ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்

 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மார்கழி மாத ராசி பலன்கள் !

View previous topic View next topic Go down

மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:30 pm

மேஷம்: சுபயோக சுப மாதம். யோக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் எண்ணங்கள், ஏக்கங்கள் நிறைவேறும். ராசிநாதன், சூரியன் பலமாக பார்வை செய்வதால் மனதிற்கினிய சம்பவங்கள் கூடி வரும். குழந்தை பாக்யத்துக்கு ஏங்கி தவித்தவர்களுக்கு, ராசியில் ஆட்சி பெற்ற சூரியனால் இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் தகுதியான வேலை அமையும். மாமியார், நாத்தனார் மூலம் மகிழ்ச்சியும், பரிசுகளும் கிடைக்கும். சமையலறைக்கு தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதர உறவுகளால் அலைச்சல், டென்ஷன், செலவுகள் ஏற்பட்டு விலகும்.

கடல் கடந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். நிலம், வீடு, சொத்து வாங்கும் முயற்சிகளில் கவனம், நிதா னம் தேவை. குழந்தைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. சிறிய மருத்துவ செலவுகள் வரலாம். தந்தையிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். அவரது ஆலோசனைகளை கேட்பது நல்லது. உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் வரும். பதவி, சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரம் ஸ்திரமாக இருக்கும். புதிய முயற்சிகள் பலன் தரும்.

அஸ்வினி : இது சுபயோக சுப நேரம்.

பரணி : நிதானமாக செயல் பட வேண்டும்.

கிருத்திகை : பண வரவு, பொருள் சேர்க்கை உண்டு.

பரிகாரம்: ஓம் நமசிவாய என்று தினமும் 108 முறை சொல்லலாம். அமாவாசை, பவுர்ணமியன்று சிவ ஸ்தலங்களில் அன்னதானம் செய்யலாம். காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு உதவலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:30 pm

ரிஷபம்: யோகாதிபதிகளின் பார்வை, சேர்க்கை காரணமாக காரிய வெற்றி, மனமகிழ்ச்சி உண்டு. செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி வரும். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள். கொடுக்கல், வாங்கலில் நின்றுபோன பணம் வந்து சேரும். ராகு சஞ்சாரம் காரணமாக உடல் உபாதைகள் வரலாம். சிறிய உபாதைதானே என அலட்சியம் செய்ய வேண்டாம். வீடு, நிலம் வாங்கும் முயற்சிகள் வெற்றியடையும்.

உயர் பதவியில் இருக்கும் நண்பர் உதவுவார். புதிய வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு அனுகூலமான தகவல் வரும். சகோதர உறவுகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கன்னி பெண்களின் விருப்பங்கள் நிறைவேறும். பவுர்ணமிக்கு பிறகு சுபசெய்தி தேடி வரும். மிக்சி, பிரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். சலுகைகள், ஆதாயம் எதிர் பார்க்கலாம். வியாபாரம் அமோகமாக நடக்கும். எதிர்ப்புகள், போட்டிகள் நீங்கும். வேலையாட்கள் சாதகமாக நடப்பார்கள்.

கிருத்திகை : அலைச்சல், பயணங்கள் இருக்கும்.

ரோகிணி : பொன், பொருள் சேர்க்கை உண்டு.

மிருக சீரிஷம்: இனிக்கும் செய்தி வரும்.

பரிகாரம்: ஓம் சிவ சிவ ஓம் என தினமும் தியானிக்கலாம். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவரை வழிபடலாம். பார்வையற்றோருக்கு உதவி கள் செய்யலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:30 pm

மிதுனம்: தன, பஞ்சம, பாக்ய ஸ்தானங்கள் பூரண பலம் பெறுவதால், இதுவரை இருந்த மனசஞ்சலம், இனம் புரியாத கவலைகள் நீங்கும். உற்சாகமாக, குதூகலமாக, தைரியமாக செயல்படுவீர்கள். பிள்ளைகள் திருமண விஷயமாக முக்கிய முடிவுகள் வரும். நடந்து முடிந்த விஷயங்களை பற்றி குடும்பத் தினருடன் விவாதிக்க வேண்டாம். சகோதரர்களால் மகிழ்ச்சியும், தக்க சமயத்தில் உதவிகளும் கிடைக்கும். மாமனார், மாமியாருடன் ஏற்பட்ட வருத்தங்கள் மறையும். சொந்த பந்தங்கள் வருகையால் மனமகிழ்ச்சி, செலவுகள் அதிகரிக்கும். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள்.

இட மாற்றம் சற்று தாமதமாகும். முடிவுகள் திடீரென மாறலாம். வழக்கு சம்பந்தமாக திடீர் பயணங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விசா வந்து சேரும்.
கொடுக்கல், வாங்கலில் தேக்க நிலை நீங்கும். கைமாத்து கொடுத்த பணம் வசூலாகும். அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரம் செழிப்படையும். புதிய தொழில் வாய்ப்புகள் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : அலைச்சல், பயணங்கள் இருக்கும்.

திருவாதிரை : யோக காலம் ஆரம்பம். மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும்.

புனர்பூசம் : நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

பரிகாரம்: தினமும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் படிக்கலாம். சனிக்கிழமை சக்கரத்தாழ்வாருக்கு துளசி அர்ச்சனை செய்யலாம். ஆதரவற்றோர் இல் லங்களுக்கு உதவலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:31 pm

கடகம்: தன, பஞ்சம, பாக்யஸ்தான பலம் காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட இறுக்கமான சூழ்நிலைகள் மறைந்து மனஅமைதி ஏற்படும். கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகமாகும். சுக்கிரன் சுப பலம் பெறுவதால் தங்கம் மற்றும் அசையா சொத்துகளில் பணத்தை முதலீடு செய்வீர்கள். திருமணத்துக்கு வரன் பார்த்தவர்களுக்கு பொருத்தமான சம்பந்தம் கூடிவரும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

வயிறு, கர்ப்பப்பை சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். கேது சஞ்சாரம் காரணமாக மனத்தெளிவும், ஆலய தரிசனமும் உண்டு. நிலம் வாங்குவது, விற்பது சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி வரும். உத்யோகத்தில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும். விடுபட்டு போன, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். ஊழியர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

புனர்பூசம் : யோக காலம் ஆரம்பம்.

பூசம் : அலைச்சல், உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.

ஆயில்யம் : பொன், பொருள் சேர்க்கை உண்டு.

பரிகாரம் : அருணாசல சிவ அருணஜடா என்று தியானிக்கலாம். ராகு காலத்தில் துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். மனநலம் பாதித்தோர், ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு உதவலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:31 pm

சிம்மம்: உங்கள் திட்டங்கள், எண்ணங்கள் முழுமையாக வெற்றியடையும் நேரம். காலதாமதமாகி சலிப்பு ஏற்பட்ட விஷயங்கள் தானாக கூடிவரும். கணவன்- மனைவி இடையே மனநிறைவும், திருப்திகரமான சூழலும் ஏற்படும். சுகபோகத்தை தரும் சுக்கிரன் வலுவாக இருப்பதால் ஆடல், பாடல், சங்கீதம் என குதூலகமாக இருப்பீர்கள். பெண்களால் திடீர் அதிர்ஷ்டம் வரும். மின்சாதனங்கள் செலவு வைக்கும். மகன், மகள் திருமண விஷயமாக முக்கிய முடிவுகள் ஏற்படும். முக்கிய சந்திப்புகளும் நடக்கும்.

பெண்களுக்கு கணவர் வகை உறவுகளால் டென்ஷன், அலைச்சல் வரலாம். இடமாற்றம் சம்பந்தமாக சிறிது தாமதம் ஏற்படும். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். சொந்த பந்தங்கள் வருகையால் மகிழ்ச்சி, செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் சீரான போக்கு காணப்படும். அலுவலகம், வங்கிகளில் பணப் பொறுப்புகளை கையாள்ப வர்கள் கவனமாக இருப்பது அவசியம். சாப்பிட, ஓய்வெடுக்க கூட நேரமில்லாத அளவுக்கு வியாபாரம் அமோகமாக நடக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும் இருக்கும்.

மகம் : கவனமாக இருப்பது அவசியம்.

பூரம் : சுபயோக சுபநேரம்.

உத்திரம் : ஏற்ற இறக்கத்தை சந்திப்பார்கள்.

பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வணங்கலாம். ஏழை நோயாளி களுக்கு உதவலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:31 pm

கன்னி: திட தைரிய வீரியஸ்தான பலம் காரணமாக எதிர்ப்புகள் நீங்கும். துணிச்சலுடன், தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காலியாக இருக்கும் பிளாட், கடைக்கு புது வாடகைதாரர்கள் வருவார்கள். தாய் உடல்நலம் சீராகும். அவர் மூலம் முக்கிய உதவிகள் கிடைக்கும். பேரன், பேத்திகள் சேமிப்பு பணம் தங்க நகைகளாக மாறும். காது, தொண்டை சம்பந்தமாக உபாதைகள் வரலாம். கன்னி பெண்களின் எண்ணங்கள், ஆசைகள் நிறைவேறும். அரசு தொடர்பான காரியங்கள் சிறிது அலைச்சலுக்கு பிறகு முடிவுக்கு வரும்.

சுபதிசை நடப்பவர்கள் நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புதிய வீட்டுக்கு குடிபோவதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். குலதெய்வ வழிபாடுகள், பரிகார பூஜைகள் இனிதே நிறைவேறும். உத்யோகத்தில் நிதானம், கவனம் தேவை. சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். வியாபாரம் ஸ்திரமாக இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் சில மனவருத்தங்கள் வரலாம்.

உத்திரம் : அலைச்சல், பயணங்கள் இருக்கும்.

அஸ்தம் : பொருள் வரவு, ஆபரண சேர்க்கை உண்டு.

சித்திரை : எண்ணங்கள், ஆசைகள் நிறைவேறும்.

பரிகாரம்: ஸ்ரீரமணாய என்று தினமும் தியானிக்கலாம். அம்மன், அம்பாள் கோயிலுக்கு மஞ்சள், குங்குமம் வாங்கித் தரலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு உடை, போர்வை தானம் செய்யலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:32 pm

துலாம்: ஏற்ற இறக்கம், நிறை குறைகள், வரவு செலவுகள் இணைந்த மாதம். பெண்களுக்கு ஏற்பட்ட இனம் புரியாத பயம், கவலைகள் நீங்கும். வேலை சம்பந்தமாக தேர்வு எழுதியவர்கள் இன்டர்வியூ முடித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பயணத்தின்போது கவனம் தேவை. கைப்பொருள் இழப்பு ஏற்படலாம். திருமண வயதில் உள்ள ஆண், பெண்களுக்கு அவர்கள் விரும்பியபடி நல்ல இடம் அமையும். சமையலறைக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், மின்சார அடுப்பு போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள், மகளுக்கு சுகப்பிரசவம் அமையும். மருத்துவ செலவுகளுக்கு வாய்ப்புள்ளது.

தசா புக்தி சாதகமாக இருப்பவர்கள் வீடு, நிலம், பிளாட் வாங்கும் யோகம் உள்ளது. மாமியார் உடல்நலம் பாதிக்கப்படலாம். சொந்த பந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சலுகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். எதிர்பார்த்த ஆர்டர், கான்ட்ராக்ட் சற்று தாமதமாகலாம்.

சித்திரை : மனத்தெளிவும், குதூகலமும் பிறக்கும்.

சுவாதி : எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

விசாகம் : சொத்து வாங்கும் யோகம் உள்ளது.

பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படிக்கலாம். பவுர்ணமி விரதம் இருந்து அம்பாள், தலங்களில் கதப்ப சாதம் வினியோகம் செய்யலாம். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:32 pm

விருச்சிகம்: ஆதாயம், வரவு, செலவு, தடை, சுபசெய்தி என கலவையான பலன்கள் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். திருமணத்துக்காக வரன் பார்த்தவர்களுக்கு பொருத்தமான சம்பந்தம் கூடிவரும். நிழல் கிரகங்களால் மனஉளைச்சல், கோபதாபங்கள் வரலாம். பெண்கள் சகிப்புத்தன்மையுடன் நடப்பது அவசியம். பண வரவு அதிகரித்தாலும் காசு, பணம் தங்காத வகையில் செலவுகளும் கூடும். பிரசித்தி பெற்ற ஸ்தலங் களுக்கு சொந்த பந்தங்களுடன் சென்று வருவீர்கள்.

இதனால் மனஅமைதி, இனிமையான அனுபவங்கள் கிடைக்கும். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் நல்லபடியாக தொடங்கும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. உத்யோகத்தில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் சாதக, பாதகங்கள் கலந்து இருக்கும். அரசு சம்பந்தமான வேலைகளால் அலைச்சல், தொல்லைகள், செலவு வரலாம். எதையும் நிதானத்துடன் அணுகவும்.

விசாகம் : ஆலய தரிசனமும், இனிமையான அனுபவங்களும் உண்டு.

அனுஷம் : செலவுகள், மனஉளைச்சல் ஏற்பட்டு விலகும்.

கேட்டை : நட்சத்திரத்துக்கு சுபசெய்தி கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். பிரதோஷத்தன்று சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடலாம். ஏழை பெண்கள் திருமணத்துக்கு உதவலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:33 pm

தனுசு: இடையூறுகள், தடுமாற்றங்கள் நீங்கும் நேரம். எண்ணங்கள் நிறைவேறும் வகையில் கிரக நிலைகள் உள்ளன. உங்களை உதாசீனப்படுத்திய உறவினர்கள் நெருங்கி வந்து உறவாடுவார்கள். மருமகள் கர்ப்ப சம்பந்தமாக தித்திக்கும் செய்தி வரும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். மாமியார் உடல்நலம் பாதிக்கப்படலாம். நண்பர்களுடன் விருந்து, சுற்றுலா என சென்று வருவீர்கள். சகோதரி திருமண விஷயமாக முக்கிய சந்திப்புகளும், முடிவுகளும் ஏற்படும். நிலம், சொத்து சம்பந்தமாக ஆலோசித்து முடிவு எடுக்கவும்.

பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். வசதியான பெரிய வீட்டுக்கு குடிபோகும் நேரம் வந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் செலவு வைக்கும். வழக்கு சம்பந்தமாக சமாதான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் ஏற்பட்ட மனகசப்புகள் மறையும். நல்ல மாற்றங்கள் உண்டாகும். பவுர்ணமிக்கு பிறகு பதவி உயர்வு பற்றி தகவல் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவை இல்லாமல் புதிய கொள்முதல்கள் செய்ய வேண்டாம்.

மூலம் : நிதானமாக இருப்பது நல்லது.

பூராடம் : யோக பலன்கள் உண்டாகும்.

உத்திராடம் : வாகன யோகம், பொருள் சேர்க்கை உண்டு.

பரிகாரம்: தினமும் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் படிக்கலாம். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, காகத்துக்கு உணவிடலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:34 pm

மகரம்: ஏற்றங்கள், மாற்றங்கள் உண்டாகும் நேரம். இதுநாள்வரை இருந்து வந்த உடல் சோர்வு, மனசோர்வு நீங்கும். புதிய வேலைக்கு முயற்சித்தவர் களுக்கு நல்ல  நிறுவனத்தில் வேலை அமையும். பிறந்த வீட்டில் இருந்து பெண்களுக்கு சாதகமான செய்தி வரும். சொத்து விஷயத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும்.  தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. சிறிய மருத்துவ செலவுகள் வரலாம். சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷங்கள்  மூலம் அலைச்சல், மொய் பணம் என  செலவுகள் ஏற்படும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் தகவல் கிடைக்கும்.

வீடு மாறும் முயற்சிகளில் சில  தடைகள் வரலாம். குக்கர், மின்சார அடுப்பு போன்ற சாதனங்ள் வாங்குவீர்கள். நிலம் விற்பது சம்பந்தமாக முக்கிய முடிவுகள் ஏற்படும். உத்யோகத் தில் அலைச்சல், பயணங்கள் இருந்தாலும் சலுகைகள், ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் செழிப்படையும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய  வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

உத்திராடம் :  அலைச்சல், செலவுகள் உண்டு.

திருவோணம் : திடீர் ராஜ யோக அம்சம் உண்டு.  

அவிட்டம் : பொருள் சேர்க்கை, பயணங்கள் இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீராம் ஜெய்ராம் என்று தினமும் 108 முறை சொல்லலாம். பவுர்ணமி விரதம் இருந்து அம்பாள் ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம்.  ஏழை  மாணவர் கல்விக்கு உதவலாம்.


Last edited by krishnaamma on Fri Jan 03, 2014 12:35 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:34 pm

கும்பம்: மாத ஆரம்பமே யோகமாக அமர்க்களமாக அமையும். சூரியன், குரு பலம் காரணமாக பாராட்டு, பரிசுகள் தேடி வரும். சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களை கட்டும். பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். தாய் உடல்நலம் சீராகும். அவர் மூலம் முக்கிய உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் திடீர் பயணமாக சொந்த ஊர் திரும்புவார்கள். மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். அதே நேரம், குழந்தைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு விஷயமாக அலைச்சல், செலவுகள் இருக்கும்.

அவசிய தேவைக்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். கன்னி பெண்கள் நிதானமாகவும், விட்டுக்கொடுத்து போவதும் அவசியம். வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா போன்றவற் றுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். மின்சார சாதனங்கள் செலவு வைக்கும். அக்கா, மாமாவிடம் இருந்து உதவிகள் வந்து சேரும். உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உங்கள் எண்ணங்கள், கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரம் உச்சமடையும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். வேலையாட்களால் செலவுகள் இருக்கும்.

அவிட்டம் : நட்சத்திரத்துக்கு பயணங்கள், செலவுகள், அலைச்சல் இருக்கும்.

சதயம் : சுபசெய்தி, பாராட்டு உண்டு.

பூரட்டாதி : நட்சத்திரத்துக்கு நிறை, குறைகள் இருக்கும்.

பரிகாரம்: தினமும் லலிதா சகஸ்ரநாமம் படிக்கலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்யலாம். முதியோர் இல்லங்களுக்கு உதவலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மார்கழி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:34 pm

மீனம்: தொட்டது துலங்கும். குரு பார்வை பலம் காரணமாக தேக்க நிலை நீங்கும். வாழ்க்கையில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழும் நேரம். வெளிநாடு அல்லது வெளிமாநிலத்துக்கு உல்லாச பயணம் சென்று வருவீர்கள். மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சி, ஆதாயம் இருக்கும். குடும்ப விஷயங்களை உறவுப் பெண்களிடம் விவாதிக்க வேண்டாம். தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் தொடங்கும். பண விஷயமாக நண்பர்கள் இடையே வருத்தங்கள் வரலாம்.

பணிபுரியும் பெண்களுக்கு சில மறைமுக தொல்லைகள் வரலாம். சூரியன் பலம் வராத கடன் பாக்கிகள் வசூலாகும். மகள் வழியில் பிரசவ, மருத்துவ செலவுகளுக்கு வாய்ப்புள்ளது. சுபயோக திசை நடப்பவர்கள் அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டு. கன்னி பெண்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை, பயணங்கள் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்கும். வியாபாரம் மேன்மையடையும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய கான்ட்ராக்ட், ஆர்டர் கிடைக்கும்.

பூரட்டாதி : மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு.

உத்திரட்டாதி : சொத்து யோகம் உண்டு.

ரேவதி : அலைச்சல், வருத்தங்கள் வரலாம்.

பரிகாரம்: ஓம் சக்தி பராசக்தி என்று 108 முறை சொல்லலாம். வியாழக்கிழமை பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். நாய், காகம், பசு மாட்டுக்கு உணவு அளிக்கலாம்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum