ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகச் செய்திகள்!

Page 4 of 26 Previous  1, 2, 3, 4, 5 ... 15 ... 26  Next

View previous topic View next topic Go down

உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Nov 12, 2013 4:35 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலிஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Dec 19, 2013 4:53 pm

ஆப்பிரிக்க நாடான மாலி பாராளுமன்ற தேர்தலில் அதிபர் கட்சி வெற்றி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு ராணுவ புரட்சி நடந்தது. அதில் இசுலாமிய அரசு பதவிக்கு வந்தது.இந்த நிலையில் அங்கு மீண்டும் ஜனநாயகம் மலரச்செய்வதற்காக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Dec 19, 2013 4:54 pm

கடைகளில் திருடிய நாய் கைது

அமெரிக்காவில், கடைகளில் திருடி வந்த ஒரு நாய் கைது செய்யப்பட்டது. தெற்கு கரோலினா மாநிலம் கிளிண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இச்சம்பவம் நடைபெற்றது. அங்கு அடிக்கடி பொருட்கள் திருடுபோய் வந்தன. திருடனை கண்டுபிடிப்பதற்காக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

அதில், குற்றவாளி ஒரு நாய் என அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். அந்த நாய், கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதும், பிறகு அருகில் உள்ள இடத்தில் அப்பொருட்களை புதைத்து வைப்பதும் பதிவாகி இருந்தது. அதுபோல், வேறு சில பெரிய கடைகளிலும் அந்நாய் இதேபோல் திருடி உள்ளது. கடைக்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அந்த நாயை கைது செய்து கூண்டில் அடைத்தனர். தாங்கள் கைது செய்தவர்களில் இதுதான் சிறந்த கைது என்று போலீசார் வர்ணித்தனர். கடை ஊழியர்களோ, நாய் மீதான குற்றச்சாட்டுகளை வற்புறுத்தப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Dec 19, 2013 4:55 pm

’காப்பிரைட்’டராக பணியாற்றிய பெண் இறப்பு: '30 மணிநேரம் தொடர்ந்து வேலை பார்த்ததாக டுவிட்டரில் தகவல்’

இந்தோனேஷியாவில் தொடர்ந்து 30 மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்த பெண் பலியானார்.

இந்தோனேஷியாவில் மிட்டா துரன் என்ற பெண் ’காப்பிரைட்’டராக அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். அவர் நிறுவனத்தில் தொடர்ந்து 30 மணி நேரம் தூக்கம் இன்றி வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி காலையில் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த மற்ற பணியாளர்கள் அவர் இறந்து கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பலியான மிட்டா துரன் இறப்பதற்கு முன்பாக ”30 மணிநேரமாக வேலை பார்க்கிறேன், தொடர்ந்து வேலை செய்து வருகிறேன்” என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மிட்டா இறந்ததற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து வேலை பார்த்ததே அவரது இறப்பு காரணம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. வேலை நேரத்தின் போது மிட்டா உலுக்கு ஆற்றலை கொடுக்க குளிர்பானங்களை குடித்து வந்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Dec 19, 2013 4:56 pm

சிங்கப்பூரில் கலவரம் நடந்த பகுதியில் 6 மாதங்களுக்கு மதுபானம் விற்க தடை

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில், தெற்காசியாவை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் பணி செய்து வருகிறார்கள். இங்கு நேற்று முன்தினம் நடந்த ஒரு விபத்தில் சக்திவேல் குமாரவேலு (வயது 33) என்ற இந்திய தொழிலாளி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற தொழிலாளர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டனர். அதன்படி இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுமார் 400 பேர், பயங்கரமான ஆயுதங்களுடன் அப்பகுதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஏராளமான வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதில் 10 போலீசார் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.

சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக, தெற்கு ஆசிய தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர்களை கைது செய்தனர். அங்கு மதுபானங்கள் விற்க தடை செய்யப்பட்டது. கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கலவரம் நடந்த பகுதியில் மதுபானங்கள் விற்க விதிக்கப்பட்ட தடையை மேலும், 6 மாதங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Dec 19, 2013 4:57 pm

மத அவமதிப்பு புகாரில் பாக். டாக்டர் கைது

பாகிஸ்தானில் பூட்டோ பிரதமராக இருந்த போது 1974–ம் ஆண்டில் ஒரு சட்டதிருத்தம் கொண்டு வந்தார். அதன்படி அஹ்மடி சிறுபான்மையினர் முஸ்லிம் அல்லாதவர்களாக கருதப்படுவார்கள். இங்கிலாந்தில் இருந்து மசூத் அகமது என்ற டாக்டர் பாகிஸ்தானுக்கு திரும்பி தொழில் செய்தார். சிகிச்சை பெற சென்ற நோயாளி ஒருவர் இவர் மீது வீடியோ ஆதாரத்துடன் மத அவமதிப்பு செய்வதாக புகார் கூறினார்.

இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் மசூத் அகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து அவர் லாகூர் செசன்சு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Dec 23, 2013 6:39 pm

இந்திய எல்லைக்குள் சீன படைகள் மீண்டும் ஊடுருவல்

காஷ்மீர் எல்லைப்பகுதியான தவுலத் பெக் ஒல்டி பகுதிக்குள் கடந்த ஏப்ரல் மாதம் சீன படைகள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தன. சுமார் 19 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய அவர்கள் கூடாரங்கள் அமைத்து, சீன கொடிகளையும் நாட்டினர். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள் இடத்தை காலி செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் சீன படைகள் மீண்டும் காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள செப்சி பகுதியில் ஊடுருவி முகாமிட்டுள்ளனர். கடந்த வாரம் 22 சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து 10 கூடாரங்களை அமைத்து, சீன கொடிகளையும் நாட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Dec 23, 2013 6:50 pm

இஸ்ரேல் பஸ்சில் குண்டு வெடித்தது டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்

இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவிவ் நகருக்கு அருகே பயணிகள் பஸ் ஒன்று சென்றது. அதில் பின்பக்க இருக்கையில் மர்ம பை இருந்தது. இதை கண்ட ஒருவர் சந்தேகம் அடைந்து டிரைவரிடம் கூறினார். உடனே டிரைவர் சுதாரித்து பஸ்சை நிறுத்தி அனைத்து பயணிகளையும் வெறியேற்றினார். சற்று நேரத்தில் பையில் பதுக்கி வைத்த குண்டு வெடித்து பஸ் ஜன்னல்கள் நொறுங்கின. டிரைவரின் சாமர்த்தியத்தால் 12 பயணிகள் காயமின்றி தப்பினர்.இந்த குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும் பாலஸ்தீன ஹாமாஸ் இயக்கம் காரணம் என தெரியவருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Dec 23, 2013 6:52 pm

கலவரம் எதிரொலி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை எதிர்காலத்தில் புகார் வந்தால் நடவடிக்கை

கலவரம் எதிரொலியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் 200 பேருக்கு சிங்கப்பூர் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். எதிர்காலத்தில் அவர்கள்மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

சிங்கப்பூரில் கலவரம்

சிங்கப்பூரில், ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் தமிழரான சக்திவேல் குமாரவேலு (வயது 39) என்பவர் தனியார் பஸ் விபத்தில் சமீபத்தில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரங்கள் நடந்தன. 39 போலீசார் உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 16 போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட 25 வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.

1969–ம் ஆண்டுக்கு பிறகு சிங்கப்பூரில் இப்படி ஒரு கலவரம் நடந்தது இதுவே முதல் முறை. இந்தக் கலவரங்களில் 400 வெளிநாட்டு தொழிலாளர்கள் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இவர்களில் 56 இந்தியர்கள், ஒரு வங்காளதேச பிரஜை ஆகியோர் சமீபத்தில் அங்கிருந்து அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

போலீஸ் எச்சரிக்கை

இந்த நிலையில் 200 வெளிநாட்டு தொழிலாளர்களை போலீசார் நேற்று நேரில் வரவழைத்தனர். அவர்கள் சிங்கப்பூர் சி.ஐ.டி. அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் கன்டோன்மென்ட் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நேரில் வந்தனர். அவர்களுடன் அவர்களது நிறுவன அதிபர்களும் வந்திருந்தனர்.

வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும், சிங்கப்பூர் சட்டத்திற்கு கட்டப்பட்டு வாழ வேண்டும், அவர்கள் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடக்கூடாது, புகாரும் வரக்கூடாது, அப்படி குற்றச்செயலில் ஈடுபட்டால், புகார் வந்தால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும், அவர்கள் வேலை உரிமைகளும் பறிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

இந்த எச்சரிக்கை வாய் வார்த்தைகள் மூலமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் விடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே இந்தக் கலவரங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 28 இந்தியர்கள் இன்று (திங்கட்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Dec 24, 2013 5:12 am

தாய்லாந்தில் அரசு எதிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது

தாய்லாந்தில் அரசு எதிர்ப்பாளர்கள் போராட்டம் தொடர்கிறது. பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடந்த எதிர்ப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தாய்லாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யிங்லக் ஷினவத்ரா வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், யிங்லக் ஷினவத்ரா வெளிநாட்டில் வசிக்கும் தன் அண்ணன் தக்ஷின் ஷினவத்ராவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. தக்ஷின் ஷினவத்ராவின் ஆட்சி 2006 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தக்ஷின் ஷினவத்ராவுக்கு பொது மன்னிப்பு வழங்க தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், யிங்லக் ஷினவத்ராவின் ஆட்சியில் ஊழலும் முறைகேடுகளும் மலிந்து விட்டதாகவும் கூறி எதிர்க்கட்சியினர் கடந்த சில வாரங்களாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தை பிரதமர் யிங்லக் கலைத்து விட்டார். வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

ஆனால், இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஜனநாயகக் கட்சி கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காபந்து பிரதமராகச் செயல்படும் யிங்லக் முழுமையாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாங்காக் வீதிகளில் அரசு எதிர்ப்பாளர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி பிரம்மாண்டப் பேரணி நடத்தினர். ஐந்து முக்கிய வீதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்ததால், போக்குவரத்து முடங்கியது. இதனிடையே, தாய்லாந்து ராணுவத் தலைமை, “தற்போதுள்ள அரசியல் வேறுபாடுகள் உள்நாட்டுப் போரைத் தூண்டி விட்டுவிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Fri Dec 27, 2013 1:11 am

தேர்தல் வன்முறை வங்காளதேசத்தில் ராணுவம் குவிப்பு

வங்காளதேசத்தில் ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மற்றும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஆளுங்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு பெற்று விட்டனர்.

இந்த தேர்தலை கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். எனவே வன்முறையை தடுக்க தலைநகர் டாக்கா உள்பட முக்கிய நகரங்களில் இன்று ராணுவத்தினர் குவிக்கப்பட்டார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Fri Dec 27, 2013 1:12 am

பாக்தாத் கிறிஸ்தவ ஆலயம் குண்டுவெடிப்பு ; பலி எண்ணிக்கை 37-ஆக அதிகரிப்பு

தெற்கு பாக்தாத்தில் டோரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது கிறிஸ்துமஸ் ஆலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும் மருத்துவக்குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .தற்போது கிடைத்த தகவல்களின் படி பலி எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் விழாவில் மட்டும் ஈராக்கில் 441 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின்படி, 8,000 க்கும் கிறிஸ்துவர்கள் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்திகள் தெரிவிக்கின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Fri Dec 27, 2013 1:13 am

அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 24 பேர் பலி; 5 இலட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பு

அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 24 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க வட மகாணங்களில் கடந்த சில நாட்கலாக வீசிவரும் பனிப்புயலுக்கு 24-க்கும் மேற்ப்பட்டோர் பலியாகி உள்ளனர் பனிப்புயலால் அமெரிக்க முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது இதனால் சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்று தவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மின்சாரம் தடைபட்டதால் நேற்று கிறிஸ்துமஸ் விழா அவ்வூர் மக்கள் இருளிலேயே கொண்டாடினர். பனிப்புயலால் பாதிக்கப்ட்டவர்களை அந்நாட்டு ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.பனிப்புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிக்கிச்சை அளித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பனிப்புயலால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரகனக்கான விமான சேவைகள் ரத்து செய்யபட்டௌ உள்லனர். பயணிகள் விமான நிலையங்களிலேயே முடங்கி உள்ளனர். இது போல் இங்கிலாந்து ,கனடா,ரஷ்யா போன்ற நாடுகளும் கடும்பனிப்பொழிவால் பாதிக்கபட்டு உள்ளன
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Fri Dec 27, 2013 1:14 am

எகிப்து முன்னாள் பிரதமர் கைது; போலீஸ் தலைமை அலுவலத்தில் கார் குண்டு வெடித்து 15 பேர் பலி

எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் இடைக்கால அரசில் பிரதமராக இருந்தவர் ஹிஷாம் குண்டில். இவர் பதவியில் இருந்த போது 1996-ம் ஆண்டில் தனியார் மயமாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை மீண்டும் தேசிய மயமாக்க ஆளுங்கட்சி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை காண்டில் ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து அவருக்கு எகிப்து கோர்ட்டு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து கெய்ரோ கோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தலைமறை வாக இருந்தார்.

இந்த நிலையில் காண்டில் சூடான் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றார். இதற்காக தலைநகர் கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலை வனம் வழியாக சென்ற போது அவரைபோலீசார் கைது செய்தனர். காண்டில் கைது செய்யப்பட்டதை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.

அவர் கைது செய்யபட்ட சிறிது நேரத்தில் போலீஸ் தலைமைத்தில் கார் வெடித்தது இதில் 12 போலீஸ் காரர்கள் உள்பட 15 பேர் பலியானார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Fri Dec 27, 2013 1:15 am

தெற்கு சூடானில் உள்நாட்டு போர் மூளும் அபாயம்; பாதுகாப்புக்காக கூடுதலாக 7 ஆயிரம் ராணுவ வீரர்களை ஐ.நா. அனுப்பியது

தெற்கு சூடானில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி ஜ.நா.வின் அமைதி முகாமில் தஞ்சம் புகுந்து உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக கூடுதலாக 7 ஆயிரம் ராணுவ வீரர்களை ஐ.நா. நேற்று அனுப்பியது.

தெற்குசூடானில் அதிபர்கள் மோதல்

கடந்த 2011–ம் ஆண்டு உதயமான தெற்குசூடானில் பழங்குடி தலைவரான சல்வாகீர் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டின் துணை அதிபராக இன்னொரு பழங்குடி இனத்தை சேர்ந்த ரிக் மசூது இருந்து வருகிறார்.

இந்த நிலையில் துணை அதிபரை சல்வாகீர் அதிரடியாக நீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து அதிபரின் படைக்கும் துணை அதிபரின் ரிக்மசூது புரட்சிப்படையினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது.

ஆயிரம் பேர் பலி–மக்கள் வெளியேற்றம்

கடந்த 3 நாட்களாக நடந்த இந்த மோதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அங்கிருந்து ஏராளமான அப்பாவி பொதுமக்கள் வெளியேறி வருகிறார்கள். தஞ்சம் தேடி ஓடும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஐ.நா. சபையின் கீழ் செயல்படும் அமைதிப்படையினர் 6 இடங்களில் முகாம் அமைத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். ஐ.நா.வின் அமைதிப்படையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 43 பேர் இடம் பெற்று உள்ளனர்.

புரட்சிபடையினர் அமைதிப்படை முகாம் மீது நடத்திய தாக்குதலை அமைதிப்படை முறியடித்தது. இதில் இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலான நடவடிக்கையால் பெரும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. இதற்கு இந்திய ராணுவத்தை ஐ.நா.சபை பாராட்டு தெரிவித்தது.

உள்நாட்டு போர் மூளும் அபாயம்

இந்த நிலையில் தெற்குசூடானில் அரசு படைக்கும் புரட்சி படைக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருவதால் தெற்குசூடானில் உள்நாட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கு பயந்து அங்கிருந்து அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறி அமைதிப்படையின் முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அவ்வாறு தஞ்சம் புகும் மக்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை செய்ய ஐ.நா.சபை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

கூடுதலாக 7 ஆயிரம் வீரர்கள்

தெற்கு சூடானில் உள்ள ஐ.நா.வின் அமைதிப்படையில் தற்போது 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். அங்கு பாதுகாப்பு வசதியை மேம்படுத்துவதற்காக தெற்கு சூடானுக்கு 12,500 ராணுவ வீரர்களும், 1323 போலீசாரையும் ஐ.நா.சபை கூடுதலாக அனுப்பி உள்ளது. இவர்களையும் சேர்த்து ஐ.நா. அமைதிமுகாமில் தற்போது 14 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஐ.நா.சபையின் மனிதநேய தலைவர் டோபி லான்சர் கூறுகையில், ‘தெற்கு சூடானில் நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார். தெற்குசூடானில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அந்நாட்டுக்கு ஐ.நா.சபை தலைவர் பான் கி மூன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அமெரிக்க மந்திரி பேச்சு

இதற்கிடையே தெற்குசூடானில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா.சபை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அமெரிக்க ராணுவ மந்திரி ஜான்கெர்ரி மற்றும் எத்தியோப்பியா நாட்டு மந்திரி ஆகியோர், தெற்கு சூடான் அதிபர் சல்வார்கீருருடன் டெலிபோனில் பேசினார்கள். அப்போது அவர்கள் தெற்குசூடானில் அமைதி நிலவவும், நியாயமான தேர்தலை நடத்தவும் கேட்டுக்கொண்டனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Dec 28, 2013 2:48 pm


ரோஸ்மாவின் மகன் நியூயார்க்கில் 110 மில்லியனுக்கு ஆடம்பர குடியிருப்பு வாங்கியுள்ளார்!

பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் மகனான ரிசா ஷாரிஸ் அப்துல் அசிஸ் (வயது 36), அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 33.5 மில்லியன் டாலர் (110 மில்லியன்) விலையில் ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.

ரோஸ்மாவின் முதல் கணவருக்குப் பிறந்த மகனான ரிசா, இந்த குடியிருப்பை கடந்த நவம்பர் 19 ஆம் தேதி வாங்கியுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

கடந்த 2000 ஆம் ஆண்டு லண்டனில் பொருளாதாரப் பட்டப்படிப்பை முடித்த ரிசா, வங்கியில் பணியாற்றத் தொடங்கினார். 2002 வரை கேபிஎம்ஜி என்ற நிறுவனத்தில் பணியாற்றிய அவர், பின்னர் ஹெச்எஸ்பிசி நிறுவனத்தில் 5 வருடங்கள் பணியாற்றினார். பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

தற்போது ஹாலிவுட்டில் பிரபல நட்சத்திரமாகிவிட்ட ரிசா, ஜோய் மேக்பார்லாண்ட் என்பவருடன் இணைந்து ரெட் கிரானைட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அண்மையில் “வோல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்” என்ற படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Dec 28, 2013 3:41 pm

பத்திரிக்கை சுதந்திரத்தில் மலேசியா பின்னடைவை சந்திக்கும் – லிம் கிட் சியாங்

‘த ஹீட்’ வார இதழ் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அப்படி இல்லையென்றால் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் (Press Freedom Index) மலேசியா, மியான்மர் நாட்டை விட தாழ்ந்துவிடும் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

இது குறித்து லிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் சமீபத்திய ஆண்டுகளில் மலேசியா 23 இடங்களில் பின் தங்கி தரவரிசைப் பட்டியலில் 122 வது இடத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில் மியான்மர் 18 இடங்கள் உயர்ந்து 15 ஆவது இடத்தை கடந்த 2011/2012 ஆம் ஆண்டிலேயே அடைந்து விட்டது.”

“எனவே இந்நிலை வரும் 2014 ஆம் ஆண்டில் மேலும் மோசமடையாமல் தடுக்க நஜிப் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு த ஹீட் வார இதழின் உரிமத்தை திரும்பத் தர உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னர், மலேசியா தரவரிசைப் பட்டியலில் பின்னடைய பெர்சே 3.0 அமைப்பின் பேரணியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அமைந்தது. இதில் நிறைய பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் தாக்கப்பட்டனர்.

“இது ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் நஜிப், ‘த ஹீட்’ வார இதழ் முடக்கப்பட்டதன் மூலம், தனது வாக்குறுதிகளை மீறியிருப்பதோடு, மகாதீரின் சர்வாதிகார முறையைப் பயன்படுத்தி பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் லிம் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டதற்காக ’த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது.

எனினும், உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர், பத்திரிக்கை விதிகளை மீறியதால் தான் அவ்வார இதழ் முடக்கப்பட்டதாக ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ வெளியிட்டிருந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Dec 28, 2013 4:00 pm

 ரஷியாவில் போலீஸ் அலுவலகம் பகுதியில் குண்டு வெடித்து 3 பேர் பலி

ரஷியாவின் தெற்குப்பகுதியில் சோஷி நகருக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பயாதிகோர்ஸ்க் நகரில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அருகே கார் குண்டு வெடித்தது. அதில் போலீஸ் அலுவலக கட்டிடம் சேதம் அடைந்தது.

இந்த கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த 3 பேர் குண்டு வெடிப்பில் சிக்கி பரிதாபமாக செத்தனர். போலீஸ்காரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என உயர் அதிகாரி தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Dec 28, 2013 4:03 pm

 மலேசியாவில் பயங்கரம் காதலியை கொன்று, இந்திய வாலிபர் தற்கொலை

மலேசியாவில் கோலாலம்பூர் புறநகர் தமான்சரா தமாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மொகிந்தர் பால் (வயது 24). இந்தியர். இவர் இந்திய வம்சாவளிப்பெண் சண்முகவல்லியை காதலித்து வந்தார். இந்தக்காதலுக்கு சண்முகவல்லி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

சண்முகவல்லி திடீரென கடந்த 13–ந்தேதி காணாமல் போய் விட்டார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மொகிந்தர் பால் வீட்டில் அவரும், சண்முகவல்லியும் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாகக்கிடந்தது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று அவர்களின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்முகவல்லியை மொகிந்தர் பால் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Dec 28, 2013 4:17 pm

 சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக 4 தமிழர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

சிங்கப்பூரில் தமிழகத்தை சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்பவர் விபத்தில் இறந்ததால், அங்குள்ள மற்ற தமிழர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 25 பேரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இப்போது அந்த 25 பேரில் 4 பேர் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னப்பா பிரபாகரன் (23) என்பவர் மீது ஆம்புலன்சுக்கு தீ வைத்ததாகவும், போஸ் பிரபாகர் (29) மீது போலீஸ் அதிகாரியை தாக்கியதாகவும், மூர்த்தி கபில்தேவ்(24) மீது விபத்தை ஏற்படுத்திய பஸ்சின் பெண் நடத்துநரை தாக்கியதாகவும், ஆறுமுகம் கார்த்திக் (24) மீது போலீஸ் காருக்கு தீவைத்ததாகவும், கான்கிரீட் கற்களை வீசியதாகவும் புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Dec 28, 2013 4:19 pm

காவலாளியைக் கொன்ற மலைப்பாம்பு

பாலி: இந்தோனேஷியா, பாலி தீவில் ஒரு ஓட்டல் காவலாளியை மலைப்பாம்பு நெறித்துக் கொன்றது. கடற்கரையை ஒட்டியுள்ள ஆடம்பர பொழுதுபோக்கு இடத்தில் 12 அடி மலைப்பாம்பைக் கண்ட ஒரு காவலாளி அதை கையால் பிடித்தார்.

ஆனால் அநத பாம்பு அவருடைய கழுத்தை நெறித்து கொன்று விட்டு தப்பி ஓடியது. அந்த காவலாளியுடன் அவருடைய நண்பர்கள் இருந்தபோதும், பயத்தின் காரணமாக உதவ முன்வரவில்லை. மேலும் அந்த மலைப்பாம்பு இன்னும் பிடிபடாததால் அந்த பகுதிக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Dec 30, 2013 12:32 am

 இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது ராக்கெட் வீச்சு

இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது லெபனானில் இருந்து இன்று 2 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த ராக்கெட் வீச்சுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனாலும் இது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்கும் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by Muthumohamed on Mon Dec 30, 2013 1:35 am

    
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino on Mon Dec 30, 2013 9:10 am

சிவா wrote: இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது ராக்கெட் வீச்சு

இஸ்ரேல் நாட்டின் வடபகுதி மீது லெபனானில் இருந்து இன்று 2 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த ராக்கெட் வீச்சுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனாலும் இது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்கும் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது.

மொத்தம் 5 ராக்கெட்டுகள் வீசப்பட்டன ..இதில் ஒன்று தான் வெடித்தது மற்றவை வெடிக்க வில்லை ..இஸ்ரேலும் பதிலுக்கு தனது ஆர்டிலரி மூலம் சுட்டது .

லெபனானின் ராணுவத்தில் வேலை செய்யும் ஒருவன் போன வாரத்தில் இஸ்ரேல் வீரர் ஒருவரை சினைப் டௌன் செய்ததும் ..இப்போதைய ராக்கெட் தாக்குதலும் அங்கு பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino on Mon Dec 30, 2013 9:14 am

செசென்யா black widow நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 15 பேர் இறந்தனர் 40க்கும் அதிகமாநூர் படுகாயம் அடைந்தனர் ..இது நடந்தது ரஷ்யாவின் voldermort நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தில்

போன வாரமும் இங்கு நடந்த black widow நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 3 பேர் பலியாயினர்

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino on Mon Dec 30, 2013 12:28 pm

சற்று முன்பு வோலோக்ராடில் பேருந்தில் குண்டு வெடித்து 10 பேர் பலி ..நேற்று இங்கு தான் ரயில் நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்கி 15 பேர் உயிர்இழந்தனர்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Page 4 of 26 Previous  1, 2, 3, 4, 5 ... 15 ... 26  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum