புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
83 Posts - 51%
heezulia
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
125 Posts - 54%
heezulia
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
8 Posts - 3%
Srinivasan23
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10இன்றைய மருத்துவ உலகம்! Poll_m10இன்றைய மருத்துவ உலகம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய மருத்துவ உலகம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Tue Nov 19, 2013 7:28 am

இன்றைய மருத்துவ உலகம்!

ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான அசெளகாரியங்கள், மனக்கஷ்டங்கள், உடல் உபாதைகள். இவைகளிலிருந்து விடுபட நாம் தேடிச் செல்வது மருந்தகங்கள், மருத்துவமனைகள். அதிலும் தற்பொழுது சூப்பர் ஸ்பெஷாலிட்டி, மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் – போன்றவை.

அங்கு நமக்கு கிடைப்பது – புதுப்புது பெயர்களைக்கூறி நம்முடைய பயத்தினை அதிகப்படுத்துவதும் தொடர்ச்சியாக பலவிதமான (இரத்தம், மலம், இ.ஜி.சி, திரட்மில், எக்ஸ்ரே, எம் ஆர் ஸ்கேன் போன்ற பெயர்களில்) பரிசோதனைகளும்தான்.

இவைகளுக்கு நாம் கொடுக்கவேண்டியது பணம்! பணம்!!

அசெளகாரியங்கள், மனக்கஷ்டங்கள், உடல் உபாதைகளுடன் தற்பொழுது நமக்கு பணக்கஷ்டமும் சேர்ந்து விடுகிறது. ஆனாலும் நாம் கவலைப்படுவது இல்லை. அவர்கள்தான் அந்த அளவிற்கு நம்மை ஆரம்பத்திலேயே பயமுறுத்திவிட்டார்களே! எல்லாவற்றிக்கும் உட்பட்டு சரி என்று சொல்வோம். மகுடிக்கு மயங்கும் பாம்புபோல் கட்டுப்படுவோம்.

அவர்களுடைய அணுகுமுறைகளை சிறிது சிந்தித்தால் அது மிகமிக சாம்ர்த்தியமானது என்று புரியும்.

எப்படி என்பதற்கு ஒரு சிறு விளக்கம்.

முதலில் வரவேற்பு மேஜையிலோ அல்லது கவுண்டரிலோ நம்முடைய ஜாதகத்தை கணிப்பது போன்று பெயர், வயது, விலாசம் முதற்கொண்டு வாழ்க்கையின் முற்பகுதி சரித்திரத்தை சொல்லச்சொல்லி பதிவு செய்வார்கள்.

அடுத்து ஒரு குட்டி மருத்துவர் (பயிற்சி டாக்டர்) நமது உடலை ஆராய்ச்சி செய்து எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அவை எல்லாம் விரைவில் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், உடனடி சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் நிலமை மோசமாகிவிடும் என்றும் எடுத்துரைப்பார். தொடர்ந்து செலவு செய்யக்கூடிய தகுதியை உறுதி செய்துகொள்ள ஒரு அட்டவனையை கொடுத்து நமது விருப்பத்தைக் கேட்பார்.

உதாரணமாக,

1. கண் அறுவை சிகிச்சைக்கான அட்டவணை என்றால் அதில் ரூ 10,௦௦௦; 15,௦௦௦; 25,௦௦௦; 50,௦௦௦; 75,௦௦௦, 1,00,௦௦௦; 1,25,௦௦௦ என பல அடுக்குகளில் சிகிச்சைக்கான கட்டணங்கள் இருக்கும். அதிலிருந்து நமக்கு ஏற்றது எது என்பதை தேர்வு செய்யச் சொல்லி நமது பர்சின் கணத்தை உறுதி செய்துகொள்வார்கள்.

2. நீண்ட கால அவஷ்தைக்குப் பிறகு சர்க்கரை நோய் உள்ள ஒருவருடைய காலில் ஏற்பட்ட புண்ணின் காரணமாக சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்கிறோம், அல்லது இருதய நோய் / இரத்தக்கொதிப்பு போன்ற நோய்களில் அவதிப்டுபவருக்கு அவசர சிகிச்சைக்கு கூட்டிச்சென்றால், அவருடைய உடல் உபாதையை புரிந்துகொண்டு உடனே சிகிச்சை தருவார்களா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. அவருக்கும் ஒரு அட்டவணை கொடுத்து “பேக்கேஜ்” எவ்வளவு என்பதைக்கூறி நமது விருப்பத்தை அறிவதுபோல் பர்சை சோதித்துவிடுகிறார்கள்.

அடுத்து, முதற்கட்ட தொகையை செலுத்திய பிறகு, ஒவ்வொரு விதமான பரிசோதனைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெறும். நாமும் மருத்துவ மனையில் உள்ள அனைத்து சிறப்பு மருதுவர்களுக்கும், பரிசோதனை கூடங்களில் உள்ள அணைவருக்கும் அறிமுகமாகிவிடுவோம்.

இதற்கிடையில் கட்டிய முன் பணத்தின் இருப்பு குறையக் குறைய நம்முடைய டென்ஷன் ஏற ஏற மீண்டும் மீண்டும் பணத்தை செலுத்துவோம்.

தொடரலாமா?

நா.செ.மணி.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 19, 2013 10:43 am

"தொடரலாமா" என கேட்டுள்ளீர்கள் கண்டிப்பாக இதை தொடர விடகூடாது புன்னகை (பதிவை சொல்லவில்லை )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 19, 2013 12:27 pm

நீங்க சொல்வது முற்றிலும் சரி ஐயா? இதற்கு என்ன செய்வது என்று சொல்லுங்கள் , சில நோய்களுக்கு நாம் இவர்களிடம் தானே போகவேண்டி இருக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Tue Nov 19, 2013 8:41 pm

இன்றைய மருத்துவ உலகம் .... தொடர்ச்சி

ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குப் பிறகு அனைத்து சோதனை அறிக்கைகளையும் கொடுத்து தலைமை மருத்துவரிடம் அழைத்துச்செல்வார்கள். அவர் எல்லா அறிக்கைகளையும் பொறுமையாக பார்த்துக்கொண்டு நம்முடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவார்.

பின்னர் ஒருமாதிரியாக உதட்டை பிதுக்கிக்கொண்டு
- நிலைமை ரொம்ப சீரியஸ்தான்
- மிகவும் கடுமையான நோய்தான்
- கடந்த ஒருவார காலமாக பலவித பரிசோதனைகள் செய்தும், அதற்கேற்ற சிகிச்சைகள் கொடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.
- நீங்கள் விரும்பினால் அமெரிக்க சிறப்பு மருத்துவர் ஒருவர் டெல்லி வந்துள்ளார். அவரை அழைத்து வந்து ஆலோசனை கேட்கலாம் என்பார்.

நம்முடைய உபாதையின் காரணமாக சரி என்று கூறினால் தொடர்ந்து மற்றொருவர் வந்து மேலும் ரூ 25,௦௦௦ கட்டிவிடுங்கள் என்று அறிவிப்பு செய்வார். எதற்கு என்று கேட்டால், டெல்லியிலிருந்து வரவிருக்கும் சிறப்பு மருத்துவரின் வருகைக்கும் அவருடைய ஆலோசனைக்கும் என்பார்.

நாமும் சொல்லிய பணத்தை கட்டுவோம். சிறப்பு மருத்துவரும் வருவார். அவர் இரண்டு நாட்கள் நமது உடலை ஆராய்ச்சி செய்தும் பரிசோதனை அறிக்கைகளை பார்ப்பதுமாக பாவனை காட்டுவார்.

இறுதியில் அவருடைய கருத்துக்கள் கீழ்க்கண்டவாறு இருக்கும்:
- எல்லா அறிக்கைகளையும் பார்த்துவிட்டேன்
- நீங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு வந்திருந்தால் நிச்சயம் சரிப்டுத்தியிருக்கலாம். ரொம்ப அட்வான்ஸ் ஸ்டேஜிக்கு போய்விட்டது.
- ரொம்ப கஷ்டம்.

மேற்கொண்டு உங்கள் அறிவுரைகள் என்ன? என்ற நமது கேள்விக்கு, சிறப்பு மருத்துவர் கையை மேலேதூக்கி ஒரு விரலை உயர்த்தி “எல்லாம் அவன் செயல். அவனை வேண்டிக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிடுவார்.

தொடர்ந்து நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டால், நமது மருத்துவர் கூறும் பதில்:

கம்ப்யூட்டர் பிரின்ட் ஒன்றை நமது கையில் கொடுத்து அதிலிருக்கும் பலவிதமான மாத்திரைகளை – சாப்பிட அரை மணி நேரம் முன்பு, சாப்பிடுமுன், சாப்பிட்ட பின், படுக்கைக்குக் முன் என நாள் முழுவதும் சாப்பிடச்சொல்வதுடன், கைபேசி போன்ற ஒரு சிறு கருவியை காண்பித்தது, இது ஒரு புதிய வருகை என்றும், இதனை கையில் வைத்திருந்தாலே நமது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் போன்ற அளவுகளை நாமே பார்த்துக்கொள்ள முடியுமென்றும், அதனுடன் கொடுக்கும் அட்டவணையில் உள்ள அளவிலிருந்து ஒரு புள்ளி குறைந்தோ அல்லது கூடுதலாகவோ கருவியின் அளவு கான்பித்துவிட்டால் உடனே அவரை தொடர்புகொண்டு, ஆலோசனைகளும், பரிசோதனைகளும், சிகிச்சைகளும் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் நமது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஒரு பெரிய விளக்கம் கொடுத்து, நம்மை பயத்தின் உச்சியின் விளிம்பிற்கே கொண்டுசென்றுவிடுவார்.

எல்லாவற்றையும் வாங்கிவந்து நாமும் நித்திய கண்டம் பூரண ஆயுசுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
- காலை, மதியம், இரவு
- சாப்பிட அரைமணி நேரம் முன்பு, சாப்பிட்டு முன், சாப்பிட்ட பின், படுக்கைக்கு முன் என நாள் முழுவதும் மாத்திரைகளை சாப்பிடுவதுடன்,
- வாக்கிங், யோகா, மெடிடேஷன், உடற்பயிற்சி போன்றவைகளுடன் திரட்மில் போன்றவைகளையும் வாங்கி பயன்படுத்துவோம்.
- கைபேசி போன்ற அந்த கருவியில் அட்டவணையில் கொடுத்துள்ள அளவைவிட ஒரு புள்ளி குறைந்தோ அல்லது அதிகமானாலோ எமன் நம்மை துரத்துவது போன்ற பிரமையுடன் ஏ.டி.எம் கார்டுடன் மருத்துவரைத் தேடி ஓடுவோம்.

விளைவு:

- நமது வங்கி இருப்பு குறையும்
- மருத்துவமனையின் இருப்பு அதிகரிக்கும்.
- நமது உடல் உபாதைகள் மட்டும் எவ்வித முன்னேற்றமும் இன்றி அதே நிலையில் தொடரும் அல்லது மேற்கொண்டு பழுதடைந்துகொண்டு இருக்கும்.

இதுதான் இன்றைய மருத்துவ உலகம்!!

மேற்கூறிய அசெளகாரியங்களுடன் மனக்கஷ்டம், உடல் உபாதைகளுடன் பணக்கஷ்டத்தையும் சேர்த்து அனுபவிக்காமல் இருக்க ......

தொடரும்..

நா.செ.மணி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Nov 19, 2013 9:09 pm

ம் தொடருங்கள் .........


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 19, 2013 10:26 pm

ம்...தொடருங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Tue Nov 19, 2013 10:59 pm

Re: இன்றைய மருத்துவ உலகம்!

Post by krishnaamma Today at 12:27 pm
+
-
நீங்க சொல்வது முற்றிலும் சரி ஐயா? இதற்கு என்ன செய்வது என்று சொல்லுங்கள் , சில நோய்களுக்கு நாம் இவர்களிடம் தானே போகவேண்டி இருக்கு
*******************************************************************
மேற்கொண்டு தொடருமுன், "இதற்கு என்ன செய்வது என்று சொல்லுங்கள்" என்ற வினாவிற்கு பதிலளிக்கும் விதமாக, எனது சென்ற மாத பகிர்வினை மறுபடியும் இணைத்திட விரும்புகின்றேன்.

மறு பதிவு:

“ஆரோக்கியமே ஆனந்தம் - 2”
by N.S.Mani on Thu Oct 24, 2013 12:29 am
“ஆரோக்கியமே ஆனந்தம்”

நாம் நம்முடைய வாழ்க்கையில் “ஆரோக்கியமே ஆனந்தம்” என்பதன் நோக்கமாக பலரை சந்திக்கின்றோம். அவர்களிடம் சர்க்கரை நோய் உள்ள இருவரிடம் கீழே குறிப்பிட்டுள்ள 3 பானங்களில் எதை விரும்பி சாப்பிடுவீர்கள் என்று கேட்போம்.

1. தண்ணீர்
2. சர்க்கரை கலக்காத பப்பாளி பழச்சாறு
3. சர்க்கரை கலந்த எலுமிச்சை பழச்சாறு

நண்பர்: தண்ணீர்

நாம்: எவ்வளவு நேரம் தண்ணீரை குடித்துக்கொண்டே இருப்பீர்கள்.

நண்பர்: வேறு சாப்பாடு கிடைக்கும்வரை.

நாம்: வேறு சாப்பாடு என்றால் என்ன?

நண்பர்: இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி போன்றவை.

அடுத்தவரிடம் கேட்போம்:
நண்பர்: சர்க்கரை கலக்காத பப்பாளி பழச்சாறு

நாம்: நன்று

இருவருக்கும் பொதுவான ஒரு கேள்வி:
நாம்: ஏன் பழச்சாறுடன் சர்க்கரை கலந்ததை விரும்பவில்லை?

நண்பர்: எனக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளது.

நாம்: அப்படியானால் பழச்சாறுடன் சர்க்கரை சேர்த்தது யார்?

நண்பர்: மனிதன்

நாம்: ஒரு பெண்ணிற்கு இறைவன் தரும் மிகமிக அற்புதமான வரம் எது?

நண்பர்: *******

நாம்: குழந்தைபாக்கியம். சரிதானே?

நண்பர்: சரிதான்

நாம்: அந்த பொண்ணிற்கு குழந்தை பேரிற்கு முன்னதாக பால் சுரக்கும் தன்மை உள்ளதா?

நண்பர்: இல்லை.

நாம்: குழந்தை பால் சாப்பிடுவதை நிறுத்திய பிறகு அந்த தாயிற்கு பால் சுரக்கும் தன்மை தொடர்கிறதா?

நண்பர்: இல்லை.

நாம்: அப்படி என்றால் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு ஆரம்பத்திலும், தொடர்ந்து தாய்ப்பால் சாப்பிடும்பொழுதும் சர்க்கரைநோய் கிடையாது. எனவே உங்களுக்கும் குழந்தை பருவத்தில் சர்க்கரை நோய் இருந்திருக்காது சரிதானே? (அதாவது சர்க்கரை கலக்காத பழச்சாறு போன்று)

நண்பர்: ஆமாம்.

நாம்: தாய்ப்பாலை நிறுத்திய பிறகு குழந்தைக்கு என்ன கொடுக்கிறீர்கள்

நண்பர்: தாய்ப்பால் கொடுக்கும்பொழுதே சிலநேரங்களில் மாட்டுப்பால் மற்றும் புட்டிப்பால் போன்றவைகளும், பின்னர் திட உணவுகளும் கொடுக்கிறோம். (அதாவது சர்க்கரை கலந்த பழச்சாறு போன்று)

நாம்: இப்பொழுது சொல்லுங்கள் இறைவனால் படைக்கப்பட்ட குழந்தைக்கு இறைவனுடைய ஆற்றலால் தாயிடமிருந்து கிடைக்கக்கூடிய (சர்க்கரை நோய் இன்றி) பாலை மட்டும் கொடுக்காமல், மனிதனால் உருவாக்கப்பட்ட புட்டிப்பால் மற்றும் மாட்டுப்பால் போன்றவைகளை கொடுப்பதன் பின்விளைவுகள் என்ன?

நண்பர்: ******

நாம்: அதுதான் இன்றைய சர்க்கரை நோயிற்கு அடிப்படை காரணம் – ஆரம்பம்.

நண்பர்: வேறு என்ன உணவு கொடுப்பது?

நாம்: இறைவனால் படைக்கப்பட்ட உணவுகள்.

நண்பர்: அவைகள் என்ன என்ன?

நாம்: பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், உலர்ந்த பழங்கள், முளைகட்டிய தானியங்கள் மற்றும் மூலிகைகள்.
இவைகளின் மொத்தபெயர் - இயற்கை உணவு / இறை உணவு
இவை அனைத்தும் – காரத்தன்மை உடையவை.
மற்றவை அனைத்தும் – மனித உணவு, அமிலத்தன்மை உடையவை

நண்பர்: இயற்கை உணவில் எல்லா சக்திகளும் உள்ளதா?

நாம்: தேவையான அளவு உள்ளது.
உதாரணமாக – இறைவனால் படைக்கப்பட்ட குழந்தையின் தாய்ப்பாலை சிறிது ஆராய்ச்சி செய்து பாருங்கள். அதாவது தொடர்ந்து ஒவ்வொரு வாரம் அல்லது மாதம் ஒருமுறை தாய்ப்பாலின் தன்மைகளை ஆராய்ந்தால் ஒரு உண்மை விளங்கும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப தாய்ப்பாலில் உள்ள புராதனச்சத்தின் அளவு மாறுபடுகிறது என்பதுதான் உண்மை.

இதுதான் இறைஅருள்.

நண்பர்: மாட்டுப்பால் கொடுத்தால் என்ன ஆகும்?

நாம்: மாட்டுப்பாலின் தன்மை –
 40 கிலோ எடை உள்ள கன்றுக்குட்டி மாட்டுப்பால் குடித்து 2 ஆண்டுகளில் 800 கிலோ எடையுடன் வளர்ச்சி பெறுகிறது. மேலும் தாய்மை அடைவதற்கு உரிய நிலைமையை எட்டுகிறது.

 மேலும் கன்றுக்குட்டி தாய்ப்பாலை மறந்த பின்பு இறைவனால் படைக்கப்பட்ட புல் மற்றும் தழைகளைத்தான் சாப்பிடுகிறது.

 ஆனால், இன்று மாட்டுத்தீவினம் என்ற பெயரில் உயிரற்ற மனித உணவுகளை கொடுக்கிறோம் என்பதும் உண்மைதான்.

மனித குழந்தையின் வளர்ச்சியில் –
 3 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு 65 கிலோ எடையுடன் ஒரு பெண்ணாக, தாய்மை நிலையை அடைகிறாள். இவ்வாறாக, மிகக் குறைவான வளர்ச்சிவேக மனிதனுக்கு அதிவேக வளர்ச்சித்தன்மையுள்ள மாட்டுப்பாலை கொடுத்தபின் விளைவுகள் என்ன? – வாந்தி, பேதி, வயிற்றில் கட்டி என பல்வேறு உபாதைகளுக்காக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்.

 காலையி படுக்கையிலிருந்து எழுப்ப தாய் கூப்பிட்ட உடன் குழந்தையிடமிருந்து வரும் பதில் – என்ன அம்மே....மே!!!!

 எங்கோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதா? அதுதான் அக்குழந்தை சாப்பிட்ட பாலின் – மாட்டுக்குரல்

நண்பர்: வளரும் குழந்தைக்கு எப்பொழுதும் போல் கொடுக்கக்கூடிய உணவுகளினால் என்ன கெடுதல்? வேறு என்ன கொடுக்கலாம்?

நாம்: இன்றைய மனித உணவாக நாம் சாப்பிடுவது –

 சாதம், இட்லி, சாம்பார், பொரியல், தயிர், சப்பாத்தி போன்ற வேகவைத்த அல்லது பொரித்த அல்லது சுட்ட உணவுகள்

 கோழி, ஆடு, மாட்டு, பன்றி, மீன், முட்டை, கருவாடு போன்ற மாமிச உணவுகள்.

 காபி, டீ, பெப்சி, கோக் போன்ற குளிர் பானங்கள்

 சாராயம், பீர், விஸ்கி போனற போதை பானங்கள்

 பீடி, சிகிரெட், கஞ்சா, அபின் போன்ற புகை பழக்கங்கள்

இதன் பின் விளைவுகள் –
 பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றனர். கண்களுக்கு பெரிய புட்டி கண்ணாடி போடவேண்டியுள்ளது.

 சைனஸ் பிரச்சினை

 உடல் பருமன் அதிகரித்தல்

 போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களைப் பற்றி அனைவரும் அறிவோம்.

 அவர்களும், அவர்களை சூழ்ந்துள்ள உறவினர்களும், நண்பர்களும் படும் அவஸ்தை

 மிகவும் மனவருத்தத்தையும் உடல் உபாதைகளையும் கொடுக்கக்கூடிய கீழ்கண்ட வியாதிகளினால் ஏற்படுகிற பணச்செலவு.

 சர்க்கரை நோய்

 இரத்த அழுத்தம்

 நீரழிவு

 காச நோய்

 புற்று நோய்

 இன்னும் பலப்பல

நண்பர்: மேற்கூறிய அனைத்திற்கும் யார் காரணம்?

நாம்: நாம். நாமேதன் காரணம்.

நண்பர் என்ன காரணம்?

நாம்: இறை உணவுகளை தவிர்த்து மனித உணவுகளை உண்பதே

நண்பர்: எப்படி?

நாம்:
 மனிதனால் தயாரிக்கப்பட்ட – அமிலத்தன்மை – உணவுகளை உண்பதால் ஏற்படும் விளைவு – சர்க்கரை மற்றும் நீரழிவு நோய்கள்.

 மாமிசம் மற்றும் கொழுப்புத் தன்மையுள்ள உணவுகளை உண்பதால் ஏற்படும் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன்.

 மதுபானம், புகை பிடித்தல், பான்பராக் போன்றவறிற்கு அடிமையானவர்களுக்கு – புற்று நோய், குடல் நோய் (அல்சர்) போன்ற உபாதைகள்.

இதுபோன்று மனிதன் அவதிப்படும் ஒவொரு நோயிற்கும் காரணம் – காரத்தன்மையுடைய இறை உணவுகளை தவிர்த்து அமிலத்தன்மையுடைய மனித உணவுகளை உண்பதே.

இறை உணவிற்கு மாறினால் மட்டும் போதுமா என்றால் – போதாது - என்பதுதான் உண்மை.
குழந்தை பருவம் முதல் இறை உணவுகளை தவிர்த்து மனித உணவுகளை உண்டுவருவதால் ஏற்பட்டுள்ள உடல் உபதைகளிலிருந்தும் நாம் விடுபட வேண்டும்.

இன்றே, இப்பொழுதே இயற்கை உணவிற்கு மாற தயாராகுங்களேன்.

“ஆரோக்கியமே ஆனந்தம்”
***********************************************************

ஆரோக்கியமே ஆனந்தம் - எப்படி என்பதன் விளக்கமாக மறுபடியும் தொடருகிறேன்.

தொடரும்.....


N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Nov 20, 2013 7:35 am

ஆரோக்கியமே ஆனந்தம். தொடர்ச்சி......

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு, மகிழ்ச்சியான வாழ்விற்கு
- சந்தோஷ மனநிலை நல்லதா
- கஷ்டமான மனநிலை நல்லதா
என்ற கேள்விக்கு சந்தோஷமான மனநிலை என்பதுதான் அநேகருடைய பதிலாக இருக்கும்.

அந்த சந்தோஷமான மனநிலை எவ்வாறு கிடைக்கிறது என்பதற்கு சில உதாரணங்கள்.

நம் வீட்டில் கணவனோ அல்லது மனைவியோ நல்ல உத்தியோகத்திலிருந்தால்,

நம் குழந்தைகள் நன்கு படித்து, நல்ல பழக்கவழக்கங்களுடன் இருந்தால்.

ஆனால் இதே மாறுபட்ட சூழ்நிலை கஷ்டமான மனநிலைக்கு வழிவகுக்கிறது என்பதற்கான உதாரணங்கள்.

கணவனோ அல்லது மனைவியோ உத்தியோகத்தில் இல்லாமல் மற்றும் தற்காலிக வேலையிலிருந்தால்,

குழந்தைகள் நன்கு படிக்காமல் கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகியிருந்தால்.

மனகஷ்டம் என்பது பிறரால் துன்புறுத்தப்படுவதால் அல்லது பிறரை துன்புறுத்துவதால் ஏற்படக்கூடிய உணர்ச்சியே.

எனவே மனக்கஷ்டம் இல்லாமல் சந்தோஷமான் மனநிலையுடன் ஆரோக்கியமாக, ஆனந்தமாக இருப்பதயே அனைவரும் விரும்புகிறோம்.

ஒவ்வொருடைய உடல் ஆரோக்கியம் தன்னையும், தன் குடும்பத்தினரையும், நண்பர்களையும் சந்தோஷமான மனநிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு தனிமனிதனும் உடல் ஆரோக்கியத்தை பெறுவது எப்படி? அதற்கான் வழிகள் என்ன?

“நாம் சாப்பிட வேண்டியது இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள / படைக்கப்பட்டுள்ள இயற்கை உணவுகளே”

எங்கள் வீட்டில் முன்பு, மனைவி வெளியூர் செல்ல நேரிட்டாலோ அல்லது அதிக நாட்கள் மகள்களின் மகட்பேறு போன்றவற்றின் காரணமாக தங்க நேரிட்டாலோ அவர்களுடைய மனநிலை என்ன தெரியுமா?

- என்னத்தை சாப்பிட்டாங்களோ?

- வேலைக்காரி வந்தாலோ என்னவோ?

- இலைன்னா டீ வைத்த பாத்திரம், காய்ந்து போன டீ டம்ளர், மிக சுவையான உணவு தயாரிக்க பயன்படுத்திய இட்லி துணி – இட்லி தட்டு – மாவு பாத்திரங்கள் ஆகியவைகளை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

- பால் சரியாக கிடைத்ததோ என்னவோ?

- இட்லி/தோசை மாவு இன்னும் இருக்க இல்லையா?

- ஊறுகாய், எலுமிச்சை மற்றும் புளிக்காய்ச்சல் போதுமானது இருக்கா?

- மீதி மாவை பிரிஜில் உள்ளே எடுத்து வச்சிட்டாங்களோ என்னவோ?

போன்ற பலவிதமான கவலைகள். இதன்விளைவு - சந்திஷமான மனநிலையை கொடுக்காமல், கஷ்டமான மனநிலையைத்தானே கொடுக்கும்.

எனவே, மனைவி ஊருக்கு போய்விட்டால் கஷ்டப்படுகிற நண்பர்கள் அணைவருடனும் நான் கஷ்டங்கள் இல்லாமல் சந்தோஷமான மனநிலையை எப்படி அனுபவித்து வருகிறேன் என்பதனை கீழ்கண்டவாறு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

தொடரும்....

நா.செ.மணி


N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Nov 20, 2013 7:42 am

திரு ராஜா அவரகளே,

தாங்கள் டாக்டர் பட்டம் பெற்றவர் என நினைக்கிறேன். (மருத்துவத் துறையிலில்லை)

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Fri Nov 22, 2013 9:11 pm

ஆரோக்கியமே ஆனந்தம். தொடர்ச்சி......



மணைவி ஊருக்குச்செல்லுமுன் தேவையான அளவு பேரீச்சை, திராட்சை, தேன், பனங்கற்கண்டு, முந்திரி, பாதம், வேர்கடலை போன்ற உலர்ந்த பழங்கள் மற்றும் பருப்பு வகைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வார்கள்.


பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை நானே வாங்கி வந்து நறுக்கிக்கொள்வேன். வேலைக்காரி வரவில்லை என்றாலும் சுலபமாக பழச்சாறு, பழங்கள் மற்றும் காய்கறிகள் நறுக்கி கலந்து சாப்பிட்ட டம்ளர், பாத்திரங்களை சுலபமாக கழுவி வைத்துவிட முடிகிறது.


இது போன்று செய்வதால் எனக்கோ அல்லது மனைவிக்கோ எவ்வித கஷ்டமும் இன்றி சந்தோஷ மனநிலை கிடைக்கிறது என்பது உண்மை.



-காலை எழுந்துடன் பல் துலக்கி நோனி என்னும் பழரசம் 150 மி.லி.


-அடுத்த அரை மணி நேரம்:


சுமார் 5 வகை பழங்களை வெட்டி பெரிய தட்டு ஒன்றிலும், சிறிய டப்பி ஒன்றிலும் வைப்பது. (வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, கொய்யா, கிர்ணி, திராட்சை, அன்னாசி போன்றவற்றிலிருந்து).


பெரிய தட்டில் உள்ளது காலை உணவிற்கு. சிறிய டப்பியில் உள்ளது அலுவலகத்திற்கு எடுத்துச்செல்ல.


ஒரு பாட்டிலில் பதச்சாற்றுடன் சிறிது இஞ்சி விழுது, பொதினா விழுது, மற்றும் 2 தேக்கரண்டி தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்த பானம். இது 10.30 அல்லது 11.00 மணிக்கு காப்பி அல்லது தேநீர் சாப்பிடுவதற்கு பதிலாக. (எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களின் சாறு.)


அடுத்து காய்கறிகளுடன் வெங்காயம், இஞ்சி, பொதினா, கொத்துமல்லி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக வெட்டுவது.


பிறகு கொஞ்சம் தேங்காய்த்தூள், வேர்க்கடலை, மிளகு ஆகியாவற்றை பொடி செய்து, எல்லாவற்றுடனும் பாதி எலுமிச்சை பழச்சாறும் எஹ்வையான அளவு சேர்த்து கிளறி ஒரு பாத்திரத்த்தில் வைத்துவிட்டால் மதிய உணவு தயார். (முட்டை கோஸ், கேரட், பீட்ருட், வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு, முள்ளங்கி, தக்காளி போன்ற காய்கறிகள்)
மதிய சாப்பாட்டிற்கு பிறகு அலுவலகத்திற்கு செல்லும் பொழுது 2 பாட்டில்களில் எடுத்துச்செல்வது:


1.       ஒன்றில் – ஒரு இளநீர் தண்ணீர், இது 3.00 அல்லது 3.30 மணிக்கு காப்பி / தேநீருக்கு பதிலாக.


2.       மற்றொன்றில் நோனி என்கிற பழரசம் 150 மி.லி இது 6.00 மணி சுமாருக்கு அலுவலகத்திலிருந்து புறப்படுமுன் சாப்பிட.


சுமார் 7.00 மணிக்கு உலர்ந்த பழன்ஹ்கள் அல்லது பருப்புகளில் சில. (பேரீச்சை, திராட்சை, முந்திரி, பாதம், வேர்கடலை போன்றவை)


அடுத்து 8.00 மணிக்கு இட்லி அல்லது தோசை. ஒரு சில நாட்களில் இரவு சாப்பாடும் பழங்களே.


மேற்கூரிய மிக மிக எளிமையான எவ்வித கஷ்டமுமின்றி உணவு தயாரித்து சாப்பிட்டுவருவேன்.


இம் முறையை பின்பற்றும் பொழுது கஷ்டமான மனநிலையிலிருந்து விடுபட்டு சந்தோஷமான மனநிலையுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் ஆனந்தமாகவும் வாழமுடிகிறது.


இதன்படி எனது சாப்பாட்டில் என்பது விழுக்காத்திற்கு மேல் இயற்கை உணவுகளே என்பது மிகவும் குறிப்பிடத்த்தக்கது. 

காலையில் சாப்பிடும் பழங்கள் மற்றும் மதிய உணவாக தயாரித்தது போன்றவற்றின் புகைப்படங்களை இணைத்துள்ளேன்.

படங்கள் இணைப்பது எப்படி என்பதனை விள்ளகியதற்கு மிக்க நன்றி.

இன்றைய மருத்துவ உலகம்! AJEoSCLWQlCG0E8WjcQU+BF2 
இன்றைய மருத்துவ உலகம்! NMG9JZoREy2NlpptOj8g+BF3 இன்றைய மருத்துவ உலகம்! YLVbesRQhWrOXmmle5MW+BF4இன்றைய மருத்துவ உலகம்! ZZbLiZ2oSFWJ9WhH4YYr+BF6  
இன்றைய மருத்துவ உலகம்! DBJjbtrnSj699Qxf9KEv+BF8 
இன்றைய மருத்துவ உலகம்! BuBVtLOcRNMDModpsE1j+BF5 

இன்றைய மருத்துவ உலகம்! PZgNqSUQQeobxRwLzjzh+Fruits18 

இன்றைய மருத்துவ உலகம்! V0K1BsS1OAg6vmy8Zdig+Fruit2 
படங்கள் தொடரும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக