ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 ayyasamy ram

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 ayyasamy ram

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

கமல்ஹாசனின் கவிதைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 Raje87

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அபூர்வ கானங்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Mon Dec 02, 2013 9:12 pm

First topic message reminder :

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.

இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.

விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down


Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Wed Jan 22, 2014 10:56 am

'என்ன முதலாளி சௌக்கியமா'? என்ற வித்தியாசமான கம்யூனிஸ கொள்கைகளை விளக்கும் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பாலா அவர்கள் ஜெமினி கணேசனுக்காகப் பாடும் 'அன்பைக் குறிப்பது அனா... ஆசையின் விளக்கம் ஆவன்னா... என்ற இந்தப் பாடல் இனிமையிலும் இனிமை. பாலாவின் குழையும் குரலில் காதலியிடம் நாசூக்காக தன் காதலை சிலேட்டில் அ முதல் ஃ வரை ஒவ்வொரு எழுத்தாக எழுதி ஒவ்வொரு எழுத்துக்கும் காதலை மையமாக வைத்து வார்த்தைகளை தெரிவிக்கும் போது நம் மனம் கொள்ளை கொண்டு போகும். பள்ளிக் குழந்தைகளை வைத்து அவர்களுடன் ஜெமினி ஆடியபடி கே.ஆர்.விஜாவிடம் காதலை உணர்த்துவது அற்புதம். அது போல் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற கணிதக் குறியீடுகளை எழுதி வாழ்க்கையோடு அவைகளை ஒப்பிட்டு பாடுவது இன்னும் சிறப்பு. கே.ஆர் விஜயாவின் அலட்டாத முக பாவங்கள் அற்புதம். எம்.எஸ்.வி அவர்களின் அற்புத இசையில் அமைந்த இப்பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடலாகும்,.Last edited by vasudevan31355 on Wed Jan 22, 2014 11:18 am; edited 1 time in total
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by ayyasamy ram on Wed Jan 22, 2014 11:02 am

அருமை...
-
தொடருங்கள்...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33605
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by subasu on Wed Jan 22, 2014 5:45 pm

மகிழ்ச்சி  மகிழ்ச்சி 
avatar
subasu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 57
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by ayyasamy ram on Thu Jan 23, 2014 1:13 pm

நல்ல பதிவு..
-
ரஸித்தேன்..நன்றி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33605
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Sat Jan 25, 2014 9:54 pm

'அவள்' படத்தில் சங்கர் கணேஷ் இசையமைப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'கீதா......ஒரு நாள் பழகும் உறவல்ல'... என்ற பாடல். பாலாவும், சுசீலாவும் இணைந்து பாடியுள்ள பாடல். இரட்டையர்கள் இசையில் பின்னி எடுத்திருப்பார்கள். பேஸ் கிடார் அருமையாகக் கையாளப் பட்டிருக்கும் பாடல் இது.

உனக்காகப் பிறந்தேனே...
உயிரோடு கலந்தனே வா...

என்ற சுசீலா பாடும் சரண வரிகளின் முடிவில் பேஸ் கிடார் மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும். சசிகுமார், 'வெண்ணிற ஆடை' நிர்மலா இப்பாடலுக்கு நடித்திருப்பார்கள். Fast beat வகைப் பாடல் என்று சொல்வார்களே! அத்தகைய பாடல் இது. எஸ்.பி.பி அவர்களின் இளமையான குரல் இன்னும் துள்ளும் இளமையாக இப்பாடலில் கொடி கட்டிப் பறக்கும். வண்ணப் படம் வேறு. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய படம். கதை அமைப்பிற்காகவும், காட்சிகளின் அமைப்பிற்காகவும் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற A சர்டிபிகேட் பெற்ற படம். 'தோரஹா' என்ற புகழ் பெற்ற ஹிந்திப் படத்தின் தழுவல் இது. இந்தியில் சத்ருகன் சின்ஹா, 'இதயக்கனி' புகழ் ராதா சலூஜா நடித்த படம். 'அவள்' படத்தின் மூலம் வில்லன் நடிகர் ஸ்ரீகாந்த் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்தப் படத்திலிருந்து இறுதி வரைக்கும் பல படங்களில் கற்பழிப்புக் காட்சிகளுக்கென்றே முத்திரை குத்தப்பட்ட நடிகர் ஆனார் அவர். படமும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 'வெண்ணிற ஆடை' நிர்மலா அதுவரை இல்லாத அளவிற்கு பிகினி உடையிலும், கற்பழிப்புக் காட்சிகளிலும் நடித்திருந்தார். இப்போது 'கீதா... ஒருநாள்' பாடலைப் பார்ப்போம்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by சின்னக் கண்ணன் on Sun Jan 26, 2014 3:20 pm

தேவகோட்டையில் என் ஒன்றுவிட்ட அக்காவின் கணவர்  இருந்தார்..இப்போது இல்லை. அவர் என்னவேலையெல்லாம் செய்தார் என்றெல்லாம் தெரியாது...அவருக்கு ஐந்து குழந்தைகள்..அத்தனையும் பெண்..

என் சின்ன வயதில் மதுரை ஒருதரம் வந்திருந்த போது நைட் ஷோ போலாம் வா என்று கூட்டிக் கொண்டு போனார்..கருப்பு வெள்ளைப்படம்..

ஹோவென்று ரயில் ஓட டைட்டிலுடன் பாடல்..பயணம்..பயணம்..
அப்போது கேட்டு மனதில் பச்சக் என்று பதிந்த வரிகள்..

புகை வண்டி ஓட்டிட ஒருவன் அதுசெல்லும் வழிசொல்ல ஒருவன்
அந்த இருவரை நம்பிய மனிதன்..
அவர்களை நடத்துபவன் தான் இறைவன்
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ...(அஃப்கோர்ஸ் இறைவன் தான்)(எம்.எஸ்.வி யின் கணீர்க் குரல்..)

நிற்க.. எழுதப் போவது இந்தப் பாட்டு அல்ல..இடம் பெற்ற இன்னொரு பாட்டு..அதைப் பற்றிச் சொல்லும் முன்:

பயணம் படத்தின் கதை கொஞ்சம் புகையாகத் தான் நினைவில். ரயிலில் செல்லும் பயணிகள் சிலரின் வாழ்க்கை அனுபவங்கள்..செந்தாமரை, விஜயகுமார், ஜெயச்சித்ரா போன்றோர் மட்டும் நினைவில்..கொஞ்சம் ஓ.க்கேயாகத் தான் இருக்கும்..

ரயில், பயணிகளின் கதை என மாறி மாறி ப் பயணிக்கும் திரைக்கதையில் இடைவேளைக்கு அப்புறம் திடீரென ஜெயச்சித்ராவும் விஜயகுமாரும் (படத்தில் ராணுவ வீரன் என்று சொல்வார்கள்) டூயட் பாடுவார்கள்..அன்யூஸ்வலாக நல்ல மெலடி..
வரிகளும் பிற்காலத்தில் கேட்ட போது கொஞ்சம் கவர்ந்தது..

ஒரு ஆண் பெண் காதல் வசப்படுவதற்குக் காரணம் - காரணமே இல்லை என்று சொல்ல முடியாது. இருவருக்குள்ளும் ஒரு common இண்ட்ரெஸ்ட் இருந்திருக்கும் அல்லது காமன் இண்ட்ரெஸ்ட் உருவாகியிருக்கும்...என நினைக்கிறேன் (கண்ணா..நல்லா சிலேடை சொல்ற போ..)

அதை அழகாகப் பாடல் வரியில் பிடித்திருப்பார் கவிஞர் (கண்ணதாசன் என நினைக்கிறேன்..ஐயம் நாட் ஷ்யூர்)

படக்கென்று ஆரம்பித்து அழகாக முடிந்து இன்னும் நீண்டிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கும்பாடல்..(எவ்வளவு தமிழ்)

இரண்டு வரிகள் ஆண் இரண்டு வரிகள் பெண் என மாறி மாறி வரும் டூயட்..ஜேசுதாஸ் வாணிஜெயராம்..கலக்கியிருப்பார்கள்..

**
ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
அதுதான் காதல் பண்பாடு....

ஆனபின்னாலே இருபக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு....

தேவாமிர்தம் தேனிதழ்கள்
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்

மஞ்சள் ரோஜா தென்றல் பட்டு
அஞ்சக் கண்டேன் நான் வந்தேன்

மாலைகள் ஏந்து மங்களச் சாந்து
மார்பினில் நீந்து என்னைத் தந்தேன்..

நாடக மேடை திரை இல்லை
நாயகி வந்தாள் கவிபாடி

நாயகியுடனே துணை இல்லை
நாயகன் வந்தான் துணை தேடி

மின்னல் ரோஜா பொன்னில் ஊற்றி
கையில் வந்தது உறவாடி

கண்ணன் ராதா ராமன் சீதா
வந்தார் இங்கே நம்மைத் தேடி

ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
அதுதான் காதல் பண்பாடு....

ஆனபின்னாலே இருபக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு....

**
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by ayyasamy ram on Sun Jan 26, 2014 4:33 pm

-
ஆரம்பக் காலம்...

பாடலை யூ ட்யூபில் கேட்டு மகிழலாம்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33605
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Mon Jan 27, 2014 10:27 am

1970-இல் வெளிவந்த 'ஏன்'? படத்தில் எனக்கு பிடித்த மிக அபூர்வமான பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளைய குரல், தங்கக் குரல், குழைந்து குழைந்து குதூகலமூட்டும் இனிய குரலில் ஒலிக்கும் 'இறைவன் என்றொரு கவிஞன்' என்ற அருமையான பாடல். டி.ஆர். பாப்பாவின் இசை அமைப்பில் காலமெல்லாம் நம் நெஞ்சை வருடும் பாடல். ரவிச்சந்திரன், லஷ்மி ஆகியோர் நடித்த இப்படம் பெரிய ஹிட்டடிகாமல் போனாலும் அற்புதமான பாடல்களால் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகிறது. பல பேர் இப்பாடலை கேட்டு மறந்திருக்கலாம். அல்லது பாடலை நினைவில் நிறுத்தி படம் என்னவென்று தெரியாமல் குழம்பலாம். இப்போது குழப்பம் நீங்கி விடும். பாடலைக் கேட்டவுடன். மனதில் உள்ள குழப்பமும் நீங்கி விடும். அவ்வளவு அருமையான வரிகள். கவிஞன் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்ததை கற்பிக்கும் பாடல். இறைவன் முதல் மனிதன் வரை அற்புதமாக எடுத்துக் காட்டுகளுடன் அருமையான தத்துவங்களை அழகுற சொல்லியிருக்கிறார் இப்பாடலில் கவிஞர். வரிகளை கவனியுங்கள்.

கண்களில் தொடங்கி
கண்களில் முடித்தான்

பெண்ணிடம் பிறந்ததை
பெண்ணிடம் கொடுத்தான்

மண்ணிலே நடந்ததை
மண்ணுக்கே அளித்தான்

வானத்தில் இருந்தே
கவிதையை முடித்தான்

அடடா! வார்த்தை விளையாட்டுகள் விளையாடும் காலத்தை வென்ற கவிஞனே! என்னே உன் சிறப்பு.

பாடலை ஒவ்வொரு வரியாக அனுபவித்து பாருங்கள்.

புரியும். மனம் தெளியும்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Fri Feb 07, 2014 11:57 am

வாசு சார்
ஏன்... ஏன்...
இப்படி எங்களை வாட்டுவது ஏன்...
இந்த மாதிரி அபூர்வ பாடல்களைத் தேடித் தந்து
எங்களை உற்சாகமூட்டுவது ஏன்..

எல்லாம் நம் மக்கள் மீது தாங்கள் கொண்ட அன்பே தான் காரணம்...

என்று நான் சொல்ல மாட்டேன்

ஏன்...

காரணம், அது நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமோ...
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Fri Feb 07, 2014 11:59 am

நடிகர் திலகத்தின் துணை திரைப்படத்துடன் வெளியான திரைப்படம் கண்ணோடு கண். இளைய திலகம் பிரபுவின் ஆரம்ப காலப் படம். இப்படத்தில் இடம் பெற்ற எனைத் தேடும் மேகம் அந்தக் காலத்தில் எஸ்.பி.பாலா வின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றது. இன்றும் தான்.

பாடலுக்கும் காணொளிக்கும் தொடர்பில்லை

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by myimamdeen on Sat Feb 08, 2014 8:14 am

 
avatar
myimamdeen
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 392
மதிப்பீடுகள் : 130

View user profile http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Sat Feb 08, 2014 9:42 am

வீயார் சார்.

தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி. 'கண்ணோடு கண்' படப் பாடலும், 'அலைகள்' படத்து பாடலும் பிரமாதம். 'பொன்னென்ன பூவென்ன கண்ணே!
அருமையான மெய்மறக்கச் செய்யும் பாடல்.

அலை அலையாய், அடுக்கடுக்காய் பல துன்பங்களைத் தொடர்ந்து அனுபவிக்கும் நாயகி சந்திரகலா. ஸ்ரீதரின் அற்புதமான இயக்கம். சிந்தை குளிரும் பாடல்கள். என்ன புண்ணியம்? வெகுஜன ரசனைக் குறைவால் 'அலைகள்' படம் பாதாளத் தோல்வி. இருக்கட்டுமே. இசையும், பாட்டும் என்று தோற்பதில்லையே தங்களைப் போன்ற தலையாய ரசிகர்கள் இருக்கும் போது.


Last edited by vasudevan31355 on Sat Feb 08, 2014 9:54 am; edited 1 time in total
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by vasudevan31355 on Sat Feb 08, 2014 9:50 am

'டெல்லி மாப்பிள்ளை' என்றொரு படம். அனைவருக்கும் அதிகம் பரிச்சயமில்லாத படம். 1968- இல் வெளிவந்த இப்படத்தில் ஹீரோ ரவிச்சந்திரன், ஹீரோயின் ராஜஸ்ரீ. இசை 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன். அற்புதமான கருத்துக்கள் நிறைந்த ஒரு பாடல் இப்படத்திலுண்டு. 'ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்' என்று தொடங்கும் இப்பாடலைப் பாடியவர் திரு. டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். மிகச் சிறந்த கற்பனை வளம் கொண்ட இப்பாடலை இயற்றிய கவிஞருக்கு இப்படிப்பட்ட சிந்தனை எப்படித் தோன்றியது என்பதை இன்றளவும் நினைக்கும் போது எனக்கு ஆச்சர்யம் குறைந்தபாடில்லை.

அன்பை பிரதானமாக விளக்கும் இப்பாடலின் வரிகளைப் பாருங்கள். ஆண்டவன் ஒருநாள் கடை வைத்து பல பொருள்களை வைத்து வியாபாரம் செய்வதாகவும், பல்வேறு மக்கள் பல்வேறு பொருள்களை வாங்கிச் செல்வதாகவும், ஆனால் யாருமே அன்பை மட்டும் வாங்க மறந்து விட்டதாகவும் கவிஞர் அருமையான சங்கதிகள் கூறுகிறார். என்ன ஒரு கற்பனை!

ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார் (ஆண்டவன்)

குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒருசிலர் மேலுக்கு விலை கேட்டார்

எதையும் வாங்கிட மனிதர் வந்தார்
விலை என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து
அன்பை வாங்கிட எவரும் இல்லை

அன்பை வாங்கிட எவரும் இல்லை

படித்தீர்களா? எப்படி? ஆண்டவன் விரித்து வைத்த கடையில் பெண்கள் அழகை மட்டுமே வாங்கி, ஆண்கள் ஆசையை மட்டுமே வாங்கி, தலைவர்கள் புகழை வாங்கி, புலவர்கள் பொய்களை வாங்கி, குருடர்கள் விழிகளை கேட்டு, ஊமைகள் மொழியை கேட்டு, உறவினர் இறந்தவரின் உயிரைக் கேட்டு, வேறு சிலர் சும்மா ஒப்புக்கு மேலுக்கு விலை கேட்டார்கள்.

ஆனால் இதயம் என்ற செல்வத்தைத் தந்து அன்பு என்னும் அரிய பொருளை வாங்கத்தான் எவரும் மறந்து விட்டார்கள்.

என்ன ஒரு படிப்பினையை உணர்த்தும் பாடல். உண்மைதானே! அன்பு அரை கிலோ விலை  என்னவென்று கேட்கும் காலமல்லவோ இது!

அருமையான மனதை மயக்கும் அமைதியான இசை. தென்றலாய் நம் மனதை வருடும் பாடல். நடுவில் கவர்ச்சிப் பாவையாய் ராஜஸ்ரீ. அழகான ரவிச்சந்திரன்.

அருமையான விசில் சப்தத்துடன் தொடங்கும் இப்பாடல் என் மனதில் மட்டுமல்ல. உங்கள் அனைவர் மனதிலும் இனி நீங்கா இடம் பெறட்டும். பெறத்தான் வேண்டும்.

இப்போது பாடலைப் பார்க்கலாமா?

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 08, 2014 11:02 am

வீயாரின் அபூர்வ கானங்கள் அபூர்வமான திரி ! பலரின் மனத்தைக் கொள்ளை கொள்வது ! ஆனந்தம் பொங்குவது !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4401
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by veeyaar on Wed Feb 12, 2014 7:33 am

சௌந்தரபாண்டியன் சார் மிக்க நன்றி.

வாசு சார்
டில்லி மாப்பிள்ளை மிகவும் அருமையான பாடல்களைக் கொண்ட படம். குறிப்பாக தாங்கள் பகிர்ந்து கொண்ட கருத்தாழமிக்க பாடல் என்றைக்கும் மனதில் நிலைத்திருக்கும். ஒவ்வொரு வரியும் ஆழமான பொருள் கொண்ட இப்பாடலை தாங்கள் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.
தொடருங்கள்.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அபூர்வ கானங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum