ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆரம்பம் - திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

ஆரம்பம் - திரை விமர்சனம்

Post by சிவா on Thu Oct 31, 2013 3:16 pmஎதிரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது இராணுவம் மற்றும் காவல்துறையின் கடமை. ஆனால் அந்தத் துறையிலேயே ஊழல் நடந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை சொல்லும் படம் ‘ஆரம்பம்’.

அஜித்துக்குள் இருந்த ஸ்டைலிஷான கதாப்பாத்திரத்தை ‘பில்லா’ படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த விஷ்ணுவர்த்தன், மீண்டும் அஜித்துடன் ‘ஆரம்பம்’ படத்தின் மூலம் கைகோர்த்து இந்த தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தியிருக்கிறார்.

இந்த கூட்டணியுடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோரும் சேர்ந்து கொண்டால் எப்படி இருக்கும்? நிச்சயம் தீபாவளி களைகட்டும்…

டை அடிக்காமல், முகப்பூச்சுகள் இல்லாமல் தனது வெள்ளை முடியுடனேயே படம் முழுவதும் வலம் வரும் அஜித்தின் தைரியத்தை முதலில் பாராட்ட வேண்டும். ஆனால் அஜித் என்ன தான் தீவிரவாதியாகக் காட்டப்பட்டாலும், அவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது.

அஜித் நின்றால் கைதட்டல், நடந்தால் கைதட்டல், குண்டு வைத்தாலும் கைதட்டல், குழந்தையை காட்டி மிரட்டினாலும் கைதட்டல் அப்பப்பா …. படத்தில் அஜித் எப்படியும் நல்லவர் தான் என்று ரசிகர்களுக்கு முன்பே தெரியும் போல…

அஜித்துக்கு துணையாக அவருடன் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வரும் நயன்தாரா, கதாப்பாத்திரத்துக்கு நன்கு பொருந்தியிருக்கிறார்.ஒரு காட்சியில், வில்லனை மயக்க நயன்தாரா செய்யும் கவர்ச்சி சதி பழைய காலத்து தந்திரம் என்றாலும், எடுக்கப்பட்ட விதம் ஆங்கிலப்படங்களில் வருவது போல் அமைந்துள்ளது.

சாப்ட்வேர் என்ஜினியராக வரும் ஆர்யா மற்றும் செய்தியாளராக வரும் டாப்ஸி இருவரின் அப்பாவித்தனம் படத்திற்கு கலகலப்பு சேர்த்திருக்கிறது.

ஆர்யாவும், டாப்ஸியும் ஒருவரையொருவர் ‘பேபி’ ‘பேபி’ என்று கூப்பிட்டுக் கொள்(ல்)வது படம் பார்ப்பவர்களுக்கு லேசாக அலுப்பு தட்டுகிறது.

காவல்துறை அதிகாரியாக வரும் ‘பொல்லாதவன்’, ‘ஹரிதாஸ்’ புகழ் கிஷோர் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் சந்தானம் இல்லாத குறையை உள்துறை அமைச்சராக வரும் மகேஷ் மஞ்ச்ரேகர் என்ற நடிகர் நிவர்த்தி செய்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் படத்தில் முக்கிய வில்லனாமாம்…

இப்படி ஒரு ‘காமெடி பீஸ்’ தான் படத்தின் வில்லனா என்று வீட்டுக்கு போய் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்… அதுவும் குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் வரும் அவரின் வசனங்கள் சிரிப்பை வரவழைப்பது நிச்சயம்.

அஜித்தின் ஸ்டைலிஷ் மற்றும் நெகட்டிவ் கதாப்பாத்திரத்திற்கு இந்த ‘ஆரம்பம்’ ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு விஷயம் மட்டும் மனதை உறுத்துகிறது .. அஜித் ஜிம்மையே கதியாகக் கிடக்கிறார்…. ஒருநாளைக்கு 4 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார் என்று விஷ்ணுவர்த்தன் கடந்த ஒரு வருடமாக எல்லா பத்திரிக்கைகளுக்கும் பலமான பில்டப்களைக் கொடுத்தாரே. ஆனால் படத்துல அப்படி ஒன்னும் தெரியலையே …. தொப்பை தான் ஆங்காங்கே முட்டிக்கொண்டு தெரிகிறது… (ஒரு வேளை அந்த ஒரே ஒரு காட்சிக்காக மட்டுமோ?)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆரம்பம் - திரை விமர்சனம்

Post by சிவா on Thu Oct 31, 2013 3:17 pm


கதைச் சுருக்கம்

உள்துறை அமைச்சகத்திலேயே ஊழல்… காவல்துறையினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு கவசம் (Bullet proof jacket) வாங்கியதில் உள்துறை அமைச்சரும், காவல்துறை ஆணையரும்

பல கோடி ரூபாய் மோசடி செய்கிறார்கள்.

அந்த காவல்துறையின் சிறப்புப் படையில் அதிகாரிகளாக அஜித் மற்றும் அவரது மச்சான் ராணா வேலை செய்கிறார்கள்.

தீவிரவாதிகளுடன் நடந்த ஒரு சண்டையில் ராணா துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி இறந்து போகிறார். அவரது இறப்பிற்குக் காரணம் உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தரமில்லாத பாதுகாப்புக் கவசம் தான் என்பதை அஜித் கண்டுபிடிக்கிறார்.

இதனால் அஜித் மீது கடும் கோபத்திற்கு ஆளான உள்துறை அமைச்சரும், காவல்துறை ஆணையரும் அவரையும், அவரது குடும்பத்தினரையும் (இதில் நயன்தாராவும் உள்ளார்) அழிக்கிறார்கள்.

இதில் அஜித் மற்றும் நயன்தாரா மட்டும் அதிர்ஷ்டவசமாகப் பிழைத்துக்கொள்கிறார்கள்…

எல்லாம் முடிந்துவிட்டது என்று வில்லன்கள் நிம்மதியாக இருக்கையில், அஜித்தின் பழிவாங்கும் படலம் தொடங்குகிறது அது தான் ‘ஆரம்பம்’.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆரம்பம் - திரை விமர்சனம்

Post by சிவா on Thu Oct 31, 2013 3:17 pm


படத்தின் பலம்

மிகைப்படுத்தப்படாத கதை மற்றும் காட்சிகள்…

படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை விறு,விறு திரைக்கதை…

அஜித் மற்றும் நயன்தாராவின் நடிப்பு …

ஆர்யா மற்றும் டாப்ஸியின் அப்பாவி குறும்புத்தனங்கள்…..

யுவனின் பிண்ணனி இசை…

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு….

படத்தின் பலவீனம்

அஜித் மூன்று பெரிய வணிக வளாகங்களுக்கு குண்டு வைத்துவிட்டு, அதை காவல்துறைக்கும் அறிவிக்கிறார். ஆனால் காவல்துறையால் அதை அகற்ற முடியாமல் அவை வெடித்து சிதறி கட்டிடங்கள் தரைமட்டமாகின்றன. இதில் அப்பாவிப் பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாதா? (இங்கு தான் லாஜிக் இடிக்கிறது)

பாதுகாப்பு கவசம் வாங்குவதில் 200 கோடி ஊழல் நடந்துள்ளது என்றால் அது எவ்வளவு பெரிய வியாபாரமாக இருக்கும்? அதில் எத்தனை பாதுகாப்புக் கவசங்கள் வாங்கியிருப்பார்கள்?

ஆனால் ஆதாரம் இருக்கக்கூடாது என்பதற்காக அந்த தரமில்லாத பாதுகாப்பு கவசங்களை வில்லன்கள் ஒட்டுமொத்தமாக தீயிட்டுக் கொளுத்தும் ஒரு காட்சியில் மொத்தமே 50 பெட்டியைத் தாண்டியிருக்காது.

ஆர்யா ஒரு அதிபுத்திசாலியான சாப்ட்வேர் எஞ்சினியர் சரி…. ஆனால் காவல்துறை அதிகாரியான அஜித்திற்கு எப்படி ஆர்யா அளவிற்கு சாப்ட்வேர் பற்றிய அறிவு இருக்கிறது? (ஹீரோன்னா அப்படித்தான் …அப்படித்தான்…. என்று அஜித் ரசிகர்கள் சொல்வது காதில் விழுகிறது)

இது போன்ற லாஜிக்குகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, தியேட்டரில் போய் உட்கார்ந்தால், இரண்டரை மணி நேரங்கள் விறு விறுப்பான ஒரு திரைப்படத்தைப் பார்த்த மனத் திருப்தியை அடைவீர்கள் என்பது உறுதி…

ஆரம்பம் – அஜித்தின் வாலிப அட்டகாசம் …(டொக்….டொக்)

- பீனிக்ஸ்தாசன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆரம்பம் - திரை விமர்சனம்

Post by சிவா on Thu Oct 31, 2013 3:19 pm

‘ஆரம்பம்’ படத்தின் முன்னோட்டத்தை இங்கு காணலாம்

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆரம்பம் - திரை விமர்சனம்

Post by amirmaran on Thu Oct 31, 2013 4:01 pm

ரொம்ப நன்றி அண்ணா நாளை தான் படம் பார்க்க வேண்டும்...

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

Re: ஆரம்பம் - திரை விமர்சனம்

Post by பாலாஜி on Thu Oct 31, 2013 4:16 pm

நன்றி தல (தல )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆரம்பம் - திரை விமர்சனம்

Post by விஸ்வாஜீ on Thu Oct 31, 2013 5:46 pm

அதுக்குள்ள விமர்சனம் ஆரம்பமா
சூப்பர் தல
அங்கேயும் ரசிகர் ஷோ உண்டா?
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1340
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: ஆரம்பம் - திரை விமர்சனம்

Post by Muthumohamed on Thu Oct 31, 2013 10:36 pm

விமர்சனத்திர்க்கு நன்றி அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஆரம்பம் - திரை விமர்சனம்

Post by சிவா on Mon Nov 04, 2013 5:03 pm

ஆரம்பம் பார்த்த கமல்


அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டிவிட மாட்டார் கமல். அதேபோல் ஆறி தணிந்த பின்பே பல படங்களையும் பார்ப்பது அவ‌ரின் வழக்கம். மாறாக அ‌‌ஜீத்தின் ஆரம்பம் படத்தைப் பார்த்து படம் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டியுள்ளார்.

ஆரம்பம் படத்தை ஸ்டைலிஷாக எடுத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், ஒருமுறை நம்பி பார்க்கலாம் என்பதாகவே தொண்ணூறு சதவீத விமர்சனங்கள் உள்ளன. அ‌ஜீத்தின் ஸ்டைலும், நடிப்பும் படத்தின் ப்ளஸ்.

ஆரம்பத்தை பெங்களூருவில் உள்ள மல்டி பிளக்ஸில் கமல்ஹாசன் பார்த்து ரசித்துள்ளார். அ‌‌ஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அவர் வெகுவாக பாராட்டியதாக அவருடன் இருந்தவர்கள் தெ‌ரிவித்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆரம்பம் - திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum