ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..15...!!!..சங்கத் தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமா....

View previous topic View next topic Go down

குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..15...!!!..சங்கத் தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகமா....

Post by sundaram77 on Fri Dec 20, 2013 1:39 pm


நண்பர்களே ,
தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல , உலகில் தோன்றி , மறைந்த சமூகங்களிலும் இன்னும் நிலைபெற்று வாழ்கின்ற மற்றைய சமூகங்களிலும் மனித உறவுகள் தந்தை வழியும் , தாய் வழியும் அறியப்பட்டு வந்துள்ளன .சமூகத் தடத்தில் சில போழ்து தாயே குடும்ப உறவுகளை மட்டுமல்லாது , நிதி நிலைகளைக்கூட ஆண்டு வந்திருக்கிறாள். மிகச் சமீப காலம் வரை நமது அண்டை மாநிலமான கேரளாவில் தாய் வழி மாமன்களுக்கே பரம்பரை சொத்துரிமை மாற்றப்பட்டு வந்திருக்கிறது. இதனால் விளையும் தீங்குகளை உணர்வுடன் விரித்துரைப்பதே கவிமணி அவர்களின் ' மருமக்கள் வழி மான்யம்'!

இந்த விவரங்கள் இப்போது எதற்கு ...

சங்க இலக்கிய காலத்தில் - ஏறத்தாழ கி.மு 400-லிருந்து கி.பி. 200 வரை - குடும்பத்தினை வழி நடத்திச் செல்வதில்
தாயே சீர்மையான தலைமைப் பண்பினை பெற்றிருந்தாள் என்பதற்கு சான்றாக சங்க இலக்கியப்பாடல்கள் பல உள்ளன. ஆனாலும் , எனக்கு அவ்வப்போது மனதில் மிதந்து செல்லும் சங்க இலக்கிய வரிகளில் இவையும் உண்டு :


" என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணீரோ பெரும ! "


இவ்வரிகளுக்கு விளக்கம் தேவையில்லைதானே ....விஷயம் இதுதான் :
காளை ஒருவன் மனதும் கன்னி ஒருத்தியின் மனதும் ஒன்றிப்போய் விடுகின்றன ; காதலர் இருவரின் களவினை பெண்ணின் பெற்றோர் ஏற்கத தயங்குவது அன்றும் அவர்களுக்கு நேர்ந்தமையால் வேறு வழிப் புலப்படாது , கன்னி அவள் தன் மனதை கொள்ளை கொண்டவனுடன் இல்லறம் நடத்த அவனுடன் தன் இல்லத்தில் இருந்து வெளியேறி விடுகிறாள் ! இதனை 'உடன் போக்கு ' என்று தமிழ்ச் சமுதாயம் அன்று பரிவுடன் பார்த்தே அங்கீகரித்திருக்கிறது !!

சரி , நம் பாடலுக்கு வருவோம் . இது கலித்தொகையில் இடம் பெற்றுள்ள 9 - ஆம் பாடல். கன்னியின் இல்லத்தில் இளங்காலைப் பொழுதிலிருந்தே அவளைக் காணாதது தாய்க்கு கவலை தருகிறது . சிறிது நேரத்தில் மகளைத் தேடத் தொடங்கி விடுகிறாள் ; ஊர் எங்கும் தேடியும் பலனில்லை ; கடைசியாக ஊருக்கு வெளியில் சில அந்தணர்கள் தென்படுகின்றனர் - அவர்கள் அந்த நேரத்தில்தான் அருகமைந்த காட்டினின்றும் வெளிப்பட்டு ஊருக்குள் வரத் தலைப்படுகின்றனர் . அவர்களிடம்தான் அத்தாய் மனம் சோர்ந்து அவ்வினாவைத் தொடுக்கின்றாள் !அவள் கேட்பது இப்படித்தான் : ' எங்கள் மகளைக் காணவில்லை ; பிறிதொரு குடும்பத்தில் உள்ள ஒருவனைக் காணவில்லை ' எனக் கேட்கவில்லை ; " என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் " என்றே சொல்கிறாள் ; இருவரின் தந்தையர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை !
இது சில முக்கியமான வினாக்களைத் தோற்றுவிக்கிறது .


1. பிறந்த நாளிலிருந்து தங்கள்'குழந்தைகளை' வளர்த்து இன்று 'உடன் போக்கு' செல்லும் அளவிற்கு வந்ததற்கு தாய்கள் மட்டுமே பொறுப்பு என்றதலா...??!!
2. தந்தைகளின் பெயர்களை இதில் கொணர்தல் அவர்களுக்கு அவப்பெயர் உண்டாக்கும் என்பதாலா...??!!
3. இல்லை , காளையும் கன்னியும் உடன்பட்டு சென்ற காலத்தில் தமிழ்க் குடும்பங்களில் தாயே தலைமை வகித்ததாலா ...??!!

இது பற்றிய ஆழ்ந்த பொறுப்பான சமூகவியல் மற்றும் மொழியியல் ஆராய்ச்சியே இவ்வினாக்களுக்குத் தகுந்த விடையளிக்க முடியும்...!!

மேலும் இந்தப் பாடலில் , அத்தாயின் வினாவிற்கு அவ்வந்தணர்கள் அளிக்கும் ஆறுதலான சொற்கள் நம்மை உய்த்து , உணர்ந்து உளம் மகிழ்வடையச் செய்யும் !

அம்முதியோர்களின் முதல் வார்த்தைகளே 'காணேம் அல்லேம்' என்பதே ! ; தாயின் கவலை தோய்ந்த மனதிற்கு உடன் ஒத்தடம் கொடுப்பது போன்ற வார்த்தகள் அல்லவா இவை ! அதாவது , 'உன் மகளைக் காட்டிடைக் கண்டோம்' என்பதே அது ! இன்னமும் தண்ணென்ற குளிர் சொற்களில் அத்தாயை ஆறுதல் படுத்த முனைகின்றனர் ;


" ஆண் எழில் அண்ணலொடு அருஞ்சுரம் முன்னிய
மாண் இழை மடவரல் தாயிற் நீர் போறிர் "


அவளின் மகளைக் கற்புநிலை தவறா மாதரசி என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் , அக்காளையை அழகான உருவுடன் உயர்குணமும் கொண்ட அண்ணல் என்றும் போற்றிச் சொல்கின்றனர் ; உங்கள் மகள் பிழையான தேர்வினைச் செய்யவில்லை என அவளின் மனதில் கருணை ஒளி தோன்றச் செய்கின்றனர் .

அத்தோடு நிற்காது , மகளை இழந்தோமே எனும் தாங்கவொண்ணா துயரில் தவிக்கும் அத்தாய்க்கு இன்னும் பலவாறு தேறுதலும் ஆறுதலும் கூற முற்படுகின்றனர் !

தாயே , மலையிலே சந்தனம் தோன்றினும் அம்மலைக்கு அச்சந்தனம் பயனாவதில்லையே !

" மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்? "

நீருள்ளே இருந்துதான் முத்துக்கள் தேடி எடுக்கப்பட்டாலும் அணிபவர்க்குதானே அவை அழகூட்டுகிறன!
"....வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?"


இன்னிசை எழும்புவது யாழ் நரம்புகளிலிருந்துதான் எனினும் அதனை மீட்டுபவர்க்கு அன்றி யாழுக்கு அதனால் ஏது இன்பம் !

" ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்? "


இவ்வாறுதான் , அன்னையே , உங்களின் அருந்தவ மகளும் ! அவள் யாண்டும் உனை நீங்கிச் செல்ல வேண்டியவள் தானே ! மிகச் சிறந்த அருங்குணங்களோடு அழகிற் சிறந்தவனை அறம் வழுவாது ஒட்டி சென்ற அவளுக்கும் எத்தீங்கும் நேராது ; ஆதலால் , தாயே , நீங்களூம் வருந்த வேண்டா !

பெண்ணானவள் பிறந்த விடத்து உரியாராகார் என்பதையும் காதல் மணத்தினைக் கூட்டுவிக்க பெற்றோர் தடை செய்யலாகாது என்பதையும் இப்பாடல் நயமான இனிய உவமைகளால் அழகு படக் கூறுகிறது !

பெருங்கொடுக்கோவின் கவித்துவத்தையும் மனித வாழ்வின் இயல்பு நிலை அறிவையும் இப்பாடல் மனங்கவர் தன்மையோடு நம்மை நிறைக்கிறது !


முழுப்பாடல் :

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!-
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!'
'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;
பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,

நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

எனவாங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே.


சில சொற்களுக்கான பொருள் :

தாழ்ந்த - தங்கிய
கரகம் - மண்டலம்
சுவல் - தோள்
ஓரா - கருதாத
மாலை - இயல்பு
கொளை - கொள்கை
நடை - ஒழுக்கம்
கடத்திடை - வழியில்
கடம் - கடுமையான வழி
இறந்த - மிகுந்த
எவ்வம் - துன்பம்

நட்புடன்,

சுந்தரம்
avatar
sundaram77
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 77
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum