ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 ayyasamy ram

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 ayyasamy ram

கமல்ஹாசனின் கவிதைகள்
 ayyasamy ram

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 ayyasamy ram

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அபூர்வ கானங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Mon Dec 02, 2013 9:12 pm

First topic message reminder :

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.

இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.

விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down


Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Sat Dec 07, 2013 9:32 pm

எஸ்.பி.பாலாவின் ஆரம்ப காலப் பாடல்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இன்றும் இருந்து வருகிறது. அந்த வகைப் பாடல்களில் சீர்வரிசை திரைப்டத்தில் இடம் பெற்ற கண்ணனை நினைக்காத நாளில்லையே பாடலும் ஒன்று. பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த இப்பாடல் இன்றும் பசுமையாக உள்ளது. ஆனால் இதற்கு சற்றும் குறையாத அளவில் சிறந்த பாடல் அதே சீர்வரிசை படத்தில் இடம் பெற்ற கீழ்க்காணும் பாடல். முதல் முறை கேட்ட போதே நம்மைக் கட்டிப் போட்ட இந்த பாடலை இன்று வரை மிகவும் ரசித்து மகிழ்வேன். இப்பாடலைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பஞ்சாங்கம் பார்க்க வேண்டுமா என்ன. அதுவும் இசை யார்.. மெல்லிசை மன்னராயிற்றே..

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by krishnaamma on Sat Dec 07, 2013 9:37 pm

   சூப்பருங்க அன்பு மலர் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Sat Dec 07, 2013 9:42 pm

இப் பாடல்
இரவை இனிமையாக்கும்...
உறவை உன்னதமாக்கும்...
நிலவை நெருக்கமாக்கும்...
நினைவை நிலையாக்கும்...

கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே..

யார் மறப்பார்... நாம் கேட்கும் இனிமையான பாடல்களையெல்லாம் அள்ளித் தரும் மெல்லிசை மன்னரை யார் மறப்பார்..

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Thu Dec 12, 2013 9:57 pm

இன்றைய அபூர்வ கானங்கள் வழங்குவது அண்ணாவின் ஆசை திரைப்படத்திலிருந்து ஒரு இனிமையான பாடல்.

பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம் என்று எழுதியது உண்மையாகவே இப்பாடலில் நிகழ்கிறது. இதயம் இசையமைக்கும் அளவிற்கு இனிமையான மெட்டினை வடிவமைத்துள்ளார் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள். இப்பாடலில் இசையின் சிறப்பு சொல்லி மாளாது. குறிப்பாகஇந்த அக்கார்டியன் இசைக் கருவி கேட்போரைக் கிறங்கடிக்கும் சக்தி வாய்ந்தது. ஹார்மோனியத்தை நிற்க வைத்து வாசிப்பது போல் தோற்றமளிக்கும் இதிலிருந்து எழும் ஒலி நெஞ்சைப் பிழிய வைக்கும் சோகத்தையும் நெஞ்சை நெகிழ வைக்கும் மகிழ்ச்சியையும் என அத்தனை உணர்வையும் பிரதிபலிக்கும் தன்மை உடையது. இது மட்டுமின்றி பல திகில் காட்சிகளிலும் இது திறம்பட பயன்படுத்தப் பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களில் இதைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவிற்குப் புகழ் பெற்ற அக்கார்டியன் இசைக்கருவியை வாசிப்பதில் மங்கள மூர்த்தி என்கிற இசைக்கலைஞர் புகழ் பெற்று விளங்கினார். அந்தக்கால இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் இக்கருவியை வாசித்துள்ளார். மெல்லிசை மன்னரின் இசைக்குழுவின் இன்றியமையாத உறுப்பினராவார்.

இந்தப் பாடலில் அக்கார்டியன் இசைக்கருவி மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக இதுவும் மங்களமூர்த்தி அவர்கள் தான் வாசித்திருக்க வேண்டும்.

யார் வாசித்திருந்தாலும் இப்பாடலில் அக்கார்டியன் மற்றும் பாங்கோஸ் இரு இசைக்கருவிகளின் இசையும் மிகச்சிறப்பாக உள்ளது.

மீண்டும் மீண்டும் கேட்கத் தூன்டும் பாடல்

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Dec 13, 2013 7:36 am

ஓஓ இதுதான் அக்கார்டியனா, பழைய டைப்ரைட்டர் மாதிரி இருக்கே. இந்த இசைக் கருவியின் முழு விபரங்களை இங்கே தரமுடியுமா வீயார் சார், நன்றி. பாடியவர்கள் பி.பி.சீனிவாஸ் அவர்களும் பி.சுசிலா அவர்களும் தானே.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Fri Dec 13, 2013 9:53 am

அன்பு வீயார் சார்,

அபூர்வ கானங்கள் வரிசையில் மிக அபூர்வ பாடலான அதுவும் எனக்கு மிக மிக பிடித்த பாடலான 'பாட்டெழுதட்டும் பருவம்' 'அண்ணாவின் ஆசை' படப் பாடலுக்கு என் ஆழ்ந்த நன்றி!
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Fri Dec 13, 2013 10:15 am

அன்பு வீயார் சார்,

தாங்கள் பதிவிட்டுள்ளா 'அண்ணாவின் ஆசை' திரைப்படம் நடிகர் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த நடிகர் கே. பாலாஜி அவர்கள் தயாரித்த முதல் திரைப்படம் ஆகும். ஜெமினி, சாவித்திரி, பாலாஜி, கே.ஆர். விஜயா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். இந்தி நடிகர் அசோக் குமார் நடித்த ஒரே தமிழ்ப்படம் இது.

இப்போது இந்தப் படத்தைப் பற்றிய 'பேசும் படம்' இதழ் ஆவணத்தை அளிக்கிறேன். தங்கள் பதிவுக்கு இந்த ஆவணம் துணை புரியும் என்று நினைக்கிறேன்.

'பேசும் படம்' இதழ் Februvary 1966வாசுதேவன்.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Fri Dec 13, 2013 12:21 pm


'அண்ணாவின் ஆசை' திரைப்படத்தில் 'பூப்போல் மலர பொட்டு வைத்தாள்' என்ற சுசீலா அவர்களின் வளமான குரலில் ஒலிக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இளமை துள்ளும் கே.ஆர்.விஜயா, மகாதேவன் அவர்களின் மயக்கும் இசை இந்தப் பாடலை மிகவும் ரசிக்க வைக்கும். நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by ayyasamy ram on Fri Dec 13, 2013 4:22 pm

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33602
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Mon Dec 16, 2013 5:50 pm

வாசு சார்
அண்ணாவின் ஆசை, பேசும்படம் பக்கங்கள், பூப்போல் மலர பொட்டு வைத்தாள் என்று, இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலை அதிகரித்து விட்டீர்கள். தங்களுடைய பதிவின் மூலம் அ்பூர்வமான பாடல்களை பகிர்ந்து கொள்ளும் இத்திரியின் மேன்மை கூடுகிறது. மிக்க நன்றி. பாராட்டுக்கள்.

அபூர்வ கானங்கள் ... தொடர்கிறது...

ஹீராலால்.. அந்தக் காலத்திய திரைப்படங்களில் இந்தப் பெயர் இடம் பெறாத நாளே இல்லை எனும் அளவிற்கு மிகப் பிரபலமான நடன இயக்குநர். இன்றைய நடன உத்திகளையெல்லாம் அன்றே நிறைவேற்றி விட்டார். ஏராளமான பிரபலமான பாடல்களின் நடனங்களில் இவருடைய முத்திரை பளிச்சிடும். அவர் நடனம் அமைத்த படங்களில் ஒன்று காசேதான் கடவுளடா. இப்படத்தில் இடம் பெற்ற அவள் என்ன நினைத்தாள் பாடல் காட்சிக்கு இவர் அமைத்துள்ள நடன அமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. மெல்லிசை மன்னரின் வித்தியாசமான தாளக்கட்டுக்கு, சற்றும் குறையாத தரத்தில் தன்னுடைய நடன அமைப்பை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் மென்மையாகவும் நளினமாகவும் இப்பாடலில் லக்ஷ்மியும் அவரது தோழிகளும் ஆடும் நடனம் அமைந்துள்ளது. பாருங்கள்.. நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இப்பாடலின் நடனத்திற்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.

பாடல் வரிகள் வாலி

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Thu Dec 19, 2013 9:05 am

வீயார் சார்,எனக்கு மிக மிக பிடித்தப் பாடலான 'காசேதான் கடவுளடா' படத்தின் 'அவளென்ன நினைத்தாள்' பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி! இந்தப் பாடலில் பிரபல மலையாள தமிழ் நடிகை சீமா துணை நடிகையாக லஷ்மியுடன் இணைந்து நடிப்பதைப் பார்க்கலாம்.

இதோ இன்னொரு பாடல்.

பல இசைக்கருவிகளின் பின்னணியில் மலர்ந்த ஒரு மறக்கவொண்ணா பாடல்.

'எங்க மாமா' படத்தில் பி.சுசீலா அவர்களின் ஈடு இணையில்லா குரலில் ஒலிக்கும் 'பாவை பாவைதான்' என்ற மனதை மயக்கும் பாடல். ஜெயலலிதாவின் அருமையான நடன அசைவுகள். விஸ்வநாதன் அவர்களின் மெய் மறக்கச் செய்யும் இசை. ஜெயலலிதாவுடன் ஆடும் நடன மாஸ்டரின் ஜாலியான கிறுக்குத் தனங்கள். பிரம்மாண்ட ஹோட்டல் செட். அருமையான வண்ணம் குழைத்த பாடல்.

அபூர்வமான பாடல் ஆனால் அனைவரையும் கிறங்கடிக்கும் பாடல்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by சிவா on Thu Dec 19, 2013 3:51 pm

அனைத்தும் அருமையான பாடல்களின் தொகுப்புகள்!  நன்றி 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Fri Dec 27, 2013 10:56 pm

மற்றோர் அபூர்வ கானம்.

ஆசை அறுபது நாள், 1976ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். வி.குமாரின் இசையில் அருமையான பாடல்கள். இது கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் ஒரு நாளில் முடியாது என்று தொடங்கும். இனிமையான பாடல்


avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Sat Dec 28, 2013 8:50 am

திரு.சோ அவர்களின் கை வண்ணத்தில் உருவான 'மிஸ்டர் சம்பத்' என்ற திரைப்படத்திலிருந்து திகட்டாத ஒரு பாடல். ஷூட்டிங் எடுப்பது போன்ற ஒரு காட்சி. இயக்குனராக நடிக்கும் முத்துராமன் நடிகையாக நடிக்கும் ஜெயாவை ஒரு காதல் டூயட் படமாக்கும் போது தன்னை ஹீரோவாக எண்ணி ஜெயாவுடன் ஆடிப் பாடி மகிழ்வது போன்ற பாடல். பாடலின் துவக்கத்தில் 'மெல்லிசை மன்னர்' இந்தப் பாடலுக்கு டியூன் போடுவது போன்ற காட்சிகள் சுவை. மயக்கும் எஸ்.பி.பியின் குரல், கிறங்கடிக்கும் சுசீலாவின் குரல் நம்மை இன்பத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். அருமையான மெலடி. "ஆரம்பம் யாரிடம்?.... உன்னிடம்தான்".... என்று தொடங்கும் என் சிந்தையை மயக்கிய பாடல். நீங்களும் பார்த்து மகிழுங்களேன்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Sat Dec 28, 2013 8:55 am

அன்பு வீயார் சார்,

குமார் அவர்களின் இசையில்
'ஆசை அறுபது நாள்' படத்தில் இனிமையாக ஒலிக்கும் மிக மிக அபூர்வ பாடலான

'ஒருநாளில் முடியாதது
உறவாட சுகமானது'

பாடலை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! இது போன்ற அதிகம் வெளிச்சத்திற்கு வராத சிறப்பான பாடல்களை இங்களித்து எங்களை சந்தோஷக் கடலில் மிதக்க வைப்பதற்கு தங்களுக்கு மிகவும் நன்றி! தொடரட்டும் தங்களுடைய அபூர்வ கானங்கள்.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Wed Jan 08, 2014 2:40 pm

விழியைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் குருடரை ஏன் படைத்தான்
விளக்கைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் இருளையும் ஏன் படைத்தான்

...

அன்றைய முதலாய் இன்றைய வரைக்கும்
யாருக்கும் புரியவில்லை
ஆயிரம் இருந்தும் சாத்திரம் இருந்தும்
கேள்விக்குப் பதில் இல்லை

வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்
இதில் வளர்ந்தது சமுதாயம்
வந்தபின்னே கேள்வியில்லை இதில்
வாழ்வது தான் நியாயம்

...

என்ன அற்புதமான சிந்தனை... கானல் நீர் திரைப்படம் பாடல்களுக்கென்றே பிரபலமான பாடல். இப்பாடல் அதற்கு உதாரணம். அத்தனைப் பாடல்களும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும்.

குறிப்பாக பி.பி.ஸ்ரீநிவாஸின் மனமென்னும் மாளிகை மேலே பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.

கானல் நீர் படப்பாடல்களைக் கேளுங்கள்.

http://www.inbaminge.com/t/k/Kaanal%20Neer%20-%20Old/

இதே படத்தில் பானுமதி பாடிய வழி தேடிவந்தாய் பாடலை எப்போது கேட்டாலும் மெய் சிலிர்க்கும். சிறுவயதில் கேட்டது முதலே மனதில் பதிந்து விட்டது.

இப்படத்தை பழைய பட நிழற்படத்திரியில் நினைவூட்டிய வாசு சாருக்கு நன்றி.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by பார்த்திபன் on Wed Jan 08, 2014 3:45 pm

@veeyaar wrote:
விளக்கைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் இருளையும் ஏன் படைத்தான்

இந்த வரி இடிக்கிறதே ஐயா,

இருளென்ற ஒன்று இல்லாதிருந்தால் விளக்கிற்கு ஏது வேலை?
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Wed Jan 08, 2014 4:58 pm

பழைய பாடல்கள் என்றாலே அவை திகட்டாத தேன் போன்றவை தானே.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by pon.sellamuththu on Wed Jan 08, 2014 9:06 pm

அனைவருக்கும் வணக்கம்.

பாரதி விஷ்ணு வர்த்தனனை விட 1 வயது மூத்தவர்.

"பாட்டெழுதட்டும் பருவம்" பாடலை பாடியவர்கள்
P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா ஆகிய இருவருந்தான்.

"பாட்டெழுதட்டும் பருவம்" - "பூப்போல மலர மொட்டுவைத்தான்" -
ஆகிய இரு பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி.

இரண்டாம் பாடலின் இடையில் வரும் அருமையான வரிகள்.

புருவம். .என்னும. .வில்லெடுத்து
பூவிழி. . .என்னும். .கணைதொடுத்து
பருவம். .என்னும். .அழகியதேரில்
பாவை. . வந்தாள். .படையெடுத்து


. . . . . . . . . . . . . . . . . . . . .கவிஞர் வாலி.

வனிதையின். .புருவமே. . . . வளைந்த. . . வில்லாகி
விழிக. . . . . . . .ளிரண்டும். . . வீழ்த்தும். . . கணையாகி
விழிகளை . . . .கணையாக. . புருவத்தை. .வில்லாக
வாலியின். . . . வரிகளிங்கு. .வந்ததோ. . . உவமைகொண்டுஎன்றும் அன்புடன் . . பொன். செல்லமுத்து
avatar
pon.sellamuththu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by ayyasamy ram on Wed Jan 08, 2014 9:39 pm

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33602
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Mon Jan 13, 2014 10:04 am

'யாருக்கு மாப்பிள்ளை யாரோ' திரைப்படத்தில் வரும் அதி அற்புதமான அபூர்வ மெலடி பாடல். பாலாவும், சுசீலாவும் இழைத்துப் பின்னியிருப்பார்கள். ஜெய்சங்கரும், ஜெயசித்ராவும் பாடுவதாக வரும் டூயட் பாடல். பூக்கள் அலங்கரிக்கப் பட்ட தோணியில் ஏரியில் உல்லாசமாக காதலர்கள் தங்களை மறந்து பாடுவது போல அமைந்த பாடல்.

'முத்துக்கள் சிந்தி
தித்திக்கும் ஒளியில்
கண்ணே விளையாடு

செவ்வந்திப் பூவின்
கன்னங்கள் மீது
சித்திரக் கோலமிடு'

விஜயபாஸ்கரின் அற்புத மெல்லிசைப் பின்னணியில் நம் நெஞ்சை இதமாக வருடும் பாடல். என்னை மிகவும் இன்பத் தொந்தரவு செய்த பாடல். நீங்களும் மனதைப் பறி கொடுக்கலாம். என்ன தயார்தானே!

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Thu Jan 16, 2014 12:31 am

வாசு சார்
விஜயபாஸ்கர், கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர். ராஜன் நாகேந்திரா, ஜி.கே வெங்கடேஷ் என இவர்கள் கோலோச்சிய காலம் கன்னட திரையுலகின் பொற்காலம் எனலாம். தமிழில் பல ஆண்டுகளுக்கும் முன்பே அவர் இசையமைத்திருந்தாலும், எஸ்.பி.முத்துராமன் அவர்கள் விஜயபாஸ்கரிடம் பெற்ற பாடல்கள் தனித்தன்மையுடனும் 70களில் பிற்பகுதியில் இளைஞர்களை வெகுவாக ஈர்க்கும் வகையிலும் அமைந்தன. அவருடைய இசையமைப்பில் வெளிவந்த படங்களில் நிச்சயமாக பாடல்கள் ஹிட்டாகும் என்று விநியோகஸ்தர்கள் நம்பும் அளவிற்கு அற்புதமான இசையமைப்பும் பாடல் மெட்டும் இருந்தன.

அப்படி ஒரு பாடலைத் தான் தாங்கள் மேலே தந்திருக்கிறீர்கள். இலங்கை ரேடியோவில் அன்றாடம் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இப்பாடல் இடம் பெற்று விடும். அந்த அளவிற்கு அங்கிருந்த அறிவிப்பாளர்களிடம் ஈர்ப்பை உண்டாக்கிய பாடல்.

இதே ரீதியில் 70களின் பிற்பகுதியில் நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடல்.

கண்மணி ராஜா திரைப்படத்தில் எஸ்.பி.பாலா, சுசீலா குரலில் மெல்லிசை மன்னர் இசையில்

காதல் விளையாட கட்டிலிடு கண்ணே...

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Jan 16, 2014 8:32 am

எனக்கும் என் இளைய வயதில் ரசித்த பாடல்கள் தான் இவை. இனிய நினைவுகளை மீட்டுத் தருகிறீர்கள். நன்றி ஐயா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by ayyasamy ram on Thu Jan 16, 2014 10:12 am

-
  
-
இன்று நான் கேட்டு ரஸித்த பாடல்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33602
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Fri Jan 17, 2014 10:42 pm

நன்றி வீயார் சார்.

'கண்மணி ராஜா' திரைப்படத்தின் 'காதல் விளையாட கட்டிலிடு கண்ணே' திரைப்பாடலை ரசிகாதவர்கள் இருக்கவே முடியாது. எந்தக் காலத்திலும் மறக்க இயலாத பாடல். அது போல அதே திரைப்படத்தில் 'ஓடம் கடலோடும்' பாடலும் மிகவும் புகழ் பெற்ற பாடலாகும்.

தாங்கள் இசையமைப்பாளர் ராஜன் நாகேந்திராவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். எனது மனம் கவர்ந்த இன்னொரு இசை அமைப்பாளர். இவர் இசை அமைத்த தெலுங்கு டப்பிங் படமான கமல் நடித்த 'இருநிலவுகள்' படத்தில் பாலா பாடும் 'ஆனந்தம் அது என்னடா' என்ற பாடல் அற்புதமான ஒன்று. கமலின் நல்ல நடனமும், பிற துணை நடன நடிக நடிகையரின் பங்களிப்பும் மிகவும் ரசிக்கத் தக்க வகையில் இப்பாடலில் அமைந்துள்ளதைக் காணலாம். இப்போது அதை நாம் காணலாம்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum