ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இனிய தீபாவளி
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 M.Jagadeesan

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காலக் கணிதத்தின் சூத்திரம்!

View previous topic View next topic Go down

காலக் கணிதத்தின் சூத்திரம்!

Post by சிவா on Wed Nov 06, 2013 5:46 pm

லக்னத்தில் இருந்து 7-ஆம் வீடு பெண் ஜாதகத்தில் கணவனையும், ஆண் ஜாதகத்தில் மனைவியையும் வரையறுக்கும். லக்னத்தில் இருந்து நேர் கோடு 7-ல் முற்றுப்பெறும். 7-ல் இருந்து நேர் கோடு லக்னத்தில் முற்றுப் பெறும். 2 முதல் 6 வரை ஒரு பகுதியும், 8 முதல் 12 வரை மறுபகுதியுமாக 7-ஆம் வீட்டோடும், லக்னத்தோடும் இணைந்திருக்கும். இரு பகுதிகள் இணைந்து முழுமை பெறுகிறது.

ஆண்-பெண் இருவரும் தம்பதியின் இரு பகுதிகள். அதன் இணைப்பு முழுமை பெறும். புலப்படாதது புலப் படுவது என்று இரண்டு பகுதிகளை ஜோதிடம் குறிப்பிடும் (த்ருச்யார்த்தம், அத்ருச்யார்த்தம்). 2-ஆம் வீட்டின் செழிப்பை 11-ஆம் வீடு சொல்லும். 11-ஆம் வீடு லாப ஸ்தானம். லாபத்தின் அளவு வரவை 2-ஆம் வீடு வரையறுக்கும். அதுபோல், 3-க்கு எட்டும், 4-க்கு பத்தும், 5-க்கு ஒன்பதும், 6-க்கு பன்னிரண்டும் பலனின் அளவை அதாவது செழிப்பை வெளியிடும். விதையில் ஒளிந்திருக்கும் செழிப்பை பயிரின் வளர்ச்சியில் தெரிந்துகொள்வோம். சட்டியில் இருந்தால் அகப்பையில் தென்படும். 2 செல்வத்தை அளிப்பதாக அமைந்தால், 11 லாபத்தை அளிக்கும். இரு பகுதிகளும் இணைந்து அவர்களது அனுபவத்தை வெளியிடும். தாம்பத்தியத்தின் முழு மகிழ்ச்சியில், இந்த இரு பகுதி வீடுகளின் செழிப்புக்கும் பங்குண்டு.

அ) கணவன் - மனைவி உண்டா, தங்குமா, சந்தோஷம் அளிப்பார் களா, சங்கடத்தை அளிப்பார்களா என்பதை நிர்ணயிக்க, 7-ஐ கவனிக்க வேண்டும்.

ஆ) ஆண் - பெண் ஜாதகங்களில் லக்னாதிபதியும் 7-ஆம் பாவதிபதி யும் சேர்ந்திருந்தாலோ, ஒன்றுக்கொன்று பார்வையுடன் இருந்தாலோ, கேந்திர சம்பந்தம், திரிகோண சம்பந்தம் இருந்தாலோ... கணவன் அல்லது மனைவி பாக்கியம் உண்டு என்று எண்ணலாம். ராசியில் அல்லது அம்சகத்தில் இருக்க வேண்டும்.இ) லக்னாதிபதியும்  7-க்கு உடையவனும் 6, 8-ஆகவோ... 3, 11- ஆகவோ... 2, 12-ஆகவோ அமைந்தால், இணைப்பில் இடையூறு இருப்பதை உணர்த்தும்.

ஈ) 7-க்கு உடையவன் ஏழில் இருந்தாலோ, பார்த்தாலோ, பலம்பெற்று இருந்தாலோ, தட்ப கிரகம் இருந்தாலோ- பார்த்தாலோ கணவனும் மனைவியும் உண்டு என்பதை உறுதி செய்யும்.

நெருடல் இல்லாமல் தாம்பத்தியத்தைச் சுவைப்பார்களா என்பதை உறுதி செய்ய, சில நடைமுறைகளை அறிமுகம் செய்தது ஜோதிடம்.

அ) 7-ல் வெப்பக் கிரகம் (அசுப கிரகம்) இருப்பது அல்லது பார்ப்பது.

ஆ) பலம் குன்றிய ஒரு கிரகம் 7-ல் இருப்பது.

இ) 6-லும் 8-லும் வெப்பக் கிரகம் இருந்து, 7-ஆம் வீட்டை கிடுக்கிப்பிடி போல் இருந்து வெப்பப் பரவலை அதிகமாக்குவது.

ஈ) 5-க்கு உடையவன் 7-ல் இருப்பது,

உ) 8-க்கு உடையவன் 7-ல் இருப்பது.

ஊ) குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன் 7-ல் இருப்பது.

எ) கடக லக்னமாக இருந்து 7-ல் மகரத்தில் குரு நீசம் பெற்று இருப்பது.

ஏ) ரிஷப லக்னமாக இருந்து 7-ல் விருச்சிகத்தில் சுக்கிரன் இருப்பது.

ஐ) தட்பக் கிரகமான சுக்கிரனுக்கு வெப்பக் கிரகச் சேர்க்கை 7-ல் இருப்பது... இப்படி, ஏதாவது ஒன்று புருஷ ஜாதகத்தில் 7-ல் அமைந்திருந்தால், விருப்பமான மனைவி இல்லாமல் போகலாம் என்கிறது ஜோதிடம்.

அதேநேரம், தட்பக் கிரகத்தின் சேர்க்கை, பார்வை 7-ல் இருப்பது நல்ல மனைவியை இணைத்துவிடும். (பாப: பாபேஷிகோவா யதி பலரஹித...). வெப்பக் கிரகத்தின் தாக்கம் பல வழிகளில் 7-ஐ தாக்கும் தறுவாயில், தட்ப கிரகத்தின் இணைப்பு, பார்வையானது தகுதி மாற்றத்தை ஏற்படுத்தி, விரும்பிய பலனை சுவைக்கவைக்கிறது. ஏழில் இருக்கும் வெப்பக் கிரகம் லக்னத்தைப் பார்ப்பதால், தனக்கு (ஜாதகனுக்கு) மனைவியை அடையும் குறையை சுட்டிக்காட்டுகிறது. வெப்பக் கிரகம் 7-ஐ பார்ப்பதால், மனைவியின் குறையைச் சுட்டிக்காட்டுகிறது. பலம் குன்றிய கிரகம் 7-ல் இருப்பது, மனைவியின் தகுதியிழப்பைச் சுட்டிக்காட்டும். இரு பக்கமும் வெப்பக் கிரகம் இருந்து 7-ஐ தாக்குவதால்... வாய்ப்பு இருந்தும் அனுபவத்துக்கு வராமல் தடுத்துவிடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காலக் கணிதத்தின் சூத்திரம்!

Post by சிவா on Wed Nov 06, 2013 5:47 pm

5-க்கு உடைய புத்திரஸ்தான அதிபன் 7-ல் இருந்தால், மனைவி இருக்க வேண்டிய இடத்தில் புத்திரன் தோன்றி, மனை வியாக ஏற்கும் தகுதி இழந்துவிடுகிறது (படம்: 1).

குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன், குளிகனின் இயல்பை பெற்றிருப்பான். அந்த இயல்பு மனைவியின் தரத்தை மாற்றி இன்னலுக்கு இடமளிக்கும்.

நீசனான குரு பலம் இழந்திருப்பான். கடக லக்னத்துக்கு 9-க்கு (மீனம்) உடையவன் அவன். மகரத்தில் நீசனானதால் பாக்கியம் அதாவது அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது (படம்:2).அவன் 7-ல் இருப்பதால், மனைவி தாம்பத்தியத்தைச் சுவைக்கும் தகுதியை இழப்பாள். அத்துடன் கடக லக்னத்துக்கு 6-க்கு (தனுசு) உடையவனாக இருப்பதால், தொடர்ந்து இடையூறுகளையும் தோற்றுவிப்பான்.

விருச்சிகத்தில் இருக்கும் சுக்கிரன் ரிஷப லக்னத்துக்கு 7-ல் இருப்பது மற்றும் 6-க்கு உடையவனாக இருப்பதால் தாம்பத்திய சுவையை எட்டவிடாமல் செய்வான். 8-க்கு உடையவன் ஏழில் இருந்தால் 7-ன் தரத்தை அழிப்பான். அதாவது தாம்பத்தியம் இருந்தும் அதன் பெருமையை உணர முடியாமல் செய்வான். 6, 8, 12-க்கு உடையவர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள்

இருக்கும் இடத்தின் தகுதியை இழக்கவைப்பார்கள் என்கிறது ஜோதிடம். அத்துடன், மற்ற வீட்டுக்கு உடையவர்கள் 6, 8, 12-ல் வந்து விட்டால், அவர்கள் தங்கள் தகுதியை இழப்பார்கள் என்றும் எச்சரிக்கும் (படம்: 3). அலசி ஆராய்ந்தால் அமுதத்தை எட்டலாம்.

விபரீத விளைவோடு வெப்பக் கிரகம் இருப்பது துயரத்தைச் சுட்டிக்காட்டும். அதை தட்பக் கிரகம் பார்த்தாலோ இணைத்தாலோ விபரீத பலன் இழக்கப்படும். அத்துடன், நல்ல பலனைத் தோற்றுவிக்கும். வெப்ப - தட்பங்களின் இணைப்பு பரிணாமத்துக்குக் காரணமாகும். பலம் பொருந்திய தட்பம், வெப்பத்தின் இயல்பை அறவே மாற்றிவிடும். கொதிக்கும் தண்ணீரில் குளிர்ந்த ஜலம் இணையும்போது, பல விதமான மாறுதலை உணர்கிறோம். குளிக்கும் அளவுக்கு வெப்பம் குறைந்துவிடும். வெப்பத்தால் ஏற்படும் மாற்றத்தை குளிர் தடுத்துவிடும். கொதிக்கும் உலையில் குளிர் ஜலம் சேரும்போது, கொதிப்பு அடங்கிவிடும். சமுதாயத்துடன் இணைந்த மனம் பல மாறுதலுக்கு இலக்காகும். மனத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாசனை, பலபேருடன் சந்திப்பில் ஏற்பட்ட அனுபவம், வாசனையோடு இணைந்திருக்கும் தாழ்வு மனப்பான்மை, அளவு கடந்த ஆசை, இனம் தெரியாத பயம், பாதுகாப்பின்மை ஆகியவை இருக்க இடம் உண்டு.வெப்பக் கிரகம் - தட்பக் கிரகம் ஆகியவற்றின் தாக்கத்தில் வெளிப்பட்ட கர்மவினையின் வாசனை, பலனை இறுதி செய்யும். வெப்பதட்பங்களின் விகிதாசாரக் கலவை, சிந்தனை மாற்றத்துக்குக் காரணமாகி பலனை எட்டிவிடும். அந்தச் சிந்தனை மாற்றத்தை வரையறுப்பது வெட்பதட்பங்கள். அதாவது நவக்கிரகங்கள். அவை, விண்வெளியில் குடிகொண்டிருப்பதாக எண்ண வேண்டாம். வெப்பதட்ப வடிவில் சுற்றுச் சூழலிலும் பரவி நிரவியிருக்கும். காலத்துடன் இணைந்திருக்கும். காலம் நம்மோடு இணைந்திருக்கும்.

இருட்டறையில் ஒளிந்திருக்கும் பொருளில் கூட வெப்பத்தின் தாக்கம் மாறுதலை உண்டு பண்ணும். வெப்பம் மேலோங்கியிருக்கும் வேளையில், திடீர் மழையின் சேர்க்கையானது சூழலை மட்டும் மாற்றாது; சிந்தனையையும் மாற்றும். வெப்பதட்பங்களின் தரத்தை ஆராய வேண்டும். வெந்நீரில் குளிர் ஜலம் கலந்தால் சூடு தணியும். ஆனால், வெப்பத்தின் தாக்கம் தட்பத்தையும் அடக்கிவிடுவது உண்டு. கொதிக்கும் தண்ணீர் உடம்பில் பட்டால், உடல் வெந்து போகும். ஆக, இணைப்பில் இரண்டில் ஒன்று வென்றுவிடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காலக் கணிதத்தின் சூத்திரம்!

Post by சிவா on Wed Nov 06, 2013 5:48 pm

7-ல் இருக்கும் அசுபக் கிரகம் வலுப்பெற்று இருக்கிறதா அல்லது பார்க்கும் தட்பக் கிரகம் (சுபக் கிரகம்) வலுப்பெற்றுள்ளதா என்று ஆராயும் திறன் ஜோதிடனுக்கு இருக்க வேண்டும். அந்த இரண்டின் தராதரத்தை ஒட்டி சிந்தனை மாற்றம் ஏற்பட்டு, பலனில் மாறுதலை எட்டவைக்கும்.

கணினி, ஜோதிடத் தகவல்களை திரட்டித் தரும். ஆனால், ஜோதிடரின் அலசி ஆராயும் திறமையில் பலன் வெளிவர வேண்டும். சுக்கிரன் அசுர குரு. வியாழன் தேவ குரு; இருவரும் பகை. இப்படியான புராணத் தகவலை வைத்துக்கொண்டு அனாயாசமாக பலன் சொல்வது தவறு. பகை ஒன்றே அத்தனை கோட்பாடுகளையும் தாண்டி பலனளிக்கும் என்ற எண்ணம் ஜோதிடத்தின் போதிய அறிவின்மையை வெளியிடும்.

7-ல் ஒரு வெப்பக்கிரகம் இருக்கிறது. லக்னத்தில் வெப்பக் கிரகம் ஒன்று, தட்பக் கிரகம் ஒன்று என இரண்டும் சேர்ந்திருக்கிறது. 7-ல் இருக்கும் வெப்பக் கிரகத்தை ஒரு வெப்பமும் தட்பமும் சேர்ந்து பார்க்கிறது. இந்த இடத்தில் இறுதி முடிவெடுக்கும் வழியை ஜோதிடம் பரிந்துரைக்கும்.

7-ல் அசுபக் கிரகம் இருப்பதால், முதலில் சுபக் கிரகப் பார்வை நிகழ வேண்டும். அதன் பிறகு, அசுபக் கிரகத்தின் பார்வை பட வேண்டும் என்று சொல்லும். சூரியன் இருப்பதால் அது மைனஸ் (-) என்று வைத்துக்கொள்வோம். அதன் எதிரிடை ( ப்ளஸ்) முதலில் பார்க்கத் துணிந்துவிடும். அதன் பிறகு, 7-ல் 'ப்ளஸ்’ ஆக மாறுவதால், மைனஸான சனியின் பார்வை விழும். 7-ல் சுபனா, அசுபனா என்று தெரிந்தவுடன்... அசுபன் எனில் முதலில் சுப பார்வை விழ வேண்டும். அதன் பிறகு அசுப பார்வை விழ வேண்டும் என்ற நியதியை ஜோதிடம் வலியுறுத்தும். 7-ல் இருப்பவன் சுபன் ஆனால், முதலில் அசுபப் பார்வை விழ வேண்டும். பின்னர் சுப பார்வை விழ வேண்டும் என்ற வரையறையை ஏற்கச் சொல்லும் ஜோதிடம்.

மாறாக... முதலில் சூரியனை சனி பார்க்கிறான். பிறகு, குரு - சுப பார்வையில் இரண்டு பாபங்களும் விலகிவிட்டது என்ற கோணலான சிந்தனைக்கு இங்கு இடம் இல்லை. சூரியனை குரு பார்ப்பதால், சூரியனால் ஏற்படும் விபரீதத்தை அழிப்பான். பிற்பாடு சனி பார்ப்பதால், குருவின் நன்மையை அழித்து சூரியனின் பாபச் செயலை நிலைநாட்டுவான் என்று விளக்கமளிக்கும் ஜோதிடம். சனி தனது பங்காக எதையும் சேர்க்கமாட்டான். குருவின் பார்வையில் ஏற்பட்ட நன்மையை விலக்குவதுடன், அவனது செயல்பாடு முடிந்துவிடும். சுபப் பார்வை அசுபனின் இயல்பை மாற்றுகிறது. அதன் பிறகு அசுபனின் பார்வை சுபத்தை அகற்றி, அசுபனின் இயல்பைத் தக்கவைக்கிறது என்று பொருள்.

அஸ்ட்ரானமி (கால கணனம்) என்பது... ஐந்து சிந்தாந்த நூல்களை ஆதாரமாக வைத்து நடைமுறைப்படுத்துவது சிறப்பு (பஞ்ச ஸித்தாந்த கோவிதபுன்னகை. பஞ்சாங்கத்தை நம்பி ஜாதகம் கணிப்பது நம்பிக்கைக்கு உகந்ததல்ல. ஜோதிடன் கலி தின எண்ணிக்கையை வைத்து தானாகவே கணிக்க வேண்டும். பாஸ்கரர், ஆர்யபட்டர் போன்றவர்களது வழியைப் பின்பற்றி, தானே கணிக்க வேண்டும்.அதை ஒதுக்கி வாக்கியம் சிறந்தது, 'த்ருக்’ சிறந்தது என்று பாமரத்தனமாகச் செயல் படுவது தவறு. பொறுப்பில்லாத சுதந்திரம் ஜோதிடத்துக்குப் பொருந்தாது. பொறுப்பை உணர வேண்டும்.

அதன் கோட்பாட்டுக்கு இணைந்து செயல் படுவதைவிடுத்து, சுதந்திரமாகச் செயல்படக் கூடாது. புது விஞ்ஞானத்தால் பழைய சித்தாந்தத்தை மாற்றியமைக்க முற்படக் கூடாது. தெரிந்துகொண்டு செயல்பட்டால் போதுமானது. ஆராய்ச்சியை ஏற்று தன்னை உயர்த்திக் கொள்ளுவது வீண்.

விகடன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum