ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்

View previous topic View next topic Go down

மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்

Post by சிவா on Tue Dec 24, 2013 4:28 amகுன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அந்த திருக்குமரன், பிரணவ மந்திரத்தை தனது தந்தைக்கு உபதேசித்த திருத்தலம் எது என்றால் சுவாமிமலை என்று சட்டென்று பதில் வரும். ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவன் உபதேசித்த திருத்தலம் எது என்றால், பலரும் திசை தெரியாதவர் போல் முழிக்கத்தான் செய்வார்கள்.

அத்தகைய சிறப்பு மிக்க திருத்தலம் கோவை மாட்டம் செஞ்சேரிமலையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவன் உபதேசித்த திருத்தலம் இது என்பதால் மிகவும் பழமையான திருத்தலம் என்றால் மிகையாகாது.

சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனை ஏற்று சிவன், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானை தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.

ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை, முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி சிவபெருமானிடம் கூறினார் பார்வதிதேவி.

''சிவபெருமான், முருகப்பெருமானை அழைத்து, 'குமரா..! சத்ருசம்ஹார மந்திர உபதேசம் தானாக கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.

நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்' என்று வழி கூறினார். சிவனின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப்பெருமான் பூலோகம் வந்தார்.

அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க.. 'தாம் தவம் இருக்க சரியான இடம் இது' என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்

Post by சிவா on Tue Dec 24, 2013 4:29 am


பல ஆண்டு காலம் தவம் செய்த குமரனின் தவத்தை மெச்சி, சிவபெருமான் அவர் முன் தோன்றினார். பின்னர் தன் மகனுக்கு, எதிரிகளை அழிக்க வல்ல மந்திரமான சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்தார். மந்திரத்தை கற்று தேர்ந்ததால் மந்திர வேலாயுதசாமி என்று அழைக்கப்பட்ட முருகப்பெருமானுடன், மலை என்பதன் பதமான கிரியும் இணைந்ததால் மந்திரகிரி' வேலாயுத சுவாமி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

''செஞ்சேரி மலையின் உச்சியில் மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் கொண்டுள்ளார். மலைக்கு செல்லும் முன்பாக அடிவாரத்தில் வலதுபுறம் வினை தீர்க்கும் விநாயகரும், இடது புறம் ஞானதண்டாயுதபாணியும் அருள்பாலிக்கின்றனர்.

அவர்களை தரிசித்து விட்டு மலையேறிச் செல்லும் வழியில் குழந்தை குமரர், இடும்பன், கன்னிமார் தெய்வங்களை தரிசனம் செய்யலாம். மலை உச்சியில் வீற்றிருக்கும் இறைவனைக் காண 285 படிகள் ஏறி செல்ல வேண்டும். கோவில் மேற்புறத்தில் நின்று பார்த்தால் சுற்றிலும் இயற்கை அன்னையின் அழகிய காட்சியை கண்குளிர கண்டு ரசிக்கலாம்.

கோவில் முன்பு நுழைந்தவுடன் கொடிமரத்தை தரிசித்து விட்டு முன்மண்டபத்தை தாண்டி உள்ளே சென்றால், மகா மண்டபத்திற்குள் மந்திரசித்தி விநாயகர், பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் ஆகியோர் கற்கோவிலில் அர்த்தமண்டபம், கருவறையுடன் காட்சி தருகின்றனர்.

மந்திரகிரி வேலாயுதசாமி அதைத் தொடர்ந்து சிவபெருமான் தனிச்சன்னிதியில் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதற்கு இடதுபுறம் மந்திரகிரி வேலாயுத சுவாமி, வள்ளி- தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தாமரை பீடத்தில் நின்ற கோலத்துடன் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் முருகப்பெருமான். வலது கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், சர்ப்பம், மணி, அபய முத்திரையுடனும், இடது கரங்களில் சேவல், பாசம், வில், அம்பு, கதை, வரத முத்திரையுடனும் அருளாசி வழங்குகிறார்.

பொதுவாக மற்ற திருத்தலங்களில் ஆறுமுகங்களுடன் காட்சி தரும் முருகனை தரிசித்தால் நாம் கண் முன்னே 5 முகங்களை தரிசிக்கலாம். பின்னால் ஒரு முகம் இருக்கும்.

ஆனால் இந்த திருத்தலத்தில் 'எட்டு திசைக்கும் நான் காவலாக இருந்து பக்தர்களை காத்து வருகின்றேன்' என்று வேலாயுதசாமி கூறுவது போல், எட்டுதிசையை பார்க்கும் விதத்தில் ஆறுமுகங்களை கொண்டு காட்சி தருகிறார். வலது பக்கம் மயில் வாகனம் அமைந்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்

Post by சிவா on Tue Dec 24, 2013 4:29 am


அது வலம் வருவது போல் காணப்படுவது தனிச்சிறப்பு. வள்ளியும், தெய்வானையும் தங்களது வலது கரத்தில் பத்மம் ஏந்தி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றனர். நவக்கிரக சிறப்பு வேலாயுத சுவாமி சன்னிதி அருகில், சிவகாமி அம்மனுடன் வீற்றிருக்கும் நடராஜரை வழிபடலாம்.

வெளிப் பிரகாரத்தின் வடமேற்கில் மகாவிஷ்ணு சன்னிதி உள்ளது. அவர் தனது கையில் லிங்கத்தை ஏந்தி காட்சி தருகிறார். நவக்கிரக நாயகர்கள், பைரவ மூர்த்தியையும் தரிசனம் செய்யலாம். இந்த திருத்தலத்தில் உள்ள நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியனை பார்த்தவாறு அமைந்துள்ளது. சூரியன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் இங்கு வந்து ஞானதீர்த்தத்தில் நீராடி சுவாமியை வழிபட்டு சென்றால் குணம் அடையும் என்பது ஐதீகம். அர்த்தஜாம பூஜையில் சுவாமிக்கு வைத்த நைவேத்திய பிரசாதத்தை மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். விநாயகர், முருகப்பெருமான் ஆகியோர் திருத்தேர்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்கள். பவுர்ணமி, கந்தசஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், தமிழ் வருடப்பிறப்பு, ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கோவிலை சுற்றி வர கிரிவலபாதை இருப்பதால் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலமும் வருகிறார்கள். கோவையில் இருந்து செஞ்சேரிமலைக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. பொள்ளாச்சி- பல்லடம் சாலையில் செஞ்சேரிபுதூர் பிரிவு என்ற இடத்தில் இறங்கி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் செஞ்சேரிமலையை அடையலாம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்

Post by ராஜா on Tue Dec 24, 2013 12:03 pm

தகவலுக்கு மிக்க நன்றி தல


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum