ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பேரண்டம்

View previous topic View next topic Go down

பேரண்டம்

Post by கவின் on Thu Nov 28, 2013 10:09 am

பேரண்டம் பற்றி பல வியப்பான தகவல்களை அறிவியல் உலகம் தந்துள்ளது, அவை ஆய்வுகள் என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது, அவற்றை உண்மை என்று அறிவியலாளர்கள் அடித்துக் கூறவில்லை, மாறாக வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்தவை என்றே சொல்கிறார்கள்.

நாம் பெருவெடிப்புப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம், பெருவெடிப்பின் மையம் எங்கே ?

பேரண்டத்தில் மையம் என்பதே கிடையாது, பேரண்டத்தில் எல்லை விளிம்புகள் என்றும் எதுவும் இல்லாத நிலையில் பேரண்டத்தின் மையம் என்று இதுவரை எதுவும் இல்லை. விளிம்புகள் அற்ற நிலையில் பேரண்டம் வளைவானது, உதாரணத்திற்கு மில்லியன் ஒளி ஆண்டுகள் நம்மால் பேரண்டத்தின் ஊடாக அதன் வெற்றிடத்தில் பயணம் செய்தால் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர முடியும். பேரண்டத்திற்கு மையமோ, எல்லையோ கிடையாது

பேரண்டத்தில் பெருவெடிப்பு எங்கே நடக்கும் ?

பேரண்டத்தில் பெருவெடிப்பு பேரண்டத்தின் வெற்றிடத்தில் நடந்து, வெற்றிடத்தில் விரியும் என்பது தவறான கூற்று. காலத் துவக்குமும், வெற்றிடமும், வெளித்திரள்களும் (கேலக்ஸிகள்) பெருவெடிப்பினால் நிகழ்ந்தவை. பெருவெடிப்பிற்கு முன்பு அளவிட முடியாத திணிவும், அளவிட முடியாத வெப்பமும் உள்ள பொருளாகத்தான் பேரண்டம் இருந்தது. அதனுள் ஏற்பட்ட அளவிடமுடியாத அழுத்தத்தினால் பின்னர் வெடித்து சிதறி வெளித் திரள்களையும், வின்மீன்களையும் உருவாக்கி இன்றளவும் (வெற்றிடங்களை விரித்து) விரிந்தே வருயுறது.

பூமியும் பேரண்டத்தின் ஊடாக விரிவடைகிறதா ?

வெளித்திரள்களும், வின்மீன்களும் உருவாகியது பெருவெடிப்பின் விளைவிகள், அதன் பிறகு வின்மீன்களோ அல்லது வெளித்திரள்களோ அல்லது நம் பூமியோ விரிவடைவதில்லை, பேரண்டவிரிவாக்கம் என்பதில் வெளித்திரள்களுக்கு இடையேயான இடைவெளிகள் (வெற்றிடங்கள்) விரிவடைகிறது, வெளித்திரள் (உதாரணத்திற்கு நாம் பால்வெளித் திரள் - மில்கிவே) அதனுள் இருக்கும் வின்மீன்களை இழுப்பு விசையால் அதனுள்ளேயே வைத்திருப்பதால் அவற்றினுள் விரிவாக்கம் ஏற்படுவது கிடையாது, இது பூமிக்கும் சூரியனுக்கும் பொருந்தும், சூரியன் எரிபொருள் அனைத்தையும் எரித்து அளவில் பெரிதாகிவருவது வேறு.

பேரண்டத்தின் வெளியே என்ன இருக்கிறது ?

வெளி அல்லது ஸ்பேஸ் அல்லது வெற்றிடம் என்பவை பெருவெடிப்பினால் ஏற்பட்டவையே, பெருவெடிப்பிற்கு முன்பு வெளி என்பதே இல்லை, எனவே பேரண்டத்திற்கு வெளியே என்ற ஒன்று இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் அது மற்ற பேரண்டத்தின் தொடர்ச்சியாக இருக்கும் (பேரண்டங்களைப் போன்று எல்லையற்ற எண்ணிக்கையில் பேரண்டங்களும் இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்)

பேரண்டத்திற்கு முன்பு என்ன இருந்தது ?

வெளியும், காலமும் பெருவெடிப்பின் விளைவுகள் என்றே நம்பப்படுகிறது, அதற்கு முன்பு என்னவாக இருந்தது என்பதற்கு ஏற்கதக்க விடைகள் அற்ற சூழலில் பெருவெடிப்பு - விரிவாக்கம் - சுருக்கம் என்பவை மாற்றி மாறி நிகழ்ந்தவை என்று நம்பப்படுகிறது, அல்லது நமது பேரண்ட பெருவெடிப்பு வேறு பேரண்டங்களின் ஒன்றில் நடந்த பெருவெடிப்பின் விரிவாக்கத்தில் நிகழ்ந்தவையா என்றும் அறிய முடியவில்லை.

இறுதியாக ஒரு நல்ல கேள்வி, பேரண்டம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தவை என்று நம்பம்படும் பொழுது, நமது பேரண்டத்தினுள் இருக்கும் பல்வேறு கேலக்ஸிகளின் இடைவெளிகள் எப்படி 14 பில்லியன் ஒளியாண்டைவிடத் தொலைவானதாக இருக்க முடியும் ? நமக்குத்தான் தெரியுமே ஒளியைவிட வேகமாக பயணிக்கும் பொருள்கள் எதுவும் கிடையாது, பின்னர் எப்படி இந்த கேலக்ஸிகள் ஒளியைவிட வேகமாக நகர்ந்து அல்லது அவற்றின் இடைவெளிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும் ?

திரள்களுக்கு இடையேயான வெற்றிட(வெளி) விரிவாக்கம் என்பது ஒளியை விட வேகமாக விரிவடைகிறது எவ்வளவு வேகம் என்பது சரியாக கணக்கிடப்படவில்லை, தவிர பெருவெடிப்பின் முன்பு உள் திணிவுகளின் இடையேயான தொலைவும், பெருவெடிப்பின் முன்பான வடிவமும் நமக்குத் தெரியாத நிலையில், பெருவெடிப்பிற்கும் பின்னர் வெளித் திரள்கள் (கேலகிஸிகளின் இடைவெளி) ஒளியைவிட வேகமாக பயணிக்கக் கூடிய தொலைவை அடைந்திருப்பதாக நாம் ஒளி வேகத்துனுடனும் பெருவெடிப்பு நிகழ்ந்ததாக நம்பப்படும் 14 பில்லியன் ஆண்டுகளையும் ஒப்பிட பெருவெடிப்பின் வெற்றிட விரிவாக்க வேகம் ஒளியைவிட விரைவானது என்பது ஒப்புக் கொள்ளத் தக்கதாகும், கேலக்ஸிகளுக்கு இடையேயான இடைவெளி விரிவாக்க விரைவு என்பது அருகில் இருக்கும் கேலக்ஸிகள் நமக்கு மெதுவாக விரிவடைவதாகவும் தொலைவில் இருப்பவை வேகமாக செல்வதாகவும் தெரிவதால் பெருவெடிப்பின் அண்மையில், அதாவது 2 பில்லியன் ஆண்டுகளில் நமது கேலக்ஸி 2 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவை அடைந்திருந்தால் நமது கேலக்ஸிக்கும் நமது கேலக்ஸியை விட்டு விலகிச் செல்லும் மற்றோரு கேலக்ஸிக்கும் இடையேயான தொலைவு ஏற்கனவே இரு மடங்காகி இருக்கும் நிலையிலும் ( 4 பில்லியன் ஒளி ஆண்டுகாக இருக்க) அடுத்த 12 பில்லியன் ஆண்டுகளில் அவை நகரும் (திசை - நோக்கி அல்லது விலகி) 24 பில்லியன் ஒளி ஆண்டைக்காட்டிலும் தொலைவில் தான் இருக்க வாய்ப்புள்ளது. தவிர இந்த வேகத்தை நம்மால் (நமது கேலக்ஸியால்) உணரமுடியாது, ஏனெனில் அதற்கு வெளியே உள்ள வெற்றிடம் தான் விரிவாக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு ஒரு ஊதாத பலூனில் சுற்றிலும் புள்ளிகள் வைத்து அதை ஊத, பலூன் விரிய விரிய ஒரு பக்கத்தில் உள்ள புள்ளிக்களுக்கு இடையான தொலைவும், நகர்வும் அங்கிருந்து பார்க்க மறுபக்கத்தில் உள்ள புள்ளிகளின் தொலை மிகுதியாகவும், நகர்வும் விரைவாகவே இருக்கும்.

பேரண்ட விரிவாக்கத்தின் வினாடிக்கான அளவு என்ன ?

parsec என்ற வானவியல் அளவீடுகளில் கேலக்ஸிகளின் தொலைவுகள் அளக்கப்படுகிறது, ஒரு parsec =  3.26 ஒளி ஆண்டுகள், அதாவது 31 டிரில்லியன் கிமீ தொலைவு, நமது கேலக்ஸிக்கும் பக்கத்து கேலக்ஸிக்குமான தொலைவு 1 parsec இருந்தால் அவற்றின் இடைவெளி விரிவாக்கம் வினாடிக்கு 74 கிமீ. நமக்கு 2 parsec தொலைவில் இருப்பவை அதே வினாடி நேரத்தில் 144 கிமி தொலைவுக்கு நகர்ந்திருக்கும். இந்த நகர்வுக் கணக்கை வைத்து தான் அவை 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அருகில் இருந்ததாகவோ அல்லது பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கக் கூடும் என்கிறார்கள்.

பேரண்டத்தில் இருக்கும் கேலக்ஸிகள் எத்தனை ?

தற்பொழுது அளவிடப்பட்ட பேரண்டத்தின் விரிவு 93 பில்லியன் ஒளி ஆண்டைக் கொண்டது, இதை அவதனிக்கப்பட்ட பேரண்ட (observable universe). விட்டத் தொலைவு என்கிறார்கள். அதற்கும் கூடுதலாகவே இருக்கலாமாம். நமக்கு தொலை நோக்கியால் பாக்க முடிந்த அளவில் உள்ள பேரண்டத்தில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளவை 80 பில்லியன் கேலக்ஸிகள், ஒவ்வொன்றிலும் 100 - 200 பில்லியன் வின்மீன்கள், ஒவ்வொரு வின்மீனுக்கு குறைந்தது ஒரு கோள், அந்த கோள்களுக்கு துணைக் கோள் என்று மிகப் பெரிய பில்லியன் எண்ணிக்கையினுள் இருக்கிறது

கேலக்ஸிகளுக்கு இடையான தொலைவு எப்படி கணக்கிடப்படுகிறது ?

ஒரு ஒளி ஆண்டு தொலைவில் உள்ளதை ஒரு ஒளி ஆண்டு பயணித்து தான் தெரிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணம் பலரிடம் உண்டு,  அது தவறு. ஒளி ஆண்டுகளின் கணக்கு ஒரு கேலக்ஸின் உள்ள வின்மீண்களின் ஒளி அடர்த்தியை வைத்தே கணக்கிடப்படுகிறது, ஒளி அடர்வு பயணம் தொலைவுக்கு ஏற்ற பண்புகளைக் கொண்டு இருப்பதால் குறிப்பிட்ட ஒளி அடர்த்தி கொண்டவை குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் என்ற கணக்கில் அவை அளவிடப் படுகிறது, ஒரே ஒளி அளவைக் கொண்ட அருகில் இருக்கும் மெழுகுவர்த்திக்கும் தொலைவில் இருக்கும் மொழுகுவர்த்தியும் நமக்கு ஒரே அளவான வெளிச்சத்தைக் கொடுப்பது இல்லை. அவற்றின் ஒளி ஆண்டு அளவுகள் வின்மீன் அல்லது கேலக்ஸி அவற்றின் தொலைவுகளைச் சொன்னாலும் அவை அங்கேயே தற்போதும் நிலை கொண்டு இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. இன்று ஒரு கேலக்ஸி 10 பில்லியன் ஒளி ஆண்டுத் தொலைவில் உருவானால் அதன் வெளிச்சம் பூமியை எட்டி நம் கண்டுபிடிப்பிற்குள் அவை வர அதே 10 பில்லியன் ஆண்டுகள் ஆகும், எனவே நாம் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் என்று கணிக்கும் கேலஸிகள் அங்கிருந்து இடம் பெயர்ந்திருக்கும் தற்போதைய தொலைவு நமக்கு தெரியாது. நம்மிடம் இருக்கும் ஆகப் பெரிய தொலைவு அளவீடு ஒளி ஆண்டு தான்.


நாம் இருக்கும் மில்கிவே கேலெக்ஸியின் அளவும் பரப்பளவும் என்ன ?

ஸ்பைரல் வட்ட வடிவத்தில் இருக்கும் மில்கிவே கேலக்ஸியின் விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவு, அதன் தடிமன் 1000 ஒளி ஆண்டுகள். பேரண்டத்தில் இருக்கும் பெரிய கேலக்ஸிகளில் மில்கிவேயும் உண்டு,  மில்கிவே வினாடிக்கு 552 - 630 கிமீ வேகத்தில் ஒட்டு மொத்தமாக நகர்கிறது.

மில்கிவே கேலக்ஸியின் வயது என்ன ?

12.6 பில்லியன் ஆண்டுகள், இது பெருவெடிப்பு நிகழ்ந்தததாக கணக்கிடப்பட்டுள்ள 13.7 பில்லின் ஆண்டுகளுக்கு பின்னர் 1.1 பில்லியன் ஆண்டுகளில் மில்கிவே உருவாகி இருக்குமாம். அதிலிருக்கும் நம் சூரியன் 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. நமது சூரியனின் எரிபொருள் முழுதும் தீர இன்னும் 5.5 மில்லியன் (55 லட்சம் ) ஆண்டுகள் உள்ளனவாம்

மில்கிவே கேலக்ஸியில் இருக்கும் வின்மீன்களின் எண்ணிக்கை எத்தனை ?

200 பில்லியன் வின்மீன்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, நமது சூரியனும் ஒரு வின்மீன் தான் அதற்குள் கோள்கள், அந்த கோள்களில் சிலவற்றிற்கு சந்திரனைப் போன்று துணைக் கோள்கள்.

மில்கிவேயில் சூரியன் இருக்கும் இடம் எங்கே ?

மில்கிவேயின் மையத்தில் இருந்து 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில். மில்கிவேயின் மேல் எல்லைக்கு கீழே அதன் தடிமனுள் 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கிறது

மில்கிவேயில் சூரியனின் நகர்வு வேகம் எவ்வளவு ?

நொடிக்கு 250 கிமீ / நிமிடத்திற்கு 15,000 கிமீ / மணிக்கு 9 லட்சம் கிமீ, மில்கிவேயின் மையத்தை ஒரு முறை வளம் வர சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் 220 மில்லியன் ஆண்டுகள்.சுட்டி : http://www.atlasoftheuniverse.com/bigbang.html
http://en.wikipedia.org/wiki/Metric_expansion_of_space
http://en.wikipedia.org/wiki/Observable_universe
http://imagine.gsfc.nasa.gov/docs/ask_astro/galaxies.html

கூகுள் + ல் தற்பொழுது பேரண்டம், மில்கிவே, சூரியன், நிலவு மற்றும் பிற கோள்களின் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்,

***************

பேரண்டம் பற்றி படிக்க படிக்க வியப்பின் எல்லைக் கடந்து வியப்படைய முடிகிறது, ஆறு நாளில் (பால்வெளித்திரளை ஒப்பிட) தம்மாத்தோண்டு பூமியைப் படைத்தார் கடவுள் என்றால் மற்ற கோள்களையும் சூரியனையும், பால்வெளித்திரளையும் அதில் இருக்கும் வின்மீன்களையும், மற்ற வெளித்திரள்களையும் அதில் இருக்கும் வின்மீன்களையும் படைக்க எத்தனை நாள் எடுத்திருப்பார் ? நாளா ? அவரோட படைப்புகள் துவங்கி எத்தனை பில்லியன் களின் பில்லியன் ஒளி ஆண்டுகளாக நடக்கிறது ? கடவுளுக்கே வெளிச்சம். கடவுளின் 'ஆகுக' என்ற சொல் ஒளி வேகத்தில் பயணித்தாலும் பேரண்டத்தின் அடுத்த பக்க விளிம்பிற்குச் செல்ல எத்தனை ஒளி ஆண்டுகள் எடுக்குமோ ?

பேரண்டம் உருவாகி 14 பில்லியன் ஆண்டுகள் ஆகிறதாமே என்று ஒரு இந்து நண்பரிடம் சொன்னேன், பிரம்மாவின் பகல் என்பது ஆயிரம் சதுர்யுகமாம், கிட்டதட்ட 14 பில்லியன் ஆண்டுக்கு பக்கத்தில் வருது என்றார், பக்கத்துல கருங்கல் எதுவும் இல்லை, இருந்தால் முட்டிக் கொண்டு இருப்பேன்.

பேரண்டம் பற்றி நமக்கு தகவல்கள் தெரிய தெரிய கடவுள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் கடவுள் என்கிற ஒரு நம்பிக்கையை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தி, கடவுள் என்பது ஒரு  சூனியக்காரன், கோபக்காரன், மந்திரவாதி, மேஜிக் செய்பவன் என்ற அளவுக்கெல்லாம் மத நம்பிக்கையாக்கி சுறுக்கி  வைத்திருக்கிறார்கள் என்றே நினைக்க முடிகிறது

நன்றி :- கோவி.கண்ணன் வலைப்பூ
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 172
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: பேரண்டம்

Post by ராஜா on Thu Nov 28, 2013 11:06 am

காப்பி செய்து பதிவுகளை இடும்போது alignment சரியாக உள்ளதா என்று பார்த்து பதிவிடுங்கள், பதிவின் கீழேயே நீங்கள் எடுத்த வலைபூவிற்கு நன்றி சொல்லிவிடுங்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பேரண்டம்

Post by ayyasamy ram on Thu Nov 28, 2013 11:20 am

பேரண்டம் பற்றி படிக்க படிக்க வியப்பாகத்தினிருக்கிறது
-
 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34453
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: பேரண்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum