடும் காட்சிகளும் இதற்கு முன் எத்தனையோ படங்களில் பார்த்தாகிவிட்டது.

இயக்குநர் எங்கேயும் வித்தியாசமாக யோசித்துவிடக்கூடாது என மெனக்கெட்டிருப்பார் போலும்!

ஆனால், பசுமாடு கிணற்றுக்குள் விழுவதும் அதைக் காப்பாற்ற சிவ கார்த்திகேயன் போராடுவது மட்டும் சற்றே வித்தியாசமான காட்சியமைப்பு.

நடிகர்கள், நடிகைகள்…

சத்யராஜ், உடல் மொழியாலும், ஒப்பனையாலும் கவர்கின்றார். ஆனால், படத்தின் இறுதிவரை அவர் வில்லனா, அல்லது அவர் கதாபாத்திரம் நகைச்சுவைக்கென படைக்கப்பட்டதா எனத் தெரியாமல் ரசிகர்கள் குழம்புவது நிச்சயம்.

பல இடங்களில் அவர் கொடூரமானவர், கெட்டவர் எனக் காட்டப்படுகின்றார். அதற்குத் தகுந்தாற்போல் அவரும் முகத்தை உம்மென்று சீரியசாக வைத்துக் கொண்டே காட்சிகளில் தோன்றுகின்றார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு காமெடியனாகக் காட்டப்படுகின்றார்.

படம் முழுக்க முக்கிய கதாபாத்திரமாக வரும் அவரது கதாபாத்திரச் சிதைவு படத்தின் பெரிய பலவீனம்.

கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருப்பவர் ஸ்ரீதிவ்யா. ஆனால் முகத்தில் சரியான பாவங்கள் இல்லை. பள்ளி உடையில் மிகவும் சிறிய பெண்ணாக தோன்றுகின்றார். அதனாலேயே என்னவோ, படத்தின் பிற்பாதியில் அவர் சேலை கட்டி வருவதாகவும், அதைப் பார்த்து கதாநாயகன் காதலில் விழுவதாகவும் காட்சி அமைத்திருக்கின்றார்கள். முதல் படம் என்பதால் ஸ்ரீதிவ்யாவை மன்னித்து விடலாம்.

படத்தின் ஒரே ஆறுதல் பிந்து மாதவி. அழகான கண்களுடன் சில காட்சிகளில் வந்தாலும் சிவகார்த்திகேயனை மட்டுமல்லாது நம்மையும் கவர்கின்றார். ஆனால், சில காட்சிகளோடு அவர் திருமணம் செய்து கொண்டு போய்விடுவதோடு, படமும் தொய்வடைந்து விடுகின்றது.

இசையும் பாடல்களும்..

டி.இமான் இசையில் பாடல்கள் கவர்கின்றன. இருப்பினும் இடைவேளைக்குப் பிறகு வழக்கம்போல் வரும் காதல் பாடலும், தற்போது தமிழ்ப் படங்களின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட மதுக்கடை குத்து பாடலும் படத்தின் ஓட்டத்திற்கு தடை போடுகின்றன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடங்கும் பாடலை முதல் முறையாக சிவகார்த்திகேயன் பாடியிருக்கின்றார்.

ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் கவனித்திருக்கின்றார். ஒளிப்பதிவுக்கு அதிக வேலையில்லை என்றாலும், அவர் பங்கை சிறப்பாகவே ஆற்றியிருக்கின்றார் என்றுதான் கூறவேண்டும்.

படம் முடிந்தவுடன் காட்டப்படும், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் கோர்வை மட்டும் சிறப்பாக இருக்கின்றது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்க்கச் சென்றால் நிச்சயம் வருத்தப்படுவீர்கள்!

-இரா.முத்தரசன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!

Post by ராஜா on Sat Sep 07, 2013 4:52 pm

என்ன இப்படி சொல்லிபுடிங்க .. இன்னிக்கு போகலாம்னு இருந்தேன் ..... சரி விடுங்க திருட்டு DVD ல பார்த்துக்கலாம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!

Post by யினியவன் on Sat Sep 07, 2013 4:54 pm

வருத்தப்படும் அளவு கடி இல்லை பாஸ் - பரவாயில்லை.

வெளில வந்தவுடன் கதை என்னன்னு யோசிச்சா ஒண்ணுமே இல்லை புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!

Post by அருண் on Sat Sep 07, 2013 6:24 pm

நேற்று போகலாம் நு இருந்தேன்..கொஞ்சம் நல்ல வேலையால் போகவில்லை.
போயிருந்தால் -வருத்தப்பட வச்ச வாலிபர் சங்கம் ஆகிருக்கும்...

விமர்சனத்திற்கு நன்றி அண்ணா.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!

Post by ராஜு சரவணன் on Sat Sep 07, 2013 6:43 pm

@ராஜா wrote:என்ன இப்படி சொல்லிபுடிங்க .. இன்னிக்கு போகலாம்னு இருந்தேன் ..... சரி விடுங்க திருட்டு DVD ல பார்த்துக்கலாம்
தல முதலில் திரு.விசிடி நல்லா இருந்தால் திரை.விசில் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!

Post by ரா.ரா3275 on Sat Sep 07, 2013 10:34 pm

ரொம்ப மொக்கன்னு சொல்ல முடியாது...ஆனா காமெடிக் கூட்டத்துல இதுல மட்டும் என்ன பெருசா கதைய எதிர்பார்க்கணும்?...

பரோட்டா சூரியின் அலப்பரை நல்லாத்தானே இருக்கு...

யினியவன் அண்ணா சொன்னதுக்கு ஆமோதித்தல் 
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!

Post by Muthumohamed on Sat Sep 07, 2013 10:47 pm

என்னமோ ஆகட்டும் லிங்க் யார் தரீங்கா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Sep 08, 2013 1:46 pm

@Muthumohamed wrote:என்னமோ ஆகட்டும் லிங்க் யார் தரீங்கா

நன்றி-தமிழ்ராக்கர்ஸ்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3902
மதிப்பீடுகள் : 850

View user profile

Back to top Go down

Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் – உப்பு சப்பில்லாத, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைத் தோரணம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum