ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காரைக்கால் அம்மையார் !!

View previous topic View next topic Go down

காரைக்கால் அம்மையார் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Dec 15, 2013 12:58 am

மனித பிறவியை பக்தித்தொண்டால் கடந்தவர்கள் தமிழக மரபில் அதிகம் ! அத்த்கையவர்களுள் பெண்ணாகப்பிறந்தும் உய்வடைந்த ஆத்மா - புனிதவதியார் !

பெண்ணாகப்பிறந்தவர்கள் துறவற வாழ்வு மேற்கொள்வது அவ்வளவு எளிதானதன்று !

பக்தி பெறுகும் போது யாத்திரை அல்லது சேத்திராடனம் என்பது அவசியமான ஒன்றாகப்போய் விடுகிறது

ஆழ்வார்கள் அல்லது நாயன்மார்கள் தம் உள்ளம் முழுதும் நிரம்பி வழியும் தங்கள் அய்யனை ஏன் ஊர் ஊராகத்தேடி அலையவேண்டும் ! ஒவ்வோரிடமும் சென்று அவர்கள் மங்களாசாசனம் அல்லது பதிகம் ஏன் பாடவேண்டும் !

இந்த சரீரம் இருக்கும் காலம் வரை அது ஒரு கடமையாக - செயல்பாடாக அவசியப்பட்டு விடுகிறது

அதில் அவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி என்பதோடு - சாதாரன பொதுமக்கள் பலர் உய்வடைய அவர்கள் யாத்திரை அந்தப்பகுதியில் ஒரு அருள் தெளிப்பு - விதை தூவல் என்பதாகவும் இறைவனாலும் பயன்படுத்தப்படுகிறது

உலகமும் உலக வாழ்வும் அதை அழகாக்கிக்காண்பிக்கும் அசுர ஆவிகளும் பூமியில் விதவிதமான மாயைகளை அள்ளித்தெளித்து மனித ஆத்மாக்கள் இறைவனை தேடுவதிலிருந்து வேறு வழியில் மனிதர்களை திருப்பிவிட்டுக்கொண்டிருக்கும் போது பரலோக ராஜ்ஜியத்தின் - இறைபேரரசின் விழுது இத்தகையவர்களின் மூலமாகாத்தான் பூமியில் தெளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்

ஆதி தமிழரின் இறையியலாக இருந்து இந்தியா முழுதும் பரவிய இந்து தர்மத்தில் புரட்டாசி ; கார்த்திகை ; மார்கழி மாதங்களை ஆன்மீக வாழ்வுக்கானவையாக இறைதேடலாக யாத்திரைக்குரியதாக ஆக்கி வைத்திருக்கிறது

இந்த யாத்திரையை ஆண்கள் எளிதாக மேற்கொள்ளும்போது துறவற வாழ்வுக்கு அனுமதி கணவனிடமிருந்து கிடைக்கப்பெற்றவுடன் புனிதவதியார் என்ற வணிகர் குல மெல்லியளார் விரும்பி மேற்கொண்ட உருவம் `` பேயுருவம் `` ஆகும் !

அது நினைத்த உடன் நினைத்த இடம் செல்லுவதற்கும் பற்று பாசம் பந்தம் பாதுகாப்பு அனைத்தையும் துறந்து கவலை அற்று இறைவனே பற்றுக்கோடு என்னும் மன நிலைக்கு வந்த காரைக்கால் அம்மையாருக்கு அழகிய பெண் வடிவம் ஒரு பெரும் சுமையல்லவா ?


இறைவனை வேண்டிப் பேய் வடிவத்தைப் பெற்ற புனிதவதியார் “காரைக்கால் பேய்” என்றும் `` செடிதலைக் காரைக்காற் பேய்’ என்றும் கனல்வாய் எயிற்றுக் (எயிறு-பல்) காரைக்காற்பேய் என்றும் தம்மைத் தாமே கூறி மகிழ்ந்து கொள்கிறார்.

அவரின் சுருக்கமான வரலாறு :

புனிதவதியார் காரைக்காலில் பெருவணிகன் தனதத்தனின் குலக் கொழுந்தாய்ப் பிறக்கிறார். செல்வச் செழிப்போடு வளர்கின்றார். அவரைப் பரமதத்தனுக்குச் சீரோடும் சிறப்போடும் மணம் செய்து கொடுத்த தனதத்தன் தம் மகளைப் பிரிய மனமின்றிப் பெருஞ்செல்வம் தந்து மணமக்களைக் காரைக்காலிலேயே தங்க வைக்கின்றார்.

இருவரும் இனிய இல்லறம் நடத்திவந்த வேளையில் பரமதத்தனைக் காண வந்த வணிகன் ஒருவன் இரு மாங்கனிகளைத் தருகிறான். அதனை இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறான் பரமதத்தன்.! சிவனடியார் ஒருவர் அரும்பசியுடன் வர, உணவு சமைக்கப்பட்டு காய் சமைக்கப் படாத நிலையில் அந்த மாங்கனிகளில் ஒன்றை இலையில் இட்டுச் சிவனடியாரின் பசியை ஆற்றுவிக்கிறார் புனிதவதியார்.

நண்பகலில் உணவு உண்ண வந்த பரமதத்தனுக்கு மற்றொரு மாங்கனியைப் பரிமாறுகிறார். அது சுவையாக இருந்தமையால், தாம் அனுப்பியவற்றில் மீதமிருக்கும் மற்றொன்றையும் வைக்கும்படி கேட்கிறான் பரமதத்தன். செய்வதறியாது புனிதவதியார் இறைவனை வேண்ட, இறையருளால் ஒரு கனி கிடைக்கிறது. அதனைப் பரமதத்தனுக்குப் பரிமாறுகிறார்.

முன்னர் அந்த மாங்கனியைப் பரிமாறியது சிவனடியாருக்குத்தான். அப்படியிருக்க இதற்குப் புனிதவதியார் அஞ்ச வேண்டிய காரணம் இல்லை !அடியாருக்கு உணவு படைப்பது அஞ்ச வேண்டிய செயலாக ஒருபோதும் இருக்க முடியாது. ஒரு வேளை, தான் இல்லத்தில் இல்லாத போது ஒரு ஆடவர் இல்லத்திற்கு வருவதை விரும்பாதவனா பரமதத்தன் என்னும் வினா எழுவதைத் தடுக்க முடியவில்லை.

இறையருளால் பெற்ற கனியின் சுவை முன்னதன் சுவையைக் காட்டிலும் மதுரமாக இருக்கவே “இஃது ஏது” என்று வினவுகிறான் பரமதத்தன். புனிதவதியார் உண்மையைச் சொல்கிறார். அப்படியென்றால் “மற்றொரு கனியைப் பெற்றுக் காட்டு” என்கிறான் பரமதத்தன். இறையருளால் மற்றொன்றும் பெற்றுக் காட்டுகிறார் புனிதவதியார். அச்சம் கொண்ட பரமதத்தன் இவள் மானிடப் பிறவி அல்லள்; தெய்வப் பிறவி என்று அவரை விட்டுப் பிரிந்து விடுகிறான்.

புனிதவதியாரைப் பிரிவதற்காக வங்கப் பயணம் மேற்கொண்ட பரமதத்தன் மிகுதியாகப் பொருள் ஈட்டித் திரும்புகிறான். மதுரையில் ஒரு வணிகர் குலப் பெண்ணை மறுமணம் புரிந்து வாழ்கிறான்.

புனிதவதியாரின் பெற்றோர்க்கு இச்செய்தி தெரிய வருகிறது. அவர்கள் சுற்றம் சூழ அவனிடம் புனிதவதியாரை அழைத்து செல்கின்றனர். அவனோ,

“மானுடம் இவர்தாம் அல்லர் நற்பொருள்

தெய்வமாதல் நானறிந்து அகன்றேன்”


என்று கூறிப் புனிதவதியாரின் பாதத்தை வணங்குகிறான். அத்துடன் நின்றானா? வந்தவன் எப்படி வருகிறான்? மறுமணம் புரிந்து கொண்டு தன் மனையாளுடனும் மகளுடனும் வந்து “இவள் என் மகள். உங்கள் பெயரைச் சூட்டியுள்ளேன். நாங்கள் வாழ அருள்வீராக” என்று பாதத்தில் விழுந்து பணிகிறான்.

அத்துடன்

`பொற்பதம் பணிந்தேன் நீரும்

போற்றுதல் செய்ம்மின்”

என்று உற்றார் உறவினரையும் புனிதவதியாரை வணங்குமாறு கூறுகிறான்.

அப்போது புனிதவதியார் பேயுருவை வழங்கும்படி இரைவனை வேண்ட அவ்வாறே பேயுரு பெற்று காரைக்கால் அம்மையாராக மாறுகிறார் ! ஊர் ஊராக பல தலங்கள் சென்று பல பதிகங்கள் பாடி இறுதியில் முக்தியும் பெறுகிறார் !

இந்தப்பேயுருவை அவர் பெற்றது கணவன் மேலுள்ள வெறுப்பாலா ?

மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும் ! ஆனால் ஆன்மவியலாக அதை நோக்கினால் அது அவராகவே விரும்பி ஏற்றுக்கொண்டது என்பது விளங்கும் !

இறை அனுபவம் என்பது ஒரு பிறவியில் முதிர்வதல்ல படிப்படியே அநுபூதி அடைவது ! சிவனடியார்க்கு ஒரு மாங்கனியை படைத்துவிட்டேன் என்று சொல்ல அவரால் முடியாததல்ல அதுவும் மாமனார் வீட்டு மருமகனுக்கு பயப்பட வேண்டிய அவசியம் என்ன ?

ஒரு மாம்பழத்தை வரவழைப்பது என்பது ஒரு சித்து அல்லது வரம் அதை ஏற்கனவே ஆன்மிக வாழ்வில் இறை அனுபூதியால் கிடைக்கப்பெற்று பயிற்சியும் செய்து பார்த்திருந்தாலும் பெண் என்ற இல்லற சிறையில் இருப்பவரால் வெளிக்காட்டமுடியாமலிருந்திருக்கும் ! சொந்தக்கணவனாலும் அதை உணராமல் சாதாரன ஒரு பெண்ணாகவே நடத்தப்பட்டிருப்பார்

மனைவி என்பவள் கணவனின் அனுமதியில்லாமல் துறவறம் மேற்கொள்ள கட்டுப்பாடு இருப்பதால் அவனிடமிருந்து விடுபடுவத்ற்கான செய்தியாக அதை பயன்படுத்தினார்கள் ! அத்ற்கு முன்பும் சில சிறு சிறு விசயங்கள் நடந்திருக்கும் அதை பரமதத்தனால் சரிவர புரிந்துகொள்ள முடியாமல் இருந்தாலும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்திருப்பார் அதனால்தான் மாம்பலம் வரவழைப்பதை கண்கூடாக கண்டதும் அவர் அம்மையாரை விட்டு பிரிந்து சென்று வேறு வாழ்வும் தேடிக்கொண்டார் ! புனிதவதியாரும் வலிய விடுதலை கேட்பதற்கு பதிலாக இச்செய்திகளின் மூலமாக அதை உருவாக்கிகொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்

அவ்வறு கணவனாலேயே தெய்வப்பெண் என சுட்டப்பட்டு பாதம் பணியப்பட்ட பிறகு அவர் ஏன் உள்ளம் வெதும்புவார் ?

ஆனால் பேயுருவம் கெட்டது வெறுப்பினாளல்ல ! அதும் ஒரு மனப்பக்குவமே !

கணவன் பொருளீட்ட வங்கம் சென்றபிறகு பக்தியில் அதிக ஈடுபாடு காட்டியிருப்பார்கள் ஆனால் உடலில் பெண்ணுருவில் இருப்பதால் மனம் எவ்வளவு பக்குவப்பட்டிருந்தாலும் செல்லுமிடங்களில் பக்குவமில்லாத ஆண்களால் பல இடரல்கள் வருவதை உணர்ந்திருப்பார் சொந்த ஊரிலேயே நினைத்த இடத்திற்கு செல்லமுடியாதது பெண்ணுருவால் என்பதால் பல ஊர்களுக்கு நினைத்த நேரத்தில் செல்ல ஆண்களால் இடஞ்சல் ஏற்படாத பேயுரு வேண்டும் என்று பல நாட்களாக உணர்ந்திருப்பார் !

கணவன் விடுதலை கொடுத்தவுடன் தனது ஆன்மீகப்பயணத்திற்கு உதவியாக அவ்வுருவை ஏற்றுக்கொண்டார் !

உலகியல் பார்வை வேறு ஆன்மீக பார்வை வேறு !

உலகியலுக்கு பெண்ணிய போராளியாக தெரிந்தாலும் ஆன்மீக முதிர்ச்சியினால் மனம் நோகாமல் விரும்பியே அவ்வுருவை எற்றுக்கொண்டார் என்பதுவே உண்மைஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி !
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum