ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 ayyasamy ram

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 24, 2013 3:49 am

First topic message reminder :


70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.

இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.

பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆம்ஆத்மி கட்சி கருத்து கேட்டது. சுமார் 6½ லட்சம் பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றனர். இதை ஏற்று ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.

கெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Fri Dec 27, 2013 3:53 am


டெல்லியின் இளம்வயது அமைச்சர் ராக்கி பிர்லாடெல்லியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பதவியேற்கும் கட்சி பிரமுகர்களில் வெறும் 26 வயது ராக்கி பிர்லா என்ற பெண் பதவியேற்கிறார். இதன்மூலம் இவர் டெல்லியின் இளம் அமைச்சர் என்ற பெருமையை அடைகிறார்.

டெல்லி முதலமைச்சராக ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். அவருடன் மணிஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, ராக்கி பிர்லா, சவுரவ் பரத்வாஜ், சத்யேந்திர ஜெயின், கிரிஷ் சோனி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். இதற்காக ராம்லீலா மைதானத்தில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பதவி ஏற்பு விழாவில் டெல்லி மட்டுமல்லாது ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தொண்டர்களும், ரஷியாவில் இருந்து பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். டெல்லி மாநில வரலாற்றில் மிக இளம் வயதில் அமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் ராக்கி பிர்லா (வயது 26) முன்னாள் தொலைக்காட்சி நிருபராவார்.

டெல்லியின் இளம் வயது அமைச்சராவது குறித்து ராக்கி கூறுகையில், “நான் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்ததில்லை. இது ஒரு அரசியல் கட்சி அல்ல. இது ஒரு புரட்சி. ஊழலை வேரறுக்க நாம் அரசிலமைப்பில் சேர வேண்டும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். எனவே நான் அதில் இணைந்துள்ளேன். எனது பெற்றோர் என்னை ஊக்குவித்ததே என்னுடைய இந்த முயற்சிக்கு காரணம்” என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Fri Dec 27, 2013 3:54 am


பொதுமக்கள் அனைவரும் வருக - அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு

டெல்லி முதலமைச்சராக வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை பதவியேற்கும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவிற்கு அனைத்து பொதுமக்களையும் அழைத்துள்ளார் மேலும் பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் சனிக்கிழமை 28 ஆம் தேதி டெல்லியில் முதலமைச்சராக பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நண்பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

ஆட்சியமைப்பது பற்றிய துணைநிலை ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லி தலைமை செயலாளர் கெஜ்ரிவாலை சந்தித்து ஒப்புதல் பற்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்தே பதவியேற்பு குறித்து முடிவாகி உள்ளது.

இதனிடையே காங்கிரஸ் உடன் கூட்டணியோ, உடன்பாடோ இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மக்களுக்கு அளித்த 18 வாக்குறுதிகளை சட்டசபையில் நிறைவேற்ற ஆதரவு கிடைக்கும் என அக்கட்சி நிர்வாகி யோகேந்திர யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆதரவு கிடைக்கவில்லை என்றால் வெளிறே தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைக்க முன்வந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு 26 ஆம் தேதி பதவியேற்கும என அறிவித்திருந்தது.

இதனையடுத்து அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என கெஜ்ரிவால் கட்சி அறிவித்ததை அடுத்து டெல்லி அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், எப்போதும் நடப்பது போல முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் வெறும் அரசியல் பிரமுகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து பொது மக்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sat Dec 28, 2013 2:48 pm

பதவியேற்க 'மெட்ரோ' ரயிலில் பயணம்: கெஜ்ரிவால் அதிரடி

காஜியாபாத் : டில்லி முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால், இன்று, மெட்ரோ ரயிலில் செல்கிறார். அவர் கட்சியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களும், உடன் செல்கின்றனர்.

6 - அமைச்சர்கள்:


டில்லி மாநிலத்தில், காங்., ஆதரவுடன், 'ஆம் ஆத்மி' கட்சி, புதிய அரசு அமைக்கவுள்ளது. முதல்வராக, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அரவிந்த் கெஜ்ரிவால், ராம்லீலா மைதானத்தில், இன்று நடக்கும் விழாவில் பதவியேற்கிறார்.அவர் கட்சியை சேர்ந்த, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால், வழக்கமாக, மாநில முதல்வர்கள் பின்பற்றும், பாரம்பரிய மரபுகளை தகர்த்து வருகிறார்.'பாதுகாப்பு, அரசு பங்களா உள்ளிட்ட வசதிகள் வேண்டாம்' என, ஏற்கனவே, அவர் தெரிவித்துள்ளார். சாலையில், வாகனத்தில் செல்லும்போது, தனக்காக போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்றும், அவர், டில்லி போலீஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், காஜியாபாத்தில் உள்ள, அவரின் வீட்டில், நேற்று செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது:பதவியேற்பு விழாவுக்கு, நானும், என் கட்சியினரும், மெட்ரோ ரயிலில் பயணிக்க வுள்ளோம். எங்களுக்காக, ஆடம்பர வசதிகள், பாதுகாப்பு வசதிகள் தேவையில்லை என, ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.

எதிர்பார்ப்பு:

எங்கள் கட்சி சார்பில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களும், மெட்ரோ ரயிலில் தான், பதவியேற்பு விழாவுக்கு செல்வர். டில்லியில் மேல் மட்டத்திலிருந்து, கீழ் மட்டம் வரை, நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. இதை மாற்ற வேண்டும்.இதனால் தான், ஒவ்வொரு பிரச்னைக்கும், மக்கள், முதல்வரை தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. டில்லி மக்களின் எதிர்பார்ப்பு, மிகவும் அதிகமாக உள்ளது. எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டுமானால், நாங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

விசாரணை:

எங்கள் கட்சிக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி வந்தது தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப் போவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. விசாரணை நடத்த வேண்டும் என்ற ஆர்வம், மத்திய அரசுக்கு இருந்தால், உடனடியாக அதைச் செய்யலாம். அதை விடுத்து, அறிவிப்புகளையும், அறிக்கைகளையும் வெளியிடுவது, வேடிக்கையாக உள்ளது.ஆம் ஆத்மி கட்சி அரசு அமையும் நேரத்தில், டில்லியில், வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும், 'காஸ்' விலை உயர்த்தப்பட்டுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு, இப்போது என்ன அவசரம் வந்தது என, தெரியவில்லை. முதல்வராக பதவியேற்றதும், இதுகுறித்து ஆய்வு செய்வேன். இதேபோல், ஆட்டோ ரிக் ஷா கட்டணங்களும் மாற்றி அமைக்கப்படும்.டில்லி தலைமைச் செயலகத்தில், சில முக்கியமான கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sat Dec 28, 2013 2:51 pm

கெஜ்ரிவாலுக்கு ஹசாரே வாழ்த்து

புதுடில்லி : டில்லியின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சமூக ஆர்வலரும், அவரது குருவுமான அன்னா ஹசாரே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு, ஹசாரே கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sat Dec 28, 2013 2:51 pm

கெஜ்ரிவால் பிரதமராகவும் வருவார்: மக்கள்

புதுடில்லி : டில்லியின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரியானா மாநிலம் பிவானி கிராமத்தில் இருந்து வரும் 4வது முதல்வராவார். கெஜ்ரிவால் இன்று டில்லி முதல்வராக பதவியேற்க உள்ளதை பிவானி கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் கிராம மக்கள், கெஜ்ரிவால் டில்லியின் முதல்வராக மட்டுமல்ல, நாட்டின் பிரதமராகவும் வருவார் என தெரிவித்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sat Dec 28, 2013 2:52 pm

பதவியேற்பு விழாவில் 50,000 பேர் பங்கேற்பு?

புதுடில்லி : டில்லியில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு யாருக்கும் விஐபி பாஸ் கிடையாது எனவும், யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்துள்ளதால் எதிர்பார்த்ததை விட ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sat Dec 28, 2013 2:54 pm

இது மற்றொரு சுதந்திர போராட்டம்:கெஜ்ரிவால்

புதுடில்லி : பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ராம் லீலா மைதானத்திற்கு புறப்படுவதற்கு முன் கெஜ்ரிவால் தனத வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இது எனக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; ஆம் ஆத்மி கட்சிக்க கிடைத்த வெற்றி; ஊழலுக்கு எதிரான எங்களின் நடவடிக்கைகள் தொடரும்; இது மற்றொரு சுதந்திர போராட்டம் என தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sat Dec 28, 2013 2:56 pm

கெஜ்ரிவால் சிறப்பாக பணி செய்வார்:ஹசாரே

புதுடில்லி : டில்லி முதல்வராக பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது பணியை சிறப்பாக செய்வார் என தனக்கு நம்பிக்கை உள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டில்லி முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்

புதுடில்லி : டில்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுள்ளார். 6 அமைச்சர்களுடன் பதவியேற்ற கெஜ்வாலுக்கு டில்லி துணைநிலை ஆளுனர் நஜீப் ஜக் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sat Dec 28, 2013 2:56 pm

டில்லி :புதிய அமைச்சரவை பதவியேற்பு

புதுடில்லி : டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றார். அவருடன் மனீஷ் சிசோடியா (சமூக ஆர்வலர்), சோம்நாத் பார்தி(வழக்கறிஞர்), சத்யேந்திர ஜெயந்த் ( கட்டிட வடிவமைப்பாளர்), ராக்கி பிர்லா ( முன்னாள் பத்திரிக்கையாளர்), கிரிஷ் சோனி, சவ்ரப் பரத்வாஜ் (முன்னாள் சாப்ட்வேர் இன்ஜினியர்) ஆகிய 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். பட்டதாரிகளையும், இளம் வயதினர்களையும் கொண்ட முதல் அமைச்சரவை இது என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sat Dec 28, 2013 3:01 pm

டில்லியின் 7 வது முதல்வர் பொறுப்பேற்பு ; அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்

புதுடில்லி: டில்லியில் 7 வது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் நஜிப்ஜங் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஊழலை விரட்டுவோம் என்றும் இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும் பதவியேற்க புறப்பட்டபோது கெஜ்ரிவால் குறிப்பிட்டார். பதவியேற்க கெஜ்ரிவால் மெட்ரோ ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.

தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் பல விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்தவரும், ஊழல் எதிர்ப்பு போரை துவங்கியவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சட்டசபை தேர்தலில் 28 இடங்களை பிடித்தது.

தற்போது காங்கிரஸ் வெளியில் இருந்து தரும் ஆதரவை பெற்று இன்று மக்களின் கருத்துக்களை கேட்டு ஆட்சி அமைக்கிறார். இவருடன் 6 பேர் மணீஷ் சிசோடியா , சத்யேந்திரஜெயந்த், அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

ஊழல் களையப்படும்:

முதல்வர் பதவியேற்றதும் விழா மேடையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்: ஆம் ஆத்மியை தேர்வு செய்த டில்லி மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நேர்மையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது. கடவுளுக்கும் , மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போதுதான் எங்களின் உண்மையான போராட்டம் துவங்கியிருக்கிறது. இன்று நானும் எம்.எல்ஏ.,க்களும் பொறுப்பேற்கவில்லை. மக்களும் என்னுடன் இணைந்து பதவியேற்றுள்ளனர். இந்த இடத்தில்தான் ஹசாரேயுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன் போராட்டத்தை துவக்கினேன். இது போன்ற புரட்சி நடக்கும் என கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

மக்கள் இல்லாமல் நாம் ஆட்சியை நடத்த முடியாது. அதிகாரிகள் , போலீசாரின் ஆட்சி இங்கு நடக்காது. மக்களை வைத்துதான் ஆட்சி நடத்துவோம். மின்கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும். பார்லி., தேர்தலை எதிர்கொள்ள ஆம்ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது. அழுக்கு நிறைந்ததாக அரசியல் உள்ளது என அன்னா ஹசாரே கூறியுள்ளார். இந்த அழுக்கை நீக்கிட பாடுபடுவோம். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆம்ஆத்மி தயாராக உள்ளது. எந்தவொரு மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம். ஊழலை ஒழிக்க அயராது பாடுபடுவோம். ஊழல்வாதிகள் மீது கடும் நடடிக்கை எடுப்போம். பா.ஜ., தலைவர் ஹர்சவர்த்தன் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டில் முழு சுதந்திரம் கிடைக்க பாடுபடுவோம். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

பதவியேற்பு விழாவில் காங்கிரசார் மிஸ்ஸிங்

இன்றைய பதவியேற்பு விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் காங்கிரசார் யாரும் பங்கேற்கவில்லை. பா.ஜ., டில்லி தலைவர் ஹர்சவர்த்தன் பங்கேற்றார்.

கிரண்பேடி வாழ்த்து:

கெஜ்ரிவால் பதவியேற்றதும், இவருக்கு அன்னா ஹசாரேயின் அணியை சேர்ந்த கிரண்பேடி வாழ்த்தும், வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் மற்றும் அவரது அணியினர் பொறுப்பேற்பது மகிழ்ச்சி, இவர்கள் அரசியிலில் நல்லதொரு மாற்றத்தை செய்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கெஜ்ரிவால் மனைவி சுனிதா

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றுவார் என கெஜ்ரிவால் மனைவி சுனிதா கூறினார். அவர் மேலும் கூறுகையில், எனது கணவர் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார். இவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். என்றார்

தலைமை செயலகம் சென்றார் முதல்வர்

டில்லி முதல்வராக பதவியேற்றதும், ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் முதல்வர் கெஜ்ரிவால் மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் டில்லி தலைமை செயலகம் சென்றார். அங்கு சென்று முதல்வராக ஒரு மணியளவில் பொறுப்பை ஏற்று கொண்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sat Dec 28, 2013 3:01 pm


அமைச்சர்கள் இலாகா விவரம்:

இன்றைய அமைச்சரவையில் பொறுப்பேற்றவர்களின் இலாக்காக்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி

முதல்வர் கெஜ்ரிவால்; உள்துறை, நிதித்துறை , மின்சாரம், திட்டம், லஞ்ச ஒழிப்பு

மணீஷ் சிசோடியா: பொதுப்பணித்துறை, கல்வி , நகர் மற்றும் ஊரக வளர்ச்சி.

ராக்கி பிர்லா: குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை. சமூக நிதி

சத்யேந்திரா ஜெயின்: சுகாதாரத்துறை

சவ்ரப் பரத்வாஜ்: போக்குவரத்து துறை.சிவில் சப்ளை,

சோம்நாத் பார்த்தி: சுற்றுலா, சட்டம் மற்றும் கலைத்துறை .

கிரிஷ் சோனி: வேலை வாய்ப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sat Dec 28, 2013 3:02 pm

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை வரலாறு

பிறந்த தேதி: ஆகஸ்ட் -16 , 1968 .

ஊர் : ஹிசார்

மனைவி: சுனிதா

பள்ளி படிப்பு : ஹிசார்

1989 - 92 வரை டாட்டா ஸ்டீல் பணியாற்றினார்

1995 - சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் இந்திய வருமான வரி துறையில் பணி.

2000- உயர் படிப்பிற்காக 2 ஆண்டுகள் விடுப்பு

2003 - மீண்டும் பணியில் சேர்ந்தார்

2006- வருமான வரி இணைகமிஷனர் பதவியில் இருந்து விலகல்

2012 நவம்பர் 26 ல் ஆம் ஆத்மி கட்சி துவக்கம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sat Dec 28, 2013 5:46 pm


அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து!

புதுடெல்லி: டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று மாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார்.

அதற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by ஜாஹீதாபானு on Sat Dec 28, 2013 6:16 pm

கெஜ்ரிவால் ரொம்ப பிடிக்குமோ உங்களுக்கு???????????avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30101
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Sun Dec 29, 2013 10:49 am

@ஜாஹீதாபானு wrote:கெஜ்ரிவால் ரொம்ப பிடிக்குமோ உங்களுக்கு???????????

தனிப்பட்ட முறையில் இவரைப் பிடிக்க எந்தக்காரணமும் இல்லை அக்கா!

இந்திய அரசியல் ஊழலில் திளைத்திருக்கும் வேளையில், மக்கள் மாற்றம் தர யார் வருவார்கள் என காத்திருக்கும் வேளையில் கல்கி அவதாரம் போல் நான் இருக்கிறேன் என்று வந்தார், வென்றார். இன்று முதல்வராகவும் பதவியேற்றுவிட்டார்.

இவரது இந்த வெற்றியை இந்திய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும், காரணம், இவரது வருகையாலும், மக்கள் இவரை ஆதரித்ததாலும், ஊழல் அரசியல்வாதிகளின் அடிமடியில் இந்நேரம் நெருப்புப் பற்றிக் கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே! அந்த நெருப்பை உருவாக்கிய மாவீரன் அல்லவா கெஜ்ரிவால்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by விஸ்வாஜீ on Mon Dec 30, 2013 12:35 pm

இவரின் அதிரடி செயல்பாடுகள் ஆரம்பிக்க 3 மாதங்கள் ஆகுமா?
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1339
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Mon Dec 30, 2013 3:55 pm

vishwajee wrote:இவரின் அதிரடி செயல்பாடுகள் ஆரம்பிக்க 3 மாதங்கள் ஆகுமா?


இப்பொழுது இவரால் எதுவும் அதிகமாகச் செயல்பட முடியாது என்பதே அனைவரின் கணிப்பாகவும் உள்ளது!

காங்கிரஸ் நிச்சயம் இவரது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகத்தான் இருக்கும்! இவர் இப்ப்பொழுது ஆரம்பிக்கும் நலத்திட்டங்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அடுத்து இவர் பெரும்பான்மையில் வெற்றிபெற உதவும் எனக் கூறுகிறார்கள்!

கணிப்புகள் நிரந்தரம் அல்ல, காலம்தான் அனைத்திற்கும் பதில் கூற வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Mon Dec 30, 2013 5:41 pm

சாலையோர சிறுவர்கள் முதல் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பணியாளர்கள் வரை; நம்பிக்கை நட்சத்திரம் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தங்களுக்கு உதவி புரிவார் என்ற நம்பிக்கையில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவன பணியாளர்கள் மற்றும் டெல்லியின் சாலையோரங்களில் வசிக்கும் சிறுவர்கள் அவருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர்.

டெல்லி மக்களின் பேராதரவை பெற்று முதலமைச்சராக பதியேற்று இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்திற்கு வந்த முதல் கடிதம் டெல்லியின் சாலையோரங்களில் வசிக்கும் சிறுவர்கள் அனுப்பியது.

அக்கடிதத்தில், சாலையோரங்களில் வசிக்கும் சிறுவர்களுக்கு சட்டப்பூர்வ அடையாளம் அளிக்கப்படவேண்டும், அனைத்து அரசு சலுகைகளும் அவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அவர்கள் எளிதாக கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் அரசுடன் அவ்வபோது சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவன பணியாளர்கள் தங்கள் சம்பள பாக்கியை பெற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியை கேட்க உள்ளனர்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களுக்கு 17 மாத சம்பளம் தர வேண்டியுள்ளதாக கூறிய பணியாளர்கள், இது குறித்து முக்கிய கட்சிகளின் உதவியை கேட்டும் அவர்கள் தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை எனக் கூறியுள்ளனர்.

எனவே டெல்லி முதலமைச்சரின் உதவியை நாட முடிவு செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சாமானிய மனிதர்களின் பிரச்னைகளை தீர்க்கப் போவதாக கூறியுள்ள கெஜ்ரிவால், தங்களுக்கும் உதவுவார் என நம்புவதாக கிங்ஃபிஷர் ஏர்லைன் விமான பணியாளர்கள் தெரிவித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 31, 2013 5:31 pm

மூன்று நாளில் முடிந்ததை செய்வோம்-கெஜ்ரிவால்

புதுடில்லி: 'ஆட்சியை காங்., அல்லது பா.ஜ., கவிழ்த்தாலும் எங்களுக்கு கவலையில்லை. பதவியில்இருக்கம் மூன்று நாட்களில், எங்களால் முடிந்ததை மக்களுக்கு செய்துவிட்டு போவோம்,' என்று, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

டில்லி சட்டசபையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது, ஆம் ஆத்மி, பொதுமக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில், நாள் ஒன்றுக்கு 700 லிட்டர் இலவச குடிநீரும், மின் கட்டணத்தில் 50 சதவீதம் குறைப்பு என்ற இரண்டு வாக்குறுதிகள் முக்கியமானவை. இவற்றில், இலவச குடிநீர் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

அடுத்தகட்டமாக, மின் கட்டணத்தில் 50 சதவீதம் குறைப்பு என்ற அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டில்லிக்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களில் ஆய்வு நடத்த முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மின் கட்டணத்தை பற்றி விவாதிக்க, அமைச்சரவை கூட்டத்தையும் அவர் கூட்டி உள்ளார்.

மின் நிறுவனங்களுக்கு கடந்த ஆட்சியின் போது சலுகை காட்டப்பட்டதா, அதில் ஊழல் ஏதேனும் நடந்துள்ளதா என்பதை அறியவே இந்த சோதனை நடத்தப்படுவதாகவும், இதனால், முக்கிய அதிகாரிகள் சிலரும், காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களும் சிக்குவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவை கொடுத்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரஸ் இதை மறுத்துள்ளது. 'நாங்கள் எந்த மின் நிறுவனத்திற்கும் சலுகை காட்டவில்லை. புதிய அரசு சோதனை நடத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் தாரளமாக நடத்தலாம். இந்த சோதனையில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கினால், அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மீதோ, அதிகாரிகள் மீதோ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என டில்லி காங்கிரஸ் தலைமை கூறி உள்ளது.

இருப்பினும், ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே தொல்லை தரும் ஆம் ஆத்மி கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்ள வேண்டும் என, டில்லி காங்கிரசில் குரல்கள் ஒலிக்க துவங்கிவிட்டன. வரும் ஜனவரி 3ம் தேதி, ஆம் ஆத்மி ஆட்சியை தொடர, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு நி்ச்சயம் தேவை. இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் காங்கிரஸ் காலை வாரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'காங்கிரசோ, பா.ஜ.,வோ ஆட்சியை கவிழ்த்தால் அது குறித்து நாங்கள் கவலைப்பட போவதில்லை. பதவியில் இருக்கும் மீதம் உள்ள மூன்று நாட்களில், முடிந்ததை டில்லி மக்களுக்கு செய்துவிட்டு போவோம்,' என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Dec 31, 2013 5:34 pm

புதுடில்லி: டில்லியில், கடந்த சனிக்கிழமை, ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற போது, உற்சாக மிகுதியில், கோஷம் எழுப்பிய, போலீஸ்காரர், சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.

கெஜ்ரிவால் பதவியேற்ற போது, ராஜேஷ் குமார் என்ற அந்த போலீஸ்காரர், முழு சீருடையில், பாதுகாப்பு பணிக்காக வநதிருந்தார்.

மேடை தடுப்பு ஒன்றில் ஏறி நின்று, அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க' என, கோஷம் எழுப்பினார். இவ்வாறு, பல முறை அவர், கோஷமிட்டதோடு, டில்லி போலீசை, கெஜ்ரிவால் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் எனவும், முழக்கமிட்டார். அவரை, சக போலீசார், கீழிறக்கி விட்டனர்.

இந்த விவகாரம், போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. நேற்று, ராஜேஷ் குமார், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2010 முதல், டில்லி போலீசில் பணியாற்றி வருகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Feb 10, 2015 6:54 pm

'என்னை அச்சுறுத்தும் பெரும் வெற்றி' அரவிந்த் கெஜ்ரிவால் முதல் பேச்சு

புதுடில்லி: டில்லியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுள்ள ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார்.

டில்லியில் தேசிய கட்சிகளான பா.ஜ.,(4) மற்றும் காங்கிரஸ் ( 0) குறைந்த இடங்களை பெற்று பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த தோல்வியால் பா.ஜ., கவனத்துடன் இருக்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் எண்ணத்தை பா.ஜ., புரிந்து கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது என டில்லி பா.ஜ., தலைவர் உபாத்யாயா கூறியுள்ளார்.

இந்த தேர்லை பொறுத்தவரை ஆம் ஆத்மிக்கு பெரும் வெற்றி கிட்டியுள்ளது. இது அனைத்து அரசியல் கட்சியினரையும் அதிர வைத்துள்ளது.

ஊழல் - வி.ஐ.பி., கலாச்சாரம் ஒழிப்போம் : தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது அரவிந்த்கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்: என்னை அச்சுறுத்தும் அளவிற்கு மக்கள் வெற்றியை தந்துள்ளனர். வெற்றி தந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பெரும் வெற்றியால் ' இறுமாப்புடன் நாங்கள் இருக்க மாட்டோம் '- கட்சி தொண்டர்கள் யாரும் அகந்தை கொள்ள கூடாது. மக்கள் எங்களிடம் பெரிய பொறுப்பை தந்துள்ளனர் . எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இது ஆம்ஆத்மியின் வெற்றி .இவர்கள் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றுவோம். ஏழை, பணக்காரன் என அனைவரும் சமமாக பாவிக்கப்படுவர். ஊழல் - வி.ஐ.பி., கலாச்சாரம் ஒழிப்போம். பிரமாண்ட வெற்றியை தந்த மக்களுக்கு சல்யூட் அடிக்கிறேன். பெரும் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. உண்மையான சவால்கள் துவங்கியிருக்கிறது. டில்லியின் வளர்ச்சிக்கு அனைவருடனும் இணைந்து செயல்படுவேன். தனியாக எதுவும் செய்ய மாட்டேன். பாரத் மாதக்கி ஜே., என பேச்சை முடித்தார். தொண்டர்கள் கெஜ்ரிவால், கெஜ்ரிவால் என கோஷம் எழுப்பினர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Feb 10, 2015 6:55 pm

கருத்துக்கணிப்பையும் மிஞ்சிய வெற்றி ; ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டம்

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்பையும் மிஞ்சி ஆம் ஆத்மி பெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 70 தொகுதிகள் கொண்ட டில்லி சட்டசபையில் 35 முதல் 45 தொகுதிகள் வரை ஆம் ஆத்மி வெற்றி பெரும் என பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பா.ஜ., தரப்பில் கருத்துக்கணிப்புக்கள் தவறானது என்றும் நாங்களே வெற்றி பெறுவோம் என்றும் சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் ஆம் ஆத்மி பெரும்பான்மைக்கும் மேல் வெற்றியை தொட்டுள்ளது. தற்போதைய ஓட்டு எண்ணிக்கை நிலவரப்படி ஆம் ஆத்மி 67 தொகுதிகளிலும், பா.ஜ., 3 தொகுதிகளிலும், வெற்றி பெறும் என தெரிகிறது. இது வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெற்றி ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.

சுயேச்சை ஒரு இடத்திலும் முன்னணி வகித்து வருகிறது. கிரண் பேடியும் பின்னடைவு: பா.ஜ., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியும் தோல்வியை தழுவினார். கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட அவர் ஆம்ஆத்மி வேட்பாளரிடம் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். காங்., பிரசார தலைவர் அஜய்மக்கான் தோல்வி அடைந்தார்.

தோல்விக்கு பொறுப்பேற்பு; இந்த தோல்விக்கு தான் முழு பொறுப்பை ஏற்று கொள்வதாக கிரண்பேடி கூறியுள்ளார். இந்த மேட்சில் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனித சக்தி வெற்றி பெற்றுள்ளது. என கூறியுள்ளார்.இதில் மோடியை குறை கூற கூடாது என தெரிவி்த்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Feb 10, 2015 6:57 pm

ஆம் ஆத்மி வெற்றி குறித்து தலைவர்கள் கருத்து

கையில் துடப்பக்கட்டையுடன் களம் இறங்கிய ஒரு சாமான்யன் இரு பெரும் தேசிய கட்சிகளை வீழ்த்தி இருக்கிறார்.

தனி மெஜாரிட்டியுடன் டெல்லி மாநில அரியணையை அரவிந்த் கெஜ்ரிவால் கைப்பற்றி உள்ளார். இந்த இமாலய வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இதுபற்றி தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் வருமாறு:–

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா மாநில தலைவர்):–

இந்த தோல்வி துரதிருஷ்டவசமானதுதான். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இந்த தோல்வியை பா.ஜனதாவுக்கோ, பிரதமர் மோடிக்கோ பின்னடைவாக கருத முடியாது. ஏனென்றால் மோடி பிரதமர் ஆன பிறகு நடைபெற்ற அனைத்து மாநில தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

செய்ய முடியாத விஷயங்களை சொல்லி மக்களை ஏமாற்றி கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வது போல் டெல்லி தேர்தல் மோடி அரசின் குறியீடு அல்ல. வருங்காலத்தில் கட்சியின் வளர்ச்சியை எந்த வகையிலும் இந்த தேர்தல் முடிவு பாதிக்காது. இந்த தேர்தலில் மோடி முன்னிறுத்தப்படவில்லை. பேடிதான் முன்னிறுத்தப்பட்டார்.

கெஜ்ரிவால் ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார். இது ஆம் ஆத்மிக்கு தற்காலிக வெற்றி. பா.ஜனதாவுக்கு தற்காலிக தோல்வி அவ்வளவுதான்.

டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.):–

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா அளித்த வாக்குறுதி வேறாகவும் வெற்றி பெற்ற பிறகு அதன் செயல்பாடு வேறாகவும் அமைந்துள்ளது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அதற்கான தண்டனைதான் இது.

காங்கிரஸ் இன்னும் தங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. உள்கட்சி குழப்பமும் அதிகமாக இருப்பது தெரிகிறது.

கோபண்ணா (காங்கிரஸ்):– தலைநகர் டெல்லியை 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆண்டது. அதற்கு ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்ற சிந்தனை மக்களிடையே எழுந்தது. அதனால்தான் 2013–ல் நடந்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றியது.

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்த 9 மாதங்களில் டெல்லி மாநகர மக்கள் மோடிக்கு எதிராக மாறி உள்ளனர். அதனால்தான் பா.ஜனதா தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியை கைப்பற்ற எப்படி அனைத்து அமைச்சர்களும் முற்றுகையிட்டு இருக்கிறார்களோ அதேபோல் அனைத்து கேபினட் மந்திரிகளும் டெல்லி மாநிலத்துக்கு அனுப்பப்பட்டார்கள். 120 எம்.பி.க்களுக்கு தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டது. இவ்வளவு பகீரத பிரயத்தனம் செய்த பிறகும் மோடி அலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மோசமான தோல்வியை பெற்றதற்காக வருத்தப்படும் நாங்கள் பா.ஜனதா தோற்கடிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைகிறோம். மாற்றத்தை விரும்பும் மக்கள் ஆம் ஆத்மி நல்லாட்சியை தரும் என்ற நம்பிக்கையில் வெற்றி பெற செய்துள்ளனர். காங்கிரஸ் பெற வேண்டிய வெற்றியை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

தலைநகரில் மதவாத சக்திகள் வீழ்த்தப்பட்டிருப்பது ஒரு வகையில் சந்தோஷம். பாராளுமன்ற தேர்தலில் 60 சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும்பான்மை பெற்ற பா.ஜனதா 9 மாதங்களில் வீழ்த்தப்பட்டுள்ளது. மக்கள் சரியான பாடத்தை புகட்டி இருக்கிறார்கள்.

ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):– டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மத்தியில் ஆட்சி புரிகின்ற பாரதீய ஜனதா கட்சி தனது மதவாதக்கொள்கை, மக்கள் நலத் திட்டங்களை முடக்க நினைப்பது, மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயற்சிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இத்தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து வெறும் கோஷங்களை மட்டும் வைத்து ஆட்சி புரிகின்ற பா.ஜ.க வின் வேஷம் கலையத் தொடங்கியிருக்கின்றது.

பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் கூட காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அதன் வெளிப்பாடுதான் அவர்களுக்கு கிடைத்த தோல்வி. மேலும் மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து, செயல்படும் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களிக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

தனது ஆட்சி பலம் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என நினைத்த பா.ஜ.க விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர்):– 2013 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதாவுக்கு அதிகமான இடங்களும் கிடைத்தது. ஓட்டு சதவீதமும் அதிகமாக கிடைத்து இருந்தது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது. பா.ஜனதாவுக்கு ஓட்டு சதவீதமும் இல்லை. சீட்டும் மிகவும் குறைந்துள்ளது. காங்கிரசுக்கு ஓட்டும் இல்லை. சீட்டும் இல்லை.

பா.ஜனதா அரசு கடந்த 9 மாதங்களில் கடைப்பிடித்து வரும் தவறான நவீன தாராள மயமாக்கல் கொள்கை, அப்பட்டமான மதவாதம் ஆகியவற்றுக்கு மக்கள் பாடம் புகட்டி இருக்கிறார்கள். டெல்லி தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Feb 10, 2015 6:58 pm

ஆம் ஆத்மி வெற்றி எதிரொலி; டெல்லியில் துடைப்பத்தின் விலை 'திடீர்' உயர்வு


டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அங்கு துடைப்பத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவு வெளியான இன்று அங்கு ஒரு துடைப்பம் ரூ.200 வரை விற்கப்பட்டது. வழக்கமாக அந்த துடைப்பங்கள் ரூ.30-50 வரை மட்டுமே விற்கப்பட்டு வந்தது. ஆம் ஆத்மி வெற்றி அடைந்த செய்தி வெளியானதும் துடைப்பங்களை வாங்க கட்சி ஆதரவாளர்கள் கடைகளுக்கு படையெடுத்தனர். திடீர் படையெடுப்பால் கடைகளில் ஸ்டாக் இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே துடைப்பத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தன. விலை உயர்ந்தாலும் ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாட துடைப்பத்தை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by சிவா on Tue Feb 10, 2015 6:59 pm

‘ஆம் ஆத்மி’யின் வெற்றி ‘அரசியல் பூகம்பம்’: சர்வதேச பத்திரிகைகள் புகாழரம்


டெல்லி சட்டசபை தேர்தலில் ‘ஆம் ஆத்மி’ கட்சி பெற்ற வெற்றி, ஓர் அரசியல் பூகம்பம் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் புகழாரம் சூட்டி உள்ளது. மிகப்பெரும் வெற்றி மூலம் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு ஆண்டு கூடாத நிலையில், புதிய அரசியல் கட்சியால், பிரதமர் மோடியின் கட்சி நசுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

‘மோடி பிரதமரான பிறகு, பா.ஜனதாவுக்கு முதலாவது அரசியல் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. அக்கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி ஏற்பட்டுள்ளது’ என்று மற்றொரு பிரபல அமெரிக்க பத்திரிகையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ கூறியுள்ளது.

அமெரிக்க செய்தி சேனலான சி.என்.என்., ‘மேலே சென்ற எல்லாமே கீழே வந்துதான் ஆக வேண்டும்’ என்ற ஐசக் நியூட்டனின் விதியை சுட்டிக்காட்டி, பா.ஜனதாவின் தோல்வியை வர்ணித்துள்ளது. இங்கிலாந்து செய்தி சேனலான பி.பி.சி., பிரதமர் மோடிக்கு முதலாவது பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum