ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 aeroboy2000

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 aeroboy2000

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 ayyasamy ram

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 aeroboy2000

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

View previous topic View next topic Go down

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Wed Nov 27, 2013 6:49 pm

ஒவ்வொரு ஆண்டும், கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தாண்டும் 44-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவ., 20ம் தேதி கோலாகலமாக துவங்கியது. 10நாட்கள் நடக்கும் இவ்விழா நவ., 30 ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட படங்கள் இங்கு திரையிடப்படுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் என 100க்கும் மேற்பட்ட நிருபர்கள், புகைப்படகாரர்கள், டி.வி., கேமரா மேன்கள் கோவாவை முற்றுகையிட்டு திரைப்பட விழா குறித்த செய்திகளை எழுதவும், ஒலி, ஒளிபரப்பவும் செய்து வருகின்றனர்.

நான் இயக்குநர்களின் கதாநாயகி... கோவா பட விழாவில் பத்மப்ரியா பேட்டி!!

கோவாவில் நடைபெற்று வரும் 44வது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் சினிமாவில் இருந்து தங்கமீன்கள் படம் தேர்வானது. இதற்காக இப்படத்தில் நடித்த ராம், ஷெல்லி, பத்மப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பத்மப்ரியா, தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* கொஞ்ச நாளாக தமிழ் சினிமாவில் உங்களை காணோமே...?

தவமாய் தவமிருந்து, பட்டியல், மிருகம், சத்தம் போடாதே, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பொக்கிஷம் போன்ற பல படங்கள் மூலம் மக்களிடையேயும், மீடியாவிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளேன். உலகில் ஏழாவது சிறந்த பல்கலைக்கழகம் என்று கருதப்படும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் ஒன்றரை ஆண்டு தங்கி முதுகலைப்பட்டம் படித்து பட்டம் பெற்றிருக்கிறேன். நல்ல பயனுள்ள அனுபவம். அதுதான் இந்த இடைவெளி என்கிறார்.

* தமிழ் திரை உலகினரோடு தொடர்பில் இருக்கிறீர்களா...?

நான் நடித்த எல்லா படங்களின் இயக்குனர்களோடும், சக நடிகர், நடிகைகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.

* இந்த கோவா திரைப்பட விழாவில் நல்ல படங்களை பார்த்தீங்களா...?

பொதுவாக சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சிறப்பான படங்களையே பார்ப்பது என் வழக்கம். ஆனால் இந்த வருடம் மிகவும் நல்ல சில படங்களை இந்தியன் பனோரமாவில் பார்த்தேன். நாகராஜ் மஞ்சுளே டைரக்ட் செய்திருக்கும் பாண்டரி இந்த திரைப்பட விழாவின் பாப்புலர் படம். ஜாதி வித்தியாசம் பிரச்னை பற்றிய கமலேஷ்வர் முகர்ஜி இயக்கியுள்ள மேகே தாஜா தாரா வங்காள மொழிப்படம். பிரபல வங்காள இயக்குனர் ரித்விக் கடக்கின் வாழ்க்கை பற்றிய படம். கெளசிக் கங்குலி இயக்கியுள்ள அபுர் பாஞ்சாலி வங்காள படம். அடுத்து அருமையான ஒரு கனடா நாட்டுபடம். ஆங்கிலத்தில் சாமுவேல் பெக்கெட் என்ற புகழ்பெற்ற ஆங்கில கவிஞன் பற்றி படம். இன் சர்ச் ஆப் எ புயட் சாமுவேல் பக்கெட் எழுதியுள்ள நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர் கவிதைகள் எனக்கு பிடிக்கும். இன்னும் ஒரு சில படங்களை பார்த்துவிட ஆசை தான்.

* எந்த மாதிரி பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்...?

நான், டைரக்டர்களின் நடிகை. நான் பணிபுரியும் எந்த டைரக்டருக்கும் மிகுந்த மரியாதை கொடுப்பவள். மாடர்ன் பெண், கிராமத்து பெண், இளவரசியோ, ஏழையோ என எந்த மாதிரி கதாபாத்திரம் எனக்கு கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே சிறப்பாக செய்து டைரக்டரிடமும், ஆடியன்சிடமும் நல்ல பெயர் வாங்க முடியும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

* இப்போது ஏதாவது தமிழ்ப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறீர்களா...?

உண்மையாக எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை. கைவசம் தமிழ்ப்படம் இல்லை. இந்த ரோலை நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர்கள் நினைக்கும்போது நிச்சயம் என்னை கூப்பிடுவார்கள். எந்த மொழிப்படமாக இருந்தாலும் எனது கேரக்டர் எனக்கு பிடித்தாள் நடிக்க ஒப்புக்கொள்ளுவேன்.

* மாறுபட்ட கதை அம்சம் உள்ள பல தமிழ்படங்கள் இப்போது வெற்றி பெறுகின்றன. மக்கள் விரும்பி பார்க்கிறார்கள், அந்த மாதிரி படங்களை பார்த்திருக்கிறீர்களா...?

சீனு ராமசாமியின் நீர்ப்பறவை படம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற இன்னும் சில படங்களை ரசித்து பார்த்தேன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Wed Nov 27, 2013 6:50 pm

தங்கமீன்கள் தேர்வானது மகிழ்ச்சியளிக்கவில்லை - கோவா விழாவில் ராம் பேச்சு!!

44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ஒரே ஒரு தமிழ்ப்படமாக தங்கமீன்கள் தேர்வானது. விழாவில் இப்படம் ஐ நாக்ஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தின் இயக்குநர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார், நடிகைகள் பத்மப்ரியா, ஷெல்லி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவா திரைப்பட விழா சார்பில் பூச்செண்டும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. அரங்கு நிறைந்த காட்சியாக தங்கமீன்கள் இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என்று பல மொழிகளை சேர்ந்த பெண்களும், தாய்மார்களும் சிறந்த படத்தை கொடுத்ததற்காகவும், அப்பா ரோலில் தத்ரூபமாக நடித்ததற்காகவும் ராமை பாராட்டி புகைப்படமும் எடுத்து கொண்டனர். பல ஆண்கள் அவரை ஆர தழுவி தங்கள் பாராட்டை தெரிவித்தனர். விழாவில் ராம், தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* உங்கள் பின்னணி பற்றி...?

ஒருத்தருக்கு ஒரு சொந்த ஊர் தான் இருக்கும். ஆனால் என் தந்தை கோயம்பத்தூர், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை என்று ஐந்து இடங்களுக்கு டிரான்ஸர் கிடைத்ததால் எனக்கு ஐந்து சொந்த ஊர்களாகிவிட்டது. பல பள்ளிகளில் படித்து பிறகு, சென்னை கிறிஸ்த்துவ கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. முடித்து விட்டு, இந்தி இயக்குனர் ராஜ்குமார் சந்தேயிடம் லஜ்ஜா படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தேன். மேதும் என்ற படத்தை நான் டைரக்ட் செய்ய திட்டமிட்டபோது, ஒளிப்பதிவு மேதை பாலுமகேந்திரா, 2005ம் ஆண்டு அந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய சம்மதித்தார். என் துரதிர்ஷ்டம் அந்த படத்தை ஆரம்பிக்க முடியவில்லை. திரைப்படங்கள் பற்றிய அரிய முக்கியமான பல விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

2007ம் ஆண்டு கற்றது தமிழ் எனது முதல் படமாக உருவானது. வியாபார ரீதியாக நல்ல வெற்றி கிடைத்தது. கோபக்கார இளைஞன் பற்றிய அந்தப்படம் முற்றிலும் வித்தியாசமாக வந்தது. அடுத்தப்படியாக தந்தை - மகள் பாசத்தை மையமாக வைத்து தங்கமீன்கள் எனும் படத்தை புதுமையான முயற்சியாக ஆரம்பித்தேன். தயாரிப்பாளருக்கு பண பிரச்னை காரணமாக படம் நான்கு வருடங்கள் தாமதமானது. இப்போது உங்கள் முன்னால் வெளியாகியுள்ளது.

* இயக்குநரான நீங்கள் எப்படி இந்தபடத்தின் ஹீரோவானீர்கள்...?

முதலில் கருணாஸ் தான் நடிப்பதாக இருந்தது. அதிலும் வியாபார ரீதியாக பிரச்னை. இயக்குனர் கெளதம் மேனன், தந்தை ரோலுக்கு நீயே பொருத்தமாக இருக்கிறாய், நீ ஹீரோவாக நடித்தால் இந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று உற்சாகப்படுத்தினார். இயக்குநர் கெளதம் மேனனால் தான், நான் நடிகராகவேன்.

* இந்தபடத்தின் கதை எப்படி உருவானது?

எனது பாசத்திற்கு உரிய மகள் ஸ்ரீ சங்கர மோமதிக்கும், எனக்கும் உள்ள பாசப்பிணைப்பு தான் இந்த படம் உருவாக காரணமாக இருந்தது. அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்போது அவள், கோயம்பத்தூரில் பள்ளியில் படிக்கிறாள். அவளுக்கு தங்க மீன்கள் படம் நன்றாக வந்து ரசிகர்களிடமும் மீடியாவிடமும் பாராட்டு பெற்றது பற்றி மிகவும் மகிழ்ச்சி.

* கோவா திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமாவில் இடம் பெறும் ஒரே தமிழ்ப்படம் உங்களது தங்க மீன்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியானது தானே?

எனக்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு மனதிருப்தி ஏற்பட்டாலும் உண்மையில் எனக்கு மகிழ்ச்சியில்லை.. எவ்வளவோ நல்ல படங்களில் தமிழ் சினிமாவில் வந்து இருக்கின்றன. அவற்றில குறைந்தது நான்கு படங்களாவது தேர்வாகி இருக்க வேண்டும், அப்போது தான் அது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இனி வரும் காலங்களில் இந்த குறை தீர்க்கப்பட வேண்டும்.

* உங்கள் மகளாக நடித்த சிறுமியை எப்படி தேர்வு செய்தீர்கள்...?

60 குழந்தைகளுக்கு மேல் வரவழைத்து, பேச வைத்து, நடிக்க வைத்து டெஸ்ட் வைத்தோம். தமிழை தாய் மொழியாக கொண்ட குழந்தைகளை மட்டும் தான் டெஸ்ட் எடுத்தோம். சாதனா என்ற சிறுமி சிறப்பாக பொருத்தமாக இருந்தால் அவளையே தேர்வு பண்ணினோம். சாதனாவிற்கு டான்ஸ், மியூசிக் எல்லாம் நன்றாக வரும். திறமைகளுடன் கூடிய எல்லாம் அம்சங்களும் சாதனாவிற்கு இருந்தது. 52 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது, எல்லாம் நாளும் சலிக்காமல், சொல்வதை புரிந்து கொண்டு அப்படியே நடித்தாள். சாதனா தற்போது துபாயில் இருக்கிறாள். அவளின் தாய்-தந்தை இருவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இருவரும் கூட இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தாய் லெட்சுமி ஸ்கூல் டீச்சராகவும், தந்தை வெங்கடேஷ் பள்ளி தலைமை ஆசிரியராகவும் பொருத்தமாக நடித்திருந்தார்கள்.

* அருமையான லொகேஷனில் படமெடுத்திருக்கிறீர்கள் எப்படி லொகேஷன் செலக்ட் பண்ணினீர்கள்...?

மலைபக்கத்தில் ரயில் போக வேண்டும், ரயில் பாதைக்கு அருகே ஏரி இருக்க வேண்டும், ஏரிக்கு அருகே ரோடு, ரோடு அருகே வீடு, இந்த மாதிரி லொகேஷனை நானும், என் உதவியாளர்களும் ஒரு மாதம் தேடி அலைந்தோம். பிறகுதான் நாகர்கோவில் அருகே வீராணி ஆளூர் என்ற இடத்தை தேர்வு செய்தோம். ஆனந்த யாழை மீட்டுகிறாள்... பாடலை அச்சன் கோவில், வயநாடு போன்ற இடங்களில் எடுத்தோம்.

* படப்பிடிப்பின் போது ஏதாவது ரிஸ்கான காட்சிகள் இருந்ததா...?

வயநாட்டில் ஐந்து மணி நேரம் மலை மீது ஏறிய பிறகு தான் லொகேஷனுக்கு போக முடியும். 20 உதவியாளர்களுடன், ஐந்து நாட்கள் கூடாரங்கள் எல்லாம் அமைத்து, அங்கேயே தங்கி படமாக்கினோம். பாறை வழுக்கி மீண்டும் ஏறி வரும் காட்சி படமாக்கும்போது எனக்கு கால் தவறி கீழே விழ பார்த்தேன். ஆனால் சுதாரித்து கொண்டேன். அந்த இடத்தில் எனக்கு கீழே ஆயிரம் அடி பள்ளம் இருந்தது. படத்தில் டி.வி. விளம்பரத்தில் வரும் நாயை தேடும் முயற்சியில் அந்த காட்சி வரும்.

* படத்திற்கு நீங்கள் பெற்ற வரவேற்பு...?

வியாபார ரீதியாக திருப்திகரமாக இருக்கிறது. கோவா திரைப்பட விழா தவிர சென்னை, பெங்களூரு திரைப்பட விழாக்களில் போட்டி பிரிவுகளில் தங்கமீன்கள் படத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். கோவா திரைப்பட விழாவில் படம் முடிந்ததும் அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தது, என்னை நெகிழ வைத்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 40 பள்ளிகளில் குழந்தைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் இந்தப்படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டிருக்கிறது.. ஆசிரியர்களின் அணுகுமுறை குறித்தும் இந்தப்படம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

18வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா ஐதராபாத்தில் நடக்கிறது. குழந்தைகள் உலகம் என்ற பிரிவில் திரையிடப்படும் ஒரே இந்திய திரைப்படம் தங்க மீன்கள் தான் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

* உங்கள் அடுத்த படம் பற்றி...?

எனது அடுத்த படத்தின் பெயர் தரமணி. நகர வாழ்க்கையையும், அதன் உறவுகளையும் பற்றியும் ஒரு கதையை உருவாக்கி வருகிறேன். தங்கமீன்கள் படத்திலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்ட படம். வசந்த் ரவி என்ற புதுமுகமும், ஆண்ட்ரியாவும் நடிக்கிறார்கள். வசந்த் ரவி, லண்டன் பிலிம் பள்ளியிலும், மும்பையில் பிரபல இந்தி நடிகர் அனுபம்கேர் நடத்தும் நடிப்பு பள்ளியிலும் பயிற்சி பெற்றவர்.

இவ்வாறு ராம் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Wed Nov 27, 2013 6:51 pm

ஏ டச் ஆப் ஸின் A Touch of Sin - விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்

 இரண்டு இளைஞர்கள், ஒரு நடுத்தர வயது ஆண், ஒரு இளம் பெண், இவர்களுக்கு சீனாவில் பல மாநிலங்களில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தான் இந்த படம். சீனாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார முன்னேற்றம், அந்த நால்வரை வன்முறையின் எல்லைக்கு எடுத்து சென்றிருப்பது தான் கசப்பான உண்மை. அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம், சீனாவில் எங்கோ இருக்கும் சிறு கிராமம் வரை பரவி கிடக்கிறது.

படம் ஆரம்பிக்கும்போது தேசிய நெஞ்சாலையில் தனியாக மோட்டார் பைக்கில் வருபவரை (நடுத்தரவயது ஆண்), மூன்று இளைஞர்கள் கையில் ஆயுதங்களுடன் பணத்திற்காக வழிப்பறி செய்கிறார்கள். மூவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மோட்டார் பைக்கில் சென்று விடுகிறான். காவல்துறை மூன்று கொலை செய்தவரை தேடுகிறது.

கிராமத்து பஞ்சாயத்து தலைவர் அவரது உதவியாளர், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் நிறைய ஊழல்கள் செய்து பணம் சம்பாதிக்கிறார்(கிராமங்களில் ஹைடெக் கட்டிடங்கள், ஹை டெக் ஆபிஸ்) அவர்களிடம் இது பற்றி கேட்டும் பயனில்லை. ஊழலை பொறுத்து கொள்ள முடியாதவர், கிராமத் தலைவர் அவரது மனைவி, உதவியாளர் மூவரையும் எந்த தயக்கமும் இன்றி, சுட்டு கொன்று விட்டு அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று விடுகிறார்.

தனது தாயின் 70வது பிறந்தநாளுக்கு எங்கிருந்தோ அந்த மலைப்பிரதேச கிராமத்திற்கு ஒரு இளைஞன் வருகிறார். வீட்டிற்கு, மனைவிக்கு ரெகுலராக பணம் அனுப்பினாலும், தான் எங்கே, எந்த வேலை செய்கிறேன் என்று சொல்லுவதில்லை. மனைவி எவ்வளவோ கேட்டும் தன் இருப்பிடம் தெரியக்கூடாது என்பதற்காக அவளுக்கு செல்போன் வாங்கி தர மறுக்கிறான். தாயிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு பெரிய நகரத்திற்கு செல்கிறான். ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் நிறைய பணம் எடுக்கும் கணவன்-மனைவியை நேருக்கு நேர் சுட்டுக் கொன்றுவிட்டு பணப்பையை எடுத்துக் கொண்டு, உடைகளை களைந்துவிட்து வேறு ஒரு தோற்றத்தில் எதுவுமே நடக்காதது மாதிரி நடந்து சென்று விடுகிறான்.

மூன்றாவதாக அழகிய இளம்பெண். சில வருடங்களாக தான் காதலிக்கும் நண்பரை, முதல் மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்பாள். நண்பரோ, பார்க்கலாம் என்பது போல சொல்லிவிடுகிறார். அந்த இளம் பெண் வேலை செய்யும் பியூட்டி பார்லர் இடத்தை அறிந்து கொள்ளும் மனைவி, இரு ஆண்களுடன் சென்று இவளை நன்றாக அடித்து காயப்படுத்துகிறார். இனி இங்கே இருக்க வேண்டாம் என்று வேறு நகரத்திற்கு செல்கிறாள். ஆனால் அங்கும் பிரச்னை வேறு ரூபத்தில் வருகிறது. சுங்கசாவடி நிர்வாகி, முதலாளி இருவரும், இந்த பெண் வேலை செய்யும் மஸாஜ் பார்லருக்கு வந்து, தங்களது ஆசைக்கு இணங்கும் படி கேட்கிறார்கள். கண்டிப்பாக அவள் மறுக்கவே பலாத்காரம் செய்கிறார்கள். தன்னிடம் இருக்கும் சிறு கத்தியால் அந்த நிர்வாகியை கொன்று விடுகிறாள், ரத்தம் தோய்ந்த உடையோடு வெளியேறுகிறாள்.

டிரஸ் தைக்கும் வேலை செய்யும் அரும்பு மீசை இளைஞன் நான்காவது பாத்திரம். சக தொழிலாளியுடன் இவர் பேசிக் கொண்டிருந்ததால், அவரது கை இயந்திரத்தில் பட்டு பலத்த காயம் ஏற்படுகிறது. அவருக்கு காயம் சரியாகும் வரை முதல் இளைஞன் வேலை செய்து சம்பளத்தை அடிப்பட்டவனுக்கு தர வேண்டும் என்று நிர்வாகி உத்தரவு போடுகிறார். சரிப்பட்டு வராது என்று அங்கிருந்து கிளம்பி வேறு மாநிலத்தில் கோல்டன் கிளப் என்ற கேளிக்கை விடுதிக்கு வேலைக்கு சேருகிறான். அங்குள்ள அழகான இளம் பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது. தன் குடும்பத்திற்கும், அம்மாவிற்கும் பணம் அனுப்ப முடியவில்லையே என்று விருந்துகிறான், அம்மாவுடன் செல்போனில் பேசி முடித்ததும் மாடியிலிருந்து கீழே குதித்து இறக்கிறான்.

சீனாவின் விமானம் போன்ற செளகரியத்தில் பஸ் பயணம், பசுமையான சூழ்நிலை, மலைகள், பனிமழை பல்வேறு நகரங்கள், சீனருடைய வாழ்க்கை எல்லாம், அழகாக காண்பிக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றத்தால் ஏற்படும் மாறுதல்கள், கேளிக்கை விடுதியில் நீச்சல் உடையில் அழகிய இளம் பெண்களின் நடனம், கஸ்டமர்களை திருப்தி அடைய செய்ய ஈடுபடும் சேவை, மேற்கத்திய நாகரீகத்தின் விளைவுகள். முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்புடன் புதுமையான கோணத்தில் இயக்குனர் ஜியா ஜாங்கே படத்தை உருவாக்கியிருக்கிறார்.

2013-ம் ஆண்டில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்ற படம் இது. மாடர்ன் சீனா பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Wed Nov 27, 2013 6:52 pm

நான் பெற்ற விருதுகளுக்கு இன்னும் தகுதியுடையவனாக இருந்திருக்க வேண்டும் - கமல் பேச்சு

44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கமல், கோவா திரைப்பட விழாவில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் மீடியாவை சந்தித்தபோது, அவர் கொடுத்த பேட்டியிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ...

* ஏக் துஜே கேலியே(கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரதி நடித்தது) படப்பிடிப்பிற்காக கோவா வந்திருந்தேன். அது தான் கோவாவிற்கு எனது முதல் விஸிட். அந்தப்படம் எனது 101-வது படம், அந்தப்படப்பிடிப்பின் போது ஷெட்டில் ஒர பையன் இருந்தான். என்னுடனே நாள் முழுவதும் இருப்பான். பலரிடம் நான் தான் அவனுடைய தந்தை என்று சொல்லுவான்(ஏன்? என தெரியவில்லை) சிரிக்கிறார். அவனுக்கு நீந்துவதற்கு நான் அப்போது சொல்லிக் கொடுத்தேன். கோவா உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும். பல விஷயங்களில் கோவா எனக்கு முக்கியமானது.

* இதுவரை ஐம்பது மலையாள படங்களில் நடித்திருக்கிறேன். அங்கு உள்ள திரைப்படத்துறையினர் நான் ஒரு மலையாளி என்றே கருதுகிறார்கள். அங்கிருந்து தமிழ் படங்களுக்கு சென்று விட்டதாக நினைக்கிறார்கள்.

விஸ்வரூபம்-2 படத்தை இந்தியில் விஸ்வரூபா-2 என்று அழைக்க போகிறோம். விஸ்வரூபம் அல்ல, விஸ்வரூபம் ரிலீஸானபோது, பெயரை பார்த்து இது டப்பிங் படம் என்று ஆடியன்ஸ் கருதிவிட்டார்கள். இந்தியில் உருவாக்கப்பட்ட படம் இது என்பதை தெளிவுப்படுத்தவே விஸ்வரூபா-2.

* என் மகள் ஸ்ருதியிடமிருந்து ஒரு நடிகையாக நிறையவே எதிர்பார்க்கிறேன். ரஜிகாந்த் போன்ற நடிகர்களை பார்த்து குழந்தையாக ஷெட்டுக்கு ஷெட் தாவி வளர்ந்த பெண். நிறைய சாதிக்க வேண்டும். இசையில் முறையாக ஸ்ருதி, பயிற்சி பெற்றவர்.

* இந்தி திரைப்பட ரசிகர்களிடம் நிறைய பாப்புலாரிட்டி இருக்கும் ஒரு சில தென்னிந்திய நடிகர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். நிறைய புதிய சவால் உள்ள பாத்திரம் கிடைத்தால் தான் இந்தி படங்கள் பண்ணுவதில் அர்த்தம் இருக்கிறது. அதிகப்பணம் கிடைப்பதற்காக மட்டும் அல்ல. புதிய எல்லைகளை உருவாக்க மேலும் அதிக ஆடியன்ஸ் பெறுவதற்கும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் கமல்.

* விஸ்வரூபம் படத்தின் ரிலீஸின் போது ஏற்பட்ட சர்ச்சைகள் பற்றி கேட்டபோது, சர்ச்சை மட்டும் ஒரு படத்திற்கு உதவி ஆகாது. சர்ச்சை எப்படி ஒரு பெண்ணின் திருமணத்திற்கு உதவும்? அது போலத்தான் இதுவும்! விஸ்வரூபம் வெற்றி பெற்றதால், இரண்டாவது பாகம் உருவாக்கப்படவில்லை. விஸ்வரூபம் படப்பிடிப்பு நடக்கும் போதே இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம்.

* இந்தியாவின் மிகவும் போற்றப்படும் திறமையுள்ள நடிகராக இருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற கமல், தான் சாதித்ததே போதும் என்று மகிழ்ச்சியாக திருப்தி அடைந்ததாக இருப்பார் என்று யாராவது நினைத்தால் அது தவறு, மேலும் மேலும் புதுமைகள் செய்ய விரும்பும் கமல், இதுவரை நான் பெற்றுள்ள விருதுகளுக்கு நான் இன்னும் தகுதி உடையவனாக இருந்திருக்க வேண்டும் என்று தன்னடக்கமாக கூறுகிறார். நடிகர், கதாசிரியர், பாடல் கவிஞர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர், பாடகர் என்று பல துறைகளில் தன்னை தொடர்ந்து எப்போதும் தன் தரத்தை உயர்த்திக் கொள்ளுவது தான் கமலின் செயல்பாடு. இந்த குணம் தான் அவருக்கு 4 தேசிய விருதுகளையும், 19 பிலிம்பேர் விருதுகளையும் பெற்று கொடுத்திருக்கிறது. இந்த சாதனையை இதுவரை எந்த நடிகரும் செய்ததில்லை.

* கமல் தனது முதல் ஸ்கிரிப்ட்டை ''உணர்ச்சிகள்'' என்ற படத்திற்காக தனது 18வது வயதில் எழுதியிருக்கிறார். தொடர்ந்து ராஜபார்வை, சத்யா, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களின் கதைகளை கமல் எழுதியிருக்கிறார்.

* எனக்கு 25 வயதாகும் போது 100 படங்களில் நடித்துவிட்டேன் என்கிறார் கமல். அவருடைய திரை உலக வயது 53. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப்படங்களில் நடித்திருக்கிறார்.

* இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட படங்களிலேயே கமல் படங்கள் தான் அதிகம்.

* வேறு எந்த நடிகரும் நினைத்து பார்க்க முடியாத சோதனையை சாதனையாகச் செய்தவர் கமல். புஷ்பக விமானம், பேசும்படம் என்று ஒரு வசனம் கூட இல்லாமல் புதுமையான, நகைச்சுவையான படங்களை உருவாக்கி வெற்றி பெற்றவர் கமல். புதிய முயற்சிகள் என்பது ரசிகர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதேப்போன்று நடிகர்களுக்கும் முக்கியம் என்கிறார் கமல்.

* வேகமாக வளர்ந்து வரும் டெக்னாலஜி பற்றி கேட்டபோது, எவ்வளவு டெக்னிக்கல் முன்னேற்றம் வந்தாலும், கதை தான் எப்போதும் முக்கியம். சினிமாவிற்கு டெக்னாலஜியை கொடுத்து வரும் நிறுவனங்களுக்கு பயம் தான் முக்கியமாக இருக்கிறது என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Wed Nov 27, 2013 6:53 pm

கோவா திரைப்பட விழாவில் மறைந்த இசைகலைஞர்களுக்கு அஞ்சலி!!

இந்த ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மறைந்த சிறந்த கலைஞர்களின் நினைவில் என்ற தலைப்பில் பின்னணி பாடகர் மன்னா டே நினைவாக ஜாஞ்ஜீர் இந்தி திரைப்படம், பண்டிட் ரவிசங்கர் நினைவாக அவர் இசை அமைத்த சத்யஜித் ரேயின் பதர் பஞ்சாலி, வயலின் மேதை பத்மபூஷன் லால்குடி ஜெயராமன் நினைவாக அவர் இசை அமைத்த சிருங்காரம்(2007), பிரபல தமிழ் பின்னணி பாடகர் பத்மஸ்ரீ டி.எம்.எஸ் நினைவாக எங்க வீட்டு பிள்ளை(1965), பிரபல நடிகை சுகுமாரி நினைவாக அயல் (2013), மலையாள திரைப்படம், கவிஞர் பத்மஸ்ரீ வாலி நினைவாக எங்க வீட்டு பிள்ளை (1965), பின்னணி பாடகி ஷம்ஷத் பேகம் நினைவாக சி.ஐ.டி.(இந்தி) 1956, பிரபல வங்காள இயக்குனர் ரிது பர்னா கோஷ் நினைவாக சோகெர் பாலி (வங்காளம்) 2003, பிரபல தயாரிப்பாளர் ஷ்ரிங்கர் நாகராஜ் நினைவாக கமல் நடித்த புஷ்பக விமானம் (1987), பிரபல பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் நினைவாக பெட்டட ஹீவு கன்னடம் - 1985 படங்களும், கோவா திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. பிரபல இந்தி வில்லன் நடிகரும், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவருமான பிரான், நினைவஞ்சலியாக மதுமதி(1958), ஜிஷ் தேஷ் மே கங்கா பெஹ்தீ ஹை (1960) போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன.

இதேமாதிரி தாதா சாகிப் பால்கே விருது பெற்று இன்று நம்மிடையே வாழும் பிரபலங்களை கெளரவிக்கும் வகையில், பாரத ரத்னா லதா மங்கேஷ்கருக்காக மஹால் இந்தி - 1947, பிரபல தெலுங்கு நடிகர் பத்மவிபுஷன் விருது பெற்ற ஏ.நாகேஸ்வர ராவுக்காக பிரேம நகர் - தெலுங்கு 1971, பிரபல இந்தி நடிகர் பத்மபூஷன் திலீப் குமாருக்காக தேவதாஸ் இந்தி - 1955, பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேக்காக மாயி இந்தி - 2013, பிரபல வங்காள இயக்குனர் மிருணாள் ஸென்னுக்காக ஆகாஷ் குஸீம் வங்காளம் 1965, பிரபல மலையாள டைரக்டர் அடூர் கோபால கிருஷ்ணனுக்காக நிழல்கூத்து மலையாளம் - 2002, பிரபல இந்தி டைரக்டர் ஷ்யாம் பெனகலுக்காக த்ரிகால் இந்தி - 1985, பிரபல ஒளிப்பதிவாளர் வி.கே.மூர்த்திக்காக பியாஸா இந்தி - 1957, பிரபல தயாரிப்பாளர் டி.ராமா நாயுடுக்காக பிரேம நகரம் தெலுங்கு - 1971, பிரபல தமிழ் இயக்குனர் கே.பாலசந்தருக்காக சிந்து பைரவி தமிழ் - 1985 போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன.

மேலும் கோவா திரைப்பட விழாவில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட பிரபலமான படங்களில் முக்கியமானவற்றை கவிஞர்கள், காதலர்கள், கலைஞர்கள் என்ற பிரிவில் திரையிடுகிறார்கள். அவற்றில் சஸ்த் தியானேஷ்வர் - (இந்தி 1940), தான்ஸென் - (இந்தி 1943), பக்த மீரா - (தமிழ் 1945), பாரத ரத்னா விருது பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி, நடித்தது. மஹல் - (இந்தி 1949), மிர்ஸா காலிப் - (இந்தி 1954), தேவதாஸ் - (இந்தி 1955) திலீப்குமார், வையெந்தி மாலா நடித்தது, காஸ்மீர் கி காலி - (இந்தி 1964) ஷம்மி கபூர், ஷர்மிளா தாகூர் நடித்தது, கெய்டு - (இந்தி 1965) தேவ் ஆனந்த், வஹீதா ரஹ்மான் நடித்தது, அமிதாப், ஜெயா பாதுரி நடித்த அபிமான் - (இந்தி 1973), சங்கராபரணம் - (தெலுங்கு 1979) கே.விஸ்வநாத் இயக்கியது, ரேகா நடித்த உம்ரோ ஜான் - (உருது 1981), கமல்-ஜெயபிரதா நடித்த சாகர சங்கமம் - (இந்தி 1983), சிவக்குமார்-சுஹாசினி நடித்த சிந்து பைரவி - (தமிழ் 1985), மாத்வாச்சார்யா - (கன்னடம் 1986), சர்க்கம் - (மலையாளம் 1992), ஷாரூக்கான்-மனிஷா கொய்ராலா நடித்த தில்ஸே - (இந்தி 1998), மம்மூட்டி, அஜீத், ஐஸ்வர்யா ராய், தபு நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - (தமிழ் 2000), கபி அல்விதா நா கஷ்னா - (இந்தி 2007), ஷம்ஹிதா - (மராத்தி 2012), தனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்சனா - (இந்தி 1943) போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன.

இத்துடன் போலாந்தை சேர்ந்த உலகப்புகழ்ப்பெற்ற பெண் இயக்குனர் அக்னீஸ்கா, இந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். இவர் இயக்கிய எ உமன் அலோன் (1981), பேர்னிங் புஷ (2013), பீவர் (1981), டைட்டானிக் ஹீரோயின் லியோர்னடா டி காப்ரியே நடித்த டோட்டல் எக்லிப்ஸ் (1995) போன்ற படங்களும் திரையிடப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Wed Nov 27, 2013 6:54 pm

பிஹைண்ட் கிளோஸ்டு டோர் Behind Closed Door  - விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!!

அலுவலகத்தில் வேலை புரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு அந்த அலுவலகத்தின் மேலதிகாரியால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுகிறது, அதை எப்படி அந்த பெண் சமாளிக்கிறார் என்பதே பிஹைண்ட் கிளோஸ்டு டோர் என்ற மொராக்கோ நாட்டு படத்தின் கதை சுருக்கம். நல்ல சஸ்பென்ஸ் டிராமா.

திருமணமாகி ஒரு குழந்தை, கணவருடன் நிம்மதியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் சமீராவிற்கு அவரது கம்பெனி டைரக்டர் ரூபத்தில் உபத்திரம் ஆரம்பிக்கிறது. நீ ரொம்ப அழகாக இருக்க, ராத்திரி, பகலும் உன் நினைப்பு தான் என்கிறார் அவரது கம்பெனி டைரக்டர். சமீராவின் படத்தை அவளுக்கே தெரியாமல் கம்யூட்டரில் பார்த்து ரசிக்கிறார். நான் திருமணமானவள், உங்கள் எண்ணம் நடக்காது என்று சமீரா தெளிவாக கூறினாலும் டைரக்டர் ஓயவில்லை. தன் கணவரிடமும் சமீரா எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறார்.

சமீராவிற்கு தெரியாமல் ஆபிஸில் அவரது கம்யூட்டரை திறந்து, அவர் சமீபத்தில் செய்த முக்கியமான வேலைகளை கொண்ட பைல்லை அழித்து விடுகிறார். அதே பைலை டைரக்டர் கேட்கும்போது, செய்த பைலை யாரோ அழித்து விட்டார்கள் என்று புலம்புகிறார் சமீரா. ஒருநாள் மட்டும் எனக்கு நீ இணங்கி விடு, எந்த பிரச்னையும் இருக்காது என்கிறார் டைரக்டர். இதை மறுக்கும் சமீராவுக்கு ஆபிஸில் வேலையை சரியாக செய்யவில்லை என்ற கெட்டபெயர் கிடைக்கிறது.

பெண் வக்கீலிடம் சமீரா, கணவருடன் சென்று ஆலோசனை செய்கிறார். சட்டப்படி நடவடிக்கை ஏதாவது சாட்சி தேவை என்கிறார் வக்கீல். கம்பெனி பிரதம நிர்வாகியிடம் புகார் செய்தும் பயன் இல்லை. எல்லாமே பொய் என்கிறார் டைரக்டர். சமீராவுக்கு, அவரது கணவர் மொஷேவிற்கும் நிறைய மன உளைச்சல், பலநாட்கள் சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

தனக்கு தொல்லை கொடுக்கும் கம்பெனியின் இயக்குனரின் மனைவியை அவரது அலுவலகத்திற்கு சென்று சமீரா சந்தித்து எல்லா பிரச்னைகளையும் விளக்குகிறார். அவரும் நம்புவதாக இல்லை. கடைசியாக இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க சமீரா, நேராக டைரக்டரிடம் சென்று ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுக்கு இணங்க சம்மதிக்கிறேன், பிறகு எந்த பிரச்னையும் வரக்கூடாது, எங்கே எப்போது வர வேண்டும் என்று சொல்லுங்கள் என்று சொல்கிறார். டைரக்டருக்கோ இன்ப அதிர்ச்சி, முதலில் நம்பவில்லை, எனது நண்பருக்கு கடற்கரை ஓரத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது, அங்கு யாருடைய தொந்தரவும் இருக்காது என்கிறார்.

டைரக்டருடன் அவர் காரிலேயே சமீரா செல்கிறார். கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்றதும், டைரக்டருக்கு செம ஜாலி மூடுயாகி, தன்னை கட்டி அணைக்க வரும் டைரக்டரிடம், நான் பாத்ரூம் சென்று பிரஷ் ஆகி வருகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார் சமீரா. பெட்ரூமோடு இணைந்து இருக்கும் பாத்ரூம் பூட்டப்பட்டிருந்ததால் மற்றொரு அறைக்கு சமீரா செல்கிறார். பூட்டப்பட்ட அறையிலிருந்து டைரக்டரின் மனைவி வெளியே வருவதை பார்த்தவர் பேயறைந்தவராக ஆகிறார். நீ எல்லாம் ஒரு மனுஷனா? என்று திட்டிவிட்டு திருமண மோதிரத்தை கழற்றி, அவர் மீது வீசி ஏறிகிறார் மனைவி. அங்கிருந்து தப்பிக்கும் சமீரா, சற்று தூரம் ஓடி தனக்காக காத்திருக்கும் கணவரின் காரில் ஏறிக் கொள்கிறாள். சமீராவும், டைரக்டரின் மனைவியும் சேர்ந்த போட்ட திட்டம் இது என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. கம்பெனிக்கு வேறு புதிய நல்ல மனிதர் டைரக்டராகிறார்.

சமீரா, டைரக்டர், சமீராவின் கணவர் மூவருமே தங்கள் ரோல்களில் பொருந்தி நடித்திருக்கிறார்கள். மொராக்கோ நகரின் பல இடங்களை பார்க்கலாம். முகமது பென் செளதா இயக்கியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Wed Nov 27, 2013 6:55 pm

ஜெய் ஹோ - ஏ.ஆர்.ரஹ்மானை பற்றிய படம்!!

கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சாதனை படைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி உமேஷ் அகர்வால் ஒரு படம் உருவாக்கியிருக்கிறார். ஆஸ்கர் நாயகனை பற்றிய இந்தப்படம் பொருத்தமாக ஜெய்ஹோ (அவருக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மலினியர் படத்தில் வரும் பாட்டு) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கோவா திரைப்பட விழாவை ஒட்டி நடக்கும் பிலிம் பஜாரில் இது காட்டப்பட்டது. ரஹ்மானுடன் ஐந்து கண்டங்களுக்கும் பயணம் செய்து அவரது இசை நிகழ்ச்சிகள், இங்கிலாந்தில் ஸ்டுடியோவில் பணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் அவர் இசை அமைப்பது, இயக்குனர் டோனி போயெல், சேகர் கபூர், சுபாஷ் கெய் போன்ற பிரபலங்கள் ரஹ்மானைப்பற்றி பேசுவது எல்லாம் இடம் பெறுகின்றன. ரஹ்மானும், இதில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அனிர்பன் பட்டாச்சார்யா எழுத்தில், ராஜீவ் மெஹோத்ரா இசையில் இந்தப்படம் உருவாகியிருக்கிறது.

எல்லாம் சரி, திரைப்பட உலகிற்கு ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்திய இயக்குனர் மணிரத்தினத்தினை இதில் பேச வைத்திருக்க வேண்டாமா.?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Wed Nov 27, 2013 6:56 pm

ஜாய் - கிரீஸ் மொழிப்பட விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!!

இந்த திரைப்பட விழாவில் போட்டிக்கு வந்துள்ள படங்களில் கிரீஸ் நாட்டு தயாரிப்பான ஜாய் படமும் ஒன்று. ஒரு ஆஸ்பத்திரியிலிருந்து, சில மாதங்களே ஆன கை குழந்தையை யாருக்கும் தெரியாமல் திருடுகிறாள் ஹரா என்ற பெண். இரண்டு நாட்கள் தன் ப்ளாட்டிலேயே குழந்தையை வைத்து தன் குழந்தையை போலவே ஆசையாக கொஞ்சுகிறாள். ரேடியோவிலும், டெலிவிஷனிலும் சிறு குழந்தையை ஒரு பெண், ஆஸ்பத்திரியிலிருந்து திருடி விட்டாள் என்று தொடர்ந்து அறிவிக்கிறார்கள். ஆனாலும், ஹரா பயப்படவில்லை. குழந்தையை காரில் அழைத்து கொண்டு செல்கிறாள். ஹாரா என்று தெரிந்து ஒரு கிரிமினல் அவளை வழிமறித்து குழந்தையோடு தப்பிக்க முயலுகிறான். ஹரா, அவனை பெரிய கல்லால் தலையில் அடித்து கொன்றுவிட்டு செல்கிறாள். போலீஸ் ஹராவை கைது செய்கிறது.

போலீஸ் விசாரணையிலும் சரி, கோர்ட்டிலும் சரி கேட்கப்படும் எந்த கேள்விகளுக்கும் ஹரா வாயைத் திறக்கவே இல்லை. அவளுக்காக வாதாட கோர்ட் ஒரு வக்கீலை நியமிக்கிறது. வக்கீலிடம் கூட ஹரா எதுவும் பேச மறுக்கிறாள். ஹரா ஏன் அப்படி செய்கிறாள் என்பது எல்லோருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மனநிலை சரியில்லை என்று வாதாடி அவளை தப்பிக்க வைக்கலாம் என்ற வக்கீலின் முயற்சியும் பலிக்கவில்லை. குழந்தையை கடத்தியதற்காகவும், ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காகவும் ஹராவுக்கு, கோர்ட் ஆயுள் தண்டனை வழங்குகிறது.

ஹராவாக நடித்திருக்கும் அமாலியாவின் நடிப்பில் குறை ஒன்றும் இல்லை. ரசிகர்களின் பொறுமையை சோதித்த படம் இது. படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் என்று எதுவும் இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Wed Nov 27, 2013 6:56 pm

ஷட்டர் - மலையாள படம் விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!!

2012-ல் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிய சஸ்பென்ஸ் நிறைந்த படம் ஷட்டர். கொலையை யார் செய்தது? என்பதை கடைசி வரை யூகிக்க முடியாமல் இருப்பது ஒரு வித சஸ்பென்ஸ். அடுத்து என்ன ஆகும்? பிரச்னை எப்படி தீரும் என்று யோசிக்க வைப்பது இந்த படத்தின் சஸ்பென்ஸ்.

துபாயில் சென்று சம்பாதிக்கும் ரஷித்(நடிகர் லால்) விடுமுறைக்கு ரேளா வருகிறார். ஒருநாள் இரவு நண்பர்கள் சிலருடன் குடித்துவிட்டு திரும்பும்போது பஸ் ஸ்டாண்டில் ஒரு விலைமாது நிற்பதை பார்க்கிறார். தனது நண்பர் ஆட்டோ டிரைவரின் உதவியோடு, அந்த பெண்ணை அழைத்து செல்கிறார். பல லாட்ஜ்களில் ரூம் தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக தனது வீட்டிற்கு முன்பு தனக்கு சொந்தமான ஆனால் இப்போது காலியாக உள்ள ஒரு கடையில் இருக்கலாம் என்று முடிவு செய்கிறார். நம்பிக்கைக்குரிய நண்பர் ஆட்டோ டிரைவர், கடையின் ஷட்டரை வெளியே பூட்டிவிட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கு திரும்பி வந்து கதவை திறந்து விடுவதாக ஒப்புக் கொள்கிறார். அங்கு தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.

ரஷிதை விட்டு செல்லும் ஆட்டோ டிரைவர், ஒரு சினிமா டைரக்டரோடு(நடிகர் ஸ்ரீனிவாசன்), காரில் முதலில் மறுத்தாலும் பின்னர் குடிக்கிறார். எதிரே போலீஸ் செக்கிங்கில் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். ரஷித்திற்கு ஷட்டரை திறந்து விட வேண்டுமே என்று ஆட்டோ டிரைவருக்கு பதட்டம்.

காலையில் வழக்கம்போல் பஜார் பிஸியாகி விடுகிறது. ஜனங்கள், வண்டிகள் நடமாட்டம், அடுத்த கடைகளில் வியாபாரம். உள்ளே தன் தவறை உணர்ந்து ரஷித் தவிக்கிறார். முதலில் சண்டை போட்டு கோபித்தாலும், விலை மாது (நடிகை சஜிதா) ரஷீத்திற்காக வருத்தப்படுகிறார். ரஷீத் கொடுக்கும் பணம், வாட்ச், மோதிரங்கள் எல்லாவற்றையும் திரும்பிக் கொடுக்கிறார். அழுத்தமான கேரக்டர் சஜிதாவுக்கு.

பூட்டப்பட்ட கடையின் வென்ட்டிலேட்டர் வழியாக தன் வீட்டை பார்க்கும் ரஷித், குடும்பத்தினர் படும்பாட்டை எண்ணி வருந்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக ரஷித், கல்லூரியில் படிக்கும் தன் மகள் சக மாணவர்களுடன் நண்பர்களாக இருப்பதையும், செல்போனில் அடிக்கடி பேசுவது, எஸ்.எம்.எஸ். அனுப்புவதிலும் அதிகநேரம் செலவழிப்பதையும் பார்த்து அவளை கண்டித்து அவளுடன் கோபித்து கொள்கிறார். மேலும் 17 வயதாகும் தன் மகளுக்கு திருமணம் செய்யவும் முடிவு செய்துவிடுகிறார்.

ஆட்டோ டிரைவர், மீண்டும் இரவில் வந்து கடையின் ஷட்டரை திறக்க முயலும்போது ஏற்கனவே திறக்கப்பட்டு, ரஷித் மட்டும் உள்ளே இருப்பதை பார்த்து வியந்து போகிறார். ஆட்டோ டிரைவர் திறக்கவில்லை என்றால் யார் திறந்தது? என்ற கேள்வி எழுகிறது.

ரஷித், தயக்கத்துடன் வீட்டுக்குள் செல்லும்போது அவரது மகள், என் தந்தை நல்லவர் என்று எனக்கு நன்றாக தெரியும், தவறான நண்பர்களால் தான் பிரச்னை. என்னைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று சொல்லும்போது, மகள் தான், தன் நண்பர்கள் மூலமாக தன்னை பெரிய அவமானத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார் என்ற விஷயம் தெரிய வருகிறது. என்னோடு படிக்கிறவுங்க நண்பர்கள் தான், எனக்காக எதுவும் செய்வார்கள், அவர்களை நான் காதலிக்க மாட்டேன் என்று மகள் சொல்லும்போது தான் ரஷித்திற்கு தன் மகளை பற்றி அவர் எண்ணிய கவலைகள் எல்லாம் தவறு என்று புரிகிறது.தொடர்ந்து மகள் படிக்கட்டும், இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று ரஷித் சொல்லும்போது மனைவிக்கு ஒரே ஆச்சர்யம்.

ரஷிதாக லால், விலைமாதுவாக சஜிதா, சினிமா டைரக்டராக பிரபல நடிகர், கதாசிரியர் ஸ்ரீனிவாசன். இயக்குனர் ஜாய் மாத்யு - வெல்டன். கடைசிவரை நல்ல சஸ்பென்ஸ், இடைச்சொறுகலாக சென்டிமென்ட்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Wed Nov 27, 2013 6:57 pm

வாலெஸா - மேன் ஆப் ஹோம் - போலந்து பட விமர்சனம்

துறைமுகத்தில் சாதாரண தொழிலாளியாக இருந்து அவர்களுக்கு தலைவராகி போலந்து நாட்டின் முக்கிய தலைவராகி சர்வதேச அங்கீகாரமும், புகழும் பெற்று சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்று, போலந்தை கம்யூனிஸயத்தின் இன்னல்களிலிருந்து விடுவித்த லே வாலெஸாவின் வாழ்க்கை சித்திரம் தான் இந்தப்படம். இரண்டு மணிரேநம் போலந்திலேயே இருந்து அங்கு நடைபெறும் சரித்திர புகழ்பெற்ற நிகழ்வுகளை நேரில் கண்ட அனுபவம் இந்தப்படத்தை பார்க்கும் போது தோன்றுகிறது.

தோற்றத்தில் அசல் வாலெஸா போன்று இருக்கும், நடிகர் ராபெர்ட் விக்கிவிஸ், தனது பேச்சு திறமையால் சக தொழிலாளர்களை, கம்யூனிஸ தலைவர்களை, வெளிநாட்டவர்களை, போலந்து மக்களை படிப்படியாக வாலெஸா கவருவது பொருத்தமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது பாடி லாங்குவேஜ், இருகைகளிலும் இரு விரல்களை வி போன்று காண்பித்து மக்களுடன் ஒன்றுவது, சில இடங்களில் வேகமாக பேசுவது, தன் மறுப்பை ஆணித்தரமாக எடுத்து பேசுவது என வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் வாலெஸா பேட்டி எடுப்பதில் படம் ஆரம்பமாகி, பல இடங்களில் ப்ளாஷ் பேக் ஆக செல்கிறது.

வாலெஸாவின் மனைவி தனுடாவாக நடித்திருக்கும் நடிகை அக்னீஸ்கா, யதார்த்தமாக நடித்திருக்கிறார். அழகான தோற்றம், உடல்கட்டு ஒவ்வொருமுறையும் போலீசார், வாலெஸாவை கைது செய்யும்போது பதட்டப்படும் தனுடா ஒரு கட்டத்தில் இது பழக்கமானது தானே என்பதுபோல் நடந்து கொள்ளுவார். நான் ஒரு வேளை திரும்பி வராவிட்டால் என்று சொல்லி, தனது வாட்ச்சையும், திருமண மோதிரத்தையும் கழற்றி மேஜை மீது வைத்து, இவற்றை விற்று, அதில் வரும் பணத்தை குடும்ப செலவுக்கு வைத்துக்கொள் என்று சொல்லுவது உள்ளத்தை தொடும் காட்சி.

தனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டதும் வாலெஸா, நான் ஆஸ்லோ நகருக்கு நோபல் பரிசு வாங்க போகமாட்டேன், ஒருவேளை மீண்டும் என்னை போலந்து நாட்டுக்குள் வர அனுமதி மறுத்துவிட்டால்... என்று தனுடா, தன் கணவன் சார்பில் நோபல் பரிசு பெற்றுக் கொள்வார். (பர்மாவில் ராணுவத்தை எதிர்த்து புரட்சி செய்த சுங்வீ-க்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது இதே காரணத்திற்காக அவர் போகாமல் அவரது மகன் பரிசை வாங்குவார்)

நோபல் பரிசு பெற்றுக்கொண்டு திரும்பி வரும் தனுடாவை ஏதாவது கடத்தி வருகிறாரா என்று சந்தேகித்து சுங்க அதிகாரிகள் அவரது உடைகளை களையவைத்து நிர்வாணமாக்கி சோதனை செய்வது சரித்திரத்தில் ஒரு அவமானம்.

ஒரு நாட்டின் தலைவருக்கு உரிய அந்தஸ்து அளித்து, அமெரிக்க பார்மென்ட்டில் அவர் உரையாற்ற ஏற்பாடு செய்வது, சுதந்திரம் என்பது மனிதனின் உரிமை என்று தனது உரையை முடிக்கும்போது அனைவரும் கை தட்டி பாராட்டுவதுடன் படம் முடிகிறது.

புகழ்பெற்ற போலந்து இயக்குனர், கெளரவ ஆஸ்கர் விருது பெற்றவர். ஐரோப்பிய சினிமா விருதுகள் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆன்ட்ரோ வாஜ்டா, இந்தப்படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.

உலகமெங்கும் பாட்டாளி வர்க்கம் இந்தப்படத்தை போற்றும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by krishnaamma on Wed Nov 27, 2013 6:57 pm

விவரமாய் , விளக்கமாய் நிறைய எழுதி இருக்கீங்க, நிதானமாய்த்தான் படிக்கணும் சிவா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Wed Nov 27, 2013 6:58 pm

வரா ஏ பிளசிங் விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!

பூடான் - அமெரிக்கா ஹாங்காங் தயாரிப்பாக வெளிவந்திருக்கும் இந்த வரா படம் 96 நிமிடங்கள் ஓடும் படமாக வெளிவந்துள்ளது. வரா(தமிழில் வரம் என்பது பொருத்தமாக இருக்கும்). ஆங்கில படத்தின் முதல் சிறப்பு இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் முழுநேர புத்தமத குரு, பகுதிநேர சினிமா இயக்குனர் கையன்ட்ஸே நோர்பு. புத்தமதம் பற்றி பிடித்துவிட்டு, அமெரிக்காவில் அரசியலும், சினிமா பற்றியும் படித்திருக்கிறார். லிட்டல் புத்தர் என்ற படத்தின் தயாரிப்பில் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார்.

இந்தியாவில் காட்டு பகுதி கிராமத்தில் நடைபெறும் கதை. வினிதா, அந்த கிராமத்து கோவிலில் நடனமாடும் தேவதாசி. லீலா, அவரது அழகிய மகள், நல்ல டான்ஸர். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞன் ஷாம் சிற்பியாக ஆக வேண்டும் என்ற ஆசைப்படுகிறான். முஸ்லீம் முதியவர் அவனுக்கு சிற்ப கலை பயிற்சி அளிக்கிறார். சரஸ்வதி சிலை உருவாக்க, லீலாவை மாடலாக பயன்படுத்துகிறான். கிராமத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்துவிட்டால் ஆபத்து என்று தெரியும், இருந்தாலும் சிலை வடிக்கிறான். அந்த சிலை முடியும் தருவாயில் ஜாதி வெறியர்கள் சிலை உடைத்து விடுகிறார்கள். முஸ்லிம் முதியவர் அதற்கு முன்பாகவே சிலையை வடிக்க உதவியதற்காக தாக்கப்படுகிறார்.

சிலைக்கு போஸ் பண்ணும் போது லீலாவும், ஷாமும் உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார்கள். தான் கர்ப்பமாக இருப்பதை லீலா உணர்ந்து கொள்கிறாள். கிராமத்தின் ஜமீன்தாரின் மகன், லீலாவின் அழகில் மயங்குகிறான். தான் கர்ப்பமானதை மறைத்து ஜமின்தாரின் மகனை, லீலா மணக்கிறாள்.

லீலாவின் பாத்திரத்தை தத்ரூபமாக நடிகை ஷஹானா கோஸ்வாமி வாழ்ந்து காட்டுகிறார். மறக்க முடியாத எக்ஸ்பிரஸிவ். உணர்ச்சிகளை கொட்டும் கண்கள், செதுக்கி வைத்த முகம். தமிழ்த்திரைப்படத்துறைக்கு நடிப்பு திறமை உள்ள ஒரு கதாநாயகி ரெடி. காட்டில் உள்ள கிருஷ்ணன் சிலை முன்பு பல காட்சிகள் கிருஷ்ணனை நண்பராக, காதலனாக பாவிக்கிறாள். உரிமையாக கிருஷ்ணனுடன் பேசுவது, ஜமீன்தார் வீட்டில் டிவியில் பார்த்த சினிமா குத்து டான்ஸை கிருஷ்ணனுக்கு ஆடி காண்பிப்பது. (தியேட்டரில் பயங்கர கைதட்டல்). பாடல் காட்சிகளில் டான்ஸ் மூவ்மென்ட் எவ்வளவு செய்ற்கையாக நம் படங்களில் இருக்கிறது என்பதை விளக்குகிறது). குழந்தை தனமாக கிரிக்கெட் ஆடுவது என்று பல காட்சிகளை குறிப்பிட்டு சொல்லலாம்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் கடவுள் கிருஷ்ணன் மீது பக்திப் பாடல்களுக்கு, லீலா உள்பட பல இளம் பெண்கள் பரத நாட்டியம் ஆடும் காட்சிகளும் ரசிக்கத்தக்கவை.

பசுமையான சூழ்நிலையும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் ப்ராட் போர்டு யங்கின் போட்டோகிராபி, நிதின் சாஹ்னியின் இசையும் பிரமமாதம். ஜமீன்தாரின் மகனுடன் தனக்கு திருமணம் ஆவதற்கு முன்பு, ஷாமை சந்திக்கு லீலா அவனிடம் பேச விழைகிறாள், முயற்சிக்கிறாள். அதற்குள் ஷாம் போய்விடுகிறான். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீ தான் தகப்பன், வேறு வழியின்றி (ஜாதி பேதம்) ஜமீன்தார் மகனை மணக்கிறேன் என்று சொல்லிவிட வேண்டும் என்று துடிப்பாள். ஆனால் அது நடக்காது. அத்துடன் படம் முடிகிறது.

இந்திய கிராமிய பின்னணியில் எளிமையான படத்தை உருவாக்கிய நோர்புவை பாராட்டலாம். தேவதாசி, பிற்படுத்தப்பட்ட ஜாதி மீது அருவருப்பு எல்லாம் இன்னும் இருக்கின்றனவா? என்பது கேள்விக்குறி.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by ayyasamy ram on Wed Nov 27, 2013 7:44 pm

வரா ஏ பிளசிங் படத்தில் ஒரு காட்சி
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33652
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by ayyasamy ram on Wed Nov 27, 2013 7:54 pm


சுனில் கங்கோபாத்யா
-
7 September 1934 - 23 October 2012 (aged 78)
-

--
இவரால் எழுதப்பட்ட சிறுகதை Rakta Aar Kanna-ன்
திரைப்பட வடிவமே Vara, A Blessing என்பதாகும்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33652
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by ayyasamy ram on Wed Nov 27, 2013 8:00 pm

வாலெஸா - மேன் ஆப் ஹோம் படத்தில் ஒரு காட்சி
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33652
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Thu Nov 28, 2013 11:16 am

தொடர் விளக்கங்களுக்கு நன்றி ஐயா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Thu Nov 28, 2013 11:17 am

ஆஸ்கர் விழாவில் அந்த 3 விநாடிகள்...!! கோவா விழாவில் பாம்பே ஜெயஸ்ரீ நெகிழ்ச்சி!!

பிரபல கர்நாடக இசை கலைஞரும், தமிழில், சுட்டும் விழி சுடரே... வசீகரா... போன்ற சில சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருப்பவரும், ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட ஒரே இந்திய பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, 44வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில், சினிமாவில் இசை என்பது பற்றி மாஸ்டர் கிளாஸ் என்ற நிகழ்ச்சியில் பேசினார். இசைப்பிரியர்களின் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக இது இருந்தது. அவர் பேசியதிலிருந்து இதோ...

* பாம்பே ஜெயஸ்ரீ என்ற பெயர் எப்படி வந்தது?

பொதுவாக கர்நாடக இசை கலைஞர்கள் தங்கள் ஊர் அல்லது குடும்பத்தின் பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது வழக்கம். கோல்கட்டாவில் நான் பிறந்தாலும், பம்பாயில் தான் வளர்ந்தேன். என் பெற்றோர்கள் தான் எனக்கு முதல் குரு. பிறகு பாலா மணி என்பவரிடமும், சென்னைக்கு வந்து வயலின் மேதை லால்குடி ஜெயராமனிடமும் இசை பயின்றேன். லால்குடி ஜெயராமன் பிரபல வயலின் வித்துவானாக இருந்தாலும், நன்றாக பாடுவார். இசைக் கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் நிறைய பேர் நன்றாக வாய்ப்பாட்டும் பாடுவார்கள். நான் பம்பாயிலிருந்து சென்னைக்கு இசை கற்றுக் கொள்ள வந்தவள். ஒரு விமர்சகர் என்னை பாம்பே ஜெயஸ்ரீ என்று குறிப்பிட்டு எழுதினார். பின்னாளில் அந்த பெயரே நிலைத்து விட்டது.

* திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு எப்படி வந்தது?

இளையராஜா சார் தான் எனக்கு படங்களில் பாடும் வாய்ப்பு முதலில் கொடுத்தார். அவர் ஒரு ஜீனியஸ். பல்கலைக்கழகம் என்றே சொல்லலாம். அவ்வளவு ஞானம். எப்படி வார்த்தையை அழுத்தமாக பாடவேண்டும், எப்படி உணர்வு கொண்டு வர வேண்டும், பாடும்போது எப்படி மூச்சுவிட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். வியட்நாம் காலனி என்ற படத்தில் கையில் வீணையை ஏந்தும் கலைவாணியே... என்ற பாடல். பிஹாக் ராகத்தில் அமைந்த பாட்டு. படத்தின் ஆரம்பத்தில் டைட்டீலில் வரும்போது அந்தபாட்டு வரும். அந்தப்பாட்டு பெரிய ஹிட் ஆகவில்லை.

சென்னைக்கு வருவதற்கு முன்பு, பம்பாயில் பள்ளி, கல்லூரி மாணவியாக பல விளம்பர பாடல்கள்(ரேடியோ, டி.வி.,) பாடியிருக்கிறேன். இருபது வினாடிகள் மட்டுமே வரும் பாடல்கள். ரெக்ஸோனா, பாண்ட்ஸ், ட்ரீம்ப்ளவர் டால்கம் பவுடர் போன்ற விளம்பரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் போன்ற பல மொழிகளில் பாடியிருக்கிறேன். மொழிக்கு மொழி தனித்தன்மை உண்டு. அவற்றை அறிந்து கொண்டேன். நிகழ்ச்சியின் போது அந்த விளம்பர பாடல்களை பாடியும் காண்பித்தார்.

* ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வசீகரா பாடல் பாடியது பற்றி?

ஹாரிஸ் ரொம்ப ஹாப்பி மியூசியன். மின்னலே படத்தில் முதன்முறையாக நான், ஹாரிஸ், தாமரை மூவரும் ஒன்று இணைந்தோம். பிறகு மீண்டும் கஜினி படத்தில் சுட்டு விழிச் சுடரே... என்ற பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆகி பாப்புலராகிவிட்டன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Thu Nov 28, 2013 11:18 am


* லைப் ஆப் பை படத்தில் பாடியது பற்றி?


16 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மகன் பிறந்தான். அவனுக்கு என் அம்மா, பாட்டி பாடிய மற்றும் நிறைய சினிமா பாடல்கள் எல்லாம் பாடி தாலாட்டு பாடுவேன். ஒரு நண்பரின் தூண்டுதலின் பேரில் வாத்ஸல்யம் என்ற ஆல்பம் பண்ணினேன். தாய், குழந்தை இடையே உள்ள பிணைப்பு பாசம் தான் அந்த ஆல்பம். மற்றொரு நண்பர் மூலமாக டைரக்டர் ஆங்லீ-யின் தொடர்பு கிடைத்தது. உலகப் புகழ் பெற்ற இயக்குனர் ஆங்லீ படத்தின் கதையையும், பாட்டின் பின்னணியையும், பின்னர் பை வளர்ந்த பிறகு தனியாக கடலில் இருக்கும்போது தாய் பாசத்தை உணர்த்த வேண்டும் என்பதையும் விளக்கினார். நான் எழுதிய அந்த தாலாட்டு பாடலை பாடினேன். ஆங்லீக்கு பரிபூரண மகிழ்ச்சி.பாடலை பம்பாயில் ரெக்கார்டிங் செய்தார். லாஸ் ஏஞ்சல் நகரிலும் அந்த பணி தொடர்ந்தது. லைப் ஆப் படத்தை ஆமதாபாத்தில் சென்று பார்த்தபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது. இயக்குநர் ஆங்லீ, கனடாவை சேர்ந்த இசை அமைப்பாளர் மைக்கேல் டானா, சென்னையை சேர்ந்த நான், எங்களின் மூவரது காம்பினேஷன் நன்றாக ஒர்க்-அவுட்டானது. ஆங்லீக்கு தமிழ் புரியாவிட்டாலும் எனது குரல் எந்த இடத்தில் சாப்ட்டாக இருந்தது, எங்கு லவுடாக இருந்தது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.

* நீங்கள் பாடிய அந்தப்பாடல் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டபோது எப்படி இருந்தது?

என்னால் முதலில் நம்ப முடியவில்லை. டி.வி.யில் செய்தியை கேட்டதும் அவ்வளவு மகிழ்ச்சி. ஆஸ்கர் பரிசளிப்பு விழாவிற்கு சென்றது மறக்க முடியாத அனுபவம். சிறந்த பாடல், சிறந்த பாடகிக்கான பரிசு வேறு ஒருவருக்கு அறிவிக்கப்பட்டபோது மூன்று விநாடிகள் மட்டுமே வருத்தமாக இருந்தது. பின்னர் அந்த எண்ணம் மாறி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்ப்பாடல் ஒன்று ஆஸ்கருக்கு சிபாரிசு செய்யப்பட்டு கெளரவத்தை கொண்டு வர முடிந்தது என்று எண்ணியபோது மிகவும் பெருமையாக இருந்தது. ஆங்லீ, மைக்கேல் டானா இருவருக்கும் மனமார நன்றிகளை கூறிக் கொள்கிறேன் என்றார்.

பாம்பே ஜெயஸ்ரீ, விரைவில் வெளிவர இருக்கும் யான் படத்திலும் மற்றும் புதிய இந்தி படத்திலும் பாடியிருக்கிறார். பதினெட்டு திரைப்பட பாடல்கள் மட்டுமே அவர் பாடியிருந்தாலும், அவற்றில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பாம்பே ஜெயஸ்ரீ பேசும்போது மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் சரியாக இல்லாததால் பார்வையாளர்களுக்கு அதிக இரைச்சலையும், சத்தத்தையும் கொடுத்தது. இதனால் அரங்கில் சிறிது சலசலப்பு நிலவியது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Thu Nov 28, 2013 11:18 am

ரசிகர்களின் அன்புக்கு நன்றி - கோவா படவிழாவில் கமல் பேச்சு

44வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் 20ம் தேதி கோலகலமாக துவங்கியது. துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசனை பேச அழைக்கும்போது எனக்கும், அவருக்கும் ஒரே குடும்பம். ஒரே ஜீன்கள், ஒரே டி.என்.ஏ., அவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், ஏழு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து எல்லா மொழிகளிலும் தானே டப்பிங் பேசி சாதனை ஏற்படுத்தியிருப்பவர், தமிழ் கவிதைகள் எழுதுபவர், போட்டோகிராபர், வயலின், மிருதங்கம், போன்ற இசை கருவிகளையும் இசைக்க தெரிந்தவர், தனது நான்காவது வயதில் ஜனாதிபதியிடம் விருது பெற்றவர், நான்கு முறை தேசிய விருது பெற்றவர் என்று கமலை பற்றி சிறப்பாக அறிமுகப்படுத்தினார் நடிகை சுஹாசினி.

கமல் பேசும்போது, என்னைப்பற்றி பல ரகசியங்களை சொல்லி அறிமுகப்படுத்தினார். இப்போது அவருக்கு தெரியாத ரகசியம் ஒன்றை சொல்லுகிறேன். அவர் சொன்ன இசைக்கருவிகளை எல்லாம் பயிற்சி எடுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவற்றை வாசிப்பதை விட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாக்களில், 30 திரைப்பட விழாக்களுக்கு நான் சென்றிருக்கிறேன். முதலில் நிறைய நேரம் இருந்தது. ஆனால் டில்லி சென்று விழாவில் கலந்து கொள்ள போதுமான பணம் இருக்கவில்லை. பின்னர் பண வசதி வந்தது. ஆனால் விழாக்களில் பங்கேற்க நேரம் கிடைப்பதில்லை. 1974-ல்(37 ஆண்டுகளுக்கு முன்பு) இந்திய திரைப்பட விழாவில் என்னை சிறப்பு விருந்தினராக கூப்பிடபோகிறார்கள் என்று யாராவது சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

எனது மூன்றரை வயதில் சினிமாவிற்கு வந்தேன். பள்ளிக்கு கூடம் சென்றது கிடையாது. அன்றிலிருந்து இன்றும் ரசிகர்களின் ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அன்புக்கு நான் என்ன சொல்ல முடியும்? நன்றியை தவிர. எனது மகா குரு, செக் நாட்டின் பிரபல இயக்குனர் ஜிரி மென்ஜெல்(இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறவர்) இங்கு இருக்கிறார். அவரிடமிருந்து நான் அறிந்தவை பல. எனது படங்களிலும் அவற்றை காணலாம். அவர் இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திரைப்படத்துறையில் இன்று நான் பெற்றுள்ள இந்த இடத்திற்காக உலக சினிமாவிற்கு என் நன்றியை கூறுகிறேன்.

இவ்வாறு கமல் பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Thu Nov 28, 2013 11:19 am

44வது கோவா சர்வதேச திரைப்பட விழா: துவக்க விழா நிகழ்ச்சி துளிகள்...!!

* மூன்று கோடி ரூபாய் செலவில் பானாஜி நகரில், கம்பல் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் உருவாக்கப்பட்ட தற்காலிகமான அமைப்பில் 44வது கோவா சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது.

* மூன்று முறை தேசிய விருதுகள் பெற்றுள்ள இந்தி நடிகர், இயக்குனர் ரஜத் கபூர், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை சுஹாசினி இருவரும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். எனக்கு 15 வயதிலிருந்தே திரைப்படம் பண்ண ஆசை, இன்று சர்வதேச திரைப்பட விழாவில் நிகழ்ச்சியை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என்றார் சுஹாசினி.

நான் நான்கு மொழிகள் நன்றாக பேசுவேன். (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) ஆனால் இங்கிலீஷ் அவற்றில் இல்லை. ஏதாவது குறை இருந்தால் சினிமா மீது எனக்குள்ள தீவிர ஈடுபாடு அதை பேலன்ஸ் செய்து விடும் என்று ஆரம்பித்தார் சுஹாசினி.

* மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் மனீஷ் திவாரி, கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், நடிகை வஹீதா ரஹ்மான், ஹாலிவுட் நடிகை சூசன் ஸரண்டன், பிரபல ஈரானிய டைரக்டர் மஜித் மஜிதி, உலகநாயகன் கமல் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்கள். சினிமாவின் இதயமே விளக்கு தான் என்றார் அமைச்சர் திவாரி. மேலும் இந்தியா 39 மொழி திரைப்படங்களை தயாரிக்கிறது என்று பெருமைப்பட கூறினார்.

* டெட் மேன் வாக்கிங் படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை சூசன் ஸரண்டன், நிறைய இந்திய படங்களை பார்க்கவில்லையே என்று வருத்தம் தெரிவித்தார்.

* நடிகை ரேகா, நடிகை ரிது பர்னா சென்குப்தா, ராணி முகர்ஜி, வெங்கடேஷ், மாதவன், தீப்தி நாவல், நானா படேகர், ராணா டகுபதி, ரம்யா, ஜாக்கி ஷெராப் ஆகியோர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.

* வெளிர் மஞ்சள் நிற பட்டுப் புடவை அணிந்திருந்த நடிகை ரேகா, வஹீதா ரஹ்மான், ஆஷா பாஸ்லே இருவரின் கால்களையும் தொட்டு வணங்கினார்.

* விழாவில் பிரபல கதக் நிபுணர் பிஜூ மஹாராஜ் குழுவினரின் கதக் நடனம், மிகவும் சிறப்பாக இருந்தது. 7 பெண்கள், 7 இளைஞர்கள் கண்களை பறிக்கும் வகையில் வண்ண வண்ண உடைகளில் நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். பகீஸா, ஷத்ரஞ்ச் கே கிலாடி, தேவதாஸ், விஸ்வரூபம் - தமிழ், இந்தி படங்களில் வரும் கதக் நடன காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டு, இளம் கலைஞர்கள் மேடையில் அதே நடனத்தை ஆடினார்கள். விஸ்வரூபம் கமல் படம் திரையில் வந்தபோது பயங்கர கைதட்டல்.

* நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விஷேச விருது வழங்கிய போது, அவர் நடித்த கெய்டு, சி.ஐ.டி., பியாஸ்ஸா தீஸ்ரி கசம், காமோஷி, லம்ஹே போன் படத்திலிருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. வஹீதா ரஹ்மான் விருது பெற்றபோது அரங்கமே எழுந்து நின்று நீண்ட நேரம் கரகோஷம் செய்தார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Thu Nov 28, 2013 11:19 am

90 வயதானாலும் பாடுவேன் - கோவா படவிழாவில் ஆஷா போஸ்லே பேச்சு!!

முக்கிய விருந்தினராக 44வது கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவை, விழாவில் பேச அழைத்தார்கள். அவர் பேசுகையில், கோவா எங்களுக்கு சொந்த ஊர் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். என் தந்தை திரு மங்கேஷ்கர், தனது பத்து வயதில் நடிப்பதற்காக மும்பைக்கு வந்துவிட்டார். பத்து வயதில் நான் பாட ஆரம்பித்துவிட்டேன். எனக்கு வயது இப்போது எண்பது வயது. எழுபது வருடங்களாக பாடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் பத்து வருடங்கள் தொடர்ந்து, எனக்கு 90 வயது ஆனாலும் கூட பாடுவேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என்று பேசினார்.

தனது மூத்த சகோதிரி லதா மங்கேஷ்கரை பின்பற்றி நிறைய திரைப்பட பாடல்களை பாடி சாதனை படைத்திருக்கிறார் ஆஷா போஸ்லே என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Thu Nov 28, 2013 11:20 am

விருது கிடைத்தது பெருமை - கோவா விழாவில் வஹீதா ரஹ்மான் பேட்டி!!

பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற மத்திய அரசின் மிக உயர்ந்த விருதுகளால் கெளரவிக்கப்பட்டிருக்கும் பிரபல நடிகை வஹீதா ரஹ்மான், இந்திய சினிமா நூற்றாண்டு விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் ஆவர். தமிழகத்தில் பிறந்த இவர் இந்தியில் திலீப்குமாருடன் ராம் ஒளர் ஷ்யாம், தேவ் ஆனந்துடன் கெய்டு, குரு தத்துடன் பியாஸா, காகஜ்கா பூல், ஹாஹிப் பீபீ ஓளர் குலாம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். சிறந்த நடிப்பு திறமை உள்ள அழகி என்று பாராட்டப்பட்டவர்.

மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் மனீஷ் திவாரி, இந்திய திரைப்பட துவக்க விழா அன்று அளித்த விருந்தில் பங்கேற்ற வஹீதா ரஹ்மான், தினமலருக்கு பிரத்யேக பேட்டியளித்தார். பேட்டின்போது தமிழில் நிறைய பேசி, கொஞ்சம் ஆங்கிலம் பேசி நம்மை வியக்க வைத்தார். அவரது பேட்டி இதோ...

* தமிழ்பேசும் குடும்பத்திலிருந்து வருபவர் என்று துவக்க விழாவில் உங்களை அறிமுகம் செய்து வைத்தார்களே... அதைப்பற்றி?

அது முழுமையாக சரி இல்லை. நாங்கள் உருது பேசும் குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் தந்தையின் பணி காரணமாக சென்னை, ஈரோடு, கும்பகோணம், விஜயவாடா, ஐதரபாத், பாலக்காடு போன்று பல நகரங்களில் வாழ்ந்திருக்கிறோம். தமிழ் எனக்கு நன்றாக பேச வரும், இப்போது கொஞ்சம் குறைவு (சிரிக்கிறார்). சென்னையில் ஆழ்வார்பேட்டை, தி.நகர் போன்ற ஏரியாக்களில் சில காலம் வசித்து வந்தோம்.

* தெலுங்கு திரை உலகில் அறிமுகமானது பற்றி...?

பள்ளியில் படிக்கும்போதே திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் (பரதநாட்டிய குழு) பரதநாட்டியம் பயின்றேன். எனது நடன நிகழ்ச்சியை பார்த்து ஒரு பிரமுகர், பிரபல இயக்குநர் தாபி சாணக்யாவிடம் என்னைப்பற்றி கூறியிருக்கிறார். தாபி சாணக்யா, ரோஜூலு மாராயி என்ற தெலுங்கு படத்தில் ஒரு நாட்டுப்புற பாடலுக்கு நடனமாட வைத்தார். படத்தில் ஹீரோ, ஹீரோயினாக ஏ.நாகேஸ்வரராவ், செளகார் ஜானகி நடித்தார்கள். படம் பெரிய ஹிட்டானது. காலம் மாறிப் போச்சு என்ற பெயரில் தமிழில் இப்படம் ரீ-மேக்கானது. நானும் நடிகையாகிவிட்டேன். பின்னர் ஒன்றே குலம் என்ற தமிழ்ப்படத்திலும், ஜெயசிம்ஹா என்ற தெலுங்கு படத்திலும்( என்.டி.ராமராவ், அஞ்சலி தேவியும், நானும் கதாநாயகிகள்)

ஜெயசிம்ஹா படத்தின் வெள்ளிவிழா, ஐதராபாத்தில் நடைபெற்றபோது, ஒரு பிரபல டிஸ்ட்ரிபியூட்டர், என்னைப்பற்றி பிரபல இந்தி இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் குரு தத்ஜியிடம் சொல்லியிருக்கிறார். நான் உருது பேசும் குடும்பத்திலிருந்து வருபவள் என்பது மேலும் செளகரியமாகிவிட்டது. குரு தத், அவர் தயாரிக்கும் சி.ஐ.டி. படத்தில் தேவ் ஆனந்துடன் என்னை கதாநாயாகியாக அறிமுகப்படுத்தினார். பிறகு அவருடன் பியாஸா தொடர்ந்து நான் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றதால் காகஜ் கா பூல், ஹாஹிப் பீபீ, ராம் அவுர் சாம், சாகிப் பீபீ அவுர் குலாம் போன்ற பல படங்களில் நடித்தேன்.

* தமிழ்ப்படங்கள் பார்க்கிறீர்களா...?

நிறைய தமிழ்ப்படங்களை பார்க்க ஆசை தான். மும்பையில் அவ்வளவாக பார்க்க முடிவதில்லை. கமல்-ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படம் பார்த்து அசந்து போனேன். இருவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். கமலுக்கு அந்த படத்திற்காக இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அதேப்போல் காக்க காக்க படம் பார்த்தேன். நல்ல அருமையான படம். இப்போதெல்லாம், தமிழிலும், மலையாளத்திலும் நல்ல புதிய கருத்துள்ள படங்கள் வருகின்றன. திரைப்படத்துறைக்கு இது நல்ல விஷயம்.

* விஸ்வரூபம்-2 படத்தில் நடிப்பது பற்றி...?

விஸ்வரூபம்-2 படத்தில் கமலுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் என்னை அழைத்ததற்காக கமலுக்கு நன்றி. அந்தபடத்தில் நடித்தது நல்ல மகிழ்ச்சியான அனுபவம். இந்தபடத்திற்கு தமிழில் டப்பிங் நான் தயார், ஆனால் அதை கமல் தான் முடிவு செய்ய வேண்டும்.

* தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தீர்களா...?

அவரை சந்தித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நாங்களெல்லாம் நடித்து கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., நாகேஷ், ஜெயலலிதா, பி.சுசீலா, சசிகபூர் நான் மற்றும் பலரும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அழைப்பில் அங்கு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். பசுமையான நினைவுகள். ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்கள்.

* இன்று இந்த விஷேச விருது பெற்றது குறித்து...?

எனக்கும் மிகவும் பெருமையாக இருக்கிறது. அதேசமயம் அடக்கமாகவும் இருக்க செய்கிறது. எனக்கு இந்த விருது கிடைத்ததற்கு நிறைய பேர்களுடைய ஒத்துழைப்பு முக்கிய காரணம். எனது டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் உடன் நடித்தவர்கள், காஸ்ட்யூம் டிஸைனர்கள், மேக்கப் மேன்கள், இவர்கள் ஒத்துழைப்பும், உதவியும் இல்லாமல் ஒரு நடிகையாக எதையும் நான் சாதித்திருக்க முடியாது. அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இவரது நேர்மை பாராட்டுக்குரியது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Thu Nov 28, 2013 11:21 am

சஞ்சய் தத் படங்களை கூட இனி பார்க்க மாட்டேன் : நானா பட்டேகர் கோபம்!!

கோவாவில் 44வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த விழாவில் இந்திய திரையுலகில் இருந்து மட்டுமல்லாது வெளிநாட்டை சேர்ந்த திரையுலகினரும் பங்கேற்று உள்ளனர். விழாவில் பிரபல நடிகர் நானா பட்டேகரும் கலந்து கொண்டார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தில் பிரபல திரைப்பட இயக்குநராக நடித்து, அந்த கேரக்டரில் வாழ்ந்து காட்டியவர் நானா படேகர். விழாவில் தினமலருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்த அனுபவம் பற்றி...?

பாரதிராஜா ஒரு அமேஸிங் டைரக்டர். அந்தப்படத்தில் இயக்குனர் பாத்திரத்தை உருவாக்கியதற்கே அவரை பாராட்ட வேண்டும். டைரக்ஷ்ன் துறையில் உள்ள நெளிவு சுழிவுகளை நன்றாக கரைத்து குடித்தவர். அவர் ஷூட் பண்ணும்போதும், எடிட்டிங் செய்யும் போதும் தனித்தன்மையோடு செயல்படுகிறார். எடிட் பண்ணி முடித்ததும் சிறப்பாக வந்திருப்பதை காண முடியும். படம் முடித்த பிறகு அவருடன் நான் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது, பிரமிப்பாகவும் இருந்தது. திரைப்படங்களில் புதுமைகள் செய்வதில் அவர் வல்லவர் என்று எனக்கு தெரியும், நேரிலும் பார்த்திருக்கிறேன். சில இடங்களில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. ஆனாலும் பாரதிராஜா அவரது எண்ணங்களை எனக்கு விளக்கி என்னை சமாதானம் செய்தார். மொத்தத்தில் பொம்மலாட்டம் படத்தில் பணிபுரிந்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி என்றார்.

* மீண்டும் தமிழ்படங்களில் நடிப்பீர்களா...?

தமிழ் திரைப்படத்தில் நிறைய திறமையுள்ள புது இளைஞர்கள் மாறுபட்ட படங்களை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று அறிகிறேன். தமிழ்படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். ஆனால் இரண்டு நிபந்தனைகள். ஒன்று முதலில் கதையை எனக்கு தர வேண்டும், அதை முழுவதும் நான் புரிந்து கொள்ள வேண்டும், இண்டாவது எனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஒரு தமிழ் டீச்சரை ஏற்பாடு செய்ய வேண்டும். என வசனங்களை நன்றாக புரிந்து கொண்டு நானே டப்பிங் பேச விரும்புகிறேன். இதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால் தமிழ் படங்களில் நடிக்க தயார்.

* பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தது குறித்து...?

நடிகர் சுனில் தத் மரியாதைக்குரியவர். நல்ல மனிதர், நல்ல நடிகர். அவர் மகன் சஞ்சய் தத், தீவிரவாதிகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை விதித்திருக்கிறது. பகுதி தண்டனையை அவர் ஏற்கனவே அனுபவித்து விட்டார், இன்னும் ஒரு பாதி தண்டனை பாக்கி இருக்கிறது. அவருக்கு சலுகைகள் தர வேண்டும், தண்டனையை குறைக்க வேண்டும் என்று பலரும் திரைப்படத் துறையை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் கேட்கிறார்கள். சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் தானே! சட்டத்தில் வி.ஐ.பி., சாமானியர் என்று வித்தியாசம் கிடையாது. தனிப்பட்ட முறையில் சஞ்சய் தத்திற்கும், எனக்கும் விரோதம் கிடையாது. ஆனாலும் அவருக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவரோடு படங்களில் நடிக்க மாட்டேன், அவர் படங்களை பார்க்க மாட்டேன் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இவ்வாறு நானா பட்டேகர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by சிவா on Thu Nov 28, 2013 11:22 am

44வது சர்வதேச திரைப்பட விழா : கோவாவில் கோலாகலமாக துவங்கியது!!

44வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கோலாகலமாக துவங்கியது. பிரத்யேமாக உருவாக்கப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட விஷேச இடத்தில் நடைபெற்று வரும் இவ்விழாவின் துவக்க நாளில் சிறப்பு அழைப்பார்களாக நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகை ரேகா, பிரபல பின்னணி பாடகி ஆஷா போன்ஸ்லே ஆகியோருடன் அகடாமி விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை சூசன் சாரடனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பிரபல ஈரானிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மஜித் மஜிதியும், போலாந்து நாட்டை சேர்ந்த இயக்குநர் அக்னீஸ்காவும் கலந்து கொண்டனர்.

விழாவினை மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து கமல், வஹீதா, ஹாலிவுட் நடிகை சூசன் சாரடன், ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியும் குத்துவிளக்கு ஏற்றினர்.

326 படங்கள் திரையீடு

இந்தாண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சுமார் 76 நாடுகளில் இருந்து 326 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட பதினைந்து படங்களும் அடங்கும்.

தமிழில் தங்கமீன்கள் திரையீடு

இந்தியன் பனோரமா பிரிவில் 26 திரைப்படங்களும், 16 குறும்படங்களும் திரையிடப்படுகிறது. 6 மலையாள படங்கள், 5 வங்காள படங்கள், 5 இந்தி படங்கள், 3 மராத்தி படங்கள், 3 ஆங்கில படங்கள், கன்னடம், ஒரியா, கொங்கனியில் தலா ஒரு படமும், தமிழில் ராம் இயக்கிய தங்கமீன்கள் படமும் இடம்பெறுகின்றன.

வஹீதா ரஹ்மானுக்கு கவுரவம்

44வது திரைப்பட விழாவில், தமிழகத்தில் பிறந்து, இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்த பிரபல இந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு, இந்திய அரசால் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்திய சினிமாவின் நூற்றாண்டு விருதும், ரூ.10 லட்சம் ரொக்க பரிசும் இந்த விழாவில் வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறது. ஐந்து நடிகைகள் அடங்கிய குழு, நீண்ட விவாதத்திற்கு பிறகு வஹீதா ரஹ்மானை இந்த விருதுக்கு தேர்வு செய்தது. வஹீதா இந்தியில், சி.ஐ.டி., பியாசா, கைடு, காஹஜ்கா பூல், ராம் அவுர் சாம், உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். மேலும் இந்த விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது செக் நாட்டை சேர்ந்த பிரபல இயக்குநர் ஜிரி மென்ஸிலுக்கு வழங்கப்பட இருக்கிறது. மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் மனிஷ் திவாரி இந்த விருதை வழங்குகிறார்.

துவக்க விழாவில் பிரபல கதக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ் குழுவினரின் கதக் நடன நிகழ்ச்சி 30 நிமிடங்கள் நடைபெற்றது. துவக்க விழாவின் முதல்படமாக ஜிரி மென்ஸில் இயக்கியுள்ள டான் ஜூவான்ஸ் படம் திரையிடப்பட்டது. விழாவினை பிரபல இந்தி நடிகர் ரஜத் கபூர் மற்றும் நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கினர்.

கோவா திரைப்பட விழா பரிசுகளின் விபரங்கள்

* 44வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்படும் படத்திற்கு ரூ.40 லட்சம் பரிசாக வழங்கப்படும். இயக்குனரும், தயாரிப்பாளரும் தலா ரூ.20 லட்சம் பெற்று கொள்வர். இயக்குனருக்கு தங்க மயில் விருது கொடுக்கப்படும்.

* சிறந்த நடிகருக்கு ரூ.10 லட்சம் பணம் ப்ளஸ் வெள்ளி மயில் விருது ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

* சிறந்த நடிகைக்கு ரூ.10 லட்சம் பணம் ப்ளஸ் வெள்ளி மயில் விருது ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

* சிறந்த இயக்குனருக்கு ரூ.15 லட்சம் பணம் ப்ளஸ் வெள்ளி மயில் விருது ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

* நடுவர் குழுவின் சிறப்பு விருது - ரூ.15 லட்சம் பணம் ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

* வாழ்நாள் சாதனையாளர் விருது - ரூ.10 லட்சம் பணம் ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

* சினிமா நூற்றாண்டு விருது - ரூ.10 லட்சம் பணம் ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

எஸ்.ரஜத் @ தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by ayyasamy ram on Thu Nov 28, 2013 11:28 am

திரைப்பட ரசிகர்களுக்கு பயனுள்ள பகிர்வு... 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33652
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum