ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1 லட்சம் பக்தர்கள்சாமி தரிசனம் !

View previous topic View next topic Go down

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1 லட்சம் பக்தர்கள்சாமி தரிசனம் !

Post by krishnaamma on Thu Jan 02, 2014 9:29 pm

நங்கநல்லூர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1 லட்சம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்!
சென்னை

சென்னை நங்கநல்லூர் கோவிலில்ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று நடைபெற்றது.

ஆஞ்சநேயர் பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

சென்னை நங்கநல்லூர் ராம் நகர் 8–வது தெருவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆஞ்சநேயர் ஆதிவ்யாதிஹா பக்த ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்தில் உள்ளார்.

ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி நேற்று காலை 4–30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. புத்தாண்டு விழா சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. காலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று அனுமனை தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ரூ.1 நாணயம் வழங்கப்பட்டது.

மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1 லட்சம் நாணயம் நேற்று வினியோகிக்கப்பட்டன. பிரசாதமும் கொடுக்கப்பட்டது.

நேற்று காலை முதல் இரவு வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இந்த கோவிலில் லட்சார்ச்சனை விழா கடந்த மாதம் 23–ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) முடிய இந்த விழா நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா, கோவில் நிர்வாக அதிகாரி து.சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர்

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவையொட்டி நேற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

அசோக்நகர் கோவில்

இதுபோல அசோக் நகர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று புத்தாண்டு வழிபாடும், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1 லட்சம் பக்தர்கள்சாமி தரிசனம் !

Post by krishnaamma on Thu Jan 02, 2014 9:30 pm

கன்னியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.ஜெயந்தி விழா

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், அதை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகமும் நடந்தது. பின்னர் பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, மஞ்சள், சந்தனம், களபம், குங்குமம், மாதுளை சாறு, விபூதி உள்பட 16 வகையான நறுமண பொருட்கள் அடங்கிய சோடசாபிஷேகம் நடைபெற்றது.

அன்னதானம்

இதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு விதவிதமான பூமாலை அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி கோவில் கலையரங்கம், எஸ்.எஸ்.எம்.பள்ளி வளாகத்தில் வடை, பாயசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மைதானத்தில் ஒரு நேரத்தில் ஆயிரம் பேர் மட்டும் சாப்பிட முடியும். இதனால் அன்னதானம் நடக்கும் போது கேட்டை மூடி விடுவார்கள். பின்னர் கேட்டை திறந்து போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் சில பக்தர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.

பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவை வழங்கப்பட்டன. ஜெயந்தி விழா புத்தாண்டு அன்று வந்ததால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. சுசீந்திரத்தில் 4 ரதவீதிகளிலும், மெயின் ரோட்டிலும் கூட்டம அலைமோதியது. இருசக்கர வாகனங்கள், கார்களில் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் போக்குவரத்திலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

புஷ்பாபிஷேகம்

மாலை 5 மணிக்கு ஸ்ரீராம் ஆஞ்சநேயர் பக்தர் குழுவினரின் பஜனையும், 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்த ஆஞ்சநேயருக்கு பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, அரளி, கொழுந்து, மரிக்கொழுந்து உள்பட பல வண்ண பூக்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது. இரவு 11 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் சோணாச்சலம், மேலாளர் ஆறுமுக நயினார், கணக்கர் கண்ணன் மற்றும் ஸ்ரீராம் ஆஞ்சநேயர் பக்தர்கள், அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum