ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 ayyasamy ram

கமல்ஹாசனின் கவிதைகள்
 ayyasamy ram

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 ayyasamy ram

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

'பராசக்தி' தொடருகிறாள்...

View previous topic View next topic Go down

'பராசக்தி' தொடருகிறாள்...

Post by vasudevan31355 on Fri Nov 15, 2013 10:18 pm

''பராசக்தி' தொடருகிறாள்...

தொடர் 1

பாகம் 2

பராசக்தியைப் பற்றி சில தகவல்கள்.

1. பராசக்தி படத்தில்தான் முதன் முதலாக டைட்டிலின் போது பின்னால் பாடல் ஒலிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

2. சிவாஜி ஒல்லியாக இருந்ததினால் நேஷனல் பிக்சர்ஸ் கம்பெனி மேக்கப் மேனிடம் நிர்வாகத்தால் பணம் வழங்கப்பட்டு சிவாஜிக்கு 'தயார்த் தீனி' அளிக்கப்பட்டது. அதாவது இறைச்சி வகைகள், முட்டை, மீன் இதர மாமிச வகைகள் சிவாஜிக்கு ஒரு கிராமத்தில் இரண்டுமாத காலம் கொடுக்கப்பட்டு அவருடைய உடம்பு கதாநாயகனுக்குத் தக்கபடி ஓரளவிற்கு உருமாற்றப்பட்டது.

3. 1951-இல் 'பராசக்தி' ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னால் சிவாஜியை வைத்து ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஆக்டிங் டெஸ்ட் எடுக்கப்பட்டது. சிவாஜி நடித்த 'என் தங்கை' என்ற நாடகத்தில் அவர் குடிகாரனாக அதகளம் செய்வாராம். அந்த குடிகாரன் பாத்திரத்தையே சோதனை நடிப்பாக சினிமா காமெரா முன்னால் சிவாஜியை செய்ய வைத்தார்களாம். சிவாஜி பிரமாதமாக நடித்துக் காட்ட அனைவருக்கும் பரம திருப்தி ஏற்பட்டதாம்.

4. பின் பராசக்தி ஷூட்டிங்கின் முதல் நாளில் கையில் இரண்டு சிகரெட்டுகளைப் பிடித்தபடி சிவாஜி பேசி நடித்த முதல் வசனம் என்ன தெரியுமா. 'சக்சஸ்' அந்தக் காட்சியின் புகைப்படத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.5. அந்தக் காலத்தில் ஒரே படத்தில் ஒரு நடிகரே வெவ்வேறு இரண்டு அல்லது மூன்று வேடங்கள் போடுவதுண்டு. 'அய்யா தெரியாதய்யா'
புகழ் ராமாராவ் பராசக்தியில் கல்யாணியின் பக்கத்து வீட்டுக் காரராகவும், கல்யாணிக்கு கடன் கொடுத்து அதை வசூல் செய்யும் சேட்டாகவும் இரண்டு வேடங்கள் செய்திருப்பார். அந்தக் காலங்களில் கம்பெனி ஒப்பந்தங்களின்படி ஒருவரே நாடகத்திலும் சரி, திரைப்படங்களிலும் சரி இரண்டு மூன்று வேடங்கள் போடுவதுண்டு. ஆனால் எளிதில் கண்டு பிடிக்க இயலாது. மேக்கப்பும், நடிப்பும் அவ்வளவு தத்ருபமாக இருக்கும்.

6. படம் இரண்டாயிரம் அடி எடுக்கப்பட்டு சிவாஜி பராசக்தியின் கதாநாயகனா இல்லையா என்ற இழுநிலை நீடித்தபோது சிவாஜி அவர்களின் மனநிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தான் பராசக்தியின் கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுவோமா இல்லையா என்று அந்த மனிதர் எப்படியெல்லாம் துடித்திருப்பார். இதோ அவர் சொல்வதைக் கேளுங்கள்.

"பராசக்தியில் என்னை கதாநாயகனாக ஆக்குவார்களா இல்லையா என்று நான் துடித்துப் போனேன். அழுது அழுது என் கண்ணீர் வற்றியது. இன்று ஏவி
எம் ஸ்டுடியோவில் வானுயர வளர்ந்த வேப்ப மரங்கள் அனைத்தும் அன்று என் கண்ணீரால் வளர்ந்தவை"

அதே ஏவி எம் ஸ்டுடியோவில் தற்சமயம் உலகப்பெரு நடிகர் சிவாஜி கணேசனுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் புகைப்படத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.('பராசக்தி' பட வடிவில்)7. முதன் முதல் ஒரு திரைப்படத்தின் வசனங்கள் இசைத்தட்டாக வெளிவந்து தமிழ்நாடு முழுதும் எதிரொலித்ததே அவ்வளவு ஏன்? இன்றளவும் கூட மார்கழி மாத அதிகாலைகளில் கோவில்களில் குணசேகரன் கல்யாணித் தங்கைக்காக நீதிமன்றத்தில் கோர்ட்டாருடன் வாதிடுவது நமது ஆழ்ந்த உறக்கத்தையும் மீறி நம் காதுகளுக்குக் கேட்டு நம்மில் உணர்ச்சிப் பிரவாகத்தை உண்டு பண்ணுகிறதே!

8. முதன்முதலில் வெளிநாட்டில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் பராசக்திக்கு உண்டு.

9. அதுவரை தமிழில் கதாநாயகர்களாகக் கோலோச்சிய நடிகர்கள் தியாகராஜா பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், கே.ஆர்.ராமசாமி, எம்.கே.ராதா, ரஞ்சன், இன்னும் நிறைய பேர் பராசக்தி சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். தெலுங்கு நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி ஆர் கூட தமிழில் நிறைய நடித்துக் கொண்டிருந்த நேரம்.அவர்களும் நடிகர் திலகம் என்ற நடிப்புப் புயலில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆந்திராவில் சென்று கரையேறினர்.

10. அதுவரை திரைப்பட விநியோகஸ்தராக இருந்த பி.ஏ.பெருமாள் முதலியார் அவர்கள் தயாரித்த முதல் படம் 'பராசக்தி'.

11. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அறிமுகமும் பராசக்தியில்தான் என்று நினைக்கிறேன்.

12. .கலைஞரும், சிவாஜியும் இணைந்த முதல் படம் என்பதை பட்டி தொட்டியும் அறியும்.

13. கவிஞர் கண்ணதாசன் நீதிபதியாக பராசக்தியில் சில காட்சிகள் விருப்பத்துடன் ஏற்று நடித்தாராம். இறுதிவரை நடிகர் திலகத்துக்கு உறுதுணையாய் இருந்த சிவாஜி நாடக மன்ற இயக்குனர் எஸ். ஏ. கண்ணன் இறுதி நீதிமன்றக் காட்சிகளில் வக்கீலாக நடித்திருப்பார்.

14. 'பராசக்தி'யில் சிவாஜி நடிப்பதைப் பார்க்க அப்போதே பெரிய நடிக நடிகைகள் மற்றும் இதர கலைத்துறையினர் ஏ.வி.எம்.ஸ்டுடியோ வளாகத்திற்கு வந்து விடுவார்களாம். 'யார் இந்தப் புதுப் பையன்? போடு போடு என்று போடுகிறானே!' என்று சத்தமில்லாமல் தங்களுக்குள் பேசிக் கொள்வார்களாம்.

15. தனக்கு வாழ்வளித்த பெருமாள் முதலியார் அவர்களை தன் வாழ்நாள் முழுதும் நன்றி மறக்காமல் ஒவ்வொரு பொங்கலன்றும் முதலியாரின் சொந்த ஊரான வேலூருக்கு குடும்பத்துடன் சென்று, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, அவருக்கு மரியாதைகள் செய்து விட்டு வருவது நடிகர் திலகத்தின் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது. இப்போதும் அவர் பிள்ளைகள் மூலம் தொடர்கிறது.

'பேசும்படம்' சினிமா இதழ் 'இம்மாத நட்சத்திரம்' என்ற தலைப்பில் 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிவாஜி அவர்களைப் பற்றி வெளியிட்ட பெருமைமிகு கட்டுரை. இக்கட்டுரை ஆவணத்தை நமக்குத் தந்த திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி!அன்புடன்

சிவாஜி வாசுதேவன்
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by N.S.Mani on Sat Nov 16, 2013 6:46 am

இனிய காலை வணக்கங்கள்.

பராசக்தியை தொடர்ந்தும் மகா நடிகர் சிவாஜியின் சாதனை விளக்கங்களை தொடருங்கள்.

நன்றி.
avatar
N.S.Mani
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by vasudevan31355 on Sat Nov 16, 2013 8:44 am

நன்றி மணி அவர்களே! நிச்சயமாக தொடரலாம். நடிகர் திலகத்தின் படங்களை வரிசயாக என்னால் இயன்ற அளவுக்கு இங்கு தொடராகத் தர இருக்கிறேன். அடுத்து நடிகப் பேரரசரின் இரண்டாவது படம் 'பணம்' பற்றிய பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்காக.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by சிவா on Sat Nov 16, 2013 11:59 am

இதுவரை அறியாத தகவல்களை தாங்கி வரும் தங்களின் பதிவு என் விருப்பப் பதிவாகிவிட்டது!

பாராட்டுக்கள்! தொடருங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by M.M.SENTHIL on Sat Nov 16, 2013 4:31 pm

மிக மிக அருமை. சிவாஜி அவர்களை பற்றிய பல தெரியாத தகவல்கள் உள்ளது. தொடருங்கள். தட்டிக்கொடுக்க நாங்கள் இருக்கிறோம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by தமிழ்செல்விஞானப்பிரகசம் on Sat Nov 16, 2013 6:40 pm

நடிகர் திலகத்திற்குப் பெருமை சேர்க்கும் தங்களின் முயற்சிக்கு எனது நன்றிகள்.
avatar
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by jayaravi on Thu Nov 28, 2013 7:02 pm

டியர் வாசு சார் - உங்கள் "பராசக்தி தொடருகிறாள் " பதிவு மிகவும் அருமை என்பது , சர்க்கரை இனிக்கும் என்று சொல்வதுபோல - NT யை பற்றி இன்னும் பலர் அறியாத மாதிரி நடிக்கிறார்களே அவர்கள் நடிப்பு NT யை விட அருமையாகவே இருக்கின்றது . தமிழகம் சிலையை அகற்ற முடிவெடுத்து ஒரு தீராத பழிக்கு தன்னை ஆளாக்கி கொண்டுள்ளது ---
மகிழ்ச்சி 
Ravi
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by vasudevan31355 on Thu Nov 28, 2013 8:22 pm

வருக அன்பு நண்பர் ரவி சார்.

நாம் ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருந்தாலும் ஈகரையில் உங்களை மன மகிழ்ச்சியுடன் உளமார வரவேற்கிறேன். நடிகர் திலகத்தின் நல்ல ரசிகராகிய தாங்களும் இங்கே பங்களித்து நடிகர் திலகத்தின் இமயப் புகழை மென்மேலும் உயர்த்துவீர்கள் என்று திடமாக நம்புகிறேன். ஈகரையில் உள்ள அனைத்து இதயங்களும் நடிகர் திலகத்தை நிஜமாக நேசித்து ரசிப்பவர்கள்தாம். நம் அனைவர் சார்பாக அவர்கள் யாவருக்கும் நம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம். நம் வீயார் அவர்களும், எம்ஜியார் புகழ் பாடும் வினோத் அவர்களும் ஈகரையில் இணைந்துள்ளார்கள்.

நிற்க தங்களின் இனிய வாழ்த்துதல்களுக்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by N.S.Mani on Thu Nov 28, 2013 9:21 pm

நன்று. தொடரட்டும் சிவாஜியின் சாதனைகள்.
avatar
N.S.Mani
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by veeyaar on Fri Nov 29, 2013 7:18 am

ரவி சார்
தங்களுடைய வருகை மிக்க மகிழ்வூட்டுகிறது. ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தாலும், இங்கே தொடர்வதில் இரட்டிப்பு சந்தோஷம். தொடருங்கள். தங்கள் பதிவுகளை இங்கே அளியுங்கள். நண்பர் வினோத் அவர்களும் இங்கே நம்முடன் இணைந்துள்ளார்கள். வாசு சாருடைய மாநடிகர் தொடர் இங்கு நல்ல வரவேற்பைப் பெரும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
அன்புடன்
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by ayyasamy ram on Fri Nov 29, 2013 7:34 amதகவல்கள் அருமை...
-
தொடருங்கள்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33602
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by vasudevan31355 on Mon Dec 02, 2013 8:41 am

அன்புக்குரிய நண்பர்கள் செந்தில், தமிழ்செல்விஞானப்பிரகாசம், மணி, செந்தில், அய்யாசாமி, வீயார், ரவி, சிவா மற்றும் பராசக்தி அருள் பெற்ற அனைவருக்கும் நன்றி!  
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by S.VINOD on Mon Dec 02, 2013 8:44 am

இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்

உன்னதமான உங்கள் ஆய்வுகள் மிகவும் அருமை . இன்றைய தலை முறை ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள் உள்ளது . பராசக்தி பதிவுகள் - சிலைகள் பற்றிய பதிவுகள்
நன்கொடைகள் பற்றிய விரிவான தகவல்கள் - ஒரு உன்னதமான ரசிகனின் உணர்சிகரமான
பதிவுகள் .பாராட்டுக்கள் வாசுதேவன் சார் . தொடர்ந்து அசத்துங்கள் .
avatar
S.VINOD
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: 'பராசக்தி' தொடருகிறாள்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum