ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 M.Jagadeesan

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

உலகைச்சுற்றி
 ayyasamy ram

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

View previous topic View next topic Go down

திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

Post by சிவா on Sun Oct 13, 2013 10:04 am

சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடிப்பில், சூரி, இமாம் அண்ணாச்சி, சிங்கம் புலி, ஸ்ரீமன், சத்யன் ஆகியோர் கூட்டணியில் புதிதாக வெளிவந்திருக்கும் படம் ‘நைய்யாண்டி’.

‘நைய்யாண்டி’ படம் பார்க்கச் செல்லும் முன் கீழ்காணும் விஷயங்களை கவனித்து விட்டுச் சென்றால் ஏமாற்றமின்றி ஒரு இரண்டரை மணி நேரம் ரசித்துவிட்டு வரலாம்.

1. தனுஷ் படமாச்சே பொல்லாதவன், ஆடுகளம் போல நடிப்பில் கலக்கியிருப்பாரோ என்ற ஒரு எதிர்பார்ப்போடு போக வேண்டாம்!

2. களவாணி, வாகை சூட வா போன்ற படங்களை இயக்கிய சற்குணம் படம் ஆச்சே  ‘நைய்யாண்டி’ வித்தியாசமான கதையாக இருக்குமோ என்றும் யோசித்து போக வேண்டாம்!

3. படம் வெளிவரதுக்கு முன்னாடியே இந்த நஸ்ரியா பொண்ணு இயக்குநர் மேல குற்றம் சாட்டி காவல்துறை வரை போச்சே ஒருவேளை இந்த படத்துல நஸ்ரியா ரொம்பவே கிளாமரா நடிச்சிருக்குமோ என்ற எண்ணத்தோடும் போக வேண்டாம்!

4. ‘நைய்யாண்டி’ தலைப்பே காமெடி படம்னு சொல்லுதே …படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குமோ என்று எண்ணி கூடவே வயித்து வலி மருந்தெல்லாம் எடுத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை.

இதெல்லாம் எதையும் மனசுல வச்சுக்காம, டிக்கெட் விலை ஏறிப் போச்சேன்னு கவலைப்படாம படம் பார்த்தா நிச்சயம் ‘நைய்யாண்டி’ யை ரசிக்கலாம்.


முதல் பாதி இன்னொரு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’


படத்தின் முதல் பாதி…

கும்பகோணம் பக்கத்தில் ஒரு கிராமம்… அந்த கிராமத்தில் வேலை வெட்டியின்றி ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும்  4 வாலிபர்கள் (தனுஷ், சூரி, இன்னும் இருவர்)…

அவர்களுக்கு ‘நண்பர் நற்பணி மன்றம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பு… அதற்கு தனுஷ் தான் தலைவர்.

கோடீஸ்வர அப்பாவிற்கு மிகவும் செல்லப் பெண்ணான நஸ்ரியா நசிம் தனது பாட்டி ஊருக்கு திருவிழாவிற்கு வருகிறார். அவரைப் பார்த்த முதல் நாளே காதலிக்கத் தொடங்கிவிடுகிறார் தனுஷ்.

நஸ்ரியாவை காதலிக்க வைக்க தனுஷ் என்னென்னவோ ‘நைய்யாண்டி’ வேலைகளை செய்து இறுதியில் அவரைக் காதலிக்கவும் வைத்துவிடுகிறார்.

நஸ்ரியா – தனுஷ் காதல் விவகாரம் தெரியாமல் தனது பெண்ணிற்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விடுகிறார் கோடீஸ்வர தந்தை நரேன்…

அந்த மாப்பிள்ளை தான் கதையின் வில்லன்…

காதல் விவகாரம் நஸ்ரியாவின் அப்பாவிற்கும், வில்லன் மாப்பிள்ளைக்கும் தெரியவர தனுஷும், நஸ்ரியாவும் ஊரைவிட்டு ஓடி விடுகிறார்கள்…

இப்படியாக முதல் பாதி முழுக்க படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட கதைகளை சொல்லி படத்தை எப்படியோ ஓட்டி விடுகிறார் இயக்குநர் சற்குணம்.


இரண்டாவது பாதி  ‘சிரிப்பு வெடி’

இரண்டாவது பாதியில் தான் நைய்யாண்டியே ஆரம்பிக்கிறது.

நஸ்ரியாவிற்கு யாருக்கும் தெரியாமல் தாலி கட்டி தனது சொந்த வீட்டில், குத்துவிளக்கு தொழில் செய்யும் தனது அப்பாவிடம் கணக்காளராக சேர்த்து விடுகிறார் தனுஷ்.

தனது அண்ணன்களான ஸ்ரீமன் மற்றும் சத்யன் ஆகியோருக்கு கல்யாணம் ஆன பின்பு, நமது கல்யாண விவகாரத்தை வீட்டில் சொல்லிவிடலாம் என்றும் தனுஷ் நஸ்ரியாவை சமாதானப்படுத்துகிறார்.

இத்தனை வயது ஆகியும் கல்யாணம் ஆகாமல் முதிர்கண்ணன்களாக இருக்கும் ஸ்ரீமனும், சத்யனும் தங்கள் வீட்டில் இருப்பது தம்பியின் மனைவி என்று தெரியாமல் போட்டி போட்டுக்கொண்டு நஸ்ரியாவை காதலிப்பது படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் சிரிப்பு விருந்து.

தனுஷின் அப்பாவாக வரும் பிரமிட் நடராஜன், அம்மாக வரும் நடிகை ஆகியோரும் அவர்கள் பங்கிற்கு படத்திற்கு கலகலப்பு சேர்த்திருக்கிறார்கள்.

அந்த வகையில், படத்தின் இரண்டாவது பாதி தொடங்கி படம் முடியும் வரை படம் பார்ப்பவர்களுக்கு சிரிப்பதற்கும், ரசிப்பதற்கும் காட்சிகள் உள்ளன என்பது என்னவோ உண்மை.


படத்தின் இசை

படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடலை தனுஷ் தனது குரலில் பாடியிருக்கிறார்.

பாடல் காட்சிகள் அனைத்தும் படத்திற்கும், கதைக்கும் சிறிதும் சம்பந்தமில்லாமல் வெளிநாடுகளில் படம்பிடித்திருக்கிறார்கள்.

படம் பார்த்த ஒரு ரசிகனாக சில கேள்விகள்

சமீப காலங்களாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் மிகச் சிறப்பாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் ஒரு மிகப் பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகர் தனுஷ், ஒரு புதுமுக நடிகர் நடிக்க வேண்டிய ஒரு கதையை தேர்ந்தெடுத்தது ஏன்?

களவாணி, வாகை சூட வா போன்ற படங்களில் விமல் போன்ற புதுமுகங்களை நடிக்க வைத்து மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குநர் சற்குணம், நடிப்பிற்காக விருது பெற்ற தனுஷ் போன்ற ஒரு நடிகர் கிடைத்தும் சரியாகப் பயன்படுத்தாதது ஏன்?

‘வாகை சூட வா’ படத்தில் அவ்வளவு இனிமையான பாடல்களைக் கொடுத்த ஜிப்ரான் போன்ற நல்ல இசையமைப்பாளர் கிடைத்தும், பாடல் காட்சிகளைப் படமாக்க கும்பகோணம் போன்ற அழகிய இடங்கள் இருந்தும் மனதில் நிற்கும் படியான பாடல்களையும், அதற்கேற்ற காட்சிகளையும் கொடுக்காதது ஏன்?

தனுஷ், சற்குணம், ஜிப்ரான் கூட்டணி என்று ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்போடு, டிக்கெட் விலை பற்றி கவலைப்படாமல் காசு கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஒரு திருப்தியான படத்தைக் கொடுக்காதது ஏன்?

மொத்தத்தில் ‘நைய்யாண்டி’ –  பழைய வண்டி…

- பீனிக்ஸ்தாசன் @ செல்லியல்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

Post by ayyasamy ram on Sun Oct 13, 2013 10:12 am


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33576
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

Post by ராஜா on Sun Oct 13, 2013 7:09 pm

நடிப்பிற்காக விருது பெற்ற தனுஷ் போன்ற ஒரு நடிகர் கிடைத்தும் சரியாகப் பயன்படுத்தாதது ஏன்?
சரியான கேள்வி. 
ஆடுகளம் , மயக்கம் போன்ற படங்களை பார்த்து தனுஷ் நடிப்பில் அசந்து போயிருக்கின்றேன் அவர் என் இது போல படங்களை தேர்ந்துடுகிறார் என தெரியவில்லையே. நகைச்சுவை படம் என்றதும் ஒரு மாற்றம் வேண்டும் என்று நடித்துவிட்டார் போல


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

Post by அசுரன் on Sun Oct 13, 2013 9:47 pm

சமுதாயத்தை சீரழிக்கும் படங்களில் தனுஷ் படங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இன்றைய மாணவர்களிடம் இவரின் படங்கள் பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சோகம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

Post by Muthumohamed on Mon Oct 14, 2013 1:00 am

@அசுரன் wrote:சமுதாயத்தை சீரழிக்கும் படங்களில் தனுஷ் படங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இன்றைய மாணவர்களிடம் இவரின் படங்கள் பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சோகம்
 

மறுக்க முடியாத உண்மை தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

Post by ரேவதி on Wed Oct 16, 2013 2:02 pm

சரியான மொக்கை படம் 148 ரூபாய் வேஸ்ட் சோகம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

Post by பாலாஜி on Wed Oct 16, 2013 2:05 pm

@ரேவதி wrote:சரியான மொக்கை படம் 148 ரூபாய் வேஸ்ட் சோகம்

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum