ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்! அடுத்து அரங்கேற இருப்பது..?
 பழ.முத்துராமலிங்கம்

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 பழ.முத்துராமலிங்கம்

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரவுபதி அம்மன் ஆலயம்

View previous topic View next topic Go down

திரவுபதி அம்மன் ஆலயம்

Post by சிவா on Tue Nov 19, 2013 1:39 pm


திரவுபதி ஆலயம் திரவுபதியின் கதை :
பஞ்சபாண்டவர்களின் மனைவியான திரவுபதி, இவள் தெய்வமானது எப்படி?. பாஞ்சால தேசத்து மன்னன் துருபதன் நல்லாட்சி செய்து வந்தான். இருப்பினும் அவனுக்கு வாரிசு இல்லை. எனவே அவன் தனக்கு வாரிசு வேண்டியும், துரோணரை அழிப்பதற்காகவும் ஒரு பெரிய யாகம் செய்தான். அந்த யாகத்தில் 'துஷ்டத்துய்மன்' என்ற மகனும் திரவுபதியும் தோன்றினார்கள்.

திரவுபதி முற்பிறவியில் நளாயினியாகப் பிறந்தவள். மறுபிறவியில் காசி ராசனுக்கு மகளாப் பிறந்து சிவபெருமானை எண்ணி தவம் மேற்கொண்டாள். அவளது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் அவள் முன்தோன்றி என்ன வரம் வேண்டும், எனக் கேட்க, அவள் 'பதிம்தேஹி' என தன்னையும் மறந்து ஐந்து முறை கூறினாள்.

சிவபெருமானின் வாக்கினால் துருபத மன்னன் நடத்திய வேள்வித் தீயில் திரவுபதியாக உருக்கொண்டாள். அவள் நடத்திய சுயம்வரத்தில் அர்ச்சுனனை மணந்தாள். பஞ்சபாண்டவர்கள் குந்தியிடம், 'கனி கொண்டு வந்துள்ளோம்' எனக் கூற, குந்தியும் திரும்பிப்பாராது 'பகிர்ந்து உண்ணுங்கள்' எனக் கூறினாள்.

கனிக்குப் பதிலாக திரவுபதி இருப்பதைக் கண்ட குந்தி தேவி பதறினாள். அவள் முன் தோன்றிய நாரதர், 'திரவுபதி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள். அந்த தவத்தின் பலனாக ஐந்து சிவகணங்களும் இப்போது அவளுக்கு கணவர்களாக வாய்த்துள்ளனர்' என்று விளக்கினார்.

திரவுபதியும் ஐவரையும் சிவசக்தியாக மணந்து பராசக்தி அரவான்யாக வாழ்ந்தாள். தவிர, பாரதப் போர் நடந்து கொண்டிருந்த போது கண்ணன் பஞ்ச பாண்டவர்களுக்கு திரவுபதி காளியின் வடிவமே என உணர்த்தினார். தருமர் சூதாடி திரவுபதியை இழந்தார். துச்சாதனன் துரியோதனனின் உரை கேட்டு திரவுபதியின் சேலையை துகிலுரிந்தான்.

சினம் கொண்ட திரவுபதி கவுரவர்களை வென்ற பின்னரே தன் கூந்தலை முடித்துக் கொள்வதாக சபதம் செய்தாள். இப்படி தெய்வீக சக்தியாகவும், உதாரணப் பெண்மணியாகவும் வாழ்ந்த திரவுபதிக்கு தமிழ் நாட்டில் பல இடங்களில் ஆலயங்கள் அமைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

அரவான் இப்படிப்பட்ட ஒரு ஆலயம் தான் திருக்கோலக்காவில் உள்ள திரவுபதி ஆலயம். நாகை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே இரண்டு கி.மீ தொலைவில்  உள்ளது இந்த திரவுபதி அம்மன் ஆலயம். திருஞான சம்பந்தர் பொற்றாளம் பெற்ற தலம் திருக்கோலக்கா. இங்குதான் உள்ளது இந்த திரவுபதி அம்மன் ஆலயம்.

அழகிய கண்கவர் ஆலயமாகத் திகழும் இந்த ஆலயத்திற்கு 1995-ம் ஆண்டு குட முழுக்குத் திருவிழா நடை பெற்றது. பழுதடைந்த இந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்து கடந்த 26.5.08-ல் மறுபடியும் குடமுழுக்கு திருவிழாவை நடத்தியுள்ளனர்.

இங்கு கருவறையில் விரித்த கூந்தலுடன் காட்சி அளிக்கிறாள் திரவுபதி. இந்த ஆலயத்தில் வைகாசி மாதத்தில் காப்பு கட்டி ஆண்டு தோறும் திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.

30 நாட்கள் மகாபாரத உபன்யாசம் நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாளன்று துரியோதனன் வதமும், திரவுபதி கூந்தல் முடிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் நடைபெறும் தீமிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரவுபதி அம்மன் ஆலயம்

Post by சிவா on Tue Nov 19, 2013 1:40 pm


கோவிலின் அமைப்பு :


கோவிலின் உள்ளே நுழைந்ததும் உள்ள மகா மண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இடது புறம் வழிகாட்டி பிள்ளையார் திருமேனியும் வலதுபுறம் கிருஷ்ணன் திருமேனியும் உள்ளன. வலது புறம் தென் திசையைப் பார்த்த நிலையில் துர்க்கையம்மன் சிலை உள்ளது.

அதையடுத்து கோபம் தணிந்து கூந்தல் முடிந்த திரவுபதி தலையில் கிரீடத்துடன் காட்சி தருகிறாள். இடதுபுறம் வடக்கு திசையைப் பார்த்த நிலையில் தலை மட்டும் உள்ள அரவான் சிலை உள்ளது. பொதுவாக திரவுபதி ஆலயங்களில் அரவான் உருவம் இருப்பது வழக்கம்.

யார் இந்த அரவான்?. அர்ச்சுனனுக்கும் உலூபியான நாகக் கன்னிக்கும் பிறந்தவன் தான் அரவான். அரவான் பிறப்பிலேயே 32 லட்சணங்கள் பொருந்தியவன். எதிர் ரோமம் கொண்டவன். துரியோதனன் போரில் வெற்றியை கொள்வது எப்படி என்று ஜோதிடத்தில் வல்லவனான சகாதேவனிடம் கேட்டான்.

அதற்கு சகாதேவன், 'நீ முதலில் மகாகாளிக்கு 32 லட்சணங்களும் எதிர் ரோமம் உடையவனும், அர்ச்சுனனின் மைந்தனுமான அரவானைப் பலியிட்டால் போரில் வெற்றி கொள்ளலாம்' என கூறினான்.

துரியோதனனும் சகுனியின் ஆலோசனையின் பேரில் தந்திரமாக அரவானிடம் சென்று, 'நாங்கள் போரில் வெற்றி பெற வருகின்ற அமாவாசை அன்று நீ எங்களுக்கு நரபலியாகி உதவ வேண்டும்' என்று கேட்க, தனது பெரிய தந்தையின் வார்த்தைகளை தட்ட முடியாது அரவான் சரியென சம்மதித்தான்.

அத்துடன் 'அமாவாசை வரை என் மேனி பின்னமாகாமல் இருந்தால் கண்டிப்பாக வருகிறேன்' என்று உறுதி கூற, துரியோதனனும் மகிழ்வோடு திரும்பினான். அரவான் தன்னைப் பலியிடும்படி பகைவருக்கு வாக்கு கொடுத்துவிட்டதை அறிந்த கண்ணன் அமாவாசைக்கு முன் தினமாகிய சதுர்த்தசி ஆகிய இன்றே அமாவாசை வரட்டும் என்று கூற, சதுர்த்தசி அமாவாசையாக மாறியது.

'இன்று கவுரவர்களுக்கு முன்னே நாம் நரபலி கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் போர்களத்தில் நாம் அவர்களை வெல்ல முடியாது. 32 லட்சணங்களும் பொருந்திய என்னையோ அல்லது அரவானையோ நரபலி கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு நான் தயார்' என்று கண்ணன் கூற, அனைவரும் பதறி நின்றனர்.

உடனே அரவான், 'துரியோதனன் கேட்டதால் நான் நரபலிக்கு உடன்பட்டேன். அமாவாசை வந்த பின்பும் அவனைக் காணவில்லை. எனவே உங்களுக்காக பலியாக நான் உடன்படுகிறேன்' என்று கூறியதுடன் மேலும் ஒரு வரம் கேட்டான். 'என்னைப் பலியிட்டாலும் என் தலைக்கு எப்போதும் உயிர் இருக்க வேண்டும்.

அத்துடன் சாகும் முன் ஒரு பெண்ணை நான் மணமுடிக்க அருள வேண்டும்' என்று கண்ணனிடம் வரம் கேட்டான். கண்ணனும் 'அதன்படியே ஆகட்டும்' என்றார். அடுத்த நாள் இறந்து போகக் கூடிய ஒருவரை எந்தப் பெண் மணக்க முன் வருவாள்?. எனவே, கண்ணனே, பெண் உருகொண்டு அரவானை மணந்தார்.

திரவுபதி சொன்னபடி, அரவான் காளியின் முன் முறைப்படி தானே தன் உடலின் உறுப்புகளை அறுத்து பலி கொடுத்தான். தலை துண்டிக்கப்பட்டும் துன்பம் சிறிதும் இல்லாமல் மலர்ந்த முகத் தோடு நின்றான். போர்களத்தில் அரவான் பலியானதும் கண்ணன் விதவைக் கோலம் பூண்டு பின் தன் உண்மை உருவைப் பெற்றார்.

ஆணாகிய கண்ணன் பெண்ணாக மாறியதால் அரவாணிகள் (திருநங்கைகள்) தங்களை கண்ணன் அவதாரம் என்று இன்றும் கருதுகிறார்கள். அரவான் கண்ணனிடம் வரம் பெற்றபடி அரவானின் உடல் மட்டும் அழிய தலை மட்டும் உயிர் பெற்றது.

மறுநாள் துரியோதனன் வந்து அரவானைக் கண்டபோது, அரவானின் தலை அவனுடன் உரையாடியது. 'என் உடல் பின்னமாகாமல் இருந்தால் களபலியிட நான் உடன்படுவேன். ஆனால் இப்போது பின்னமாகி விட்டேன். நேற்றே அமாவாசை என்று கூறி என் தந்தை என்னை காளிக்கு பலியிட்டுவிட்டார்' என்று அரவான் கூற, துரியோதனன் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

அரவான் தலை காண்பதற்கு முகமூடி போன்ற தலையுடன், நீண்ட அகன்ற மீசையுடன், நீண்ட சிங்க பற்களுடனும், தலையில் நாக கீரிட அமைப்புடனும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உருவத்தை தான் அரவானாகவும் கூத்தாண்ட வராகவும் மக்கள் வழிபடுகின்றனர்.

திரவுபதி கோவில்களில் அரவானின் தலை உருவையும், கூத்தாண்டவர் கோவிலில் அரவானின் முழு உருவையும் வைத்து வழிபடுகின்றனர். தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதில் திரவுபதி அம்மனுக்கு நிகரில்லை என்பது நிஜமே.

மாலைமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரவுபதி அம்மன் ஆலயம்

Post by raghuramanp on Tue Nov 19, 2013 2:32 pm

30 நாட்கள் மகாபாரத உபன்யாசம் நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாளன்று துரியோதனன் வதமும், திரவுபதி கூந்தல் முடிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் நடைபெறும் தீமிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
எங்கள் ஊரிலும் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது சிறிய ஊர் என்பதால் 5 வருடங்கல்லு ஒரு முறை திருவிழா நடைபெறும் (அதிக பொருட்செலவில் நடக்கும் திருவிழா என்பதால் 5 வருடங்களுக்கு ஒருமுறைதான் நடை பெரும்). 30 நாட்கள் மகாபாரத உபன்யாசம் நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாளன்று துரியோதனன் வதமும், திரவுபதி கூந்தல் முடிக்கும் வைபவமும் நடைபெறும்.தினமும் மகாபாரத காட்சிகள் கூத்து கலைஞ்சர்களால் நாடகமாக நடித்து காட்டுவார்கள்,30 நாலும் ஒருனலக்கு ஒரு தலைப்பின் கீழ் உபன்யாசமும் அதையே இரவில் நாடகமாகவும் கிராமமக்கள் புரிந்துகொள்ளும்படி இரண்டும் நடக்கும்
என்னால் இப்போது அந்த நிகழ்சிகளை காண நகரவாழ்க்கையில் வைபிலை என்றாலும் 30 நாளில் ஒருனலவது சென்று பார்த்துவிட்டு வருவேன் என் மகனுக்கு மகாபாரத கதை மற்றும் கதாபாத்திரங்களை சொல்லிகொடுபதர்க்கு உதவியாக இருக்கும் .
avatar
raghuramanp
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 222
மதிப்பீடுகள் : 52

View user profile

Back to top Go down

Re: திரவுபதி அம்மன் ஆலயம்

Post by சிவா on Tue Nov 19, 2013 3:21 pm

எந்த ஊர் திரு ரகுராம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரவுபதி அம்மன் ஆலயம்

Post by raghuramanp on Tue Nov 19, 2013 4:37 pm

எனது ஊர் மழுவங்கரனை மேல்மருவத்தூரில் இருந்து 3 கி மீ தொலைவில் உள்ளது நான் இப்போது சென்னையில் வசிக்கிறேன்.
மற்றும் எனது பெயரை இரகுராமன் என்றுதான் எழுதுவேன் ஈகரை நண்பர்களும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்,பெயர்சொல்லில் ர,ல வுக்கு முன்னால் இ போடுவது மரபு இதில் இ சைலென்ட் eg : இராமன் , இலங்கை
avatar
raghuramanp
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 222
மதிப்பீடுகள் : 52

View user profile

Back to top Go down

Re: திரவுபதி அம்மன் ஆலயம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum