ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?

View previous topic View next topic Go down

மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?

Post by கவின் on Sat Dec 14, 2013 8:02 am

ஜாதி, மத, மொழி, நாடு என்ற
பேதமின்றி, இந்த பூமியில் உள்ள
அனைத்து மனிதர்களும் ஒரு தாய் மக்களே. அந்தத் தாய் யாரென்று அறிந்தால் மிகவும் ஆச்சரியமும், பெருமையும் கொள்வீர்கள். அந்தத் தாய் 'நட்சத்திரம்' தான்.

நம்மில் பலர் நட்சத்திரம் (ஸ்டார்) ஆக வேண்டும் என்று கனவு கண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு, தாங்கள் நட்சத்திரத்தின்
குழந்தைகள்தான் என்ற செய்தி பெருமையாகத்தானே இருக்கும். நாம் அனைவரும் எப்படி நட்சத்திரத்திலிருந்து வந்தோம்
என்று விளக்கமாக பார்ப்போம்.

உயிர்கள் உருவாக பல தனிமங்கள் தேவை. மனிதர்களாகிய நமக்கு ரத்தம் சுத்தமாவதற்கு வேண்டிய ஆக்சிஜென், எலும்பின் உறுதிக்குத் தேவையான கால்சியம்,
ரத்தத்திற்கு வேண்டிய இரும்புச் சத்து, மற்றும் கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் என்று தனிமங்களும், கூடவே உப்பில் உள்ள சோடியம் மற்றும் பொட்டசியம், மக்னிசியம் போன்ற பல தனிமங்கள் தேவை.
அவை இல்லை என்றால் உயிர் வாழ
இயலாது என்பது அனைவர்க்கும்
தெரியும். மேலும் தங்கம், வெள்ளி, அலுமினியம் போன்ற பல தனிமங்கள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன.

இந்தத் தனிமங்களை ஒன்று, இரண்டு,
மூன்று என்று வரிசைப்படுத்தி அறிவியலாளர்கள்
ஓர்
அட்டவணையை ஏற்படுத்தியுள்ளனர்
(PERIODIC TABLE). இந்தத் தனிமங்களைப்
பற்றி ஆராய்ந்து அதன் அமைப்பு, குணங்கள், பயன்கள்
போன்றவற்றை அறிந்து, அவைகளைப் பயன்படுத்தி, நாம் வாழ்வை இனிதே நடத்த அறிவியலாளர்கள்
வழி வகுத்திருக்கிறார்கள்.

மாரடைப்பு வந்தால் உயிருக்குப் போராடும் ஒருவருக்குத் தேவையான, ஆக்சிஜன் மற்றும் பல மருந்துகளைக் கொடுத்து, பாசக்கயிறைப்
போட்டு இழுத்துக் கொண்டிருக்கும் எமனிடம் போராடி, அந்த பாசக்கயிறை அறுத்து, போய்க்கொண்டிருந்த
உயிரை மீண்டும் கொண்டு வர உதவுவார் மருத்துவர். ஒவ்வொரு தனிமங்களின் குணங்களை வெகு நாள் ஆய்ந்து அறிந்த அறிவியலாளர்கள் பணி தான் அவர்களுக்கு உதவியாயிருக்கின்றது.

இந்த தனிமங்கள் எல்லாம் பூமியில் கிடைக்கின்றன. சரி பூமிக்கு இவை எப்படி வந்தன? நட்சத்திரங்களில் தான் முதலில் இவை எல்லாம் உருவாகின
என்று அறிவியலாளர்கள் சொல்லுகிறார்கள். ஏன் பூமியில் நாம் காணும் அனைத்துப் பொருட்களும் நட்சத்திரத்திலிருந்துதான்
உருவாயின.


நட்சத்திரத்திலிருந்து அவை பூமிக்கு எப்படி வந்தன? நம் சூரியன் என்ற நட்சத்திரத்தில் இது போன்ற பொருட்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
ஆனால் நம் சூரியனில் உருவாகும் பொருட்கள் நமக்குக் கிடைக்காது. நம்முடைய சூரியனுடைய தாத்தாவாகிய முதல் தலைமுறை நட்சத்திரம் உருவாக்கியதை நாம் அனுபவிக்கிறோம்.
முன்றாம் தலைமுறையைச் சேர்ந்த நமது சூரியன் உருவாக்கும் பொருட்கள் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கும்,
உயிர்களுக்குத்தான்
உபயோகமாகும்.

எப்படி என்று பார்க்கலாமா? சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்
தோன்றி, ஒரு பலூனைப் போல விரிவடைந்த இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இரண்டே இரண்டு தனிமங்கள் தான் இருந்தது. அவை ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்(சுமார் 75 சதவீதம் ஹைட்ரஜன், 25 சதவீதம் ஹீலியம்). வாயுக்களான இவை இரண்டுமல்லாமல் நாம் காணும் நட்சத்திரங்கள், கோள்கள் எதுவுமே, ஏன் எந்த தூசும் கூட பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இல்லை.

ஆச்சரியம் என்னவென்றால் அந்த இரண்டு தனிமங்கள் (வாயுக்கள்) தான் இப்போது நாம் காணும் கோடிக்கணக்கான
நட்சத்திரங்களும், அதைச் சுற்றிவரும் கோள்களும், இந்த பூமியும், அதில் நாம் காணும் அனைத்துப் பொருட்களுமாக
உருமாறின.

எப்படி?

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் தோன்றிய ஹைட்ரஜன் அணுக்களின்
ஈர்ப்புவிசையினால் ஏற்பட்ட பிணைப்பினால் தான் பிரபஞ்சத்தின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகின. பல கோடி வெப்பத்தைக் கொண்ட இந்த நட்சத்திரத்தின் உள்ளே, அந்த வெப்பத்தினால் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்ற தனிமம் புதிதாக உருவாகியது. இந்த இணைப்பில் தோன்றும் ஆற்றல் தான் ஒளியாகிறது. நட்சத்திரங்களுக்குள்ளே தொடர்ந்து பல
கோடி ஆண்டுகளாக இந்த இணைப்பு நடந்துகொண்டே இருக்கின்றது.

நட்சத்திரதிற்குள்ளே இரண்டு ஹைட்ரஜன்
இணைந்து ஒரு ஹீலியம் அணு புதிதாக உருவாவதுபோல,
கூடவே இன்னும் பல அணுச்சேர்க்கைகள்
நடக்கின்றன. புதிதாக உண்டான இரண்டு ஹீலியம் அணுக்கள்
இணைந்து 'பெரிலியம்' என்ற தனிமம் உண்டாகிறது. அதோடு நிற்காமல் ஒரு ஹீலியம் அணுவும் ஒரு பெரிலியம் அணுவும் சேர்ந்து உயிர்களுக்குத் தேவையான முக்கியமான தனிமம் 'கார்பன்' உருவாகிறது.

புதிதாக தோன்றிய அணுக்களின்
இணைப்பு மேலும் தொடர்கிறது.
இரண்டு பெரிலியம் அணுக்கள் இணைந்து நம் உயிரின் ஆதாரமான பிராணவாயு (OXYGEN) உருவாகிறது.
இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்து ஒரு 'மெக்னீசியம்' அணு உருவாகிறது. இப்படி பற்பல அணுச்சேர்க்கைகள்
நடந்து ஒன்று, இரண்டு என்று தனிமங்களை வரிசைப்படுத்திய
அட்டவணையில் உள்ள 26 என்ற எண் கொண்ட இரும்பு வரை நட்சத்திரங்களுக்கு உள்ளே பெருமளவில்
உற்பத்தியாகிறது. நட்சத்திரங்களுக்குள் உள்ள சுமார்
கோடி டிகிரி வெப்பத்தில் தான் இந்த அணுச்சேர்க்கைகள் நடக்க முடிந்தது.

அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் புதிய
தனிமங்களை உண்டாக்கும் பணியில் மனிதன் இறங்கி சில தனிமங்களை உண்டாக்கி வெற்றியும்
பெற்றுள்ளான். முன்னதாக பூமியில் உள்ள தனிமங்களிலிருந்து தான் அவை உருவாக்கப்பட்டன. சிறிய அளவில் தான் இவைகளை உண்டு பண்ண முடியும். பெருமளவில் பூமியில்
கிடைப்பவை நட்சத்திரங்களில்
உற்பத்தியானவை.

தனிமங்களின் அட்டவணையில்
இரும்பிற்கு மேல் உள்ள தனிமங்களான தங்கம், வெள்ளி, யூரேனியம் போன்றவை உண்டாக, நட்சத்திரங்களில் உள்ள வெப்பத்தைக் காட்டிலும் அதிக வெப்பம் தேவை. அதனால்
நட்சத்திரங்களுக்குள்
தனிமங்கள் உற்பத்தி, மூடப்பட்ட
தொழிற்சாலை போல நின்று விடுகிறது. பிறகு எப்படி அவை உருவாகின? அந்த முதல் தலைமுறை சூரியன் தன வாழ்நாட்கள் முடிந்தபின் அதிபயங்கரமாக வெடித்துச் சிதறும். பிரபஞ்சத்தில் அது மிக அற்புதமான காட்சியாகும். சூப்பர் நோவா என்று கூறுவார் இதனை. அப்படி வெடிக்கும் போது உண்டாகும் அதிபயங்கர வெப்பத்தில் இரும்பு அணுக்களும் அணுச்சேர்க்கையால்
இணைந்து இரும்பிற்கு மேல்
அணு எண் கொண்ட யூரேனியம், தங்கம், வெள்ளி போன்ற மற்றெல்லா தனிமங்களும் உண்டாகி, நட்சத்திரம் வெடிக்கும் போது, வாயுக்களாக பிரபஞ்சத்தில் தூக்கி எறியப்பட்டன. பல கோடி மைல்கள் பரந்து விரிந்து கிடக்கும், பார்க்க பரவசமூட்டும் இந்த வாயுக்கூட்டங்களை 'நேபுல்லா'
என்றழைப்பர். இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டதில்
நட்சத்திரத்தில் உருவான எல்லா தனிமங்களுடன், பிரபஞ்சத்தில் ஏற்கனவே உள்ள ஹைட்ரஜன் வாயுவும் கலந்திருக்கும்.

பிரசவ மருத்துவமனையில் பெண்கள்
அனுமதிக்கப்படும்போது எல்லோருக்கும்
தெரியும், குழந்தைகள் பிறக்கப் போகின்றன என்று. அதே போல பிரபஞ்சத்தில் காணும் இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டங்களை காணும்
விண்வெளி ஆய்வாளர்களுக்கு அந்த
வாயுக்கூட்டத்தில்
'நட்சத்திரங்கள்' பிறக்கப் போகின்றன
என்று தெரியும் காரணம் , ஈர்ப்பு விசை தன் பணியை அங்கு துவக்கும். ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றை ஒன்று இழுத்து, வெப்பமும் அடர்த்தியும் அதிகமாகி, புதிய அடுத்த தலைமுறை நட்சத்திரம் (நமது சூரியனைப் போல) உருவாகும். நட்சத்திரத்தின் தோற்றம் ஒரு அதி பயங்கர வெடிப்புடனும்,
அதிர்வுடனும் நடக்கும். புதிதாக தோன்றிய நட்சத்திரத்தைச் சுற்றி, தூசுகளும், வாயுக்களும் வெடிப்பினால்
எறியப்பட்டு அவைகள் அந்த நட்சத்திரத்தை சுற்ற ஆரம்பிக்கும். அவைகளும் ஈர்ப்பு விசையால் இணைந்து, முதலில் சிறு சிறு பாறைகளாக உருவாகி, அந்தப் பாறைகள் மேலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, அந்த நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோள்களாக உருவாகும். அந்த தூசுகளிலும், வாயுக்களிலும் தான் எல்லா தனிமங்களும் உள்ளனவே. அதனால்தான் அந்தக் கோள்களில் ஒன்றான நமது பூமியிலும் அனைத்து தனிமங்களும் கிடைக்கின்றன.

சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் தவிர மற்ற பாறைகளிலும் (ASTEROID) இந்த தனிமங்கள் இருக்கும். ஏனென்றால் சூரியன் உருவாகும்போது உண்டான
கோள்களைப்போல
தோன்றியதுதான் அந்த பாறைகளும். நமது சூரிய குடும்பத்தைச் சுற்றிவரும் அந்தப் பாறைகளில் தங்கம் உட்பட பல தனிமங்கள் இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு கோள் கண்டுபிடிக்கப் பட்டது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிய அந்தக் கோள் முழுவதும் வைரங்கள்
நிறைந்து கிடக்கின்றன. ஒருதடவை சென்று வந்தால், உலகத்தின் முதல் கோடீஸ்வரன் ஆகிவிடலாம். சிக்கல் என்னவென்றால் அந்த கோள்
நாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. எப்படியாவது முயற்சி செய்து அங்கே போய்
சேர்ந்து விடலாம் என்று நினைப்போருக்கு ஒரு மோசமான
தகவல் என்னவென்றால் அங்கு வெப்பம் சுமார் 4000 டிகிரி வரை உள்ளது என்பதுதான்.

பூமியில் உள்ள சத்துக்களை எடுத்து விளையும்
பயிர்களைத் தின்று வளரும் மிருகங்களையும், அந்த மிருகங்களையும்,
பயிர்களையும்
உண்டு வளரும் நாமும் அடிப்படையில் நட்சத்திரத்தில்
இருந்து வந்தவர்கள் தான். இனி யாரவாது நம்மைப் பார்த்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால், எந்த வித ஐயமுமின்றி 'நான் நட்சத்திரத்திலிருந்து வருகிறேன்'
என்று கூறலாமல்லவா? நட்சத்திரத்தின்
உள்ளே உற்பத்தியான நாம் எல்லாம் அதன் பிள்ளைகள் அல்லவா? நாம் அனைவரும் ஒரு தாய் மக்களல்லவா? ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி,
புவியின் பல பகுதிகளுக்கு பரவிச் சென்ற மனிதம் ஒரு மாபெரும் குடும்பம் என்பதை இந்த அறிவியல் உண்மை மீண்டும் நிரூபிக்கின்றதல்லவா?

ஒரு தாய் மக்களிடையே, ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் கலவரங்களும், போர்களும் வேண்டுமா? ஒருகாலத்தில் குகைகளில் கற்களை மட்டுமே ஆயுதமாய்
உபயோகித்து வாழ்ந்த காட்டுமிராண்டிகளின்
வாழ்க்கையைப் பார்த்து நாம் கேவலமாக
இப்போது சிரிக்கின்றோம். அவர்கள் அறியாமல் செய்த தவறு அது. நாகரீகம் நன்கு வளர்ந்த இந்த காலத்தில் ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் சண்டையிடும் நம்மைப் பார்த்து நம் வருங்கால சந்ததியினர் 'படித்த முட்டாள்கள்' எனக் கூறி எள்ளி நகையாடுவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- ஜெயச்சந்திரன
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 172
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 16, 2013 8:51 pm

ஜெயச்சந்திரன் vrkawin ஆகியோர்க்கு நன்றி ! இயன்ற அளவு , அறிவியலை எளிமைப்படுத்தித் தந்த விதம் அருமை ! பயனுள்ள கட்டுரை !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?

Post by கவின் on Mon Dec 16, 2013 8:55 pm

நன்றி
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 172
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum