ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 M.Jagadeesan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 M.Jagadeesan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

View previous topic View next topic Go down

பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by சிவா on Sat Dec 21, 2013 4:33 pmஇது ஜாலியான கதை கொண்ட படம் என்பதால், நாமும் சும்மா ஜாலியாகவே ஒரு விமர்சனம் செய்வோம்.

காரமான கதையில், காமெடி கிஸ்மிஸ்களை வழி நெடுக தூவி, நடுவே லெக் பீஸ் (கவர்ச்சி) ஒன்றையும் வைத்து, கையில் கிடைத்த தன் அப்பா காலத்து பழைய மசாலா சரக்கையெல்லாம் சேர்த்து இனிப்பும், புளிப்பும், கசப்புமாக ‘பிரியாணி’ சமைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் தான் தெரிகிறது. அதில் பெரிய ‘மட்டன் பீஸ்’ ஒன்று கிடக்கிறது என்று.

யார் அந்த ‘மட்டன் பீஸ்’ என்று யோசிக்கிறீர்களா? அட நம்ம கார்த்தி தான்.

தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வந்த கார்த்தியின் நடிப்பு பசியை ‘பிரியாணி’ ஆவது தீர்க்கும் என்று நினைத்தால், இந்த படத்திலும் குடியும், பெண்களிடம் ஜொள் விடுவதும், அசட்டுத்தனமாக சிரிப்பதும் என்று மீண்டும் பலிகடாவாக்கப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.

படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை பிரேம்ஜி தான் நமக்கு ‘பிளாஷ்பேக்’ கதை சொல்கிறார்.

இடைவேளைக்கு பிறகு, “போலீஸ் துரத்தும், ஓடிகிட்டே இருப்பாங்க… இவங்களே குற்றவாளியை தேடி கண்டுபிடிப்பாங்க. கடைசில போலீஸ் வரும்” என்று பக்கத்து சீட்டில் உள்ளவர் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் (பிரேம்ஜி குரல் – “என்ன கொடுமை சார் இது?”)

சமீபத்தில் வெளிவந்த படங்களில், ‘டிவிஸ்ட்’ என்ற பெயரில், கிளைமாக்ஸில் நாம் எதிர்பார்க்காத ஒரு கதாப்பாத்திரத்தை குற்றவாளியாக காட்டுகிறார்கள்.

அதே போல், இந்த படத்திலும் அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை கிளைமாக்ஸில் கை காட்டுகிறார் வெங்கி…

ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு அந்த குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தின் மேல் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, இன்னொரு கதாப்பாத்திரம் மேல் நமது சந்தேகத்தை திசை திருப்ப அவர் கடும் முயற்சிகள் செய்திருக்கிறார்…

சக்தி சரவணன் ஒளிப்பதிவு சுமார் ரகம். யுவன் சங்கர் ராஜாவிற்கு இது 100 வது படமாம். ஆனால் மனதை தொடும் இசை என்று படத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by சிவா on Sat Dec 21, 2013 4:33 pm


‘பிரியாணி’ செய்ய பயன்படுத்திய கதை

சட்டவிரோதமாக பல ரகசிய தொழில் செய்து வரும் மிகப்பெரிய பணக்காரராக நாசர். அவரது வீட்டோட மருமகன் ராம்கி (ஆம்… பழைய நடிகர் ராம்கியே தான்), இவர்களுக்கு உதவி செய்யும் நண்பராக போலீஸ் உயர் அதிகாரி ஜெயப்பிரகாஷ்.நாசர் செய்யும் ரகசியங்களைக் கண்டுபிடிக்க துப்பறியும் ரகசியப் போலீஸ் அதிகாரியாக சம்பத். இது ஒரு புறம் இருக்க…

சிறுவயது முதல் நண்பர்களான கார்த்தியும், பிரேம்ஜியும் எப்போதும் குடியும், கும்மாளமுமாக அலைகிறார்கள். பிரேம்ஜி விரும்பும் பெண்களையெல்லாம் இடையில் புகுந்து கார்த்தி தட்டிக்கொண்டு போய்விடுகிறார்.பார்க்கும் பெண்களையெல்லாம் ஜொள் விடும் கார்த்திக்கு, ராம்கியின் டிவி நிறுவனத்தில் செய்தியாளராக இருக்கும் ஹன்சிகாவின் மீதும் காதல் இருக்கிறது. அவ்வப்போது தனது அக்காவின் மேல் பாசம் காட்டும் பொறுப்பான தம்பியாகவும் மாறிவிடுகிறார்.

இப்படியே படம் தொடங்கி 40 நிமிடங்கள் ஓடுகின்றன.

ஒரு கட்டத்தில், இரவில் குடித்துவிட்டு கார் ஓட்டிக்கொண்டு வரும் கார்த்திக்கும், பிரேம்ஜிக்கும் பிரியாணி சாப்பிட வேண்டும் என்று தோன்ற, வழியில் ஒரு பிரியாணி கடையில் சாப்பிட நிறுத்துகிறார்கள்.

அங்கே ஒரு பெண்ணை சந்திக்கிறார்கள். அதன் பின்னர் நாசர் கொல்லப்படுகிறார். இவர்கள் மீது அந்த பழி விழுகிறது என்று கதையில் பல முடுச்சுகள் விழுகின்றன.

படத்தில் கிளைமாக்ஸில் நாசரை கொன்றது யார்? அந்த பெண்ணிற்கும் நாசருக்கும் என்ன சம்பந்தம்? இவர்களின் மீது அந்த கொலைப்பழி விழ காரணம் என்ன? போன்ற முடுச்சுகள் கட்டு அவிழ்க்கப்படுகின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by M.M.SENTHIL on Sat Dec 21, 2013 4:36 pm

பிரியாணி சுவை இல்லையா?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by சிவா on Sat Dec 21, 2013 4:37 pm


ருசியானவை


- அக்காவை கல்யாணம் செய்து கொள்ளப்போகும் மாமாவுடன், கார்த்தி மிக சகஜமாக நண்பர் போல் பழகும் காட்சிகள் (நடைமுறை வாழ்வின் எதார்த்தங்கள்)

- உமா ரியாஸின் நடிப்பு… கதையில் உமா ரியாஸ் வந்தவுடன் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. சண்டையிலும், தோற்றத்திலும் உமா ரியாஸ் பிரமாதம்…

- பிரேம்ஜியின் காமெடி உளரல்கள் பல இடங்களில் கடுப்பேற்றினாலும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

- நாசர் வேடத்தில் பிரேம்ஜி நடிப்பதாக இருக்கும் காட்சி ஒன்றில் நிஜ நாசரே நடித்திருக்கிறார். ஆனால் அவர் பிரேம்ஜியின் பாடிலேங்குவேஜை அப்படியே செய்திருப்பது அருமை.

- படத்தின் கடைசி அரைமணி நேர விறுவிறுப்பு

- பிரியாணியில் லெக் பீஸாக நடிகை மாண்டி தாக்கர். படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்.. (குழந்தைகள் ஜாக்கிரதை…)

- படத்தில் ஜெய், அரவிந்த் ஆகாஷ் போன்ற நடிகர்கள் ஆங்காங்கே தலைகாட்டியிருக்கிறார்கள்… ஒரு ராப் வகை பாடல் காட்சியில் மலேசியாவின் சீஸே மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by சிவா on Sat Dec 21, 2013 4:37 pm


வேண்டாதவை


- முதல் பாதியில் குடி, ஜொள்ளுவிடுதல் என்று ஜவ்வாக இழுக்கும் திரைக்கதை

- பிரேம்ஜியும், கார்த்தியும் கற்பனை செய்யும் காட்சிகளையெல்லாம் காட்சிப்படுத்தி காட்டியிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது… குறிப்பாக இறந்த நாசரின் உடலை வைத்துகொண்டு அலையும் போது சீரியஸாக கதை நகரும் இடங்களில் பிரேம்ஜியும், கார்த்தியும் கற்பனை செய்து பார்ப்பது வெறுப்படையச்செய்கிறது.

- தொழிலதிபர் நாசரைப் பற்றி துப்புத்துலக்க வரும் ரகசியப் போலீஸ் சம்பத்திற்கு, நாசர் மகளின் காதல் விவகாரம் தெரிந்திருக்கிறது. ஆனால் அவள் காதலித்தது யார் என்று கூடவா தெரியாது?

- கார்த்தியின் அக்கா, மாமா கடத்தப்படுவது…. மாமா கத்தியால் குத்தப்பட்டு சண்டைக்காட்சி முடியும் வரை உயிரோடிருப்பது…. அக்காவை கட்டிப்போட்டு இருக்கும் கட்டிடத்திற்கு, கார்த்தியின் நண்பர்கள் சரியாக வந்து சேர்வது, கிளைமாக்ஸில் சண்டை நடந்து கொண்டு இருக்கும் போது சரியாக போலீஸ் வந்து குற்றவாளியை சுட்டு ஹீரோவை காப்பாற்றுவது, போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவின் அதரபழசான மசாலாக்கள்.

- இதையெல்லாம் விட கொடுமை என்னவென்றால், ஏற்கனவே இறந்து நாட்களாகிவிட்ட நாசரின் உடலை, அப்போது தான் சுடப்பட்டு இறந்ததாக எண்ணி ராம்கி ஆம்புலன்ஸை கூப்பிடு என்று அழுவது ( பிண நாற்றம் வரவில்லையோ?)

மொத்தத்தில் வெங்கட்பிரபுவின் ‘பிரியாணி’ – வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் அதில் சிக்கன்

- செல்லியல் விமர்சனக் குழு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by Muthumohamed on Sat Dec 21, 2013 10:33 pm

விமர்சனத்திற்கு நன்றி அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by சிவா on Sat Dec 21, 2013 10:56 pm

இதற்கு மேல் நடிகர் கார்த்தி படங்களைப் பார்க்க யாரும் தியேட்டர் பக்கமே செல்ல மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி..! இவர் வேறு தொழிலை தேடிச் செல்வது சிறந்தது...!


இவரது இந்த வீழ்ச்சிக்குக் காரணம் தன்னை உயர்த்தியவர்களை மதிக்க மறந்தது தான்..!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by Muthumohamed on Sat Dec 21, 2013 11:59 pm

@சிவா wrote:இதற்கு மேல் நடிகர் கார்த்தி படங்களைப் பார்க்க யாரும் தியேட்டர் பக்கமே செல்ல மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி..! இவர் வேறு தொழிலை தேடிச் செல்வது சிறந்தது...!


இவரது இந்த வீழ்ச்சிக்குக் காரணம் தன்னை உயர்த்தியவர்களை மதிக்க மறந்தது தான்..!
மேற்கோள் செய்த பதிவு: 1040243எல்லாம் பணம் தான் அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by ayyasamy ram on Sun Dec 22, 2013 5:22 am

விமரிசனம் அருமை..
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33608
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by அருண் on Sun Dec 22, 2013 10:47 am

நல்ல வேலை ப பீஸ்க்கு ஆசைப்பட்டு பிரியாணி வாங்க தியேட்டருக்கு போகல.. சிரி 

தெளிவாக பீசின் ருசியை அறியத்தந்தமைக்கு நன்றி தல!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by ராஜா on Sun Dec 22, 2013 10:59 am

@சிவா wrote:இதற்கு மேல் நடிகர் கார்த்தி படங்களைப் பார்க்க யாரும் தியேட்டர் பக்கமே செல்ல மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி..! இவர் வேறு தொழிலை தேடிச் செல்வது சிறந்தது...!


இவரது இந்த வீழ்ச்சிக்குக் காரணம் தன்னை உயர்த்தியவர்களை மதிக்க மறந்தது தான்..!
மேற்கோள் செய்த பதிவு: 1040243


ஓரிரு படம் நல்ல ஓடியதுமே இவர்களை போன்றவர்களுக்கு ரஜினி , கமல் போல ஆயிட்டோம்னு நினைப்பு


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by யினியவன் on Sun Dec 22, 2013 11:41 am

அடடே அஞ்சு ரூபா காக்கா பிரியாணியா? கா கா காavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by சிவா on Mon Dec 23, 2013 6:58 pm

தினமலர் விமர்சனம்

உடனடியாக சாப்பிட ஏதாவது தேவை என்றால் "உப்புமா கிண்டுவார்கள்... கார்த்திக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால் "பிரியாணி கிண்டி இருக்கிறார்கள். ஆனால் உஷாராக கார்த்தியும், அவரது உறவு தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும் அதை வெங்கட்பிரபுவை விட்டு சமைத்து, கார்த்தியின், "பிரியாணி, வெங்கட்பிரபுவின், "டயட் என விளம்பரப்படுத்தி வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்கள். "பசி - ருசி அறியாது என்பது போல் படமும் அவர்களுக்கு "பீஸ் புல்லாக வந்திருக்கிறது! ரசிகர்களுக்கு.?!

கதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதாகப்பட்டது, பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் "பிரியாணி படத்தின் மொத்தகதையும்!

சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, "சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் வூட்வுக்காரம்மாவா? அல்லது படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்!

ஹன்சிகா, நம் டிவி நிருபராக வந்து போகிறார். கார்த்தியுடன் கொள்ளும் ஊடலிலும், காதலிலும் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை! என்னாச்சு ஹன்ஸ்? சிம்புவுடனான நிஜ ஊடல், கூடல் தான் காரணமா..?!

பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் "வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று "பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!

பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய "லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!

வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் "லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் துண்டங்கள் எனும் வகையில் ஆறுதல்!

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் ஆறேழு பாடல்கள். ஆனாலும், "மிசிசிபி... பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. காரணம் யுவன் மட்டுமல்ல, அதில் ஆடும் மாயாவும் தான்! ஹீ... ஹீ...!!

சக்திசரணவணனின் ஒளிப்பதிவு தான் வெங்கட்பிரபுவின் எழுத்து - இயக்கத்தில் "பிரியாணி படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறது. ஆனாலும் லாஜிக் இல்லாத கதை, தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருக்கும் திரைக்கதை எல்லாம் சேர்ந்து "பிரியாணியை இன்னும் கொஞ்சம் வேகவைத்திருக்கலாமோ? என கேட்க வைத்து விடுகின்றன!

மொத்தத்தில், "பிரியாணி, "பீஸ்கள் (அழகிய பெண்கள்) இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் "குஸ்கா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by சிவா on Mon Dec 23, 2013 6:59 pm

சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

ஹீரோவும், அவரோட ஃபிரண்டும் சின்ன வயசுல இருந்தே கிளாஸ்மேட். அப்போ இருந்தே ஹீரோ காதல் இளவரசன். மடங்காத ஃபிகரெல்லாம் அவருக்கு மடங்கிடும். நண்பர் ரூட் போட்ட பொண்ணை இவர் கரெக்ட் பண்ணிடுவாரு. வில்லன் ஒரு கோடீஸ்வரர். நெம்பர் டூ இல்லீகல் பிஸ்னெஸ்ல நெம்பர் ஒன். அவரோட செட்டப் கில்மா லேடி, வாலண்ட்ரியா ஹீரோவை ஹோட்டல் ரூமுக்கு கூப்பிடுது. ஹீரோவும், நண்பரும் போறாங்க. ஏதோ மாத்திரையைக்கலந்து கொடுத்துடுது. மப்பும், மயக்கமும் தெளிஞ்சு பார்த்தா அந்த லேடியைக்காணோம்.

கோடீஸ்வரர் வில்லன் கொலை செய்யப்பட்டு கிடக்கார். போலீஸ் இவங்களைத்துரத்துது. யார் கொலையாளி ?

1. ஹீரோ மேல சின்ன வயசுல இருந்தே கடுப்பா இருக்கும் கூட இருக்கும் நண்பனா?

2. வில்லனோட சொத்துக்கும், நிர்வாகத்துக்கும் ஆசைப்பட்டு அவரோட இடத்தை அடைய நினைக்கும் ராம்கியா?

3. போலீஸ் சதியா ?

இந்த 3 சந்தேகங்களைக்கிளப்பி பின் பாதியில் அழகிய திருப்பங்களோட க்ரைம் த்ரில்லர் கதை கொடுதிருக்காங்க.


படத்தின் ஹீரோ இயக்குநர் வெங்கட் பிரபுதான். அவருக்குனு என்ன எதிர்பார்ப்பு இருக்கோ அதை கச்சிதமா நிறைவேற்றிட்டார். முன் பாதி வரை கிளாமர், காமெடி, பின் பாதியில் சஸ்பென்ஸ், சேசிங்க் இதுதான் இவரோட ஃபார்முலா. நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கு.

கார்த்திக்கு 3 சறுக்கல்களுக்குப்பின் கிடைத்த ஹிட் படம். நல்ல வேளை, இந்தப்படம் ஹிட் ஆகலைன்னா மேரேஜ் ஆன ராசி தான் சரி இல்லைன்னு சொல்லி இருப்பாங்க. பல பெண்கள் தானாக வந்து வலிய லவ்வும் ப்ளேபாய் கேரக்டர். கமல் , சிம்பு மாதிரி ஆட்கள் செய்ய வேண்டிய கேரக்டர். ஜாலியா செஞ்சு இருக்கார்.பெரும்பாலும் திரைக்கதையும், இயக்கமும் தான் இந்தப்படத்தில் முன்னிலை என்பதால் பல குறைகள் தெரியல. வெல்டன் கார்த்தி.

பிரேம்ஜிக்கு உண்மையில் லக் தான். தம்பிக்கு முக்கியத்துவம் வரும் மாதிரி கேரக்டரை ரெடி பண்ணி படம் பூராவும் ஹீரோவுக்கு இணையா வர வெச்சது நல்ல ஐடியா. இடைவேளை வரை பொண்ணுங்களைப்பார்த்து 2 பேரும் ஜொள் விடுவதே கலகலப்பு.

ராம்கி முக்கிய ரோல். நல்ல வில்லத்தனம். நாசர் தான் அந்த கோடீஸ்வரர். அதிக வாய்ப்பில்லை.ஆனா மகளிர் மட்டும்ல நாகேஷ் பிணமா நடிச்சது போல் இவர் ஃபிரிட்ஜ்க்குள் பிணமா நடிக்கும் காட்சிகள் எல்லாம் குட்.

ஹன்சிகா தான் நாயகி. ஒப்புக்குச்சப்பானி மாதிரி, படத்துல இவருக்கு வேலை அதிகம் இல்லை.

மாயா கேரட்கரில் கில்மா லேடியாக வரும் மாண்டி தாக்கர் தான் மெயின் கேரக்டர். செம கிளாமர். அந்தக்கால சில்க் ஸ்மிதாவை நினைவுபடுத்துகிறார்.

உமா ரியாஸ்கான்க்கு செம கேரகட்ர். விஜய் சாந்தி போல் அவர் போடும் ஃபைட்டுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்குது. அவரது முகபாவனைகள், நடிப்பு, பாடி லேங்குவேஜ் பிரமாதம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by ஈகரையன் on Mon Dec 23, 2013 9:17 pm

@சிவா wrote:தினமலர் விமர்சனம்

மொத்தத்தில், "பிரியாணி, "பீஸ்கள் (அழகிய பெண்கள்) இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் "குஸ்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1040482


நச்   
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by சிவா on Mon Dec 23, 2013 10:06 pm

@அருண் wrote:நல்ல வேலை ப பீஸ்க்கு  ஆசைப்பட்டு பிரியாணி வாங்க தியேட்டருக்கு போகல.. சிரி 

தெளிவாக பீசின் ருசியை அறியத்தந்தமைக்கு நன்றி தல!


இந்தப் படத்தைப் பார்க்க ஏன் திரையரங்கிற்கு செல்கிறீர்கள்! இதோ இங்கு பாருங்கள்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by சிவா on Thu Dec 26, 2013 5:36 pm


பிரியாணி - சினிமா விமர்சனம்

ஓர் இரவு, ஒரு பிரியாணி, ஓர் அழகி, ஒரு கொலை... தடதடக்கும் துரத்தல் மிரட்டலே படம்!

உதவி இயக்குநர்: சார் கதை..?

வெங்கட் பிரபு: டோன்ட் வொர்ரி!

உ. இயக்குநர்: சார் லாஜிக்..?

வெ.பிரபு: கண்டுக்க மாட்டாங்கப்பா!

உ. இயக்குநர்: சார்..?!

வெ.பிரபு: அட, கார்த்தி இருக்காரு... ஹன்சிகா, பிரேம்ஜி இருக்காங்க... மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் இருக்காங்க... பார்த்துக்கலாம்!

- இப்படியாக முடிவெடுத்து, தனது பார்ட்டி பட்டாளத்துடன் 'பிரியாணி டின்னர்’ அடித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. பீர், ஃபிகர், பிரியாணி, காமெடி, காதல், சஸ்பென்ஸ், க்ரைம், கிளப், மப்பு... என சகல மசாலாக்களையும் கலந்து கட்டியிருக்கிறார்கள். இடைவேளை ப்ளாக்கில்தான் கதையே ஆரம்பம். அதுவரை கார்த்தி - பிரேம்ஜி இடையிலான ஃபிகர் உஷார் அத்தியாயங்கள் மட்டுமே!

'உனக்காகத்தான் மச்சான் நம்பர் வாங்குனேன்... ஆனா பாரு, கொடுக்க மறந்துட்டேன்!'' என்று பிரேம்ஜியை சதாய்க்கும்போதும், பார்க்கும் பெண்களை எல்லாம் வசீகரமாகக் கவரும்போதும்... செம காஸனோவா கார்த்தி!

''நீ ஆசைப்படுறது எல்லாம் உனக்குக் கிடைக்குது ஓ.கே. ஆனா, நான் ஆசைப்படுறதும் உனக்கே கிடைக்குதே அது எப்படி?'' என்று போங்கு வாங்கிப் பொங்குவதும், புலி டான்ஸ் போடுவதுமாகக் கலகல பிரேம்ஜி. ஹன்சிகா இருந்தும், விசில் விசிறிகளுக்கு வேலை வைப்பது என்னவோ, 'ஹிட் ஹாட்’ மாண்டி தக்கர்.

'இவர் டைரக்டரோட க்ளோஸ் ஃப்ரெண்ட். டேட்ஸ் ஃப்ரீயா இருக்குனு நடிச்சுக் கொடுத்திருக்கார்’ என்று ஜெய்க்கு கார்டு போடுவதில் இருந்து, 'எனக்கு சண்டை சீன் இல்லையா?’ என்று சாம் ஆண்டர்சன் விரக்தியாவது வரை, பிரியாணியில் ஆங்காங்கே நச் நச் லெக் பீஸ்!

ஃபிரிட்ஜுக்குள் பிணம், டி.வி. சேனல் டிராமா, ஹிட் வுமன் அதிரடிகள், அத்தனை விவரமான சி.பி.ஐ. அதிகாரி, கார்த்தியை சட்டென நிரபராதி என்று நம்புவது... ம்ஹும்... எந்த லாஜிக்குக்கும் மெனக்கெடாமல் லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்புகிறது திரைக்கதை!

100-வது படத்தில் 'டீன் டியூன்’ அடித்து இளமை விருந்து படைத்திருக்கிறது யுவனின் இசை!

'நீங்க ரெண்டு பேரும் காரைப் பத்தி மட்டும்தானே பேசிட்டு இருக்கீங்க?’, 'டேய்... போன உடனே வேலையை முடிச்சுடு... பாட்டுலாம் பாடிட்டு இருக்காத...’ - போன்ற 'அசைவ’ வசனங்கள், உங்களுக்கு அலர்ஜி இல்லையென்றால், சொல்லலாம் ஒரு பிளேட் 'பிரியாணி’!

விகடன் விமர்சனக் குழு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum