ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

View previous topic View next topic Go down

பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

Post by சிவா on Thu Nov 28, 2013 1:49 pm

அரட்டையடித்தல், டைம் பாஸ், ஷாப்பிங், திருவிழா, அல்லது பண்டிகைக் கொண்டாட்டம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கேற்ப ஒவ்வொரு தோழியர் பட்டியல் இருக்கும்.

அண்மையில் ஒரு இணையதள நிறுவனம் நடத்திய ஆய்வின் வழியே, ஒவ்வொரு பெண்ணுக்கும் 10 வகையான தோழியர் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நண்பர்கள் நல்லவர்களாகவோ அல்லது கெட்டவர்களாகவே இருக்கலாம். இருப்பினும் நிச்சயம் ஒவ்வொரு பெண்ணும் 10 வகையான நண்பர்களைக் கொண்டிருப்பார்கள்.

இங்கு அத்தகைய 10 வகையான நண்பர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!!!

1. திடமான சிந்தை கொண்டவர்கள்

மிகவும் நம்பகத் தன்மை கொண்டவர்கள். அனைத்து நண்பர்களுக்கு மத்தியிலும், நம்பிக்கைக்கு உரியவர்கள். இரவு நேர பார்ட்டியாக இருந்தாலும், ஷாப்பிங் ஆக இருந்தாலும், எந்த நிகழ்ச்சிக்கும் இத்தகைய நண்பர்களுடன் ஒரு பெண் தைரியமாக வெளியில் செல்லலாம்.

இத்தகைய நண்பர்கள் ஒரு பெண்ணுக்கு பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களது தொலைபேசி எண் அந்த பெண்ணின், செல்ஃபோனின் ஸ்பீட் டயலில் பதிவாகியிருக்கும். சொல்லப்போனால், இருவரும் ஒருவருக்கொருவர் மணமகள் தோழிகள் போல இணைந்திருப்பார்கள்.

2. ஷாப்பிங் செய்ய உடன் வரும் தோழியர்


இவர்கள் நல்ல உடல் வலிமையும், ஆடை அலங்கார வடிவமைப்பை எடை போடும் திறனும், கடன் கொடுத்து உதவும் எண்ணமும் நிறைந்தவர்கள். இவர்களுடன் ஷாப்பிங் சென்றால் நாம் வாங்கும் ஆடைகள், அலங்காரப்பொருள்கள் போன்ற பொருள்களைப்பற்றிய அவர்களது கருத்தினை தயங்காமல் மறைக்காமல், மிகவும் சரியாக சொல்வார்கள். தள்ளுபடி விற்பனைகளின் போது இவர்களை அழைத்துச் சென்றால், தரமான, தகுதியான மற்றும் நமக்குப் பிடித்தமான பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள்.

3. பேச்சுத் துணைவர்கள்

பொதுவாக வயதானவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் இவர்கள் அம்மா போல இருப்பார்கள். அம்மாவிற்குத் தெரியக்கூடாது என்று நினைக்கும் மற்றும் அம்மாவிடம் பேசத் தயங்கும் விஷயங்களைக் கூட இவர்களிடம் பேசலாம். இவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய அனுபவம் இருக்கும். இவர்களும் நம்மிடம் பேசுவதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.

4. புலம்பித் தீர்ப்பவர்கள்

ஒரு பெண்ணின் தோழியரில் ஒரு சிலர் எப்போதும் தமது பிரச்சனைகளை அந்தப் பெண்ணிடம் புலம்பித் தீர்ப்பார்கள். அவர்கள் எந்தப் பிரச்சனை என்றாலும் தோளில் சாய்ந்து அழுவதற்கு இந்தப் பெண்னையே தேடி வருவார்கள். பொதுவாக இந்தப் பெண் அவர்களுக்கு குப்பைத் தொட்டி போலாகிவிடுவார். அவர்களது மனக்கவலைகள், மனக்குமுறல்கள் அனைத்தும் மனம் திறந்து ஒப்படைத்து விட்டு அவர்கள் மனம் லேசாகிவிடும். மிகவும் இக்கட்டான நேரங்களில் இவர்களது தொலைபேசி அழைப்பு வந்து தொல்லை செய்யும் அல்லது அவர்கள் ஏதாவது மது அருந்திவிட்டால் போதும். தொலைபேசியை எடுத்து இந்தப் பெண்ணின் எண்ணுக்கு பேசத் தொடங்கிவிடுவார்கள்.

5. சமந்தாவைப் போன்றவர்கள்

"செக்ஸ் அண்ட் தி சிட்டி" என்னும் தொலைக்காட்சித் தொடரில் கிம் கார்ட்டல் ஏற்று நடித்து, உயிர் பெற வைத்த கதாபாத்திரமான "சமந்தா"வைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதே போன்ற ஒரு சமந்தா ஒவ்வொருவருக்கும் இருப்பார். சமந்தா என்பவர் எதையும் செய்வார், எதைப் பற்றியும் பேசுவார், எப்படியும் இஷ்டம் போல இருப்பார். ஆனால், சில நேரங்களில் எதையாவது கட்டுப்பாடின்றி செய்து விட்டு ஆபத்தில் சிக்கிக் கொள்வார். மாலை நேர பார்ட்டிகளுக்கோ அல்லது வெளியில் எங்காவது செல்வதற்கோ உடன் அழைத்துச் செல்ல மிகவும் தகுதியான நண்பராக இருப்பார். இவருடன் சென்றால், கேளிக்கைக்கும் கூத்துக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் எதையும் ஒரு வரம்புக்குள் நிறுத்திக் கொள்ள இவருக்குத் தெரியாது.

6. நிகெல்லாவைப் போன்றவர்

நிகெல்லா லூசி லாசன் என்பவர் ஆங்கில பத்திரிகையாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி பிரபலம் மற்றும் சமையல் சார்ந்த புத்தகங்கள் எழுதுபவர். மேலும் இவர் நன்கு சமைப்பவர். இல்லத்தை இனிமையாக பராமரிப்பவர். விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்பவர்.

உங்கள் நண்பர்களுக்காக பார்ட்டிகள் ஏற்பாடு செய்வதில் ஆர்வமுள்ளவரா? உங்கள் வீட்டில் நீங்கள் மேற்கொண்ட புதிய அமைப்புகளைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த நண்பர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பவரா? அப்படியானால் நீங்கள் தான் நிகெல்லா.

7. தோழியின் தோழி

இவர்களை ஒரு பெண் ஒரு சில சமயங்களில் சந்தித்திருப்பார் அல்லது ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பார்கள். இவர்களுக்குள் பொதுவான விஷயங்கள் எதுவும் இருக்காது. எனினும், பரஸ்பர அறிமுகம் மட்டுமே இருந்திருக்கும். தெருவிலோ, சாலையிலோ, வழியில் எங்காவது பார்த்துக் கொண்டாலோ, சிறு உரையாடல் மட்டுமே இருக்கும். இருவரும் மற்றவர் பெயரைக் கூட மறந்திருப்பார்கள்.

8. திருமணமாகி குழந்தையுடன் இருப்பவர்கள்

ஒரு பெண்ணுக்குத் திருமணமாகும் வரை, திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் பெண்களுடன் நன்றாக நேரம் போகும். அதன் பின் வெளியில் செல்வதோ, இரவு நேர கேளிக்கைகளோ இருக்காது. உரையாடல்கள் கூட அளவுடன் தான் இருக்கும். இவர்கள் தனது தோழிக்கு நடந்த திருமணத்திற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் பழைய நட்பினை எண்ணி, அது மீண்டும் துளிர்க்காதா என்று எண்ணுபவர்கள் இவர்கள்.

9. மாற்று ஏற்பாட்டு நண்பர்கள்

ஒவ்வொருவருக்கும் ஒருசில சமயங்களில் ஏதாவது நிகழ்ச்சிகளில் உடன் இருக்க வேண்டிய நண்பர்கள் வரமுடியாத சூழல் ஏற்பட்டால், அந்த இடத்தை நிரப்ப ஆபத்பாந்தவனாக ஒருவர் இருப்பார். இதை யாரும் எளிதில் நம்பமாட்டார்கள். இவர்கள் "ரிசர்வ்" வில் உள்ள நண்பர்கள் என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஆனால் இவர்களை ஏன் முதலிலேயே அழைக்க முடியவில்லை என்று விளக்கி மன்னிப்பு கேட்க தகுந்த காரணத்தினைத் தயாராக வைத்திருப்பார்கள். ஒருவரை இதேப்போல மீண்டும் மீண்டும் காலியிடத்தை நிரப்ப அழைக்கும் நிலை வந்தால், "நான் உன்னை முன்பே அழைக்க நினைத்தேன். ஆனால், நீங்கள் பிஸியாக இருப்பீர்கள் என்று நினைத்து தவிர்த்துவிட்டேன்" என்பார்கள். அப்படியென்றால் அவர்கள் தான் மாற்று ஏற்பாட்டு நண்பர்கள்.

10. ஆல் இந்தியா ரேடியோ நண்பர்கள்

இவர்கள் வதந்திகளைப் பரப்பிவிடுபவர்கள். மற்றவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். மற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், என்ன செய்தார்கள், அவர்களது நடவடிக்கை என்ன என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் பேசத் தயக்கம் காட்ட மாட்டார்கள். மேலும் லேட்டஸ்ட் தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இவர்களை அணுகினால் போதும். ஆனால் தம்மை பற்றிய தகவல்களை வெளியில் விடாமல் கவனமாக இருப்பார்கள்.

boldsky
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

Post by ஜாஹீதாபானு on Thu Nov 28, 2013 2:38 pm

சூப்பர் பகிர்வு நன்றி தம்பி

1ஆம் நபரில் ஒரே ஒரு தோழி இருக்கிறார். 25 வ்ருட நட்பு எதையும் நம்பி சொல்லலாம். வெளியே கசியாது.

4ஆம் நம்பரில் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் மனக்குமுறலை கொட்டிவிட்டு ஆலோசனியும் கேட்டுவிட்டு காணாமலே போய்விடுவார்கள். திரும்ப ஏதாவது ஆலோசனை, மனக்குமுறல் இருந்தால் கண்ணில் தென்படுவார்கள்.avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

Post by ayyasamy ram on Thu Nov 28, 2013 7:13 pm


-
 

-
தோழி தோழி..
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10757

View user profile

Back to top Go down

Re: பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

Post by SajeevJino on Thu Nov 28, 2013 9:33 pm

பாதி பெண்கள் சீரழிய காரணம் அவர்கள் எடுக்க வேண்டிய முடிவை அவர்களின் தோழிகளிடம் கொடுத்து விடுவது


காதலிக்கும் பெண்கள் பலரின் முடிவுகள் அவர்களின் தோழிகளின் முடிவே ..
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

Post by SajeevJino on Fri Nov 29, 2013 9:12 am

ஒரு பெண்ணின் சிறப்பை பற்றி அடுத்த பெண்ணிடம் கூறினால் அவ்வளவு தான் ...அதன் பிறகு நட்பிலோ அல்லது காதலிலோ விரிசல் தான்

அனால் ஆண்கள் அப்படி அல்ல ..ஒரு சிறந்த ஆணை பற்றி பேசினால் ஒன்றில் ஏற்றுக் கொள்வோம் இல்லையெனில் தகுந்த விளக்கத்தோடு இல்லை என்போம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

Post by சதாசிவம் on Fri Nov 29, 2013 9:59 am

இப்பட்டியலில் இளித்த வாய் ஆண்கள் இல்லையே, இன்றைய பெரும்பாலான பெண்களுக்கு அவர்கள் தான் சிறந்த பொழுது போக்கு..
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

Post by M.M.SENTHIL on Fri Nov 29, 2013 11:07 am

@சதாசிவம் wrote:இப்பட்டியலில் இளித்த வாய் ஆண்கள் இல்லையே, இன்றைய பெரும்பாலான பெண்களுக்கு அவர்கள் தான் சிறந்த பொழுது போக்கு..
ஆமோதிக்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

Post by யினியவன் on Fri Nov 29, 2013 11:13 am

இது பெண்களுக்கு பெண் நண்பர்கள் பட்டியல் ஆச்சே

அதான் இளித்த வாய் ஆண்களுக்கு இதிலும் இடம் இல்லை புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 28, 2013 7:09 pm

boldsky , சிவா ஆகியோர் ஒரு சமுதாயக் குறுக்குவெட்டை நமக்குக் காட்டியுள்ளார்கள் !நல்ல அரிவுரைகள் அனாயாசமாக வந்து விழுந்துள்ளன! வாழ்க்கை என்பது நிமிடத்திற்கு நிமிடம் மாறுவது ! ஆகவே,  வெவ்வேறு வயதுடையோரின் பழக்கம் வெவ்வேறு வகையான அனுபவத்தையும் அறிவையும்  தரும் எனலாம் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4295
மதிப்பீடுகள் : 2269

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

Post by Muthumohamed on Sat Dec 28, 2013 10:46 pm

சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!

Post by அசுரன் on Sun Dec 29, 2013 9:22 am

லிஸ்டு என்னமோ நல்லாதான் இருக்கு. பெண்கள் முடிவு எடுக்கும் போது தான் சரியானதாக இருக்கனும்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum