ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
விஷ சேவல் கோழி மீன்
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 M.Jagadeesan

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...

View previous topic View next topic Go down

தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...

Post by sundaram77 on Wed Sep 25, 2013 7:58 am

நண்பர்களே,

மனித இனம் என்றும் தன் சூழல் பற்றிய விவரங்களைக் கூட்டிக் கொண்டே வந்துள்ளது ;
ஒரு கட்டத்தில் நிமிர்மாந்தன் ( Homoerctus ) எனும் நிலையை அடைந்த பின்னர் இவ்விவரங்கள் பெருகலாயிற்று !
இந்நிலையில் இவ்விவரங்களை அவன் பாகுபடுத்தவேண்டிய அவசியத்திற்கு உள்ளாகியிருப்பான் !!
அறிவியல் இப்படித்தான் துவக்கமாயிருக்கும் ...!!!
இதற்கிடையில் மாந்தரினம் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு வாழ முற்படுகையில் நாகரிங்கள் தோன்றலாயின.
இந்நாகரிங்களில்சிறப்பிடத்தை பெற்றவை சுமேரிய , பாபிலோனிய நாகரிங்கள் ; சீனமும் , எகிப்தும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு
வளர்ந்த விட்ட நாகரிங்களே ...இன்னும் கார்த்தேஜ் , அச்டெக் , மாயா , இன்கா , ஹாரப்பா...


இவை யாவையும் விட இன்றைய மனித அறிவின் பிரமண்டாத்திற்கு வித்திட்டது கிரேக்கமே !
தர்க்கவியல் , வானியல் , இயற்கை விஞ்ஞானம் , அழகியல் , இலக்கியம் , கணிதம் ...
என்பன போன்ற பலதுறைகளிலும் அவர்களின் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது .
எத்துனை அறிஞர்கள் , எத்துனை தத்துவங்கள் , எத்துனை அறிவுக்கூடங்கள் , எத்துனை நூல்கள் ...
தேல்ஸ் , அனாக்சிமான்டர் , பிதகோரஸ் , அனாக்ஸகோரஸ் , யூக்ளிட் , சாக்ரடிஸ் ,
அவர் சீடர் பிளாட்டோ , அவர் சீடர் அரிஸ்டாட்டில் , ஆர்கிமெடிஸ் , ஹிப்பார்கஸ் , டாலமி ...பட்டியல் தீராது , நண்பர்களே...!!!


சரி , இவர்கள் இருக்கட்டும் ...நம் முன்னவர்கள் - அதாவது , முன்னோர்கள் - அறிந்திருந்தது என்ன எனப் பார்ப்போமா !?
அந்தோ , பரிதாபம் ! நம் இலக்கியச் செல்வங்களும் , அறிவியல் ஆக்கங்களும் நம் மூடத்தனத்தினாலேயே இழக்கப்பட்டன !
நல்ல நூற்கள் , தீக்கோ , ஆற்றுவெள்ளத்திற்கோ எதிர்நிற்கும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழன் கையால் அழித்த நூற்கள் கணக்கிலடங்கா...

தொல்காப்பியன் தன் பேராக்கத்தில் எத்துனை இடங்களில் என்ம , என்மனார் , மொழிப , படுப , என்மனார் புலவர்....என்றெல்லாம் சொல்கிறான்.
தொல்காப்பியம் இன்று முழுமையாகக் கிடைப்பது நம் பேறே ; அன்றியும் , அப்பெரு நூலின் உரைகள் சிலவும் முழுமையாகக் கிடைக்கின்றன .

தொல்காப்பியம் இற்றைக்கு 2200 வருடங்களுக்கும் முற்பட்டதாகும் .
அது ஒரு இலக்கண நூலானாலும் பல அறிவியல் உண்மைகள் அதிலும் விரவிக் கிடக்கின்றன. ஒலி , பேசுதல் , சொல் பற்றி எல்லாம் மிக விரிவாக ,
இன்றைய அறிவியல் பார்வைக்கும் ஒத்துப்போகக்கூடிய வகையில் , முறைமைப்படுத்தப் பட்டிருப்பது வியப்பே ஆயினும் ,
அதனினும் வியப்பானதுஅறிவியல் உண்மைகள் அதில் காணக் கிடைப்பது !
குறிப்பாக உலகில் உள்ள உயிர்களை அவற்றின் அறிவு நிலைப்படி பாகுபடுத்தியிருப்பது !!
எதனையும் நுணுகிப்பார்க்கும் தொல்காப்பியனின் நுட்பம் உயிர்களின் பகுப்பு முறையிலும்
தெள்ளெனத் தெரியுமாறு சிறந்து நிற்கிறது .மொழி , இலக்கியம் , உலகியல் மட்டுமின்றி
மரபியலிலும் அவர்தம் அறிவின் ஆட்சி ஓங்கி நிற்கிறது .
உயிர்களை அவர் இவ்வாறு பிரிக்கிறார்.1. ஓரறிவு உயிராவது உடம்பினால் அறிவது .
( எ.கா. ) புல் , மரம் , - பனை , புளி , தாமரை....
2. ஈரறிவு உயிராவது உடம்பாலும் , வாயாலும் அறிவது.
( எ.கா. ) சங்கு , நத்தை , கிளிஞ்சல் ...
3. மூவறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு இவற்றால் அறிவது.
( எ.கா ) எறும்பு , அட்டை ...
4. நாலறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் இவற்றால் அறிவது.
( எ.கா ) நண்டு , தும்பி ....
5. அய்ந்தறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி இவற்றால் அறிவது.
( எ.கா ) புலி , பாம்பு , மீன் , ....
6. ஆறறிவு உயிராவது உடம்பு , வாய், மூக்கு, கண் , செவி , மனம் இவற்றால் அறிவது.
( எ.கா. ) மக்கள் ...( தேவரும் , அசுரரும் கூடத்தான் )...

இவ்வளவு செம்மையானப் பிரிவினை மரபியலில் 27 - வது நூற்பா சுட்டுகிறது...

' ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே '
' இரண்டறிவதுவே யதனொடு நாவே '
' மூன்றறிவதுவே யவற்றொடு மூக்கே '
' நான்கறிவதுவே யவற்றொடு கண்ணே '
'அய்ந்தறிவுதுவே யவற்றொடு செவியே '
'ஆறறிவதுவே யவற்றொடு மன்னே ' ( தொல் - மரபு - 27 )


உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லையுடையனவென்றும் அவற்றின் தன்மைகள் என்ன என்பதையும்
முதன் முதலில் இனங்காட்டியவர் தொல்காப்பியரே எனலாம்.

உயர்ந்து வளரும் தாவர இனங்களை புல் , மரம் என எளிமையாகப் பிரிக்கிறார் , தொல்காப்பியர்.
அகத்தே வலிமையுடையதுமரம் ; புறத்தே வலிமையுடையது புல் , என்கிறார் ! சரியா..
புறத்தே வைரமுடையன புல் எனவும் அகத்தே வைரமுடையன மரம் எனவும் தாவரவியல் அறிஞர் போன்று இனங்காண்கிறார்.

புல்லும் மரனும் ஓர் அறிவினவே ( தொல் - மரபு - 1527 )

புறக்காழனவே புல் என மொழிப
அகக்காழனவே மரம் என மொழிப ( தொல் - மரபு - 1585)


நமது இலக்கியங்களில் நிறைய இல்லாவிடினும் கிடைக்கும் சில அறிவியல் உண்மைகளை பின்னரும் காண்போம்..

அன்புடன்,
சுந்தரம்


Last edited by sundaram77 on Wed Sep 25, 2013 9:04 am; edited 1 time in total
avatar
sundaram77
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 77
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Sep 25, 2013 8:34 am

மிகவும் அருமை...சுந்தரம் அவர்களே... 
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5297
மதிப்பீடுகள் : 1837

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தொல்காப்பியனின் அறிவுப்பகுப்பு...

Post by sundaram77 on Wed Sep 25, 2013 12:14 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை...சுந்தரம் அவர்களே... 
Dear  Dr,
Thank  u  for ur encouraging  words  !
I just thought because of my political and literary opinions - perhaps too strong to digest - people hesitate to post their opinions here . But , I am a fairly matured person . That's what my
estimate is !
So , I can tolerate opinions contrary to mine . May I quote Voltaire :
" I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it. "
With regards,
sundaram
avatar
sundaram77
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 77
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum