ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

ஏழு நாடுகளின் சாமி
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

View previous topic View next topic Go down

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Post by ராஜு சரவணன் on Mon Oct 14, 2013 4:41 am

[url=http://www.eegarai.net/t103041-1]பாகம்-1[/url]
[url=http://www.eegarai.net/t103318-2]பாகம்-2[/url]

இணையத்தில் தமிழ் சொல்லாக்கம் பற்றிய கட்டுரை ஒன்றை கண்டேன். அதில் கேட்கப்படும் கேள்விகள் உண்மையில் தமிழ் சொல்லாக்கம் பற்றி சற்று சிந்திக்க வைக்கிறது. நாம் பின்பற்றும் சொல்லாக்க முறை பழங்காலத்திய சொல்லாக்க முறைகளில் இருந்து முற்றிலும் முரண்பட்டு/ தடம்புரண்டு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அக்கட்டுரையின் ஆசிரியர் அவ்வளவு பிரபலமோ அல்லது தமிழ் சொல்லாக்கத்தை பற்றி நன்கு தெரிந்தவர் என சொல்லவரவில்லை ஆனால் அவர் கூறும் கருத்து உண்மையில் சாதாரண தமிழனின் மனதில் இருக்கும் தமிழ் சொற்களை பற்றிய ஒரு ஏக்கமாக/எண்ணமாக தான் நான் கருதுகிறேன். இதோ அக்கட்டுரையில் இருந்து சில பாகங்கள்

[quote]தமிழில் Cricket என்ற சொல்லை மட்டைப்பந்து என்று மொழியாக்கம் செய்துள்ளனர். ஆங்கிலத்தில் cricket என்று புதிய சொல் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், நாம் இருக்கும் பழைய சொற்களையே பயன் படுத்தியுள்ளோம். இன்னொரு உதாரணம், பேருந்து என்னும் சொல். இது பெரிய மற்றும் உந்து என்னும் இரு சொற்களில் இருந்து வந்துள்ளது. இதை வழக்கத்தில் பஸ்சு என்றே நாம் பேசி வருகிறோம். 

பண்டைய தமிழகத்தில் இப்படியொரு நிலை இருந்தால் எப்படியிக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போம். மரம், செடி, கொடிகளைப் பார்த்த தமிழன் மண்ணின் கீழ் உள்ள அவற்றின் பாகத்தைப் பார்த்திருக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். தண்டு, கிளை, இலை, மலர் போன்ற சொற்களை அறிமுகப் படுத்திய அவனது முன்னோர்கள் வேர் என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தி இருக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். முதல் முறையாக அவற்றை மண்ணின் கீழ் பார்க்கும் தமிழன் அவற்றிற்கு 'மண் கீழ் கிளை' என்றா பெயரிட்டான்? வேர் என்னும் ஒரு தனிச் சிறப்பான பெயரைத்தானே சூட்டியுள்ளான்? இப்படிச் செய்தல் சந்தேகமின்றி தமிழின் வளர்ச்சியே. மேலும், மண்ணைத் தோண்டி உழுவதற்கான கருவி தமிழனுக்குப் புதிதாக அறிமுகமாகி, அதற்கு அவன் நிலக்கரண்டி என்றோ மண் கரண்டி பெயரிட்டால் எப்படியிருக்கும்? எனினும், நாம் சிறப்பாக கலப்பை என்னும் பெயரைத்தானே கொண்டுள்ளோம்? [/quote]
மேலே சொன்ன கருத்துக்களை தான் நானும் இந்த தொடர் கட்டுரையில் அறிவுறுத்தி வருகிறேன். புதியகண்டுபிடிப்புகள், நுட்பங்கள், பொருட்கள், கருவிகள், கருத்துக்கள், செய்முறைகள் என வரும் போது அவைகளுக்கு தயவு செய்து புதிய சொற்களை தான் உருவாக்க வேண்டும், ஒவ்வொருவரும் புது வரவுகளுக்கு ஒவ்வொரு முறையில் பொருள் கொண்டு இருக்கும் இரண்டு அல்லது மூன்று சொற்களை இணைத்து சொல்லாக்கம் செய்வது நம்முடைய திறமையின்மையை தான் காட்டுகிறது.

அப்படியே சில தமிழ் அறிஞர்கள் சிரத்தையுடன் ஆர்வமுடன் பழங்காலத்திய சொல்லாக்க முறையில் அழகாக சொற்களை உருவாக்கி கொடுத்தாலும் அந்த சொற்களை அப்படியே நிராகரிப்பது, அச்சொல்லை ஊடகங்களில் பயன்படுத்த ஊடகத்தார் மறுப்பது, இந்த சொல் யாருக்கும் புரியாது என சப்பை கட்டு கட்டுவது அல்லது அதை கண்டுகொள்ளது விட்டுவிடுவது என அந்த சொல்லாக்க அறிஞரை எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு வறுத்தெடுக்கும் பழக்கம் தான் தற்போது நடைபெற்று வருகிறது. இது நம் இரத்தத்தில் உரிய பழக்கம் அல்லவா எப்படி விடமுடியும்.கிணற்றில் தண்ணியில் இருந்து சுவரில் ஏறும் தவளையை கிழே இழுத்துவிடும் கிணற்று தவளையாக தானே தமிழன் இருக்கிறான்.


ஒரு தமிழ் அறிஞர் என்ற ஆங்கில சொல்லுக்கு முகவு (நகர்வு) என்ற சொல்லை அடிப்படையாக வைத்து முகட்டி, முயத்தர், முயத்தி என அழகாக புதிய சொல் உருவாக்கி கொடுத்தார்.இன்னொரு அறிஞர் விமானம் என்ற சொல்லுக்கு சரியான தமிழ் சொல் என பறனை என்ற சொல்லை உருவாக்கினார்.என்ன நடந்து யாரவது இந்த சொல்லை பயன்படுத்த வேண்டும் எண்ணம் கொண்டோமா? நான் இங்கு சொல்லும் போது தான் உங்களுக்கே இதுபோன்ற சொற்கள் இருப்பது தெரிய வருகிறது. காரணம் மனமில்லை இவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்ற பிடிவாதம் தான் இன்று தமிழை அழிக்கும் கருவிகளில் ஒன்றாக இணைத்துள்ளது.

தம்பி motor என்றால் என்ன? மின்சாரத்தால் சுத்துவது அல்லது ஓடுவது....அப்படியா அப்போ மின் என்ற சொல்லை தூக்கி முன்னாடி போடு ஓடு என்ற சொல்லை தூக்கி பின்னாடி போட்டு மின்னோடி என்ற புதிய சொல் தயார் , அப்புறம் Transformer, இது மின்சாரத்தை மற்ற உதவும் கருவி அப்போ மின் மாற்றி என்று பெயர் வை, Transformer Coil என்றால் மின் மாற்றி மின் சுருள் என்று பெயர் வை என்று வடிவேல் பெப்சிக்கும், கோக்க கோலவிற்கும் பெயர் வைப்பது போல் தான் சென்று கொண்டுள்ளது நம் சொல்லாக்க லட்சணம். தமிழில் புதிய சொற்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் ஊறிவிட்டது. தமிழுக்கு இன்னொரு பெயர் அழகு, அந்த அழகு தற்போது பின்பற்றும் இதுபோன்ற சொல்லாக்க முறைகளால் பளிரவில்லை மங்கி தான் வருகிறது.  

நான் இந்த தொடர் கட்டுரையில் அறிவுறுத்தி வரும் கருத்தை ஏற்பது பற்றி சொல்லாக்க ஆர்வலர்கள் மனதில் பல எண்ணங்கள் ஓடினாலும், இதுவரை இரண்டு/மூன்று சொற்களை மொழிமாற்றி இணைத்தே புதிய சொல் என்று உருவாக்கி வந்த அவர்களுக்கு பழைய முறையை விடுத்து புதிய முறையை பின்பற்றுவது கஷ்டமாக தான் இருக்கும். மேலும் இவர் யார்? சொல்லும் கருத்து சரிதானே?, இது போன்றதொரு கருத்தை இதுவரை யாருமே சொல்லவில்லையே?, தமிழை பற்றி இவருக்கு என்ன தெரியும்? என பல கேள்விகள் அவர்கள் மனதை ஆக்கிரமிக்கும் என்பது சந்தேகமில்லை.  

நான் வலியுறுத்தும் கருத்துக்கு எவ்வளவு ஆதாரங்கள் மற்றும் விளக்கங்கள் கொடுத்தாலும் சொல்லாக்கர்கள்/அறிஞர்கள் முழு மனதுடன் இவர் சொல்வது சரி தான் என்று சொல்ல நா வராது என்பதை நான் அறிவேன், காரணம்

- இதுவரை பின்பற்றி வரும் முறையை தவறு என்று சொல்வது.
- பழகிவிட்ட ஒரு சொல்லாக்க முறையில் இருந்து மாற மனமில்லாதது.
- சொல்லை பார்த்தால் அதன் பொருள் விளங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது.
- எந்த மொழியியல் ஆர்வலர்களும் அறிவுருத்தாத முறை என்பது.
- ஆங்கிலத்தில் உள்ள சொல்லை அப்படியே மொழிமாற்றம் செய்து புதிய சொல் என சொல்லிவிட்டால் அனாவசியமாக யாரும் கேள்வி கேட்க வாய்ப்பில்லை என்ற எண்ணம்.
- ஆங்கில மொழியிடம் அடிமைபட்டுவிட்ட மனம், இப்படி செய்தால் தமிழ் உருபட்டுவிடுமா என்ற நினைத்து அடங்கிபோவது.
- எல்லாவற்றிக்கும் மேலாகா தமிழை வளர்க்க வேண்டிய அரசே தமிழின் வளர்ச்சியில் அக்கறைகொள்ளாத போது நமக்கு என்னய்யா வீராப்பு வேண்டியிருக்கு என்ற நியமான எண்ணம்.

நான் எந்த ஒரு புது சொல்லாக்க முறைகளையும் உருவாக்கவில்லை, அப்படி உருவாக்க தேவையும் இல்லை. நம் முன்னோர்கள் பின்பற்றிய சொல்லாக்க முறையை நாம் பின்பற்றி அவர்கள் சிறப்புடன் தமிழை நம்மிடம் பத்திரமாக கொடுத்தது போல் நாமும் நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு கொடுக்க என்ன தயக்கம் என்று தான் கேட்கிறேன். பழங்காலத்திய சொல்லாக்க முறையில் இருந்து தடம் மாறி தற்காலத்திய சொல்லாக்கம் செல்வதை இனிமேலாவது நிறுத்த வேண்டும் என வேண்டுகிறேன். தமிழின் அழகை இதுபோன்றதொரு முறைகளால் பலரும் சேர்ந்து சீரழிக்க வேண்டாம் என ஆசைப்படுகிறேன். உருவாக்கப்படும் புதிய சொற்கள் பேச்சுவழக்கில் வராமல் இருப்பதற்கான  காரணங்களுக்கு இதுபோன்றதொரு சொல்லாக்க முறையும் ஒன்று என கூறுகிறேன். அரசாங்கம் அவர்களின் சமுதாய மதிப்பு குறையும் போது மாட்டுமே தமிழுக்கு தொண்டு ஆற்றுவது போல் காட்டி கொண்டு அவர்களின் மதிப்பை உயர்தும் கருவியாக நம்மையும் தமிழையும் பயன்படுத்தும் போது, அவர்களிடம் இருந்து தமிழுக்கு ஏதேனும் நல்லது நடக்குமா என்றால் நிச்சயம் நடக்காது. வேண்டுமென்றால் உலக தமிழ் மாநாடு மட்டும் நடக்கும். நான் அறிவுறுத்தும் கருத்துக்களில் பழங்காலத்திய சொல்லாக்க முறைகளை பற்றிய சொல் பகுப்பு ஆதாரங்களை கட்டுரை பாகம்-2 இல் அட்டவனைபடுத்தியுள்ளேன். மேலும் சில சொற்களை இங்கு கொடுக்கிறேன்.

எக்காளம் = எக்கு(பெரிய) + காளம்(சப்தம்) -- பெரிய சப்தம்
மின்சாரம் = மின் + சாரம் (சக்தி)--மின் ஆற்றல்
கோடாரி = கோடல்(உடைத்தல்) + அரி(பிள-த்தல்)--உடைத்து பிளக்கும் கருவி
தக்கை = தக்க(தகுந்த) + கை (Bar) --- தகுந்த பாகம் (Suitable Piece)
சுளகு(முறம்) = சுள்(மென்மை) + உ -- மெல்லிய தானியத்தை பிரிக்கும் பொருள்
ஊரா (ஊர்பசு) = ஊர் + ஆ (பசு) -- ஊருக்கு பொதுவான பசு
கடப்பாரை = கடப்பு + ஆரை (அச்சு மரம்) பொருளை கடத்த உதவும் கை மரம் (Bar)

தமிழ் சொற்கள் வளத்தில் தமிழ் அறிஞர்களின் பங்களிப்பை விட சாதாரண மக்களின் பங்களிப்பே முதன்மையானது. அவர்கள் தான் பெருவாரியான தமிழ் சொற்களை தமிழுக்கு அளித்து தமிழை வளப்படுத்தி வரும் முதன்மை அறிஞர்கள். அந்த பங்களிப்பு எப்போது ஆங்கிலம் அவர்களை தாக்க தொடங்கியதோ அப்போதே முற்றிலும் நின்று போய் விட்டது. அப்படி என்ன நமக்கு தெரியாத சொல்லாக்கம் செய்து விட்டான் இந்த படிக்காத கிராமத்துக்காரன்.கிராமத்தில் தான் தமிழ் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு புதிய பொருட்களுக்கும் தமிழில் எதாவது ஒரு பெயர் கொண்டு அழைக்கும் முதல் நபர்களும் அவர்கள் தான் அந்த பெயரை-சொல்லை தமிழில் இணைப்பதும் அவர்கள் தான். சொல்லபோனால் வேறுமொழி சொற்களை பயன்படுத்துவதை குற்ற உணர்வுடன் பார்க்கும் அந்த உண்மையான தமிழ் உணர்வு கொண்டவர்கள் அவர்கள் தான். Soap என்பதை சவக்கார கட்டி என்று அழைக்கும் அந்த தமிழ் உணர்வு இப்போது அண்மைகாலமாக ஊடகத்துறையில் ஏற்பட்ட மாற்றத்தால் அவர்களின் தமிழ் பங்களிப்பு முற்றிலும் சுழியமாகி விட்டது. இருப்பினும் தமிழ் சொல்லாக்க முறைகளுக்கு உண்மையான ஊற்றுகண் கிராமங்கள் தான். எப்படி இதோ எடுத்துக்காட்டுடன்...

விவசாயத்தில் பயிருடன் சேர்ந்து வளரும் களையை நீக்க பயன்படும் கருவிக்கு களை கொத்தி என்று பெயர். இது கிராமப்புறங்களில் களாத்தி என்றே அழைக்கப்படுகிறது. இந்த சொல் எப்படி உருவானது? பேசும் வழக்கில் களை என்ற சொல்லில் இருக்கும் 'ஐ' எனும் உயிர் ஒலியும் கொத்தி எனும் சொல்லில் இருக்கும் 'ஒ' எனும் உயிர் ஒலியும் மங்கி களாத்தி என்ற புதிய சொல் உருவாகியுள்ளது.

- பேச்சு வழக்கில் களை கொத்தி என்று நாக்கு அழைக்க மறுப்பது ஏன்?
- பேச ஏதுவாக களை கொத்தி களாத்தியானது ஏன்?
- களாத்தி என்ற சொல் மற்றவர்களுக்கு பொருள் (தெரியாதவர்களுக்கு) புரியும்படி அமையாதது ஏன்?

சற்று சிந்தித்து பாருங்கள், இதற்கு பெயர் தான் சான்றுடன் கூடிய இயற்கையான சொல்லாக்க முறை. இது போன்ற சொல்லாக்க முறைகளும் தான் தமிழுக்கு அந்த காலத்தில் இருந்தே கிராமங்கள் அளித்துவரும் பங்களிப்பு.இந்த இயற்கையான சொல்லாக்க முறை தத்துவம் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். இப்போது புரிகிறதா நான் ஏதும் புதிதாக சொல்லவில்லை என்று. இந்த சொற்களை தான் நம் இலக்கண நூல்கள் உரிச்சொல் என்ற அடைவுக்குள் கொண்டுவருகின்றன. எப்படி வந்தன என்றால் கூறமுடியாத சொற்கள் தான் உரிச்சொற்கள்.

இதில் களாத்தி என்பது புதிய சொல், களை கொத்தி என்பது விளக்க உரை/சொல் எனலாம். ஆனால் நம்முடைய சொல்லாக்கர்கள் விளக்க உரை/சொல் தான் புது சொல் என்று உருவாக்கி வருகின்றனர்.

மேலும் சில சொற்களை ஆதாரமாக வைக்கிறேன்.  

வாப்பட்டி = வாய்பெட்டி = வாய் + பெட்டி --- தானியங்கள் சிதறாமல் இருக்க உரலின் வாயில் வைக்கப்படும் கூம்பு பெட்டி
சீயக்காய் = சிகைக்காய் = சிகை + காய் --- தலைகுளிக்கும் போது அழுக்கு நீக்கும் ஒருவகை பொடி
வந்தாச்சு = வந்தாயிற்று = வந்து + ஆயிற்று --- வந்து விட்டேன் எனும் வினையை குறிக்கும் சொல்.
செஞ்சுட்டு = செய்துவிட்டு = செய்து + விட்டு ---- முடிந்து விட்டது எனும் வினையை குறிக்கும் சொல்.
எப்பவும் =  எப்பொழுதும் = எந்த + பொழுதும் ---- எந்த நேரமும்
வந்திடு = வந்துவிடு = வந்து + விடு ---- வந்து விடு எனும் வினையை குறிக்கும் சொல்.
மம்மட்டி = மண்வெட்டி = மண் + வெட்டி ---- மண்ணை வெட்ட பயன்படும் கருவி
கறுக்கருவால் = கதிர் + அறுக்கும் + அருவாள் = கதிர் + அருவாள் ---- நெற்கதிரை அறுவடை செய்யும் கை கருவி
வியக்கூர் = வியர்கூர் = வியர்வை + கூர் ---- ஒருவகை தோல் ஒவ்வாமை
உலக்கை = உரல்கை =  உரல் + கை (bar) ---- உரலில் தானியத்தை குத்த பயன்படும் கம்பு
கலப்பை =  கலக்கை = கலக்கும் + கை --- மண்ணை கலக்க பயன்படும் கருவி
விளையாட்டு = வினையாட்டு = வினை + ஆட்டு ----வினையை கொண்டு ஆட்டம்
பிரண்டை = பிரண்டு = பிரல் + தண்டு ---  பிரல் வகை தண்டு கொடி

மேலே உள்ள சொற்கள் சிலவற்றை (வந்தாச்சு, செஞ்சுட்டு, எப்பவும், வந்துடு) நாம் கொச்சை சொற்கள் என சொல்வதுண்டு. அவை கொச்சை சொற்கள் அல்ல, தற்கால பேச்சு வழக்கிற்கு ஏற்ப உருவான புதிய சொற்கள் என்று சொல்வது தான் சரி.

இதுபோன்ற கருத்தை வலியுறுத்தும் நீங்கள் எதாவது புதிய சொற்களை உருவாக்கி வைத்துள்ளீர்களா என்று கேட்பது எனக்கும் கேட்கிறது. நிச்சயம் நிறைய புது சொற்களை உருவாக்கி வைத்துள்ளேன், அடுத்த பதிவில் பார்க்கலாம்.


தொடரும்......

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Post by ராஜு சரவணன் on Mon Oct 14, 2013 4:46 am

பதிவு நீட்சிகள் எதுவும் வேலை செய்யவில்லை தல புன்னகை 

சும்மா அப்படியே அள்ளி தான் போட்டுள்ளேன். சோகம்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Post by ayyasamy ram on Mon Oct 14, 2013 5:07 am

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33638
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Post by முனைவர் ம.ரமேஷ் on Mon Oct 14, 2013 7:01 am

விழிப்புணர்வை ஏற்படுத்துமா என்று பார்ப்போம்... பகிர்வுக்குப் பாராட்டுகள்...
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Post by பூவன் on Mon Oct 14, 2013 9:22 am

அப்படியே சில தமிழ் அறிஞர்கள் சிரத்தையுடன் ஆர்வமுடன் பழங்காலத்திய சொல்லாக்க முறையில் அழகாக சொற்களை உருவாக்கி கொடுத்தாலும் அந்த சொற்களை அப்படியே
நிராகரிப்பது, அச்சொல்லை ஊடகங்களில் பயன்படுத்த ஊடகத்தார் மறுப்பது, இந்த சொல் யாருக்கும் புரியாது என சப்பை கட்டு கட்டுவது அல்லது அதை கண்டுகொள்ளது விட்டுவிடுவது என அந்த சொல்லாக்க அறிஞரை எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு வறுத்தெடுக்கும் பழக்கம் தான் தற்போது நடைபெற்று வருகிறது. இது நம் இரத்தத்தில் உரிய பழக்கம் அல்லவா எப்படி விடமுடியும்.கிணற்றில் தண்ணியில் இருந்து சுவரில் ஏறும் தவளையை கிழே இழுத்துவிடும் கிணற்று தவளையாக தானே தமிழன் இருக்கிறான்.
இன்றைய  தமிழின் நிலையும்  இப்படிதான்  உள்ளது  ,

இதுபோன்ற கருத்தை வலியுறுத்தும் நீங்கள் எதாவது புதிய சொற்களை உருவாக்கி வைத்துள்ளீர்களா என்று கேட்பது எனக்கும் கேட்கிறது. நிச்சயம் நிறைய புது சொற்களை உருவாக்கி வைத்துள்ளேன், அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நான்  கேட்டது  உங்களுக்கு  கேட்டு விட்டதா  ? சரி  அடுத்த  பதிவில் அந்த  சொற்களை பதிவிடுங்கள் நானும்  தெரிந்துகொள்கிறோம் .
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Post by ராஜு சரவணன் on Mon Oct 14, 2013 10:00 am

நிச்சயம் பூவன் வரும் பதிவுகளில் புது சொற்களை பதிகிறேன். நான் உருவாக்கி விட்டதால் இனி அந்த சொற்களை தான் பயன்படுத்த வேண்டும் என்று பொருள் இல்லை, தமிழ் ஆர்வலர் ஐயா ராம்கி போன்றோர் எற்கனவே இதுபோன்ற முறையில் உருவாக்கிய நிறைய சொற்களை தமிழ் உலகம் பய்ன்படுத்த முன்வர வேண்டும் என்பது தான் என் ஆசை. motor என்ற ஆங்கில சொல்லுக்கு முயத்தி, முகட்டி என்று சொல்லாக்கம் செய்தவர் அவர் தான். இது மட்டும் இல்லை நிறைய உள்ளது அதைபற்றி விரிவாக வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Post by பாலாஜி on Mon Oct 14, 2013 11:41 am

  


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Post by அசுரன் on Mon Oct 14, 2013 11:44 am

பூவனா அது. பூவன் அண்ணா எப்படி இருக்கீங்க? நலமா? புதிய தமிழ் சொற்களை பயன்படுத்த தயங்கும் பத்திரிக்கைகளை என்ன செய்வது.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Post by சதாசிவம் on Tue Oct 29, 2013 8:22 pm

  

தேடிப் படிக்கும் பதிவுகளில் சிலவற்றில் உங்களின் பதிவு மிக முக்கியமானது. தமிழ் ஆர்வர்கள் பலரும் களமிறங்கி கருத்துகளை முன் வைத்து விவாதித்து தமிழை வளர்க்க வேண்டும்..

உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்

எந்த மொழியிலும் பெரும்பாலான சொற்களை நடைமுறைப் பேச்சு தான் வளர்க்கிறது. மொழியறிஞர்கள் இவற்றை தொகுக்க, வகுக்க, பகுக்கத் தான் பாடுபட்டுள்ளனர். சொற்கள் பழைய சொற்களின் இருந்து தான் பிறக்கிறது. இன்றைய தலைமுறை சிலாகிக்கும் பேஸ்புக், twitter போன்ற சொற்கள் ஏற்கனவே இருந்த ஆங்கில சொற்களில் இருந்து தான் பிறந்துள்ளது. மண் வெட்டியும் இப்படித் தான். இந்நிலையில் இருக்கும் சொல் இல்லாமல் புதிய சொல் உருவாகும் பொழுது அது பிரபலம் அடைவ்து சற்று கடினமே....அனைத்து மொழிகளுக்கும் இது பொருத்தும். மலாய் மொழி வளரும் பொழுதும், அமெரிக்க ஆங்கிலம் வளரும் பொழுதும் ஆங்கிலத்தில் இருக்கும் சொற்களில் எழுத்துப் பிழை (மாற்றம்) செய்து அம்மொழி சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அம்மொழியாளர்கள் இதையே பெரும் சிறப்பென பேசி வருகின்றனர்.. ஆனால் தமிழில் பல்லாயிரம் வார்த்தைகள் பன்னெடுங்காலம் முன்பே வழக்கில் இருந்துள்ளது. ஒரு சொல்லை உருவாக்கும் பொழுது அச்சொல்லின் பொருள் உணர்த்தும் சொற்கள் இங்கிருப்பின் அவற்றை கொண்டு தான் அது உருவாகும். சோப்பை, சவுக்காரம் என்று அழைப்பது சவுக்காரம் என்ற பொருள் துணி வெளுக்கும் வண்ணார்கள் பயன்படுத்தபட்ட ஒரு வேதிக்கட்டி. புதிய சொல்லல்ல. புதிதாக பல் சொற்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது. கணினி, இணையம், கைபேசி போன்றவை. இவற்றை ஆராய்ந்தால் இங்கு இருந்த சொல்லில் இருந்து தான் அது பிறந்துள்ளது என்பதை அறியலாம். நீங்கள் பட்டியலிட்ட பெரும்பாலான சொற்கள் இப்படித் தான் உருவாகி உள்ளது..மம்மட்டி சரி ஆனால் கைபேசி சரியில்லை என்று சொல்ல விழைவது சிறப்பாகாது.

இந்நிலையில் ஒரு புறம் புதிய சொற்கள் உருவாக இருக்கும் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்றும், மறு புறம் அவற்றை நியாப்படுத்த இருக்கும் சொல்லில் இருந்து பிறந்து, வளர்ந்து, சுருங்கிய சொற்களை உதாரணமாக முன் வைக்கும் பொழுது சொற்களை எப்படி உருவாக்க வேண்டும் என்ற குழப்பம் தான் மிஞ்சுகிறது.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Post by கரூர் கவியன்பன் on Tue Oct 29, 2013 8:37 pm

அருமையானா பதிவு.............
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum