ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இறைவன் எழுதிய திருமுகம்!

View previous topic View next topic Go down

இறைவன் எழுதிய திருமுகம்!

Post by சாமி on Sun Nov 24, 2013 11:17 am

'கடிதம்' என்பதற்கு முடங்கல், திருமுகம், மடங்கல், ஓலை எனப் பல பெயர்கள் உண்டு. எந்தக் கடிதத்திற்கும் மூன்று முக்கிய பகுதிகள் இருக்க வேண்டும். முதலில் கடிதம் எங்கிருந்து (ஊழ்ர்ம்) என்பதையும், அடுத்து, இக்கடிதம் இன்னாருக்கு (பர்) எழுதப்படுகிறது என்பதையும், அதன் பின்னர் செய்திகளையும் அறிவிக்க வேண்டும். "இக்கடித முறை மேனாட்டு அறிஞர்களின் போக்கைத் தழுவியது' எனச் சிலர் கூறுவர். ஆனால், பண்டைத் தமிழர்கள் இம்முறைப்படியே கடிதம் எழுதினர் என்பதை பதினோராம் திருமுறையில் உள்ள திருவாலவாயுடையாரின் திருமுகப் பாசுரத்திலிருந்து அறியலாம். இத்திருமுகப் பாசுரம் கடித இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்கிறது.

"இன்ன தன்மையன்' என யாராலும் உணரமுடியாத இறைவன், தன்னை இன்னிசையாற் போற்றிய பாணபத்திரனது வறுமைத் துயரை நீங்கிப் பெருஞ் செல்வம் வழங்குதற் பொருட்டும், தன்னை இடைவிடாது வழிபடும் சேரமான் பெருமாளுடைய வரையா ஈகையினையும், சிவபக்தியினையும் விளக்குதற்பொருட்டும், தண்ணார்த் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டில், தானும் ஒரு தமிழ்ப் புலவனாகத் திருமேனி தாங்கி, "மதிமலிபுரிசை' எனத் தொடங்கும் திருமுகப் பாசுரத்தைப் பாடியருளினான்.

மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவும் பால்நிற வரிச்சிற
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
கொருமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே
(பா. 1)


"திங்கள் தங்கிய மதிலாற் சூழப்பெற்ற மாடங்களையும், கூடல் நகரத்திலே நிலைபெற்ற பால்போலும் வெண்ணிறச் சிறகுகளையுடைய அன்னங்கள் பயின்று வாழும் நீர்நிலையோடு கூடிய சோலை சூழ்ந்த திருவாலவாயென்னும் திருக்கோயிலிலே நிலைபெற வீற்றிருக்கும் இறைவனாகிய "யான்' வரைந்த மொழி.

இதனை, பருவக்காலத்து மேகத்தை ஒப்பப் பாவன்மையுடைய பெரும் புலவர்களுக்கு அன்புரிமையினால் தன்பாலுள்ள பெரும்பொருளை அவர்கள் போதுமென மறுக்கவும், உரிமையோடு நிறையக் கொடுத்துப் புகழொளி பரவ நிறந்தங்கிய திங்களையொத்து விளங்கும் வெண்கொற்றக்குடை நிழற்கீழ்ப் போர்ப்பரி செலுத்தும் ஆற்றல் மிக்க சேரலன் காண்பானாக!

பக்கத்தார் இயல்பறிந்து பழகும் இனிய பண்பினோடு யாழினை வாசிக்கவல்ல பாணபத்திரனென்பான் சேரமானாகிய தன்னைப் போல் என்பாற் பெருகிய அன்புடையான். வேந்தர் பெருமானாகிய தன்னைக் காணவேண்டுமென்னும் பேரார்வத்தால் அங்கு வருகின்றான். ஈவோனும் ஏற்போனுமாகிய நும்மிருவர் மாண்பினை நோக்கி அம்மாண்புக்குத்தக்க பெரும் பொருளைக் கொடுத்து அவனை என்பால் வரும்படி விடுத்தல் செய்யத்தகுதலாம்.'

மேற்கூறிய பொருளில் முதல் நான்கு அடிகளில் இன்னாரிடமிருந்து இது வருகிறது; அடுத்த நான்கு அடிகளில் இன்னாருக்கு எழுதப்படுகிறது; நிறைவு நான்கு அடிகளில் எழுதப்படும் செய்தி இன்னது என அழகாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

இறைவன் எழுதிய இத்திருமுகப்பாசுரம் வாயிலாக, கடித இலக்கியத்திற்குரிய இலக்கணத்தையும், கடிதம் எழுதும் முறை தமிழர்களுக்குப் புதிதல்ல என்பதையும் நன்கு அறிய முடிகிறது.

பேரா. ஜா.திரிபுரசூடாமணி - தினமணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum