ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

புதிய சமயங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 ரா.ரமேஷ்குமார்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

ஒரு சந்தேகம்??
 மூர்த்தி

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 krishnaamma

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 3:49 am


70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.

இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.

பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆம்ஆத்மி கட்சி கருத்து கேட்டது. சுமார் 6½ லட்சம் பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றனர். இதை ஏற்று ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.

கெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 3:49 am


கெஜ்ரிவால் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளதன் மூலம் டெல்லியில் கடந்த 2 வாரமாக நீடித்த இழு பறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்கும் கெஜ்ரிவால் உடனடியாக 5 உறுதி மொழிகளை நிறைவேற்ற உள்ளார். அவை வருமாறு:–

1. டெல்லியில் வி.ஐ.பி. கலாச்சாரம் ஒழிக்கப்படும். ஆம்ஆத்மி மந்திரிகள் சிவப்பு விளக்கு பொருத்தப்பட மாட்டாது.

2. டெல்லியில் தண்ணீர், மின்சாரத்துக்கான கட்டணம் குறைக்கப்படும்.

3. டெல்லியில் ஒவ்வொரு வீட்டுக்கும் 700 லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். இதற்கு அரசுக்கு கூடுதலாக ரூ. 340 கோடி செலவாகும்.

4. அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி முடிவு செய்யப்படும். மக்கள் விருப்பத்துக்கு ஏற்பவே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

5. அடுத்த 15 நாட்களுக்குள் ஊழலை ஒழிக்கும் ஜன் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 4:02 am

26ல் முதல்வராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி: காங்கிரசின் குழப்பமான ஆதரவு, பா.ஜ.,வின் கடுமையான விமர்சனம் ஆகியவற்றுக்கு மத்தியில், டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், 'ஆம் ஆத்மி' கட்சி, ஆட்சி அமைவது நேற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம், இரண்டு வாரங்களாக, டில்லியில் காணப்பட்ட, அரசியல் முட்டுக்கட்டை, முடிவுக்கு வந்துள்ளது.

பா.ஜ., 28 இடங்களில் வெற்றி:

மொத்தம், 70 இடங்களைக் கொண்ட, டில்லி சட்டசபைத் தேர்தலில், எந்த கட்சிக்கும், ஆட்சி அமைக்கத் தேவையான, 36 இடங்கள் கிடைக்காததால், அதிக இடங்களில், அதாவது, 32 இடங்களில் வென்ற, பா.ஜ., ஆட்சி அமைக்க முடியாது என, ஒதுங்கிக் கொண்டது.எட்டு இடங்களில் வெற்றி பெற்ற, காங்கிரஸ் கட்சி, 28 இடங்களில் வெற்றி பெற்றிருந்த, ஆம் ஆத்மி கட்சிக்கு, ஆதரவு அளிக்க முன்வந்ததை அடுத்து, அக்கட்சிக்கு, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனாலும், மக்களிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுப்போம் என, கூறி, டில்லி முழுவதும், ஆம் ஆத்மி கட்சி, தெருமுனை கூட்டங்களை நடத்தியது. 'இ மெயில்' எஸ்.எம்.எஸ்., மூலமும், மக்களிடம் கருத்துகளைக் கேட்டது.மக்கள் கருத்துக் கேட்பை, நேற்றுடன் முடித்துக் கொண்டது. நேற்று காலை, ஆம் ஆத்மி கட்சியின், தலைமை அரசியல் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.காஜியாபாத் அருகே, கோசாம்பியில் உள்ள, ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில், இந்த கூட்டம், நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது. அரவிந்த் கெஜ்ரிவாலோடு சேர்ந்து, முக்கிய தலைவர்கள், யேகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், குமார் விஸ்வாஸ், மணிஷ் சிசோடியா, கோபால் ராய் உள்ளிட்டோரும், ஒரு சில எம்.எல்.ஏ.,க்களும், கலந்து கொண்டனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 4:03 am

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர்:


இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு, மணிஷ் சிசோடியா கூறுகையில், ''280 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், 257 கூட்டங்களில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது. முதல்வர் யார் என்பதில், எந்த குழப்பமும் வேண்டாம். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் தான், நாங்கள் செயல்பட்டோம்.எனவே, அவர் தான் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என்றார்.

அடுத்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “கட்சி எடுத்த முடிவின்படி, ஆம் ஆத்மி சார்பில், ஆட்சியமைக்க உரிமை கோரப்படும்,” என்றார்.

அதையடுத்து, டில்லி, ராஜ்பவனுக்கு சென்றார். அங்கு, லெப்டினன்ட் கவர்னர், நஜிப் ஜங்கை சந்தித்து, ஒரு சில நிமிடங்களில் வெளியே வந்த போது, அங்கிருந்த நிருபர்களிடம், “ஆட்சியமைக்க, ஆம் ஆத்மி தயார் என்ற தகவலை, கவர்னரிடம் தெரிவித்தேன். இந்த தகவலை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி, அவரது பதிலுக்கு பிறகு, என்னை தொடர்பு கொள்வதாக கவர்னர் கூறியுள்ளார். பதவியேற்பு விழா, ராம்லீலா மைதானத்தில் நடைபெறும். எந்த தேதி என்பதெல்லாம், பிறகு முடிவு செய்யப்படும்,” என்றார்.

பிறகு, 'கான்ஸ்டிடியூஷன் கிளப்'பிற்கு விரைந்த, அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு, ஆம் ஆத்மி கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.பதவியேற்பு விழா, வரும், 26ம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெறலாம் என்றும், கட்சியின் முக்கியஸ்தர்களான, மணிஷ் சிசோடியா, வினோத்குமார் பின்னி, ராக்கி பிர்லா போன்றோர், அமைச்சரவையில் இடம்பெறலாம் என்றும், டில்லி வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 4:04 am

நிறைவேறுமா தேர்தல் வாக்குறுதிகள்?


*ஊழலை கட்டுப்படுத்த, டில்லியில் ஜன் லோக்பால் சட்டத்தை ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் இயற்றுவது.

*நேர்மையான அதிகாரிகளுக்கும், ஊழலை வெளிப்படுத்துபவர்களுக்கும் பாதுகாப்பு.

*ஒவ்வொரு பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை, அந்தந்த பகுதியில் உள்ள, 'மொகல்லா சபா'க்கள் தான் முடிவு செய்யும். அந்தப் பணிகள் நிறைவு பெற்ற பிறகு, மொகல்லா சபாக்கள் அனுமதி அளித்தால் தான், பணிகளுக்கான பணம் பட்டுவாடா செய்யப்படும்.

*பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகளை, மொகல்லா சபாக்கள் கண்காணிக்கும்.

*டில்லிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

*மின் கட்டணம், 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படும்.

*டில்லியில் உள்ள, 50 லட்சம் பேருக்கும், தினமும், 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.

*இரண்டு லட்சம் கழிவறைகள் கட்டப்படும்.

*பெண்கள் பாதுகாப்பிற்கு, வார்டு வாரியாக, குடிமக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.

*டில்லியின் பொது போக்குவரத்து வசதிகள் தரம் வாய்ந்தவையாக மாற்றப்படும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 4:13 am

ஆம் ஆத்மி'க்கு லாபமா, நஷ்டமா?


ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை பெறாத நிலையிலும், ஆட்சி அமைக்க முன்வந்துள்ள, ஆம் ஆத்மி கட்சியின் முடிவு, அந்தக் கட்சிக்கு லாபமா, நஷ்டமா என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.மொத்தம், 70 இடங்களைக் கொண்ட, டில்லி சட்டசபையில், 36 இடங்களை பெற்றிருந்தால் தான், ஆட்சி அமைக்க முடியும். 28 இடங்களைப் பெற்றுள்ள, ஆம் ஆத்மி, ஆட்சி அமைத்தால், அந்த ஆட்சி நிலைக்குமா?

இதில் பல அம்சங்கள் விவாதிக்கப்படுகின்றன;

*ஆட்சி அமைக்க இப்போது ஆதரவு அளிக்கும் காங்கிரஸ், ஆதரவை விலக்கிக் கொண்டால், அந்த கட்சியின் சுயரூபத்தை ெவளிக்காட்ட, ஆம் ஆத்மியால் முடியும்.

*அதன் மூலம் எழும், அனுதாப அலையை, அடுத்த தேர்தல்களில் பயன்படுத்தி, வெற்றி பெற முடியும்.

*கொஞ்ச நாள் ஆட்சியில் இருந்தாலும், வித்தியாசமான அணுகு முறை, திட்டங்கள் மூலம், மக்களின் நன்மதிப்பை பெற வாய்ப்பு உள்ளது.

*முக்கிய முடிவுகளை, மக்களே எடுப்பர் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், மக்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கிறது. இதன் மூலம், ஆட்சி முடிவு, தலைகீழாக மாறினாலும், ஆட்சியை கவிழ்த்த கட்சியை, மக்கள் பார்த்துக் கொள்வர் என்ற கணக்கும் உள்ளது.

கனவு கூட கண்டதில்லை - கெஜ்ரிவால்:

டில்லியின் இளம் முதல்வராகஉள்ள, அரவிந்த் கெஜ்ரிவால்:இது, நான் அடைந்த வெற்றி அல்ல. சாதாரண மக்களின் வெற்றி தான், இது. முதல்வராக ஆக வேண்டுமென்று, நான் ஒருபோதும், கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. இது, ஒரு சவாலான காரியம் தான். இதையும், ஆம் ஆத்மி எதிர்கொள்ளும். மக்களின் கருத்துக்கு ஏற்பவே, நாங்கள் ஒவ்வொன்றையும் செய்வோம்.ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர் பிரச்னை, மின்சார பிரச்னை, ஜன் லோக்பால் நிறைவேற்றம், வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிப்பது ஆகிய நான்கு விஷயங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்.அமைச்சர்கள் என்ற தோரணை, இனி இருக்காது. மக்களுக்கான சேவகர்களாகவே வலம் வருவோம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 4:15 am

'ஆம் ஆத்மி' கட்சி விரிவடையுமா?

காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகள் நினைத்தால், டில்லியில் எப்படியாகிலும், ஆட்சி அமைத்திருக்க முடியும். அந்த முயற்சியை அந்த இருகட்சி களும் அறவே துவக்காததற்கு காரணம், ஆம் ஆத்மி கட்சியை, டில்லிக்குள்ளேயே முடக்க வேண்டும் என்பது தான்.இன்னும், நான்கைந்து மாதங்களில், லோக்சபா தேர்தல் வரவுள்ளது. அந்தத் தேர்தலிலும், ஆம் ஆத்மி, குட்டையை குழப்ப விடாமல் தடுக்க, அந்த கட்சிக்கு, டில்லியை மட்டும் கொடுத்து, ஆட்சி அமைக்கச் செய்து, அதன் பரவலை, பிற மாநிலங்களில் தடுக்க, இரு முக்கிய கட்சிகளும் திட்டமிட்டது வெற்றியாகியுள்ளது.டில்லி முதல்வரான பிறகு, வேலைப்பளு அதிகரித்த பிறகு, பிற மாநிலங்களில், தேர்தல் பணியாற்ற, அரவிந்த் கெஜ்ரிவாலால் முடியாது என்பது, இரு முக்கிய கட்சிகளின் எண்ணம்.அதன் மூலம், அரியானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், லோக்சபா தேர்தலிலும், ஆம் ஆத்மியை தடை செய்து விட முடியும் என்பது, அவர்களின் வியூகம்.

காங்கிரஸ் சார்பில், நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படுவதாகக் கூறவில்லை. வெளியில் இருந்து தான், காங்கிரஸ் ஆதரவை வழங்கும். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, நிறைவேற்றுகின்றனரா என்பதை பொறுத்து தான், எங்களது முடிவுகள் இருக்கும்.
ஷீலா தீட்சித்,முன்னாள் முதல்வர்

நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகத் தான், காங்கிரஸ் முதலில் சொன்னது. இப்போது மாற்றிச் சொல்கின்றனர். பிறரது ஆட்சியைக் கவிழ்ப்பது, காங்கிரசின் பழக்கம். இப்போதும், எவ்வளவு காலம், ஆதரவு அளிக்கின்றனர் என, மக்கள் பார்க்கலாம்.
பிரசாந்த் பூஷண்,ஆம் ஆத்மி

'ஊழல் கட்சி' என, காங்கிரசை, இத்தனை நாளும் விமர்சனம் செய்து விட்டு, இப்போது, அந்த கட்சி ஆதரவுடன், ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது.இதன் மூலம், டில்லி மக்களுக்கு, மிகப் பெரிய துரோகத்தை, 'ஆம் ஆத்மி' செய்துள்ளது.
ஹர்ஷவர்த்தன்,பா.ஜ.,

அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி மாநில முதல்வராகப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவருக்கு என் வாழ்த்துகள். மக்களுக்கு எது நல்லதோ, அதை, அவர் செய்ய வேண்டும். அவருக்கு, என் ஆசிகள் எப்போதும் உண்டு.
அன்னா ஹசாரே,சமூக ஆர்வலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 4:16 am

ஓராண்டிற்குள் ஆட்சிக்கட்டில் கெஜ்ரிவால் சாதனை:

கட்சி ஆரம்பித்த ஒரு ஆண்டுக்குள், டில்லியின் இளம் முதல்வர் என்ற பெருமையுடன் ஆம் ஆத்மி கட்சி தலைவர்

அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக பதவியேற்கிறார்.2012 அக்., 2: சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து விலகிய அரவிந்த கெஜ்ரிவால், காந்தி ஜெயந்தி தினத்தன்று, அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவிப்பு.

நவ., 26: "ஆம் ஆத்மி' (ஏழை மக்கள்) என்ற கட்சியை தொடங்கினார். கட்சி நிதியாக முன்னாள் சட்ட அமைச்சரும், அன்னா குழுவில் இருந்தவருமான சாந்தி பூஷன், 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

2013 மார்ச் 22: தேர்தல் ஆணையத்தில், முறைப்படி கட்சி பதிவு செய்யப்பட்டது.

மார்ச் 23: மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம். "யாரும் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தாதீர்கள்' என மக்களை வலியுறுத்தினார்.

ஏப்., 6: 15 நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். 3 லட்சம் பேர் இதற்கு ஆதரவு என தகவல்.

ஏப்., 15: டில்லி சட்டசபை தேர்தலில் "ஆம் ஆத்மி' போட்டியிடும் என அறிவிப்பு.

ஜூலை: டில்லி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஆளும் காங்., அரசின் ஊழலை மக்களிடம் எடுத்து வைத்தார்.

ஆக., 3: ஆம் ஆத்மி கட்சி தேர்வு செய்த "துடைப்பம்' சின்னத்துக்கு, தேர்தல் கமிஷன் ஒப்புதல்.

நவ., 20: ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை வெளியீடு. ஆட்சிக்கு வந்தால், 15 நாட்களில் "ஜன் லோக்பால்' கொண்டு வரப்படும் என உறுதி.

டிச., 8: டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 70 இடங்களில் 28 இடங்களில் வென்று பா.ஜ.,வுக்கு (32), அடுத்ததாக 2வது பெரிய கட்சி என்ற சாதனை படைத்தது.

டிச 12: ஆட்சியமைக்க வருமாறு பா.ஜ., வுக்கு, டில்லி கவர்னர் விடுத்த அழைப்பை, மெஜாரிட்டி இல்லாததால் பா.ஜ., ஏற்க மறுப்பு.

டிச., 13: 8 இடங்களில் வென்ற காங்., ஆம் ஆத்மி கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக, கவர்னரிடம் மனு. ஆம் ஆத்மி கட்சிக்கு கவர்னர் அழைப்பு.

டிச., 14: ஆட்சியமைக்க வேண்டுமெனில், 18 நிபந்தனைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்., மற்றும் பா.ஜ., கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்.

டிச., 18: காங்., ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்க, ஆம் ஆத்மி முடிவு.

டிச., 21: ஆம் ஆத்மிக்கான நிபந்தனையற்ற ஆதரவு என்பது, அவர்களின் செயல்பாடு பொறுத்தது. செயல்பாடு சரியில்லையெனில் ஆதரவு திரும்ப பெறப்படும் என காங்., விளக்கம்.

டிச., 23: மக்களிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டங்களில், ஆதரவு பெருகியதால் ஆட்சியமைக்க விரும்புவதாக அறிவிப்பு. கவர்னரை சந்தித்த கெஜ்ரிவால், டிச., 26ல் ராம் லீலா மைதானத்தில் பதவியேற்க விரும்புவதாக அறிவிப்பு.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 4:19 am

அதிகாரி முதல் முதல்வர் வரை

அரியானாவில் 1968 ஆக., 16ல், அரவிந்த கெஜ்ரிவால் பிறந்தார். இவரது பெற்றோர் கோபிந்த் ராம் கெஜ்ரிவால் - கீதா தேவி.

இவரது தந்தை எலக்ட்ரிகல் இன்ஜினியர். அதனால் கெஜ்ரிவாலின் இருப்பிடம் மாறிக்கொண்டே இருந்தது. பள்ளி படிப்பை அரியானாவின் சோனாபட் மற்றும் உ.பி.யின் காசியாபாத் ஆகிய இடங்களில் முடித்தார்.

காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற கெஜ்ரிவால், "டாட ஸ்டீல்' நிறுவனத்தில் சேர்ந்தார். பின் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்வதற்காக 1992ல் அந்த வேலையை விட்டு விலகினார்.

கோல்கட்டாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனில் தங்கி தேர்வுக்கு தயார் செய்தார். 1995ல் "இந்தியன் ரெவன்யூ சர்வீஸ்' (ஐ.ஆர்.எஸ்.,) தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், வருமான வரித்துறையில் சேர்ந்தார். 2000ம் ஆண்டு உயர்கல்விக்காக 2 ஆண்டு விடுமுறை எடுத்தார். பின் 2003ல் மீண்டும் பணியில் சேர்ந்து, 2006ல் "வருமான வரி இணை கமிஷனர்' என்ற பொறுப்போடு, வேலையில் இருந்து விலகினார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், அரசு நிறுவனங்களில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

மக்கள் விரும்பினால் எம்.எல்.ஏ., /எம்.பி.,க்களை திரும்ப பெறும் வசதியை தேர்தல் கமிஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினார்.

2011ல் அன்னா ஹசாரே தொடங்கிய "ஊழலுக்கு எதிரான இயக்கத்தில்' சேர்ந்து, ஜன் லோக்பால் மசோதா கொண்டு வர, போராட்டம் நடத்தினார்.

சுனிதா என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஹசாரே குழுவில் இருந்து விலகி, 2012 நவ., 26ல் "ஆம் ஆத்மி' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

டிச., 4ல் நடந்த டில்லி தேர்தலில் இவரது கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது.

15 ஆண்டுகள் டில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை, எதிர்த்து போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார்.

"ஸ்வராஜ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். "ராமன் மகசாசே விருது' உள்ளிட்ட சில விருதுகளை பெற்றுள்ளார்.

டிச., 26ல் டில்லி முதல்வராக பதவியேற்கிறார்.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by N.S.Mani on Tue Dec 24, 2013 6:54 am

ஈகரை நண்பர்கள் அணைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

அர்ஜுன் திரைப்படத்தில் ஒருநாள் முதல்வன் ஆக நடித்தார். நிஜ வாழ்வில் தற்பொழுது ஒரு வருடத்தில் கெஜ்ரிவால் முதல்வராக இருக்கிறார்.

எனவே, நாம் கெஜ்ரிவால் அவர்களை ஒருவருடத்தில் முதல்வர் என்று சொல்லலாமே

நா.செ.மணி
avatar
N.S.Mani
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by ayyasamy ram on Tue Dec 24, 2013 9:06 am

அதிக இடங்கள் பெற்ற பிஜேபி கட்சிக்கு இருக்கும்
நிதானம் போற்ற தக்கது...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சதாசிவம் on Tue Dec 24, 2013 10:32 am

புதிய ஆட்சி மலர்ந்து நாட்டிற்கு இது ஒரு வழிகாட்டியாக மாற மனமார்ந்த வாழ்த்துகள்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by ராஜா on Tue Dec 24, 2013 11:52 am

ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கு , ஆனால் காலைவாரிவிடுவதில் டாக்டர் பட்டம் பெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆதரவு எவ்வளவு காலம் இருக்குமென தெரியவில்லை.


நல்லாட்சி வழங்க வாழ்த்துகள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 5:59 pm

கெஜ்ரிவால் மந்திரிசபையில் இளைஞர்கள் பட்டாளம்: மணீஷ் சிசோடியா துணை முதல்வராகிறார்

டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சி பல வகைகளில் புதிய சாதனை படைப்பதாக உள்ளது.

டெல்லி அரசியல் வரலாற்றில் இதுவரை முழு மெஜாரிட்டி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைத்தது இல்லை. முதல் முதலாக ஆம்ஆத்மி கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும் காங்கிரஸ் உதவியுடன் மிகவும் துணிச்சலாக ஆட்சியில் அமர்கிறது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோஷத்தை இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுமே சொல்லி வருகின்றன. ஆனால் அந்த கோஷத்தை முதன்மைப்படுத்தி முதன், முதலாக ஆம்ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடித்துள்ளது.

ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, மிக குறுகிய காலத்தில் தலை நகரில் ஆட்சியைப் பிடித்து இருப்பது அரசியல் களத்தில் புதிய புரட்சியாக கருதப்படுகிறது. இந்த புரட்சியை இளைஞர்கள் ஒருங்கிணைந்து அரங்கேற்றி இருப்பது இந்திய அரசியலில் ஒரு மாற்றுப் பாதைக்கு அவர்கள் வழி வகுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை டெல்லியில் ஆட்சி செய்த பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே வயதானவர்கள்தான். அரசியலில் பழுத்த பழமாக இருந்தவர்கள். அவர்களையெல்லாம் விளக்குமாறு சின்னத்தால் அடித்து துரத்தி விட்டு, இளைஞர் பட்டாளத்தை அரசியல் களத்துக்கு கெஜ்ரிவால் கொண்டு வந்துள்ளார்.

முதல்–மந்திரியாக பொறுப்பு ஏற்க உள்ள அவரும் இன்னமும் இளமை துடிப்புடன்தான் உள்ளார். 45 வயதே ஆகும் அவர் டெல்லியின் மிக இளம் வயது முதல்–மந்திரி என்ற சாதனையை படைக்க உள்ளார்.

அவர் தலைமையில் மந்திரி பதவி ஏற்க போகும் அமைச்சர்கள் அனைவரும் சராசரியாக 40 வயது உடையவர்களாகவே உள்ளனர். இதனால் டெல்லி மாநில மந்திரிசபை ‘‘இளைஞர் பட்டாளம்’’ ஆக காட்சியளிக்க உள்ளது.

கெஜ்ரிவால் மந்திரி சபையில் மணீஷ் சிசோ டியா, சவுரப் பரத்வாஜ், வினோத்குமார் பின்னி, சோம்நாத் பாரதி, ராக்கி பிர்லா ஆகிய 5 பேர் மந்திரிகளாவது உறுதியாகி விட்டது. இவர்களில் 41 வயதான மணீஷ் சிசோடியா துணை முதல்–மந்திரி ஆவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அவர் பதவியேற்றால் டெல்லியின் முதல் துணை முதல்வர் என்ற சாதனையை படைப்பார்.

கெஜ்ரிவாலின் வலது கரம் போல செயல்பட்டு வரும் மணீஷ் சிசோடியா ஜீ நியூஸ், ஆல் இந்திய ரேடியோவில் பணிபுரிந்த பத்திரிகையாளர் ஆவார். தகவல் அறியும் உரிமை போராட்டத்துக்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு, கெஜ்ரிவாலுடன் போராட்டத்தில் இணைந்தார்.

கெஜ்ரிவால் நடத்திய எல்லா போராட்டங்களையும் ஒருங்கிணைத்த இவர் கெஜ்ரிவாலின் நிழல் மனிதராக கருதப்படுகிறார்.

மந்திரியாக வாய்ப்புள்ள சோம்நாத்துக்கு 39 வயதாகிறது. சுப்ரீம்கோர்ட்டு வக்கீலான அவர் ஆம்ஆத்மியின் சட்டப் பிரிவில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

அதுபோல 39 வயது வினோத்குமார், 2 தடவை கவுன்சிலராக இருந்தவர். தன் தொகுதியில் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி புகழ் பெற்றவர்.

34 வயது சவுரப் பரத்வாஜ் கம்ப்யூட்டர் என்ஜினீயர். லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தால் கவரப்பட்ட இவர் கெஜ்ரிவாலிடம் இணைந்தார்.

டெல்லி மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், பொதுப் பணித்துறை மந்திரியாக இருந்தவருமான சவுகானை தோற்கடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் ராக்கி பிர்லா. 26 வயதே ஆன இவர் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்தார்.

அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு லோக்பாலுக்காக போராட களம் இறங்கினார். வங்கியில் ரூ.2½ லட்சம் கடனுடன் இருக்கும் இவர் டெல்லியின் மிக இளம் வயது மந்திரியாக இருப்பார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 6:05 pm

டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஊழல்களை விசாரித்து நடவடிக்கை: ஆம் ஆத்மி கட்சி அதிரடி அறிவிப்பு

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. நாளை மறுநாள் ராம் லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார்.

தேர்தலுக்கு முன்பு டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசை ஆம்ஆத்மி கட்சி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. குறிப்பாக காங்கிரசின் ஊழல்கள் பற்றி ஆம்ஆத்மி கட்சியினர் பொதுக்கூட்டங்களில் பேசி இருந்தனர்.

இப்போது காங்கிரஸ் ஆதரவு கொடுப்பதால், ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி நிச்சயமாக விசாரணை நடத்தப்படும். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் மீது ஆம்ஆத்மி கட்சி ஏற்கனவே மிகப்பெரிய ஊழல் பட்டியல் தயாரித்து வைத்துள்ளனர். ஷீலா தீட்சித் தலைமையிலான மந்திரிகள் தனியார் நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக அந்த ஊழல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு காலத்தில் அமல் செய்யப்பட்ட திட்டங்களிலும் ஊழல்கள் நடந்துள்ளதை ஆம்ஆத்மி கட்சியினர் கண்டு பிடித்துள்ளனர். மின்சாரம், குடிநீர் துறைகளில் போலி பில்கள் தயாரித்து முறைகேடு நடந்துள்ளதற்கு ஆம்ஆத்மி கட்சியினர் ஆதாரங்கள் வைத்துள்ளனர்.

ரிதலா எனும் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக ரூ.300 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டு இருப்பதாக ஒரு ஆவணம் உள்ளது. ஆனால் ரிதலா மின் நிலையம் 2010–ம் ஆண்டு முதல் மூடப்பட்டு கிடக்கிறது. அப்படியானால் இந்த 300 கோடி ரூபாய் எங்கு போனது என்று ஆம்ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி டெல்லியில் கடந்த 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை ஆம்ஆத்மி கட்சியினர் வரிசைப்படுத்தியுள்ளனர். இந்த ஊழல்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து உரிய விசாரணை நடத்த ஆம்ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

ஊழலை எதிர்த்து ஆட்சிக்கு வந்துள்ள கெஜ்ரிவால் காங்கிரசின் ஊழல்களை அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். எனவே காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி விசாரணை நடப்பது உறுதியாகிவிட்டது.

இது டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட நிலையில் டெல்லி காங்கிரசார் தவித்தப்படி உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by krishnaamma on Tue Dec 24, 2013 8:41 pm

புதிய ஆட்சி மலர்ந்துள்ளது அதுவும் தலை நகரிலேயே ! நம் நாட்டிற்கு இது ஒரு வழிகாட்டியாக மாற மனமார்ந்த வாழ்த்துகள் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Wed Dec 25, 2013 10:49 pm

டிச.28-ல் டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு

டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுநர் அனுப்பிய பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்லியில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிடம், திங்கள் கிழமை தெரிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

இதனையடுத்து, ஆளுநர் நஜீப் ஜங், ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது தொடர்பாக பரிந்துரைக் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் அதற்கு இன்று (புதன் கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.

டிசம்பர் 28-ல் பதவியேற்பு:

டிசம்பர் 28-ஆம் தேதி டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் இன்றைக்கு தான் கிடைத்தது என்பதால் பதவியேற்பு விழ 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

கடந்த 2011- ஆம் ஆண்டில் லோக்பால் மசோதா நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கிய ராம் லீலா மைதானத்தில், பதவியேற்பு விழா நடைபெறும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Wed Dec 25, 2013 10:50 pm

அரசியல் பழிவாங்கலுக்கு இடமில்லை: ஆம் ஆத்மிக்கு காங். எச்சரிக்கை

டெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டால், அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அக்கட்சிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, டெல்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, அரசியல் ரீதியாகப் பழிவாங்கல் நடவடிக்கையில் எந்தக் கட்சியாவது ஈடுபட்டால், தங்களது குரலை எழுப்புவது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் நிலைப்பாடு குறித்து அவர் கூறும்போது, "முதல்வர் மற்றும் அனைவருமே ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்பது கடமை. அவர்கள் பதவியேற்கும்போது, ஊழலுக்கு எதிராக போராடுவது குறித்தும் உறுதிமொழி ஏற்கின்றனர். அப்படி இருக்க, ஊழல் பற்றி தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை" என்றார் அவர்.

அதேவேளையில், டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமைக்க ஆதரவு அளிப்பது என்ற காங்கிரஸின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலைத் தொடர்ந்து, வரும் சனிக்கிழமை டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார். அவருடன் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் பதவியேற்கின்றனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 28 ஆம் தேதி பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Thu Dec 26, 2013 5:00 pm

அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்த பாதை: கேள்வி கேட்ட பி.ஜே.பி.. கேள்வியே கேட்காத காங்கிரஸ்..

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால், 28 தொகுதிகளைக் கைப்பற்றியது முதல் ஷாக் என்றால், யாரை எதிர்த்து அவர் இதுவரை கத்தியைத் தூக்கினாரோ அந்த காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது அடுத்த ஷாக். இந்தக் காட்சியை நமட்டுச் சிரிப்புடன் ரசித்துக்கொண்டு இருக்கிறது பி.ஜே.பி.

நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் டெல்லியில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 31 தொகுதிகளைக் கைப்பற்றி பி.ஜே.பி. முதலிடத்திலும் 28 தொகுதிகளைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்திலும் இருந்தன. ஆட்சி அமைக்கத் தேவையான 36 தொகுதிகள் இல்லாததால் ஆரம்பத்திலேயே, 'நாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. யாருடைய ஆதரவையும் கேட்கப் போவதில்லை’ என்று பி.ஜே.பி. அறிவித்தது. எனவே, பந்து ஆம் ஆத்மி கட்சியை நோக்கி வந்தது. 'எங்களை ஆதரிக்க வேண்டுமானால் சில நிபந்தனைகளை ஏற்கவேண்டும்’ என்று சொல்லி 18 கோரிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

அந்த நிபந்தனைகளைப் பற்றி காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சித் தலைமையும் பரிசீலிப்பதாகச் சொன்னது. இந்த நிலையில் மக்கள் கருத்தை அறிய அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சித்தார். முனிசிபல் வார்டுகள் வாரியாகவும் இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் கருத்துக்களைக் கேட்டுவந்தார். இதுவரை நாலரை லட்சம் பேர் வரை கருத்தை தெரிவித்துள்ளாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இதில் பெரும்பான்மை கருத்து என்ன என்பதை ஆம் ஆத்மி கட்சி ரகசியமாக வைத்தது. ''தங்களுடைய நிலையை வருகிற திங்கள்கிழமை தெரிவிப்போம்'' என்று அறிவித்தார்கள்.

'உடனடியாக நாம் ஆட்சி அமைத்தால்தான் நம்முடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியும்’ என்று கெஜ்ரிவாலுக்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்கள். ''காங்கிரஸை நம்பி ஆட்சி அமைக்க முடியாது'' என்று கெஜ்ரிவால் முதலில் சொன்னார். தன்னை வந்து யார் சந்தித்தாலும், 'ஆட்சி அமைக்கவா? மற்றொரு தேர்தலை சந்திக்கவா?’ என்று கருத்து கேட்டுவந்தார்.

இதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் எழுதிய கடிதங்களுக்கு காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சிகளும் பதில் கொடுத்தன. ''பதினெட்டு நிபந்தனைகளில் இரண்டு விவகாரத்துக்கு மட்டும் சட்டத்தின் மூலம் முடிவு எடுக்க வேண்டியதுள்ளது. மற்ற 16 விவகாரங்களும் நிர்வாக உத்தரவின் மூலம் நிறைவேற்றக்கூடியவை. ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைத்து இவற்றை முடிவு எடுத்து நிர்வாக உத்தரவுகளைப் போடலாம்'' என்று காங்கிரஸ் பதில் கூறியது. ஆனால் பி.ஜே.பி., ஆம் ஆத்மி கட்சியை அரசியல்ரீதியாகக் கிண்டல் செய்து கேள்விகளை எழுப்பியது.

''முதலில் நீங்கள் ஆட்சி அமைக்கப் போகிறீர்களா... இல்லையா? ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கை இல்லாத உங்கள் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு இருக்கிறதா இல்லையா? சோனியாவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே என்ன ஒப்பந்தம் நடந்துள்ளது? உங்கள் கட்சி கார்ப்ரேட் நிறுவனங்களிடமும், வியாபார அமைப்புகளிடமும் நன்கொடைகளை வசூலித்துக்கொண்டு இருக்கிறது. நன்கொடை வசூலித்து தேர்தலில் வென்று ஆட்சி சுகத்தை அனுபவிக்க திட்டமிடுவது மட்டும்தான் உங்கள் கட்சியின் லட்சியமா? ஆட்சி அமைக்க கருத்து கேட்கும் உங்கள் கட்சி அரசியல் கட்சி தொடங்கும்போதுமக்களிடம் கருத்துக் கேட்டீர்களா?'' என்பது உட்பட 14 கேள்விகளைக் கேட்டது. இதனை கெஜ்ரிவால் எதிர்பார்க்கவில்லை. ''தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட டெல்லி பாட்லா ஹவுஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மாவை விமர்சனம் செய்ததோடு, 'காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்கவேண்டும்’ என்று கூறியவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பிரசாந்த் பூஷண். இப்படிப்பட்டவர்கள் காங்கிரஸோடு ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு மக்களை ஏமாற்றிவருகின்றனர்'' என்று குற்றம்சாட்டுகிறார் பி.ஜே.பி-யின் முதலமைச்சர் வேட்பாளர் ஹர்ஷ் வர்தன். ''ஊழல் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு ஊழல் கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எந்தக் கொள்கையும் இல்லை என்பதையே காட்டுகிறது'' என்றும் ஹர்ஷ் வர்தன் சொல்கிறார். பி.ஜே.பி-யின் இந்தக் குற்றச்சாட்டுகளால் கோபம் அடைந்த கெஜ்ரிவால், கேள்விகள் கேட்காத காங்கிரஸ் பக்கமாக தனது பார்வையைத் திருப்பினார்.

''காங்கிரஸ் தன்னுடைய ரகசிய வலையில் கெஜ்ரிவாலைக் கொண்டுவந்து வீழ்த்திவிட்டது'' என்றே டெல்லியில் சொல்கிறார்கள். இதுவரை அடுத்தவர் மீது விமர்சனம் மட்டுமே செய்துவந்த கெஜ்ரிவால் முதல் முறையாக விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். இதுவரை கோரிக்கைகள் மட்டுமே வைத்துவந்த கெஜ்ரிவால், இப்போது அதனை நிறைவேற்றித் தர வேண்டிய இடத்துக்கு வந்துள்ளார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Thu Dec 26, 2013 5:39 pmபுதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அக்கட்சி தேர்தல் நேரத்தில் பெற்ற வெளிநாட்டு நிதி குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் நிதி கணக்கு மற்றும் அது தொடர்பான ரசீதுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீதான இளம்பெண்ணை உளவு பார்த்த புகார் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே, ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெளிநாட்டு
நிதி குறித்து ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Thu Dec 26, 2013 5:42 pm


நேர்மை அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் அழைப்பு; ஆம் ஆத்மியின் அசத்தல் ஆரம்பம்

காஸியாபாத்: வருகிற சனிக்கிழமையன்று டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று தமது வீட்டிற்கு வெளியே மக்கள் குறைகேட்பு ( ஜனதா தர்பார்) நிகழ்ச்சியை நடத்தினார்.

தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக தனது வீட்டின் முன்னர் திரண்டிருந்த மக்களிடையே பேசிய கெஜ்ரிவால், "உங்களில் பெரும்பாலானோர் எனக்கு வாழ்த்து தெரிவிக்கத்தான் வந்துள்ளீர்கள் என எனக்கு தெரியும். இந்த வெற்றி என்னுடையதல்ல; உங்களுடைய வெற்றி" என்றார்.

தொடர்ந்து அங்கு வந்த மக்களில் பெரும்பாலானோர் குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான குறைகளையும், புகார்களையுமே தெரிவித்தனர். அவற்றை கேட்ட கெஜ்ரிவால்," உங்களது குறைகள் மற்றும் புகார்களை கேட்டேன். அதன் மீது நிச்சயம் நான் நடவடிக்கை எடுப்பேன்" என்று உறுதி அளித்தார்.

பதவி ஏற்பு விழாவுக்கு விஐபி என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு

இதனிடையே, பதவி ஏற்பு விழாவிற்கு விஐபி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"எங்களது அரசு நேர்மையான மக்களை தேடுவதே அனைத்து நேர்மையான மக்களுக்கும் தகுந்த பொறுப்பு வழங்கப்படும்.ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" என அழைப்பு விடுத்தார்.

நேர்மையான அதிகாரிகளுக்கு அழைப்பு


இதனிடையே ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக அனைத்து நேர்மையான அதிகாரிகளும் தம்மை இமெயில், எஸ்.எம். எஸ் மற்றும் கடிதம் மூலம் தொடர்புகொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளார் கெஜ்ரிவால்.

ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை

முன்னதாக தமது கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறபோதிலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீதான ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Thu Dec 26, 2013 5:46 pm


போலீஸ் பாதுகாப்பை நிராகரித்த கெஜ்ரிவால், அரசு பங்களாவை ஏற்கவும் மறுப்பு!

புதுடெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், காவல்துறை பாதுகாப்பை நிராகரித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. முதல்வராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மறுதினம் பதவி ஏற்றுக்கொள்கிறார்.

ராம் லீலா மைதானத்தில் மக்கள் முன்னிலையில், முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொள்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதிய முதல்வராக பதவியேற்க உள்ள கெஜ்ரிவால், காவல்துறை பாதுகாப்பை நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனக்கு எந்தவித பாதுகாப்பும் வேண்டாம் என்றும், கடவுள்தான் தமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு என்றும் கூறியுள்ளார்.

அரசு பங்களாவை ஏற்கவும் மறுப்பு

இதனிடையே முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசு பங்களா ஒதுக்குவதாக டெல்லி தலைமைச் செயலர் டி.எம். சபோலியா ஒதுக்க முன்வந்த நிலையில், அதனையும் ஏற்க கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by Muthumohamed on Thu Dec 26, 2013 9:49 pm

மிக அதிக நாட்கள் முதல்வராக இவர் நீடிப்பார் என்று எனக்கு தோன்றவில்லை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Thu Dec 26, 2013 10:57 pm


டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ’மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி நடத்தினார். அதில், அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Fri Dec 27, 2013 3:51 am

மீண்டும் குரு அன்னா ஹசாரேவை அழைப்பேன் - கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சராக வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை பதவியேற்கும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவிற்கு அனைத்து பொதுமக்களையும் அழைத்துள்ளார். அவர் அன்னா ஹசாரேவிற்கும் தனிப்பட்ட முறையில் மீண்டும் அழைப்பு விடுக்கபோவதாக தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வராக பதவி ஏற்கும் விழாவிற்கு வருகை தருமாறு அன்னாஹசாரேவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அழைப்பு விடுக்கபோவதாக தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அன்னா ஹசாரே மறுத்துள்ளார். தமக்கு அழைப்பிதழ் ஏதும் வரவில்லை என்றும், மேலும் உடல் நலமும் சரியில்லாததால், பதவியேற்பு விழாவில் பங்கேற்க தம்மால் இயலாது என்றும், அதே சமயம் கெஜ்ரிவாலுக்கு தமது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாகவும் ஹசாரே செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இதனிடையே இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஹசாரே தமது குருநாதர் என்றும், பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு தாம் தொலைபேசி மூலம் ஹசாரேவிடம் பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஹசாரே, கிரண் பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகிய 'டீம் அன்னா' குழுவினருக்கு அரசு தரப்பிலிருந்து அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும், கெஜ்ரிவால் கூறினார்.

பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum