ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ் இலக்கியத்தில் கண்கள்

View previous topic View next topic Go down

தமிழ் இலக்கியத்தில் கண்கள்

Post by nandagopal.d on Sun Oct 27, 2013 8:34 pm

சிலர் மனதில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவார்கள்.அப்பொழுதெல்லாம் காட்டிக் கொடுக்கும் தகவல் உடல்நுட்பம் ‘கண்கள்’. பல நேரங்களில் கண் பேசும் வார்த்தைகளுக்கு வலிமையதிகம்.கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும் பொழுது நேர்மையின் அளவீடு தெரிந்துவிடுகிறது.

ஏதாவது ஒரு நேர்காணலுக்கு போகும் நண்பனை “கண்ணப் பார்த்து பேசு மாப்ள” என்று உசுப்பேத்தி விட்டு, அந்த அதிகாரி எங்கெல்லாம் பார்க்கிறாரோ அங்கெல்லாம் போய் அவர் கண்ணையே குறுகுறுவெனப் பார்த்து சங்கடத்தை ஏற்படுத்தும் நேர் பார்வையப் பற்றிச் சொல்லவில்லை.அது நேர்பார்வையும் அல்ல.

ஒரு கருத்தைத் தீர்மானமாகச் சொல்லிவிட்டு அதனடுத்து பார்க்கப்படும் தீர்க்கமான பார்வை,அந்தக் கருத்தை வலிமையாக எதிராளியிடம் கொண்டுசேர்க்கும் என்பது மிகையல்ல.

இப்படி ஒரு அற்புதமான உறுப்பு கண்.

காதலில் கண்களின் பங்கு என்பது பற்றி தனியாகவே எழுதலாம்.கண்கள் இரண்டால் பாடல் சமீபத்திய உதாரணம்.ஆனால் ஆண்டாண்டு காலமாய்,இலக்கியத்தில் கண்களை மிகுந்த அழகியலோடு லயித்திருக்கிறார்கள்.

என் கண்ணில் பட்ட சில கண்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

திருக்குறள்... வள்ளுவர்..மிகுந்த பொறாமை கொள்ளச்செய்யும் ஒரு மனிதர் (அல்லது திருக்குறளை தொகுத்த பலர்!)மீது ஏற்படும் என்றால் அது திருக்குறள் இயற்றப்பட்ட கைகளின் மீதுதான்.

ஆம். வாழ்வியலின் எந்த நுட்பத்தையும் விடவில்லை.அதில் காதல்..கண்கள்..என இப்படி

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

ஒரு பெண் பார்த்த பார்வைக்கு, பதில் பார்வை பார்த்தால்,அந்த பதில் பார்வைக்கு அவள் பார்த்த பார்வை ஒரு படையோடு சேர்ந்து தாக்கிய பார்வைக்கு ஒப்பானது அவள் விழிகள்/பார்வை..

(தானைத் தலைவன் என்ற சொல் இன்று கடைக்கோடி தொண்டனிடமும் இருந்து வருகிறதே..அந்தத் ‘தானை’தான் வள்ளுவர் சொல்வது)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

என்னுயிர் பறிக்கும் எமனோ,பார்க்கும் விழிகளோ அல்லது மிரளும் மானோ என மூன்றும் சேர்ந்ததோ அவளின் கண்கள்.

இன்றைய ‘லட்சத்திச் சொச்ச’ காதல் கவிதைகளின் மூலம் இந்தக் ‘குரல்’தானோ?

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

இரண்டு நோக்கங்கள் அவளின் மைவிழிகளுக்கு உள்ளது.ஒன்று என்னை நோய்வாய்ப்படுத்தும் பார்வை..மற்றொன்று அந்த நோய்க்கான மருந்து போன்ற காதல் பார்வை.

ரசனையின் உச்சம் வள்ளுவா..மீண்டு-ம் வா.தமிழ் தா என்றே எண்ண வைக்கிறது.

திருக்குறளில் இப்படி என்றால் குறுந்தொகையில் பாய்ச்சல் இருமடங்கு.

‘பூஒத்து அலமரும் தகைய; ஏஒத்து
எல்லாரும் அறிய நோய்செய் தானவே
தேமொழித் திரண்ட மென்தோள்,மாமலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண்ணே’

இந்தப் பாடலில் தலைவி குருவி விரட்டும் பொழுது, அவளின் கண்களை மழைக்கண்,பூவிற்கு நிகரான கண்,மருட்சியில் சுழலும் கண் என பலவகைக் கண்களுடன் ஒப்பிட்டு..தலைவனைப் பார்க்கும் போது மட்டும் அம்புபோல் பாய்கிறது என்கிறான்.

அழகியல் அல்லது அழகியல் மட்டுமே.

தலைப்புணைக் கொளினே என்று தொடங்கும் குறிஞ்சிப் பாட்டில் கண்ணை இப்படி வர்ணிக்கிறார் ஆந்தையார்.

...
மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக் கண்...

மழை நேரத்துப் பிச்சிப் பூவின் நீர் ஒழுகும் வளமான மொட்டின் சிவந்த வெளிப்புற இதழை ஒத்த,செவ்வரிகளைக்கொண்ட குளிச்சியான கண்கள்

மலரின் மொட்டோடு கண்களை ஒப்பிட்டு நம் கண்களை விரியச் செய்யும் வரிகள் அவை.

காதலிக்கு கொஞ்சம் பெரிய கண்களாக இருந்தால் ‘கயல்விழியாள் என் காதலியே’ என்றி எழுதி வாரமலருக்கோ தந்திக்கோ அனுப்பிவிடும் இன்றைய காதலர்களின் அன்றைய குரு பாலை பாடிய பெருங்கோ எழுதிய தேற்றாம் அன்றே தோழி..என்று தொடங்கும் பாடலில்

...
கயல்ஏர் உண்கண் கனங்குழை மகளிர்

கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய
சுடர்துயர் எடுப்பும்...

என்கிறார்.கயல் மீன் போல மை தீட்டிய விழிகள் என்ற வர்ணிப்பு.

புறநானூற்றில் போனால் போகிறது என்று ஆணின்,சோழன் கரிகாற் பெருவளத்தானின் கண்ணை இப்படி

களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்து அடி
கணை பொருது கவி வண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,
மா மறுத்த மலர் மார்பின்...

என்று கண்ணை வில்லொடு கோர்க்கிறார் புலவர் கருங்குழலாதனார்.

கம்பர்...

‘நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல்’

என கண்களைக் கூர் வேலுக்கு ஒப்பிட்டுக்கூறும் கம்பர்

‘கை வளை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள்’

என கடைக்கண் பார்வையின் ஆழம் பற்றி ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

‘மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற,
நெய் தாவும் வேலானொடு, நெஞ்சு புலந்து நின்றாள்’

‘கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது’

கமலச் செங்கண்ணன் ராமனை அந்த ஊர் உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறதாம். பெண்ணுக்கு இணையாக ஆணையும் வர்ணித்ததில் கம்பர் தனிச் சிறப்பு பெறுகிறார்.

மையோ மரகதமோ மரிகடலோ மலை முகிலோ
அய்யோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்

என்று ராமனை வியப்பது ஒரு உதாரணம்.

மாடத்தில் நின்ற சீதையின் கண்களை இப்படி

வென்று அம் மானை, தார் அயில் வேலும் கொலை வாளும்
பின்ற, மானப் பேர் கயல் அஞ்ச, பிறழ் கண்ணாள்..

என்கிற கம்பர் அடுத்து,

‘கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்
வெல்லும் வெல்லும்' என்ன மதர்க்கும் விழி கொண்டாள்’

என்று முடிக்கிறார்.

இராமன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் சீதையின் நிலையை

‘மால் உற வருதலும், மனமும் மெய்யும், தன்
நூல் உறு மருங்குல்போல், நுடங்குவாள்; நெடுங்
கால் உறு கண் வழிப் புகுந்த காதல் நோய்’

என்கிறார்.‘விழியில் விழுந்து இதயம் நுழைந்த’கம்ப வரிகள்..

கண்கள் பற்றி இப்படி போய்க்கொண்டே இருக்கிறது இலக்கியத்தில்.

நன்றிகள் :http://manikandanvisvanathan.wordpress.com/2010/04/12/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
[You must be registered and logged in to see this link.]
avatar
nandagopal.d
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 182
மதிப்பீடுகள் : 100

View user profile

Back to top Go down

Re: தமிழ் இலக்கியத்தில் கண்கள்

Post by ayyasamy ram on Sun Oct 27, 2013 9:21 pm


“கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்றுபெரிது”
(திருக்குறள் – காமம் குறிப்பறிதல் 1112)

‘‘இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து’’
(திருக்குறள்-காமம் குறிப்பறிதல் 1111)

என்னும் இருபாடல்களும் காதல் குறிப்பறிதலில் கண்ணின் பங்கைச் சிறப்பிக்கின்றன.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10757

View user profile

Back to top Go down

தமிழ் இலக்கியத்தில் கண்கள்

Post by Dr.S.Soundarapandian on Tue Oct 29, 2013 11:03 pm

நந்தகோபால் நல்ல தலைப்பைக் காட்டியுள்ளார் ! ‘இலக்கியத்தில் கண்’ என்ற எனது நூலைப் (பழைய ஸ்டார் பிரசுரம், சென்னை) படித்தால் இப் பொருளை நன்கு உணரலாம் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4295
மதிப்பீடுகள் : 2269

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ் இலக்கியத்தில் கண்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Wed Oct 30, 2013 8:19 am

சில கண்களைப் பார்த்தால் பின்னங்கால் பிடரில பட ஓட வேண்டி இருக்கு, அவ்வளவு பயங்கரம். என்னுடைய தினசரி அனுபவம்ங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum