ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தோள் மீது கை
 T.N.Balasubramanian

புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா?
 T.N.Balasubramanian

அட்சயதிரிதியை அன்று எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்?
 T.N.Balasubramanian

கணவன் – மனைவி ஜோக்
 T.N.Balasubramanian

நீ எப்போது கற்க போகிறாய் ?
 T.N.Balasubramanian

உங்கள் கருத்தென்ன ?
 T.N.Balasubramanian

வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி
 T.N.Balasubramanian

“ நீரா ” பானம்...!!
 T.N.Balasubramanian

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 krishnaamma

அருமையான கடவுள் படங்கள் :)
 krishnaamma

என்னை பற்றி - கோபால்
 krishnaamma

இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம்
 ayyasamy ram

கிண்டல் என்பது...!
 ayyasamy ram

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 M.Jagadeesan

ஒரு சபதம்...
 krishnaamma

நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்...!!
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

உனக்கு நீதான் - சிறுவர் பாடல்
 krishnaamma

ரோஜாக்களை விற்பவன்
 krishnaamma

படித்ததில்_ரசித்தது....
 T.N.Balasubramanian

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்
 krishnaamma

பொன்விழா – கவிதை
 krishnaamma

எங்ஙனம் – கவிதை
 krishnaamma

ஆலாபனை செய்யும் கொசுக்கள்…
 krishnaamma

ஞாபகங்கள்
 krishnaamma

சிறுவர் பாடல்: யாருடைய குழந்தை?
 krishnaamma

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier
 krishnaamma

64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
 krishnaamma

வாழ்விற்கு அழகு சொந்தக்கால்…!
 krishnaamma

ஏனோ தடை செய்தாய் !
 krishnaamma

மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை.
 krishnaamma

தூக்கு தண்டனை – நகைச்சுவை
 krishnaamma

கரும்பலகை கதிரவனே..!
 krishnaamma

பயங்கர தண்ணி கஷ்டம்!
 krishnaamma

வேர்க்கடலை சாலட்
 krishnaamma

கோடையில் வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்!
 krishnaamma

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்
 krishnaamma

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 pananthakumar

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 pananthakumar

தமிழ்நேசன் அவர்களுக்கு
 pananthakumar

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
 sridevimuthukumar

முத்துலட்சுமி ராகவன் நாவல் ' நிலா சோறு' கிடைக்குமா?
 sridevimuthukumar

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?
 ayyasamy ram

மீண்டெழும் வித்தை கை வராத அம்மா...!!
 Dr.S.Soundarapandian

ஓ...இளையவனே...!!
 Dr.S.Soundarapandian

மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 Dr.S.Soundarapandian

புதிய நாணயங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
 Dr.S.Soundarapandian

நெகிழ்வான ஒரு சென்டிமென்ட் சீன்...
 Dr.S.Soundarapandian

ஈச்சங்குலை...!!
 Dr.S.Soundarapandian

மழலை வரமருளும் செல்லப்பிராட்டி செல்வாம்பிகை !
 Dr.S.Soundarapandian

அக்ஷய திருதியை ! 29-04-2017
 krishnaamma

தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் - தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை
 ayyasamy ram

ரூ.2,000 கள்ள நோட்டுக்களை வங்கியில் கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது:
 ayyasamy ram

மனு கொடுக்க ஆளில்லை : அமைச்சர்கள் ஏமாற்றம்
 ayyasamy ram

மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது
 ayyasamy ram

eஎன்னை பற்றி - மாலன்
 krishnaamma

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்
 krishnaamma

தாயாராய் ஆகு…! – கவிதை
 krishnaamma

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down


Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு on Fri Jan 03, 2014 1:38 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote://என்னை குழந்தையாகவே
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!//


ரொம்ப சரியாக சொன்னிர்கள் செந்தில் , நான் என் பாட்டி இடம் சொல்வேன் "உனக்கு 60 வயசு ஆய்டுத்து இனி, 1 ,2 3 என்று தான் எண்ணனும், எனவே 1 வயது குழந்தை போலத்தான் உன்னை treat  பண்ணுவேன் " என்றுபுன்னகை இதுல ஒரு beauty  என்ன வென்றால் என் பாட்டியே எனக்கு மாமியாரும் கூட புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042502

ரொம்ப குடுத்து வச்சவங்க நீங்க...மாமியார் மருமக சண்டையே வந்திருக்காதுலமாபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042504

YES! YES!! YES!!!  ஜாலி ஜாலி ஜாலி வேற வேற ப்ரோப்ளேம் வந்தாலும் மாமியார் மருமக சண்டை வரல பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042511 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29815
மதிப்பீடுகள் : 6766

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Sat Jan 04, 2014 3:22 pm

நான் போய்விட்டால்
உன் வாழ்க்கை?
என்ன செய்வாய் நீ சோத்துக்கு
எப்படி பிழைப்பாய்
இந்த ஏமாற்று உலகில்,
வாரி அணைக்க அன்னையில்லை
தோள் கொடுக்க அப்பனிருந்தும்
அவனால் புண்ணியமில்லை,
உடன் பிறந்தவள் இருந்தும்
நீ அனாதை போல்
வாழ வேண்டுமே!
உள்ள குமுறலை கொட்டி
குமுறி அழுதார்கள்!
இறுதியாய் அவர்கள் சொன்னது,
நாலு நாள் பொழச்சாலும்
நல்ல பொழப்பு பொழைக்கணும்,
இல்லண்ணா மாண்டு
போகும்போது இழவுக்கு
வரும் கூட்டம் கம்மியாத்தான்
நமக்கு வரும்!!
இந்த இடத்த உனக்கு
விட்டுட்டு போறேன்
நீ இதுக்கு மேல
சம்பாரிச்சு காட்டணும்,
உனக்கு ஒரு தேவைய (கல்யாணம்)
பண்ணி பாத்துட்டு
என் உசுரு போனா
இந்த கட்டையில
நெஞ்சுக்கூடு நல்லா வெந்து போகும்!!
அவர்கள் பேச பேச
எனக்கு நா தழுதழுத்தது,
வார்த்தைகள் வரவில்லை!
உனக்கு ஒன்னும் ஆகாதும்மா
தைரியமா இரு என்றேன்!
ஆனாலும் முதுமையில்
சிக்கும் போது
ஒவ்வொரு நொடியும்
மரணத்தை நோக்கியே!!
மாதங்கள் ஓடியது
எழுந்து நடமாட கூட
மற்றவர் துணை வேண்டும்
என்கிற கட்டாயம்,
அப்போதுதான் என் மனதில்
ஒரு இனம் புரியா கவலை!!
பாட்டி இறந்த பின்பு
நாம் என்ன செய்ய போகிறோம்?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by செம்மொழியான் பாண்டியன் on Sat Jan 04, 2014 3:30 pm

எளிய வார்த்தைகள் அழுத்தமான கருத்துக்கள் அருமை
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1277
மதிப்பீடுகள் : 366

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Sat Jan 04, 2014 3:32 pm

@செம்மொழியான் பாண்டியன் wrote:எளிய வார்த்தைகள் அழுத்தமான கருத்துக்கள் அருமை

உள்ளதை உள்ளபடியே கூறுகிறேன் திரு. செம்மொழியான் பாண்டியன் அவர்களே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Mon Jan 13, 2014 12:49 pm

காலத்திற்கு அப்படி என்ன
பொறாமை மக்கள் மீது?
குழந்தையாய் பிறக்க வைத்து
இதுதான் வாழ்க்கை என்று
அறிவதற்குள் ஓடி விடுகிறது
வேக, வேகமாய் நாட்கள்,
வாழ்க்கை புரியும்போது
அதை வாழ்ந்து பார்க்க
ஆசை வரும் – அந்த ஆசை
வரும்போதுதான் நமது
ஆயுளின் கடைசி தேதிகள்
கிழிக்கப்படும்!!
அந்த கடைசி தேதிகளில்
இன்றா? நமக்கு கடைசி நாள்,
என்று ஒவ்வொரு நாளும்
நினைக்க வைக்கும் நம் மனம்,
அந்த நினைப்பு மனதில்
வரும்போது - ஒவ்வொரு நொடியும்
மரணத்தை நோக்கியே செல்வதாய்
ஒரு மரண பயம் வரும்!!
அந்த மரண பயத்தை
மரணப் படுக்கையில் உள்ள
நபரை விட
அவரின் அருகில் உள்ள நபரே
அதிகம் தெரிந்து கொள்ள முடியும்!!
நானும் தெரிந்து கொண்டேன்
ஆடி, ஆண்ட அனைத்து மனிதனும்
அடங்கும் நேரம்
வெகு தொலைவில் இல்லை!!
நீ நல்லவனாய் இருந்தாலும்
நாலு பேரை கெடுத்து வாழ்ந்தாலும்
இறுதியாய் கட்டிலில் கிடக்கும்
அந்த நேரம்
ஒவ்வொரு வீரனும் கோழையே!!
என் பாட்டி மிக துணிவுள்ளவல்
யாரிடமும், எதற்கும் அஞ்ச மாட்டாள்
வீரத்தின் விளைநிலம்!!
அப்படிப்பட்ட ஜீவன் இதோ
தனது அத்தியாவசிய கடன்களை கழிக்க
எழுந்திரிக்க முடியவில்லை!!
அட சாமிகளே,
மரணமும் அதற்கும் முன் வரும்
ஒரு சில மாதங்களும்
இவ்வளவு கொடுமைகளா!!
மானே, தேனே என்று என்னை
கொஞ்சி வளர்த்த என் ஆலமரம்
இதோ இலைகள் உதிர்ந்து
எப்போது வேண்டுமானாலும்
விழுந்து விடலாம் என்ற நிலையில்!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Mon Jan 13, 2014 1:06 pm

அருகில் இருந்து பார்த்து கொண்டேன்
ஒரு குழந்தையை தன் தாய்
பார்ப்பதை விட மேலாய்!
உடன் என் பாட்டியின் தங்கை
சின்ன பாட்டியும் துணை இருந்தார்கள்!!
என் அப்பனோ, தங்கையோ
துணை வரவில்லை!!
காடு பிரிக்கும் படலம்
இறுதிக் காட்சியை எட்டி இருந்தது,
போனது நாலு சென்ட் நிலம்
அது போனதுதான்!!
மீதியுள்ள நிலத்தை
இரண்டாக பிரிந்து எனக்கும்
இருபத்தியொரு சென்ட் கொடுத்தார்கள்!!
பல ஏக்கர் நிலம் கொண்ட
பெரிய குடும்பம்?
இதோ இப்போது வெறும்
சென்ட் கணக்கில் மட்டுமே
சொத்து இருக்கிறது!!
என் அப்பனவன் செய்த தவறால்
பறிபோனது அனைத்தும்!
குடிக்கு அடிமையாகி
தன் குடியையே கெடுத்துக் கொண்ட
நல்ல மனிதன்? என் அப்பன்!!
இதில் என்ன விசேசம் என்றால்
அவன் இன்றுவரை திருந்தவில்லை
என்ற வேதனையான உண்மைதான்!!
என் பாகத்தை என் பெயரில்
உயில் எழுதினார்கள்,
என் பாட்டி எனக்கு ரேகை வைத்தாள்!!
இது நடந்தது ஏப்ரல் 9 ந்தேதி 2010!!
மிக, மிக வருந்தியவள்
இப்போது தெளிவாய்
என்னிடம் பேசினாள்
செந்தில், உன் வாழ்க்கை
இனி உன் கையில்தான்!!
சொத்து உனக்கு சோறு போடுமா?
இல்லை நீயும்
குடித்தே அழித்துவிடுவாயோ?
அதை காண நான் இருக்க மாட்டேன்
உனக்கென்று ஒரு நல்ல வாழ்வை
நீ தேர்ந்தேடுத்து பிழைத்துக் கொள்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு on Mon Jan 13, 2014 1:29 pm

படிக்கவே க்‌ஷ்டமா இரூக்க்குavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29815
மதிப்பீடுகள் : 6766

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by illayatamil on Tue Jan 14, 2014 1:09 pm

:வணக்கம்: நல்ல முன்னுதாரணம் அண்ணா.. விரைவில் எழுதுங்கள்..  
avatar
illayatamil
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Tue Jan 14, 2014 1:21 pm

@ஜாஹீதாபானு wrote:படிக்கவே க்‌ஷ்டமா இரூக்க்கு

வாழ்க்கை சில நேரங்களில், சில மனிதர்களை சற்று அதிகமாகவே புண்படுத்திவிடும். அந்த புண்பட்ட மனிதன் அதிலிருந்து மீண்டு வந்தால், சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருந்தால் விரைவில் எட்டலாம் இலக்கை.

உங்கள் உணர்வுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி பானு அவர்களே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Thu Jan 16, 2014 1:25 pm

வாழ்வில் அனைத்தும்
என்னிடம் இருந்து விலகி இருப்பதாய்
எனக்குள் ஒரு எண்ணம்!!
மனது வெறுமையாகி
உள்ளே ஒன்றுமே இல்லாத நிலை!!
ஏன் குடித்தேன், எவ்வளவு குடித்தேன்
எதுவுமே தெரியாமல் குடித்தேன்!!
ஒன்று மட்டும் மனதில் ஓடியது
இன்னும் சில நாட்களில்
நாம் அனாதையாகி விடுவோம்!!
ஆம்,
சொந்தமும், பந்தமும்
வெறும் வார்த்தைகளே!!
யாராலும், யாருக்கும் பலனில்லை!!
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே
எந்த மவராசன் கண்டு பிடித்தான்
இந்த மாபெரும் உண்மையை
அந்த மவராசனுக்கு நான் அடிமை!!
வெறும் பணத்தை மட்டுமே
பார்க்கும் மனித மந்தைகளை
நான் எப்படி சொந்தம் என்பேன்!!
ஒவ்வொரு மனிதனும் என் போல்
வேதாந்தம் பேசித் திரிவான்
யாருமில்லை அன்பு காட்ட
என்ற நிலை வரும்போது!!
பாட்டிக்கு தண்ணீர் கூட
இறங்கவில்லை தொண்டையில்,
கண்ணு நீ வந்து கொஞ்சம்
பால ஊத்திப்பாரு
போகுற உசுரு
நிம்மதியாப் போகுங்சாமி
எதிர் வீட்டு அம்மாயி சொன்னாள்,
கடைசி கால் டம்ளர் பாலை
வாயில் ஊற்றினேன்,
என் விழிகளையே ஊடுருவி
பார்த்தாள் என் அன்பு பாட்டி!!
விழிகளை நோக்க முடியாமல்
நான் சற்று தள்ளி வந்தேன்,
பத்து நிமிடம் கழித்து
என் சின்ன பாட்டி கத்தினாள்
அய்யோ செந்திலு
பாட்டி நம்மள விட்டு போயிட்டாடா!!
என் இதயம் சில வினாடிகள்
துடிக்க மறந்தன!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ayyasamy ram on Thu Jan 16, 2014 1:30 pm

 
-
இதுவும் கடந்து போகும் - என்பதே நினைவுக்கு வருகிறது..
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28311
மதிப்பீடுகள் : 7293

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Thu Jan 16, 2014 1:37 pm

செடியை நட்டு
தண்ணீர் ஊற்றி
மரமாக்கி
அது நாலு பேருக்கு
நிழல் தரும் சமயம்
அது வெட்டப்பட்டால்,
விதை, விதைத்தவன்
உள்ளம் என்ன வலி, வலிக்கும்!!
அது போலவே
இதயம் முழுக்க
வலி எனக்கு!!
என் அன்பு தெய்வம்
என்னை விட்டு பிரிந்தது
ஏப்ரல் 19, 2010!!
இதிலும் எனக்கு ஆண்டவன்
என் வாழ்வின் எல்லைவரை
சங்கடத்தையே
கொடுத்திருக்கிறான்,
ஆம், என்னவள் ரேவதி
பிறந்த நாளும் இதே ஏப்ரல் 19தான்!!
எனக்காக வாழ்வை அர்ப்பணித்தவள்
இறந்த நாளும்,
எனக்காகவே வாழ நினைத்தவள்
பிறந்த நாளும் ஒரே நாளே!!
கொடுத்து வச்சவன் சார்
இந்த எம்.எம். செந்தில் குமார்,
பாட்டி மறைந்து விட்ட நாளில்
வயது மூப்பு காரணமாய்
என் பாட்டி இறந்தால் என்றோ,
வந்தவரெல்லாம் இங்கு
நிரந்தரமாய் தங்கிட முடியாதென்றோ
மனதை தேற்றிக் கொண்டாலும்,
என்னவள் பிறந்த நாளும்
அதே நேரத்தில் வரும்போது,
இருவரையும் பிரிந்த சோகத்தை
நான் ஒருவனே
சுமக்க வேண்டி இருக்கிறது!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Thu Jan 16, 2014 1:39 pm

@ayyasamy ram wrote: 
-
இதுவும் கடந்து போகும் - என்பதே நினைவுக்கு வருகிறது..

இதுவும் கடந்து போகும்
எதுவும் சில காலம்
நடப்பது நன்மை என்றே மனதில் கொள்
உன்னால் முடியாவிட்டால் யாரால் முடியும்


- - - - - - - - - இவை யாவும் நான் தினமும் ஓதும் மந்திரங்கள் அய்யா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Sun Jan 19, 2014 4:18 pm

எனக்காய் வாழ்ந்த
என் தெய்வம்
இம்மண்ணை விட்டு
நிரந்தரமாய் துயில் கொண்டு
மீண்டும் எழவே முடியாமல்
தீக்கு தன் உடலை
தாரை வார்த்தது!!
கொள்ளி வைக்கும் முன்
என் அப்பனிடம் கேட்டனர்
யார் கொள்ளி வைப்பது
நீயே வைத்து விடுகிறாயா என்று,
நான் உறுதியாய் சொல்லிவிட்டேன்
என்னை தவிர வேறு எவனையும்
அனுமதிக்க மாட்டேன்,
எனக்காகவே வாழ்ந்த ஜீவன்
அவளுக்கு இந்த காரியத்தை
நான்தான் செய்ய வேண்டும்!!
யாரும், எதுவும் பேசவில்லை
சரியப்பா நீயே வைத்துக்கொள்!!
இதோ,
ஆறடி உடல் சாம்பலாய்
உருமாறி கொண்டிருக்கிறது
மரக் கட்டையின் உதவியால்!!
என் வாழ்வில் நான் இனி
அப்படி அழுவேனா என தெரியாது!!
தேம்பி, தேம்பி அழுதேன்
கண்ணில் கண்ணீர் வற்றும் வரை
என் இதய பாரம் வடியும் வரை
அழுதேன்! அழுதேன்!!
அப்போது எனக்குள் ஒரே ஒரு கேள்வி,
இனி நாம் சாப்பாட்டுக்கு
என்ன செய்வது?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Tue Jan 21, 2014 1:49 pm

என் பாட்டி அவள் வாழ்க்கையில்
இன்பத்தை பார்த்திருக்க
வாய்ப்பில்லை – வெறும் கஷ்டம்
மட்டுமே உனக்கு என்று
ஆண்டவன் படைத்த ஒரு ஜீவன்!!
அவளின் நெஞ்சு கூடு
நன்றாக வேகவில்லை என்றனர்,
எப்படி வேகும்
இந்த பேரன் - இனி
என்ன செய்ய போகிறானோ
என்று நினைத்தல்லவா
உயிரை விட்டிருப்பாள்!!
சுடுகாட்டிலிருந்து
வீடு வந்தாயிற்று
விளக்கு பார்த்துவிட்டு
சொந்தங்கள் எல்லாம்
புறப்பட்டன – இப்போது
என் தங்கை கேட்டாள் - எனக்கு
என்ன சீர் செய்கிறாய் என்று!!
சீர் செய்ய முடியாத நிலை
பிரிதொருநாளில் செய்கிறேன் என்றேன்,
வெக்கத்தில் தலை குனிந்தேன்!!
வரும் காலங்களில்
எனது கடனை அடிக்கும்போது
உன் கடனையும் அடைக்கிறேன்,
இந்த அண்ணன் யாரையும்
இதுவரை ஏமாற்றியதில்லை
உன்னை மட்டும் ஏமாற்றுவேனா?
நிச்சயம் செய்கிறேன் என்றேன்!!
சொன்னதை விட அதிகம்
செய்தேன் பின் காலத்தில்,
ஆனால் அவளிடம்
போதுமென்ற மனமோ
நன்றி உணர்ச்சியோ??????


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Tue Jan 21, 2014 1:56 pm

பாட்டி மறைவிற்கு பின்
நான் முழு நேர அடிமை
என் நண்பன் மதுவுக்கு,
ஆம் – யாருமில்லாதொரு
வாழ்க்கையில் – நம்
உற்ற துணையாய் வருவது
நட்பு என்றால் அப்போது
எனக்கு மதுவே நண்பன்!!
கடன் சுமை ஒரு புறம்
தனித்து வாழ்வது மறு புறம்,
என்ன செய்வேன் நான்?
பாட்டியின் தங்கை
எனக்கு சோறு ஆக்கி போட்டார்கள்
சோற்றில் சுவை இருக்காது,
என் பாட்டி நம் வாரிசு என்று
சமைத்திருப்பாள் போலும்,
சின்ன பாட்டி கடமைக்கு
என்று சமைத்திருப்பார் போலும்!!
விடுதி வாழ்கை வாழ்ந்தவன்
பசிக்கு சோறே தவிர ருசிக்கு அல்ல
என்ற தத்துவம் அறிந்தவன்,
அதனால் எந்த தொந்தரவும் இல்லை!
இப்படியே போனால் என்ன செய்வது
கடனை எப்படி அடைப்பது,
இடத்தை அடமானம் வைத்து
பணம் வாங்கி விட முடிவெடுத்தேன்,
என் அப்பன் கேட்டான்
எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று!
சாதிக்க வேண்டும் என நினைக்கும்
ஒவ்வொரு மனிதனுக்கும்
அப்பன் ஒரு “வெப்பன்” தான்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Thu Jan 23, 2014 12:39 pm

என் வாழ்வில் என்னை உயர வைத்த ஆலமரம்.
திருமதி. பழனியம்மாள்.M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ராஜா on Thu Jan 23, 2014 12:44 pm

@M.M.SENTHIL wrote:என் வாழ்வில் என்னை உயர வைத்த ஆலமரம்.
திருமதி. பழனியம்மாள்.

 :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30561
மதிப்பீடுகள் : 5412

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு on Thu Jan 23, 2014 12:44 pm

ஒவ்வொரு மனிதனுக்கும் அப்பன் ஒரு “வெப்பன்” தான்!! wrote:

மனக்கஷ்டத்தோடு படித்தேன். கடைசியில் சிரிக்க வைத்து விட்டது இந்த வரிகள்..

பாட்டி அம்மா பெத்தவங்களா? அப்பா பெத்தவங்களா?avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29815
மதிப்பீடுகள் : 6766

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Thu Jan 23, 2014 12:46 pm

என்னை மனிதனாக்கிய ஜீவன்
அன் அன்பு மகள் தனுஷ்காM.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Thu Jan 23, 2014 12:47 pm

@ஜாஹீதாபானு wrote:

மனக்கஷ்டத்தோடு படித்தேன். கடைசியில் சிரிக்க வைத்து விட்டது இந்த வரிகள்..

பாட்டி அம்மா பெத்தவங்களா? அப்பா பெத்தவங்களா?

என் அப்பன் என்ற கேவலமான மிருகத்தை பெற்றது என் பாட்டி என்ற தெய்வம்தான்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by உதயசுதா on Thu Jan 23, 2014 2:02 pm

உங்கள் கதையை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் செந்தில். எத்தனை துயரங்கள்? அத்தனையிலும் மீண்டு வந்து இன்று நல்ல நிலைக்கு வந்து இருக்கும் உங்கள் தன்னம்பிக்கக்கு ஒரு ஸல்யுட்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Thu Jan 23, 2014 5:02 pm

@உதயசுதா wrote:உங்கள் கதையை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் செந்தில். எத்தனை துயரங்கள்? அத்தனையிலும் மீண்டு வந்து இன்று நல்ல நிலைக்கு வந்து இருக்கும் உங்கள் தன்னம்பிக்கக்கு ஒரு ஸல்யுட்.

மிக்க நன்றி உதயசுதா அவர்களே.

கொஞ்சம் நேர்மறை எண்ணம் கொண்டவன் நான், அந்த எண்ணமும் என்னை காப்பாற்றி இருக்கலாம், நல்ல தோழர்களும் இருந்தார்கள் அவர்களும் ஒரு காரணம். மேலும் என் மனைவி. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மை என்று உணர்கிறேன் என் மனைவியின் மூலம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நான் மனதார வணங்கும் கடவுள்கள்.

மேற்கூறிய அனைத்தும் இந்த செந்தில் குமாரை மீண்டும் ஒரு வாழ்க்கை வாழ உத்தரவிட்டு உள்ளதாய் நினைக்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Thu Jan 23, 2014 5:11 pm

மீண்டும் ஒரு போராட்டமா?
என்னால் முடியாது,
ஒரே வார்த்தையில்
முடித்துக் கொண்டேன்!
இடத்தை விற்று விடலாம்
அப்போது உங்களுக்கும்
பணம் தருகிறேன்!
என்னை கொஞ்சம்
தனிமையில் விடுங்கள்!!
இப்போதுதான் சொந்தங்களின்
சுய ரூபம் தெரிந்தது,
சொத்தின் மேல்
கேஸ் போடு
உனக்கும் பாதி வரும்,
தங்கையிடம் கொம்பு சீவி
என்னிடம் அனுப்பினர்,
நேரடியாக மோதி
என்னிடம் ஜெயிக்க முடியாத
முதுகெலும்பில்லா
சில உறவுகள்!!
அவளும் முயற்சித்தாள்
சொத்தை இரண்டாக்க,
பாட்டி எழுதியது உயில்
அவரும் மறைந்து விட்டார்
எதுவும் செய்ய முடியாது
என்று சொல்லிவிட்டார்
மெத்தப் படித்த வழக்கறிஞர்!!
அடிப்பாவி உனக்கு
நல்ல வக்கீல் கிடைக்கலியா,
என் அப்பனின் தாய்தான்
எங்களின் பாட்டி எனும்போது
அவளை மிரட்டி
என் அண்ணன் எழுதிவிட்டான் உயில்
என்று உனக்கு சொல்ல தெரியலியே!??


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL on Thu Jan 23, 2014 5:24 pm

எதிரியாய் இருப்பினும்
உதவி என்று கேட்பின்
உயிரையும் கொடுக்க
முன் வரும் உன் அண்ணனிடம்
உனக்கேன் வீம்பு!
தெளிவாய் சொல்லிவிட்டேன்
ஒத்த பைசா கிடையாது
ஆனதைப் பார் என்று,
அப்பன் வந்தான் அடிக்க
வந்த வழியே ஓடினான்
துடி துடிக்க – ஆம்
விழுந்தது தர்ம அடி!!
இதில் ஒரு விசேசம் என்னவெனில்
இருவருமே ப்புல் மப்பு!!
தங்கையிடம் சென்றேன்
நான் உன் அண்ணன் என்பது
உண்மையெனில்
உனக்கேன் இல்லை
என்மேல் நம்பிக்கை!!
திரும்ப சொன்னாள்
அண்ணனோ, தம்பியோ
பணம்தான் பிரதானம்!!
நொந்து விட்டேன்
பணவெறி பிடித்த
சனியனா நீ!
நீயே எடுத்துக்கொள்
அனைத்தையும் – எனக்கு
எதுவும் வேண்டாமென்றேன்!!
நீ எனக்கு பிச்சை இட
வேண்டாமென்றால்,
உன் நல் வாழ்க்கை எனும்
பிச்சை நான் இட்டதே,
எடுத்தெறிந்து பேசாதே
உனக்கு ஏதாவது என்றால்
நான்தான் வருவேன் முதலில்
கண்ணில் நீர் வர சொன்னேன்,
நீ தேவையில்லை என்றாள்,
எனக்கு நல்ல ஞாபகம் தெரிந்து
அன்றுதான் அடிக்கிறேன் அவளை
காதில் இருந்த தோடு
கழண்டு விழுந்து
காதோரம் இரத்தம்,
இந்த இரத்தம் கூட
நம் ஒருதாய் வயிற்று
பிள்ளைகள் என்பதை சொல்லுமே,
ஏன் நீ மாறினாய்
நயவஞ்சக சொந்தங்களின்
பேச்சை கேட்டு!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3350

View user profile

Back to top Go down

Page 5 of 12 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum