புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
31 Posts - 56%
heezulia
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
22 Posts - 40%
rajuselvam
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
293 Posts - 44%
mohamed nizamudeen
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
17 Posts - 3%
prajai
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
9 Posts - 1%
jairam
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பாரின் வயசு என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 3:45 am


இன்றைக்கு இட்லிக்கோ, சோற்றுக்கோ நாம் முதலில் தேடும் சாம்பாரின் வயசு, வெறும் 300தான்.

இவ்வளவு குறுகிய காலத்தில் புகழ்பெற்ற சாம்பாரின் வரலாற்றைத் தேடிப் போனால், தஞ்சையை ஆண்ட சாம்போஜி என்ற அரசர் சிறந்த சமையல் கலை நிபுணராக இருந்ததாக அந்தக் கதை தொடங்கும். அவருக்கு ரொம்பப் பிடித்த ஆம்தி என்ற மராட்டியக் குழம்பை வைப்பதற்குத் தேவையான கோகம் புளி ஒரு நாள் கிடைக்காமல் போன நிலையில், அந்தத் தகவலை அவரிடம் தெரிவிக்க அரண்மனை சேவகர்கள் பயந்தார்களாம். அப்போது சமர்த்தியமான ஒரு சேவகர், கோகம் புளியைவிட, தஞ்சையின் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் புளியம்பழம் நல்ல புளிப்பைத் தரும் என்று கொடுத்தாராம். அதை வைத்து சாம்போஜி செய்ததே சாம்பார் என்று அந்தக் கதை முடியும். இது ஒரு செவிவழிக் கதை. இந்தக் கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.

17ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆள ஆரம்பித்த மராட்டியர்கள் நமக்குத் தந்த உணவுக் கொடைதான் சாம்பார். ஆனால், அதன் உண்மைக் கதையோ சற்று வித்தியாசமானது.

மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள். வழக்கமாக நாம் பயன்படுத்தும் புளியை, அவர்கள் அப்போது பயன்படுத்தவில்லை. கோகம் எனப்படும் ஒரு வகைப் புளியையே பயன்படுத்திவந்தனர். அது மகாராஷ்டிரம், குஜராத்தில்தான் அதிகம் விளைகிறது.

நடந்த கதை

தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன் சாஹூஜி 1 (சாம்போஜி அல்ல. அவர் சமையல் கலை நிபுணரும் அல்ல) காலத்தில்தான் சாம்பார் உருவானது. 12 வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் அவர். மராட்டியர்கள் செய்யும் ஆம்தி, சாஹூஜிக்குப் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாம்.

ஆனால், சாஹூஜிக்குப் பிடித்தமான குழம்பை வைப்பதற்கு அடிப்படைத் தேவையான கோகம், மகாராஷ்டிரத்தில் இருந்து ஒரு நாள் வரவில்லை. இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த சாரு விலாச போஜன சாலை எனப்பட்ட தஞ்சை அரண்மனை சமையலறையின் நிபுணர்கள், நாம் பயன்படுத்தும் புளியம்பழத்தை வைத்து முதன்முறையாக ஒரு குழம்பை வைத்திருக்கிறார்கள். அத்துடன் துவரம்பருப்பு, காய்கறி, மசாலா பொருள்களையும் சேர்த்திருக்கிறார்கள். அதுவே இன்றைய சாம்பாரின் மூலகர்த்தா.

ஆச்சரியம் என்னவென்றால், ராஜா சாஹூஜிக்கு இந்த புதிய குழம்பு பிடித்துப் போய்விட்டது. எவ்வளவு பிடித்தது என்றால் தனது ஒன்றுவிட்ட சகோதரரான, மராட்டிய சிவாஜியின் மகன் சாம்போஜிக்கு விருந்தில் சாம்பாரைப் படைத்துள்ளார். அதன்பிறகு சாம்போஜியை கௌரவிக்கும் வகையில், அதற்கு சாம்போஜி ஆம்தி என்று பொருள்படும் வகையில், சாம்பார் என்ற பெயரை வைத்ததாக கூறப்படுகிறது.

ஆதாரங்கள்

சாம்பார் தொடர்பாக போஜன குதூகலம், சரபேந்திர பக்ஷாஸ்திரம் என்ற இரண்டு நூல்களில் எழுதப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவை இரண்டும், உணவு செய்முறையை விளக்கும் புத்தகங்கள். மராட்டிய மன்னர்களுக்கு பொதுவாகவே எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பண்பு இருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், இந்த நூல்கள். பின்னால் இரண்டாம் சரபோஜி (1812) காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நூல்கள் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் சரபேந்திர பக்ஷாஸ்திரத்தில் வேப்பம்பூ சாம்பார் செய்முறை மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஒரு வேளை அதற்குப் பிறகு மற்ற சாம்பார் வகைகள் பிரசித்தி பெற்றிருக்கலாம். ஆனால் சாம்பார் என்ற வார்த்தை தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததாக தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. சம்பாரம் என்பது மசாலா பொருள்களை அரைத்துச் சேர்ப்பது என்றும், அதனால்தான் இதற்கு சாம்பார் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.

சாம்பாருக்கான அதே மூலப்பொருள் களைக் கொண்டு குழம்புகளை உடனடியாகச் செய்வதற்கு தஞ்சை மக்கள் ரெடிமேட் மிக்ஸ் ஒன்றை வைத்திருந்தார்கள். மிளகாய், மல்லி விதை கலந்த மல்லிப் பொடியையும் அத்துடன் சேர்த்துப் பயன்படுத்துவது வழக்கம். இறைச்சி உணவுகளில் இந்த மசாலா சேர்க்கப்பட்டது. தஞ்சை சைவ உணவுக்காரர்களின் வாரிசுகள் அரசு வேலைகளுக்காக சென்னை, மும்பை, தில்லி போன்ற வடக்குப் பகுதிகளுக்குச் சென்றபோது, எளிதாக சாம்பார் தயாரிப்பதற்கு அவர்களது அம்மாக்கள் மேற்கண்ட முறையில் ரெடிமேட் சாம்பார் பொடியை உருவாக்கிக் கொடுத்தனர். அதுவே இன்றைக்கு, ரெடிமேட் சாம்பார் பொடியாக, தனியாக விற்பனை செய்யப்படும் அளவுக்கு வந்துவிட்டது.

ஆதி வள்ளியப்பன்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 24, 2013 4:02 pm

சாம்பார் ..............


பகிர்வுக்கு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 24, 2013 4:06 pm

சாம்பார் .............. ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 

 சாம்பாரின் வயசு என்ன? 103459460 சாம்பாரின் வயசு என்ன? 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 8:09 pm

அருமையான பதிவு சிவா புன்னகை நன்றி !
.
.
அவர்கள் கண்டுபிடித்த சாம்பாரை, எதிர்காலத்தில் இட்லிக்கு பக்கெட் பக்கெட்டாக குடிப்பார்கள் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக