ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 T.N.Balasubramanian

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்
 ayyasamy ram

என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
 ayyasamy ram

பென்குவின் பறவைகள்
 ayyasamy ram

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
 ayyasamy ram

காதல் என்பது…..
 ayyasamy ram

மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
 ayyasamy ram

உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
 ayyasamy ram

மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இராம காவியம்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து இராம காவியம்

Post by Admin on Tue Feb 17, 2009 11:56 pm

First topic message reminder :

இராம காவியம்

தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார்

[You must be registered and logged in to see this image.]

ஞானக்கண் கண்ட காட்சி


உலகம் யாவையுந் தாமுல வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே

avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down


வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Fri Apr 23, 2010 1:27 am

சம்பாதியை அரக்கன் என்று எண்ணி வாநரங்கள அஞ்சி ஓடின. அநுமார் வாநரங்களை தடுத்து நிறுத்தினார். "வாநர வீரர்களே என் அருமைத்தம்பி எப்படி மாண்டான்? அவன் அளவற்ற ஆற்றல் உடையவன். அவனைக் கொன்றவர் யார்?" என்று கேட்டார். அநுமார், "ஐயா சீதா தேவியை இராவணன் கவர்ந்து சென்றபோது ஜடாயு தடுத்துப் போர் புரிந்தார். இராவணன் சிவன் தந்த வாளால் ஜடாயுவைக் கொன்றுவிட்டான்" என்றார்.

இதனைக் கேட்ட சம்பாதி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். "இராம கைங்கர்யமாக உலகமாதா சீதா தேவியின் பொருட்டு மாண்ட என் தம்பி புண்ணியசாலி. இது வீரமரணம், தியாக மரணம். தவத்தால் என் தம்பி இந்த இனிய மரணத்தை எய்தினான்.

"அன்பர்களே என் பேர் சம்பாதி. என் தம்பி ஜடாயு. நாங்கள் அருண பகவானுடைய மைந்தர்கள். நானும் என் தம்பியும் சூரியனைத் தரிசிக்கும் பொருட்டு வானில் பறந்தோம். என் தம்பி சூரிய வெப்பத்தைத் தாங்கமாட்டாமல் தவித்தான். நான் என் தம்பிக்கு நிழல் தந்தபோது என் சிறகுகள் எரிந்து விட்டன. நான் பெரிதும் வருந்தினேன். இராம தூதர்களாகிய வாநர பக்தர்கள் இராம நாமம் கூறினால் எரிந்த சிறகுகள் முளைக்கும் என்று அசரீரி வாக்கு உண்டாயிற்று. அன்று முதல் இன்று வரை உங்கள் வரவை எதிர்நோக்கி நின்றேன். நீங்கள் ராமநாமத்தை ஓதுங்கள், என் சிறகுகள் வளர்ந்து தழைக்கும்" என்றார்.

இதனைக் கேட்ட ராம பக்தர்கள் ஆகிய வாநர வீரர்கள் பக்தியுடன் "ராம, ராம, ராம, ராம" என்று ராமநாமத்தை ஓதினார்கள். அந்த மந்திர சக்தியால் சம்பாதிக்கு எரிந்த சிறகுகள் முளைத்தன. அவர் பறந்து மகிழ்ந்தார்.

இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்ட வாநரர் அதிசயம் அடைந்தார்கள். இராம பக்தியில் திளைத்து உள்ளம் உருகினார்கள். ராம நாமத்தால் எரிந்த சிறகுகள் முளைத்தனவே. இராம நாமத்தின் மகிமை என்னே என்று கூறிப் புகழ்ந்தார்கள் மகிழ்ந்தார்கள்.

சம்பாதி, "வாநர வீரர்களே உங்களுக்கு வணக்கம். சீதா தேவியை இலங்கையில் இராவணன் சிறை வைத்திருக்கின்றான். கழுகுகட்கு நீண்ட பார்வையுண்டு. நான் இங்கிருந்தே சீதா தேவியைக் காண்கின்றேன். இலங்கை நூறு யோசனை தூரம் உளது. இத்தனைப் பேருமே போக இயலாது. யாராவது ஒருவர் சென்று கண்டு திரும்புங்கள். உங்கட்கு நன்றி. என் குலத்தினரைக் காண நான் போகிறேன்" என்று கூறிவிட்டு வானில் பறந்து சென்றார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Apr 29, 2010 6:57 am

அசோக வனத்தில் மடக் கொடி


சம்பாதி வானிடை பறந்து சென்றபின், வாநர வீரர்களுக்கு இலங்கை மாநகரில் சீதாதேவி இருக்கின்றாள் என்பது புரிந்தது. அதனால், வறியவனுக்குப் புதையல் கிடைத்தது போல பெரு மகிழ்ச்சியடைந்தார்கள்.

இனி நாம் இலங்கைக்குப் போக வேண்டும். "நம்மில் போக வல்லார் யார்?" என்று வாநர வீரர்கள் சிந்தித்தார்கள். சிறந்த வாநர வீரர்கள், "நூறு யோசனை பரப்புள்ள கடலை எங்களால் கடப்பது இயலாது" என்று தங்கள் இயலாமையைக் கூறினார்கள்.

நீலன் என்ற சேனைத் தலைவன், நான் எழுபத்தைந்து யோசனை தூரம் தாண்டுவேன் என்ற யோசனை இல்லாமல் சொன்னான். பேராற்றல் படைத்த அங்கதன். நான் நூறு யோசனையும் தாண்டி விடுவேன். திரும்பி வர இயலாது என்றாள். ஜாம்பவந்தன இந்தச் சிறிய கடலை நான் வாய்க்காலைத் தாண்டுவதுபோல், எத்தனை முறை வேண்டுமானாலும் தாண்டுவேன். ஆனால், இப்பொழுது இயலாது. எனக்கு இளமைபோய் முதுமையடைந்திருக்கிறது. நாராயணர் திரிவிக்கரம அவதாரம் எடுத்து உலகை ஓரடியாக அளந்தபோது நான் வெற்றி முரசு அறைந்து உலகாத்தை வலம் வந்த போது, மேரு மலையின் காலிடறி வீழ்ந்து ஊனமுற்றேன். ஆதலால், இப்பொழுது என்னால் இயலாது என்று கூறினான்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Apr 29, 2010 6:59 am

அநுமன் ஆற்றல்


எல்லாரும் இவ்வாறு கூறியபோது அநுமார் ஒன்றும் பேசாமல் சும்மா இருந்தார். தங்கமணிக்கு ஓசை யிருக்காது, வெங்கலமணிக்கு ஓசையிருக்கும், பச்சோலைக்கு ஓசையிருக்காது. உலர்ந்த சருக சலசல என்று ஒலிக்கும். கையாலாகாதவர்கள் வாய்ச்சொல் வீரராக, கடலைக் குடிப்பேன், மலையை இடிப்பேன், வானில் பறப்பேன் என்ற வாய்ப்பறையறைவார்கள். ஆனால், கையால் ஒன்றும் ஆகாது, அதுபோல், எல்லாரும் பேச, அறிவும் ஆற்றலும் ஒருங்கே படைத்த ஆஞ்சயேர் மௌனமாக இருந்தார். அவருக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்பது அவருக்கே தெரியாது.

ஜாம்பவான் அநுமாரை நோக்கி அடியில் வருமாறு கூறத் தொடங்கினான்.

"அநுமனே * உன்னை அஞ்சலிக்கிறேன். எல்லாருடைய தலையிலும் எழுதி விதிக்கின்ற பிரமதேவர் மாயினும் மாயாத மிகுந்த வாழ்நாளையுடைவரே * சிரஞ்சீவிகளில் ஒருவரே * நீர் கல்லாத கல்லையில்லை. தருமங்களை அதிநுட்பமாக நீர் அறிந்தவர். தங்களைக் கண்டு கூற்றுவனும் அஞ்சுவான். காலனை உதைத்த ஆலமுண்ட நீலகண்டனைப்போல் யாரையும் அடக்கும் பேராற்றல் படைத்தவர். உமக்கு ஐம்பூதங்களாலும் அழிவு கிடையாது. தெய்வப் படைக்கலன்களினால் உமக்கு மரணம் கிடையாது. உமக்கு நிகர் நீர்தான். அண்டத்துக்கு அப்பாலும் குதிக்க வல்லவர். சூமருமலைக்கும் மேம்பட்டு உயரமாக நிற்கும் தன்மையுடையவர். அதேசமயத்தில் மழைத் தூறலுக்கு நடுவே சென்று உடம்பு நனையாமல் செல்லக்கூடிய வல்லமையுடையவர். இந்த மண்ணுலகத்தை ஒரு கையால் எடுக்க வல்லவர். இங்கிருந்து சூரியனையும் தீண்டும் திறனுடையவர். நீதி நெறியில் நின்றவர். மனத்தாலும் மாதரைத் தீண்டாதவர். வேதங்கள் அனைத்தையும் ஓதியுணர்ந்தவர். ஊழியையுங் கடந்தவர். அடுத்துப் பிரமதேவனாக வரும் தகுதியுடையவர். தங்களால் ஆகாது யாதொன்றும் இல்லை. தங்களுடைய பேராற்றலுக்கு இந்தப் பெருங்கடல் வாய்க்கால் போன்றது. ஆகவே, தாங்கள் சென்று பிராட்டியைக் கண்டு மீண்டு வந்து இராமருடைய கவலையை மாற்றி வாநர குலத்திற்குப் பெருமையைத்தர வேண்டும்" என்றான்.

இவ்வாறு, ஜாம்பவான் கூறிய புகழுரையைக் கேட்டு ஆஞ்சநேயர் நாணத்தோடு நின்றார். அறிஞர்கள் தம்மைப் புகழ்வதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒருவர் புகழ்ந்தாலும் நாணுவார்கள். வாநர வீரர்களை வணங்கி, வீரர்களே * இராமபிரானுடைய கருணையும் உங்கள் ஆசியும் எனக்கு இரு சிறகுகளாகத் துணை செய்யக் கடலைக் கடந்து கவலையையுங் கடந்து எம்பிராட்டியைக் கண்டு மீளுவேன் என்று கடலைக் கடப்பதற்கு ஆயத்தமாகிப் பேருருவுடன் நின்று காட்சியளித்தார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Apr 29, 2010 7:00 am

சுந்தர காண்டம்


அநுமார் நின்ற காட்சி உலகத்தை ஓரடியாக அளக்க திருமால் எடுத்த விசுவரூபம்போல் இருந்தது. இரண்டு கால்களையும் ஊன்றி "இராமா" என்று வானத்திலே பாய்ந்தார். அந்த மகேந்திர மலையே நடுங்கிற்று. விண்ணவர்கள் மலர் மழை பெழிந்தார்கள். இரண்டு கரங்களை முன்னே நீட்டி இருந்தது. இராமலட்சுமணர்கள் அவருக்கு துணை வருவதுபோல் இருந்தது. பின்னே தொங்கிய வலிமை நிரம்பியவால் இமயனுடைய பாசக்கயிறு ஒளிந்து கொண்டு இலங்கைக்குப் போவதுபோல் இருந்தது. அநுமார் விண்வழியில் வேகமாகச் செல்லும்பொழுது மைந்நாகம் என்ற மலைமேலெழுந்து அவருக்கு உதவி செய்ய வந்தது.

மைந்நாக பர்வதம் இந்திரன் வச்சிரப் படையால் மலைகளின் சிறகுகளை அரிந்தபோது வாயு தேவனால் கடலில் தள்ளி உதவி பெற்றது. வாயுதேவன் செய்த உதவிக்காக வாயுதேவன் மகன் அநுமாருக்கு உதவி செய்ய வந்தது. அநுமார், நான் இராம கைங்கர்யமாகச் செல்லும்பொழுது வழியில் தங்குவது நன்றன்று. உன் அன்புக்கு நன்றி என்று கூறிவிட்டு விண்வழியே சென்றார்.

சுரசை என்ற தேவமாது தேவர்களின் வேண்டுகோளின்படி அநுமாருக்கு நலஞ்செய்யும் பொருட்டு விண்ணில் மிகப்பெரும் வாயைப் பிளந்து நின்றாள். அநுமார் பெண்பிள்ளைக்கு இவ்வளவு வாயா என்று பரிகசித்து, ஒரு கணத்துக்குள் சிறிய உருவுடன் அவள் வாயில் நுழைந்து வெளிப்பட்டார். அவர் அமிர்தமயம் ஆனவள், அதனால் அநுமாருக்கு அமிர்த சம்பந்தம் உண்டாயிற்று. பின்னர். வழியில் அங்காரத்தாரை என்று பேர் பெற்ற கொடிய அரக்கி எதிர்ப்பட்டாள். இவள் பிராணிகளின் நிழலைப்பற்றியே அந்தப் பிராணிகளை உண்ணும் ஆற்றல் படைத்திருந்ததால் சாயாக்கிரகிணி என்ற பேரும், சிம்மிகை என்ற பேரும் படைத்தவள். ஆலகால நஞ்சை விடக் கொடியவள். இவள் விண்ணுக்கும் மண்ணுக்கும் எல்லையாகப் பெருவாயைப்பிளந்து நின்று அநுமாரைத் தடுத்தாள். பேராற்றல் படைத்த அநுமார் அவள் வாயில் புகுந்து பேருருக்கொண்டு அவள் வாயையும் வயிற்றையும் கிழித்துக்கொண்டு வெளிப்பட்டார். சாயக்கிரகணி மாண்டொழிந்தாள்.

அநுமார் இராம நாமத்தை இடையறாது செபித்துக் கொண்டு சென்றார். எனக்கு வழியில் இடர் அனைத்தும் நீங்க உதவுவது இராமநாமம் ஒன்றே ஆகும். என்னால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இராமபிரானது கருணையே யாகும் என்றெண்ணி இலங்கையில் உள்ள பவள மலையில் இறங்கினார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Apr 29, 2010 7:01 am


தேவியைத் தேடுதல்


அநுமார் இலங்கையின் எழிலைக் கண்டு வியந்தார். அங்குள்ள வீடுகள் அனைத்தும் நவரத்தினங்கள் இழைத்து உவகைக் கடலைத் தந்து ஓங்கி நின்றன.

அந்நகர் ஆடலும் பாடலும் ஊடலும் கூடலும் அன்றி வாடலும் வருந்தலுமின்றி இன்ப வெள்ளத்தில் மிதந்து நின்றது.

அநுமார் சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டார். எங்கும் இருள் சூழ்ந்தது. இலங்கையில் தேவர்கள் எழுதிய சித்திரம் பேல் சென்று காலங்கடந்து வருவதைக் குறித்து இராவணன் சீறுவானே என்றஞ்சி, மேல் ஆடை சரிய ஓடுகின்ற காட்சியை அநுமார் கண்டார். அப்பொழுது சந்திரன் உதித்தான்.

இலங்கையின் மதில்களின் உயரத்தையும் நுழைவாயிலின் திறத்தையும் அங்குக் காவல் செய்கின்றவர்களின் தரத்தையும் பார்த்து வியப்புற்றார். மதிலின் மீதேறித் தாவுவதற்கு முயன்றார். இலங்கையைக் காவல் செய்யும் நகர தேவதையாகிய இலங்கா தேவி அநுமாரை முன்னே செல்லவிடாமல் தடுத்தாள். நான்கு சிரங்களும் ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களும் உடைய அவள் "ஏ குரங்கே, என் அனுமதியின்றி உள்ளே நுழையக் கூடாது" என்று தடுத்தாள். "இந்த ஊரில் மூவரும் தேவரும் நுழைய அஞ்சுவார்கள். இலைகளையும், மலர்களையும் தின்கின்ற வாநரமாகிய நீ என் அனுமதியில்லாமல் போகலாமா?" என்று கூறினான்.

"அநுமார், காவற்காரியே * ஊர் பார்க்கும் ஆவலுடன் செல்லும் என்னை ஏன் தடுக்கின்றாய்? நான் சென்றால் உனக்கு என்ன இழவு நேரும்?" என்றார். இலங்கனி அநுமார் மேல் சூலத்தை எறிந்தாள். அநுமார் அந்தத் திரிசூலத்தைப் பிடித்து ஒடித்து அவள் முகத்தில் எறிந்தார். அவள் எறிந்த ஆயுதங்களையெல்லாம் ஒடித்துத் துகளாக்கினார். தன்னையடிக்க வந்த இலங்காதேவியின் எட்டுக் கைகளையும் பற்றி, அநுமார் ஓங்கியடித்தார். அவள் இடியேறுண்ட நாகம் போல் கீழே விழுந்தாள்.

அவள் எழுந்து அநுமாரைத் தொழுதாள். "ஐயனே, நான் இலங்கையின் காவல் தெய்வம். பிரம தேவருடைய கட்டளையினால் இந்நகரைக் காவல் செய்து கொண்டிருந்தேன். ஒரு குரங்கினால் நீ தாக்கப்படும் வரை இந்தக் காவல் தொழிலைச் செய்வாய்" என்று கூறியிருந்தார். ஆதலினால், என் காவல் தொழில் நிறைவு பெற்றது. நான் விண்ணுலகம் போகின்றேன்.

"உனது வீரத்தைக் காட்டி அசுர குலத்தை வாட்டி, உன் புகழை நீட்டிச் செல்லுக" என்று கூறிவிட்டு வானிடை சென்றாள்.

அநுமார் மதிலேறிக் குதித்து நகருக்குள் சென்றார். எங்கும் எம்பிராட்டியாரை தேடுவாரானார்.

ஓருவனுக்கு சுகம் முன் செய்த தவத்தினால்தான் எய்தும். தவம் செய்யாமல் சுகத்தை நாடுவது இரும்பை விதைத்துக் கரும்பை நாடுவது போலாகும். தவஞ்செய்தவர்கள் எல்லா நலன்களும் பெற்ற இனிது வாழ்வார்கள். இதில் யாருக்வாவது சந்தேகம் இருந்தால் இந்த இலங்கையிலே வந்து பாருங்கள். கதிர்போல் இருக்கின்ற கரிய அரக்கிமார்களை இடையே இல்லாத பொன்மேனியுடைய தேவ மாதர்கள் நீராட்டுகிறார்கள். இது அவர்கள் தவத்தால் விளைகின்றது.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Apr 29, 2010 7:02 am


கும்பகர்ணன்


கும்பகர்ணன் துயிலுகின்ற மாளிகைக்கு அநுமார் சென்றார். அவனுடைய நாசியிலிருந்து வரும் யுகாந்த காலத்து மாருதம் போன்ற மூச்சுக்காற்றும் இவரை ஈர்த்தது. நாசிவரை சென்று பெருமுயற்சி செய்து, காற்றிலிருந்து விலகிக் கொண்டார். அந்த மாளிகையிலுள்ள மேiஜகள், நாற்காலிகள், அண்டாக்கள், குண்டாக்கள் எல்லாம் அவன் மூச்சுக் காற்றினால் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தன. அவனுடைய மிகப் பெரிய உடம்பையும் வலிமையையும் பார்த்து, இவன் இராவணனோ என்ற ஐயுற்றார். பத்துத் தலைகள் இல்லாமையினால் இவன் இராவணன் இல்லன் எனத் தெளிந்தார். இவன் எழுந்து போருக்கு வந்தால் கதி என்னாகும்? நமது வாநர சேனைகளைப் பொரிக்கடலை உண்பது போல இவன் உண்பான். இவன் இராம சரத்தால் மாண்டொழிவான் என்ற பலப்பல சிந்தித்தார்.

அங்கிருந்து வேறு பக்கமாகச் சென்றார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Apr 29, 2010 7:02 am

விபீஷணர்

பயம் இல்லாதவன் என்று பொருள். இது சிவபெருமானுடைய ஆயிரம் நாமங்களில் ஒன்று. ஓம் விபீஷணாய நம, சிவபெருமான் ஒருவர்தாம், அச்சம் இல்லாதவர். நமக்கெல்லாம் இயம் பயம் உண்டு. சிவபெருமான் இயமனை உதைத்த காலகாலன் ஆவார். நாமெல்லாம் நடுங்குகிற நஞ்சை அவர் உண்டார். நமக்கு அச்சத்தைத் தருகின்ற மயானத்தில் அவர் இருக்கின்றார். நாம் அச்சப்படுகின்ற அரவுகளை அணிகலனாகக் கொண்டவர். நாம் பயப்படுகின்ற பேய்களுடன் இருந்து ஆடுபவர். நம்மையெல்லாம் சுடுகின்ற நெருப்பை அவர் கையில் ஏந்தியவர். ஆதலால், சிவமூர்த்தி - விபீஷணா என்று பேர் பெற்றார்.

விச்சிரவசு என்ற முனிவர் தம் மகனாகிய இவனுக்கு விபீஷணன் என்று சிவ நாமத்தைச் சூட்டினார். இவர் நீதியில் நின்றவர், பொறிபுலன்களை வென்றவர், இவருடைய தவப் புதல்வி திரிசடை தேவிக்கு ஆறுதல் சொல்லித் தேற்றி வருபவள். அந்த விபூஷணர் வீட்டில் சென்று தேடினார். மற்ற வீடுகளில் மதுக்குடங்களைக் கண்டார். இங்கே பூiஜக்குரிய பன்னீர்ப் பாட்டில்களையும், பால், தேன் பஞ்சாமிர்தங்களையும் கண்டார். விபீஷணரது முகத்தில் கருணை குடிகொண்டிருப்பதைக் கண்டார். இவர் நல்லவர் என்று கருதினார். விபீஷணரது தோற்றம் தரும தேவதை கருநிறத்தோடு ஒளித்து வாழ்வது போல் இருந்தது.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Apr 29, 2010 7:03 am

இந்திரசித்து

அநுமார் புகை நுழையாத சிறிய இடங்களிலும் நுழைந்து தேவியைத் தேடினார். பலப்பல இளம் பெண்கள் ஆடுவதும் பாடுவதுமாக அங்கு இருந்தனர். பலர் படுத்து உறங்கினார்கள். அவர்களையெல்லாம் பார்த்து ஒரு மாளிகைக்குள் நுழைந்தார். அங்கே ஆறுமுக கடவுள் ஒரு முகத்துடன் உறங்குவதுபோல் உறங்கிக் கொண்டிருந்த இந்திரசித்துவைக் கண்டார். அவன் முகத்தில் வீரமும், தோள்களில் கம்பீரமும் நிகழ்ந்தன. இவன் மிகச் சிறந்த வீரன். இவனுடன் இராம லட்சுமணர்கள் பலநாள் போர் செய்ய வேண்டிவரும் என்று கருதினார்.

அட்சகுமாரன், அதிகாயன், மகரதக் கண்ணன் முதலிய பலவீரர்களின் மாளிகையைக் கண்டு தேடிச் சென்றார்.

நடு அகழியையும் மதிலையும் கடந்து இராவணனுடைய பொன்மாளிகையை அடைந்தார்.
அதனருகில் வித்தியாதர மாதர் வீடுகளிலும் அரக்க மாதர் வீடுகளிலும், சித்த மாதர் வீடுகளிலும் தேடிவ மயன் மகளாகிய வண்டோதரியின் இல்லத்தையடைந்தார். அவள் அழகிய மஞ்சத்தில் கவலையின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். இவள்தான் சீதையே என ஐயங் கொண்டார் அநுமார். இராமபிரான் சொன்ன அடையாளங்களில் பல அவளிடம் இருந்தன. அவள் ஏதோ வாய் பிதற்றுவதைக் கேட்டார் * வடவாக்கினி போன்ற கற்புடைய எம்பிராட்டி இவள் அல்லன். தேவி இங்கே இருக்கமாட்டாள். இவள் இராவணன் மனைவியே என்று சந்தேகம் தெளிந்தார்.

தனிமையில் நின்று சிந்திக்கின்றார். "இறைவனே * ஏழு நூறு யோசனை பரப்புள்ள இலங்கை முழுவதும் அணுவணுவாகத் தேடினேன். ஏம்பிராட்டியைக் கண்டேனில்லை. கொடுந் தொழிலைச் செய்யும் இராவணன் எம்பிராட்டியைக் கொன்று விட்டானோ? இரக்கமில்லாத அரக்கன் தேவியைத் தின்று விட்டானோ? வேறு உலகத்தில் சிறை வைத்திருக்கிறானோ? ஒன்றும் எனக்குப் புரியவில்லை. நான்போய் எம்பெருமானுக்கு என்ன சொல்லுவேன்? நான் எப்படியும் சீதையைப் பார்ப்பேன் என்றெண்ணிக் கணையாழியை என்பால் கொடுத்தார். உலக மாதாவை நான் கண்டு வருவேன் என்ற காகுத்தன் நம்பியிருக்கின்றார். தேவியைக் கொண்டு வருவேன் என்று வாநர வேந்தனாகிய சுக்ரீவன் நம்யிருக்கின்றான். சீதையைக் காணவில்லையென்று ரகுவீரனிடம் கூறுவது முறையன்று. இராவணாதி அரக்கர்களைக் கொன்று அவர்களோடு நானும் மாண்டு ஓழிவேன்.

தேவியை எப்படிக் காண்பேன்? வலிமை மிகுந்த இராவணனைப் பிடித்து என் கரதலத்தால் அடித்து அவன் எலும்பை ஒடித்து தேவியை எங்கே ஒளித்து வைத்தாய்? காட்டுதி, எங்கே வைத்தாய் காட்டுதி? என்று அவன் மூலமாகவே அறிந்து கொள்ளட்டுமா? இந்த அழகிய நகரம் எரிய தீ வைத்து கொளுத்தட்டுமா? இலங்கையில் சீதை இருக்கின்றாள். நான் இங்கிருந்தே பார்க்கின்றேன் என்று சம்பாதி கூறினாரே. அவர் உரையும் பொய்யாகிவிட்டதே * இந்த இலங்கையை எடுத்துக் கடலிலே கரைந்து விடட்டுமா? இராவணனைக் கொன்று யானும் என் வாழ்நாளை முடித்துக் கொள்வேன் என்று எண்ணி மேல் திசையைப் பார்த்தார். அங்கு ஒரு சிறிய விளக்குடன் கூடிய அழகிய அசோகவனத்தைக் கண்டார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Thu Apr 29, 2010 7:03 am

அசோகவனம்

இங்கே எம்பிராட்டி ஒருகணமேதும் தூங்காமலும் கண்கள் இமைக்காமலும் துயரக்கடலில் மூழ்கி உள்ளம் வெந்து நொந்து இருந்தாள். தூக்கம் என்பது யாரையும் வாட்டி வதைக்கும்.

ஒரு நண்பன் ஓய்வு பெறக் கருதி தன் ஆருயிர்த் தோழனின் செல்வ மாளிகைக்குச் சென்றான். அவன் இவனை அன்போடு வரவேற்று நல்லுணவு நல்கி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு பெறுமாறு ஏற்பாடு செய்தான். அத் தனிமாளிகையில் உயர்ந்த பஞ்சனை, நறுமணம் வீசும் வத்திகள், அழகிய படங்கள், நட்சத்திரங்களைப் போன்ற சிறிய விளக்குகள், செய்தித்தாள்கள், சிற்றுண்டிகள், இனிய நூல்கள் எல்லாம் இருந்தன. வந்த நண்பன் சிற்றுண்டிகளை உண்டு செய்தித்தாள்களைப் படித்து அயர்ச்சி நீங்க, உயர்ச்சி பெற்ற படுக்கையில் படுக்க முயன்றான். அந்த வீட்டின் தலைவனான நண்பர் சன்னல் புறம் வந்து நண்பரே * சுகமாகத் தூங்குகள், உங்களுக்கு இங்கு ஒரு குறையும் இல்லை. தாய்ப்பாலைத் தவிர, மற்ற எல்லாம் இங்கு இருக்கின்றன. நான் அயலூர்போய் விடியற்காலை வந்துடுவேன். இது உங்கள் சொந்த இல்லம். இங்கு எந்த விதமான சத்ததும் வராது. அமைதி நிலவிய அழகிய அறை, ஒரு விஷயம், ஆறடி நீளம் ஒரு பெரிய கருநாகம் இந்தச் சன்னல் வழியாக வந்து அந்தச் சன்னல் வழியாகப் போகும். அது எந்த நேரத்தில் வரும் என்று சொல்ல இயலாது. நேற்று இங்குப் படுத்திருந்த மூன்று பேரை கடித்துக் கொன்றுவிட்டது. ஆதலால், தாங்கள் எச்சரிக்கையாகச் சுகமாகத் தூங்குகள். என்று கூறிவிட்டுச் சென்றார். வந்த நண்பனுக்கு உறக்கம் வருமா? எந்த நேரத்தில் கருநாகம் வருமோ எனற ஏக்கந்தானே வரும்? தூக்கம் வராது.

இராவணனாகிய கருநாகம் எந்த நேரத்தில் வருமோ? இது அவனுடைய இடம். எந்த நேரத்திலும் வரக்கூடும். அவனைத்தடுப்பார் இல்லை என்று எண்ணுகின்ற எம்பிராட்டிக்கு உறக்கம் வராதுதானே *

பிராட்டி தனக்குள் சிந்திக்கின்றாள். இந்தக் காவல் நிறைந்த இடத்தை விட்டு நான் வெளியேறுவது எளிதன்று. என்னை இந்தக் கொடிய அரக்கன் சிறை செய்திருப்பது ஆதித்தன் குலத்துக்கல்லவா இழுக்கு? வேதங்களின் நாயகனாகிய எம்பெருமான் வருவார், காட்சி தருவார் என்று எண்ணி நான்கு திசையும் நோக்குவாள். பவளத்தால் செய்தது போன்ற இராமருடைய கரங்களையும், கால்களையும் கொண்டு நீலமேகம் போல் விளங்கும் கருணையுருவை எண்ணுந்தோறும் நீண்ட கண்களில் இருந்து வழியும் கண்ணீரினால் தான் உடுத்தியிருந்த மெல்லிய புடைவை நனைந்துவிடும். புடைவை நனைந்தால் மாற்றிக் கட்டிக்கொள்ள வேறு புடைவை இல்லை. உடம்பிலுள்ள ஜாடராக்கினி வெப்பத்தால் நனைந்த புடைவை உலருகிறது. மீண்டும் நனைகிறது. மீண்டும் உலருகிறது. இப்படி நனைவதும் உலருவதுமாக இருந்தது. மெல்லிய புடைவையை மீண்டும் மீண்டும் உடுப்பதே அன்றி வேற ஒன்றையும் அறியாள். உடுத்தியிருக்கிற புடைவையை மீண்டும் மீண்டும் உடுப்பதற்குக் காரணம் என்ன? உணவு இல்லாமையினால் தேவியின் உடம்பு விநாடிக்கு விநாடி இளைகின்றது. அதனால், புடைவை அவிழ்ந்து விடுகிறது. அவிழ்ந்த புடைவையை மீண்டும் மீண்டும் உடுக்கின்றாள். தேவி நீராடுவதையும் துறந்து உணவையும் மறந்து., துன்பக் கடலில் வீழ்ந்து தவிக்கின்றாள். மன்மதன் அமிழ்தத்தில் வரைந்த ஓவியம் கற்பூரப் புகைபட்டு மங்கியிருப்பதுபோல் இருந்தாள்.

தமையனாரைத் தேடிச் சென்ற இலட்சுமணர் தம் தமையனாரைச் சந்திக்கவில்லையோ? இந்த இலங்கை கடலின் நடுவில் இருக்கின்றது என்ற என் கணவரும், மைத்துனரும் அறியவில்லை போலும். என்னை இந்தக் கொடிய அரக்கன் இங்குச் சிறை வைத்த தன்மை தெரியாமல் இருக்கின்றார்களோ? என்னை இராவணன் கவர்ந்த வந்ததைப் பறவை வேந்தரகிய ஜடாயு பகவான் ஒருவரே பார்த்தார். அவரை அரக்கன் சிவன் தந்த வாளல் சிறகுகளை வெட்டி விட்டான். அவர் என்னடைய நிலையை மைந்தர்களுக்குச் சொல்லாமல் இறந்து விட்டாரோ? அவர் சொல்லவில்லையானால் என் நிலைமையை யார் சொல்ல வல்லார்?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Wed Jun 02, 2010 1:08 am

வள்ளல் வழங்கிய கணையாழி

அசோக வனத்திலிருந்தே அன்னை சீதா பிராட்டிக்குப் பழைய நினைவுகள் தொடர்ந்து வந்தன. மாரீசன் சீதா லட்சுமணா என்று புலம்பிய பொய்ம்மொழியை மெய்ம்மொழியாக எண்ணி, இலட்சுமணா அண்ணனுக்கு ஆபத்து நீ போய் துணை செய் என்று அவரை மனம் நோக வைத்தேன். நான் வைத கொடுஞ்சொற்களை இலட்சமணர் தமையனாருடன் கூற, என் அருமைத் தம்பியை வைத இந்தக் கொடியவள் என்று என்னைத் துறந்து விட்டாரோ? என்னை மறந்து விட்டாரோ? முற்பிறப்பில் ஒற்றுமையாக வாழ்ந்த தம்பதிகளை நான் பிரித்து வைக்க அந்த வினை இப்பொழுது வந்து மூண்டதோ? இப்படிப் புண்ணில் எரி நுழைந்தது போல் புழுங்கி வேதனைப்படுகின்றாள்.

மெல்லிய கீரைகளை நெருப்பில் வாட்டிப் பக்குவமாக என் கணவனாருக்கு வேளை தவறாமல் உணவு தருவேனே. நான் இல்லாதபோது அப்பரம தயாள மூர்த்திக்கு யார் தரப் போகிறார்கள்? அவரைத் தேடி விருந்தினர்கள் வந்தபோது, அவர் என்ன துன்பத்தை அடைவாரோ? விருந்தினரை உபசரிக்க முடியவில்லையே என்று வேதனைப்படுவாரோ என்றெல்லாம் எண்ணினாள். தான் இருந்த இடத்தில் செல்லரிக்கவும் எழாமல் துன்பக் கடலில் மூழ்கியிருந்தாள்.

கொடிய அரக்கர்கள் எல்லா உயிர்களையும் புடைத்துத் தின்கின்ற பாவிகள். இத்தனைக் காலம் சீதையை வைத்திருக்க மாட்டார்கள். கொன்று தின்றிருப்பார்கள் என்று எண்ணிச் சட்டி சுட்டது கை விட்டது என்று என்னை விட்டுவிட்டார்களோ? அல்லது தாயும் தம்பியரும் வந்து அழைக்கக் கானகத்தில் வாழும் காலமும் முடிகின்ற தருணம் ஆயிற்றே என்று அயோத்திக்குத் திரும்பிவிட்டார்களோ! ஆனால் தாங்கள் மேற்கொண்ட வனவாசம் பூர்த்தியாகாமல் நகருக்குப் போக மாட்டார்கள். என்ன நிகழ்ந்ததோ? யாதும் அறிகிலேன். என் கணவர் அருந்தவ சீலர், பெருங்குணக் குன்று. என்னுடைய துன்பத்துக்கு முடிவு எப்போது வருமோ? தவஞ்செய்ய வந்த கணவனாருக்குத் தொண்டு செய்ய வந்த நான், மானைப் பிடித்துக்கொடு என்று கேட்டதும் பிழையல்லவா? என் வினையை நான்தானே அநுபவிக்க வேண்டும்?

என் நாயகன் விருப்பும் வெறுப்பும் அற்றவர். தந்தையார் இந்த அரசு உனக்கு உரியது நாளை முடிசூட்டுவிழா என்று சொன்னபோதும், மாற்றாந்தாய் நீ சடைமுடியோடும் மரவுரியோடும் கானகம் போ என்று கட்டளையிட்டபோதும் இன்பமும் துன்பமும் இன்றிச் சித்திரத்தில் எழுதிய செந்தாமரை போல் இருந்த தன்மையை உடையவர். கரன் முதலிய வரபலம் உடைய பதினாலாயிரம் படைகளை மூன்று நாழிகைகளில் கொன்ற வில் திறத்தை எண்ணி வெதும்புவாள்.

கங்கா நதியில் ஓடம் விடுகின்றவனும் கல்வியறிவும் ஆசாரம் இல்லாதவனும் ஊனும் மீனும் உண்பவனுமாகிய ஏழை வேடனாகிய குகனை மார்புறத் தழுவி, நீ எனக்குத் தம்பி என்று சொன்ன கருணைத் திறத்தை எண்ணுவாள்.

திருமண சமயத்தில் இராமச்சந்திர மூர்த்தி தமது புனிதமான கரங்களால் தன் கரங்களைப் பற்றியதையும் அவருடைய மேலான கரங்களால் என் காலைப் பற்றி அம்மி மீது வைத்து வேதமந்திரங்களைச் சொல்லியதையும் நினைத்து நெஞ்சம் நெகிழ்கின்றாள்.

கணவனார் கானகத்துக்குப் புறப்படும்போது தனக்கே உரிய ஆடைகள் அணிகலகன்கள் பசுக்கள் முதலிய விலையுயர்ந்த பொருள்களை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்கின்றபொழுது, ஒரு வேதியனுக்கு ஆசை தணியாமல் மேலும் தரமாட்டாரா என்று ஆசையாய் விழுங்கப்பட்ட தன்மையைப் பார்த்துச் சிரித்த செய்கையை எண்ணுகின்றாள்.

சித்திரக்கூட மலையில் தங்கியிருந்த பொழுது, காலையுணவு தேடி இலட்சுமணர் வில்லையேந்திக் கொண்டு சென்றார். சீதையின் மடியில் பெருமான் தலைவைத்துச் சிறிது உறங்கி விட்டார். அப்போது இந்திரன் மகனாகிய ஜயந்தன் காகமாக வடிவெடுத்துப் பிராட்டியாரின் திருமார்பபைக் கொத்தினான். இராமர் வெகுண்டு அவர் கையில் ஆயுதம் இல்லாமையினால் படுத்திருந்த தர்ப்பைப் புல்லை உருவி மந்திரத்தைச் சொல்லி ஏவினார். அது இராம பாணமாகி அவனை விரட்டியது. அவன் எட்டுக் கோணங்களில் சென்றும், அவனுக்கு உய்வு கிடைக்கவில்லை. வேறு வழியின்றி ஙஇராகவா சரணம்ங என்று எம்பெருமான் திருவடியில் வீழ்ந்தான். பகவான் ஙமுடனே, பரதார கமனம் செய்யலாமா? உன் தந்தையாகிய இந்திரன் அகலிகையை விரும்பினான். அவன் மகனாகிய நீ பிறர் மனைவியைப் பேணுகின்ற பெரும் பாவத்தைச் செய்தனை. அடைக்கலம் என்று அடியில் வீழ்ந்த அற்பப் புறாவுக்கு உடல் தசையை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் பேரன் நான். அடைக்கலம் புகுந்தோரை ஆட்கொள்வது என் குலத்துக்கே உரிய பண்பு. நான் உன்னை மன்னித்து உயிர்ப்பிச்சை கொடுக்கின்றேன். ஆனால், இராமபாணம் வெறுமனே திரும்பாது. அதற்கு நீ ஒரு கண்ணைக் கொடுத்துவிடு என்று கூறிக் காககத்தின் ஒரு கண்ணைக் கவர்ந்தார். அன்று முதல் காகங்களுக்கெல்லாம் ஒரு கண்ணாக ஆயிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Wed Jun 02, 2010 1:08 am

இவ்வாறு, காதல் மனைவிக்குத் தீங்கு செய்த காகாசூரனுக்கும் கருணை பாலித்த இராமருடைய கருணா விலாசத்தை எண்ணியெண்ணிக் கண்ணீர் வடித்தாள்.

இவ்வாறு, புலம்புகின்ற சீதா தேவிக்கு விபீஷணருடைய புதல்வியாகிய நற்குண நங்கை திரிசடை, சீதைக்கு ஆறுதல் கூறி அன்புடைத் தோழியாக இருந்தாள். அவள் தாயினும் சிறந்த தயாவுடையவள். சீதாதேவி திரிசடையை நோக்கிக் கூறுகின்றாள்.

அன்புள்ள திரிசடையே! பெண்களுக்கு இடத்தோள், இடக்கண், இடப் புருவம் துடித்தால் நல்லது, வலப்பக்கம் துடிக்கக்கூடாது என்பர். ரகுநாயகன் விசுவாமித்திரருடன் மிதிலாபுரிக்கு வந்தபோது, எனக்கு இடப்பக்கம் துடித்தது. அம்மா, நான் கணவருடன் கானகம் வந்தபோது வலப்பக்கம் துடித்தது. இப்பொழுது இடந்துடிக்கின்றது. எனக்கு நன்மை வருமோ?

திரிசடை, அம்மா இப்பொழுது நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன. ஒரு பொன்வண்டு வந்து என் காதில் ஊதுகின்றது. இது இராமபிரானிடமிருந்து தூது வரும் என்பதை உணர்த்துகின்றது. அம்மா! என் பெரிய தந்தையாகிய இராவணன் தலையில் எண்ணெய் தடவிக் கொண்டு சிவப்பு ஆடையை உடுத்திக் கொண்டு பேய்களும், கழுதைகளும் பூட்டிய தேரில் ஏறிக்கொண்டு தென்திசை போகக் கனாக்கண்டேன். அசோகவனம் அழிவதாகவும், இலங்கை மாநகரம் பற்றி எரிவதாகவும் கனாக் கண்டேன். இராவணனுடைய அரண்மனையிலுள்ள பூரண கும்பங்கள் பொங்கிவரக் கனவு கண்டேன். வண்டோதரி முதலிய தாய்மார்களின் கழுத்திலிருந்து திருமாங்கலியங்கள் தானே அறுந்து விழுவதாகக் கனவு கண்டேன். இரண்டு சிறந்த சிங்கங்கள் வந்து இலங்கையை அழித்துவிட்டுச் செல்வதாகவும், இங்கிருந்த மயில் அச்சிங்களுடன் போவதாகவும் கனவு கண்டேன்.

சீதை இதனைக் கேட்டு மகிழ்ந்து, நல்ல கனவு கண்டனை, உன்னைப் பாதியில் எழுப்பி விட்டேனே மீண்டும் உறங்கி மற்ற கனவைக் காண்பாயாக என்று கூறினாள்.

அரக்கியர்- இராவணனுடைய கட்டளையின்படி சீதா தேவியைச் சூழ்ந்து பல அரக்கியர்கள் கொடுமைகள் செய்து கொண்டிருந்தார்கள். அந்த அரக்கிமார்கள் வயிற்றிலே வாயும், பருத்த வயிறும், அனப்பொறி பறக்கும் கண்களையும் உடையவர்கள். ஒரு தலையும் பத்துக் கையும் உடையவர்கள் சிலர், இருபது தலைகளையும் இரண்டு கைகளையும் உடையவர்கள் சிலர், சூலம், வாள், சக்கரம், அங்குசம், தோமரம், வேல் முதலிய ஆயுதங்களை ஏந்தியும் உள்ளவர் சிலர், யானை முகமும், புலி முகமும், கரடி முகமும், நாய் நரி முகங்களாகவும், கொடுமையே ஒரு வடிவமாக உடையவராகவும் ஆயிரம் அமாவாசைபோல் இருண்ட உடம்பும் திரண்ட தோள்களை உடையவராகவும் பலர் இருந்தனர்.

அவர்கள் சீதாப்பிராட்டியை நோக்கி, சீதை! உன் கண்ணைப் பிடுங்கிப் கழுகுகளுக்குப் போடுவோம், உன்னைத் துவையலாக அரைத்து விலங்குகளுக்கு விருந்து வைப்போம், ஏன் அழுகிறாய்? உன்னை யார் என்ன செய்தார்கள்? எங்கள் அரசராகிய இராவணனுக்கு அறிவே கிடையாது. விரும்பாத உன்னை அவர் விரும்புகிறாரே? என்ன மூடத்தனம்? முப்பது முழம் புடவை எங்களுக்கு ஒரு சுற்று வரும். எங்கள் பற்களின் இடையிடையே பேய்களும், நாய்களும் அபாயமில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும். இத்தகைய எங்களை அவர் விரும்பினால் நாங்கள் மனைவிகளாக இருக்க மகிழ்ச்சியடைவோம். மின்னாம்பூச்சிபோல் இருக்கின்ற உன்னைக் கண்டு அவர் விரும்புகின்றாரே, அவருடைய அறிவின்மையை யாரிடம் சொல்வது? எங்கள் அரசர் வந்தால் வாருங்கள் இருங்கள் வணக்கம் என்று சொல்லு. ஒன்பது மாதங்களாக அழுது நீ என்ன அடைந்தாய்? எங்கள் மன்னவரை விரும்பினால் அரண்மனையில் சுகமாக வாழலாம் என்று கூறி, ஆயுதங்களால் இடிப்பது போலும் அடிப்பது போலும் கடிப்பது போலும் அச்சுறுத்தினார்கள். அப்போது தேவி அடைந்த துன்பத்திற்கு எல்லையே கிடையாது.

அந்த நடுநிசியில் அருளே வடிவாகிய ஆஞ்சநேயர் அங்கு வந்து சேர்ந்தார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Wed Jun 02, 2010 1:08 am

பிராட்டியாரைக் கண் குளிரக் கண்டார். அரக்கியர்களுக்கு நடுவே கண்ணீர்க் குளத்தில் இருந்த அன்னம்போல் காட்சி தரும் தெய்வக் கற்புடைய பிராட்டியாரை நோக்கி, இவர்தான் சீதாதேவி என்று எண்ணி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

தேவியைத் தரிசித்தல்- அருந்தவத்துப் பெண் தெய்வத்தைக் கண்ட அநுமார் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவர் தமக்குள் எண்ணுகின்றார்.

அறம் அழியவில்லை. நானும் சாகமாட்டேன் என்று எண்ணி ஆடினார். ராம் ராம் என்று பாடினார். அந்த மரத்தின் மீது அங்கும் இங்குமாக ஓடினார். உவகைத் தேனை உண்டார். எம்பெருமான் கூறிய அடையாளங்கள் அனைத்தும் இவரிடம் இருக்கின்றன. எரிகின்ற கொள்ளியைக் கூரை வீட்டில் ஒளித்து வைத்ததுபோல், தான் அழியும் பொருட்டு இராவணன் இவரை இங்குத் கொண்டு வைத்திருக்கின்றான். பரவாசுதேவானகிய நாராயணரே இராமபிரான். தாமரையில் வாழும் மகாலட்சுமியே சீதாதேவி. இதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இந்த அன்னை உண்ணாமலும், உறங்காமலும் நீராடாமலும், உள்ளம் வெந்து நொந்து மெலிந்திருக்கின்றார்கள். ஆ! ஆ! நான் இராகவனுடைய அழகிய புயத்தைப் புகழ்வேனா? பெண்களின் திலகமாக விளங்கும் இத்தேவியின் திருவுளத்தைப் புகழ்வேனா? அரசர்கட்கு இருக்க வேண்டிய தரும குணம் நிறைந்த ஜனக மன்னரின் குலத்தைப் புகழ்வேனா? நான் எதனைப் பாராட்டுவேன்?

பஞ்சாக்கினியில் நின்று உண்ணாதும் உறங்காதும் தவஞ்செய்வோரின் தவ ஆற்றலும், இம்மாதரசியின் கற்புக்கு இணையாகாது. இப்பெண்ணரசின் தவக்கோலத்தை இராமர் பார்க்கத் தவஞ்செய்தாரில்லை.

இந்த் தவப்பெருஞ் செல்வியைத் தருமமே காத்ததோ? ஜனகராஜாவினுடைய புண்ணியந்தான் இவரைக் காத்ததோ? கற்பு என்ற ஒன்று இவரைக் காத்ததோ? இது அருமையிலும் அருமை. இவருடைய பெருமையை உரைக்கலாகாது. ஏன்று எண்ணி ஓர் அசோக மரத்தின் கிளையின் மறைந்து நின்று கொண்டிருந்தார்.

இராவணன் வருகை- இராவணன் ஒளி வீசுகின்ற பற்பல மணிகளைப் பதித்த அணிகலன்கள் பூண்டு சீதையை நோக்கி வருகின்றான். ஊர்வசி உடைவாள் ஏந்தி உடன் சென்றாள். மேனகை வெற்றிலைப் பாக்கு கொடுத்துக் கொண்டு உடன் வந்தாள். திலோத்தனை அவனுடைய செருப்பைத் தூக்கிக் கொண்டு சென்றாள். ஏனைய தேவ மாதர்கள் அவனுடன் தொடர்ந்து சென்றார்கள்.

அவனது வருகையைக் கண்ட ஆஞ்சநேயர் திடுக்கிட்டார். அவனைக் கண்டு உயிர் உலைகின்ற தேவியையும், ஆசையால் வெதும்புகின்ற அரக்கனையும், அநுமார் கண்டார், தெய்வத்தை நினைத்துத் துதி செய்தார்.

இராவணன் சீதாதேவியின் அருகில் எய்தி, பெண்கள் நாயகமே! உனக்கு என்பால் கருணையில்லையா? என்னை நீ அடைந்தால் மூவுலக செல்வமும் உன்னை வந்தடையும். தேவரும் மற்று யாவரும் உன்னை வணங்குவார்கள். உன் கணவன் உயிர் விடும்பொழுது கூறிய ஒலியை நீ கேட்க வில்லையா? அடிமையாகிய என்னை நீ ஏற்றுக்கொள். என் ஆசையாகிய அனலை உன் அன்பினால் அணைத்து என்னைக் காப்பாற்று என்று முடிமேல் கரங்களைக் கூப்பிப் படிமேல் வீழ்ந்து பணிந்தான்.

சீதாதேவி எரிமலைபோல் சீறி, மூன்று உலகங்களையும் ஆளுகின்ற பேரரசனாகிய இராவணனைத் துரும்பாகக் கருதி கூறுகின்றாள்.

ஏ அற்பனே! என்னுடைய கணவரை என்னவென்று எண்ணுகின்றாய்? நீ வெள்ளி மலையை அள்ளியெடுத்த பொழுது சிறு கால் விரலால் அடர்த்த சிவபெருமானுடைய வில்லை என் கணவனார் ஒடித்தபோது உண்டாகிய ஓசையைப் பதினான்கு உலகங்களும் கேட்டன. நீ கேட்கவில்லையா? உண்மையில் நீ வீரனாக இருந்தால் போர் புரிந்து என்னைக் கவர்ந்திருக்க வேண்டும். என் கணவரும் இலட்சுமணரும் இல்லாத நேரம் பார்த்துச் சந்நியாசியாக வந்து, அன்னம் போட வந்த என்னைக் கன்னம் வைத்தனையே, இதுவா வீரம்?

என் கணவரை மனிதன் என்று நீ அலட்சியமாக நினைக்கின்றனையே! உன்னைச் சிறையில் வைத்த கார்த்தவீரியனை அழித்த பரசுராமனும் மனிதன்தானே? உனக்கும் உன் அசுர குலத்துக்கும் நாசகாலம் நண்ணியிருக்கின்றது. உன் தங்கையின் மூக்கை அறுத்து உன் தம்பியர்களாகிய கரதிரிசிர தூஷணாதியர்களைக் கொன்று அஞ்சா நெஞ்சுடன் விளங்குகின்ற இரகுவீரனுடைய ஆற்றலலை நீ உணரவில்லையா? ஆயிரங் கரங்களையுடைய கார்த்த வீரியன் உன் இருபது கரங்களைப் பற்றி உன் வாயில் உதிரம் ஒழுக உன்னைக் குத்திச் சிறையில் வைத்தான். அவனுடைய ஆயிரந் தோள்களையும் சிதைத்த பரசுராமனை என் கணவனார் கணப்பெழுதில் வென்றதை நீ அறியவில்லையா? இங்கே நின்று வீண் வார்த்தைகளைப் பேசாதே என்று கடுமையாக நிந்தித்தாள் சீதை.

இதைக் கேட்டு இராவணன் நாணமும் கோபமும் பொங்கி வரக் காதலால் மதியற்று நின்றான். மரத்தின் கிளையில் இருந்த அநுமார். எம்பிராட்டியை என் முன்னே இவ்வாறு பேசிய இக்கொடியவனுடைய தலைகளை உதிர்த்து, என் திறனை வெளிப்படுத்துவேன் என்று இரு கரங்களையும் பிசைந்து கொண்டிருந்தார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Wed Jun 02, 2010 1:09 am

இராவணன் சீதையே! நீ அறிவில்லாத பேதையே. நான் இராம லட்சுமணரைக் கொன்று உன்னைச் சிறையில் வைத்தால் நீ மாண்டு போவாய். ஆதலால், இந்த மாயஞ் செய்தேன். நான் நினைத்தால் இராம லட்சுமணர்களை ஒரு கையால் தூக்கி வருவேன். அவ்விருவரையும் வாளினால் வெட்டுவேன். ஆனால், உன்னை எனக்குத் தந்த அந்த உதவியை எண்ணி அவர்களைக் கொல்லாமல் இருக்கின்றேன். நான் இராம லட்சுமணரைக் கொல்லுவதேயன்றி அயோத்தினை யடைந்து பரத சத்ருக்னர்களையும் கொன்று மீளுவேன். என்னை யாரென்று எண்ணினாய்? என்று கூறிவிட்டு, அங்குள்ள அரக்கிமார்களை நோக்கி, சீதை எனக்கு வசமாகும்படிச் செய்யுங்கள்! என்று கூறிவிட்டுச் சென்றான்.

அந்த அரக்கிமார்கள் ஆயுதங்களை நீட்டிச் சீதையை அதட்டி இடர்படுத்தினார்கள். அப்போது திரிசடை, தாயே, அழாதீர்கள்! விருப்பமில்லாத ஒரு பெண்ணைத் தீண்டினால் பத்துத் தலைகளும் ஆயிரந் துண்டாக வெடிக்கும் என்று வேதவதி சாபம் கொடுத்திருக்கின்றாள். ஆதனால், என் பெரிய தந்தை விருப்பமில்லாத உன்னைத் தீண்டமாட்டார். தாங்கள் அஞ்ச வேண்டாம். அழ வேண்டாம் என்று தேறுதலும், ஆறுதலும் கூறினாள்.

நான் இத்தனைக் காலமாக உயிர்விடாமல் இருந்தது எம்பெருமானைக் காணும் விருப்பத்தினால். எம்பெருமான் வருவார், காட்சி தருவார் என்று எண்ணினேன். ஒருக்கால் எம்பெருமான் வந்து இராவண சம்மாரம் செய்தபின் அரக்கன் இல்லத்தில் பலகாலம் தங்கியிருந்த உன்னை நான் தீண்டமாட்டேன் என்ற சொன்னால் என்ன செய்வேன்? என் ஆருயிர்க் கணவரை மான்பின் அனுப்பி, என்னைக் காவல் அறிவில்லாத பேதையாகிய யான் உயிருடன் வாழ்வதை உலகம் ஏற்குமா? அல்லது இராவண சம்மாரத்துக்குப் பின் நான் இறைவனுடன் அயோத்திக்குச் சென்றால் அங்குள்ள கற்புடைய மாதர்கள் என்னைப் பார்த்து, இவள் அரக்கன் இல்லத்தில் நெடுங்காலம் இருந்தவள் என்று ஏசவார்களாயின் நான் என் செய்வேன்? என் துன்பத்துக்கு விமோசனம் உயிரை விடுவது ஒன்றுதான்.. . என்றெல்லாம் எண்ணி மெல்ல எழுந்தாள்.

அநுமார் இருக்கின்ற சிம்சுபா மரத்தையடைந்து மாணையின் கொடியை முறுக்கிக் கழுத்தில் சுருக்கிட்டு உயிர்விடத் துணிந்தாள்.

கணையாழி தருதல்- கண்களை மூடி இராமநாமத்தைச் செபித்தாள். அவள் கண்களிலிருந்து துன்பநீர் ஆறாய்ப்பெருகி ஓடியது. இதைக் கண்ட அநுமார் துணுக்குற்றார். தேவி உயிர்விடத் துணிகின்றாளே இப்பொழுது தேவியைக் காக்கும் வழி யாது என்று ஒருகணம் சிந்தித்தார். இப்பொழுது எம்பிராட்டிக்கு உயிர்ப் பிச்சை தருவது இராமநாமம் ஒன்றுதான் என்று கருதி அழுத கண்ணும் தொழுத கையுமாகிய பிராட்டியார் திருமுன் இராம் இராம் இராம் என்று மென்மையான குரலில் கூறிக்கொண்டு வணங்கி நின்றார்.

கொடியவர்கள் வாழ்கின்ற இந்த இலங்கையில் இராம நாமத்தைக் கூறுகின்றவர்கள் யார் என்று கண்விழித்துப் பார்த்தார். கைகூப்பி உள்ளம் உருகக் கண்ணீர்ப் பெருக்கி நின்ற இராமதூதனைக் கண்டாள் சீதை. இவன் இராவணனால் அனுப்பப்பட்டு வந்த வஞ்சகனோ? நம்மை ஏமாற்ற வந்த எத்தனோ? இது எப்படியாயினும் இவன் கூறுவது இராம மந்திரம். பித்தளைப் பாத்திரத்தில் கொடுத்த தேனும் இனிக்கத்தானே செய்யும் ? இராம நாமத்தை யார் கூறினால் என்ன? இராமநாமத்தைக் கேட்டுப் பின்னர் உயிர் விடுவோம் என்று உயிர் விடுகின்ற முயற்சியைத் தாமதஞ் செய்தாள்.

அநுமார், உலகு ஈன்ற உத்தம அன்னையே! தங்கள் திருவடிக்கு ஒரு கோடி வணக்கம். நான் இராம தூதன். தங்களை எட்டுத் திசைகளிலும் தேடி, இங்கு வந்து கண்டேன். தேவரீர் இலங்கையில் இருப்பதை இராமர் அறிய முடியாமையால் தாமதிக்க நேர்ந்தது.

அம்மா! இராமருடைய தோழனாகிய சுக்ரீவ மாமன்னருடைய மந்திரி யான். தங்களைப் பிரிந்தபின் சுக்ரீவ மன்னனை அடைந்து. வாலியை வதைத்துச் சுக்ரீவனோடு உறவு கொண்டார். அந்தச் சுக்ரீவர் தம் சேனைகளையனுப்பி நாலாபக்கங்களிலும் தங்களைத் தேடினார். தென்திசை நோக்கி வந்தவர்களில் நானும் ஒருவன். சுக்ரீவ மன்னனுக்கு எழுபது வெள்ளம் வாநர சேனைகள் உண்டு. வாநர சேனைகளாகிய நாங்கள் தேடாத தேசமில்லை. நாடாத நகரில்லை, நான் செய்த மாதவத்தால் தங்களை இங்குக் கண்டேன்.

அம்மா! நீங்கள் வேண்டுமென்று திருமாங்கல்யத்தை வைத்துக்கொண்டு, வேண்டாமென்று எறிந்த அணிகலன்களைக் கண்டு இராமர் மாளாமல் உயிரோடு இருக்கின்றார். வேண்டாம் என்று எறிந்த அவ்வணிகலன்கள்தாம் வேண்டும் என்று வைத்திருந்த மாங்கல்யத்தைக் காப்பாற்றியது. இராமச்சந்திர மூர்த்தி மிதிலைக்கு வந்தபோது கன்னிமாடத்தில் தங்களைக் கண்டதும், தாங்கள் அவரைக் கண்டு மகிழ்ந்ததும் அடையாளமாகச் சொல்லச் சொன்னார். அப்பொழுது தாங்கள், இதோ இந்த வீதி வழியாகச் செல்லுகின்ற வீரகுமாரன் கையில் அறுபதினாயிரம் பேர் எடுக்கக்கூடிய சிவதனுசு, பூமாலையைப் போல் வளையுமாறு செய்தால், தேவர்களே உங்கள் பொருட்டுப் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்வேன் என்ற பிரார்த்தனை செய்துகொண்டீர்களாமே, அந்த அடையாளத்தைச் சொல்லச் சொன்னார்.

தாங்கள் எம்பிரானுடன் கானகத்துக்குப் புறப்பட்டுப் போனபோது, நகர் வாயிலைக் கடவாமுன் கானகம் வந்து விட்டதா? என்று கேட்டீர்களாமே. அப்போது எம்பெருமான் புன்னகை பூத்தாராம். அந்த அடையாளத்தைச் சொல்லச் சொன்னார். சுமந்திரர் தங்களைப் பார்த்து அயோத்திக்குச் சொல்லும் செய்தி ஏதாவது உண்டா? என்று கேட்டபொழுது விலையுயர்ந்த ஆடையணிகலன்களைப் பற்றி எண்ணாமல், நான் வளர்த்த கிளிகள், வெள்ளை முயல்கள் முதலிய பிராணிகளுக்கு வேளை தவறாமல் உணவு தருமாறு என் தங்கையருக்குச் சொல்லும் என்று கூறினீராமே, அந்த அடையாளத்தைச் சொல்லச் சொன்னார்.

சித்திரக்கூட பர்வதத்தில் தங்கியிருந்தபொழுது ஒருநாள் இலட்சுமணர் இரை தேடி வெளியே சென்றிருந்தார். தங்கள் மடியில் படுத்து இராமர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது இந்திரன் மகனாகிய சயந்தன் தங்களைக் கண்டு மோகமுற்றான். அவன் தந்தை இந்திரன் அகலிகையைக் கண்டு விரும்பிய மூடன். தந்தை புத்திதானே மைந்தனுக்கும் இருக்கும்? அவன் காக்கையின் வடிவத்தை எடுத்துத் தங்கள் திருமார்பைக் குத்திப் புண்ணாக்கினான். எம்பெருமான் ஒரு புல்லை இராம பாணமாக ஏவினார். அக்கணைக்கு அஞ்சி எட்டுத் திசைகளில் ஓடியும் உய்வு கிடைக்காமல் இராகவா அபயம் என்று சரணடைய, அவனுக்கு உயிர் கொடுத்து உதவிய கருணைத் திறத்தை அடையாளமாகச் சொல்லச் சொன்னார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Wed Jun 02, 2010 1:17 am

அநுமார் இவ்வாறு பல அடையாளங்களைச் சொல்லி முடிவில் கணையாழி - மோதிரத்தைக் கொடுத்தார். அப்பொழுது அம்மை, இந்தப் புனித மோதிரம் பாவம் நிறைந்த அரக்கரின் நகருக்கு வந்ததே என்று கண்ணீரால் அபிஷேகஞ் செய்தாள். அந்தக் கணையாழி, சனகர், திருமணத்தின்போது மருமகனுக்குத் தந்த பரிசு மோதிரம். சீதாதேவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. நல்ல நாகம் மீண்டும் யாரையும் கடிக்காமல் நீண்ட நாள் வாழ்ந்தால், அதன் நஞ்சு நாகரத்தினமாக மாறும். அந்த நாக ரத்தினத்தை இழந்த நாகம் மீண்டும் அதை அடைந்தால் எத்துணை மகிழ்ச்சியடையுமோ அத்துணை மகிழ்ச்சியடைந்தாள். பழம்பொருளை இழந்தவர்கள் மீண்டும் பெற்றவர்போல் உவந்தாள். நீண்ட நாள் குழந்தையில்லா மலடி குழந்தையைப் பெற்றததுபோல் பெரிதும் மகிழ்ந்தாள். அநுமாரை நோக்கி, வாழ்த்துக் கூறுகின்றாள்.

அன்பின் வடிவாகிய ஆஞ்சநேயா! உலகத்தைத் தந்த பிரமதேவனைத் தந்த முதல்வனுக்குத் தூதாக வந்தாய், எனக்கு உயிர் தந்தாய், அம்மையும் அப்பனும் அத்தனும் ஆகி நின்றாய். சிறந்த தோள்களையுடையவனே! உயிரை கொடுத்து வள்ளலே! பதினான்கு உலகங்கள் அழிந்தாலும் நீ அழியாமல் நித்திய சிரஞ்சீவியாக இரு என்று வாழ்த்தினாள்.

சீதாதேவி, அநுமாரை நோக்கி, ஞமகனேஞ என்று அழைத்திருக்கலாம். அவ்வாறு அழைக்காமல் வள்ளலே என்று அழைக்கின்றாள். அநுமார் பொன்னும் பொருளுமா தந்தார்? அன்னமும் ஆடையுமா தந்தார்? அவர் அப்போது தந்தது எதனை? தேவிக்கு இன்னுயிரை ஈந்தார். சீதை உள்ளம் வெந்து நொந்து உயிர்விடத் துணிந்தபோது கணையாழியைத் தந்து ஆருயிரை வழங்கினார். சீதைக்கு மட்டுமா உயிரைத் தந்தார்?

அஞ்சனை குமாரனின் ஆற்றல்

அநுமாரைச், சீதாதேவி வள்ளலே என்று அழைத்த காரணம் என்ன?

சீதாதேவி மாண்டால் இராமரும் இலட்சுமணரும் மாள்வார்கள். அக்கணமே சுக்ரீவன் அங்கதன் முதலிய வாநர வீரர்கள் மாள்வார்கள். இந்தச் செய்தியை அறிந்தவுடன் பரதனும், சத்ருக்னனும் மாள்வார்கள். மூன்று தாய்மார்களும் மாள்வார்கள். அதனால், அயோத்தியில் உள்ள மாந்தர்கள் மாள்வார்கள். அதனால், பக்த உலகமே அழியும். அநுமார் சீதைக்கு உயிர் தந்து உலகத்துக்கே உயிர் தந்தார். அதனால் வள்ளலே என்று அழைக்கின்றார்.

சீதாதேவி அநுமாரை நோக்கி, நீ யார் ? எம்பெருமானுக்கும் உனக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது? இங்கு நீ எவ்வாறு வந்தாய்? என்று வினாவினார்.

அநுமார், தாயே! இராவணன் தங்களைக் கவர்ந்தபின் இராமலட்சுமணர் தங்களைத் தேடி வரும்பொழுது ஜடாயுவைக் கண்டார்கள். அவர் தங்கள் நிலைமையைக் கூறி இறந்துவிட்டார். பின்னர், தங்களைத் தேடிக் கொண்டு வந்து கிஷ்கிந்தையை அடைந்து சூரிய குமாரானாகிய சுக்ரீவனுடன் நட்பு கொண்டார். நீங்கள் அன்று எறிந்த அணிகலன்களைக் கண்டு உயிர் தளிர்த்தார். இராவணனை வென்ற மாவீரனாகிய வாலியை ஒரே அம்பினால் வதைத்தார். சுக்ரீவனுக்கு முடிசூட்டினார். சுக்ரீவனுக்கு எழுபது வெள்ளம் வாநர வீரர்கள் துணை செய்ய இருக்கின்றார்கள். அம்மா! என்னை எவ்வாறு கடல் கடந்து வந்தாய் என்று கேட்கின்றீரே. தங்கள் கணவனாருடைய திருவடியைத் தியானிக்கின்றவர்கள் பிறவிக்கடல் ஏழையும் கடப்பார்கள். நான் இந்த உவர்க்கடலைக் கடந்தது ஒரு சிறப்பா? தாயே, எம்பெருமானுடைய பணி செய்யும் வீரர்கள் கடலின் மணலைவிட அதிகமாகப் பலர் இருக்கின்றார்கள். அந்த இராம அடியார்களில் அடியேன் கடைப்பட்டவன். அங்கும் இங்கும் போகுமாறு சிறியவர்களுக்குத் தானே கட்டளையிடுவார்கள்? இராமன் அடியார்களில் ஒருவனாகிய யான் கடலைக் கடந்து வந்தேன்.

சீதை, அப்பா! அநுமானே! இங்கு அதிகம் நீ காலதாமதம் செய்யக்கூடாது. நான் இந்த இலங்கையில் கால் வைத்தபோது ஒரு கர்ப்பவாசம் (பத்துமாதம்) இருப்பதாகத் திட்டமிட்டேன். இன்றுடன் ஒன்பது மாதங்கள் பூர்த்தியாகி விட்டன. அதற்குள் எம்பெருமான் வந்து இராவண சம்மாரம் செய்து என்னைச் சிறை மீட்டுப் போகுமாறு வேண்டினேன். என்று சொல்வாயாக. ஒருக்கால் இந்த ஒரு மாதத்திற்குள் இங்கு வர இயலவில்லையானால் நான் இங்கு மாண்டு ஒழிவேன். எம்பெருமான் அப்படியே அயோத்தி சென்று கங்கைக் கரையில் எள்ளுந் தண்ணீரும் இறைக்கச் சொல்லுவாயாக. குழந்தை இல்லாத எனக்கு நீர்க்கடன் அவர்தானே செய்ய வேண்டும்? நான் இங்கு மாளுந் தன்மையை அடைந்திருக்கின்றேன். ஆதலால், என்னுடைய சிறந்த மாமியார் மூவருக்கு வணக்கஞ் செலுத்தினாள் என்று கூறுவாயாக. சுக்ரீவனுக்கு என்னுடைய ஆசியைக் கூறுவாயாக. எம்பெருமான் அயோத்திக்குச் செல்லும் பொழுது நீங்கள் உடன் சென்று அவருக்கு முடிசூட்டு விழா செய்யுங்கள். அந்தப் பட்டாபிஷேகக் கோலத்தைப் பாவியாகிய யான் பார்க்கத் தவஞ் செய்திலேன் என்று கூறினாள்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Wed Jun 02, 2010 1:17 am

அநுமார், சீதையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, அம்மா! நான் சென்று இராமரிடம் கூறி, அவர் வந்து போர் புரிந்து தங்களை மீட்கின்ற தன்மை வேண்டாம். அது கால தாமதம் ஆகும். அடியேனுடைய தோள் மீது அமருங்கள். அடுத்த விநாடியில் இராமருடைய திருவடியில் தங்களை ஒப்படைப்பேன் என்று கூறினார்.

சீதாதேவி, அநுமானே! உன் அன்புக்கு நன்றி. உன்னுடைய ஆலோசனை நன்றன்று. பாரத நாட்டின் பண்பின்படி வயதுக்கு வந்த மகனைத் தாய் தீண்டக்கூடாது. நீ எனக்குச் சேய், நான் உனக்குத் தாய். என்னைத் தீண்டிக் கொண்டு போவது சிறப்புடையதாகாது. இராவணனே என்னைத் தீண்டாமல் கொண்டு வந்திருக்கிறான் மகனே! நீ கூறியது சரியன்று என்று கூறினாள்.

அநுமார், அம்மா! நான் தங்களைத் தீண்டவில்லை. இந்த இலங்கையை வேருடன் பறித்து இராமர் முன்னே கொண்டு போய் வைப்பேன். அப்போது தாங்கள் எம்பெருமானை அடையலாம் என்றார்.

அநுமானே, நீ சிறிய குரங்காக இருக்கின்றனையே, நீ எவ்வாறு இலங்கையை எடுப்பாய்? என்று கேட்டாள் சீதை.

அநுமார், அம்மா அருந்ததியே! நானா சிறியவன்? என் வடிவத்தைப் பாருங்கள் என்று விசுவரூபத்தை எடுத்தார். அவருடைய திருவடி அதல பாதாலத்திலும், திருமுடி சந்திர மண்டலம், சூரிய மண்டலங்களையும் கடந்து நின்றது. சீதாதேவி தலைநமிர்ந்து எட்டியெட்டிப் பார்த்தாள். அநுமாருடைய முழுங்காலும் தெரியவில்லை. அதிசயம் அடைந்தாள். மகனே! இந்த வடிவத்தைக் காண அஞ்சுகின்றேன். அடங்குவாயாக என்றாள்.

நல்ல குடும்பத்தில் தாய் தந்தையர் அடக்கினால் பிள்ளைகள் அடங்கும். அல்லாத குடும்பத்தில் தாய் தந்தையரை அடக்கும். சீதாதேவி அநுமாரைப் பார்த்து அக மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கூறுகின்றாள்.

மகனே! எம்பெருமானுக்கு இலட்சுமணரைத் தவிர வேறு துணையில்லை என்று எண்ணினேன். நீ ஒருவன் துணையாக அமைந்திருப்பதால் பகவானுக்கு ஆகாத காரியம் ஒன்றும் இருக்காது. இலங்கை, கடல் கடந்து இருக்கின்றதே என்று எண்ணினேன். உன்னுடைய பேராற்றலைக் கண்ட பின், ஏழு கடல்களுக்கு அப்பால் இருந்தால் என்ன, என்று எண்ணுகின்றேன். இந்த இலங்கை உனக்குச் சுண்டு விரல் பாரம்.

ஆனால், என்னைக் கண்ணீர்விட்டு அழுகின்ற அபலை என்று எண்ணாதே. இந்த இலங்கையை அழிக்க எம்பெருமான் இளைய பெருமாளுடன் எழுபது வெள்ளம் வாநர சேனையுடன் வர வேண்டுமா? கோதண்டத்தை வளைக்க வேண்டுமா? அம்புகளைத் தொடுக்க வேண்டுமா? இந்த இலங்கையையும் ஏனைய உலகங்கள் எல்லாவற்றையும் அழிகஎன்று ஒரு சொல்லால் அழித்துவிடுவேன். அத்துணை ஆற்றல் என்பால் அமைந்துள்ளது. நான் இலங்கையையும் இராவணாதி அரக்கர்களையும் ஒரு கணத்தில் எரித்துவிடுவேன். அப்படி எரிந்தால் சீதாயணம் என்றுதானே பேர் வரும்? இராமாயணம் என்று பேர்வராதே. பெண்ணாகப் பிறந்தவர்கள் கணவனுக்குப் புகழ் தேடிக் கொடுக்க வேண்டும். அதனால், என் கற்புக்கனலை அடக்கிக் கொண்டிருக்கின்றேன். நீ உன் வாலை மடக்கிக் கொண்டு பெருமானிடம் போய் வா.

மகனே, விதியை வென்றவர்கள் யார்? விதிவழி மதி செல்லும் விலையுயர்ந்த ஆடையாபரணங்களையும் மாட மாளிகைகளையும் துறந்து வந்த யான், அற்பமான மானை விரும்பினேனே. இதற்குக் காரணம் விதியின் செயலாகும். ஒருகால் இலங்கையில் நான் மாண்டு போவேனானால் மறுபிறப்பில் எம்பெருமான் எனக்குச் கணவனாக வர வேண்டும் என்று வரம் கேட்டதாகப் பெருமானிடம் கூறுவாயாக.

ஆஞ்சநேயா! இராமச்சந்திர மூர்த்தி அயோத்தியிலிருந்து மதிலாபுரிக்கு வந்து என் கையைப் பற்றிய அன்று, இந்த இராமாவதாரத்தில் இரு மாதரைத் தொடேன்! என்று எனக்கு வரங் கொடுத்ததை அவருக்கு நிளைவூட்டுவாயாக. மிதிலாபுரிக்குச் சென்றால் என் தாய் தந்தையருக்கு என் அன்பு வணக்கத்தை அறிவிப்பாயாக.

தாயே! நீங்கள் சிந்தை நொந்து செப்புவதைக் கேட்டு உளம் நொந்து உரைக்கின்றேன். தாங்கள் அகால மரணம் அடைய வேண்டாம். நான் சென்று இராமரைப் பார்ப்பதுதான் தாமதம். நான் சென்று தெரிவித்தவுடன், என் தோள்களில் இராமரும் அங்கதன் தோள்களில் இலட்சுமணரும் வாநர சேனைகளுடன் இங்கு வருவார்கள. அரக்கர்கள் அழிய உதிர ஆறு ஓடும். ஆரக்கிமாரும் அறுத்து வீசிய வாலினாலும் கடக்க முடியாத தாலி மலை இங்குக் காணப்படும். புண்ணின் நீராகிய உதிரத்தில் குளித்த பறவைகள் அரக்க மாதர்களின் கண்ணீரில் குளிப்பதைக் காண்பீர்கள். தங்கள் திருமேனியை உற்றுப் பார்த்த இராவணனுடைய கண்களைக் காக்கைகள் கொத்தித் தின்பதைக் காணப் போகிறீர்கள்.

உலக மாதாவே! அரம்பையர் ஆடிய நடன சபைகளில் குரங்குகள் நடிப்பதைக் காண்பீர்கள். ஆகவே, அறம் வெல்லும் மறம் தோற்கும் என்று கூறினார் அநுமார்.

சீதாதேவி, நான் ஒரு கிளியை வளர்த்தேன். அது முட்டை யிட்டுக் குஞ்சு பொரித்தது. அதற்கு என்ன பெயர் சூட்டலாம் என்று கேட்டேன். அதற்கு எம்பெருமான் என் தாய் கைகேயின் பெயரைச் சூட்டு என்றார் இந்த அடையாளத்தைச் சொல் என்றாள்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Wed Jun 02, 2010 1:23 am

சூடாமணி்

பின்னர் தன் மடியில் முடித்து வைத்திருந்த சூடாமணியை எடுத்து அடையாளமாக கொடுத்தாள் அம்மணி. இளம் ஞாயிறுபோல் அது ஒளி செய்தது. இதனை அநுமார் தொழுது வாங்கினார். கண்களில் ஒற்றிக் கொண்டார். அதனை துணியில் முடிந்து பத்திரப்படுத்திக் கொண்டார். சூடாமணி என்பது செய்யா என்ற வாய் பாட்டின்படி சூடுகின்ற மணி எனக் கருதுக.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்துடன் சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி என்ற மூன்று மணிகள் தோன்றின. சிந்தாமணியை இந்திரன் அடைந்தான். இந்திரன் விநாயகருடைய திருக்கரத்தில் இருக்கும் தங்கக் கலசத்தில் பதித்து விநாயகருக்கு ஈந்தான். அந்தச் சிந்தாமணியுடன் கூடிய தங்கக் கலசத்தால் விநாயகர் நாள்தோறும் அம்மையப்பரை வழிபடுவார்.

இரண்டாவது கௌஸ்துபமணியை நாராயணர் திருமார்பில் அணிந்து கொண்டார். மூன்றாவது சூடாமணியை, பாற்கடல் கடையத் துணிந்த ஙநிமிங என்ற மன்னனுக்கு அளித்தார்கள். இவன் பூசித்து வந்தான். இவன் மரபில் வந்த சீரத்துவச ஜனகர், தமக்கு வேறு ஆண் சந்ததி இல்லாமையால் இதைத் தலையில் சூடும் அணிகலனாகச் செய்து, தம் தவப்புதல்வி சீதா தேவிக்குத் தந்தார். இந்த மணியை உயிரினும் உயர்ந்ததாக எண்ணிச் சீதா தேவி இதனைப் பூசித்து வந்தாள். இந்த மணியைத்தான் இப்போது மாருதியிடம் தேவி தந்தாள்.

சூடாமணி மிகுந்த மகத்துவம் உடையது. இந்தச் சூடாமணி போல் முருகப் பெருமானுடைய திருமேனி ஒளி வீசும் என்று அருணகிரிப் பெருமான் கூறுகின்றார்.

அசோக வனத்தை அழித்தல்

அநுமார் பிராட்டியாரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். நாம் வந்து திருடனைத் தேள் கொட்டியது போல் வெறுமையாகத் திரும்பிப் போவது நன்றன்று. அந்த அசோகவனத்தை அழித்தால் அரக்கர்கள் வருவார்கள், அரக்கரை அழித்தால் இராவணன் வருவான். அவனைக் கண்டு உரையாடி மீளலாம் என்று கருதினார்.

வானோங்கி வளமோங்கிச் செழித்திருக்கின்ற பூமரங்களையும், மாமரங்களையும் வேராடு அழித்துப் பிடுங்கி வீசினார். சில மரங்களில் தூக்கணாங்குருவி கூடு கட்டியிருந்தன. அம்மரங்களைப் பிடுங்கி வானிலே வீசிய போது அக்குருவிகள் கூட்டுடன் சுவர்க்கத்தை அடைந்தன. புண்ணியம் செய்தவர்கள் கூண்டுடன் கைலாசம் போவார்கள் என்பது பழமொழி. இங்கே இப்பொழுது அநுமார் சீற்றத்துடன் செய்த செய்கையே குருவிகளுக்குக் கூட்டுடன் சுவர்க்கம் கிடைத்தது. அவர் கருணையோடு அருளியிருந்தால் என்ன கிடைக்காது?

மாருதி ஓர் ஓம மண்டபத்தைப் பிடுங்கி இலங்கை மீது எறிந்தார். அதனால், அரக்கர்கள் பலர் மாண்டார்கள். காவல் செய்கின்ற தேவர்கள் இராவணனிடம் ஓடி வணங்கி, ஞமன்னர் பெருமானே, ஒரு வானரம் வந்து அசோக வனத்தை முற்றிலும் அழித்துவிட்டதுஞ என்று கூறினார்கள். ஆதித்தனும் நுழையாத அசோக வனத்தை ஒரு குரங்கு அழித்தது என்று மூடரும் மொழியார். நீங்கள் என்ன கனவு கண்டீர்களா? என்று தோள் குலுங்கச் சிரித்தான் இராவணன்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Wed Jun 02, 2010 1:26 am

கிங்கரர் வதை

கிங்கரர் என்ற ஒருவகை அரக்கர்களை அழைத்து, நீங்கள் சென்று அக்குரங்கை உயிருடன் பிடித்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். கடல் கொந்தளித்துக் கரை கடந்து வருவது போல் கிங்கிரர் அநுமார் இருக்கும் இடத்தை நோக்கி வந்தார்கள். போர் என்றால் அவர்கட்குத் தேன் போல இனிக்கும். இடி போல முழங்குவார்கள். சக்கரம், உலக்கை, தண்டாயுதம், வாளாயுதம், இரும்புவளைத்தடி, சம்மட்டி, பிண்டிபாலம், சூலம், வச்சிராயுதம், குந்தம், மழு முதலிய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு வந்தார்கள்.

அநுமார் அந்த அரக்கர் சேனையைக் கண்டு அதிக மகிழ்ச்சியடைந்தார். விண்ணளாவிய ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி நான்கு திசைகளிலும் சக்கரம்போல் சுழற்றிப் போர் புரிந்தார். தாள்களால் சிலரைக் கொன்றார். தடக்கையால் சிலரைக் கொன்றார். தோள்களால் பலரை மாய்த்தார். அரக்கர் கரங்களில் இருந்த வாள்களால் பலரைக் கொன்றார். அரக்கர் அனைவரும் மாண்டு ஒழிந்தாரகள். தேவர்கள் மகிழ்ந்து அநுமன்மீது மலர்மழை பொழிந்தார்கள். காவல் புரியும் தேவர்கள் இராவணன் முன்சென்று அரக்கர்கள் மாண்டார்கள் என்று சொல்ல அஞ்சினார்கள். வாய் குழறினார்கள். பூமியில் கால் தோயாது கையால் காட்டி உரைத்தார்கள்.

இராவணன் பெருஞ் சீற்றம் அடைந்து, ஜம்புமாலி என்ற சேனைத் தலைவனை, நீ சென்று அந்த வானரத்தை உயிருடன் பிடித்து வா என்று பணித்தான்.

ஜம்புமாலி இராவணனுடைய கட்டளையைக் கேட்டு இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே. இத்தனை வீர்கள் இருந்தும் என் தலைவன் என்னை மதித்து இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கினானே? நான் பெரிய பாக்கியசாலி என்று எண்ணி உள்ளம் உவந்து சேனைகள் சூழப் போருக்குப் புறப்பட்டான்.

தோமரம், மழு, வச்சிராயுதம், அங்குசம், வேலாயுதம், சக்ராயுதம், வில், தண்டாயுதம் முதலிய ஆயுதங்களைத் தாங்கிய வீரம் மிகுந்த அரக்கர்கள் அவனைச் சூழ்ந்து சென்றார்கள். தேர் வீரர்கள் பதினாயிரவர், யானை வீரர்கள் இருபதினாயிரவர், குதிரை வீரர்கள் நாற்பதினாயிரவர், காலாட்கள் எண்பதினாயிரவர், அவனைச் சூழ்ந்து ஆரவாரஞ் செய்து மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

அநுமார் தோரண கம்பத்தின் உச்சியில் அமர்ந்திருந்தார். ஆழமான குளத்தைக் கண்டால் நீந்துகின்றவனுக்கு மகிழ்ச்சி, பெருங் கூட்டத்தைக் கண்டால் பிரசங்கம் செய்கின்றவருக்கு மகிழ்ச்சி. அதுபோல், போரில் மிகுந்த சேனைகளைக் கண்டால் வீரனுக்கு மகிழ்ச்சி. அநுமார் இராமருடைய திருவடியைச் சந்தித்து அங்கு ஒரு பக்கம் இருந்த தண்டாயுதத்தை எடுத்தார். இயமனைப் போல் சுழன்றார். பானைகளை உடைக்கும் கைத்தடியானைப் போலச் சேனைகளைக் கொன்று குவித்தார். பிணமலை குவிந்து உதிர ஆறுகள் ஓடின. ஜம்புமாலி தனித்து நின்றான். அநுமார் அவன்மீது கருணை கொண்டு, அறிவில்லாத வீரனே! உனக்கு உயிர்ப் பிச்சை தருகின்றேன். போ! என்றார். ஜம்புமாலி அநுமாருடைய கருணைத்திறத்தைக் கண்டு வியந்தான். அநுமாரை எதிர்த்துப் போர் புரிந்து மாண்டான். ஒரு தூதன் இராவணனிடம் ஓடிப் போய் ஜம்புமாலி மாய்ந்ததைக் கூறினான். அரசர் தலைவா! குரங்கு ஒன்றுதான் அசுர சேனைகளை அழித்தது என்றான்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Wed Jun 02, 2010 1:26 am

பஞ்ச சேனாதிபதிகள்

இதனைக் கேட்ட இராவணன் எரி மலைபோல் சீறினான். என்னுடைய இலங்கை ஆட்சி நன்று, நன்று, இலைகளையும் மலர்களையும் உண்ணுகின்ற ஒரு குரங்கு இலங்கை வந்து என்னுடைய பலநாள் வளர்த்த அசோகவனத்தை அழித்துக் கிங்கிரர்களையும் ஜம்புமாலியையும் கொன்று ஊருக்கும் போகாமல் இன்னும் போருக்கு என்று இருக்குமானால், இதனைவிடப் புதுமை என்ன இருக்கின்றது? தேரைக் கொண்டு வருக. நானே போர் புரியச் செல்லுவேன் என்றான்.

அவனுடைய சீற்றத்தைக் கண்டு அனைவரும் அஞ்சினார்கள். அப்போது, பஞ்சசேனாதிபதிகள் விருட்பாட்சன், யூபாட்சன், துர்த்தரன், பிராசன், பாசகர்ணன் என்று பேருள்ளவர்கள் இராவணனைப் பணிந்து, எங்கள் தனிப் பெருந்தலைவா! ஓர் எறும்பைக் கொல்ல மாவீரன் தண்டாயுதத்தைத் தாங்கிப் புறப்பட்டுப் போவதுபோல், ஒரு குரங்கைக் கொல்லப் போவது தங்கள் வீரத்துக்கு இழுக்கல்லவா? எங்களுக்கு அநுமதி கொடுங்கள். புழுவைக் காலால் தேய்ப்பதுபோல அக்குரங்கை அழித்து வருவோம் என்றார்கள்.

இராவணன் புன்முறுவல் பூத்து, நன்று கூறினீர்கள் நல்லது. சென்று வென்று அக்குரங்கைப் பற்றிக் கொண்டுவாருங்கள் என்றான். பஞ்ச சேனாதிபதிகள் சதுரங்கசேனையுடன் போருக்குப் புறப்பட்டுச்சென்றார்கள். அவ்வாறு, அரக்க வீரர்கள் போருக்குப் போகும்போது, அவர்களின் மனைவி மார்களும் புதல்வர்களும் அவர்களை இடைமறித்து அழுது தொழுது, போருக்குப் போக வேண்டாம் போனால் திரும்பி வரமாட்டீர்கள். வந்திருப்பது வானரம் அன்று. இலங்கையை அழிக்க வந்த பூதமாகும். காதலால் கூறுகின்றோம், போகவேண்டாம் என்று கூறிப் புலம்பினார்கள்.

அசுரர்கள் அவர்கட்குச் சமாதானம் கூறிப் போர்க்களம் போனார்கள். சேனாதிபதிகள், அந்த வானரம் எங்கே? என்று கேட்டார்கள்.

அங்கிருந்த தூதர்கள், அதோ, அந்தக் தோரணத் தூணின் மீது இருக்கின்றது பாருங்கள். அது குரங்கன்று. அசுர குலத்தை அழிக்க வந்த கடவுளாகும் என்றார்கள். பஞ்சனோதிபதிகளுடன், ஐம்பதாயிரம் தேர்கள், ஐம்பதினாயிரம் யானைகள், ஒரு லட்சம் குதிரைகள், இரண்டு லட்சம் பதாதிகள், கடல் போல் முழங்கியபடி வந்தன. உதிரச்சேற்றில் தேர்கள் வேகமாகச் செல்ல முடியாமல் தவித்தன.

அநுமார் பேருருக்கொண்டு யானையுடன் மற்றொரு யானையை மோதியும், தேருடன் மற்றொரு தேரை மோதியழித்தும், அவர்கள் கையில் உள்ள ஆயுதங்களைப் பறித்தும், அந்த ஆயுதங்களாலேயே அவர்களைக் கொன்றும், ஊழிக் காலத்தில் எழுகின்ற அக்கினியைப்போல் அந்த அசுர சேனைகளை அழித்து, ஐந்து சோனதிபதிகளையும் உதைத்து வதைத்தார்.

சுவை ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களையும் ஞானி ஒருவரே அடக்குவது போல அநுமார் ஒருவரே பஞ்சசேனாதிபதிகளையும் வதைத்தார். ஆன்மாக்களாகிய நமக்கு மிக்க அல்லல் தருவது இந்த ஐம்புலன்களேயாகும். ஐம்புல வேடரின் அயர்ந்தனை என்பது சிவஞானபோதம். வளைத்து நின் றைவர் கள்வர் மனத்திடை துயரம் செய்து.. . என்கிறார் அப்பர்பெருமான்.

ஓரவொட்டார் ஒன்றை உன்ன வொட்டார் மலர் இட்டுனதாள். சேரவொட்டார் ஐவர் செய்வதென்யான் என்கின்றார் அருணகிரிநாதர். பஞ்ச சேனாதிபதிகள் ஐம்புலன்களை ஒத்தார், அநுமார் அறிவைஒத்தார்.

காவல் வீரர்கள் ஓடி இராவணனைப் பணிந்து துக்கப்படுவார் போல் நடித்து, வேந்தே, சேனைகளுடன் சென்ற ஐம்பெருஞ் சேனைத் தலைவர்கள் அக்குரங்கினால் கொல்லப் பட்டார்கள். அந்த வானரம் சோம்பி இருக்கின்றது என்றார்கள்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Fri Jun 04, 2010 1:44 am

அட்ச குமாரன்

இலங்கை முழுவதும் மாதர்களின் அழுகை ஒலி நிறைந்தது. மகன் மாண்டான் என்றும், மணவாளன் மாண்டான் என்றும், உடன் பிறந்தான் இறந்தான் என்றும் அரக்கியர்கள் வாய்விட்டு அழுதார்கள்.

பரம பதிவிரதையாகிய சீதாதேவி ஒருத்தியை அழவைத்த பாவம் இன்று இலங்கையே அழுகின்றது.

பஞ்சசேனாதிபதிகள் மாண்டார்கள் எனக் கேட்ட இராவணன் பெருஞ்சீற்றத்தை அடைந்தான். மீண்டும் தானே போருக்கு ஆயுத்தமானான். அப்போது அவனுடைய கடைசி மகன் அட்ச குமாரன் தந்தையை வந்தனம் புரிந்து, தந்தையேஸ நான் ஒருவன் இருக்கின்றேன் என்ற எண்ணமே இல்லையா? இந்த வாய்ப்பை எனக்கு கொடுங்கள். தூணிலே இருந்து வந்த நரசிங்கனே என்றாலும், உலகை ஒரு பந்துபோலத் தன் தந்தத்தால் தூக்கிய வராகமேயானாலும் நான் கொல்ல வல்லேன். என் ஆற்றலை உலகம் அறிந்து பாராட்டும், எனக்கு கட்டளையிடும். ஓரு நொடியில் குரங்கைப் பற்றி வருவேன் என்றான்.

இராவணன் மகனை மார்புறத் தழுவி விடை கொடுத்து அனுப்பினான்.

அட்ச குமாரன் தேரில் ஏறியபோது அவனுடன் பன்னீராயிரம் இளம் புதல்வர்களும், மந்திரிகளின் மைந்தர்களும், சேனைத் தலைவர்களின் மைந்தர்களும், வேறு வேறு பதவியில் உள்ளவர்களின் மைந்தர்களும், இராவணனுக்குத் தேவமாதர்களின் வயிற்றில் பிறந்தவர்களும், நான்கு லட்சம் இளம் வீரகுமாரர்கள் அட்ச குமாரனைச் சூழ்ந்து சென்றார்கள்.

இவ்வாறு செல்லுகின்ற மைந்தர்கட்குப் பின்னே காகங்களும், கழுகுகளும், பேய்களும், அந்த அரக்கர்கள் எண்ணிலாத காலமாகச் செய்து வந்த தீவினையும் தொடர்ந்து சென்றன. போர்ப் பறைகள் முழங்கின. மாதர்களின் அழுகை ஒலியும், போர்ப்பறை ஒலியும் எங்கும் முழங்கின. இராக்கதர்கட்கு இடத் தோள்களும் இடக்கண்களும் துடித்தன.

தோரணத் தூணின் உச்சியில் அமர்ந்து ராம் ராம் ராம் என்று ஜபித்துக் கொண்டிருந்த அநுமார் அட்சகுமாரன் சேனைகள் சூழ வருகின்ற காட்சியை கண்டார். இவர் இந்திரஜித்தோ? இராவணனோ? என்று ஐயுற்றார்? பல தலைகள் இல்லாமையால் இராவணன் அல்லன், இவன் மிக்க இளமையாக இருப்பதனால் இந்திரஜித்தும் அன்று, இன்று நமக்கு நல்ல வேட்டைதான்! என்று எண்ணினார். அந்தச் சேனைகளை நோக்கித், தன் அழகிய தோள்களை நோக்கி, இராமபிரானை அகக் கண்களால் நோக்கித் தொழுதார்.

அட்ச குமாரன் அநுமாரைப் பார்த்து, அலட்சியமாகத் தோள் குலுங்க நகைத்தான். இந்தச் சிறு குரங்கா இத்தனை வீரர்களைக் கொன்றது? என்று கூறினான்.

அட்ச குமாரனுடைய சாரதி, ஐயனே! இதனைக் குரங்கென்று அலட்சியமாக நினைக்க வேண்டாம். உங்கள் தந்தையாரை வாலால் கட்டியடக்கிய வாலியுங் குரங்குதானே? வீரம் எங்கெங்கோ இருக்கும் என்றான்.

காய்ந்து உலர்ந்த புல்வனத்தில் கனல் நுழைந்தது போல் அநுமார் சேனைக்கூட்டத்தில் நுழைந்து, அவர்கள் ஏந்தியிருந்த ஆயுதங்களை பிடுங்கி, அவற்றினாலேயே அவர்களைக் கொன்று அழித்தார். அத்தனைப் பேர்களின் உயிரைப் பற்றிக் கொண்டு போக இயமனுக்கு ஆயிரம் கோடி தூதர்கள் இருப்பர் போலும். அரக்கர் சேனைகளை அழித்துவிட்டு, அட்சகுமாரன் தேர்மீது தாவிக் குதித்து, அவன் வில்லைப் பறித்து நிலத்தில் இட்டுத் தமது பாதத்தால் தேய்த்துக் கொன்றார். அப்படித் தேய்த்துக் கொன்றவர், உலகம் தேய்ந்து அழியினும் தேயாத மாருதி என்று உணர்க.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Fri Jun 04, 2010 1:44 am

தேவியைக் கண்டேன்

உலகில் உயிர் என்றால் வெல்லம்போல் இனிக்குந்தானே!

சில அரக்கர்கள் உயிர்விடத் துணியாதவராகிக் கடலில் மீன் உருவாகி மறைந்தார்கள். சிலர் பசுக்களாய்ப் புல் மேயலானார்கள், சிலர் பறவைகள் ஆனார்கள். சிலர் அந்தணர் வடிவங் கொண்டார்கள்.

சிலர் பெண்கள் வடிவங்கொண்டு கூந்தலை வகிர்ந்து பின்னல் இடுவராயினார்கள். சிலர் மாருதியே சரணம் சரணம் என்றார்கள். சிலர் கழுத்தில் ஜெபமாலையணிந்து கையில் ஜால்ராவை வைத்துத் தாளம் போட்டு அரி பஜனை செய்தார்கள். சாவதற்கு அஞ்சி, பாவத்துக்கு அஞ்சாத அரக்கர் இத்தனை வேடங்கள் போட்டு உயிர் தப்பினார்கள். இதனை எண்ணுந்தொறும் சிரிப்பு வருகின்றது. உயிர் என்றால் யாருக்குத்தான் இனிக்காது?

சாதலின் இன்னாத தில்லை என்றார் தெய்வப் புலவர். அரக்கர்களின் கள்ள வடிவைக் கண்டு மாருதி புன்னகை பூத்து அவர்கட்கு உயிர்ப்பிச்சைத் தந்தார்.

காவல் தேவர்கள் இராவணன் முன்னேபோய், களிக்கும் சிந்தையுடன் வேந்தரே! நமது கடைக்குட்டி அட்சகுமாரர் வீர சுவர்க்கம் சேர்ந்தார்! என்றார்கள்.

இதனைக் கேட்ட மயன் மகளாகிய வண்டோதர் வாய் விட்டுப் புலம்பியழுதாள். இராவணன் அழுதான். இலங்கையே அழுதது. அந்த அழுகையொலி கடல் ஒலியை அடக்கியது. கண்ணீரும் புண்ணீரும் ஓடின.

இந்திரஜித்து தன் மனைவியருடன் ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் இன்ப வெள்ளத்தில் முழுகியிருந்தான். செவியில் இலங்கை மாதர்களின் அழுகை ஒலி கேட்டது. அருகில் இருந்தவரைப் பார்த்து, எங்கும் அழுகை ஒலி கேட்கின்றதே. இதற்கு என்ன காரணம்? என்று வினவினான்.

அவனுடைய ஏவலர்கள், வேந்தரே! பாரத நாட்டில் இருந்து ஒரு வாநரம் வந்து அசோக வனத்தை அழித்தது. தங்கள் ஆட்சியைப் பழித்தது. கிங்கரர், ஜம்புமாலி, பஞ்ச சேனாதிபதிகளின் உயிர்களை ஒழித்தது. தங்கள் கடைசித் தம்பி அட்ச குமாரரையும் கொன்றுவிட்டது. இதனால், இலங்கை மாநகரமே துன்புறுகின்றது என்றார்கள்.

இதனைக் கேட்டு இந்திரஜித்து அதிர்ச்சியடைந்தான். ஒரு குரங்கா இத்தனை பேரையும் வதைத்தது? அசுர ஆட்சி மாட்சி அழிந்ததே. இது அமரர்கள் சூழ்ச்சியாகும் என்று எண்ணித் தேர்மீது ஏறி இராவணனுடைய பொன் மாளிகையை அடைந்தான். தந்தையாரைப் பணிந்தான். தந்தையே, உமக்கு அறிவு கூர் மழுங்கிவிட்டது போலும். தீயின் முன்னே பஞ்சு மூட்டைகளை அனுப்புவதுபோல் அனுப்பி, அத்தனை பேரையும் அழித்து ஒழிந்து போகுமாறு செய்தீர். அரக்கர்களைக் குரங்கு கொல்லவில்லை. நீர்தான் கொன்றுவிட்டீர். அசுர குலத்துக்கு அடங்காப் பழியை உண்டாக்கிவிட்டீர்! அது வாநரம் அன்று. இலங்கையை அழிக்க வந்த பூதமாகும். நான் போய்க் கட்டியிழுத்து வருவேன் என்று சீறி, வெற்றித் தேர்மீது ஏறி அசுர சேனைகள் புடைசூழப் புறப்பட்டான்.

போர்களத்தில் சென்று மாண்ட சேனைகளின் உடம்புகள் மலை போலவும், உதிர ஆறுகளையும் கண்டான். இத்தனை வீரர்களையும் ஒருவனாக நின்று போர் செய்து அழித்த அந்த வாநரத்தின் வீரம் மிகவும் பாராட்டுதற்குரியது. உகாந்த காலத்து ருத்திரமூர்த்திக்கு நிகரான அவ்வாநரத்தின் ஆற்றல் அளவிட முடியாதது. தன் தம்பி அட்ச குமாரன் நிலத்திலே கருவேப்பிலைத் துவையல் போல் தேய்ப்புண்டிருப்பதைக் கண்டு உதிரக் கண்ணீர் வடித்தான். என் தம்பியா தேய்ந்தான்? இல்லை, என் தந்தையாரின் புகழ் தேய்ந்தது. இனி எனக்கு என்ன வாழ்வு? என்றெல்லாம் எண்ணினான்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Fri Jun 04, 2010 1:44 am

அநுமார் விசுவ ரூபத்தை எடுத்து இந்திரஜித்தின் சேனைகளைக் கொன்றார். இந்திரஜித்து அநுமாருடைய பேருருவைக் கண்டு மயங்கினான். வாநரமே, நீ நல்லை, நல்லை. உனக்கு நிகரானவர் இல்லை, இல்லை. யாருடனும் போர் செய்ய வல்லை, வல்லை. இன்று உன் ஆயுளுக்கு எல்லை, எல்லை என உணர்க என்றான்.

அநுமார் இந்திரஜித்தின் வார்த்தைகளைக் கேட்டு அண்டங்கள் குலுங்க ஆர்த்தார். திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளைப் போல் சிரித்தார். ஏ மூடனே! உங்கள் வாழ்நாளுக்கு எல்லையும் நீங்கள் தொடர்ந்து உலகங்கட்கு செய்த கொடுமைக்கு எல்லையும், உங்கள் ஆட்சிக்கு எல்லையும் கொண்டு வந்திருக்கிறேன் என்றார்.

சிறியதாய் சொன்ன திருமொழியைச் சென்னியில் சூடி, நெறியில் நின்ற இராமபிரானுடைய புகழ்போல், விண்ணளவும் வளர்ந்து தன் யோக சக்தியால் பேருருக்கொண்டு நின்ற அநுமாரை, இந்திரஜித்து தலை நிமிர்ந்து எட்டி எட்டிப் பார்த்தான். பாதிக்குமேல் திருமேனியைக் காணவில்லை.

அநுமார் இந்திரஜித்தின் தேர்ப்பாகனைக் கொன்று, அவனுடைய வில்லை முறித்து எறிந்தார். ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி அவன் தலையில் அடித்தார். அவனுடைய தேர்களை யெல்லாம் அழித்தார்.

இந்திரஜித்து பிரமாஸ்திரத்தை எடுத்து, வில்லில் தொடுத்து, மானசீகமாக, அப்படைக்கலத்துக்குத் தூப தீப நிவேதனங்கள் செய்து அநுமார் மீது ஏவினான். அப்படைக்கலம் பெரிய பாம்பு வடிவாகி அநுமாரைப் பிணித்தது. ஆஞ்சநேயர் மேருமலைபோல் சாய்ந்தார். அவர் முயன்றால் அந்த அஸ்திரத்தை அழித்திருப்பார். அயன் படையை அலட்சியப் படுத்தக்கூடாது. கட்டுண்டு அடங்கிப் போவது நல்லது.

அன்றி இராவணனைக் கண்டு, அவனுக்கு அறநெறிகளைக் கூறலாம். அதனால், அவன் திருந்தி, செய்த பிழைக்கு வருந்தி, சீதா தேவிக்காக எம்பெருமானை பொறாது உய்வு பெறக்கூடும் என்று கருதி, அரக்கர்கள் பாசத்தைப் பற்றிக் கொண்டுவரச் சென்றார்.

அநுமார், தான் வீசிய மரங்களாலும், வீரர்களை எறிந்ததாலும் அழிந்திருந்த இலங்கையைப் பார்த்துக் கொண்டே சென்றார்.

அரக்கியர்கள் அநுமனைக் கண்டு, இந்தக் குரங்குதான் என் கணவனைக் கொன்றது. இந்தக் குரங்குதான் என் மகன்களைக் கொன்றது, இந்தக் குரங்குதான் என் தந்தையைக் கொன்றது என்று கூறி இகழ்ந்தார்கள்.

இந்தக் குரங்கை அடியுங்கள், கடியுங்கள், குட்டுங்கள் உதையுங்களஞ் என்று சில அரக்கியர் ஆரவாரஞ் செய்தார்கள். இந்தச் செய்தியைக் கேட்ட சீதாதேவி பெரிதும் வருந்தி அழுது மூர்ச்சித்தனள். அநுமாருடைய நலத்துக்காக இறைவனை வேண்டிக் கொண்டனள்.

அநுமாரைக் கட்டி இழுத்துக்கொண்டு மேகநாதன் வரும் செய்தியை உரைத்தவர்கட்கு இராவணன் பரிசு தந்தான்.

இந்திரஜித்து இராவணனுடைய அதி அற்புதமான அ,ழகிய அரண்மனைக்கு அநுமனை அழைத்துச் சென்று. அநுமாரைக் காட்டி வணங்கி, தந்தையே! இந்த வாநரம் குரங்கு அன்று. சிவமூர்த்தியோ, திருமாலோ வாநரவடிவில் வந்திருக்கின்றார்கள் என்று கூறினான்.

உறங்கும்போது கண்ட இராவணனை இப்போது அநுமார் விழித்திருக்கும்போது காண்கின்றார். ஆலகாலம் போலச்சீற்றம் எழுந்தது. அவனுடைய தலைகளைப் பாதத்தால் பனம்பழம்போல் உருட்டிப்பதைக்கப் பதைக்க வதைக்கட்டுமா? இவன் எலும்புகளை ஒடிக்கட்டுமா? என்று எண்ணினார். பின்னர், தம் கருத்தை மாற்றிக் கொண்டார். இவன் சிவனிடம் வரம் பல பெற்றவன். இவனைக் கொல்வது அரிது. இவனாலும் என்னைக் கொல்வது அரிது. போர் புரிவதால் நாள் வீணே கழியும். சீதாதேவி இன்னும் ஒரு மாதந்தான் இலங்கையில் இருப்பேன். பின்னர் உயிர் விடுவேன். என்று கூறியுள்ளார். ஆதலால், நாம் காலத்தை வீணாகக் கழிக்கக் கூடாது. என்று எண்ணிக் கரைகடவாத திரைகடல் போல் நின்றார்!.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Sun Aug 29, 2010 12:30 am

இராவணனும் அநுமாரும்

இராவணன் மாருதியை நோக்கி வினவுகின்றான். ஏ வாநரமே? நீ சக்கராயுதமா? வஜ்ராயுதமா? மூலாயுதமா? பிரமதேவனா? பூமியைத் தாங்குகின்ற ஆயிரந் தலைகளையுடைய ஆதிசேஷனா? இந்த இலங்கையில் போர் புரிந்து அழிக்கும் பொருட்டுப் பேரையும் வடிவத்தையும் மறைத்து வந்திருக்கின்றாய். உயிர்களைக் கவர்கின்ற நீலநிறமுடைய காலனா? சிரவுஞ்ச மலையைப் பிளந்த வேலேந்திய முருகக் கடவுளா? தென்திசையில் வாழ்கின்ற அகத்திய முனிவரா? எண்திசைக் காவலரில் நீ யாவன்? அந்தணர்கள் அபிசார வேள்வி செய்து இலங்கையை அழிக்க அனுப்பிய அஞ்சாமையுடைய பூதமா? பிரமதேவன் அனுப்பிய வலிமை மிகுந்த தெய்வமா? நீ யார்? உன்னை யார் இங்கே அனுப்பியவர்? உண்மையை உரைப்பாயாக என்று வினவினான்.

அநுமார், இரக்கமில்லாத அரக்கனே நீ கூறிய அனைவரும் அல்லன். அந்த அற்பமான வலிமையுடையவர்க்கு ஏவல் புரிகின்றவன் நான் அல்லன், தாமரைக் கண்ணாகிய ஒரு சமானமில்லாத வில்லாளியின் தூதன் யான். இலங்கை எய்தினேன். அந்த வில்லாளி யார் என்று அறிய விரும்புகின்றாயா? தேவர், மனிதர், முனிவர் முதலிய அனைவராலும் முடிக்க முடியாத அரிய செயலைச் செய்பவர். இராவணா நீ பலகாலமாகச் சம்பாதித்த வலிமையையும், தேவர்கள் அளித்த வரங்களையும் , உன் சேனைகளையும் உன் பெருமிதமான வாழ்வையும் ஒரு கணையால் அழிக்க வல்லவர்.

அறிவில்லாதவனே, ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள். எக்காலமும் கடந்த மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி, மூலத்தையும் கமண்டலத்தையும், சக்கரத்தையும் துறந்து, ஆலம் இலையும் மலரையும் கைலையையும் விடுத்து வந்துள்ளார். தருமத்தை எங்கும் நிலை நிற்கச் செய்து, மக்கள் மீதுள்ள கருணையால் வேதங்கள் கூறிய நீதி நெறிகளை மக்கள் தெரிந்து ஒழுகும்படி, அவர்களைச் செந்நெறியில் செலுத்தித் தீயவரை அழித்துத் தூயவருடைய துன்பத்தைத் தொலைத்துத், தன் திருவடியைச் சிந்திப்பாருடைய பிறப்பை அறுக்கும் பரமாத்மா பிறந்தார். எங்கே பிறந்தார். கிணற்றிலே வீழ்ந்தவனைக் காக்கத் தாமும் கிணற்றில் வீழ்ந்து தூக்கிக் காப்பதுபோல் அப்பரமாத்மா வந்து பிறந்தார் என உணர்க.

அசுர வேந்தனே அயன் அரி அரன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து ஓருருவாகி, அயோத்தியில் அவதரித்த இராமபிரானுக்கு அடியவன் யான், என் பேர் அநுமான். சீதாதேவியைத் தேடி வந்த அங்கதனுடைய தூதன்.

இராவணன் தோள் குலுங்க நகைத்து, அங்கதன் தூதனே, என் நண்பனாகிய வாலி சுகமா? வாலியின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகின்றதா? என்று கேட்டான்.

அநுமார், அரக்கனே, பயப்பட வேண்டாம். இராமபிரானுடைய ஒரு கணையால் வாலி மாண்டுவிட்டான். இனி பிழைத்து வரமாட்டான். உன்னைக் கட்டி, எண் திசைகளிலும் தாவி, உன்னை வேதனைப்படுத்திய வாலும், தீயில் மூழ்கி விட்டது. இப்போது மூரிய குமாரனாகிய சுக்ரீவன் ஆட்சி புரிகின்றான். நான் இராமருக்கும் சுக்ரீவனுக்கும் இனிய அன்பன். உனக்கு அறிவுரை கூற வந்தேன். உன்னை எனக்குக் காட்டுவார் இல்லாமையால் அசோகவனத்தை அழித்தேன். விளக்கில் வீழ்ந்து மின்மினிப் பூச்சிகள் அழிவதைப்போல் உன்னுடைய படை வீரர்கள் என்பால் போர் புரிந்து மாண்டார்கள்.

புலத்தியன் மரபில் வந்த நீ ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஒழுக்கம் உயிரினும் உயர்ந்தது. பிறன் மனைவியை விரும்புவோனைப் பழியும் பாவமும் சேரும், நரகமே வாய்க்கும். அதனால் பெருந்துயர் அடைவான். உனக்குப் பல மனைவியர்கள் இருக்கின்றனர். போக மாதர்கள் பலர் இருக்கின்றார்கள். இத்தனை இருந்தும் பரதாரத்தை நீ விரும்புவது அறிவுடைமையாகுமா? வீட்டில் பசியாற அன்னமிருக்க, இன்னொருவன் மனையில் உண்ண அன்னத்தைத் திருடலாமா? நீ அரசனா? கள்வனா? சீதாதேவியை இராம பிரானிடம் ஒப்புவித்தால் அப்பரம கருணாநிதி உன்னை மன்னிப்பார். வாழ்வும் வரமும் தருவார். காமத்தால் அறிவிழந்து அசுர குலத்தையே அழிக்காதே. செய்த பிழைக்கு வருந்து, உள்ளந் திருந்து. இராமபிரான் திருவடியைப் பொருந்து. அடைக்கலம் புகுந்தவரை ஆதரிப்பது இராமபிரானுடைய பரம்பரை சொத்து. அடைக்கலம் புகுந்த அற்பப் புறாவுக்கு உடல் தசையை அறுத்துத் தந்த சிபிச் சக்ரவர்த்தியின் பேரன். இராமச்சந்திர மூர்த்தி உன்னை மன்னித்துக் கருணை புரிவார். அவரைப்போன்ற கருணா மூர்த்தியை உலகத்தில் காண்பது அரிது என்று அநுமார் கூறினார்.

இராவணன் இதைக் கேட்டு பெருஞ்சீற்றம் அடைந்தான். அற்பக் குரங்கே, நீ எனக்கு அறிவுரை கூறுவதா? உன்னை இப்போதே நமன் உலகுக்கு அனுப்புவேன் என்று கூறி, மிகவும் சீறி, அநுமாரைக் கொல்லுவதற்கு வாளை எடுத்தான்.

அப்போது விபீஷணர் இராவணனைத் தடுத்து அண்ணா, மாதரையும், தூதரையும் கொல்லக் கூடாது. அப்படிக் கொன்றால் நமது புலத்தியர் குலத்திற்கு இழுக்காகும். ஆகவே, கொல்லாதே என்று கூறினன்.

இராவணன், நன்று கூறினாய். தூதரைக் கொல்லுவது பாவம் என்று சீற்றம் ஆறி. இந்தக் குரங்கின் வாலில் கயிறுகளைச் சுற்றி, நெய்யில் நனைத்துத் தீவைத்துச் சுட்டு அனுப்புங்கள் என்று கட்டளையிட்டான்.

இந்திரஜித் அநுமாரைப் பிடித்துப் பாசத்தை அகற்றினன். இலங்கையில் உள்ள தாம்புக்கயிறு, ஊஞ்சல் கயிறு, கொடிக்கயிறு முதலிய எல்லாக் கயிறுகளையும் கொண்டு வந்து அநுமாருடைய வாலில் சுற்றினார்கள். அரக்கிமார்கள் தாலிக் கயிற்றை மட்டும் வாங்கவில்லை. கயிறுகளைச் சுற்றச் சுற்ற வால் நீண்டு கொண்டே இருந்தது. ஒரு லட்சம் அரக்கர்கள் வாலைப் பற்றி நின்றார்கள்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Sun Aug 29, 2010 12:30 am

இராவணன், சேவர்களே, இந்த குரங்குக்கு நான் செய்த தண்டனையை மக்கள் உணர்ந்து மகிழவேண்டும். அதனால் வீதிகள் தோறும் சுற்றிக் காட்டிவிட்டு, வடக்குக் கடலோரம் தீ வையுங்கள் என்று பணித்தான்.

இச்செய்தியைக் கேள்வியுற்ற சீதாதேவி, ஏ, அக்கினி பகவானே! நீ உலகுக்குச் சாட்சியாக இருப்பவன், நான் கற்பில் தூயவள் என்பது உண்மையானால் என் மகன் அநுமனைச் சுடாதே.

அரக்கர்கள் அநுமாருடைய வாலில் தீயிட்டார்கள். அந்த நெருப்பு அவரைச் சிறிதும் சுடாமல் சந்தனம் போல் குளிர்ந்திருந்தது. அநுமார் அந்த அற்புதத்தைக் கண்டு, இது அன்னையின் அருள் என்று அன்னை இருந்த திசையை நோக்கித் தொழுதார்.

அநுமாருடைய வாலில் அக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. அநுமார் உயர்ந்த ஒரு கோபுரத்தின் மீது ஏறி, இலங்கை முழுவதும் வாலை நீட்டி அந்நகர் முழுவதையும் கொளுத்தினார்.

நகர் முழுவதும் தீயினால் எரியலாயிற்று. மாதர்களும், குழந்தைகளும், தீயில் விழுந்து மடிந்தனர்.

அப்போது இலங்கையில் அழுகை ஒலி எங்கும் எழுந்தது.. . எங்கும் புகைப் படலம் மூடியது. இராவணனுடைய அரண்மனை எரிந்தது. இராவணன் முதலியோர் விமானம் ஏறி விண்ணில் இருந்து பிழைத்தார்கள்.

இலங்கை எரியக் காரணம் என்ன? என்று கேட்டான் இராவணன்.

சேவர்கள் அவனைத் தொழுது, குரங்கின் வாலில் நாம் இட்ட தீ நமக்கு வந்துவிட்டது என்றார்கள்.

அந்தக் குரங்கைப் பற்றிக் கொண்டு வாருங்கள் என்றான். பல அரக்கர்கள் வெப்பம் தாங்காமல் கடலில் மூழ்கினார்கள்.

அநுமார் தன்னைப் பற்ற வந்த ஐம்பதாயிரம் அரக்கர்களை வாலில் உள்ள தீயினால் எரித்து, வானத்தில் இளம் ஞாயிறு போல், ஒளிரச் செய்து அசோக வனத்தை அடைந்து பிராட்டியாரைத் தொழுதார்.

அன்னை, அநுமாருடைய வீரச் செயலைக் கண்டு மகிழ்ச்சி கொண்டு அநுமாரை வாழ்த்தினார்.

அநுமார் வந்த காரியம் இனிது முடிந்ததென மகிழ்ந்து வானத்தில் ஓங்கி வடதிசை நோக்கிப் பாய்ந்தனர்.

இடையில் மைந்நாக மலையில் தங்கி, அம்மலையரசன் உபசாரத்தைப் பெற்று, மிக்க வேகத்துடன் பாய்ந்து மகேந்திர மலையில் குதித்தார். தாயின் வரவைக் கண்ட பறக்க இயலாத இளமட பறவையின் குஞ்சுகளைப் போன்ற வாநரங்கள்; அநுமாரைப் கணடு அகமகிழ்ந்தார்கள்.

சில வாநரர் அநமாரைக் கண்டு அழுதனர். சிலர், அவர் முன்னின்று ஆரவாரஞ் செய்தார்கள். சிலர், வணங்கினார்கள். சிலர், ஆடினார்கள், சிலர், பாடினார்கள் சிலர் அவரை அள்ளி விழுங்குவதுபோல் பார்த்து நின்றார்கள். சிலர் கிழங்கு காய் முதலிய இனிய உணவுகளைத் தேடிக் கொணர்ந்து அவர் முன்னே உண்ணுமாறு வைத்தார்கள்.

தேவியைக் கண்டு வந்தார் என்று அவர் திருமுகக் குறிப்பே சொல்ல உணர்ந்து கொண்டார்கள்.

அவருடைய தாள்களிலும், மார்பிலும் தோள்களிலும், போரில் ஆயுதங்களில் ஏற்பட்ட புண்களை நோக்கிப் பெருமூச்சுவிட்டு வருந்தினார்கள்.

அநுமார் முதலில் அங்கதனை வணங்கினார். பின்னர், ஜாம்பவானை வணங்கினார்.

எல்லாருக்கும் தேவியினுடைய வாழ்த்துரையைக் கூறினார். வாநரங்கள் மீண்டும் மீண்டும் அவரை வணங்கி போய்வந்த விவரத்தையும், தேவியைத் தரிசித்ததையும் கூறுமாறு வேண்டினார்கள்.

அநுமார், இராமனடியார்களே, உங்களுக்கு வணக்கம் இராமபிரானுடைய திருவருளினாலும் உங்கள் ஆசியினாலும் இலங்கை மாநகரம் சென்று, தேவதேவனுடைய பத்தினியாகிய சீதா தேவியைக் கண்டு, அடையாளங்களைக் கூறினேன். இலங்கையில் பிராட்டியார் மெலிந்து, நலிந்து, தவநெறியில் இருக்கக் கண்டேன். அம்மையார் கொடுத்த அடையாளத்துடன் இங்கு மீண்டும் வந்தேன். என்று கூறினார்.

அரக்கரோடு போர் புரிந்ததையும் வெற்றி பெற்றதையும் இலங்கையில் தீ வைத்ததையும் சொன்னாரில்லை. சொன்னால் தற்புகழ்ச்சியாகும் என்று எண்ணி மறைத்துவிட்டார்.

ஆனால், போர் புரிந்ததை அநுமாருடைய உடம்பிலிருந்த புண்கள் தெரிவித்தன. அவர் திரும்பி வந்ததே வெற்றியைத் தெரிவித்தது. அங்கு வானத்தில் எழும் புகையே இலங்கை எரிவதைத் தெரிவித்தது. அங்குள்ள அரக்கரின் பெருமை, தேவி உடன் வராமையே தெரிவித்தது.

அநுமார் வாநர வீரர்களைக் கண்டு, எம்பிராட்டியார் இலங்கையில் ஒரு மாதந்தான் உயிரோடு இருப்பேன். பின்னர் மாண்டுபோவேன். என்று மிகுந்த வருத்தத்தோடு கூறினார். ஆதலால், நாம் தாமதம் செய்யாமல் புறப்பட வேண்டும் என்றார்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Sun Aug 29, 2010 12:36 am

மதுவனம்

சீதாதேவியைக் காண அநுமார் இலங்கைக்கு போனபின் மகேந்திர பர்வதத்தில் இருந்த வாநர வீரர்கள் அநுமார் தேவியைக் கண்டு வரவேண்டும் என்று இராமபிரானுடைய திருவடியை நினைந்து உண்ணாமலும், உறங்காமலும், ஙஇராம இராம இராமங என்று நாம பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். அதனால், எல்லாரும் பசியினால் வாடி வதங்கி இருந்தார்கள். வழியில் மதுவனத்தைக் கண்டார்கள். மதுவனம் இந்திரனுக்கு உரியது. அதனை அந்திரன் மகனாகிய வாலி அடைந்தான். வாலியின் மறைவுக்குப் பின் அம்மதுவனம் சுக்ரீவனுடைய ஆட்சிக்கு வந்தது. அதனை இப்பொழுது ததிமுகன் என்ற வாநர வீரன் தன் ஏவலர்களுடன் காவல் புரிந்தான்.

வாநர வீரர்கள், அடங்காப் பசியுடன் சோர்ந்து அங்கதனைப் பணிந்து, இந்த மதுவனத்தில் உள்ள மதுவை நாங்கள் பருக அனுமதி தரவேண்டும் என்றார்கள். அங்கதன் அவ்வாறே அனுமதி தந்தான். வாநரங்கள் மதுவை ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் பருகி மகிழ்ந்தார்கள்.

ஒருவர் வாயில் விட்டு, இட்டு உண்ணும் தேனை, இன்னொரு வாநரம் குடித்துவிட்டுச் செல்லும். ஒருவர் கையில் உள்ள தேனை மற்றொரு வாநரம் பிடுங்கிக் கொண்டுபோய் உண்ணும் ஒரே குரங்கின் மீது ஏறி மற்றொரு குரங்கு அமர்ந்து தேனை உண்ணும். ஒருவரை ஒருவர் தழுவியும், ஒருவரை ஒருவர் ஏசியும், மதுவை உண்டு மகிழ்ந்தார்கள். காவல் செய்யும் வாநரங்கள் தடுக்க அவர்களை இவர்கள் அடித்தார்கள். அவர்கள் போய்த் ததிமுகனிடம் முறையிட்டார்கள். ததிமுகன் என்ற வாநர வீரன் அங்கதனிடம் போரிட்டான். அவனை அவன் நையப்புடைத்தான். துன்பப்பட்ட ததிமுகன் சுக்ரீவனை நாடிச் சென்றான்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by சிவா on Sun Aug 29, 2010 12:37 am

இராமரின் துயர்

இராமபிரான் ரிசியமூக பர்வதத்தில் துன்பக் கடலில் மூழ்கியிருந்தார். சுக்ரீவன் அவரைத் தேற்றிக் கொண்டிருந்தான். இராமர், சுக்ரீவா, நாம் அனுப்பிய எல்ல வாநரங்களும் சீதையைக் காணாமல் திரும்பி வந்துவிட்டன. தென் திசைக்குப்போன அநுமன் முதலியோர்கள் வந்தார்களில்லை. சீதையைக் காணாத வருத்தத்தால் மாண்டு போனார்களோ, இராவணனைச் சந்தித்து அவனிடம் போர் புரிந்து கொண்டிருக்கிறார்களோ? அவன் அவர்களை எங்காவது சிறையில் வைத்துவிட்டானோ! சீதையைக் காணாது வெந்து நொந்து உள்ளம் உலைந்து தவம் புரிந்துகொண்டிருக்கின்றார்களோ! என்றெல்லாம் கூறி வருந்திக் கொண்டிருந்தார்.

ததிமுகன் அங்கதனால் அடிப்பட்ட புண்களுடன் சுக்ரீவனை அணுகித் தொழுது நடந்ததை நவின்றான். இதைக் கேட்ட சுக்ரீவன் மகிழ்ந்தான். வாநரங்கள் தேவியைக் கண்டு வந்த மகிழ்ச்சியினால் மதுவனத்தை அழித்து இருக்கிறார்கள். ஆதலால், இராம கைங்கர்யம் நிறைவேறி இருக்க வேண்டும் ததிமுகனே, அங்கதன் இளவரசன், மதுவனத்துக்கு உரியவன் அவனை நீங்கள் எதிர்க்கலாமா? நீ அங்கு போய் அங்கதனைச் சரணம் அடைவாயாக! என்று கூறிவிட்டு இராமபிரானைப் பார்த்துச் சொல்லுகின்றான். ஐயனே! பிராட்டியைக் கண்ட மகிழ்ச்சியினால் வாநரங்கள் மதுவனத்தை அழித்து மகிழ்கின்றார்கள். ஆதலால், தாங்கள் வருந்த வேண்டாம் என்று கூறினான்.

அநுமார் திருவடி தொழுதல்

ஆஞ்சநேயர் அந்த நேரத்தில் இராமபிரானிடம் வந்து தேவியிருக்கும் திசை நோக்கி இராமபிரானுக்கு நேரே கால்கள் நீட்டித் தென் திசை நோக்கி கைகூப்பி வணங்கினார். இக்குறிப்பை நோக்கி ராமபிரான் சீதாதேவி இலங்கையில் கற்பு நெறியில் நிற்கின்றாள் என்பதை உணர்ந்தார்.

அநுமார், கண்டனன் கற்பினுக்கு அணிகலத்தைக் கண்டனன். அப்பிராட்டியின் கண்களினால் அவளைக் கற்பினுக்கு அணிகலன் என்று கண்டுகொண்டேன். தென் கடலில் இலங்கை மாநகரில் அத்தேவி தவம் இருக்கக் கண்டேன்.

ஐயனே, தேவரீருடைய தேவியென்னும் தன்மைக்கும் தசரத ராஜாவுடைய மருகியென்னும் வாய்மைக்கும், ஜனக ராஜாவினுடைய மகள் என்னும் தன்மைக்கும் உரியவளாக எம்பிராட்டியைக் கண்டேன்.

பொன்னுக்குப் பொன்தான் உவமை. தேவிக்குத் தேவிதான் உவமை. உமக்கு நீரே உவமை. எனக்கு நானே உவமை என்று என்னை யெனக்குத் தந்தார். இராகவா, உமது ஆதித்தன் குலத்தைத், தான் தவமிருந்து உயர்த்தி, உமக்கே உரியதாகக் செய்தாள். புகழ் நிறைந்த தான் பிறந்த ஜனக மாமன்னரின் குலத்தைப் பெருமைப்படுத்தினாள். தன்னைத் தனிமை செய்து கொண்டு கொடிய அரக்கர் குலத்தை இயமனுக்குத் தந்தாள். தேவகுலத்தை வாழ்வித்தாள். என் குலத்தை எனக்கே தந்தாள்.

யார் எந்தக் குரங்கைப் பார்த்தாலும் அநுமார் போகிறார் என்பது உலக வழக்கு.

கோதண்டம் ஏந்திய கோமகனே! கடல் சூழ்ந்த இலங்கையில் நல்ல தவம் செய்கின்ற ஒரு நங்கையைப் பார்த்தேன் என்று எண்ண வேண்டாம். குடிபிறப்பு என்ற குணமும், பொறுமை என்ற குணமும், கற்பு என்ற குணமும் இந்த மூன்று குணங்களும் சேர்ந்து ஒன்றையொன்று பற்றிக்கொண்டு மகிழ்ச்சியினால் நடனம் புரியக் கண்டேன்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: இராம காவியம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum