ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

2018 புத்தாண்டு பலன்கள்
 Meeran

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மனித உடலில் பரிணாமத்தின் மிச்சங்கள்

View previous topic View next topic Go down

மனித உடலில் பரிணாமத்தின் மிச்சங்கள்

Post by கவின் on Fri Dec 13, 2013 7:14 pm

சில சமயம் சில விநோதங்களை
பார்த்திருப்போம்.
உதாரணத்துக்கு - பறக்க முடியாத
கோழிக்கு இறக்கை, அதேப்போல
மெக்ஸிகோவுல
குகைகளில் வாழற BLIND FISH அப்படிங்கற ஒரு மீனை கண்டுபுடிச்சிருக்காங்க.
அதுக்கு கண் மாதிரியான ஒரு அமைப்பு இருக்கு, இருந்தாலும் அதால பார்க்க முடியாது. அதாவது, அதுக்கு கண் இருக்கு, ஆனா,
அது வேலை செய்யாது.

இதையெல்லாம் பார்க்கும் போது, நமக்கு ஒரு கேள்வி கண்டிப்பா தோணும். தேவையே இல்லாம எதுக்காக
இப்படி ஒரு உறுப்பை வெக்கணும்
அப்படிங்கறதா தான் அது இருக்கும். ஆனா, நாம தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, அந்த உறுப்புகள் எல்லாம் ஒரு காலத்துல, அனேகமா அந்த குறிப்பிட்ட விலங்குகளோட
மூதாதையர்கள்
அதாவது முதன் முதல்ல இந்த விலங்குகள் உருவான சமயத்துல இந்த உறுப்புகள் பயன்பாட்டுல
இருந்திருக்கும். பின்னாடி, காலப்போக்குல அதனோட தேவை இல்லாம போயிருந்திருக்கும்.
உதாரணமா, மனித உடலில் இருக்கிற குடல் வால்.

பரிணாமம்
அப்படிங்கறது இப்படிதான் இருக்கும். இப்படிதான் நடக்கும். தேவைக்கு ஏற்ப புதுப்புது உறுப்புகள் உருவாகறதும்,
தேவையில்லாத
உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சி போறதும் தான் ஒரு இனம் இன்னொரு இனமா பரிணாமம்
அடையிது அப்படின்னு சொல்றாங்க.
பின்னாடி வாலோட, நாலு கால்ல நடந்திட்டு இருந்த குரங்கு மரமேறி விளையாடிட்டு
இருந்தப்போ அதுக்கு வால் தேவைப்பட்டுச்சி.
அதுவே நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சதும், வாலோட உபயோகம்
குறைஞ்சி தேவைக்கு ஏற்ப அது பின்னாடி காணாமலே போயிடுச்சி. குரங்கு இனம் பின்னாடி மனித இனமா உருவாயிடுச்சி. இது எல்லாமே நமக்கு நல்லா தெரிஞ்சது தானே, இதுல சுவாரஸ்யமான விஷயம் என்னன்னு கேக்கறிங்களா ? இருக்கு. சொல்றேன் அதுக்கு, நாம இன்னைக்கு பதிவுக்கு போகணும்.

இப்படி ஒரு இனம் இன்னொரு இனமா மாறிட்டாலும், அந்த பழைய உறுப்புக்கள், சில இனங்கள்ல மொத்தமா மறைஞ்சிடாம அப்படியே தங்கிடும். அது மாதிரி குரங்கு மனிதனா மாறிட்டாலும் கூட, போன இனத்து மிச்சம் ஏதாவது இருக்கா அப்படின்னு தெரிஞ்சிக்க தேடினப்போ கிடைச்ச சில தகவல்கள் தான், இன்றைய சில சுவாரஸ்யங்கள் பதிவு. ஆனா, இன்னொரு விசயமும் நாம தெரிஞ்சிக்கணும். இந்த பயனற்ற உறுப்புக்கள் அப்படின்னு நாம நெனச்சிட்டு இருக்கிற எல்லாமே நிஜமா பயன் இல்லாதது அப்படின்னு நம்மளால உறுதியா சொல்ல முடியாது.
இப்படி வேணும்ன்னா சொல்லிக்கலாம். அந்த உறுப்புகளோட
தற்போதைய வேலை என்ன, இப்போ குறிப்பிட்ட உயிரினம் எப்படி அதை பயன்படுத்திக்குது
அப்படின்னு இன்னும் நமக்கு தெரிய வரல அப்படின்னு வேணும்னா, வெச்சிக்கலாம். உதாரணமா, மனித அப்பன்டிக்ஸ் - குடல் வால் , மனிதன் முன்னொரு காலத்துல காட்டுல
நாடோடியா திரிஞ்சிட்டு இருந்தப்போ, மனிதன் பச்சையா, சமைக்காம சாப்பிட்ட தாவர செல்களோட செல்லுலோசை ஜீரணம் செய்ய உதவியா இருந்த ஒரு உறுப்பு. மனிதன் நெருப்பு கண்டுபிடிச்சி, சமைக்க
கத்துக்கிட்டதுக்கு அப்புறம்
, அதன் பயன்பாடு குறைஞ்சி
இப்போ ஒரு பயனில்லாத உறுப்பா ஆயிடுச்சி. ஆனா, அதை பயனில்லாதது அப்படின்னு சொல்ல முடியாது. அதுக்கான இப்போதைய
பயன்பாடு என்ன அப்படின்னு யாராவது கண்டுபுடிக்கும்
போது தான் தெரிய வரும். ஓகே...!!! இந்த மாதிரியான உறுப்புகள்
இருக்கறது நெஜம்னா, மனித உடலிலும் இது மாதிரி சில இருக்கலாம் இல்லையா ? ஸோ, மனித உடலில் இருக்கிற பரிணாம வளர்ச்சியில உபயோகப்படாம போயிட்ட, ஆனாலும் உடலில்
இன்னமும்
ஒட்டிட்டு இருக்கிற சில உறுப்புகளை பத்தி நாம பார்க்க போறோம்.

1. HUMAN TAIL BONES - மனித வால் எலும்புகள்

மனிதன் குரங்கா இருக்கும் போது, அதுக்கு வால் இருந்தது. அதே மாதிரி சில இனங்களில் உதாரணம் - தவளை,
அதுக்கு விரல்களுக்கு நடுவே ஒரு ஜவ்வு மாதிரி நீந்தறதுக்கு வசதியா ஒரு ஜவ்வு மாதிரி இருக்கும். அதுவே, மனித இனமா மாறினப்போ, அந்த வால் மறைஞ்சிடுச்சி. ஆனா, இப்பவும் மனித குழந்தை உருவாகும் போது அதுக்கு என்ன என்ன இருக்கும் தெரியுமா? தவளை மாதிரி விரல்கள் ஜவ்வு வெச்சி ஒட்டியிருக்கும்.
குட்டியா வால் கூட இருக்கும். ஆனா, குழந்தை உருவாகி, கர்பப்பையில வளர வளர இந்தவால் நம்ம உடம்புக்குள்ள போயிடும். வால் எலும்புகள் இப்பவும் நம்ம உடல்ல இருக்கும். நெறைய குழந்தைகள் உலகம் முழுக்க இப்பவும் வாலோட பிறந்ததா பதிவு செய்யப்பட்டிருக்கு.

2. APPENDIX - குடல் வால்

குடல்ல சிறுகுடலும் பெருங்குடலும் இணையிற இடத்துல,
நீட்டிட்டு இருக்கிற ஒரு வால் மாதிரியான உறுப்பு. மனிதன் காட்டுல நாடோடியா திரிஞ்சி உணவை வேக வெக்காம சாப்பிட்ட காலத்துல செல்லுலோசை ஜீரணம் பண்ண உதவியா இருந்த உறுப்பு.
இப்போ காலப்போக்கில் மனிதன் சமைக்க ஆரம்பிச்சிட்டதால
செல்லுலோசை தனியா ஜீரணம் பண்ண வேண்டிய அவசியம் இல்லாம போயிடுச்சி. அதனால ஒரு சிறு விரல் அளவு நீட்சியாக மாறி போயிட்டது.

3. ஞானப் பல் - WISDOM TOOTH

மனிதனுக்கு 32 பற்கள் அப்படின்னு நமக்கு தெரியும். ஆனா, ஒரு 21-22 வயசு வரைக்கும் நமக்கு 28 பல் தான் இருக்கும், மீதி நாலு பல்லு, அதுக்கு அப்புறம் தான் வரும்னு எத்தனைப் பேருக்கு தெரியும் ? அந்த தாமதமா வர, கடைசி நாலு பல்லு தான் ஞானப்பல் அப்படின்னு சொல்லப்படுது. பொதுவா,
விலங்குகளுக்கு நாலு கடைவாய்ப்பற்கள் இருக்கும். இந்த நாலு பல்லும் விலங்குகளுக்கு
கிடைக்கக்கூடிய
இறைச்சி உணவை அரைக்கவும், கிழிக்கவும் உபயோகப்படும். ஆனா, மனிதனுக்கு மூணு தான் இருக்கும். அதுவே 21-22 வயசுல இன்னும் ஒரு கடைவாய்ப்பல் வளரும். அது விலங்குகளுக்கு இருக்கும் நாலாவது MOLAR TOOTH - கோரைப்பல்லோட நீட்சி.

4. காது மடல் நீட்சி

மேற்புற, உட்புறம் மடிந்த மனிதக்காது மடல் அமைப்பை எத்தனை பேர் கவனிச்சிருக்கீங்க
அப்படின்னு தெரியல. அதுல ஒரு சின்ன நீட்சி இருக்கும். அது குரங்கோட காது மடலோட மேற்புற அமைப்போட நீட்சி.

5. விட்டமின் - C தயாரிக்க உபயோகப்படும் ஜீன்

மனித குரோமோசோம்ல இருக்கிற பல ஆயிரம் ஜீன்கள்ள விட்டமின் C தயாரிக்க பயன்படும் ஜீன்களும் இருக்கு. ஆனா, அது வேலை செய்யும் திறன் இல்லாதது. அதாவது அந்த ஜீன்கள் மனித இனத்துக்கு முந்தைய நிலை வரை உபயோகத்துல இருந்திருக்கு. ஆனா, மனித இனம் வளர்ந்த பிறகு, சாப்பிடற
உணவிலேயே நமக்கு தேவையான
அளவு விட்டமின் C கெடைச்சிடறதால,
அது வேலை செய்யும் திறனை இழந்து, முந்தைய நிலையோட
அடையாளமா இன்னமும் இருக்கு. இந்த மாதிரி இருந்தும், வேலை செய்யும் திறன் இல்லாத ஜீனை சூடோ-ஜீன் - PSEUDO-GENE
அப்படின்னு பேரு.

6. ERECTOR PILI - (இதை எப்படி தமிழ் படுத்தறது அப்படின்னு தெரியல...!!!)

குளிர்காலத்துல,
நமக்கு குளிரும்போது, ஏதாவது பயம் மாதிரியான சூழ்நிலை ஏற்படும்போது நம்ம முடி எல்லாம் நிக்கும். இதை எல்லாரும் கவனிச்சிருப்போம்.
இதுக்கு காரணம் மயிர் கால்கள் சுத்தி இருக்கும் தசைகள் தான். குளிர் மாதிரியான சூழ்நிலையில் நாம எதிர்க்கொள்ளும் பொது மயிர்க்கால்கள் சுத்தி இருக்கும் தசைகள் இறுகி முடியை நேரா நிக்க வெக்கும். இதுக்கு காரணம் நம்ம தோலை குளிர்ல இருந்து காக்க. இது எப்படி பரிணாமத்தோட மிச்சம்
ஆகும்...? இதை பத்தி நான் தெரிஞ்சிக்கிட்டப்போ
எனக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான். போன இனம் வரை அதாவது குரங்கு வரை,
எல்லா மிருகங்களுக்கும் உடல் முழுதும் முடி இருந்தது. அவங்களுக்கு முறையான தங்கும் இடம் இல்லாம, எல்லா சூழ்நிலையிலும் வாழ வேண்டி இருந்தது. ஸோ, அந்த அந்த பருவ காலங்களில்
மிருகங்களை காப்பாத்த முடியை வெச்சி, அதுக்கு இந்த தசைகளை வெச்சி, குளிர்காலத்துல
முடியை நேரா நிக்க வெக்க பயன்பட்டது. இது அந்த மிருகங்களுக்கு இயற்கை குடுத்த கொடை. இப்போ மனிதனா, பரிணாமம் அடைஞ்சதுக்கு அப்புறம், நாம வாழும் இடம், சூழ்நிலை எல்லாம் மாறிட்டதால
நமக்கு முடி தேவைப்படல. உடலில் இருந்த முடி எல்லாம் இப்போ மாறி போயிடுச்சி. ஆனாலும், அந்த தசைகள் மட்டும் இன்னமும் போன இனத்தொட
அடையாளமா இருக்கு. குளிர் மாதிரியான சூழ்நிலையில
மயிர்க்கால்கள் பக்கத்துல இருந்து அதே வேலையை இன்னமும்
செய்திட்டு இருக்கு. அதே மாதிரி இன்னொரு தசை இருக்கு. AURICULAR MUSCLE - ஆரிக்குலார் தசைகள் அப்படிங்கற
ஒரு தசை நம்மளோட காதை சுத்தி இருக்கு. இதுக்கு பெருசா ஒரு வேலையும் கிடையாது. அதுவே, விலங்குகளை எடுத்துக்கிட்டா,
அதனுடைய
காதை சுத்தி இதே தசைகள் இருக்கு. இதுக்கு என்ன வேலை அப்படின்னா, காதை தேவைக்கு ஏற்ப, தேவைப்பட்ட திசையில் திருப்பறது. முக்கியமா, கழுதை,
குதிரை எல்லாவற்றிலும் அதனோட காதுகள் அப்பப்போ திரும்பறது நாம பார்த்திருப்போம்.
அதுக்கு காரணம் இந்த தசைகள் தான் காரணம்.

7. VOMERONASAL ORGANS (VNO) - வோமரோ நாசல் ஆர்கன்ஸ் - நுகர் உறுப்பு (தமிழ் படுத்தினது சரியான்னு தெரியல

மக்களே ...!!! :-( பாம்பு மாதிரியான கீழ்மட்ட விலங்குகளிலும்,
எலி மாதிரியான சில பாலூட்டிகளிலும்
மூக்கு பக்கத்தில இந்த உறுப்பு இருக்கும். ஃபிரமோன்ஸ் பத்தி நாம கண்டிப்பா கேள்வி பட்டிருப்போம்.
ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு தனிப்பட்ட மிக மிக பிரத்தியோகமான
வாசனையை, அதுவும் பாலின தூண்டுதல் செய்யக்கூடிய
ஒரு வாசனையை வெளியிடும் திறன் இருக்கும்.
இது கண்டிப்பா எல்லா விலங்குகளுக்கும்
பொருந்தும்.
உதாரணத்துக்கு எலிகளை எடுத்துக்கலாம்.
எலின்னு இல்ல, பார்க்க ஒரே மாதிரி இருக்கிற எல்லா விலங்குகளையும் எடுத்துக்கலாம்.
இவை எல்லாம் பார்க்க ஒரே மாதிரி இருக்கும்போது,
எப்படி இதனுடைய ஜோடி எல்லாம் இவைகளை சரியா அடையாளம்
கண்டுபிடிக்குது...? இங்க தான் ஃபிரமோன்ஸ் அப்படிங்கற,
வாசனை சுரப்பு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த விலங்குகள்
ஒவ்வொன்னுக்கும்
ஒரு மாதிரி இருக்கும். இந்த வாசனையை ஞாபகம் வெச்சி தான் ஒவ்வொரு விலங்கும் தன்னுடைய
ஜோடியை அடையாளம் வெச்சிக்கிது. இதுக்கும் இந்த உறுப்புக்கும் என்ன சம்பந்தம்னா, இந்த உறுப்புதான் இந்த குறிப்பிட்ட
வாசனையை நுகர உதவி செய்யிது. இதே உறுப்பு மனிதர்களிலும் இன்னமும் இருக்குன்னா
நம்புவிங்களா...? ஆனா, அதனுடைய
வேலை செய்யும் திறனை இழந்து, சும்மா ஒரு அடையாளத்துக்காக நம்ம மூக்குக்குள்ள இருக்கு. இந்த உறுப்புக்கும் மூளைக்குமான
நரம்பு செல்கள் இணைப்பு எதுவும் இல்லை.
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 172
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: மனித உடலில் பரிணாமத்தின் மிச்சங்கள்

Post by தமிழ்செல்விஞானப்பிரகசம் on Fri Dec 13, 2013 7:46 pm

பயனுள்ள பகிவுக்கு நன்றிகள்.
avatar
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: மனித உடலில் பரிணாமத்தின் மிச்சங்கள்

Post by டார்வின் on Fri Dec 13, 2013 8:20 pm

    
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: மனித உடலில் பரிணாமத்தின் மிச்சங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum