ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

ஒரு சந்தேகம்??
 மூர்த்தி

புதிய சமயங்கள்
 T.N.Balasubramanian

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 krishnaamma

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எங்கள் சிவாஜி

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

எங்கள் சிவாஜி

Post by veeyaar on Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down


Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Thu Jan 16, 2014 7:22 am


சிவாஜியை அறிமுகம் செய்த பெருமாள் முதலியார் வீட்டுக்கு சீர்கொண்டு வந்த நடிகர் பிரபு

By dn, வேலூர்
First Published : 16 January 2014 01:50 AM IST
நடிகர் சிவாஜி கணேசனை "பராசக்தி' திரைப்படம் மூலம் அறிமுகம் செய்த வேலூர் நேஷனல் திரையரங்கு உரிமையாளர் பெருமாள் முதலியார் வீட்டுக்கு நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் பொங்கலையொட்டி செவ்வாய்க்கிழமை வருகை தந்து சீர்வரிசை பொருள்கள் அளித்து ஆசி பெற்றுச் சென்றனர்.

தனது நேஷனல் பிக்சர்ஸ் பட நிறுவனம் மூலம் சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் பெருமாள் முதலியார். அவரது வீட்டுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் சிவாஜி கணேசன், அவரது மனைவி கமலா மற்றும் குழந்தைகளுடன் வந்து சீர்வரிசை அளித்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கம்.

சிவாஜி கணேசன் மறைவை அடுத்து அவரது மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வேலூருக்கு பொங்கல் அன்று வந்து சீர்வரிசை அளித்து ஆசி பெற்றுச் செல்கின்றனர்.

இந்த ஆண்டு பொங்கலையொட்டி, நடிகர் பிரபு, அவரது மனைவி புனிதா, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் காட்பாடி காந்தி நகர் கிழக்குப் பகுதியில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தனர். அவர்களை பெருமாள் முதலியார் மனைவி மீனாட்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். பிரபு குடும்பத்தினர் அளித்த சீர்வரிசையைப் பெற்றுக் கொண்ட மீனாட்சியம்மாள் அவர்களுக்கு பொங்கல் பரிசு அளித்து ஆசி அளித்தார்.

நன்றி தினமணி நாளிதழ் இணையப் பக்கம்

je
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by மாணிக்கம் நடேசன் on Thu Jan 16, 2014 8:37 am

நன்றியை நயமாக படைத்திட்ட இந்த சிவாஜி குடும்பத்தை பாராட்டுவோம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by ayyasamy ram on Thu Jan 16, 2014 10:09 am

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by M.M.SENTHIL on Thu Jan 16, 2014 10:11 pm

சூப்பருங்க அருமையிருக்கு 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Fri Jan 17, 2014 12:57 pm

அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் நமக்கு ஒவ்வொரு முறையும் புத்தம் புதிய பரிமாணத்தில் ரசனையை உருவாக்குபவை நடிகர் திலகத்தின் நடிப்பில் அமைந்த காட்சிகள். இவற்றை விவாதிக்க லட்சக்கணக்கில் புதினங்களும் காணொளிகளும் இணைய தளங்களும் போதாது. இதை நிரூபிக்கும் வகையில் புதியதாய் மலர்ந்துள்ளன, நடிகர் திலகத்திற்கென உள்ள இணைய தளங்கள். ஏற்கெனவே உள்ள www.nadigarthilagam.com, www.nadigarthilagamsivaji.com, www.nadigarthilagam.proboards.com, என உள்ள இணையதளங்களுடன் புதியதாய் மலர்ந்துள்ள மற்றொரு இணைய தளம்,

www.thalaivansivaji.com

தமிழ் இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர், கதாசிரியர், கவிஞர், பேச்சாளர், திரு நாஞ்சில் இன்பா அவர்களின் இந்த இணைய தளம், இதுவரை அணுகாத புதிய கோணத்தில் நடிகர் திலகத்தின் பொது வாழ்வு. சமுதாய அர்ப்பணிப்பு, சேவை போன்ற அம்சங்களை முன்னிலைப் படுத்தும் வகையில் இவ்விணைய தளத்தின் தலைப்பு அமைந்துள்ளது. இது நிச்சயமாக நடிகர் திலகத்தின் புகழையும் பெருமையையும் மக்களிடம் பெரும் அளவில் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

திரு நாஞ்சி்ல் இன்பா அவர்களுக்கு நமது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Sat Jan 18, 2014 5:37 am

ரவி சார்,

எனக்கு மிகவும் பிடித்த 'மகாகவி காளிதாஸ்' படப் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி! நம் தலைவருக்கேன்றே பிரத்தியோகமாக எழுதப்பட்ட பாட்டு. அதை சுருக்கமாக அழகாக வர்ணித்திருக்கிறீர்கள். அற்புதம்.


வீயார் சார்,

நன்றி என்ற ஒரு சொல்லுக்கு முதன்மையானவர் நம் நடிகர் திலகம் அல்லவோ! அவர்தம் வழிமுறையினரும் அதை பின் பற்றுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. நல்ல பகிர்வுக்கு நன்றி!
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Sat Jan 18, 2014 9:34 pm

பெருமாள் முதலியார் அவர்களின் மனைவி திருமதி மீனாட்சி அவர்களிடம் பிரபு, திருமதி பிரபு, விக்ரம் பிரபு சீர் தரும் காட்சி. நிழற்படம் நன்றி மாலைமலர் இணைய தளம்

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Sun Jan 19, 2014 9:31 am

எழில் கொஞ்சும் சென்னை செம்மொழிப் பூங்காவில் நடிகர் திலகத்தின் தோற்றம் ... ஒரு கற்பனை

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Mon Jan 20, 2014 2:25 am

20.01.2014 முதல் 26.01.2014 வரையிலான நாட்களில் தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள். உத்தேச நிகழ்ச்சி நிரல். சரியான விவரத்திற்கு சம்பந்தப் பட்ட தொலைக்காட்சியில் சரிபார்த்துக்கொள்ளவும்.

ஜே. மூவீஸ்
25.01.2014 காலை 6 மணி – கிரஹப் பிரவேசம்
25.01.2014 பகல் 1 மணி நீதி

மெகா 24
25.01.2014 காலை 8.30 மணி ராஜ பக்தி
26.01.2014 காலை 8.30 மணி சபாஷ் மீனா
21.01.2014 பகல் 2.30 மணி மனிதரில் மாணிக்கம்
22.01.2014 பகல் 2.30 மணி முதல் தேதி
20.01.2014 மாலை 6.00 மணி தீர்ப்பு
24.01.2014 மாலை 6.00 மணி சித்ரா பௌர்ணமி

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
21.01.2014 காலை 10 மணி பொன்னூஞ்சல்
26.01.2014 காலை 10 மணி திரிசூலம்
21.01.2014 மாலை 4 மணி லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
23.01.2014 மாலை 4 மணி நான் வணங்கும் தெய்வம்

வசந்த் டிவி
23.01.2014 பகல் 2 மணி எங்கிருந்தோ வந்தாள்

ஜீ தமிழ்
20.01.2014 பகல் 2.30 மணி நீதி
22.01.2014 பகல் 2.30 மணி ரிஷிமூலம்

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Mon Jan 20, 2014 6:15 pm

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Wed Jan 22, 2014 11:16 am

'ராணி லலிதாங்கி' படத்தில் அற்புதமான ஒரு பாடல். பாடகர் திலகத்தின் 'ஆண்டவனே இல்லையே'....பாடல்தான் அது. 'ஆண்டவனே இல்லையே' என்று திரவிடக் கொள்கை பாடல் போல அதிர்ச்சியாகத் தொடங்கும் பாடல் சற்றே நின்று  'தில்லை தாண்டவனே!...  உன் போல தாரணி மீதில் ஆண்டவனே இல்லையே' என்று திடுமென திசை மாறி ஆன்மிகப் பாடலாய் எதிரொலிக்கும். இளம் துறவி போல பக்தி மார்க்கத்துடன் நடிகர் திலகம் தில்லை அம்பலத்தானின் சிலை முன் நின்று பாடும் அழகு அகிலம் புகழும் காட்சி. வாயசைப்புத் திறமை எவரும் நினைத்துப் பார்க்க முடியாதவை. பாடலின் துவக்கத்தில் கையைத் தொடையில் வைத்தபடி கம்பீரத்துடன் நடிகர் திலகம் நின்று பாடலை பாடும்  ஸ்டைலே தனி. பின் சற்றே உடலை ஆட்டி அசைத்தபடி வந்து பாடும் போது நம் கண்கள் அந்த மகாநடிகரை விட்டு அகலாது. கழுத்தில், கைகளில் ருத்ராட்சக் கொட்டை மாலைகளுடன், நெற்றியில் திலகத்துடன், நம் திலகம் உடலெங்கும் விபூதிப் பூச்சுகளுடன் காதில் குண்டலம் அணிந்து, கண்களில் ஒளி மின்ன, தாடி சகிதம் அழகு பொங்கும் திருமுகத்தோடு தில்லை நடராஜப் பெருமானின் விக்கிரகத்தின் முன் நின்று பாடும் போது பக்தியில் கரையாத மனமும் உண்டோ! நீங்களும் இந்த பக்திப் பரவசத்தில் மூழ்கி இன்புறுங்கள். அந்த மாகா நடிகரின் புகழ் பாடுங்கள்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by jayaravi on Wed Jan 22, 2014 1:54 pm

Vasu , NT யின் நடிப்பில் பாதி உருகினோம் , மீதி பாதி உங்கள் தமிழ் நடையில் - அழகாக வர்ணிப்பதில் ஏன் உங்களை நாங்கள் தமிழ் திலகம் என்று இனிமேல் கூப்பிட கூடாது ??

அன்புடன் ரவி
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Sun Jan 26, 2014 11:11 am

திரைப்படங்களிலிருந்து நடிகர் திலகத்தின் வித்தியாசமான தோற்றங்கள் - நிழற்பட அணிவகுப்பு

இத்தொடரில் நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் திரைப்படங்களிலிருந்து வித்தியாசமான தோற்றங்களில் இடம் பெறும். இவை collage வகையிலும் உருவாக்கப் பட்டு இங்கே பகிர்ந்து கொள்ளப் படும்.


avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by அன்பு தளபதி on Sun Jan 26, 2014 11:21 am

சில வருடங்களுக்கு முன் சிவாஜி கணேசனின் புகழ் பரப்பும் வசந்த மாளிகை என்ற இதழ் வந்தது அற்புதமான செய்திகள் அறிய புகைப்படங்கள் என அருமையான இதழ் தற்பொழுது நின்று விட்டது அந்த இதழ் மீண்டும் வருவது போல உள்ளது உங்கள் அனைத்து பதிவுகளையும் காணும்போது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Sun Jan 26, 2014 6:07 pm


வீயார் சார்,

அடடா! ஸ்டைலுக்கென்றே பிறந்த அற்புத மனிதர் நம் நாடு போற்றும் நடிகர் திலகத்தின் 'ராமன் எத்தனை ராமனடி' படத்தின் நிழற்படம் தங்கள் கற்பனையில் மேலும் மெருகேறி செம அசத்தலாய் கண்களுக்கு விருந்தளிக்கிறது. என் இதயபூர்வமான நன்றிகள் சார்.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Sun Jan 26, 2014 6:08 pm

அட்டகாசமான ஆர்ட்டில் நடிகர் திலகம்

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 on Mon Jan 27, 2014 10:11 am

'நான் பெற்ற செல்வம்' படத்திலிருந்து நாம் பெற்ற செல்வம் நடிகர் திலகம் பங்கு கொள்ளும் ஒரு பாடல் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத பாடல்.

சாலையில் ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும் அழகாக ஆடிப் பாட, சாலையில் போவோர் வருவோர் அதை வேடிக்கை பார்க்கின்றனர். பாடும் இளைஞன் தன் கையில் இருக்கும் இசைக்கருவியை இசைத்தபடி பாட, அந்த இளம் மங்கை அந்தப் பாடலுக்கேற்றவாறு ஒய்யார நடமாடுகிறாள். அப்போது அந்தப் பக்கம் சைக்கிளில் வரும் நடிகர் திலகம் வேடிக்கை பார்க்கும் கும்பலோடு சேர்ந்து நின்று அந்தப் பாடலையும், நடனத்தையும் ரசிப்பார். அவ்வளவுதான்.

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? பாடல் அற்புதமான பாடல் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்பாடலில் இசைக்கருவியை இசைத்தபடி இருக்கும் இளைஞனுக்கும், ஆடும் யுவதிக்கும் தான் வேலையே. பாடல் நடிகர் திலகத்திற்கு அல்ல. வெறுமனே நின்று வேடிக்கை பார்க்கும் வேலை மட்டுமே. ஆனால் அங்கு தான் நடிகர் திலகம் தான் நடிப்பில் திலகம் என்று நிரூபிப்பார். காதல் வாஞ்சையுடன் இளம் ஜோடி ஆட, அதை  இளைஞரான நடிகர் திலகம் சற்றே கூச்சமான நாணத்தோடு தனக்குத் தானே புன்னகைத்தபடி கண்டு ரசிக்கும் அழகு.... மிக ஸ்டைலாக சிகெரெட் புகைத்தபடி இடுப்பில் கை வைத்து நிற்கும் அழகு... பாடலை சிகெரெட் இருக்கும் விரல்களால் சைக்கிளின் ஹேண்ட்பாரில் தாளம் போடும் அழகு... அதே சமயம் வேடிக்கை பார்க்கும் கும்பலில் தன் அருகில் நிற்கு நபர் யாரென்று ஒரு வினாடியில் நோட்டம் விட்டு விட்டு பின் திரும்ப பாடலில் லயிக்கும் அழகு... ஆட்டத்தை கவனித்தபடி உதடுகளை லேசாகக் கவ்வி சுழிக்கும் அழகு...

அடடா! ஒவ்வொரு வினாடியும் அந்த முகம் காட்டும் பாவம்தான் என்ன! இவ்வளவிற்கும் இப்பாடலில் இடையிடையே ஒரு சில வினாடிகள் தான் நடிகர் திலகத்தைக் காண்பிப்பார்கள். அதில்தான் இத்தனை அமர்க்களமும் நடக்கும். நீங்களும் கண்டு ரசித்து உங்கள் கருத்தைத் தெரிவியுங்களேன்!

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Mon Jan 27, 2014 6:15 pm

வாசு சார்
caricature ஓவியத்தில் நடிகர் திலகம் ... சூப்பர்... பாராட்டுக்கள்..

அதே போல் காட்டுக்குள்ளே கண்ட பூவு பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் சூப்பர்.. இதை எத்தனை பேர் பார்த்திருப்பார்களோ தெரியாது.. இந்தப் பாடலை விடுங்கள்.. இந்தப் படத்தைப் பற்றியே பலருக்குத் தெரியுமோ என்பதே சந்தேகமே. இதைப் போன்ற அபூர்வமான தகவல்களைத் தர தங்களால் மட்டும் தான் முடியும்.. ஜமாயுங்கள்
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Mon Jan 27, 2014 6:17 pm

திரு இன்பா அவர்களின் முயற்சியில் விரைவில் மறுவெளியீடு காண உள்ள சந்திப்பு திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி.

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Mon Jan 27, 2014 9:10 pm

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தமிழக முன்னேற்ற முன்னணி தொடக்க விழா காணொளி .. மிகவும் அபூர்வமானது.

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Wed Jan 29, 2014 9:32 am

Nadigar Thilagam Film Appreciation Association NTFANS நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா 26.01.2014 அன்று மாலை சென்னை தியாகராய நகர் திருமலை சாலையில் அமைந்துள்ள ஒய்.ஜி.பி. அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் குமாரி சச்சு, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கலைப்புலி திரு எஸ்.தாணு, திருமதி காஞ்சனா கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் தலைமையுரை ஆற்ற, பொருளாளர் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் நிகழ்ச்சியின் சிறப்புகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பில் சிறந்த படமான மோட்டார் சுந்தரம் பிள்ளை திரையிடப் பட்டது.

நிகழ்ச்சியிலிருந்து சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Sun Feb 02, 2014 3:22 pm

நடிகர் திலகமாய் சினிமாவில் என்றும் கோலோச்சும் சிவாஜி அவர்களை அதற்கும் மேலே தலைவனாயும் தெய்வமாயும் பாவித்து தங்கள் உயிரையும் அவருக்காக தரத் தயாராய் இருக்கும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாய்த் திகழும் திரு இன்பா அவர்கள் தன்னுயை தலைவன் சிவாஜி இணையதளத்தின் சார்பாக நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இணையப் பத்திரிகை ஒன்றினை சிவாஜி குரல் என்ற பெயரில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தன்னுடைய இணைய தளத்தில் தரவேற்றத் துவங்கியிருக்கிறார். அவருக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். அதன் முதல் பகுதிக்கான இணைப்பு

http://www.thalaivansivaji.com/sivaji-kural-1/
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by myimamdeen on Sun Feb 02, 2014 3:28 pm

நன்று
avatar
myimamdeen
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 392
மதிப்பீடுகள் : 130

View user profile http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar on Sun Feb 02, 2014 9:42 pm

தொழிலதிபர் ரவிகுமார் கோவையில் வெற்றி பவனி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 175வது வெற்றிக் காவியம் அவன் தான் மனிதன் கோவை ராயல் திரையரங்கில் கடந்த 31.01.2014 வெள்ளி முதல் திரையிடப் பட்டுள்ளது. படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு பிரமிக்கத் தக்கதாய் உள்ளதாக கோவையிலிருந்து நண்பர் செந்தில் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக் கிழமை 02.02.2014 மாலைக் காட்சி வரை ரூ 40,000 என்பதைத் தாண்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது நிச்சயம் சிறப்பானதாகும். ரூ. 120 ரூ 100 என்ற அளவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் படும் திரையரங்குகளில் கூட இந்த அளவிற்கு வசூலாவதில்லை என்று ஒரு பேச்சு இருக்கும் நிலையில் இது பாராட்டத் தக்கதாகும். அதுவும் இன்று மாலைக் காட்சியின் வசூல் மட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் வசூலைக் கொடுத்து 95 சதவீதம் அரங்கு நிறைவு கண்டுள்ளதாயும் நண்பர் கூறுகிறார்.

பழைய படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் இப்படிப் பட்ட வரவேற்பினை இன்றைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் அனைவரும் கண்டு ஆராய்ந்து அதற்கேற்றார்போல் தங்கள் திரைப்படங்களை மக்களிடம் சென்று சேர்ப்பதில் முனைய வேண்டும் என்பதே என் விருப்பம்.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by balakarthik on Mon Feb 03, 2014 7:07 pm

             


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எங்கள் சிவாஜி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum