ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!

View previous topic View next topic Go down

குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!

Post by sundaram77 on Wed Dec 18, 2013 1:23 pmநண்பர்களே ,
தமிழர்களின் அலட்சியத்தினால் அழிந்த தமிழ்ப் பனுவல்கள் பல ; நமது அபார பொறுமையினாலும் அக்கறையின்மையாலும் இப்போது கூட தமிழ்ச் சரித்திரம் இருட்டடிக்கப்படுவதை சகித்துக் கொண்டுதானே உள்ளோம்....
இப்படித்தான் எனது கடைசி இடுகையின் துவக்கம் அமைந்திருந்தது...

இந்த இடுகையின் முக்கிய நோக்கம் தமிழர் ஆதி , ஆதி ...காலந்தொட்டிருந்தே தமிழகத்தில் வாழ்ந்து வருபவர் என்பதை வலியுறுத்துவதே; ஏனெனில் இன்றும் சிலர் , தமிழர் நண்ணிலப் பகுதியிலிருந்து  ( Mediterranean )
பெயர்ந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சாதிக்கப் பார்ப்பது...

இது நிற்க ; மிகச் சமீபத்தில் புதுகை அருகே உள்ள திருமயம் கோட்டைப் பகுதியில் மிகப் பழங்காலத்திய சித்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ மையமானத் தமிழகப்பகுதிதான் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும் ; இன்னும் சரியாகச் சொல்லப்போனால் , சோழ மண்டலத்தையும் பாண்டிய நாட்டையும் பிரிக்கும் வெள்ளாறு புதுக்கோட்டை நகரின் தென் புறமாகத்தான் ஓடுகிறது ; பல சண்டைகளுக்கும் போர்களுக்கும் களமாக இவ்வாற்றங்கரை அமைந்திருக்கிறது . இப்பகுதியில்தான் இதைப் பதிப்பிக்கும் இவ்வெழுத்தன் பிறந்ததும் , வளர்ந்ததும் வசிப்பதும் !

சங்க காலத்தில் புகழுடன் இலங்கிய பல புலவர்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் .

திருமயம் கோட்டையானது தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள கடைசி கோட்டை என்றே எனக்குத்
தோன்றுகிறது . இதற்கு தெற்கே இதைப்போன்ற அமைப்புகள் இல்லை ! இக்கோட்டையானது இராமநாதபுரம் மன்னரான விஜயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்டது. இது புதுகை வழி செல்லும் தஞ்சை - மதுரை நெடுஞ்சாலையில் , புதுகையில் இருந்து 20 கி.மீ உள்ளது ! இதன் உட்புறமுள்ள சிவன் கோயிலும் , கோட்டையின் ஆக உச்சியில் இன்றும் உள்ள
பீரங்கியும் அதற்கு அருகில் , அவ்வளவு உயரத்திலும் என்றும் வற்றாத சுனையும் எவரையும் ஆச்சரியப்படச் செய்யும். ஆனாலும் , இதைக் காண வருகை தருவோர் மிகக் குறைவே !

தற்போது இக்கோட்டையின் நுழைவாயிலுக்கு மிக அருகில் அபாயகரமாய்த் தோன்றும் நிலையில் நிற்கும் ஒரு பெரும் தனிப்பாறையில் பூர்வ குடி மக்கள் தீட்டிய ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன ! இதை கண்ணுற்று , முதன் முதலாக உலகளாவிய கவனத்தை ஈர்த்திருப்பவர் தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சாராத ஒருவர்தான் ! இதே போன்றதொரு சித்திரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள் பிம்பேத்கா ( Bimbethka ) என்ற இடத்திலும் காணப்பட்டுள்ளது ! அது 30,000 ( முப்பதினாயிரம் ) வருடங்கள் பழமையானது ஆகும் ! அங்கு மட்டுமல்ல ; இன்னும் மெக்ஸிகோ , அர்ஜென்டினா முதலிய நாடுகளிலும் இதே அமைப்பிலும் இதே வண்ணத்திலும் உள்ள பாறை ஓவியங்கள் உள்ளன ! இவற்றின் பழமையும் இதே கால அளவிலேயே - 30,000 வருடங்கள் - உறுதிப்படுத்தப் பட்டுள்ளன .

ஆனால் , திருமயம் பாறையிலுள்ள பழங்குடியினர் வரைந்த ஓவியங்களின் வயதினை தொல்லியலாளர்கள் இனிமேல்தான் நிர்ணயிக்க வேண்டும் !

இன்னும் பத்தாண்டுகளானாலும் அப்படி ஏதும் உருப்படியாக நடந்து விடுமென நான் எண்ணவில்லை ...!!!???


[You must be registered and logged in to see this image.]


மேலே உள்ள படத்தில் உள்ள சித்திரங்கள் நாடோடி வாழ்க்கை முறையிலான வேட்டை ஆடும் விதத்தையும் அவர்களின் நடன அசைவுகளையும் காட்சிப் பொருளாக்குகின்றன. இவ்வோவியங்களைக் கண்டறிந்தவர் , இவற்றை மக்கள் சிதைத்து விடாமல் காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருப்பதுடன் , இப்பகுதியில் இன்னும் பல இருக்க வாய்ப்புள்ளதென்றும் கூறியுள்ளார் .

புதுகைப் பகுதி மிகப்பழங்காலத்தில் இருந்தே மக்கள் வாழும் இடமாக இருந்திருக்கிறது . இங்கு ஏராளமாகக்
காணப்படும் புதை இடங்களே இதற்கு சான்றாகும் ! புதுகைக்கு அண்மையில் ஜைன முனிவர்கள் வாழ்விடங்கள்
அமைந்துள்ள பழமையான சித்தன்னவாசலின் முன்புறத்திலும் இத்தகைய முன்னோர் புதை இடங்கள உள்ளன ;
அவற்றைச் சுற்றி வட்டமாக 20 அடி விட்டத்தில் செங்குத்தாக பட்டையான கருங்கற்கள் நிறுத்தப்பட்டிருந்தன ;
அவற்றையெல்லாம் நமது ' பெரு மக்கள் ' பெயர்த்து எடுத்து விட்டனர் !


இதற்கும் மிகப் பிற்காலமான சங்க காலத்திலும் இவை தமிழர் வதியும் இடங்களாக இருந்தன என்பதற்கு சங்க நூல்களே சான்று ! திருமயம் தாலுகாவிலுள்ள ஒலியமங்கலம் ஆனது ' ஒல்லையூர் ' என அப்போது வழங்கப்பட்டுள்ளது ;
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இவ்விடத்தை சார்ந்தவனே ; இவன் மறைந்த போது கீரத்தனார் என்பவரால் பாடப்பட்டு புறநானுறில் இடம் பெற்ற 242 - வது பாடலின் கடைசி வரிகள்


" வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே."

இவனின் மாண்பினை பறை சாற்றும் !

அதன்றியும் ஆவூர் ( ஆவூர் மூலம் கிழார் ) , எரிச்சி எனும் எரிச்சாலூர் , அவ்வையுடன் இணைத்து பார்க்கப்படும்
அவ்வையாபட்டி என்பனவெல்லாம் புதுகைப் பகுதியில் அமைந்தவையே .

கடல் வாணிபத்திலும் சிறந்திருந்தனர் இப்பகுதி மக்கள் என்பதனை இங்குள்ள கருக்காக்குறிச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 500 - க்கும் மேற்பட்ட ரோமானியர்களின் தங்க , வெள்ளிக் காசுகள் தெள்ளெனக் காட்டும்!இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள அகஸ்டஸ் தலை பொறித்த பொற்காசின் படம் ஈண்டுள்ளது ஆகும் !
[You must be registered and logged in to see this image.]

இந்தியாவிலேயே ரோமானியப் பேரரசின் காசுகளும் மற்றவையும் மிக அதிகமாக
அமராவதி ஆற்றங்கரைகளில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன ....இன்றும் கண்டெடுக்கப்படுகின்றன..!!


அன்புடன்,
சுந்தரம்
avatar
sundaram77
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 77
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum