ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 M.Jagadeesan

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

பூவே இளைய பூவே
 ayyasamy ram

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
 anikuttan

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்
 ayyasamy ram

நீ நடக்குமிடமெல்லாம் அழகு ! (ஸ்வீடன் மொழிப்பாடல்)
 sinjanthu

தொடத் தொடத் தொல்காப்பியம்(459)
 Dr.S.Soundarapandian

வீழ்வதற்கல்ல! - கவிதை
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு எது அலர்ஜி?
 Dr.S.Soundarapandian

முரண்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
 Dr.S.Soundarapandian

அழகுத் தேவதை ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா இலக்கு 282 ரன்கள்
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
 ayyasamy ram

கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
 ayyasamy ram

ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
 ayyasamy ram

அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
 M.Jagadeesan

இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
 M.Jagadeesan

வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
 ayyasamy ram

குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
 ayyasamy ram

‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
 ayyasamy ram

பலகோடி ரூபாய் குளிர்பான விளம்பரம் விராட் கோலி வேண்டாம் என கூறியது ஏன்?
 ராஜா

எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
 ayyasamy ram

விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இராம காவியம்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து இராம காவியம்

Post by Admin on Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே

avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down


வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Sun Aug 29, 2010 12:38 am

இராமனே, பரம்பொருள்!

எம் பெருமானே, தேவியை நீர் பிரிந்திருக்கின்றீர் என்று உலகத்தார் எண்ணுகின்றார்கள். அந்தக் கற்புத் தெய்வத்தின் கண்களில் நீர் இருக்கின்றீர். அவர் கருத்திலே இருக்கின்றீர் அம்மங்கையர்க்கரசியின் வாக்கினில் இருக்கின்றீர். மன்மதன் எய்த அம்பினால் தொளைத்த புண்ணிலும் இருக்கின்றீர்.

கடலுக்கு நடுவே இலங்கையென்னும் நகரில் காலை மாலை இன்றி விண்ணளவும் வளர்ந்த பொன் மயமான கற்பகச் சோலைக்குள் தம்பி லட்சுமணர் செய்த தவச் சோலையில் இருக்கின்றாள். தவஞ்செய்த தவமாந் தையல் தூய்மையாக இருக்கின்றாள். பாதகனாகிய இராவணன் தேவியைத் தீண்ட அஞ்சி, பர்ணசாலையோடு பேர்த்துக் கொண்டுபோய், அசோக வனத்தில் வைத்திருக்கின்றான். பிரமதேவர் இராவணனைப் பார்த்து விருப்பமில்லாத ஒரு கற்புடைய பெண்ணைத் தீண்டுவாயாகில், உன் தலை ஆயிரம் துண்டுகளாக வெடிக்க கடவது என்று சாபம் தந்திருக்கின்றார் அதனால், அவன் தீண்டினானில்லை.

எம்பெருமானே சீதாதேவியின் கற்புத் திறத்தால் பெண் குலமே உயர்ந்துவிட்டது. சோகம் நிறைந்த என் அன்னையின் கற்பு நலத்தால் தேவமாதர்களும் சிறப்புற்றார்கள். சிவபெருமானுடைய இடப்பாகத்தில் இருந்த உமா தேவியார் அவருடைய தலைமேல் இருக்கும் சிறப்பைப் பெற்றாள். திருமாலின் மார்பில் வாழும் லட்சுமி தேவி அத்திருமாலின் ஆயிரந் தலைகளிலும் இருக்கத் தக்கவள் ஆனாள்.

அடியேன் இலங்கை முழுவதும் நாடித் தேடித், தேவியைக் காணாமல் வாடி வருந்த, அசோக வனத்தில் எம்பிராட்டியை அவளுடைய கண்ணீர்க் கடலில் கண்டேன். அந்த அன்னையை ஆயுதம் தாங்கிய பேய் முகமும், நாய் முகமும் கொண்ட அரக்கிமார்கள் சூழ்ந்து ஒவ்வொரு விநாடியும் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த நடுநிசியில் பெண்கள் சூழ, அசோகவனத்துக்கு இராவணன் வந்தான். வந்தவன் எம்பிராட்டியை இறைஞ்சிக் கெஞ்சித் தொழுது நின்றான். தேவி ஆலகாலம் போல் சீறி வைதாள். இராவணன் அஞ்சி அகன்று போனான். நான் ஒரு மந்திரம் சொல்லி, அரக்கிமார்களைத் தூங்குமாறு செய்தேன். யாவரும் தூங்கிய பின் அன்னை உள்ளம் உடைந்து, அல்லல் அடைந்து நான் இருந்த அசோக மரத்தின் கிளையில் நார்கொண்ட கொடியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டாள். அந்த அபாயமான நேரத்தில் இராம நாமம் சொல்லித் தொழுதேன். அழுதேன். தாங்கள் சொன்ன அடையாளங்களைக் கூறினேன். முடிவில் கணையாழி மோதிரத்தைத் தந்தேன்.

கணையாழியைக் கண்டு அன்னைக்கு மூச்சு வந்தது. பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

இந்தப் புனிதமான மோதிரம் பாவிகள் வாழ்கின்ற இலங்கைக்கு வந்ததேங என்று யெண்ணி, கண்களிலிருந்து பெருகிய கண்ணீரால் அபிஷேகம் செய்தாள். அம்மோதிரத்தைச் சென்னியில வைத்துக் கொண்டாள், மார்பில் வைத்துக் கொண்டாள். அப்பொழுது வந்த விரக வெந்தீயினால் மோதிரம் உருகிவிட்டது. உள்ளம் குளிர்ந்ததும் உருகிய மோதிரம் இறுகியது. மோதிரம் உருகியதும், இறுகியதும் ஒரு கணத்தில் நிகழ்ந்தது. இரண்டும் கண்டேன். பின்னர், எம்பிராட்டி என்னை நம்பிக் கண்குளிரப் பார்த்து ஆசி கூறினாள்.

இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் விரிவாகக் கூறினேன். எம்பிராட்டி அத்தனையும் கேட்டு மகிழ்ச்சி அடைந்தாள். அன்னை என்னைப் பார்த்து, ஙமகனே, இன்னும் ஒரு மாதந்தான் இலங்கையில் இருப்பேன். அதற்குமேல் உயிரைவிட்டு விடுவேன். ஆதலால், ஒரு மாதத்துக்குள் என்னைச் சிறை மீட்க வேண்டும்ங என்று தேவரீருக்க அறிவிக்கச் சொன்னாள். மெலிந்து நலிந்து உண்ணாமலும், உறங்காமலும் என் அன்னைத் தவநிலையில் இருக்கின்றாள் என்று சூடாமணியை எடுத்துக் கொடுத்தார். அந்தச் சூடாமணி இளம் ஞாயிறைப்போல் ஒளி செய்தது.

அங்கதன் முதலாய அனைவரும் வந்து இராமபிரானை அழுது தொழுது முடிமேல் கைகூப்பி வணங்கினார்கள். பெருமான் எல்லாருக்கும் அருள் புரிந்தார். சுக்ரீவன் இனி தாமதிக்கக்கூடாது என்று கருதிச் சேனைத் தலைவனான நீலனுக்குச் சேனைகளுடன் புறப்படுமாறு கட்டளையிட்டான்.

அநுமாருடைய வேண்டுகோளுக்கிணங்கி இராமர் ரதத்தில் ஆரோகணித்தார். அங்கதன் வேண்டுகோளுக்கிணங்கி இளைய பெருமாளும் ஆரோகணித்தார். பன்னிரண்டு பகல் நடந்து தென் கடலை அடைந்தார்கள்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Sun Aug 29, 2010 12:41 am

யுத்த காண்டம்இராவணன் மந்தராலோசனை

இராமபிரான் தென்கடல் கரையைச் சேர்ந்தார். கடல் அலை வந்து வீசுகின்றது. லட்சுமியாகிய சீதை கடலில் பிறந்தவள். இராமர் ஆகிய திருமால் கடலில் நித்திரை புரிபவர். அதனால், இராமருக்குக் கடல் மாமியார் வீடாகும். மாப்பிள்ளை வந்திருக்கின்றார் என்று கருதித் தென்றா காற்றாகிய மைத்துனர் அலைகளாகிய பாயைச் சுரட்டிக் கரையிலே முத்தும் நுரையும் சிந்த உதறிப்பாய் விரிப்பதுபோல் இருந்தது அந்தக் காட்சி.

இராவணன் விசுவப் பிரமனை அழைத்து, இலங்கையை முன்னிலும் பன்மடங்கு அழகாக உண்டாக்குமாறு கட்டளை யிட்டான். அத்தெய்வத் தச்சன் பொன்னாலும் நவமணிகளினாலும், அரண்மனைகளும், சாலைகளும், சோலைகளும் தாமரை ஓடைகளும் மாமணி மேடைகளும் விளங்க அதியற்புதமாக உண்டாக்கினான். இராவணன் அதைக்கண்டு மிக்க வெகுமதிகளைத் தந்து அனுப்பினான். பின் மந்திராலோசனை சபையை அடைந்தான். முனிவர், தேவர், பெண்கள், இளைஞர்கள் முதலியவர்களை வெளியேற்றிவிட்டுத் தன் கருத்துக்குகந்த அமைச்சர் முதலியோர் அருகிலிருக்குமாறு செய்தான். தன் அனுமதியின்றி வண்டுகளும் காற்றுங்கூட அங்கு வரக்கூடாதென்று ஆணையிட்டான்.

அன்பர்களே! ஒரு குரங்கு வந்து அசோக வனத்தையும் அரக்கர் குலத்தையும் அழித்து என் மகனாகிய அட்ச குமாரனை மாய்த்து, தேய்த்து, இலங்கையை எரியூட்டித்திரும்பியும் போய்விட்டது. என் வீணைக்கொடி வெந்து எரிந்தது. பல கோடி வீரர்கள் மாண்டதனால் நிலத்தில் உதிரம் ஊறுகின்றது. நாம் படுக்கும் இடங்கள் எல்லாம் கொதிக்கின்றன. அதனால், உணவும் உறக்கமும் இல்லாது ஒழிந்தன. மனைவிமார்களின் கூந்தல் எரிந்து நாறுகின்றன. எனக்கு இதைவிட வேறு என்ன அவமானம் உண்டு? ஆகவே, மேற்கொண்டு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தித்துச் சொல்லுங்கள் என்று இராவணன் கூறினான்.

துன்முகன், மகாபார்சுவன், பிராசன், சூரிய சத்துரு, வேள்விப் பகைஞன், தாமிராட்சன் முதலானோர் இராவணனைப் பணிந்து எலிகளைக் கண்டு புலிகள் அஞ்சுமா? இரு மனிதர்களுக்கும் இலைகளையும் மலர்களையும் கோதியுண்ணும் குரங்குகளுக்கும் அஞ்சி ஒரு மந்திராலோசனையும் கூட்டுவதானால் நமக்கு இதைவிட அவமானம் ஏது? எங்களுக்கு அனுமதி கொடுத்தால் நாங்கள் சென்று மனிதர்களையும் குரங்குகளையும் கொன்று தின்று வருவோம். நாங்கள் ஏழுகடல்களையும் குடிப்போம். மகாமேரு மலையை இடிப்போம். எங்களால் ஆகாத காரியம் ஒன்று உளதோ? இப்பொழுதே போருக்குப் புறப்படுவோம் என்று கூறினார்கள்.


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 9:48 am

என் இனிய வணக்கங்கள்.... வந்தவுடன் மாற்றுக்கருத்தினை இடுவதற்கு மன்னிக்கவும். இந்தப் பாடலில் எழுத்துப்பிழை மிகவும் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.
avatar
ayyaasamy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Sat Nov 13, 2010 9:54 am

ayyaasamy wrote:என் இனிய வணக்கங்கள்.... வந்தவுடன் மாற்றுக்கருத்தினை இடுவதற்கு மன்னிக்கவும். இந்தப் பாடலில் எழுத்துப்பிழை மிகவும் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.

எந்தப் பாடலில்?


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 9:58 am

உலகம் யாவையம் எனத்தொடங்கும் பாடலில்........
avatar
ayyaasamy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Sat Nov 13, 2010 10:18 am

ayyaasamy wrote:உலகம் யாவையம் எனத்தொடங்கும் பாடலில்........

[You must be registered and logged in to see this link.]

இந்தப் பகுதியைக் குறிப்பிடுகிறீர்களா?


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 12:35 pm

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டு டையார்
தலைவர் அன்னவர்க் கேசர னாங்களே

avatar
ayyaasamy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ராஜா on Sat Nov 13, 2010 12:40 pm

ayyaasamy wrote:என் இனிய வணக்கங்கள்.... வந்தவுடன் மாற்றுக்கருத்தினை இடுவதற்கு மன்னிக்கவும். இந்தப் பாடலில் எழுத்துப்பிழை மிகவும் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.
[You must be registered and logged in to see this image.] எதை சொல்லுகிறீர்கள் ஐயா


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை [You must be registered and logged in to see this link.] படிக்கவும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] என்னைத் தொடர்பு கொள்ள[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30665
மதிப்பீடுகள் : 5530

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 2:06 pm

ஞானக்கண் கண்ட காட்சி என்று உள்ளது அல்லவா அதற்குக் கீழே உள்ள பாடலில்......
avatar
ayyaasamy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 2:12 pm

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டு டையார்
தலைவர் அன்னவர்க் கேசர னாங்களே

இப்படி தான் நான் பத்தாம் வகுப்பில் படித்தேன்...
avatar
ayyaasamy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 2:14 pm

எழுத்துப்பிழையுடன் வரும்போது, அதன் சொற்சுவையும் பொருட்சுவையும் சிதைந்து விடுகிறது...... இதை யாரும் கண்டுகொள்வதே இல்லை.
avatar
ayyaasamy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 2:30 pm

மேலும் பாடலில் கையாளப்பட்டுள்ள "பா"வின் சுவையும் குன்றிவிடுகிறது. நான் இதனை மட்டுமே குறை கூறவில்லை. பொதுவாகவே நம் தமிழ்ச் சொந்தங்கள் நம் மொழியினை இப்படித்தான் சிதைத்துக் கொண்டிருக்கிரார்கள்.
avatar
ayyaasamy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 2:38 pm

என்னதான் நாம் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதினாலும் கூட இந்தத் தருணத்திலே நாம் இதிலும் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து...
avatar
ayyaasamy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by கலைவேந்தன் on Sat Nov 13, 2010 2:38 pm

உங்கள் கருத்துக்கு நன்றி ஐயாசாமி... திருத்தப்பட்டுவிட்டது.. இனி அமைதி காருங்கள்..நன்றி வணக்கம்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 2:45 pm

என்ன நாகரீகம் அய்யா இது? முகத்தில் அடிப்பதுபோல் பேசுகிறீர்களே.....
avatar
ayyaasamy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by கலைவேந்தன் on Sat Nov 13, 2010 2:52 pm

ayyaasamy wrote:என்ன நாகரீகம் அய்யா இது? முகத்தில் அடிப்பதுபோல் பேசுகிறீர்களே.....


என்ன முகத்தில் அடிப்பது போல் இருக்கிறது ஐயாசாமி..? எந்த நாகரிகம் எனக்கு கற்றுக்கொடுக்கப்போகிறீர்கள்..?


கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by உதயசுதா on Sat Nov 13, 2010 2:57 pm

[quote="ayyaasamy"]என்ன நாகரீகம் அய்யா இது? முகத்தில் அடிப்பதுபோல் பேசுகிறீர்களே...
கலை சொன்னதில் என்ன அநாகரீக்த்தை கண்டுபிடிச்சுட்டீங்க அய்யாசாமி சார்.ஈகரைய பொறுத்த மட்டில் நீங்க ஒரு தடவை தவறை சொன்னாலே திருத்திவிடுவோம்.நீங்க ஒரே பதிவுல என்ன தப்பு இருக்கு,எப்படி சரியான பாடல் வரிகள் இருக்கும் என்பதை சொல்லாமல் ஒவ்வொரு பதிவா தப்பு,தப்பு என்பதை மட்டும் வரிசையாக சொல்லி கொண்டு இருந்தீர்கள்.அது மட்டும் எந்த நாகரீகத்தில் சேர்ந்தது என்பதை சொன்னால் நல்லா இருக்கும்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by கலைவேந்தன் on Sat Nov 13, 2010 3:02 pm

நான் வினவ எண்ணிய வினா இது சுதா.. தொடர்ந்து பல பதிவுகளாக ஒரே கருத்தை வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்தார்.

நான் இத்திரியைக் கண்டதுமே முதல் வேலையாக அந்த பாடலை சரி செய்துவிட்டு’’ திருத்தப்பட்டுவிட்டது ... அமைதிகாருங்கள் ந்ன்றி வணக்கம் ‘’ என்று கூறியதில் அநாகரிகம் கண்டுபிடித்து விட்டார்..!

இளம் வயது.. காலம் செல்லச் செல்ல அனைத்தும் கற்றுக்கொள்வார்... !

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ஹாசிம் on Sat Nov 13, 2010 3:05 pm

எந்த ஒரு பிழையினையும் திருத்துவதற்கும் நாகரிகம் தேவை ஐயாசாமி சார். தாங்கள் பிழை கண்டீர்கள் என்றால் அதனை இப்படித்தான் திருத்த வேண்டும் என்றில்லை
உண்மையான தமிழ்பற்றாளராக இருந்தால் எமது வரிகளையும் உலகம் காண்கிறது என்ற எண்ணமிருந்திருந்தால் உங்கள் திருத்தங்களைக்கூட அடக்கி வாசிக்கலாமே தோழரே..

வேண்டாமே வாதம்

சுட்டிக்காட்டுங்கள் கண்டிப்பாக அது அவசியம்
அதனைக்கூட நாகரீகமாக செய்வதில் அனைவரும் தொண்டாற்றலாம் தமிழுக்காக...

நன்றி
மனம் வருந்தாதீர் சொல்லத்தோண்றியதை சொன்னேன்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by nandhtiha on Sat Nov 13, 2010 3:24 pm

அனைவருக்கும் வணக்கம்
என் கருத்தைப் பதிவு செய்யலாமா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by ayyaasamy on Sat Nov 13, 2010 3:26 pm

unmaithaan oppukkolgiren....... thirumba thirumba sonnathan kaaranam. enakku intha thalathinai innum muzhumaiyaaga payanbadutha theriyathathu than.. melum enakkuk kanippori arivum satru kuraivu....... athanaal thaan ippadi nadanthu vittathu........
avatar
ayyaasamy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by கலைவேந்தன் on Sat Nov 13, 2010 3:27 pm

தாராளமாக நந்திதா அவர்களே... இது கருத்துச் சுதந்திரம் உள்ள தளம் தான்..! வரவேற்கிறேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by உதயசுதா on Sat Nov 13, 2010 3:27 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
என் கருத்தைப் பதிவு செய்யலாமா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
என்ன நந்திதா அக்கா இப்படி ஒரு வார்த்தைய கேட்டுபுட்டிங்க
உங்களுக்கு இல்லாத உரிமையா
.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by கலைவேந்தன் on Sat Nov 13, 2010 3:32 pm

ayyaasamy wrote:unmaithaan oppukkolgiren....... thirumba thirumba sonnathan kaaranam. enakku intha thalathinai innum muzhumaiyaaga payanbadutha theriyathathu than.. melum enakkuk kanippori arivum satru kuraivu....... athanaal thaan ippadi nadanthu vittathu........

உண்மைதான் ஒப்புக்கொள்கிறேன்.... திரும்ப திரும்ப சொன்னது தான் காரணம். எனக்கு இந்த தளத்தினை இன்னும் முழுமையாக பயன்படுத்த தெரியாதது தான்...மேலும் எனக்கு கணிப்பொறி அறிவும் சற்று குறைவு.. அதனால் தான் இப்படி நடந்துவிட்டது...

பரவாயில்லை நண்பரே... தளத்தினை முழுதும் சுற்றிப்பாருங்கள்.. யார் யார் என்ன பங்கேற்பு செய்து இருக்கிறார்கள் என்பதை கண்டறியுங்கள்.. உதவி தேவைப்படின் தயங்காது தொடர்புகொள்ளுங்கள்..

அன்பான வாழ்த்துகள் ஐயாசாமி..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by nandhtiha on Sat Nov 13, 2010 3:34 pm

அன்புச் சகோதரிக்கு வணக்கம்
ஒரு குழு வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்த அவையின் அனுமதி இன்றித் தலையிடுவது சங்கடமான விடயம். வீடணன் சரணாகதி கேட்டு வருகிறான். வானரர்கள் (என் கருத்து வான்+நரர்கள்) தங்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். எல்லோரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தவுடன் கருணைக் கடலான இராமன் அவையோரின் அனுமதி வேண்டுகிறான், இது வான்மீகத்தில் உள்ள ஒரு வாக்கியம். இராம சொல்லுகிறான் " கிஞ்சித் அஸ்தி மயா பாஷிதும்" பொருள் என்னாலும் சொல்லப் பட வேண்டியத் உள்ளது என்கிறான், எனவே தான் அவையின் அனுமதி கேட்டேன். ஈகரைக் குடும்பத்தில் நானும் ஒருத்தி என்பதில் பெருமை கொள்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum