ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 SK

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 SK

உணவே உணர்வு !
 SK

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜில்லா - விமர்சனம்

View previous topic View next topic Go down

ஜில்லா - விமர்சனம்

Post by soplangi on Fri Jan 10, 2014 5:59 pmநடிகர் : விஜய், மோகன்லால்
நடிகை : காஜல் அகர்வால்
இயக்குனர் : ஆர்.டி. நேசன்
இசை : டி. இமான்
ஓளிப்பதிவு : ஆர். கணேஷ் ராஜவேலு

மதுரையில் மிகப்பெரிய தாதாவான மோகன்லாலிடம் அடியாளாக இருக்கிறார் விஜய்-யின் அப்பா. ஒருநாள் மோகன்லாலின் மனைவியை பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ்காரர்களால் விஜய்-யின் அப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார். அன்றிலிருந்து விஜய்-க்கு போலீஸ் என்றாலே பிடிக்காமல் போய்விடுகிறது.

தனது அப்பாவை இழந்த விஜய், மோகன்லால் வீட்டில் அவரது மகனாகவே வளர்கிறார். வளர்ந்து பெரியவனானதும் மோகன்லால் கட்டளையிடும் வேலைகளை செய்து முடிப்பவராக விளங்குகிறார் விஜய். மோகன்லாலுக்கு மஹத், நிவேதா தாமஸ் என இரண்டு பிள்ளைகள்.

மதுரை வீதியில் ஒருநாள் காஜல் அகர்வாலை பார்க்கும் விஜய் அவள்மீது காதல் கொள்கிறார். மஹத், நிவேதா தாமஸிடம் சென்று காஜலின் அழகை வர்ணிக்கிறார். இதனால் அவர்களுக்கு காஜலைப் பார்க்கும் ஆசை துளிர்விடவே, காஜலின் வீட்டுக்கு விஜய்யை கூட்டிக் கொண்டு செல்கிறார்கள். அங்கு, அவளை போலீஸ் உடையில் பார்த்ததும், அவள் மீது வெறுப்பு கொள்கிறார் விஜய்.

மறுமுனையில் மதுரைக்கு போலீஸ் கமிஷனராக வரும் வித்யூத் ஜம்வால், விஜய் வீட்டில் இல்லாத சமயத்தில் வந்து மோகன்லாலை கைது செய்து அழைத்துப் போகிறார். அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகாமல் போலீஸ் வண்டியிலேயே 5 மணி நேரம் மதுரையை வலம் வருகிறார். அப்போது மோகன்லாலிடம் ரவுடித்தனத்தை விட்டுவிடுமாறு வித்யூத் ஜம்வால் கூறுகிறார். ஆனால், மோகன்லால் ரவுடிசத்தை விடமுடியாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். இறுதியில், மோகன்லாலை எச்சரித்துவிட்டு நடுரோட்டில் இறக்கிவிட்டு போய்விடுகிறார்.

இதை அறியும் விஜய், தன் அப்பாவை கைது செய்த வித்யூத் ஜம்வாலின் ஒரு கையை வெட்டி எடுத்து விடுகிறார். இருந்தும், தான் கைதான அவமானம் தாங்கமுடியாத மோகன்லால் தன்னுடைய ஆள் ஒருவர் போலீஸ் பணியில் இருந்தால் இதுபோன்று நடக்காது என முடிவெடுத்து, விஜய்யை போலீஸ் பணியில் அமர்த்த முடிவெடுக்கிறார். ஆனால், போலீஸ் என்ற வார்த்தையே பிடிக்காத விஜய் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

மோகன்லாலின் விருப்பத்திற்காக வேண்டா வெறுப்பாக போலீஸ் செலக்ஷனில் கலந்து கொள்கிறார். இருந்தாலும் மோகன்லால், மந்திரியான சம்பத்தின் உதவியால் விஜய்யை கமிஷனராக ஆக்குகிறார். கமிஷனராகும் விஜய், போலீஸ் உடை உடுத்தாமல், சாதாரண உடையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருவதாக இருக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் மஹத் தனது அடியாட்களுடன் சென்று ஒரு இடத்தை வாங்குவதற்காக அடி-தடி நடத்தி அந்த இடத்தை துவம்சம் செய்துவிட்டு வருகிறார். இந்த கலவரத்தில் அந்த இடத்தில் இருக்கும் சிலிண்டர்களில் உள்ள வாயு கசிந்து சிலிண்டர்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடம், பேருந்து, சாலையில் செல்பவர்கள் என்று அனைவரும் இந்த தீயிற்கு இரையாகின்றனர். அதில், பல குழந்தைகளும் பலியாகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் விஜய் இதற்கு மோகன்லால்தான் காரணம் என்று அவர்மீது கோபப்படுகிறார்.

எனவே, அதுவரை போலீஸ் உடையை போடாத விஜய், அந்த உடையை அணிந்துகொண்டு மோகன்லாலிடம் சென்று இனிமேல் இதுபோன்ற காரியங்களில் இறங்கவேண்டாம் என்று சொல்கிறார். தன்னால் வளர்ந்தவன் இன்று இப்படி தன்னை மிரட்டுகிறானே என்று விஜய் மீது கோபம் கொள்கிறார் மோகன்லால். இறுதியில், உன்னால் முடிந்ததை நீ செய்துகொள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று சவால் விட்டு இருவரும் பிரிகிறார்கள்.

இறுதியில், தன் அப்பாவை மாற்றினாரா? அல்லது போலீஸ் வேலையை விட்டுவிட்டு தன் அப்பாவுடன் சேர்ந்தாரா? என்ற மீதிக்கதையை விறுவிறுப்புடன் கூறியிருக்கிறார்கள்.

விஜய் காமெடி, டான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் வெளுத்து வாங்குகிறார். போலீஸ் கெட்டப்பில் இவரை ஏற்கெனவே ரசித்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து படைத்திருக்கிறார். இவருக்கு போட்டியாக மோகன்லாலும் நடிப்பில் களைகட்டுகிறார். இருவரும் சவால் விடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். மோகன்லால் வில்லனாக மிரட்டுவதிலும், பாசம் காட்டுவதிலும் தனது அனுபவப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காஜல் அகர்வால் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார். பாடல் காட்சிகளிலும், போலீஸ் உடையிலும் அழகோ அழகு. சூரி, வித்யூத் ஜம்வால் ஆகியோர் ஒருசில காட்சிகளில் வந்துபோனாலும் மனதில் நிற்கிறார்கள். சம்பத் கதைக்கு ஒரு திருப்புமுனையாக வருகிறார். மந்திரி கெட்டப்பில் வில்லத்தனம் காட்டும் இவருடைய நடிப்பு அபாரம். பூர்ணிமா பாக்யராஜ் அம்மா கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். விஜய் தம்பி, தங்கையாக வரும் மஹத், நிவேதா தாமஸ் இருவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

புதுமுக இயக்குனரான நேசன் காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த மசாலாவாக படத்தை கொடுத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. டி.இமான் இசையில் விஜய்-மோகன்லால் அறிமுகமாகும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. அந்த பாடல் படமாக்கிய விதம் பிரம்மாண்டத்தை காட்டுகிறது. கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு ஆக்சன் காட்சிகளில் காட்சியோடு ஒன்ற வைக்கிறது. பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.

மொத்தத்தில் ‘ஜில்லா’ களைகட்டுகிறது.

-- maalaimalar
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: ஜில்லா - விமர்சனம்

Post by soplangi on Fri Jan 10, 2014 6:07 pm

ஊருக்கே தாதா மோகன் லால். அவரோட டிரைவரோட பையன் தான் விஜய். சின்ன வயசுல நடந்த ஒரு ரகளைல மோகன் லால் மனைவியின் உயிருக்கு வந்த ஆபத்தில் இருந்து விஜய், காப்பாத்துவதால் அவரைத்தன் வளர்ப்பு மகனாவே மோகன் லால் வளர்க்கிறார். விஜய்யோட நிஜ அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர் கையால சாவதால் விஜய்க்கு சின்ன வயசுல இருந்தே போலீஸ்னாலே வெறுப்பு.

காஜல் அகர்வால் போலீஸ் ஆஃபீசர் ( யாரும் சிரிக்கப்படாது, இந்தக்கதைல எல்லாரும் போலீஸ் தான், ஹீரோ, ஹீரோயின், காமெடியன்) ஹீரோயின் போலீஸ்ன்னு தெரியாம ஹீரோ பொண்ணுப்பார்க்கப்போறார். போலீஸ்னு தெரிஞ்சதும் ஜகா வாங்கறார். அதை வெச்சுக்கொஞ்சம் காமெடி, கலாட்டான்னு படம் ஜாலியாத்தான் போகுது. மோகன்லாலுக்கு போலீஸ்னாலே ஒரு சிக்கல் வருது. அப்போதான் அவர் முடிவெடுக்கறாரு, நாம ஆபத்தில்லாம தொழில் பண்ணனும்னா நம்மாளு ஒருத்தன் போலீஸ் ஆஃபீசரா இருக்கனும்னு. விஜய் அசிஸ்டெண்ட் கமிஷனரா ஆகிடறார். ராமர் அவதாரம் எடுத்த ராவணன், சீதையைத் தொடப்போனப்ப ராமர் நல்ல மனசும் வந்துட்டதால டச்சிங் டச்சிங்க் பண்ணாமயே வீணாப்போன மாதிரி ஹீரோ போலீஸ் ஆனதும் மனசு மாறிடறார்.

விஜய்க்கும், மோகன் லாலுக்கும் முட்டிக்குது. இடைவேளை. அதுக்குப்பின் என்ன நடக்குது? தங்கச்சி செண்ட்டிமெண்ட், அம்மா செண்ட்டிமெண்ட், தம்பி செண்ட்டிமெண்ட் எல்லாத்தையும் கசக்குப்பிழிஞ்சு (ஃபேமிலி ஆடியன்ஸ் வேணுமே? ) படத்தை முடிக்கறாங்க.

எது எப்படியோ தலைவா தோல்வியால் துவண்டு போன விஜய்க்கு இது பூஸ்ட் அப் கொடுக்கும் படம் தான்.

மோகன் லாலின் கம்பீரமான நடிப்பு, கணீர்க்குரல் அவருக்கு பெரிய பிளஸ். பல காட்சிகளில் அநாயசமான நடிப்பு. விஜய், மோகன் லால் காம்போ காட்சிகளில் மோகன் லாலுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு.

விஜய் இந்தப்படத்தில் ரொம்ப இளமையா, அழகா, புதுப்புது மேனரிசத்தோட, வசன உச்சரிப்பில் சில மாற்றங்களோட வர்றார். தேவை இல்லாத பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் பேசாம கனகச்சிதமான நடிப்பு.

போக்கிரி படத்தில் போலீஸாக வந்தாலும் யூனிஃபார்மில் அவரை அதிக நேரம் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இதில் பாயாசத்துடன் விருந்து. போலீஸ் யூனிஃபார்மில் கலக்கிட்டார். பாடல் காட்சிகளில் வழக்கமான விஜய் துள்ளாட்டம் போட்டிருக்கிறார். காவலன் படத்தில் அசினின் பின்னால பதம் பார்த்தவர் இதில் காஜல் பின்னாடி போய் பின்னால பரோட்டா பண்றார். இனி விஜய் ரசிகர்கள் காதலிகளிடம் இதைச்சொல்லியே பரோட்டா ஆர்டர் செய்வாங்கனு எதிர்பார்க்கலாம்.

காஜல் அகர்வால் படம் முழுக்க 4 ரீல் கூட வரலை. க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் தான் குங்கும நெற்றியுடன் வர்றார். மற்ற காட்சிகளில் எல்லாம் சாதா நெத்திதான். முந்திரி இல்லா கேசரி மாதிரி இருக்கு. அவருக்கு மேக்கப் விமன் யார்னு பார்த்து பாதி சம்பளம் கட் பண்ணனும், லிப்ஸ்டிக் எடுபடாத கலரில். அவர் இயல்பான இதழே கனகாம்பரக்கலர் தானே? எதுக்கு வானவில்லுக்கு வல்லியனா ஒரு மேக்கப் ? இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் ரொம்ப நல்ல கேரக்டர் போல , கிளாமர் காட்சிகளில் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள்.வரும் காலத்தில் இந்த மாதிரி நல்லவர்கள் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேணாம் என விஜயைக்கேடுக்கொள்கிறேன்.

பரோட்டா சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில் சிரிக்க முடியுது.

முன் பாதி திரைக்கதையில் இருந்த வேகம் பின் பாதியில் இல்லை. கடைசி 30 நிமிடங்கள் இழுவை. மொத்த படம் 3 மணி நேரம் என்பதால் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டி இருக்கு. எடிட்டிங்கில் இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

விஜய் ஒரு பாட்டு பாடி இருக்கார். நல்ல வாய்ஸ். குத்தாட்டத்தை விட மெலோடியை அதிகம் நம்பிய இமானுக்கு ஒரு ஷொட்டு .

படம் முழுக்க ஆங்காங்கே வரும் ஜில்லா ஜில்லா தீம் இசை ரசிகர்களிடையே பலத்த ஆரவாரம் பெறுகிறது

சி.பி.கமெண்ட் - 'ஜில்லா' - முன் பாதி செம ஸ்பீடு, பின் பாதி ஓக்கே. புதுக்கதை. நோ ரீ-மேக். ஹிட் ஆகிடும்!

-- வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம் -- தினமலர்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: ஜில்லா - விமர்சனம்

Post by ayyasamy ram on Fri Jan 10, 2014 8:18 pm--

போலீசான விஜய்க்கு லால் செய்வது தவறு என புரிய வருகிறது.
அதனால் அவரை திருந்த வைக்க முயற்சிக்கிறார். பிடிவாதம்
பிடிக்கும் லாலேட்டன், படம் துவங்கி மூன்று மணிநேரமாகி
விட்டதே என்று கவலைப்பட்டு க்ளைமாக்ஸில் திருந்துகிறார்.
-
இதற்கு இடையே மானே தேனே பொன்மானே எல்லாம்
பொருத்தமான இடத்தில் போட்டு ஓரளவுக்கு ரசிக்கத்தக்க
வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.
-
விஜய்யும் காஜலும் மாறி மாறி பின்பக்கத்தில் புடித்துக்
கொள்கிறார்கள். இது என்ன தமிழ்சினிமாவின் புது பேசனா.
ஆனாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஹிஹி.
-
படத்தில் போரடிக்கும் விஷயமென்றால் கடைசி அரைமணிநேரம்
ஜவ்வு மாதிரி இழுக்கிறது தான். வில்லன் யாரென்று தெரிந்த
பிறகு அவரை விட்டு வைப்பதில் ஹீரோயிசம் அடிபட்டு போகிறது.
அப்புறம் தம்பி செத்ததும் பொங்குறது பொருத்தமா இல்லை.
-
மற்றபடி ஒரு முறை பார்க்கலாம், தப்பில்லே

----------------

>ஆரூர் மூனா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36092
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ஜில்லா - விமர்சனம்

Post by ராஜா on Sat Jan 11, 2014 11:40 am

volvo , BMW , Ford என்று முழு நேரமும் SUV -லேயே வரும் ஒரு DC யையும் , வில்லனின் அடியாட்கள் கடைத்தெருவுக்கு போவதற்கு கூட Range rover ஐ பயன்படுத்துவதையும் உங்களால் ஏற்றுகொள்ள முடியுமென்றால். தாரளமாக ....ஒருமுறை பார்க்கலாம் .... ரசிக்கலாம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜில்லா - விமர்சனம்

Post by அருண் on Sat Jan 11, 2014 1:14 pm

மிகவும் எதிர் பார்ப்புடன் வியாழன் அன்று முதல் ஷோ பார்த்தால் மீண்டும் அரைத்த மசாலாவே அரைத்து வைத்திருந்தார்கள். எதிர் பார்ப்பு எல்லாம் புஷ் ஆகி விட்டது.

படத்தில் எல்லாம் இளைமையாக காட்டி இருக்கிறார்கள்.
விஜய் ரொம்ப ஸ்லிம் ஆகவும் அழகாவும் காட்சி அளிக்கிறார்.

விஜய் ஓபனிங் சீன் கண்ணாடி சில்களை உடைத்துக்கொண்டு நடுவில் காட்சி அளிக்கும் போது செம சூப்பர். இது மட்டும் எனக்கு பிடித்திருந்தது.

மற்றபடி படத்தில் பெரிதும் ஒன்றும் இல்லை விஜயகாந்த் நடித்த பெரிய மருது படத்தை கொஞ்சம் உல்டா பண்ணி கொடுத்து இருக்கிறர்கள்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஜில்லா - விமர்சனம்

Post by T.N.Balasubramanian on Sat Jan 11, 2014 1:41 pm

@ராஜா wrote:volvo , BMW , Ford என்று முழு நேரமும் SUV -லேயே வரும் ஒரு DC யையும் , வில்லனின் அடியாட்கள் கடைத்தெருவுக்கு போவதற்கு கூட Range rover ஐ பயன்படுத்துவதையும் உங்களால் ஏற்றுகொள்ள முடியுமென்றால். தாரளமாக ....ஒருமுறை பார்க்கலாம் .... ரசிக்கலாம்

ஜில்லா பார்த்தாச்சா ? அழுகாம வந்தீங்களா? ஏற்கனவே பானு கவலையா இருங்காங்க.!!
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21825
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: ஜில்லா - விமர்சனம்

Post by ராஜா on Sat Jan 11, 2014 3:27 pm

@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:volvo , BMW , Ford என்று முழு நேரமும் SUV -லேயே வரும் ஒரு DC யையும் , வில்லனின் அடியாட்கள் கடைத்தெருவுக்கு போவதற்கு கூட Range rover ஐ பயன்படுத்துவதையும் உங்களால் ஏற்றுகொள்ள முடியுமென்றால். தாரளமாக ....ஒருமுறை பார்க்கலாம் .... ரசிக்கலாம்

ஜில்லா பார்த்தாச்சா ? அழுகாம வந்தீங்களா? ஏற்கனவே பானு கவலையா இருங்காங்க.!!
ரமணியன்
வந்துட்டோம் வந்துட்டோம் ..... புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜில்லா - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum