ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏன் என்று தெரியுமா? -- பொது அறிவு விஞ்னம்

View previous topic View next topic Go down

ஏன் என்று தெரியுமா? -- பொது அறிவு விஞ்னம்

Post by தாமு on Fri Oct 30, 2009 7:32 am

கடல்நீர் உப்பாக இருப்பது ஏன்?

கடலில் வந்து கலக்கும் பல ஆறுகள் மலை, சமவெளி என அதன் பயணத்தில் தங்களுடன் நிறைய உப்பைக் கொண்டு வந்துவிடுகின்றன. இதனால்தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.

வானம் நீலநிறமாய்த் தோன்றுவது ஏன்?

சூரிய ஒளியில் உள்ள ஊதா, நீல நிறக் கதிர்கள், நீண்ட செந்நிறக் கதிர்களைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகிய ஒவ்வொன்றுடனும் பட்டுத் தெறித்து, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.

நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?

பூமிக்கும் நட்சத்திரத்திற்கும் இடையில் இருக்கும் வளி மண்டலத்தில் ஏற்படும் தடங்கல்களால், நட்சத்திர ஒளி வளைக்கப்படுகிறது. இதனால் நட்சத்திரங்கள் மின்னுகின்றன.

காலை, மாலை வேளைகளில் வெப்பம் குறைவாக இருப்பது ஏன்?

சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் காலை, மாலை வேளைகளில் சாய்வாகவும், நண்பகலில் செங்குத்தாகவும் விழுகின்றன. செங்குத்தாக விழும் கதிர்கள், வெப்பத்தை அதிகமாகத் தருகின்றன. அதனால் நண்பகலில் வெப்பம் அதிகமாகவும், காலை,மாலை வேளைகளில் வெப்பம் குறைவாகவும் உள்ளது.

நகம் வெட்டினால் வலிக்காதது ஏன்?

நம் உடலின் ஒரு பகுதியான நகங்களுடன் இரத்த நாளங்களுக்கோ, குறுத்தெலும்புகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் நரம்பின் தொடர்பு இல்லை. எனவே நகம் வெட்டும் போது வலிப்பதில்லை.

நிலவின் ஒரு பக்கம் மட்டும் தெரிவது ஏன்?

நிலவு தன் அச்சில் ஒரு முறை தானே சுற்றுவதற்கு 27 1/2 நாட்கள் ஆகின்றன. பூமியைச் சுற்றுவதற்கும் இந்த நாட்கள்தான் ஆகின்றன. அதனால்தான் நிலவின் ஒரே பக்கம் நமக்குத் தெரிகிறது. மறுபக்கம் தெரிவதில்லை.

சங்கைக் காதில் வைத்தால் சத்தம் கேட்பது ஏன்?

சங்குகள் பல வளைவுகளுடன் கூடிய மேற்பரப்புடையவை. இதனால் காற்று உள்ளே நுழையும்போது, பலவிதமான தடுப்புக்குள்ளாகிறது. இத்தடுப்பினால் ஒருவித அதிர்வலை எழுகிறது. அது, கடல் இரைச்சலைப் போலக் கேட்கிறது.

இரத்தம் சிகப்பாய் இருப்பது ஏன்?

இரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிக அளவில் இருப்பதால் இரத்தம் சிகப்பாக இருக்கிறது.

பொருள்கள் பூமியில் விழுவது ஏன்?

பூமியிடம் உள்ள புவியீர்ப்பு சக்தி இவ்வுலகின் அனைத்துப் பொருட்களையும் பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பு சக்தி வினாடிக்கு 32 அடியாக உள்ளது.

வான்வெளி வட்டமாய்த் தெரிவது ஏன்?

நம் கண் பார்வை ஒரு குறிப்பிட்ட தொலைவுதான் தெரியும். வட்டமாய் இருக்கும் நம் கண்களால் எந்தப் பக்கம் பார்த்தாலும் வட்டமாய்த்தான் தெரியும்.


கணேஷ் அரவிந்த்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஏன் என்று தெரியுமா? -- பொது அறிவு விஞ்னம்

Post by தாமு on Fri Oct 30, 2009 7:45 am

கொட்டாவி விடுவது ஏன்?

நாம் சோர்வாக இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு நிலைதான் கொட்டாவி. இந்த கொட்டாவி எதனால் ஏற்படுகிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடு அளவு அதிகரிக்கும் போது நமக்கு கொட்டாவி எற்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. நாம் கொட்டாவி விடும்பொழுது மூச்சை ஆழ்ந்து உள்ளிழுக்கிறோம். நாம் உள்ளிழுக்கும் காற்று ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடின் அளவைக் குறைத்து, ஆக்ஸிசனின் அளவை அதிகரிக்கிறது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் உண்மைதானா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

தலை சுற்றுவது ஏன்?

பூமியிம் நம் உடலின் நிலையும் அசைவும், பார்வைப்புலன், தொடு உணர்வு போன்ற பல்வேறு புலன் உறுப்புகளால் உணரப்படுகின்றன. காதின் மையப்புழை அமைப்பு உடல்நிலை மற்றும் உறுப்பு அசைவுகளின் உணர்வுகளை உருவாக்குவதில் பெரும் பங்கு கொள்கிறது.

புலன் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் கிளர்ச்சி மிகும் போது, மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும், முன்னும் பின்னும் மூளையைச் சென்றடைவதால் உடலின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் தலை சுற்றும் மயக்கமும் உண்டாகிறது.
மிகவும் உயரமான மலைகளின் முகட்டில் நின்று கொண்டு கீழே தரையைப் பார்க்கும் போது பார்வைப் புலன்கள் மட்டும் தகவலை மூளைக்கு அனுப்புகின்றன. மற்ற புலன் உறுப்புகள் இதற்கேற்ப ஒத்திசைவான தகவல்களை மூளைக்கு அனுப்புவதில்லை. இதனால் மூளையில் குழப்பம் ஏற்பட்டு உடல் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் தலைச் சுற்றல் ஏற்படுகிறது.

பெருமூளைப் புறணியிலுள்ள சமநிலைக் கட்டுப்பாடு மையத்தினருகில், வாந்தி உணர்வைத் தோற்றுவிக்கும் மையம் உள்ளது. உடல் சமநிலை பாதிக்கும் போது இம்மையமும் கிளர்ச்சியுறுவதால் வாந்தி ஏற்படுகிறது. சிலருக்கு கப்பல், ஆகாய விமானப் பயணத்தின் போது தலைச்சுற்றலும் வாந்தியும் ஏற்படுவதுண்டு.

கண் இருளடைவது ஏன்?
நமது கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ரசாயணக் கிரியை நடந்து டிரான்ஸ்ரெடினின் எனும் பொருள் உண்டாகும். இருட்டினைப் பார்க்கும் போது, "ரெடாப்சினின்" எனும் பொருள் உண்டாகும். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது. இதற்கு இக்கிரியைகளே காரணம்.

மாதவிலக்கின் போது வயிற்றுவலி ஏன்?

ஒருசில பெண்களுக்கு மாதவிலக்கின் போது இடுப்பு வலி, வயிற்று வலி ஏற்படுகிறது. மாதவிடாய் காலத்தில் கருப்பைக்கு அதிக ரத்தம் செல்லும். அப்போது சூலகக்குழாயில் நோயிருந்தால் வலி உண்டாகும். சூலக்குழாய்கள் ஒட்டியிருந்தால் வலியுடன் அதிக ரத்தப்போக்கு வெள்ளை போன்றவை உண்டாகும். இதைத் தவிர்க்க காற்றோட்டமாக உலாவுதல், உடற்பயிற்சி போன்றவைகளைச் செய்யலாம்.

கர்ப்பிணிகள் மாங்காய் சாப்பிடுவது ஏன்?
ஒரு பெண்ணின் வயிற்றில் கரு வளரும் போது முதலில் இருதயம்தான் வளரும். இருதயம் வளர்வதற்குத் தேவையான சத்துப் பொருள் மாங்காயில் அதிகம் அடங்கியுள்ளது. இருதயம் வளரத் தேவையான சத்துப் பொருள் தேவைப்படும் போது அத்தேவையை நாக்கின் சுவையரும்புகள் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தெரிவிக்கின்றன. அதனால் உந்தப்பட்டு கர்ப்பிணிப் பெண்கள் மாங்காயை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஏன் என்று தெரியுமா? -- பொது அறிவு விஞ்னம்

Post by தாமு on Fri Oct 30, 2009 7:57 am

விசில் பாஷை:
துருக்கியைச் சேர்ந்த ஒரு கிராமம் கஸ்கோவ். இங்கு வசிப்பவர்களுக்கு பாஷை கிடையாது. விசில் அடிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் விஷயங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இங்கு பல நூற்றாண்டுகளாக விசில் பாஷை வழக்கத்தில் இருக்கிறதாம்.
ஆமை புகுந்தால் அதிர்ஷ்டம்
ஆமை புகுந்த வீடு ஆகாது என்பது இந்திய நாட்டு நம்பிக்கை. ஆனால் சீனாவில் ஆமை புகுந்த வீடு அதிர்ஷ்டமானது என்கிறார்கள். இரண்டு நம்பிக்கைகளும் சரியானதில்லை என்கின்றனர் நாத்திகர்கள்.
தண்ணீருக்குப் பதில் பீர்
பாரகுவே நாட்டில் உள்ள கைபி பெண்டி பள்ளத்தாக்கில் வாழும் சேன் எனும் பழங்குடிகள் தண்ணீர் அருந்துவதில்லை. அங்கே கிடைக்கும் ஏரி நீர் உப்பாக இருப்பதால் அங்கு விளையும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து தண்ணீருக்குப் பதில் அருந்துகிறார்களாம்.
பேசாமல் இருந்த பெண்
பிரான்சில் அடெலி என்பவள் 65 ஆண்டுகள் யாருடனும் பேசவில்லை. 1850-ல் தனது இருபதாம் வயதில் ஆங்கில மதகுரு ஒருவரின் மகனான ஆல்பிரட் பின்சென் என்பவனைக் காதலித்தாள். அவனையே திருமணமும் செய்து கொண்டாள். அவன் ஒன்றுக்கும் உதவாத சோம்பேறி. ஊர் சுற்றித் திரிந்த அவனை அடெலி திருமணம் செய்த சில நாட்களிலேயே அவளை அவன் வெறுத்துத் தள்ளி விட்டான். மனம் சோர்ந்த அவள் தன் தந்தையிடம் வந்து சேர்ந்தாள். தந்தையின் ஆறுதல் மொழி மகளின் மன வேதனையை மாற்றவில்லை. 1915-ல் அவள் உயிர் துறக்கும் வரையில் யாருடனும் துளியும் பேசவில்லை. அவள் புகழ் பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர் ஹியூகோ என்பவரின் மகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரனுக்குக் கார் பயணம்
சந்திரனுக்குக் கார் மூலம் போக முடியுமா? முடியாது என்று வேகமாகச் சொல்லி விடுவீர்கள். அப்படிப் போக முடியும் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? பூமியிலிருந்து சந்திரன் 3,84,000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் போனால் சந்திரனை அடைய சுமார் ஆறு மாத காலம் ஆகும். மிக் வேகமாகச் செல்லும் ஜெட் விமானத்தில் போனால் 15 நாட்கள் பிடிக்கும். 28,000 கிலோ மீட்டர் வேகத்தில் போகும் ராக்கெட்டில் போனால் காலையில் கிளம்பி இரவிற்குள் சந்திரனுக்குப் போய் விடலாம்.
கொள்ளைக்காரனுக்கு மியூசியம்
தலைவர்கள் நினைவாக மியூசியம் வைப்பது தெரிந்த விஷயம்தான். ஒரு கொள்ளைக்காரனுக்கு மியூசியம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவில்தான் அப்படியொரு மியூசியம் இருக்கிறது. அமெரிக்காவையே நடுங்க வைத்த "ஜான் டில்லிங்கர்" என்ற கொள்ளைக்காரன் நினைவாகத்தான் ஒரு மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. அவனுக்குச் சொந்தமான துப்பாக்கிகள், கத்திகள், அவனது கொள்ளகள் பற்றிய பத்திரிகை செய்திகள் முதலியவை இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஏன் என்று தெரியுமா? -- பொது அறிவு விஞ்னம்

Post by kirupairajah on Fri Oct 30, 2009 10:34 am

இது ஓர் சிறந்த முயற்ச்சி, எத்தனையோ தெரியாத விடயங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது. பதிவிற்கு நன்றி தாமு!

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: ஏன் என்று தெரியுமா? -- பொது அறிவு விஞ்னம்

Post by nandhtiha on Fri Oct 30, 2009 10:42 am

வணக்கம்
//கடல்நீர் உப்பாக இருப்பது ஏன்?

கடலில்
வந்து கலக்கும் பல ஆறுகள் மலை, சமவெளி என அதன் பயணத்தில் தங்களுடன் நிறைய
உப்பைக் கொண்டு வந்துவிடுகின்றன. இதனால்தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.//
அது சரி பூமியில் உப்பு எப்படிவந்தது?
பெரு வெடிப்பின் போது முதல் அணு வான ஹைட்ரஜன் தானே தோன்றி இருக்க முடியும். எவ்வாறு மற்ற எலிமெண்ட்கள் தோன்றின?
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: ஏன் என்று தெரியுமா? -- பொது அறிவு விஞ்னம்

Post by மீனு on Fri Oct 30, 2009 12:07 pm

இங்கு தாமு பல விடங்களை தருகிறீர்கள்..நன்றிகள் பல..
தரும் விடயத்தில்..இன்னும் கேள்வியை உருவாக்கும் அக்காவின் அறிவை ..எப்படி பாராட்டுவது ,,அக்கா எந்த கேள்வி கேட்டாலும்..பதில் தர முடியலையே மீனுவால் என்று கவலையாக உள்ளது..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஏன் என்று தெரியுமா? -- பொது அறிவு விஞ்னம்

Post by தாமு on Fri Oct 30, 2009 3:40 pm

நன்றி மீனு, கிருபை, நந்திதா அக்கா ...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஏன் என்று தெரியுமா? -- பொது அறிவு விஞ்னம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum